அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். 10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள்.
இப்போது என் பதில்களை படித்துப்பாருங்கள்.
1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
100 வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றால் அந்த சமயத்தில் என் உடல் நலம், மனநலம், குடும்ப நலம் எல்லாம் நலமாக இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியாக 100 வது பிறந்த நாளை கொண்டாடுவேன்.
என் மாமனார் 105 வயதுவரை வாழ்ந்தார்கள் 100வது பிறந்த நாளை மிக மகிழ்ச்சியாக உற்றம், சுற்றத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் ?
வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம், பிறரிடம் பேச, பழக. விழிப்புணர்வுடன் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்.
இந்தக் கால கட்டத்தில் இணைய பயன்பாடு, ஐபோன், ஸ்மார்ட் போன், கற்றுக் கொள்ள வேண்டியகாலமாய் உள்ளது. விஞ்ஞானம் வளர வளர அடுத்து அடுத்து நிறைய கற்றுக் கொள்ள தேவைகள் ஏற்படுகிறது.
இப்போது இணையத்தில், அலைபேசியில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, வாட்ஸ் அப், பேஸ்டைம் என்று. பேச போட்டோ அனுப்ப கற்றுக் கொண்டேன் இப்போது. என் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்- கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம்.
3.கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது ,எதற்காக ?....
என் பேரன் போனவாரம் தன் வேடிக்கைப் பேச்சால் சிரிப்புமூட்டினான். அவன் நல்ல நடிகன் திறம்பட நடித்து நம்மை ஏமாற்றுவான் அப்போது சிரித்தேன். குழந்தைகளிடம் விளையாடும் போது நானும் குழந்தையாகி போவேன்.எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.
புத்தகம், படிப்பேன்,, டிரான்ஸ்சிஸ்டரில் பாடல்கள் கேட்பேன்.
அந்தநாளும் வந்ததே!என்று மின்வெட்டு சமயம் மின்வெட்டால் என்ன என்ன நன்மை என்று எழுதி இருக்கிறேன். பழையகாலம் போல் மொட்டைமாடியில் குடும்பத்தினருடன் வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக உரையாடி(பழங்கதை பேசி)மகிழ்ச்சியாக இருப்பேன். தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி வந்தபின் நம் பொழுதுகள் அதில் போய்விட்டதே!
5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....
இன்றுபோல் என்றும் வாழ்க! ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, மனம் ஒத்து வாழுங்கள் என்று சொல்வேன். இருபக்க குடும்ப உறவினர்களிடமும் அன்பாய் இருங்கள் என்று சொல்லி இருக்கிறேன் அது போல் என் குழந்தைகள் நடந்து வருகிறார்கள்.
6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...
உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்ன என்று ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும் முதலில். அவர்களின் பசிபிணியை போக்கி, கல்வி அறிவை மேம்படுத்தி, அவர்கள் மனம் நலம் காத்தால் உலகத்தில் பிரச்சனைகள் ஏற்படாது என்பது என் எண்ணம்.
7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...
என் கணவரிடம்.(கணவரே பிரச்சனையாக இருந்தால் பிள்ளைகளிடம் ! )
8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?..
.
உண்மையான பதில் வேண்டும் என்றால் முதலில் மனம் வருந்துவேன் என்பது தான், பிறகு போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று நாம் அந்த தவறை செய்ய வில்லை- பின் ஏன் வருந்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ’இன்னல் புரிவோர், எதிரிகளாக இருப்பினும் அவர்களும் மனம் திருந்தி வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி இருப்பேன்.
9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!
அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள் என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார். இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.
10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..
தனியாக இருந்தால் பாடல் கேட்பது பிடிக்கும், அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும். தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள், கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.
அப்பா! எப்படியோ கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்.
அம்பாளடியாள் அழைப்புக்கு நன்றி.
அம்பாளடியாள் அழைத்த போது நான் ஊரில் இல்லை நேற்றுத்தான் வந்தேன் ஊரிலிருந்து.
நிறைய பேர் எழுதி விட்டார்கள் . அதனால் எழுத விருப்பப்படுபவர்கள் எழுதலாம். திண்டுக்கல் தனபாலன், கீதமஞ்சரி, எழுதிய பதிவுகளைப் படித்தேன் அசத்தி இருக்கிறார்கள். சூரி சார் கேள்வி கேட்க , மீனாட்சி அக்கா பதில் அளிக்கும் காணொளி மிக அருமை.
வாழ்க வளமுடன்.

4.. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....

// பாடல்கள் கேட்பேன்... //
பதிலளிநீக்கு// மனம் நலம் காத்தால் உலகத்தில் பிரச்சனைகள் ஏற்படாது... //
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
அம்பாளடியாள் - வலைத்தளத்தில் தங்களை அழைத்த போதே நினைத்தேன்.. தாங்கள் தங்களது மரியாதைக்குரிய மாமனார் அவர்களப் பற்றிக் குறிப்பிடுவீர்கள் - என!..
பதிலளிநீக்குநல்லதொரு பக்குவப்பட்ட மனதின் - விடைகள்!.. மிக்க மகிழ்ச்சி..
இந்ததொடர் பதிவில் நானும் எனது பங்கினை அளித்துள்ளேன்.. நேரம் இருப்பின் - வாருங்களேன்!..
வாழ்க நலம்!..
***என் கணவரிடம்.(கணவரே பிரச்சனையாக இருந்தால் பிள்ளைகளிடம் ! )***
பதிலளிநீக்குநான் கவனித்தவரைக்கும், உங்களைத் தவிர, இந்தத் தொடர் பதிவில் பதில் எழுதுறவங்க யாரும் இந்த "பாஸிபிலிட்டியை"யும் யோசித்துத் தெளிவாக பதில் சொல்லவில்லைனு நெனைக்கிறேன்.
வாவ்!!! தெளிவான சிந்தனை.தெளிவான பதில்கள்!!!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
கோள்விகாகன பதிலை மிக அருமையாக ஒரு வித்தியாசமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆகா
பதிலளிநீக்குஅருமை
தம +1
ஆஹா நான் ஆரம்பித்து வைத்த தொடரில் நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? ஹீ.ஹீ பதில்கள் அருமை பாராட்டுக்கள் முதல் கேள்விக்கு பாஸிட்டிவாக பதில் சொன்ன 2 வது ஆள் நீங்கள்தான்
பதிலளிநீக்குசிறப்பான பதில்கள்..
பதிலளிநீக்குஅனைத்து பதில்களும் அருமையானவை. பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகளும் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅனைத்து பதில்களும் மிக அருமையாக யதார்த்தமாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள். தகவல் கொடுத்து அழைத்ததற்கு என் நன்றிகள்.
என் டேஷ் போர்டிலும் எதுவுமே தெரியவில்லை. இது இன்று எல்லோருக்குமே ஏற்பட்டுள்ள பிரச்சனை தான் என்று கேள்விப்படுகிறோம்.
நாளடைவில் சரியாகிவிடும் எனவும் சொல்கிறார்கள். பார்ப்போம்.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளில் பாடல்கள் விரும்பி கேட்பேன்.
நல்ல சினிமா பாடல்களை அழகாய் தொகுத்து கொடுத்தீர்களே!
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும், நன்றி.
வணக்கம் துரைசெல்வராஜூ அவர்களே, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவை படித்தேன் நன்றாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம் வருண், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தொடர் வருகைக்கு மகிழ்ச்சி, நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துளசிகோபால், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்குக்ம் நன்றி.
வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆம், கேள்விகணைகளில் நானும் மாட்டிக் கொண்டேன்.
கேள்வி கேட்ட அம்பாளடியளை காணவில்லை.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்களும் என்னை போல் ஊருக்கு போய் இருந்தீர்களா?
அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நீங்கள் அழைத்த தொடர் பதிவுக்கும்(புகுந்தஊரின் பெருமையை எழுத அழைப்பு விட்டீர்களே!) பதிவு எழுத வேண்டும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
டேஷ்போர்ட் பிரச்சனை நாளடைவில் சரியாகிவிடும் என்று கேள்வி பட்டு மகிழ்ச்சி.
இந்த பதிவில் இடம் பெற்ற ஓவியம் சார் வரைந்தார்கள்.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//இந்த பதிவில் இடம் பெற்ற ஓவியம் சார் வரைந்தார்கள்.//
ஆஹா, ஆரம்பத்திலேயே பார்த்தேன்.
ரஸித்தேன்.
பிறகு தங்கள் பதில்களைப்படித்துக் கொண்டே வந்ததால், பின்னூட்டமிடும் போது அதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததை சுத்தமாக மறந்தே போனேன்.
நினைவூட்டலுக்கு நன்றிகள்.
சார் சூப்பராக வரைந்துள்ளார்கள். அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்களை மறக்காமல் சொல்லி விடவும்.
அன்புடன் கோபு
கேள்வி பதில்கள் பார்த்தேன் நானும் எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஎல்லோரதையும் வாசிப்பதும் ஓர் ஆர்வம் தானே.
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
கேள்விகளுக்கான பதிலை நானும் தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாளில் நானும் பதில்களுடன் வந்து விடுவேன்.உங்கள் பதில்கள் அருமை கோமதி.
பதிலளிநீக்குவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசார் படத்தைப் பார்த்து ஸ்பெஷல் பாராட்டுக்களை உடனே தெரிவித்தமைக்கு நன்றி சார்.
நானும் மறக்காமல் உடனே சொல்லிவிட்டேன் உங்கள பாராட்டுக்களை.
படம் அருமை..
பதிலளிநீக்குபதில்கள் சிறப்பு..
பாராட்டுக்கள்..
கோமதி அரசு said...
பதிலளிநீக்குவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
சார் படத்தைப் பார்த்து ஸ்பெஷல் பாராட்டுக்களை உடனே தெரிவித்தமைக்கு நன்றி சார்.
நானும் மறக்காமல் உடனே சொல்லிவிட்டேன் உங்கள பாராட்டுக்களை.//
Thank you very much, Madam. -vgk
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதுபோல நல்ல குடும்பப் பாங்கான அருமையான பதில்கள் சகோதரி!
பதிலளிநீக்குமிக அருமை!
வாழ்த்துக்கள்!
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் ஆசிரியர், இவ்வளவு நாட்காளய்
மாணவர்களிடம் கேள்வி கேட்டு இருப்பீர்கள், இப்போது பதில் சொல்லபோகிறீர்கள்.
உங்கள் பதில்கள் மிக அருமையாக இருக்கும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடம், பதிவை பாராட்டியதற்கு நன்றி.
வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அருமையானன் பதில்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசார் தன் நன்றியையும் தன் மகிழ்ச்சியையும் தெரிவிக்க சொன்னார்கள்.
வாழ்வின் யதார்த்தமும், குடும்பத்தின் மீதான பற்றுதலும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உள்ள நிதானமும் தங்கள் பதில்களில் பிரதிபலிக்கின்றன. அருமை மேடம்.
பதிலளிநீக்குஎன் பதில்களையும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பதில்கள் அறிவுபூர்வமாய் மிக அருமையாக இருந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.
யதார்த்தமும் உண்மையும் கலந்த மிக அழகான பதில்கள். ஓவியமும் அருமையாக உள்ளது. /வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக உரையாடி/ விஞ்ஞான வளர்ச்சி பறித்துக் கொண்டவற்றில் ஒன்றாகி விட்டது.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபதிவையும், சாரின் ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி.
வாசல் திண்ணையில் அக்கம் பக்கத்தினர் உட்கார்ந்து உரையாடுவது, குடும்பத்தினர் கலந்து உரையாடுவது எல்லாம் குறைந்து விட்டது விஞ்ஞான வளர்ச்சியால்.
ரயிலில் பயணம் செய்யும் போது முன்பு அக்கம் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களிடம் உரையாடி மகிழ்வோம், இப்போது அதுவும் இல்லை, ஆளுக்கு ஒரு அலைபேசி, நோட், ஐபோன், ஐபேட் என்று ரயில் சிநேகமும் இல்லாமல் போகிறது.
நாம் தொலைத்தவை நிறைய ராமல்க்ஷ்மி.
நல்லாயிருக்கு
பதிலளிநீக்கு#வாட்ஸ் அப், பேஸ்டைம் என்று. பேச போட்டோ அனுப்ப கற்றுக் கொண்டேன்#
பதிலளிநீக்குஉங்க கிட்டே இருந்து நான் நிறைய கற்றுக்கணும் போலிருக்கே !
த ம 3
பதிலளிநீக்குஅனுபவத்தின் அறிவு இப்படித்தான் இருக்கும் என்பதை தங்களின் பதில்கள் மூலம் பாடம் படித்தேன் சகோதரியே...
நானும் இதில் சிக்கி எனது சிற்றறிவுக்கு எட்டியதை கொட்டியிருக்கிறேன்.
வணக்கம் ஜீவலிங்கம் காசிராஜாலிங்கம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் புதுகைதென்றல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவீட்டில் சிறுகுழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு நிறைய தெரிந்து இருக்கிறது அவர்கள் சொல்லி தந்துவிடுவார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்து மற்றும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் பதிவை படிக்கிறேன்.
முதல் கேள்விக்கான பதில் நிறைவைக் கொடுத்தது. உங்கள் ஸாரின் படம் ஜோர். டீச்சரம்மாக்குப் பதில் சொல்வதும் சுலபம்தான். தெளிவான சிந்தை அன்பு மனம் எல்லாம் இருந்தால் நூறு கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம்.மனம் நிறைந்த வாழ்த்துகள் தங்கச்சி. நன்றாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பு வல்லிஅக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அக்கா.
சார் ஓவியத்தை ரசித்தமைக்கும் உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி, நன்றி அக்கா.
சுவாரஸ்யம். நிறைய பேர்கள் எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஓவியம் அருமை. ஆசிரியர் மாணாக்கர்களிடம் கேட்பது போன்ற கற்பனையும் அழகு!
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஒவ்வொருவர் சொல்ல்வதும் ஒவ்வொரு விதமாய் இருப்பது படிக்க சுவரஸ்யம் தானே!
நீங்களும் எழுதுங்களேன்.
சார் படம் வரைந்து தந்து இருக்கிறார்களே! ஸ்ரீராம் வந்து பார்த்து க்ருத்து சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். வந்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி. கற்பனை என்னோடது வரைந்தது சார்.
என் அழைப்பை ஏற்று மிக மிக அருமையாகப் பதிலளித்த அன்புத் தோழிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி தோழி .
பதிலளிநீக்குகோமதி அம்மா நலமாக உள்ளீர்களா?
பதிலளிநீக்குஅனைத்து கேள்விகளுக்கும் தாங்கள் பதில் அளித்த விதம் மிக அருமை அம்மா. தங்களது அனுபவமும், வாழ்வியல் குறித்த உங்களது
தன்னம்பிக்கையும் உங்கள் பதில்களில் தெரிகிறது. தாங்கள் நூறு
வயது வாழ்ந்து எல்லா நலன்களையும் பெற்று, எங்களைப் போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்க இறைவன் ஆசியை வேண்டுகிறோம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
அம்மா அப்பா உங்கள் இருவரையும்.
வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநாங்கள் நல்மாக இருக்கிறோம். நானும் கோவையில் அத்தையைப் பார்க்க போவதால் அடிக்கடி பதிவுலக பக்கம் வரவில்லை.
நாங்கள் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ததற்கு மிகவும் நன்றி.
வாழ்த்து வாழ்த்துபவர்களுக்கும் வாழ்த்து பெற்றவர்களுக்கும் நன்மை தரும்.
சின்னவர்கள் பெரியவர்களை வாழ்த்தலாம் அதில் தப்பில்லை.
நாம் கடவுளையே வாழ்த்துகிறோம் கடவுள் வாழ்த்து என்று நாம் சொல்கிறோம் அல்லவா? கடவுளை வாழ்த்தும் போது மனிதனை வாழ்த்தகூடாதா என்ன?
கடவுளை வாழ்த்துவதின் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பண்பும் மனிதனிடம் உண்டாகிறது.
வாழ்த்த வயது தேவை இல்லை, உங்களை போன்ற நல்ல மனம் போதும்.
உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி புவனா.
தங்கள் அன்புள்ளத்தை வெளிப்படுத்துகிறது பதில்கள் .
பதிலளிநீக்குநன்றி அம்மா
வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் என்ன அழைத்தமைக்கு நன்றி.
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அருமையான பதில்கள் அம்மா....
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக அருமை அம்மா. படித்தேன் ரசித்தேன். :)
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.