திங்கள், 27 ஜனவரி, 2014

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் - பகுதி - 2

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் என்று ஜனவரி 19ஆம் தேதி நான் இட்ட பதிவின் தொடர்ச்சி.

வைகுண்ட ஏகாதசி அன்று நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற தலம் திருத்தெற்றியம்பலம் (பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்)






                             
                                திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

மூலவர் செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்றதிருநாமங்கள், 
4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சீரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
ப்ரத்யக்ஷ்ம்: நாச்சியார், அநந்தாழ்வார்.
மங்களாசாஸனம்: திருமங்கையாழ்வார் _ 10பாசுரங்கள்.

ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் இங்கு பெருமாள் பள்ளிகொண்டு உள்ளார். பட்டர்,பெருமாளுக்கு  அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் . உற்சவர் பூப் பந்தல் அலங்காரத்தில் இருந்தார்.

                                                                 *     *     *

                                         
                                           திரு அரிமேய விண்ணகரம்
இதனை குடமாடும் கூத்தர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
மூலவர்                    : குடமாடும் கூத்தர்(தைலக்காப்பு திருமேனி)
                                    வீற்றிருக்கும் திருக்கோலம்(கிழக்கே திருமுக மண்டலம்)
உதஸவர்                 : சதுர்புஜகோபாலன்
தாயார்                      : அம்ருதவல்லி
தீர்த்தம்                     :கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம்                 : உச்சச்ருங்க விமானம்
 ப்ரத்யக்ஷம்             : உதங்க முனிவர்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார்:  10 பாசுரம்.

நல்ல கம்பீரமான தோற்றத்தில் இடது காலை  குடத்தின் மேல் வைத்த தோற்றத்தில் மிக அழகாய் இருக்கிறார். பட்டர் கீழே பாத தரிசனம் செய்து வைக்கிறார். குடத்திற்கும் பாதங்களுக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது. கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது.

தாயார்  சன்னதி
உச்சச்ருங்க விமானம்

அமிர்தகடவல்லி





ஸ்வாமி விமானம்

***    ****
அடுத்தது - திருமணிக்கூடம்:-

திருமணிக்கூட வாசல்
திருமணிக்கூடம்
மூலவர்                      : வரதராஜப்பெருமாள்  (மணிக்கூடநாயகன்)
                                       நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்                        : திருமாமகள் நாச்சியார்(ஸ்ரீதேவி), பூதேவி 
                                       தாயாருக்குத் தனிச்சந்நதி கிடையாது.
தீர்த்தம்                       :சந்திர புஷ்கரணி.
விமானம்                   : கனக விமானம்
 ப்ரத்யக்ஷ்ம்               : பெரிய திருவடி, சந்திரன்.
மங்களாசாஸனம்    :  திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள் 

                                                          ***     ***

திருச்செம்பொன்செய் கோயில்

மூலவர்                    :பேரருளாளன் , நின்ற திருக்கோலம், 
                                    கிழக்கே திருமுக மண்டலம் 
உத்ஸவர்                 : ஹேமரங்கர் , செம்பொன்னரங்கர்
தாயார்                      : அல்லிமாமலர் நாச்சியார்.
தீர்த்தம்                     : நித்யபுஷ்கரணி, கனகதீர்த்தம்
விமானம்                 : கனக விமானம்
ப்ரத்யக்ஷம்              : ருத்ரன்

மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள்.



                      வைகுண்ட ஏகாதசிக்கு நான் போட்ட கோலம்.

இப்படி நாங்கள் தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.
                                         
திருமணிமாடக் கோயிலில் வரும் ஜனவரி 31ஆம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

பார்க்க வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்கத்தான் மறுபடியும் இந்த தகவல்.

                                               வாழ்க வளமுடன்!

                                            _______________________

32 கருத்துகள்:


  1. இந்தப் பதிவு என் டேஷ் போர்டில் காணவில்லை. தமிழ்மணம் மூலம் அறிந்து வந்தேன். கோவில் கோவிலாகச் சுற்றி புண்ணியம் தேடிக்கொள்கிறீர்கள். வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. வண்க்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அம்மா.

    தங்களின் பதிவின் வழிஆலய தரிசனம் கிடைத்த ஒரு உணர்வு... அம்மா பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வண்க்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  5. திருத்தெற்றியம்பலம் கோயிலின் சிறப்புகள் அனைத்தும் சிறப்பு... அழகான கோலம் உட்பட படங்கள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    பதிவு, கோலம் பற்றி சிறப்பான க்ருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தல ஏதாவது ஒரு படம் வரைந்திருப்பார். பார்க்கலாம் என்று வந்தேன்!

    :-(

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தருமி சார், வாழ்க வளமுடன்.

    //தல ஏதாவது ஒரு படம் வரைந்திருப்பார். பார்க்கலாம் என்று வந்தேன்!//

    எவ்வளவு எதிர்பார்ப்பு! சொல்லிவிட்டேன் உங்கள் எதிர்பார்ப்பை. வரைவார்கள் நேரம் கிடைக்கும் போது.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன. ரசித்தேன். தருமி ஸார் சொன்னதுபோல நானும் அரசு ஸாரின் கைவண்ணம் இருக்கிறதா என்று பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்களும் ஸாரின் கை வண்ணம் எதிர்ப்பார்த்தீர்களா?

    நான் எடுத்த படங்களை ரசித்தமைக்கு நன்றி.

    சார் வரைவதற்கு ஏற்றார் போல பதிவு போட்டு அவர்களை வரைய வைக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்களும் ஸாரின் கை வண்ணம் எதிர்ப்பார்த்தீர்களா?

    நான் எடுத்த படங்களை ரசித்தமைக்கு நன்றி.

    சார் வரைவதற்கு ஏற்றார் போல பதிவு போட்டு அவர்களை வரைய வைக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. புகைப்படங்கள் எல்லாமே அழகு! தெரிந்திராத கோவில்கள் பற்றிய விபரங்களும் அருமை!!

    பதிலளிநீக்கு
  13. / கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது./

    படங்களும் அப்படியே. தகவல்களுக்கு நன்றி. கோலம் அழகு.

    பதிலளிநீக்கு
  14. தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.

    அருமையான தரிச்னம்..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  15. நல்ல படங்களுடன் அருமையான பதிவு.
    நேராக ஆலய தரிசனம் போன்று இருந்தது.
    மிக்க நன்றி சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. ஆலய தரிசனமும் அழகிய கோபுரதரிசனமும் அருமை. ஏகாதசிக் கோலம் மனம் அள்ளும் அழகு. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல அழகான படங்கள். தெளிவான நடையில் அருமையான பதிவு.
    இந்த சந்நிதிகளை இன்னும் தரிசனம் செய்ததில்லை.
    ஆலய தரிசனம் செய்வித்த புண்னியம் தங்களுடையது.

    பதிலளிநீக்கு
  18. அழகான படங்கள்......

    உங்கள் தயவால் நாங்களும் இக்கோவில்களை தரிசித்தோம்.....

    நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    திருநாங்கூரில் இருக்கும் கோவில்கள்தான். அடுத்தமுறை இந்தியாவரும் போது தரிசனம் செய்யலாம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். கைவலி எப்படி இருக்கிறது?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். வலைச்சரப்பொறுப்பை நிறைவாய் அழகாய் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். வலைச்சரப்பொறுப்பை நிறைவாய் அழகாய் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்க்ம் வெங்கட்நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அழகானப் படங்களுடன் கோபுர தரிசனம் செய்து வைத்துள்ளீர்கள்...

    தகவல்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. இதன் முந்தைய பதிவினைப் போலவே அழகிய படங்கள். மற்றும் விவரமான தகவல்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. திருத்தெற்றியம்பலம் கோயிலின் சிறப்புகள் தெரிந்துகொண்டோம்.

    தரிசனம் செய்து வந்தோம்.

    அழகான படங்களுடன் அழகான கோலம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்நன்றி.

    பதிலளிநீக்கு