தெரிந்தால் சொல்லுங்கள் என்ற எனது முந்திய பதிவில் பாதாம் மரத்தில் கட்டிய பறவையின் கூடு முழுமை பெறவில்லை. அந்தக் கூடு எந்த பறவையின் கூடு என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தேன், நம் வலைஉலகநட்புகளிடம்.
ஸ்ரீராம் அவர்கள் ராமலக்ஷ்மி சொல்லக்கூடும் என்று சொல்லி இருந்தார்கள் அவர்கள் நம்பிக்கையை ராமலக்ஷ்மி அவர்கள் மெய்ப்பித்து விட்டார்கள்.
//இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. தங்கை வீட்டு மாடித் தோட்டத்தில் நான் எடுத்தபடம் இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721///
என்று பதில் தந்து விட்டார்கள்.
ராமலக்ஷ்மி கூடு படம் அனுப்பி, பறவையின் பேர் சொல்லி விட்டார்கள் .
ராமலக்ஷ்மிக்கு நன்றி.
உடனே பறவையைப் பார்க்க ஆசைப்பட்டு இணையத்தில் தேடினேன். கூகுள் ஆண்டவர் ஏமாற்றம் அளிக்காமல் நிறைய தந்தார்,இந்த பறவையைப்பற்றி. அதில் எனக்கு பிடித்த காணொளி இது. புற்களை அழகாய் கொண்டு வந்து இணைந்து கூடு கட்டும் இணைப் பறவைகளைக் கண்டு மகிழுங்கள். இந்த காணொளி தந்த திரு. அவினாஷ் பதக் அவர்களுக்கு நன்றி. எவ்வளவு நேரம் காத்து இருந்து இதை எடுத்து இருப்பார்! பொறுமை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும்.
scaly breasted munia எனப்படும் குருவிகள் கூடு கட்டும் காணொளி
ஆடிக்கிருத்திகை அன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம். முருகன் தரிசனம் முடிந்த பின் மறுபடியும் அந்தப் பறவை, கூடு கட்டி இருக்கிறதா என்று பார்க்க ஓட்டலுக்கு சென்றோம். மற்றொரு உயரமான பாதாம் மரத்தில் உயரத்தில் உள்ள கிளையில் கூடுகட்டி இருந்தது ,ஆனால் பறவையைக் காணவில்லை. புற்கள் எடுக்கப் போய் இருக்கும் . இந்த முறை காற்றில் கீழே விழுந்து விடாமல் இருக்க, பெரிய கிளையில் சொருகினால் போல் கட்டி இருந்தது .
//வேறொரு சந்தர்ப்பத்தில் இதே மாதிரியாக கூட்டின் அடியில் வாயிலை அமைத்திருக்கும் கூட்டையும், அதற்குச் சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும்.
அப்பொழுது கூடு- பறவை சேர்ந்த படம் பிடித்து இந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்து விடுங்கள். //
இப்படி ஜீவிசார் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். இப்போது அந்த சந்தர்ப்பம் காணொளி மூலம் கிடைத்து இருக்கிறது.
மேலே அகன்றும் அடிப்பகுதி குறுகியும் வருகிறது.
அதற்குள்ளும் இதே புற்கள்தான் இருந்தது.
அந்த ஓட்டலில் தங்கும் அறைகளில் உள்ளவர்களின் குழந்தைகள் , மற்றும் சாப்பிட வருபவர்கள் குழந்தைகள் விளையாட பின் பகுதியில் அமைத்து இருந்த இடத்தில் அன்னப்பறவைகள் (வாத்துகள்). குழந்தைகள் விளையாடும் இடம் பற்றிய படங்கள் அடுத்த பகிர்வில்.
வாழ்க வளமுடன்
------------------------------
ஸ்ரீராம் அவர்கள் ராமலக்ஷ்மி சொல்லக்கூடும் என்று சொல்லி இருந்தார்கள் அவர்கள் நம்பிக்கையை ராமலக்ஷ்மி அவர்கள் மெய்ப்பித்து விட்டார்கள்.
//இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. தங்கை வீட்டு மாடித் தோட்டத்தில் நான் எடுத்தபடம் இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721///
என்று பதில் தந்து விட்டார்கள்.
ராமலக்ஷ்மி கூடு படம் அனுப்பி, பறவையின் பேர் சொல்லி விட்டார்கள் .
ராமலக்ஷ்மிக்கு நன்றி.
உடனே பறவையைப் பார்க்க ஆசைப்பட்டு இணையத்தில் தேடினேன். கூகுள் ஆண்டவர் ஏமாற்றம் அளிக்காமல் நிறைய தந்தார்,இந்த பறவையைப்பற்றி. அதில் எனக்கு பிடித்த காணொளி இது. புற்களை அழகாய் கொண்டு வந்து இணைந்து கூடு கட்டும் இணைப் பறவைகளைக் கண்டு மகிழுங்கள். இந்த காணொளி தந்த திரு. அவினாஷ் பதக் அவர்களுக்கு நன்றி. எவ்வளவு நேரம் காத்து இருந்து இதை எடுத்து இருப்பார்! பொறுமை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும்.
scaly breasted munia எனப்படும் குருவிகள் கூடு கட்டும் காணொளி
ஆடிக்கிருத்திகை அன்று வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம். முருகன் தரிசனம் முடிந்த பின் மறுபடியும் அந்தப் பறவை, கூடு கட்டி இருக்கிறதா என்று பார்க்க ஓட்டலுக்கு சென்றோம். மற்றொரு உயரமான பாதாம் மரத்தில் உயரத்தில் உள்ள கிளையில் கூடுகட்டி இருந்தது ,ஆனால் பறவையைக் காணவில்லை. புற்கள் எடுக்கப் போய் இருக்கும் . இந்த முறை காற்றில் கீழே விழுந்து விடாமல் இருக்க, பெரிய கிளையில் சொருகினால் போல் கட்டி இருந்தது .
//வேறொரு சந்தர்ப்பத்தில் இதே மாதிரியாக கூட்டின் அடியில் வாயிலை அமைத்திருக்கும் கூட்டையும், அதற்குச் சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும்.
அப்பொழுது கூடு- பறவை சேர்ந்த படம் பிடித்து இந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்து விடுங்கள். //
இப்படி ஜீவிசார் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். இப்போது அந்த சந்தர்ப்பம் காணொளி மூலம் கிடைத்து இருக்கிறது.
இந்த உயர்ந்த பாதாம் மரத்தில் தான் மத்தியில் கட்டிக்கொண்டு இருக்கிறது கூட்டை.
கொம்புகளுக்கு இடையில் சொருகி வைத்து இருக்கிறது
மேலே அகன்றும் அடிப்பகுதி குறுகியும் வருகிறது.
மூங்கில் மரத்தில் அட்டைப்பெட்டியில் கூடு செய்து வைத்து இருந்தார்கள்.
அதற்குள்ளும் இதே புற்கள்தான் இருந்தது.
ஒரு கால் இல்லையோ! ஒரு காலில் தவமோ!
இல்லை இரண்டு காலும் இருக்கிறது
புற்கள் காலை மறைத்து இருந்தது
வாழ்க வளமுடன்
------------------------------
உங்கள் ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் பாராட்டுகள் அம்மா:)
பதிலளிநீக்குஒற்றைக் கால் நடை ச்சோ ஸ்வீற்..
பதிலளிநீக்குஅழகிய படங்கள்.
பதிவை ரசித்தேன் சகோதரி.
இனிய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அருமை. ஒற்றைக்கால் தவம் போட்டோ சரியான நேரத்தில் எடுத்திருக்கீங்க.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான படங்கள் + பதிவு. ராமலக்ஷ்மியின் பறவைகள் புகைப்பட ஆர்வம் எல்லோரும் அறிந்ததுதானே? மரங்கள், பறவைகள் படங்கள் பகிர்ந்தால்கூட முறையே அவற்றின் தாவரவியல், விலங்கியல் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களையும் தேடி எடுத்துப் பகிர்வார்.
பதிலளிநீக்கு//ஸ்ரீராம் அவர்கள் - சொன்னார்கள்//
முதுகு குறுகுறு என்கிறது மேடம். ஸ்ரீராம் என்று சொன்னால் போதும். சொன்னார் என்று குறிப்பிட்டால் போதும். :))))))
வண்க்கம் முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் எடுத்த காணொளி மட்டுமே பகிர்ந்து வந்த எனக்கு இன்று youtube. காணொளி போட உன்னிடம் கற்றுக் கொண்டேன்.
நன்றி.
உன் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி பதிவுலகம் பக்கம் வரவும்.
வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வண்க்கம் புதுகைதென்றல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் ராமல்க்ஷ்மியைப்பற்றி சொன்னது அனைத்தும் சரியே.
இனி ஸ்ரீராம் மட்டும், அவர்கள் கட்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. இன்று எல்லா படங்களும் பார்த்தீர்கள் அல்லவா?.
என் வீட்டு மாமரத்தில் இந்தக் குருவிகளை வரவழைக்க ஒரு தூக்கணாங்குருவிக்கூடு ( வாங்கி ) வைத்திருக்கிறேன். ஒரு குருவியும் அதைக் கண்டு கொள்வதில்லை. ...!
பதிலளிநீக்குஎல்லாப் படங்களும் பார்த்தேன். ரசித்தேன். தெளிவாக இருக்கின்றன புகைப் படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதூக்கணாங்குருவிக்கூடு போல் இல்லாமல் அட்டையில் கூடு மாதிரி செய்து வைத்து பாருங்களேன். வந்தாலும் வரும் பறவைகள்.
நன்றி உங்கள் வரவுக்கு.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் மறுவருகைக்கும் கருத்துக்கும்.
தங்களால் நானும் அந்தப் பறவையின் பெயரை அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குபறவை கூடுகட்டுவதைப் பொறுமையுடன் படம் பிடித்துப் பதிவேற்றியவர் பாராட்டுக்குரியவர்.
அந்தப் பறவையின் நல்வாழ்வுக்கு இறைவன் துணையிருக்கட்டும்..
வாழ்க நலம்..
அழகான படங்கள்! பறவையின் பெயரும் காணொளியும் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅழகான படங்கள்! பறவையின் பெயரும் காணொளியும் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபறவைக் காணொளி மனதைக் கவர்ந்தது. ஒற்றைக் காலில் தவம் செய்யும் அன்னம் தான் எத்தனை அழகு! அருமையான படங்கள் தகவல்களுடன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.......
படங்கள் எல்லாம் மிகவும் அழகு!!
பதிலளிநீக்குராமலக்ஷ்மி பிரமிக்க வைக்கிறார்!
பதிலளிநீக்குபாதாம் மரம் இவ்வளவு பெரிதாக இருக்குமா! அழகான படம்.
வணக்கம் துரைசெலவ்ராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் பறவை கூடு கட்டுவதை எடுத்தவர் பாராட்டுக்குரியவர் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பரவைகளின் நலவாழ்வுக்கு உங்கள் பிராத்தனைக்கு நன்றி சார்.
வணக்கம் தளிர் சுரேஷ் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் , கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும்நன்றி.
வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அப்பதுரை சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி பன்முகவித்தகர் அல்லவா?
உயரமான பாதாம் மரமும் குட்டையான பாதாம் மரமும் இரண்டும் அந்த ஓட்டலில் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
தங்களின் ஆதங்கம் புரிகிறது நானும் வீடியோவை பார்த்தேன் கண்டுபிடிக்க முடியவில்லை அம்மா.. என்னதான் செய்வது..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான படங்களுடன் மீண்டும் அருமையான அலசல்.
பதிலளிநீக்குஒற்றைக்காலில் நிற்பது போல எடுத்துள்ள படம் ஆச்சர்யமாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாணொளியில் அருமையாக அவினாஷ் பதக் எடுத்து இருக்கிறார்.
நான் எடுத்த படத்தில் தான் பறவை இல்லை. ஒரு நாள் எப்படியும் பார்த்துவிடுவேன் ரூபன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஒற்றைக் காலில் நிற்கும் அன்னம் படத்தை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
தங்களின் ஆர்வத்துக்கு முதலில் பாராட்டுகள் அம்மா. அழகான படங்களும், காணொளியும்....
பதிலளிநீக்குநிச்சயம் ஒருநாள் அந்த பறவை உங்கள் கண்களில் தட்டுப்படும்.
வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
காணொளியின் கண்டதற்கே இவ்வளவு குஷி என்றால், வைத்தீஸ்வரன் கோயில் அந்த ஹோட்டல் பாதாம்மரத்திலேயே கூடும்-பறவையுமாய் பார்த்து விட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள்?.. நினைத்தாலே இனிக்கிறது.. ஜன்ம சாபல்யம் பெற்ற நிலை தான்.
பதிலளிநீக்கு'விடுங்க, கவலையை! அந்தப் பறவை வேறு எங்காவது கூடு கட்டியிருக்கும்' என்று அப்பாதுரை சார் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
பின்னூட்டங்களில் ஒருவரைத் தவிர அவினாஷ் பதக்கை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே!
Great job!
தூக்கணாங்குருவி இல்லை என்று ஆச்சு; கடைசி வரை அந்தப் பறவையின் பெயர் தெரியவில்லையே, பாருங்கள்!
பெயர் தெரிந்து கொள்ள மனசில் நமநம!
அவை எங்கிருந்தாலும், என்ன பெயர் கொண்டிருந்தாலும்---
வாழ்க, வளமுடன்!
வணக்கம் ஜீவி சார் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு/காணொளியின் கண்டதற்கே இவ்வளவு குஷி என்றால், வைத்தீஸ்வரன் கோயில் அந்த ஹோட்டல் பாதாம்மரத்திலேயே கூடும்-பறவையுமாய் பார்த்து விட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள்?.. நினைத்தாலே இனிக்கிறது.. ஜன்ம சாபல்யம் பெற்ற நிலை தான்.//
உண்மைதான் சார்.
நீங்கள் சொன்னது போல் அதே ஓட்டலில் இன்னொரு பாதாம் மரத்தில் கூட்டைப் பார்த்து விட்டேன்.
பறவையை கண்டிப்பாய் பார்த்து விடுவேன். முனியா குருவி என்று தெரிந்து விட்டது அல்லவா?
அப்பாதுரை சார் சொன்னது போல் வைத்தீஸ்வரன் கோவிலில் வேறு மரத்தில் கட்டிய கூடுதான் இந்த பதிவில் இடம் பெற்று இருக்கிறது.
அழகாய் எந்தபறவை இப்படி கூடு கட்டுகிறது என்று வியப்பாய் இருந்தது . பறவையை பார்க்க ஆவலாக இருந்தது.
ராமலக்ஷ்மி அதன் பேர் சொல்லி விட்டார்கள்.அதனால் இணையத்தில் தேடி அதன் காணொளி இங்கு பகிர்ந்தேன்.
அவினாஷ்பதக் எடுத்த காணொளி எனக்கு பிடித்து இருந்த காரணத்தால் அதை பகிர்ந்து கொண்டேன்.
நான்முந்திய பதிவில் புற்களால் கூடு கட்டி இருந்தது என்று குறிபிட்ட மாதிரி குருவிகள் பச்சை புல் கொண்டு கூடு கட்டுவது காணொளியில் தெளிவாக தெரிகிறது.
scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. காணொளியில் மேலே இதன் இந்த குருவியின் பேர் தெரிகிறது.
ராமலக்ஷ்மி கொடுத்த பேரையும் இங்கு பகிர்ந்து விட்டதால் தனியாக காணொளி கீழ் எழுதவில்லை சார்.
நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் ப்றவையின் பேர் தனியாக எடுத்து எழ்த வேண்டும் என்று தெரிகிறது.
எழுதி விடுகிறேன் சார்.
அவினாஷ்பதக் பேரை குறிப்பிடாமல் காணொளி நன்றாக இருப்பதாய் சிலர் சொல்லி இருக்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் பறவையை வாழ்த்தியமைக்கும் நன்றி சார்.
படங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குபடங்களை ரசித்துக் கொண்டே இருந்தேன்...
பதிலளிநீக்குஅழகோ அழகு அம்மா...
படங்களுடன் அருமையான பகிர்வு. நல்ல காணொளி.
பதிலளிநீக்குநன்றி. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போலதான் பகிர்ந்து வந்தேன். தற்போது கை, கழுத்து வலி காரணமாக கணினி முன் அதிக நேரம் இருக்க முடியாத போக, பறவைகள், பூக்களை பெயர்கள் குறிப்பிடாமல் பகிர ஆரம்பித்து விட்டேன். சரியான பெயரைத் தேடி அதை உறுதியும் செய்ய நிறைய நேரம் எடுக்கிறது. சமீபத்திய எனது கைக்கொண்டனஹள்ளி ஏரிப் பதிவில் பறவைகளுக்கு பெயர் தராததைக் கவனித்துக் கேட்டு விட்டிருந்தார் திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்:).
வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ்மண வாக்கு அளித்துவருவதற்கு மிகவும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சரியான பெயரைத் தேடி அதை உறுதியும் செய்ய நிறைய நேரம் எடுக்கிறது. சமீபத்திய எனது கைக்கொண்டனஹள்ளி ஏரிப் பதிவில் பறவைகளுக்கு பெயர் தராததைக் கவனித்துக் கேட்டு விட்டிருந்தார் திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள்.//
உண்மைதான் நீங்கள் சொல்வது. தேடி சரியானவற்றை கொடுத்து விட்டதால் உங்களிடம் எதிர்ப்பார்ப்பு எல்லோருக்கும் அதிகம், அதுவும் பறவை ஆர்வலர் அல்லவா? திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள்.
உங்கள் கைவலி பரவாயில்லையா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
படங்கள் எல்லாம் மிகவும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்களும் காணொளியும் அழகு.
பதிலளிநீக்குவ்ணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.