Thursday, January 9, 2014

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசுதெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் அருள்பெற்ற
நாதமுனிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமனமே உண்டோபேசு   
                                          -உபதேசரத்னமாலை

ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 1ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் போவதை நாங்கள் வழககமாய் வைத்திருக்கிறோம்..  அப்புறம்  அக்கோயிலின் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளும் வருடா வருடம் எங்களை அங்கும் வரும்படி அழைத்து விட்டார். குருவாலப்பர் கோயில் (குருகை காவலப்பர்)பற்றி முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இந்த முறை கங்கைகொண்டசோழபுரம், குறுவாலப்பர் கோயில் ஆகியவற்றை  வணங்கிவிட்டு வரும் போது  ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற  ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். .  ”இந்தப் பலகையை , இவ்வளவு வருடம் வருகிறோம், பார்த்தது இல்லையே ! போய் பார்ப்போம்’ என்றேன். கோவில் திறந்து இருக்குமா தெரியவில்லை அறிவிப்புப் பலகை அருகிலிருந்த கடையில் விசாரிக்கலாம் என்று விசாரித்துபோது   பட்டர் இருப்பார்   என்று சொல்லி  செல்லும் வழியைக்  காட்டித் தந்தார்.

மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம்  200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு  அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.


திருவரசு’  என்பதற்கு விளக்கம்:-

“வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” என்பது ஸ்ரீபிள்ளை லோகாசாரியார் அருளிய ஸ்ரீவசனபூஷணத்தின் வாக்யம்.இதன்பொருள் என்னவென்றால் குளிர்ச்சிக்காகவும் வாசனைக்காவும் வெட்டிவேரை சூடும்போது வேரிலுள்ள மண்ணைக் கழுவி தனியாகப் பிரித்து எடுக்காமல் அப்படியே சூடிக் கொள்வார்கள். அது போல பகவான் ஸ்ரீமந் நாராயணன் ஞானிகளின் பிராக்ரதமான் திருமேனியை (நிலம், நீர், தீ காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாலான மாறுதலுக்கு உட்பட்ட அழியக்கூடிய உடல்)விட்டுப் பிரியும் ஆத்மாவை (அனைத்துஆத்மாக்களும் அப்ரக்ரமானது, மிகநுண்ணியது, பிரகாசிக்கக்கூடியது, மாறுதலிலாதது மற்றும் அழிவில்லாத நிலை கொண்டது) மட்டும் தன்னுடனே வைத்துக் காப்பதோடல்லாமல் அந்தத் திருமேனியையும் உகந்து காக்கிறான் என்பதாகும். ஆகவே ஆழ்வார்கள்  ஆசாரியர்கள் திருமேனியைப் பள்ளிப் படுத்திய இடத்தில் அங்குள்ள ஞானிகளின் நல்லாட்சி என்ற நல் ஆசிகள் என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் அவவிடம் “திருவரசு” என்ற பெருமை பெறுகிறது. அங்கு தரிசிக்க செல்லும் அடியார்களின் வினைகளும் நீங்கி விண்ணகர் கிட்டும் என்பது திண்ணம் ”என்கிறார்கள்.


ஸ்ரீமந் நாதமுனிகளின் "திருவரசு ”அரியலூர்  மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள  ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம்.

நாங்கள் போனநேரம் காலை 11மணி . பட்டர் இருந்தார். கோவில் பாதுகாவலர். மற்றும் ஒரு அடியார் இருந்தார்.

கோவில்  சமீபகாலத்தில் (2013) கும்பாபிசேகம் ஆனதால் அழகாய் இருந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத  ஸ்ரீநிவாச பெருமாள்  இருந்தார். பட்டர் ஆரத்தி காட்டி, கோவில் வரலாறு சொன்னார்.’ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்’என்ற புத்தகம் தந்தார்.

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய  நாலாயிரம் திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் காலத்தால் மக்களிடமிருந்து மறைந்திருந்தன. அவற்றை மறுபடியும் மீட்டுக் கொடுத்த பெருமை ஸ்ரீமந் நாதமுனிகளேயே சாரும்.

திவ்யப்பிரபந்தைப் பகுத்து ராகம், தாளம் அமைத்த வரலாறு:-

’இவ்வாறு காட்டுமன்னார்குடி ஸ்ரீவீரநாராயணப் பெருமாளின் நியமனத்தால் திருமால் நெறியான ஸ்ரீவைஷ்ணவத்தை பார் எங்கும் பரப்பும் பொருட்டு நாலாயிரம் பாசுரங்களையும் தொகுத்து தன் மருமக்களான மேலையகத்தாழ்வான் மற்றும் கீழையகத்தாழ்வான்(அதாவது ஸ்ரீமந் நாதமுனிகள் வீட்டிற்கு மேற்கே மற்றும் கிழக்கே குடியிருந்த மருமகன்கள்) என்ற இருவரின் துணைகொண்டு ராகம் மற்றும் தாளங்கள் அமைத்து இயலும் இசையுமாக்கி அனைவரும் பாடும் வண்ணம் பகுத்துக் கொடுத்தார் .

 நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர். “அரையர் ” என்ற சொல்லுக்கு  “தலைவர்” என்று பொருள். அவர்கள் செய்யும் திவயப்பிரபந்த சேவையே “அரையர்சேவை” என்று அழைக்கப்படுகிறது.ஜகத்காரண பூதரான ஸ்ரீமந் நாராயணனை திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் கொண்டு அபிநயத்துடன் பாடுவதில்
தலைசிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் பொருட்டு “தலைவர்கள்” என்ற பொருள்படும்படி “அரையர்க்ள்” எனபட்டனர். ”

இயற்றிய நூல்கள்:-

யோக மார்க்கத்தை  பிரதானமாக ஸ்ரீமந் நாதமுனிகள்   நியாயதத்வம், புருஷ நிர்ணயம் மற்றும்  யோகரஹஸ்யம்  என்று மூன்று நூல்களை இயற்றினார். இவைகளை சீடர்களுக்கு உபதேசித்தார்.

அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :-

1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
2. குருகைக் காவலப்பன்
3.கீழையகத்தாழவான்
4.மேலையகத்தாழ்வான்
5. திருகண்ணமங்கையாண்டான்
6. பிள்ளை கருணாகரதாசர்
7.நம்பி கருணாகரதாசர்
8. ஏறுதிருவுடையார்
9 வானமாமலை தெய்வநாயக ஆண்டான்
10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
 11.சோகத்தூர் ஆழ்வான் .

கம்ப இராமாயண அரங்கேற்றத்தில் தலைமை ஏற்றல்;-

இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மணடபத்தில் அரங்கேற்றினார்.


இன்று திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்  ”முததமிழ்விழா அரையர் சேவை” பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் நான் ஜனவரி 1ம் தேதி சென்ற  நாதமுனிகள் திருவரசு  கோவிலைப் பற்றி    எழுத எண்ணம் வந்து விட்டது.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு நாளை  தொடரும்.

வாழ்க வளமுடன்.
--------------------

32 comments:

Radha Rani said...

"திருவரசு " "அரையர்கள்" சொல் விளக்கம் படித்தேன்..அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.. ஸ்ரீமத் நாத முனிகள் வரலாறு படிக்க ஆவல் அக்கா. நன்றி.

rajalakshmi paramasivam said...

நாத முனிகள் , அரையர் வரலாறும் அறிந்து கொண்டேன். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு ராகம் அமைத்து கொடுத்ததற்கு நாம் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறோம்.
உங்களுக்கும் நன்றி கோமதி, விரிவான விளக்கங்களுக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதியதோர் கோயில் பற்றிய மிக அழகான அருமையான பதிவு.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள் எல்லாமே மிக அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோயிலின் வரலாறு, சிறப்புகள், கோயிலுக்குச் செல்லும் வெவ்வேறு வழிகள் என அனைத்தும் கொடுத்துள்ளது, போக நினைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இருக்கும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...


"ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு" பற்றி

திருமதி கோமதி அரசு அவர்களால் அறிய முடிந்ததில் மேலும் மகிழ்ச்சி. ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

சிறப்பான தெய்வீகப் பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் தோழி !

திண்டுக்கல் தனபாலன் said...

நாதமுனிகள் திருவரசு கோவிலைப் பற்றி அறியாத தகவல்கள்... படங்கள் அனைத்தும் அருமை... நன்றி...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
அம்மா.

தங்களின் வலைப்பக்கம் வந்தவுடன் அந்த இறைவனை தரிசிக்கம் பக்கியம் கிடைத்தது
அறியமுடியாத நல்ல கவலை அறிந்தேன். . வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...


இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மணடபத்தில் அரங்கேற்றினார். //

அருமையான தகவல்களின் தொகுப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

இராஜராஜேஸ்வரி said...

இன்று திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள் ”முததமிழ்விழா அரையர் சேவை” பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் நான் ஜனவரி 1ம் தேதி சென்ற நாதமுனிகள் திருவரசு கோவிலைப் பற்றி எழுத எண்ணம் வந்து விட்டது.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

எமது பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்..

s suresh said...

அருமையான கோயில்! அழகாய் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
இன்று மாலைஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு வருகிறது. படித்து கருத்து சொல்லுங்கள் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். நாலாயிரதிவ்யப்பிரபந்தம் தந்த சிமந் நாதமுனிகளுக்கு கடமைபட்டு இருக்கிறோம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...
This comment has been removed by the author.
கோமதி அரசு said...

வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் பதிவில் அரையர் சேவை பார்த்தவுடன் அரையர் சேவையை தோற்றுவித்த நாதமுனிகள் திருவரசு நாம் சென்று வந்தோமே அவரைப்பற்றி பதிவு போடவில்லையே என்ற எண்ணம் வந்தது அதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சுரேஷ். வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

வரலாற்றுத் தகவல்கள், விளக்கங்களுடன் பகிர்வு அருமை. அறியத் தந்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.
அடுத்தபாகமும் இப்போது பகிர்ந்து விட்டேன்.

Ranjani Narayanan said...

அன்புள்ள கோமதி,
இரண்டு வருடங்களுக்கு முன் கங்கைகொண்ட சோழபுரம் போனபோது ஸ்ரீமன் நாதமுனிகளின் திருவரசு அருகில் பெருமாள் தாயார் ஓலைக்குடிசையில் எழுந்தருளியிருந்தனர். இப்போது அங்கு கோவில் எழும்பி இருப்பது சந்தோஷமான விஷயம்.

பகிர்விற்கு நன்றி!

Ranjani Narayanan said...

அன்புள்ள கோமதி,
பிழையை சுட்டிக் காண்பிக்கிறேன் என்று நினைக்காதீர்கள், தயவு செய்து. இந்த கருத்துரையை வெளியிடவும் வேண்டாம். பிழைகளை மட்டும் திருத்திவிடுங்கள்.

'ஞானியை விக்ரகத்தோடே (க் - இல் மேல் புள்ளி இல்லை.)
// பிராக்ரதமான்// - பிராக்ருதமான - ன் என்று இருக்கிறது.
//அப்ரக்ரமானது// அப்ராக்ருதமானது என்று இருக்க வேண்டும்.

நாதமுனிகளின் சிஷ்யர்களில் திரு மணக்கால் நம்பியின் பெயர் விட்டுப் போயிருக்கிறது. இவரால்தான் அரசனாக இருந்த ஸ்ரீ ஆளவந்தார் வைஷ்ணவகுல ஆச்சார்யாரானார்.
அரச போகத்தைக் காட்டிலும் உயர்ந்த செல்வத்தை காட்டுகிறேன் என்று இவரை அழைத்துப்போய் திருவரங்கச் செல்வத்தைக் காட்டினார்.

மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

கோமதி அரசு said...

வணக்கம் ரஞ்சினி வாழ்க வளமுடன்.

முன்பு ஓலை குடிசையில் இருந்ததை பம்பாய் தமபதியர்கள் கோவில் ஆக்கி விட்டனர்(.ஸ்ரீமான் குமாரவேல், சாவித்திரி)
அவர்கள் வாழ்க வளமுடன்.

பிழைகளை திருத்தி விடுகிறேன்.
மணக்கால் நம்பிகள் ஸ்ரீ ஆளவந்தாரை திருத்தி பணி கொண்டார் என்று போட்டு இருக்கிறேன்.


ஸ்ரீ நாதமுனிகள் திருவரசு இரண்டாம் பாகத்தில். இப்படி எழுதி இருக்கிறேன் பாருங்கள்.

//அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.//

உங்கள் பாராட்டு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பல தகவல்கள் புதியவை. பகிர்வுக்கு நன்றி.

மேலும் படிக்க வருவேன்!

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்து படித்து கருத்துச் சொல்லுங்கள்.
நன்றி.

ரூபன் said...

வணக்கம்


இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


அறிமுகப்படுத்தியவர்-காவிய கவி


பார்வையிட முகவரி-வலைச்சரம்


அறிமுகம்செய்த திகதி-24.07.2014-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.

உங்கள் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.