மே மாதம் 29ம் தேதி மதுரைக்குப் போனபோது சில கோவில்களுக்குப் போய் இருந்தோம் (மடப்புரம் ,திருப்பூவணம், திருமோகூர், ஆனமலை நரசிம்மர் கோவில், திருவாதவூர்.)
மதுரை மேலூருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர்தொலைவில் திருவாதவூர் உள்ளது.
மாணிக்கவாசகரின் அவதாரத்தலமாகிய திருவாதவூரில் அருள்மிகு திருமறைநாயகி உடனுறை திருமறைநாதர் திருக்கோவில் உள்ளது.
இக் கோவில் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலிஒலிக்க செய்த இடம். பழமை வாய்ந்த கோவில். இப்போது புது பொலிவுடன் இருக்கிறது, மிக அழகாய்.
திருமறைநாதர், திருமறைநாயகி, மாணிக்கவாசகர்
பைரவ தீர்த்தம்
தலவிருட்சம் மகிழமரம்
மகிழமரம் வேலி போட்டு கம்புகள் முட்டுக் கொடுத்து பாதுகாக்கப்படுகிறது
வானரங்களும் யாரும் மரத்தை தொடாமல் பார்த்துக் கொள்கிறது.
கோவிலுக்கு உள் நுழையும் போது முதலில் அழகாய் மண்டபம் - பழுது பார்க்கப்படுகிறது.
ஸ்வாமி சன்னதி உள் நுழைவாயிலில், குருந்த மரம் அடியில் மாணிக்க வாசகருக்கு தீட்சை கொடுக்கும் காட்சி சித்தரிக்கப் பட்டு இருக்கிறது.
சிவன் இக் கோவிலில் சுயம்பு ரூபமாய் இருக்கிறார். அவரது தலையில் பசுவின் கால்தடம் இருக்குமாம்.
உள் பிரகாரத்தில் மாணிக்க வாசகருக்கு தனி சன்னதி
மாணிக்கவாசகர்
தட்சிணாமூர்த்தி சன்னதி
இறைவனுக்கு சந்தனம் அரைக்கும் இடம்
சந்தனம் அரைத்து எடுத்தபின் அதை கழுவிவிட வசதியாக துவாரம்
உட்பிரகாரம்
அம்மன் சன்னதி செல்லும் வழி
அம்மன் சன்னதி
அம்மன் சன்னதி அருகில் பசுமடம்.
அம்மன் சன்னதி கோடியில் சிவலிங்கம்
தேர் மண்டபம் அருகில் தேர்.
வைகாசி மாதம் நடக்கும் பிரமோற்சவத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் திருநாள் திருத்தேர் உலா.
இக் கோவிலில் மாசி மாதம் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். வைகாசி, , ஆனி உற்சவம்., ஆவணிமாத மூலத்திருவிழா , திருக்கார்த்திகை உற்சவம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இங்கு சனிபகவான், பைரவர் வழிபாடும் சிறப்பாம். வாதநோய்கள் நீங்குவதாகவும் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இங்கு வரும் பக்தர்களுக்கு இருக்கிறதாம்.
திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஊரின் தெற்குத் திசையில் ஒரு சிறுகோவிலாக விளங்குகிறது. அந்தக் கோவில் சில நேரம் திறந்து இருக்கும் சில நேரம் மூடி இருக்கும். மூடி இருந்தாலும் பரவாயில்லை வெளியிலிருந்தாவது அவரை வழிபடலாம் என்று போனோம்.
சிவபெருமானே குருவாய் குருந்தமரநிழலில் வீற்றிருந்து இருந்து தீட்சை அளித்தகாட்சி கோபுரவாயிலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நால்வர் வழிபாடு :-
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழிதிருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
நேற்று மாணிக்கவாசகரின் குருபூஜை.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும்உன்றன் விருப்பன்றே.
நாமும் இறைவனை சிக்கென பிடித்துக் கொள்வோம். அவருக்கே தெரியும் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று. தாய்க்கு தானே தெரியும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எப்போது எது தேவை என்று. தாயைப் போன்ற இறைவன் நமக்கு எல்லாம் அருள்வார்.
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.
திருவாசகம் அளித்த மாணிக்கவாசகர் திருத்தாள் போற்றி!
வாழ்க வளமுடன்.
----------------------------------
மாணிக்கவாசகர் குருபூஜை சமயத்தில் - திருவாதவூர் தரிசனம் கண்டு மிக்க மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநல்லருள் நிறைக.. நலமே விளைக..
திருவாதவூர் கோயிலை படங்களாய் காட்சிப்படுத்தி கண் முன் நிறுத்தியவிதம் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
மணிவாசகர் பிறந்த இடத்தை நான் பள்ளியில் படித்தேன் ஆனால் நீங்கள் அவர் பிறந்த ஊரைப்பற்றி மிகத்தெளிவாகவும் ஆலயத்தின் படங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மணிவாசகர் பிறந்த ஊர் பற்றி அறியாதன அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
தம 1
பதிலளிநீக்குபடங்கள் அனைத்துமே அருமை.....
பதிலளிநீக்குதிருவாதவூர் பற்றிய தகவல்களும் நன்று.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
பக்திநெறி காட்டும்
பதிலளிநீக்குதிருக்கோவில் அறிமுகம்
பயனுள்ள தகவல்!
அழகழகான படங்களுடன் அற்புதமான தெய்வீகப்பதிவு. பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குநாங்கள் மே மாதம் 23, 24, 25 தேதிகளில் மதுரையில் இருந்தோம்! திருமோகூர் விட்டு திருவாதவூர் கோவில் அடைக்கும் நேரம் ஆகி விட்டதால் செல்ல முடியவில்லை. சித்தர் கோவில் பார்த்து விட்டு அழகர் கோவில் சென்று விட்டோம்! சிறப்பான படங்களுடன் நல்ல ஒரு பகிர்வு.
பதிலளிநீக்குஆகா...! அற்புதமான படங்கள்... நன்றிகள் பல...
பதிலளிநீக்குபடங்கள் வெகு சிறப்பு கோமதி. வாதவூரார் பெருமை விளங்கவந்த கோவிலைக் கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் சாரின் வரைபடமும் இருக்குமோ என்று எண்ணி இருந்தேன் .அருமையான பதிவு அம்மா. மிக நன்றி. தேர் வெகு அமைப்பு.
பதிலளிநீக்குவணக்கம் துரைசெல்வராஜூ சார். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் மாணிக்க வாசகர் பதிவில் அவரைப்பற்றி விரிவாக அழகாய் சொல்லி இருந்தீர்கள்.
அவர் குருபூஜை சமயத்தில் போடலாம் என்று இருந்தேன், எங்கள் ஊர் புனுகீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை சமயத்தில் 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம், ஆராதனை புறப்பாடு எல்லாம் நடக்கும்.
அந்த நிகழ்ச்சியும் சேர்த்து போடலாம் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கும் நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்., வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநாங்கள் மேமாதம் 25ம் தேதி வந்தோம் மதுரை, உறவினர் மணிவிழாவுக்கு போன நாங்கள் அப்படியே கோவில் உலா சென்று வந்தோம்.
அடுத்தமுறை போகும் போது போய் வாருங்கள் ஆனைமலை நரசிம்மர் கோவில் மிக அழகாய் இருக்கும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசாரின் படம் எதிர்ப்பார்த்தற்கு நன்றி அக்கா.
தேர் மிகவும் அழகுதான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த மாணிக்க வாசகர் பிறந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. இன்று உங்களால் நிறைவேறியது கோமதி அம்மா. திருக்கோயில் தரிசனம் நேரில் கிடைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் உங்கள் பதிவின் மூலம். படங்கள் அனைத்தும் மிக அருமை. குறிப்பாக திருக்கோயில் கோபுரம் அருமையிலும் அருமை. இத்தனை அழகான திருக்கோயில் உலாவினை
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கோமதி அம்மா. வாழ்த்துக்கள்
வணக்கம் புவனேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅடுத்தவிடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வாருங்கள் போகும் வழி எல்லாம் பசுமை, இயற்கையின் அழகை அள்ளிப்பருகலாம்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புவனா.
படங்களுடன் திருவாதவூர் தரிசனம் அருமை...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு... வாழ்த்துகள்.
வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அருமையான படங்களும்
பதிலளிநீக்குஅழகான விளக்கங்களும் சிறப்பு..பாராட்டுக்கள்.
அழகான படங்கள் மூலம் மாணிக்கவாசகரின் பிறந்த ஊருக்கு எங்களையும் அழைத்துச் சென்று அருமையான தரிசனம் செய்து வைத்து விட்டீர்கள் அம்மா.
பதிலளிநீக்குநானும் சாரின் வரைபடத்தை எதிர்பார்த்தேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்களும் தரிசனம் செய்தது மகிழ்ச்சி ஆதி.
சாருக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது.
அது முடிந்தபின் என் பதிவுக்கு தேவையான சமயம் வரைந்து தருவார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மாணிக்கவாசகர் திருவாதவூரார் என்று இன்னொரு பெயராலும் அழைக்கப்படுபவர். அவரது திருவாதவூர் கோயிலை உங்கள பதிவின் வழியே கண்டு தரிசித்தேன். நன்றி!
பதிலளிநீக்குத.ம.3
மாணிக்கவாசகர் திருவாதவூரார் என்று இன்னொரு பெயராலும் அழைக்கப்படுபவர். அவரது திருவாதவூர் கோயிலை உங்கள பதிவின் வழியே கண்டு தரிசித்தேன். நன்றி!
பதிலளிநீக்குத.ம.3
வணக்கம் தமிழ் இளங்கோ சார். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//மாணிக்கவாசகர் திருவாதவூரார் என்று இன்னொரு பெயராலும் அழைக்கப்படுபவர்.//
ஆம், ஊழிமலி திருவாத்வூரார் திருத்தாள் போற்றி!
உங்கள் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.
வலைபதிவுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நமக்கு அறிமுகம் ஆகியிருந்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் அழிந்து போன அழிந்து கொண்டிருக்கும் பல தரப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை உங்களைப் போன்ற ஒவ்வொருவரும் தங்கள் பதிவில் வலையேற்றியிருக்கக்கூடும். பல பதிவுகளில் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட பல (அழியும் நிலையில் உள்ள) இடங்களைப் பார்க்கும் போது இப்படித்தான் நான் நினைத்துக் கொள்வதுண்டு. நிச்சயம் இது போன்ற படங்கள் இன்னும் பல வருடங்களுக்கு பலரின் பார்வையில் பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஜோதிஜி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். அந்தக் காலத்தில் இணையம் இல்லை ஆனால் புகைப்படங்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாய் இருக்கிறது சார்.
என் கணவர் மிகவும் கஷ்டப்பட்டு பாடல் பெற்ற தலங்களை ஒரு காலத்தில் பார்த்து வந்தார்கள்,(276 பாடல் பெற்ற தலங்கள்) அப்போது இந்த வசதிகள் இருந்து இருந்தால் பழைமையான படங்களை பதிவு செய்து இருக்கலாம். அப்போது அவர்களுடன் நானும் நிறைய கோவில்களுக்கு போய் இருக்கிறேன். ஆனால் இப்போது நிறைய கோவில்கள் பழமை போய் விட்டது.
அவைகளுக்கு இப்போது பஸ் வசதி சுற்றுலா அழைத்து செல்பவர்கள் என்று பல வசதிகள் வந்து விட்டது.
இணையத்தால் பார்த்தவ்ற்றை எளிதாக பகிர முடிகிறது.
எளிமையாக எல்லோரும் எப்போது வேண்டும் என்றாலும் பார்த்த சாமிகளை இப்போது வரிசையில் நின்று . சிறப்பு வழி டிக்கட் எடுத்து என்று பார்க்க வேண்டி இருக்கிறது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.
படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதேரும், முதல் படத்தில் கோபுரத்தின் கோணமும் மிக அருமை.
வாங்க வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
தேரும், கோபுரமும் நல்லா இருக்கா? நன்றி.
திருவாதவூர் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குவேதநாயகி அம்பாளின் படம் கிடைக்குமா?
பதிலளிநீக்குவணக்கம் K Sivaraaman, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவேதநாயகி அம்பாளின் படம் என்னிடம் இல்லை.
கோவிலில் குருக்களிடம் கேட்டால் இருந்தால் தருவார்.