சனி, 14 செப்டம்பர், 2024

Wupatki National Monument (வுபட்கி தேசிய நினைவுச் சின்னம்)

 

வுபட்கி தேசிய நினைவுச் சின்னம் . இது வட -மத்திய அரிசோனாவில் கொடிக்கம்பத்திற்கு(Flagstaff) அருகில் அமைந்துள்ளது.

ஹோப்பி மக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீடு.  பழங்காலத்தில் எப்படி வீடுகளை கட்டி வாழ்ந்தார்கள் என்பதற்கு  அடையாளமாக எஞ்சி இருக்கும் பகுதிக்கு  சென்று இருந்தோம். அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.

இதற்கு முந்திய பதிவாக சன்செட் க்ரேட்டர் எரிமலை  தேசிய நினைவு சின்னம் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை -1

சூரிய அஸ்தமன பள்ளம் எரிமலை - 2

அடுத்த போன இடம் பழங்குடியினர்  வாழ்ந்த இல்லம். பார்க்கலாம் என்று சொல்லி இருந்தேன். 







அருகாட்சியகம் போல இருக்கும் இந்த இடத்தின் வழியாகதான்  பழங்குடியினர் வீட்டை பார்க்கப்பபோக முடியும்.


முன்பு இந்த இடத்தில் இருந்த மாதிரி வடிவபடம்.

அங்கு இருந்த ஜீவராசிகள்  பற்றிய குறிப்புகள்

அந்த கட்டிடத்தின் மேல் விதானம் அழகு

பயணத்திற்கு தேவையான பொருட்கள்

பழங்குடியினர் செய்த கைவினைப்பொருட்கள் கடையில் கொஞ்சம் நினைவு பரிசுப்பொருட்கள் வாங்கி கொண்டோம்.


தூரத்திலிருந்து ஒரு படம். எஞ்சி இருக்கும் பகுதி



தூரத்தில் நானும் பேரனும் நிற்பது தெரிகிறதா? 
 வீட்டைச்சுற்றி நடந்து வந்தோம்.

கைபிடி வசதியுடன் படிகள் பேரனின் கையை பிடித்து கொண்டு காமிரா, மற்றும் செல்லுடன் இறங்கி ஏறினேன்.


பாதை கொஞ்சம் சரிவு பேரன்தான் வழி நடத்தி சென்றான்

நான் படம் எடுத்து கொண்டு இருந்தால் நான் வரும் வரை நிழலில் ஒய்வு எடுப்பான்


அவர்கள் வாழ்ந்த வீட்டுக்குள்

ஜன்னல் வசதி  பாறைகள் மேல் கற்களை  பலகை போல அடுக்கி  வைத்து கட்டி இருக்கிறார்கள்
மேல் இருந்து மகன் எடுத்த படம்

கீழ் இருந்து நான் எடுத்த படம்







தனி தனி பிரிவுகள் கூட்டமாய் வாழ்ந்து இருக்கிறார்கள். மேலே மாதிரி வீட்டில் (முதல் படத்தில்) உள்ளது போல மிக உயரமாக பெரிய கோட்டை போல கட்டிடம் இருந்து இருக்கிறது. 100 க்கு மேற்பட்ட அறைகள் இருந்து இருக்கிறது.



//நினைவுச்சின்னம் முழுவதும் பரவியுள்ள பல குடியேற்ற தளங்கள் பண்டைய பியூப்லோ மக்களால் கட்டப்பட்டது, குறிப்பாக கொஹோனினா, கயென்டா மற்றும் சினகுவா. வுபட்கி, அதாவது ஹோப்பி மொழியில் "லாங் கட் ஹவுஸ்" என்று பொருள்படும், இது 100க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் ஒரு சமூக அறை மற்றும் வட அமெரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வடக்கின் பால்கோர்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அடுக்கு பியூப்லோ குடியிருப்பு ஆகும், இது கிட்டத்தட்ட 50 மைல்களுக்கு மிகப்பெரிய கட்டிட தளத்தை உருவாக்குகிறது. இரண்டு கிவா போன்ற கட்டமைப்புகள் உட்பட, அருகிலுள்ள இரண்டாம் நிலை கட்டமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.[7] 11 ஆம் நூற்றாண்டில் (1040 மற்றும் 1100 க்கு இடையில்) சூரிய அஸ்தமனப் பள்ளம் வெடித்தவுடன் ஒரு பெரிய மக்கள் வருகை தொடங்கியது, இது எரிமலை சாம்பலால் அப்பகுதியை மூடியது,

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் தண்ணீரைத் தக்கவைக்கும் மண்ணின் திறனை மேம்படுத்துதல். 1182 வாக்கில், வுபட்கி பியூப்லோவில் சுமார் 85 முதல் 100 பேர் வாழ்ந்தனர், ஆனால் 1225 வாக்கில், அந்த இடம் நிரந்தரமாக கைவிடப்பட்டது. பல ஆண்டுகளாக, சாம்பல் மற்றும் எரிமலை அடுக்குகள் வாழ்வதை கடினமாக்கியிருக்கும்.[8] 1980களில் நடத்தப்பட்ட தொல்பொருள் தளங்களை கவனமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 2,000 பேர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். விவசாயம் முக்கியமாக மக்காச்சோளம் மற்றும் பாசனம் இல்லாமல் வறண்ட நிலத்தில் வளர்க்கப்பட்டது. வுபட்கி தளத்தில், நீரூற்றுகள் அரிதாக இருப்பதால் குடியிருப்பாளர்கள் மழைநீரை சேகரித்தனர்.//



அவர்கள் பயன்படுத்திய வித விதமான அம்மிகள்

 ஒவ்வொரு வீட்டிலும்   அம்மிகள்  இருந்தன


//குடியிருப்பின் சுவர்கள் உள்ளூர் மொயென்கோபி மணற்கல்லின் மெல்லிய, தட்டையான தொகுதிகளால் கட்டப்பட்டது, இது பியூப்லோஸுக்கு அவற்றின் தனித்துவமான சிவப்பு நிறத்தைக் கொடுத்தது. சாந்து கொண்டு, பலசுவர்கள் இன்னும் நிற்கின்றன. ஒவ்வொரு குடியேற்றமும் ஒரு கட்டிடமாக கட்டப்பட்டது,  பல அறைகள் உள்ளன. நினைவுச்சின்ன பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய குடியேற்றம் வுபட்கி பியூப்லோ ஆகும், இது இயற்கையான பாறைகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட அறைகளுடன், இந்த பியூப்லோ நம்பப்படுகிறது//


நன்றி WIKIPEDIA

இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள படித்துப்பார்க்கலாம்.




காற்று அரித்து இருக்கிறது





ஜன்னல் வழியே வானம் தெரிகிறதா?


நிகழ்ச்சிகள் நடத்தும் இடம் போலும், மக்கள் கூடும் சமுதாய கூடமாக இருக்கும்   என்று நினைக்கிறேன்


இரண்டு வட்ட பகுதிகள் இருந்தன



மேல் பகுதியில் கொஞ்சம் அமர்ந்து இளைப்பாறல்.

இன்னும் வரும். தொடர்ந்து  வாருங்கள் பார்க்கலாம். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

37 கருத்துகள்:

  1. கட்டுரையின் இடையில் மொழி நடை மாற்றம் வியக்க வைத்தது. பின்னர் தான் விவரங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. படங்கள் சிறப்பாக உள்ளன. தொல்பொருட்களும் சரித்திரமும் குறைவான அளவில் இருந்தாலும், இருப்பதை பாதுகாப்பதில் அரசு மிகவும் அக்கறை செலுத்துவது பாராட்டுக்குரியது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கட்டுரையின் இடையில் மொழி நடை மாற்றம் வியக்க வைத்தது. பின்னர் தான் விவரங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. படங்கள் சிறப்பாக உள்ளன. தொல்பொருட்களும் சரித்திரமும் குறைவான அளவில் இருந்தாலும், இருப்பதை பாதுகாப்பதில் அரசு மிகவும் அக்கறை செலுத்துவது பாராட்டுக்குரியது.//

      கூகுள் மொழி மாற்றம் உங்களுக்கு பிடித்து இருந்ததா? மகிழ்ச்சி.
      தொல்பொருடகள் கண்டுபிடிப்பு குறைவு தான். ஆனால் இன்னும் தேடி கொண்டு இருக்கிறார்கள் அந்த பகுதியில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ.

    படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    பழமையை பாதுகாப்பதில் அவர்கள் என்றும் முன்னோடிகள்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ.

      படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

      பழமையை பாதுகாப்பதில் அவர்கள் என்றும் முன்னோடிகள்தான்....//

      ஆமாம், பழமையை நன்றாக பாதுகாக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. வீடுகளின் தொன்மை வியக்க வைக்கிறது.  இது மாதிரி இடங்களை பார்க்கையில் மனதிற்க்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும் இல்லையா?  எப்படி வாழ்ந்திருப்பார்கள், எப்படி புழங்கி இருப்பார்கள் என்றெல்லாம் தோன்றும். 

    எவ்வளவு பெரிய கட்டிடம்?  நிறைய குடும்பங்கள் ஒன்றாக ஒரே கட்டிடத்தில் வாழ்ந்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.  அலலது சத்திரம், ஹோட்டல் போல தங்குமிடமோ என்னவோ... 

    சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வீடுகளின் தொன்மை வியக்க வைக்கிறது. இது மாதிரி இடங்களை பார்க்கையில் மனதிற்க்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும் இல்லையா? எப்படி வாழ்ந்திருப்பார்கள், எப்படி புழங்கி இருப்பார்கள் என்றெல்லாம் தோன்றும். //

      சூரியன் அஸ்தமன பள்ளம் எரிமலையில் வீடு இழந்தவர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் கூடி வாழ்ந்து இருக்கிறார்கள். அனைவருக்கும் தண்ணீர் இல்லை, அதனால் தண்ணீர் இருக்கும் இடம் தேடி போய் விட்டார்கள். அவர்கள் சோளம் பயிர் செய்தார்கள் என்பதற்கு சாட்சியாக நாலு சோளச்செடியை பாதுகாப்போடு வளர்க்கிறார்கள் வெயிலின் கொடுமையில் அவை வதங்கி கிடந்தது. அடுத்த பதிவில் வரும்.

      //எவ்வளவு பெரிய கட்டிடம்? நிறைய குடும்பங்கள் ஒன்றாக ஒரே கட்டிடத்தில் வாழ்ந்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. அலலது சத்திரம், ஹோட்டல் போல தங்குமிடமோ என்னவோ...//

      100 குடும்பங்கள் ஒன்றாய் வாழ்ந்தார்கள் என்று போட்டு இருக்கிறேனே! ஸ்ரீராம்.

      ஏணி வைத்து ஒவ்வொரு அறைக்கும் ஏறி இருக்கிறார்கள் .
      முன்பு ஒரு பழங்குடியினர் வீடு பார்க்க கூட்டி போனான்
      நியூஜெர்சியில் இருந்த போது அது மலையில் குடைந்து அதில் புகுந்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் அதிலும் சேர்ந்து தான் வாழ்ந்து இருக்கிறார்கள். அது இன்னும் பதிவு போட வில்லை.

      நீக்கு
  4. இந்த ஒரு கட்டிடம்தான் பாக்கியா, அல்லது இன்னும் தூரத்தில் தெரிவதும் இது போன்ற இடிபாடுகளா தெரியவில்லை.  அந்த இடத்தில் திடீரென ஒரு புதைகுழிக்குள்ளிருந்து ஒரு பழைய மனிதன் எழுந்து வெளியே வந்து 'ஹலோ' சொன்னால் எப்படி இருக்கும்,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த ஒரு கட்டிடம்தான் பாக்கியா, அல்லது இன்னும் தூரத்தில் தெரிவதும் இது போன்ற இடிபாடுகளா தெரியவில்லை//
      பெரிய கட்டிடம் முன்னால் தெரிவது, நான், பேரன் எடுத்து கொண்ட படங்கள் இந்த கட்டிடத்திற்கு பின் புறம் உள்ளது.
      நம்பர் போட்டு இருந்தார்கள் 13 என்று. இன்னூம் தேடி கொண்டு இருக்கிறார்கள். கிடைக்கலாம்.

      . //அந்த இடத்தில் திடீரென ஒரு புதைகுழிக்குள்ளிருந்து ஒரு பழைய மனிதன் எழுந்து வெளியே வந்து 'ஹலோ' சொன்னால் எப்படி இருக்கும்,!//

      நல்ல கற்பனை வந்தால் நொந்து போவான் இப்போதைய உலகத்தைப்பார்த்து.

      நீக்கு
  5. வுபட்கி, ஹோப்பி என்று பெயர்கள் எல்லாம் வினோதமாக இருக்கின்றன.  அங்கிருக்கும் வரைபடங்களில் சொல்லியுள்ளபடி நாம் அறியாத உயிரினம் ஏதாவது அங்கிருந்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வுபட்கி, ஹோப்பி என்று பெயர்கள் எல்லாம் வினோதமாக இருக்கின்றன.//

      ஆமாம்.

      //அங்கிருக்கும் வரைபடங்களில் சொல்லியுள்ளபடி நாம் அறியாத உயிரினம் ஏதாவது அங்கிருந்திருக்கிறதா?//

      அண்டம் காக்கை மட்டும் பார்த்தேன் வேறு உயிரனம் ஒன்றும் பார்க்கவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அழகு. இந்த இடத்தைப் பற்றி முன்னமே எதிலோ படித்த நினைவு

    இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள், கட்டிடங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பராமரிப்பு குறைவு.

    அங்கு சரித்திரம் குறைவு. பராமரிப்பு அதிகம். மக்களும் மெச்சூர்டாக, இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //படங்கள் அழகு. இந்த இடத்தைப் பற்றி முன்னமே எதிலோ படித்த நினைவு//

      நீங்கள் படித்து இருப்பீர்கள் பத்திரிக்கைகளில்.. நானும் ஒரு படம் போட்டு அடுத்த பதிவில் என்று முன்னோட்டம் கொடுத்து இருந்தேன்.

      //இந்தியாவில் ஏகப்பட்ட இடங்கள், கட்டிடங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பராமரிப்பு குறைவு.//

      ஆமாம், சரித்திர முக்கியத்துவம் பெற்ற கோட்டை , கொத்தளங்கள் , மற்றும் பல இடங்கள் பராமரிப்பும், பாதுகாப்பு இல்லாமலும் இருக்கிறது. நாம் சுற்றிப்பார்க்க போனாலும் பயத்தை உண்டு பண்ணுவது போல உள்ள இடங்கள் இருக்கிறது.

      //அங்கு சரித்திரம் குறைவு. பராமரிப்பு அதிகம். மக்களும் மெச்சூர்டாக, இருக்கிறார்கள்.//

      ஆமாம், பராமரிப்பு எவ்வளவு கட்டணம் வைத்தாலும் கட்டிப்பார்க்கிறார்கள். அவர்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து வருடம் ஒரு முறை இப்படி பட்ட இடங்களுக்கு போய் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள்.

      இது போன்ற உடைந்த கட்டிடம், பாழ் அடைந்த இடத்தைப்பார்த்தால் நம் ஆட்கள் முதலில் அசுத்தம் செய்வார்கள். அவர்கள் குப்பைகளை போடாமல், அசுத்தம் செய்யாமல் நடந்து கொள்வதை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  7. நடைபாதை வெயில் என்பதாலும், படிக்கட்டுகளினாலும் கடினமாக இருந்ததா?

    இந்த மாதிரி இடங்களில் பாம்பு பயம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடைபாதை வெயில் என்பதாலும், படிக்கட்டுகளினாலும் கடினமாக இருந்ததா?//

      முதல் நாளும் மழை பெய்தது என்றார்கள். நாங்கள் வந்த போதும் மழை பெய்து ஓய்ந்து இருந்தது. அதனால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை.

      படிக்கட்டுகள் ஏறுவது , இறங்குவது எனக்கு கஷ்டமாக இருந்தது, மகன் வீடியோ எடுத்து இருக்கிறான் அதில் நான் சாய்ந்து சாய்ந்து நடப்பது தெரிகிறது. கொஞ்ச நாளாக இடுப்பு , முழங்கால் வலியில் என் நடை மாறி விட்டது.
      படிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்க்கலாம் படத்தில்.

      //இந்த மாதிரி இடங்களில் பாம்பு பயம் இல்லையா?//

      பாம்பு பற்றி ஒன்று சொல்லவில்லை, தேள் உண்டு. விஷம் அதிகமான தேள் உண்டு என்று அங்கு படங்கள் வைத்து இருந்தார்கள்.


      நீக்கு
  8. நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தனரா?

    பதிவுக்காக பேரனின் உதவியும் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தனரா?

      பதிவுக்காக பேரனின் உதவியும் வியக்க வைக்கிறது.//

      ஆமாம், நிறைய பேர் வந்து இருந்தார்கள், விடுமுறை தினம் என்பதால் நல்ல கூட்டம். மேலே உள்ள கொடிமர படத்தில் நிறைய கார் இருப்பது தெரியும், கடையிலும் குழுவாக வந்தவர்கள் படம் இருக்கும் .

      பதிவுக்காக நான் நிறைய படங்கள் எடுத்த போது பொறுமை காத்தான், , என்னை அவன்படம் எடுத்து கொடுத்தான், அவனை நானும், என்னை அவனும் சில இடங்களில் படம் எடுத்தோம் மகன் எங்களை மேலே இருந்து படங்கள் எடுத்தான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  9. பாலைவனப் பிரதேசம். இந்த வெப்பத்தில் எப்படி அலைந்து இந்த இடங்களையெல்லாம் பார்த்தீர்கள், படமெடுத்தீர்கள் என்று தான் எண்ணம் தான் ஓடியது. ஆர்வம் ஒன்றே வழி நடத்திச் சென்றிருக்கிறது. வழக்கம் போல படங்கள் எல்லாம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      //பாலைவனப் பிரதேசம். இந்த வெப்பத்தில் எப்படி அலைந்து இந்த இடங்களையெல்லாம் பார்த்தீர்கள், படமெடுத்தீர்கள் என்று தான் எண்ணம் தான் ஓடியது.//

      நாங்கள் போன அன்று காலநிலை நன்றாக இருந்தது. காற்று நன்றாக வீசியது.

      இந்த பதிவில் மகன், பேரன் நான் எடுத்த படங்கள் இருக்கிறது.

      //ஆர்வம் ஒன்றே வழி நடத்திச் சென்றிருக்கிறது. வழக்கம் போல படங்கள் எல்லாம் பிரமாதம்.//

      நீங்கள் சொன்னது போல ஆர்வம் தான் காரணம் .
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இந்த மாதிரியான இடங்களைப் பார்ப்பதும் சுவாரசியம் தான்.

    ஆச்சரியம், வெயில் தகிக்க, இப்படி எதுவும் இல்லாமல் பாலைவனம் போல இருக்கும் இந்த இடத்திலும் கூட அந்த நாடு எப்படி இவ்வளவு அழகான ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் இருக்கும் மிச்ச சொச்சத்தையும் நினைவு இடமாக்கி அங்கு வாழ்ந்த ஜீவராசிகள் முதற்கொண்டு தகவல்கள் கொடுத்து ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    உங்க மூலமா எங்களுக்கும் பாக்கக் கிடைக்குதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //இந்த மாதிரியான இடங்களைப் பார்ப்பதும் சுவாரசியம் தான்.//
      ஆமாம்.

      //ஆச்சரியம், வெயில் தகிக்க, இப்படி எதுவும் இல்லாமல் பாலைவனம் போல இருக்கும் இந்த இடத்திலும் கூட அந்த நாடு எப்படி இவ்வளவு அழகான ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்த இடத்தில் இருக்கும் மிச்ச சொச்சத்தையும் நினைவு இடமாக்கி அங்கு வாழ்ந்த ஜீவராசிகள் முதற்கொண்டு தகவல்கள் கொடுத்து ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.//

      ஆமாம். அங்கு கிடைத்தவைகளை பார்வைக்கு வைத்து விட்டார்கள்.
      குறிப்புகள் கொடுத்து விட்டார்கள். மக்காசோளம் பயிர் செய்தார்கள்.
      நீர் இல்லாத காரணத்தால் நீர் இருக்கும் இடம் தேடி போய் விட்டார்கள்.

      //உங்க மூலமா எங்களுக்கும் பாக்கக் கிடைக்குதே!!//

      மகன் மூலம் எனக்கு கிடைத்தது அப்படியே உங்களுக்கு பகிர்ந்தேன்.
      நீங்களும் மகன் வீட்டுக்கு போகும் போது பல இடங்களைப் பார்க்கலாம்.

      நீக்கு
  11. ஆமாம் மேல் விதானம் ரொம்ப அழகாக இருக்கு.

    பயணத்திற்குத் தேவையான பொருட்கள் என்றால் உள்ளே நடந்து செல்லும் போது தேவைப்படும் பொருட்களோ?

    //பழங்குடியினர் செய்த கைவினைப்பொருட்கள் கடையில் கொஞ்சம் நினைவு பரிசுப்பொருட்கள் வாங்கி கொண்டோம்.//

    அப்படினா இப்பவும் பழங்குடி மக்கள் இருக்காங்களோ?

    தூரத்திலிருந்து எடுத்த அந்த எஞ்சியிருக்கும் பகுதி படம் சூப்பரா இருக்கு கோமதிக்கா.

    //தூரத்தில் நானும் பேரனும் நிற்பது தெரிகிறதா?
    வீட்டைச்சுற்றி நடந்து வந்தோம்.//

    தெரிகிறீர்கள் அக்கா. கரடு முரடாக இருக்கிறதே சுற்றி ந்டந்து வர முடிந்தது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மேல் விதானம் ரொம்ப அழகாக இருக்கு.//

      ஆமாம பழங்குடியினர் கட்டிட அமைப்பு அது. முன்பு ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.


      //பயணத்திற்குத் தேவையான பொருட்கள் என்றால் உள்ளே நடந்து செல்லும் போது தேவைப்படும் பொருட்களோ?//

      ஆமாம், தொப்பி, தண்ணீர் பாட்டில், குளிர் கண்ணாடி, டீஷர்ட். குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருட்கள். ஆகியவை.

      //அப்படினா இப்பவும் பழங்குடி மக்கள் இருக்காங்களோ?//

      இருக்கிறார்கள் அவர்கள் விவசாய் பண்ணைகள் வைத்து கொண்டு வசதியாக இருக்கிறார்கள் இப்போது. இப்போதும் அவர்கள் கைவினைப்பொருடகள் தறியில் நெய்த ஆடைகள், பின்னல் வேலைகள், தொப்பிகள் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

      //தெரிகிறீர்கள் அக்கா. கரடு முரடாக இருக்கிறதே சுற்றி ந்டந்து வர முடிந்தது இல்லையா?

      தூரத்திலிருந்து எடுத்த அந்த எஞ்சியிருக்கும் பகுதி படம் சூப்பரா இருக்கு கோமதிக்கா.//

      நடைப்பாதை நன்றாக கல் இல்லாமல் சுத்தமாக வைத்து இருக்கிறார்கள், சக்கர நாற்காலியில் வந்து பார்க்கிறார்கள்.

      நீக்கு
  12. கைபிடி வசதியுடன் படிகள் பேரனின் கையை பிடித்து கொண்டு காமிரா, மற்றும் செல்லுடன் இறங்கி ஏறினேன்.//

    பேரன் சமத்து! இறைவனின் அருள் எப்பவும் கவினோடு இருக்கட்டும்.

    இதுக்கு அடுத்தாப்ல உள்ள படம் அட்டகாசம் கோமதிக்கா...

    //பாதை கொஞ்சம் சரிவு பேரன்தான் வழி நடத்தி சென்றான்//

    அவர்கள் வாழ்ந்த இடம் என்று எடுத்திருக்கும் அந்த இடம் அழகு ஆமாம் அடுக்கி வைத்து ஜன்னல்.

    மேல் இருந்து மகன் எடுத்த படம் அந்த இருவர் ஏறுவதும் அவர்களின் இரு தொப்பிகள் அப்படி இருப்பது ரொம்ப அழகா இருக்கு ...படம்

    கீழ் இருந்து நீங்க எடுத்த படமும் வித்தியாசமாக அழகா இருக்கு அந்த இரு தொப்பிகளும் ஒன்று வீட்டின் மேல் வைக்கப்பட்டிருப்பது போல!!!! மற்றொன்று ஒரு தூணில் இருப்பது போன்று (அது அந்த மனிதர்தான்!! )

    இரண்டு படங்களுமே சூப்பர் ஆங்கிள் எடுத்த விதம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரன் சமத்து! இறைவனின் அருள் எப்பவும் கவினோடு இருக்கட்டும்.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      //அவர்கள் வாழ்ந்த இடம் என்று எடுத்திருக்கும் அந்த இடம் அழகு ஆமாம் அடுக்கி வைத்து ஜன்னல்.//

      ஆமாம்.

      //மேல் இருந்து மகன் எடுத்த படம் அந்த இருவர் ஏறுவதும் அவர்களின் இரு தொப்பிகள் அப்படி இருப்பது ரொம்ப அழகா இருக்கு ...படம்//

      ஆமாம் அவர்கள் வெள்ளை தொப்பி அந்த சிவப்பு மண்ணுக்கு பார்க்க அழகாய் இருந்தது.

      //கீழ் இருந்து நீங்க எடுத்த படமும் வித்தியாசமாக அழகா இருக்கு அந்த இரு தொப்பிகளும் ஒன்று வீட்டின் மேல் வைக்கப்பட்டிருப்பது போல!!!! //
      ஆமாம் பார்க்கும் போது அழகாய் இருந்தது.


      //மற்றொன்று ஒரு தூணில் இருப்பது போன்று (அது அந்த மனிதர்தான்!! )//

      அவர் ஒரு படி மேலே ஏறி விட்டார் அதுதான் தூணில் தொப்பி மாட்டியது போல இருக்கிறது. மற்றொரு தொப்பி மதில் மேல் வைத்தது போல இருக்கு.

      //இரண்டு படங்களுமே சூப்பர் ஆங்கிள் எடுத்த விதம்..//

      படத்தை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. பெரிய கோட்டை போல கட்டிடம் இருந்து இருக்கிறது. 100 க்கு மேற்பட்ட அறைகள் இருந்து இருக்கிறது.//

    நீங்க சொல்லியிருக்காப்ல....எல்லாரும் ஒரே இடத்தில் கூட்டமாக இருந்திருப்பாங்க போல...

    இப்ப கூட சிலர் ஒரே தனி வீட்டில் மகன்கள் ஒவ்வொரு அறையிலும் கிச்சன் பொதுவாகவோ இல்லை தனி தனி அபார்ட்மென்ட் ஆனால் ஒரே வீடு அப்படி இருந்திருப்பாங்க போல..

    அவர்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியம் ஆச்சரியம். தண்ணி இல்லாம விவசாயம் ! வாழ்க்கை, மழை நீரை சேமித்து வாழ்தல் எப்படி வாழ்ந்திருப்பாங்க என்று கற்பனை செய்து பார்க்க வைக்கிறது.

    அம்மியா இருக்குமோ என்று அடுத்த படத்தைப் பார்த்ததும் யோசிச்சப்ப நீங்களும் அதைச் சொல்லியிருக்கீங்க!!
    இந்த அம்மிகள் நல்லாருக்கே! விளிம்பு இருக்கு பாருங்க....

    வுபட்கி பியூப்லோ // இவங்க தான் பெரிய கூட்டம் போல.

    விக்கி சுட்டி கொடுத்திருக்கும் வரிக்குக் கீழே உள்ள படம் அதில் 13 என்ற நம்பர் இருக்கு பாருங்க அதன் வலப்புறம் மேலே ஒரு சின்ன சைஸ் குழி....அது குளியலறை/கழிவறை போல தோன்றுகிறது.

    ஜன்னல்களோ மேலே மூன்று இருப்பவை இல்லை சாமான் வைக்கும் பிறை போன்று இருக்குமோ. நம்ம ஊர்ல கூட இப்படி பழைய காலத்து வீட்டில் இருக்குமே அப்படி...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க சொல்லியிருக்காப்ல....எல்லாரும் ஒரே இடத்தில் கூட்டமாக இருந்திருப்பாங்க போல...//

      ஆமாம். கூடி வாழ்ந்து இருக்கிறார்கள்.


      //இப்ப கூட சிலர் ஒரே தனி வீட்டில் மகன்கள் ஒவ்வொரு அறையிலும் கிச்சன் பொதுவாகவோ இல்லை தனி தனி அபார்ட்மென்ட் ஆனால் ஒரே வீடு அப்படி இருந்திருப்பாங்க போல..//

      செட்டி நாட்டு வீடு அப்படித்தான் இருக்கும் எல்லோருக்கும் தனி அறை. சமையல் கூடம் பெரிது அடுப்புகள் நிறைய இருக்கும் தனி தனியாகவும் சமைத்து கொள்ளலாம், சேர்ந்தும் சமைத்து சாப்பிடலாம். ஒவ்வொருவருக்கும் அம்மி, ஆட்டுக்கல் என்று தனி தனியாக இருக்கும்.

      //அவர்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியம் ஆச்சரியம். தண்ணி இல்லாம விவசாயம் ! வாழ்க்கை, மழை நீரை சேமித்து வாழ்தல் எப்படி வாழ்ந்திருப்பாங்க என்று கற்பனை செய்து பார்க்க வைக்கிறது.//

      எரிமலை பள்ளத்துக்கு அருகே வாழ்ந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்தார்கள், தண்ணீர் இல்லாமல் மழையை நம்பி எவ்வளவு காலம் வாழ முடியும்?


      அம்மியா இருக்குமோ என்று அடுத்த படத்தைப் பார்த்ததும் யோசிச்சப்ப நீங்களும் அதைச் சொல்லியிருக்கீங்க!!
      இந்த அம்மிகள் நல்லாருக்கே! விளிம்பு இருக்கு பாருங்க....

      வுபட்கி பியூப்லோ // இவங்க தான் பெரிய கூட்டம் போல.

      //விக்கி சுட்டி கொடுத்திருக்கும் வரிக்குக் கீழே உள்ள படம் அதில் 13 என்ற நம்பர் இருக்கு பாருங்க அதன் வலப்புறம் மேலே ஒரு சின்ன சைஸ் குழி....அது குளியலறை/கழிவறை போல தோன்றுகிறது.//

      இருக்கலாம் கீதா

      //ஜன்னல்களோ மேலே மூன்று இருப்பவை இல்லை சாமான் வைக்கும் பிறை போன்று இருக்குமோ. நம்ம ஊர்ல கூட இப்படி பழைய காலத்து வீட்டில் இருக்குமே அப்படி...//

      ஆமாம். இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருடகளை வைத்து கட்டி எளிமையாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி கீதா.



      நீக்கு
  14. அரிப்புகள் தெரிகின்றன ஆனாலும் அழகாகத்தான் இருக்கின்றன எல்லாமே. ஜன்னல் வழி வானம் தெரிகிறது,,,

    வட்ட வடிவம் மைதானம் கேலரி போன்று இருக்கிறதே....உங்கள் வரியும் அதையேதான் சொல்கிறது.

    அரக்குவேலி (ஆந்திரா விசாகப்பட்டினம்) அங்கு பழங்குடி மக்களின் அருங்காட்சியகம் இருக்கிறதே அங்கும் இப்படி ஒரு காலரி உண்டு. பதிவிலும் சொல்லியிருந்தேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்போதைய மக்களும் இப்படி கட்டியிருந்ததவைதான் இப்போதைய ஸ்டேடியங்களும் அதே வடிவில் அமைக்கப்பட்டுள்ளன...

    நீங்களும் பேரனும் அமர்ந்திருக்கும் வட்டப் பகுதியிலிருந்து தூரத்தே தெரிவதைப் பார்க்கறப்ப ஆங்காங்கே கூட்டமாக ஒரே குடியிருப்பில் வாழ்ந்திருக்காங்க என்பது.

    ரொம்ப சுவாரசியமாக இருக்கின்றது. இயற்கையாகவே வைத்திருப்பதும் அழகு.

    நம்ம ஊர்ல இப்படி ஒரு இடம் இருந்தால் இங்கு வேண்டாதவை எல்லாம் நடக்கும் அதுவும் இப்படி ஒதுக்குப் புறமாக, பல இண்டு இடுக்குகள் இருப்பதால் ரகசியமாகப் பலதும் நடக்கும்.

    மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறியிருந்திருக்கும். அப்படி எத்தனை இடங்கள் காணாமல் போனதோ?

    அடுத்த பகுதி பார்க்க ஆவலுடன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரிப்புகள் தெரிகின்றன ஆனாலும் அழகாகத்தான் இருக்கின்றன எல்லாமே. ஜன்னல் வழி வானம் தெரிகிறது,,,//

      நன்றி.

      //வட்ட வடிவம் மைதானம் கேலரி போன்று இருக்கிறதே....உங்கள் வரியும் அதையேதான் சொல்கிறது.//

      கூகுள் தகவலும் அதை சமுதாயகூடம் என்கிறது


      //அரக்குவேலி (ஆந்திரா விசாகப்பட்டினம்) அங்கு பழங்குடி மக்களின் அருங்காட்சியகம் இருக்கிறதே அங்கும் இப்படி ஒரு காலரி உண்டு. பதிவிலும் சொல்லியிருந்தேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அப்போதைய மக்களும் இப்படி கட்டியிருந்ததவைதான் இப்போதைய ஸ்டேடியங்களும் அதே வடிவில் அமைக்கப்பட்டுள்ளன...//

      ஆமாம். மன்னர்கள் மேலேயும் மக்கள் இப்படி கூடத்திலும் அமர்ந்து சண்டை காட்சிகளை, மாட்டை பிடிப்பது என்று பார்த்து ரசித்து இருப்பதை படங்களில் பார்த்து ரசித்து இருக்கிறோம் நாம்.

      //நீங்களும் பேரனும் அமர்ந்திருக்கும் வட்டப் பகுதியிலிருந்து தூரத்தே தெரிவதைப் பார்க்கறப்ப ஆங்காங்கே கூட்டமாக ஒரே குடியிருப்பில் வாழ்ந்திருக்காங்க என்பது.//

      என்னையும், பேரனையும் பல கோணங்களில் படம் , காணொளி எடுத்தான் மகன்.


      //ரொம்ப சுவாரசியமாக இருக்கின்றது. இயற்கையாகவே வைத்திருப்பதும் அழகு.//

      ஆமாம், செயற்கை புகுந்து விட்டால் நன்றாக இருக்காது.

      நீக்கு
  15. விக்கி தகவல் தமிழில் - கூகுள் மொழி மாற்றம் என்பது நல்லா தெரிகிறது கோமதிக்கா....அந்த மொழி நடை பல இடங்களில் வித்தியாசமாக இருக்கும். சொற்களும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விக்கி தகவல் தமிழில் - கூகுள் மொழி மாற்றம் என்பது நல்லா தெரிகிறது கோமதிக்கா....அந்த மொழி நடை பல இடங்களில் வித்தியாசமாக இருக்கும். சொற்களும்!//

      தகவல்கள் தேடி படித்தேன் ஆங்கிலத்தில் தான் இருந்தது அதை தமிழ் படித்தினேன். கூகுள் தமிழ் வித்தியாசமாக இருக்கும் புரிந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் கோமதிக்கா தட்டச்சும் போது - நல்லா தெரியும்னு அடிச்சிட்டு கோமதிக்கா என்று அடிச்சேன் தெரிகிறதுன்னு வந்திருக்கு இப்பதான் பார்த்தேன்.

      நல்லாவே பண்ணியிருக்கீங்க அக்கா.

      கீதா

      நீக்கு
    3. 600 ஆண்டுகளுக்கு முன் அதுவரை செழிப்பாக இருந்த அந்த பழங்குடி மக்கள், இப்போது அவர்கள் மக்களுடன் கலந்திருக்கலாம்...தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை என்றும் தோன்றுகிறது. கால மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்பதை இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

      அவர்கள் எல்லோரும் ஓலை வேய்ந்த இலைகள் வேய்ந்த டெண்ட் களில் வாழ்ந்திருப்பார்கள் என்று மனதில் ஒரு படம் இருந்தாலும் இப்படிக் கோட்டை போல் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் பற்றிய தகவல்கள், எரிமலை வெடிப்பினால் குழியில் புதைந்த விவரங்கள் என்று பல விஷயங்கள் படங்களின் மூலமும் உங்கள் தகவல்களின் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது.

      ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தால் மட்டுமல்ல, இயற்கையின் சீற்றம் அப்பகுதியில் உண்டாகியிருக்கிறது.

      அரிய புகைப்படங்கள் பேரனுடன் படங்கள், அரிய தகவல்கள் எல்லாமே அருமையாக இருக்கின்றன.

      துளசிதரன்

      நீக்கு
    4. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு ஓணத்திருநாள் நல் வாழ்த்துகள்

      //600 ஆண்டுகளுக்கு முன் அதுவரை செழிப்பாக இருந்த அந்த பழங்குடி மக்கள், இப்போது அவர்கள் மக்களுடன் கலந்திருக்கலாம்...தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை என்றும் தோன்றுகிறது. கால மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்பதை இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.//

      இப்போதும் பழகுடி மக்கள் நல்ல செழிப்பாக பண்ணைவீடுகள் வைத்து கொண்டு விவசாயம் செய்து கொண்டு எல்லா இடங்களிலும் கலந்து இருக்கிறார்கள். நீர் நிலை உள்ள இடங்களில் இருந்தார்கள். நாகரீகம் அடைந்தபின் பல இடங்களில் இன்னும் அவர்கள் கைவினை பொருடகளை விற்றுக் கொண்டு நலமாக இருக்கிறார்கள்.
      தற்காப்பு கலை மற்றும் பல்வேறு தொழில்களில் வெற்றியுடன் நடைபோடுகிறார்கள்.

      //ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தால் மட்டுமல்ல, இயற்கையின் சீற்றம் அப்பகுதியில் உண்டாகியிருக்கிறது.//

      ஆமாம்.


      //அரிய புகைப்படங்கள் பேரனுடன் படங்கள், அரிய தகவல்கள் எல்லாமே அருமையாக இருக்கின்றன.//

      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.


      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக எடுத்துள்ளீர்கள்.

    பழங்குடியினர் வாழ்ந்த வீடுகள் பார்க்கவே பிரமாண்டமாகவும், அழகாகவும் உள்ளது. 100 குடும்பங்கள் கூடி அங்கு ஒன்றாக வாழ்ந்தது என்பது ஆச்சரியமான விஷயம். படங்கள அனைத்தும் கண்களை கவர்கிறது. பாறைகளை வைத்தே வீடு அமைத்துள்ளனரா ? அதுதான் காலமாயினும் வீடு அசையாமல் நிற்கிறது. ஆச்சரியமான விஷயம். எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

    அந்த பெரிய வீட்டைச் சுற்றி கரடு முரடான பகுதிகளை எப்படித்தான் நடந்து பார்வையிட்டீர்களோ? மழை பெய்யும் போது வழுக்கல்கள் ஏதும் இல்லாமல் இருந்ததா? விஷ ஜந்துக்கள் ஏதும் வெளிவராமல் இருந்ததா?

    தங்கள் பேரன் கவின் தங்களிடம் மிகவும் அன்பாகவும், பல இடங்களுக்கு நீங்கள் இப்படி சுற்றிப்பார்க்கச் செல்லும் போது உங்களுக்கு வழித்துணையாக இருக்கிறார். அவருடைய அந்த பண்பான மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் எடுத்தப்படங்கள் மிக அழகாக இருக்கிறது. இதன் தொடர்பாக வரும் மற்றைய பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி . இந்த முறை மகன், பேரன் நான் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.

      //பழங்குடியினர் வாழ்ந்த வீடுகள் பார்க்கவே பிரமாண்டமாகவும், அழகாகவும் உள்ளது. 100 குடும்பங்கள் கூடி அங்கு ஒன்றாக வாழ்ந்தது என்பது ஆச்சரியமான விஷயம். படங்கள அனைத்தும் கண்களை கவர்கிறது. பாறைகளை வைத்தே வீடு அமைத்துள்ளனரா ? அதுதான் காலமாயினும் வீடு அசையாமல் நிற்கிறது. ஆச்சரியமான விஷயம். எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை எடுத்து சொல்லியுள்ளீர்கள்.//

      அமெரிக்காவில் நிறைய பழங்குடியினர் இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பேர். அவர்களைப்பற்றி படிக்கும் போது அனைவரும் உழைப்பாளிகள் போராடும் குணம் கொண்டவர்கள் . நானும் பதிவுக்காக அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

      //அந்த பெரிய வீட்டைச் சுற்றி கரடு முரடான பகுதிகளை எப்படித்தான் நடந்து பார்வையிட்டீர்களோ? மழை பெய்யும் போது வழுக்கல்கள் ஏதும் இல்லாமல் இருந்ததா? விஷ ஜந்துக்கள் ஏதும் வெளிவராமல் இருந்ததா?//

      நடைபாதை கரடு முரடாக இல்லை நல்ல செம்மண் பாதை.
      விஷஜந்துக்களைப்பார்க்கவில்லை.

      //தங்கள் பேரன் கவின் தங்களிடம் மிகவும் அன்பாகவும், பல இடங்களுக்கு நீங்கள் இப்படி சுற்றிப்பார்க்கச் செல்லும் போது உங்களுக்கு வழித்துணையாக இருக்கிறார். அவருடைய அந்த பண்பான மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் எடுத்தப்படங்கள் மிக அழகாக இருக்கிறது. இதன் தொடர்பாக வரும் மற்றைய பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். நன்றி.//

      ஆமாம், பேரனின் உதவியுடன் தான் பயணம் செய்கிறேன்.நன்றாக பார்த்துக் கொள்வான். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.வேலைகளுக்கு இடையில் வந்து
      விரிவான கருத்து கொடுத்தமைக்கு நன்றி.



      நீக்கு
  17. தகவல்களும் படங்களும் சிறப்பு. நிறைய விஷயங்கள் உங்கள் கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. விக்கி பக்கத்திலும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //தகவல்களும் படங்களும் சிறப்பு. நிறைய விஷயங்கள் உங்கள் கட்டுரை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. விக்கி பக்கத்திலும் பார்க்கிறேன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு