இது மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் !
"மாளிகைமேடு "என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
மன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.
அருள்மிகு பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம்.
மன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே!
மன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அவற்றைப் பராமரிக்க நிலங்கள், அளித்திருக்கிறார்கள். அந்நியப்படையெடுப்புகளால் சீர் குலைந்தாலும் இன்றும் மன்னரின் பெருமையைப் பேசிக் கொண்டு இருக்கிறது கோவில்.
இப்போது மன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறிய நாளை விழாவாக கொண்டாடினார்கள். எல்லோரும் அதைப்பற்றி எழுதி விட்டார்கள்.
நாங்கள் ஜனவரி 1ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் போவது என்று வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் போய் வருவோம்.அப்படி உறவுகளுடனும், நட்புகளுடனும் கங்கை கொண்டசோழபுரம் சென்றதைப் பற்றி என் மலரும் நினைவுகளைப் பற்றி கொஞ்சம் பகிர்கிறேன்.
நாங்கள் கார் வாங்குவதற்கு முன்பு மாயவரத்திலிருந்து இரும்புலிகுறிச்சி செல்லும் பேருந்தில் கங்கைகொண்டசோழபுரம் போவோம். காலை 8.30க்கு கிளம்பினால் 9.30க்கு கங்கை கொண்டசோழபுரம் போகும். காலை உணவை கையில் எடுத்துக் கொள்வோம். அங்கு போய் சாமி தரிசனம் ஆனபின் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் 12.30க்கு இரும்புலிகுறிச்சிப் பேருந்து திரும்பி வரும்போது அதில் ஏறி மாயவரம் வந்து விடுவோம்.
மகன் எங்களுடன் வந்தாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சென்றுவருவார். பக்கத்து வீட்டுக்குழந்தைகள், அவர்களுடன் உடன் படிப்பவர்கள் எல்லாம் எங்களுடன் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருவார்கள். மகிழ்ச்சியான குதூகலமான காலம் அவை. இப்போது அவர்கள் எல்லாம் வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருக்கிறார்கள். ஜனவரி 1ம் தேதி போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு, சேர்ந்து கங்கைகொண்டசோழபுரம் போன நினைவுகளை பேசுவார்கள். "மறுபடியும் நாம் சேர்ந்து ஒரு நாள் அங்கு போவோம்" என்பார்கள்.
அப்போது எல்லாம் கோவிலின் மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்கலாம். ஒரு நபருக்கு இவ்வளவு(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று கட்டணம் உண்டு. அழைத்துச் செல்ல கோவில் சிப்பந்தி உண்டு அவர் நம்மை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவார். கோவிலின் உள் வாசல் பக்கத்தில் படிகள் இருக்கும். சதுரம் சதுரமாய் உயர உயரமாய் படிகள் இருக்கும். அதில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றால், அதன் சேதமுற்றிருந்த தரைப்பகுதியின் வழியாக, கீழே கருவறையில் உள்ள பிரகதீஸ்வரர் திருவுருவத்தின் உச்சிப் பகுதி தெரியும்.
மொட்டைக்கோபுர வாசலில் உள்ள படிவழியாக அதன் மேல்தளம் எல்லாம் பார்க்க அனுமதி உண்டு. இப்போது அதற்கு கம்பிகேட் போட்டு மூடி விட்டார்கள் .மேல்தள அனுமதி இல்லை.
கீழே ஸ்வாமி இருக்கும் கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. அங்கு ஒரே இருட்டாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றி வரலாம். அழைத்து செல்லும் பணியாள் டார்ச் வெளிச்சத்தில் அழைத்து செல்வார், அப்போது சிறிது நேரம் அந்த விளக்கை அணைத்து விட்டுச் சொன்னார்," இருட்டு எப்படி இருக்கிறது? பிரளய காலத்தில் எங்கும் இருட்டு இப்படித்தான் இருந்ததாம் அதை உணர்த்தவே விளக்கு எதுவும் போடவில்லை" என்பார்.
இப்போது அங்கு விளக்குகள் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது பிரதோஷ காலம், மற்றும் விழாக்கள், ஜனவரி 1ம் தேதி ஆகிய் நேரங்களில் மட்டும் தான் உள் பிரகாரம் சுற்றி வரலாம். மற்ற நாட்கள் கிடையாது அடைத்து வைத்து இருப்பார்கள், பாதுகாப்பு கருதி. இலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைத்து இருப்பதால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மிதவெப்பத்தையும் கொடுக்கும் என்றும் சொன்னார். அதை உணர முடியும்.
இப்போது உணவைக் கொண்டுபோய் சாப்பிடவும் கூடாது. மக்கள் கூட்டம் அதிகமாய் வர வர கட்டுப்பாடுகள் அதிகமாய் இருக்கிறது. மக்கள் அங்குள்ள பெரிய கிணற்றில் குப்பைகளைப் போட்டு விடுகிறார்கள் அதை முன்பு ஒரு பதிவில் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சாப்பிட்டு விட்டு அவற்றையும் சுத்தம் செய்யாமல் அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் அதனால் இப்போது அதற்கு தடை. இப்போது கோவில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. புற்களையும் செடி கொடிகளையும் வளர்த்துப் பராமரிக்கிறார்கள். குருக்களிடம் சொல்லி விளக்கு போடச் சொல்லிப் பார்த்தால்தான் லிங்கத்திற்கு மேலே கங்கை நீர், செம்புப் பாத்திரத்திலிருந்து சொட்டு ச்சொட்டாய் விழுவது தெரியும். அல்லது தீபாராதனை நேரம் உற்றுப்பார்க்க வேண்டும்
மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும்.
விஷ்ணு
நடராஜர், சிவகாமி அன்னையால் தன்னைப் போல ஆடமுடியாது என்று சிரிப்பது போல் இல்லை?
அஷ்டபுஜதுர்க்கை
தவறு செய்பவர்களுக்கு என் காலுக்கு அடியில் இருப்பவன் கதிதான் என்று கைவிரலை கீழ் நோக்கி காட்டுகிறார் இறைவன்.
பிரம்மா, தன் துணைவிகளுடன்
சரஸ்வதி தாமரை மலரில்.
எதிர்ப் பக்கம் லட்சுமி தாமரை மலரில்அமைத்து உள்ளார்கள்.
பைரவர்- கீழ்ப்பீடம் முடிவடையவில்லை
வெளிப்புறத்தில் நடைபாதையின் இருமருங்கிலும் மரங்களும் புற்களும் அழகுறப் பராமரிக்கப்படுகின்றன.
முன் மண்டபத்தில் இறைவன் இல்லா சந்நிதி - அதன்பின் புறம் பெரிய விநாயகர் இருக்கும் சந்நிதி.
ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு புறா -எனக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்கிறது.
போரிடும் வீரர்கள்- சிற்பம்
மேலே உள்ள படம் -புதிப்பிப்பதற்கு முன் இருந்த தோற்றம்
கீழே உள்ள படம் -புதுப்பித்த பின் இப்போது உள்ள தோற்றம்
ஸ்வாமி சந்நிதிக்கு ஏறும் படிக்கு மேலே தெரியும் மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாட்டில் பிள்ளையார்
அம்மன் - பெரிய நாயகி சந்நிதி
தலவிருட்சம் வன்னி அதன் வளைந்த கிளையில் முன்பு குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவார்கள்., இப்போது அந்த கிளைக்குமுட்டுக் கொடுத்து அதில் விளையாட முடியாதபடி முட்கள் சுற்றி உள்ளார்கள். புன்னை மரமும் தலவிருட்சம் என்கிறார்கள். சண்டேஸ்வரர் சந்நதி பக்கம் அந்த மரம் இருக்கிறது.
முருகன்- மயில் வாகனத்தில், பிள்ளையார் -தன் மூஞ்சூறு வாகனத்தில்
கோபுரத்தின் பக்கவாட்டில் இருக்கும் தெருப்பக்கத்தில் இருந்து எடுத்தபடம்
மொட்டைக் கோபுர மேல்தளம் செல்லும் படிக்கட்டுகள்- எதிர்புறப் படியிலிருந்து எடுக்கப்பட்ட படம் .அங்கும் படிகள் உண்டு.
இப்போது கம்பிக் கதவு போட்டுப்பூட்டிவிட்டார்கள்.
ஸ்வாமி சந்நிதி செல்ல இருபக்கமும் துவாரபாலகர் இருக்கும் அழகிய வாசல்படி
நாவல் மரத்தில் உள்ள நாவல் கனியை முதலைமேல் அமர்ந்து பறிக்கும் குரங்கு. குரங்கும், முதலையும் கதை தெரியும் தானே ! எல்லோருக்கும்.
வானுயர்ந்த கோபுரமும் தட்சிணாமூர்த்தியும்
மரம் செடிகள் இடையே கோபுரக் காட்சி
இறைவனின் ஆனந்த நடனம்
எங்கு இருந்து படம் எடுத்தாலும் அலுக்காத கோபுர தரிசனம்
பழைய படங்கள் -பின்பு வருகின்றன.

கோபுர மேல்தளம்

உள் கோபுர மேல்தளம் செல்லும் படிகளில்

கோபுரத்தின் மேல் தளம்

கோபுர மேல்தளத்திலிருந்து எடுத்த படம்
மொட்டை கோபுரத்தின் மேல் தளம்
கோவிலுக்கு செல்லும் மக்களை ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கும் யானையார்
பல வருடங்கள் கங்கைகொண்ட சோழபுரம் சென்ற போது எடுத்த படங்களை இங்கு பகிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
நந்தி அருகில் உள்ள நாகலிங்கமரத்தில் நாகலிங்கப்பூ.
நாம் இந்த பூவை மனதால் இறைவனுக்கு சமர்ப்பித்து இறைவனின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வோம்.
வாழ்க வளமுடன்
----------------------
கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தாலும் உங்கள் இந்தப்பதிவைப் பார்க்கும் போது நிறையவே கண்டுகொள்ளாமல் போனது தெரிகிறது. மிகவும் ரசித்துதான் இருக்கிறீர்கள். இந்தப் பதிவின் மூலம் எங்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமன்னர்கள் இறைவனுக்கான கோவில்களை காலத்தால் அழிக்க முடியாதபடி கட்டி இருக்கிறார்கள். தங்கள் இருப்பிடம் இரண்டாம் பட்சம்தான் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇந்த ஆலயத்தில் எத்தனை முறை போனாலும் ரசிப்பதற்கு புதுமையாக ஏதாவது நம் கண்களுக்கு தட்டுப்படும் சார்.
எல்லா மன்னர்களும் தங்கள் இருப்பிடத்தைவிட இறைவன் வாழும் இடத்திற்கு தான் முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது உண்மை சார். சோழன் செங்கணான் கட்டிய மாடக்கோவில்கள் , பல்லவமன்னர்கள் கட்டிய கோவில்கள் இப்படி பலமன்னர்களும் கட்டிய கோவில்கள் காலத்தால் அழியா காவியமாக அவர்கள் பெருமையை சொல்லிக் கொண்டு இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல் மன்னர்களுக்கு தங்கள் இருப்பிடம் இரண்டாம் பட்சம் தான்.
உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
மலரும் நினைவுகள் என்றும் இனிமை... நன்றி..
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமையோ அருமை...
மன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே!
பதிலளிநீக்குமன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். //
போரில் எதிரிகள் தானே மன்னர்களின் இருப்பிடத்தை மண்மேடாக்கியிருக்கிறார்கள்.
ஒரே ஸ்தலத்திற்கு
பதிலளிநீக்குஆன்மீக குழுக்களுடன் சென்றால் ஒரு அனுபவம் ,
அதே இடத்திற்கு குடும்பத்தினருடன் சென்றால் வேறுவகையான அனுபவங்கள் என பல் முறை திளைத்திருக்கிறோம் ..
அருமையான் படங்களும்
அற்புதமான பகிர்வுகளும் மிகவும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..
பார்க்க நினைக்கும் ஒரு கோயில்! நேரில் சென்று பார்த்த உணர்வை வரவழைத்தன படங்கள்! விபரங்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குகூட்டம் அதிகம் வந்தாலும் தொல்லை.. வராவிட்டாலும் தொல்லை. அழகான படங்கள்.
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் அற்புதமான பல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குமன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுகிற வரையில் சந்தோஷமே !
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
//ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும். உடலுக்கு ஆரோக்கியம் தரும்//
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..
தஞ்சை பெரிய கோயிலிலும் இப்படித்தான்.. திருக்கோயிலுக்குள் நுழையும் போதே ஆனந்தப் பரவசம் ..
அழகிய படங்களுடன் இனிய பதிவு..
மிக்க மகிழ்ச்சி..
படங்கள் பார்க்கப் பார்க்க எத்தனை அழகு.
பதிலளிநீக்குதமிழ் நாட்டிலே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனை எத்தனை!......
படங்கள் அங்கே செல்ல வேண்டும் எனற ஆசையைத் தூண்டிவிட்டது!
படங்கள் ஒவ்வொன்றும்பேசுகின்றன
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் என்னையும் வா வா என்று அழைக்கிறது சகோதரியாரே
விரைவில் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல வேண்டும்
நன்றி சகோதரியாரே
அற்புதமான படங்கள். மாளிகை மேடு நாங்கள் பார்க்கவில்லை. மேல்தளங்கள் பார்க்கும் பாக்கியமும் இல்லை. நாங்கள் சென்ற நேரத்துக்கு கோவில் மூடி விட்டதால் உள்ளே செல்ல முடியவில்லை. மறுபடியும் ஒரு விசிட் அடிக்கவேண்டும்!
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான், போரில் எதிரி மன்னர்கள் தான் மண்மேடாக ஆக்கினார்கள்.
பதிலளிநீக்குஅந்நியபடையெடுப்பாலும் கோட்டை கொத்தளங்கள் அழிந்தன.
நீங்கள் சொல்வது போல் அனுபவங்கள் மறுபடும் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான், போரில் எதிரி மன்னர்கள் தான் மண்மேடாக ஆக்கினார்கள்.
பதிலளிநீக்குஅந்நியபடையெடுப்பாலும் கோட்டை கொத்தளங்கள் அழிந்தன.
நீங்கள் சொல்வது போல் அனுபவங்கள் மறுபடும் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
படங்கள் யாவும் மிக அருமை. வருடப் பிறப்பு தோறும் செல்லும் வழக்கம் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவிடுமுறையில் சென்று வாருங்கள் குடும்பத்தினருடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அப்பாதுரை, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரியே!
கூட்டம் வந்தாலும் கஷ்டம் தான். வரவில்லை என்றாலும் கஷ்டம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
வண்க்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வள்முடன்.
பதிலளிநீக்கு//தஞ்சை பெரிய கோயிலிலும் இப்படித்தான்.. திருக்கோயிலுக்குள் நுழையும் போதே ஆனந்தப் பரவசம் //
நீங்கள் சொல்வது உண்மை.
நாங்கள் முன்பு அடிக்கடி போகும் கோயில்களில் தஞ்சையும் ஒன்று.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் வெங்கட் நாகராஜ வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரர் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசென்று வாருங்கள் அருமையான பதிவு எல்லோருக்கும் கிடைக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவாருங்கள் வந்து பாருங்கள். கலியபெருமாள் கோவில், அழகர், கோவில், மாளிகைமேடு, ஸ்ரீமத் நாதமுனிகள்திருவரசு, திருக்குருகாவூர் எல்லாம் பார்க்கலாம்.
அதுகேற்றமாதிரி நேரத்தை ஒதுக்கி வந்தால் பார்க்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம் , குருகாவூர் என்று தப்பாக எழுதி விட்டேன்.சரியான பேர்
பதிலளிநீக்குகுருவாலப்பர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கலாம்.
'தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ணன் தம்பிகள்!' -- என்று முன்பு கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய தன் பதிவில் சொல்லியிருந்தார் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇங்கு அண்ணன் - தம்பி சிற்பம் அற்புதமாய் நேர்த்தியாய் இருந்தது.
தெரியாதவர்களுக்கு தெரியாதவற்றைத் தெரிவிக்கும் கைடாய் எப்பொழுதும் உங்கள் பதிவுகள் அமைவது எங்கள் பாக்கியம்.
மிக்க நன்றிம்மா.
ஏயப்பா.எத்தனை பெரிய கோயில்மா இது கோமதி. நீங்கள் ஏன் மாயவரத்தில் இருக்கிறீர்கள் என்று இப்போது புரிகிறது. இத்தனை கலையழகும் கடவுள்கலும் கூடவே இருப்பதால் தானே. வெகு அழகான படப்பிடிப்பு. அதுவும் உங்கள் மகனும் அவரது தோழர்களும் இருக்கும் படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.எப்பொழுதும் கடவுள் அருளோடு எல்லாக் கோவில்களையும் பார்த்து எங்களிடமும் பகிருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநிறைய புதிய கருத்துக்களை ஸ்ரீராம் சொன்னார்கள் தன் பதிவில்.
நிறைய பேர் சரித்திர சான்றுகளை சொல்லி விட்டார்கள்.
நானும் என் பங்குகிற்கு எனக்கு தெரிந்ததை சொன்னேன் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
அன்பு வ்ல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் மாயவரத்தின் அமைதியும், கோவில்கள் தரிசனம் செய்வதும் தான்.
இன்னும் நிறைய கோவில்கள் பதிவிட இருக்கிறது.
இறைவன் அருளாலும், உங்கள் ஆசியாலும் அவை நிறைவேற வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி அக்கா.
கங்கை கொண்ட சோழபுரம் இதுவரை சென்றதில்லை. ஆனால் போய்வந்த நிறைவைத் தந்துவிட்டன படங்களும் தகவல் பகிர்வுகளும். சிற்பங்கள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கும் கலைநயம். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி கீதமஞ்சரி.
இது வரை சென்றதில்லை என்பதால் இந்தப் பதிவும் படங்களும் பயனுள்ளதாக அமைந்தன.
பதிலளிநீக்குசெல்லவேண்டும் எனநினைத்த இடங்களில் இதுவும் அடக்கம்.
பதிலளிநீக்குகாணக்கிடைக்காத பல கண்டுகொண்டதில் மகிழ்கிறேன்.
வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவிடுமுறையில் வாருங்கள் தரிசிக்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்களுடைத் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஇணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/3.html
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
உங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க!
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
உங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க!
அழகான படங்கள். இதுவரை சென்றதில்லை. பார்க்கத் தூண்டும் பதிவு.
பதிலளிநீக்குவணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.