புதன் காலை எடுத்த நிலவு படம். தோட்டத்தில் காலை நின்ற போது முழு நிலவைப்பார்த்தேன், பார்த்து விட்டு வீட்டுக்குள் போய் காமிரா எடுத்து வருவதற்குள் கீழே இறங்கி விட்டது.
புதன் இரவு 7.45 க்கு எடுத்த நிலவு படங்கள்
இப்போது வரும் தொலைக்காட்சி நாடகங்களில் இரவு என்று காட்ட தினம் முழுநிலவை காட்டுகிறார்கள். நான் நினைத்துக் கொள்வேன், தினம் முழு நிலவு தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று. ஆனால் பிறை நிலவும் எனக்கு பிடிக்கும்.
உங்களுக்கும் இந்த நிலவு படம் பிடிக்கும் என்று பதிவு போட்டு விட்டேன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
வான் நிலா படங்கள் அழகு. எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு பூரி போல இருக்கிறது!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//வான் நிலா படங்கள் அழகு. எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு பூரி போல இருக்கிறது!//
உருளைக்கிழங்கு பூரி! போல நல்ல கற்பனை
நல்ல பசி நேரத்தில் பதிவைப் படித்திருப்பாரோ ஸ்ரீராம்?
நீக்குஹா.. ஹா.. ஹா... வேறு நல்ல உவமை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நெல்லை! எனக்கு இன்னொரு பேர் சாப்பாட்டு ராமன். நாக்கு நாலு முழம்!
நீக்குதையல் மெஷினில் தப்பாக வெட்டப்பட்ட லேடிஸ் ஹேண்ட் கர்ச்சீஃப்!
//தையல் மெஷினில் தப்பாக வெட்டப்பட்ட லேடிஸ் ஹேண்ட் கர்ச்சீஃப்!//
நீக்குஇப்படி ஒரு கற்பனையா!
கிரகண நிலாவும் நன்றாக தெரிகிறது. நானும் எடுத்தேன் மொபைலில். சுமாராகத்தான் வந்திருந்தன. நீங்களும், அதயும் நன்றாய் இருக்கிறது என்று பெருந்தன்மையுடன் பாராட்டி இருந்தீர்கள்!
பதிலளிநீக்கு//கிரகண நிலாவும் நன்றாக தெரிகிறது. //
நீக்குஅவ்வளவுதான் கிரகணம் பிடித்தது.
//நானும் எடுத்தேன் மொபைலில். சுமாராகத்தான் வந்திருந்தன. நீங்களும், அதயும் நன்றாய் இருக்கிறது என்று பெருந்தன்மையுடன் பாராட்டி இருந்தீர்கள்!//
சிவப்பு வண்ணத்தில் மிக அழகாய் இருந்தது கவிதையோடு அடுத்த வியாழக்கிழமை போடுங்கள் பதிவில் அனைவரும் நிலா நன்றாக இருப்பதாக சொல்வார்கள்.
அன்று வந்ததும் இதே நிலா பாடல் எனக்கும் பிடிக்கும். நிறைய நிலா பாடல்கள் இருந்தாலும் சட்டென எனக்குப் பிடித்த ஒரு நிலவு பாடலைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்கு'நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது...'
https://www.youtube.com/watch?v=ZcILuwTbiPM
//அன்று வந்ததும் இதே நிலா பாடல் எனக்கும் பிடிக்கும். நிறைய நிலா பாடல்கள் இருந்தாலும் சட்டென எனக்குப் பிடித்த ஒரு நிலவு பாடலைச் சொல்கிறேன்.//
நீக்குநான் தலைப்பு நேற்று, இன்று என்று போட்டதால் இந்த பாடல் நினைவுக்கு வந்து பகிர்ந்தேன்.
நீங்கள் சொன்ன பாடலும் கேட்டு இருக்கிறேன், நன்றாக இருக்கும்.
'//நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது...'
https://www.youtube.com/watch?v=ZcILuwTbiPM//
பாடலை கேட்டேன், நன்றி.
படங்கள் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குபொறுமையாக காத்திருந்து எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகாக இருக்கிறது.
பொறுமையாக காத்திருந்து எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.//
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ஜி
நிலவு படங்கள் அனைத்தும் அழகு. பவுர்ணமி தினத்தில் இங்கேயும் மொட்டை மாடியில் நின்று நிலவை ரசித்தோம்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//நிலவு படங்கள் அனைத்தும் அழகு. பவுர்ணமி தினத்தில் இங்கேயும் மொட்டை மாடியில் நின்று நிலவை ரசித்தோம்.//
ஆஹா! ரசித்தீர்களா?
மாடியில் முழு நிலவை ரசிப்பதும், சித்ரா பெளர்ணமி நாளில் மொட்டை மாடியில் முழுநிலவை ரசித்துக் கொண்டு உணவு உண்ணுவதும் அருமையானது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்று வந்ததும் அதே நிலா என்ற பாடல் நினைவுக்கு வந்ததுகோமதிக்கா பார்த்தால் நீங்களும் கொடுத்திருக்கீங்க.
பதிலளிநீக்குபடங்கள் அட்டகாசம் போங்க!!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அன்று வந்ததும் அதே நிலா என்ற பாடல் நினைவுக்கு வந்ததுகோமதிக்கா பார்த்தால் நீங்களும் கொடுத்திருக்கீங்க.
படங்கள் அட்டகாசம் போங்க!!//
கீதா உங்களுக்கும் இந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? மகிழ்ச்சி.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. நிலவு படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. படங்களை நீங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். தலைப்பும் பதிவுக்கு பொருத்தமாக உள்ளது. அன்று வந்ததும் இதே நிலா பாடல் அருமை. இசைக்கு பொருத்தமான அந்த நடனம் நன்றாக இருக்கும்.
கிரஹணம் அது பகல் நேரமாகையால் இந்தியாவில் தெரியாது என குறிப்பிட்டிருந்தார்கள் அங்கு நன்றாக கிரஹணம் பிடித்திருப்பது தெரிகிறது. கிரஹணம் விட்ட பின் முழு நிலவையும் அழகாக எடுத்துள்ளீர்கள். இங்கு ஒரே வெள்ளை மேகங்கள் நிலவை மறைத்திருந்தன. எனக்கும் நிலவை, மலைகளை, இயற்கையை படமெடுக்க மிகவும் பிடிக்கும். தாங்கள் எடுத்த படங்களை பார்த்து ரசித்தேன். நிலாவை பார்த்தவுடன் நம் மனதில் நிலவு பாடல்கள் வரிசையாக வந்து நிற்கும். சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்த நிலவு பாடல் எனக்கும் பிடித்தமானது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. நிலவு படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. படங்களை நீங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். தலைப்பும் பதிவுக்கு பொருத்தமாக உள்ளது. அன்று வந்ததும் இதே நிலா பாடல் அருமை. இசைக்கு பொருத்தமான அந்த நடனம் நன்றாக இருக்கும்.//
பாடலை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//கிரஹணம் அது பகல் நேரமாகையால் இந்தியாவில் தெரியாது என குறிப்பிட்டிருந்தார்கள்//
ஆமாம்.
// அங்கு நன்றாக கிரஹணம் பிடித்திருப்பது தெரிகிறது. கிரஹணம் விட்ட பின் முழு நிலவையும் அழகாக எடுத்துள்ளீர்கள்.//
நன்றி.
//இங்கு ஒரே வெள்ளை மேகங்கள் நிலவை மறைத்திருந்தன.//
மேகம் மறைத்த நிலாவும் அழகாய் இருக்கும், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல் நினைவுக்கு வரும்.
//எனக்கும் நிலவை, மலைகளை, இயற்கையை படமெடுக்க மிகவும் பிடிக்கும். தாங்கள் எடுத்த படங்களை பார்த்து ரசித்தேன்.//
அதனால்தான் தொடர் பதிவை தள்ளி வைத்து விட்டு உடனே பதிவு போட்டேன்.
// நிலாவை பார்த்தவுடன் நம் மனதில் நிலவு பாடல்கள் வரிசையாக வந்து நிற்கும். சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்த நிலவு பாடல் எனக்கும் பிடித்தமானது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
"அந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கன வந்தது போல் இருக்கும்"
ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு பாடல் நினைவுக்கு வரும் அப்படி பட்ட பாடல்கள் நிலா பாடல்கள்.
எல்லோருக்கும் நிலவை பார்த்தால் பாடல் நினைவுக்கு வ்ருவது இயல்பு.
உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.
அரிசோனாவில் நீங்கள் கண்ட நிலவின் படங்கள் அத்தனையும் அருமை என்பதோடு கண் கொள்ளாக் காட்சி.
பதிலளிநீக்குஅன்று வந்ததும் அதே நிலா பாடல் மிகவும் பிடிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். இந்தப் பாட்டில் எம் ஜி ஆர் ஓரளவு பரவாயில்லாமல் நடனம் செய்திருப்பார்.
பதிவின் படங்களையும் பாடலையும் ரசித்தேன்
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//அரிசோனாவில் நீங்கள் கண்ட நிலவின் படங்கள் அத்தனையும் அருமை என்பதோடு கண் கொள்ளாக் காட்சி.//
ஆமாம், இங்கு நிலவை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அவ்வளவு அழகாய் காட்சி தரும். என்னைவிட அழகாய் எடுப்பவர்கள் இன்னும் அழகாய் எடுப்பார்கள்.
மதுரையில் நான் இருக்கும் வீட்டிலிருந்து நிலாவை எடுக்க வேண்டும் என்றால் மொட்டை மாடி போக வேண்டும், அதுவும் 6 மணிக்கு மேல் மூடிவிடுவார்கள்.(பாதுகாப்பு கருதி)
பெளர்ணமிக்கு கோவிலுக்கு போனால் எடுப்பேன்.
//அன்று வந்ததும் அதே நிலா பாடல் மிகவும் பிடிக்கும். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். இந்தப் பாட்டில் எம் ஜி ஆர் ஓரளவு பரவாயில்லாமல் நடனம் செய்திருப்பார்.//
அவரை அந்த அளவு தான் ஆட சொல்லி இருப்பார்கள் போலும்.
//பதிவின் படங்களையும் பாடலையும் ரசித்தேன்//
பதிவின் படங்ககளையும் பாடலையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.
அக்கா எப்படிக்கா இப்படித் தெளிவாக நிலா !!! படங்கள் மிக மிக அருமை. Professional photography!!!!!
பதிலளிநீக்குதூரத்து நிலவும் செமை...கொஞ்சம் நிழல் படிந்திருப்பது கிரஹணமா இல்லை முழு நிலவு ஆவதற்கு முன் எடுத்தவையோ?
புதன் இரவு 7.45 க்கு எடுத்த நிலவு படங்கள்//
இந்தத் தலைப்பிட்டு இருக்கும் அந்தப் படம் ஆஹா!! செமையா வந்திருக்கு.
நீங்க சொல்லிருப்பது போல முழு நிலவு ஒரு அழகு என்றால் பிறை வேறொரு அழகு!
மிகவும் பிடித்த பாடல் அன்று வந்ததும் அதே நிலா...
அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா. முழு நிலவின் படங்கள் அட்டகாசம் இத்தனை தெளிவாக இருக்கே ஏதோ கைக்கு எட்டியது போல்னு வியக்கிறேன்
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா எப்படிக்கா இப்படித் தெளிவாக நிலா !!! படங்கள் மிக மிக அருமை. Professional photography!!!!!//
ஆஹா! நான் Professional photography யா!
ஏதோ எனக்கு தெரிந்த படி எடுக்கிறேன் கீதா
//தூரத்து நிலவும் செமை...கொஞ்சம் நிழல் படிந்திருப்பது கிரஹணமா இல்லை முழு நிலவு ஆவதற்கு முன் எடுத்தவையோ?//
கொஞ்சம் நிழல் படிந்து இருப்பதுதான் கிரஹணம் பிடித்த நிலா
முதலில் முழு நிலவு போட்டு இருக்கிறேன் பாருங்கள், அப்புறம் கிரகணம் பிடித்த நிலா எடுத்தேன்.
//புதன் இரவு 7.45 க்கு எடுத்த நிலவு படங்கள்
இந்தத் தலைப்பிட்டு இருக்கும் அந்தப் படம் ஆஹா!! செமையா வந்திருக்கு.//
நன்றி கீதா
//நீங்க சொல்லிருப்பது போல முழு நிலவு ஒரு அழகு என்றால் பிறை வேறொரு அழகு!//
ஆமாம் கீதா
//மிகவும் பிடித்த பாடல் அன்று வந்ததும் அதே நிலா...
அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா. முழு நிலவின் படங்கள் அட்டகாசம் இத்தனை தெளிவாக இருக்கே ஏதோ கைக்கு எட்டியது போல்னு வியக்கிறேன்//
தோட்டத்தில் நிலாவை பார்க்கும் போது தொட்டுவிட ஆசைதான்.
பாடலை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
நிலவு படம் அழகாக இருக்கிறது. filter போட்டு எடுத்தீர்களா? ஒரு படத்தில் உள்ள முழு நிலா சூரியனைப் போல் உள்ளது. ஆனால் மற்ற படங்கள் பவுர்ணமி நிலவை 3D யில் அப்படியே காட்டுகிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//நிலவு படம் அழகாக இருக்கிறது. filter போட்டு எடுத்தீர்களா? ஒரு படத்தில் உள்ள முழு நிலா சூரியனைப் போல் உள்ளது. ஆனால் மற்ற படங்கள் பவுர்ணமி நிலவை 3D யில் அப்படியே காட்டுகிறது. பாராட்டுகள்.//
நிலா படங்களை ஜூம் செய்து எடுத்தேன்.
நிலவை ரசித்து கருத்து சொல்லி பாராட்டியதற்கு நன்றி.
நிலவின் படங்கள் அனைத்துமே அழகாக இருக்கின்றது.
பதிலளிநீக்குதிரையில் இரவுக் காட்சியில் முழு நிலவைக் காட்டும் காரணம், அப்போதான் நல்ல வெளிச்சம் இருக்கும், காட்சிகள் தெரியும் என்பதால். இல்லைனா, இரவுன்றாங்க, பளிச்சுன்னு எல்லோரும் உடையுடன் அழகாகத் தெரிகிறார்களே என்று சந்தேகப்படக்கூடாதல்லவா?
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நிலவின் படங்கள் அனைத்துமே அழகாக இருக்கின்றது.//
நன்றி.
//திரையில் இரவுக் காட்சியில் முழு நிலவைக் காட்டும் காரணம், அப்போதான் நல்ல வெளிச்சம் இருக்கும், காட்சிகள் தெரியும் என்பதால். இல்லைனா, இரவுன்றாங்க, பளிச்சுன்னு எல்லோரும் உடையுடன் அழகாகத் தெரிகிறார்களே என்று சந்தேகப்படக்கூடாதல்லவா?//
ஆமாம், இருட்டுகாட்டும் போது அந்தக்கால படங்கள் இருட்டாய் ஒன்றும் தெரியாத மாதிரி படம் எடுத்தார்கள், ஸ்ரீராம் கூட அப்படித்தான் இருட்டாய் காட்டினார், அவர் காமிராமேனாக இருந்த படங்களை இருட்டைல் படம் எடுத்து இருக்கிறார் என்று கேலி செய்வார்கள்.அப்புறம் இருட்டிலும் முகம் தெரிவது போல எடுத்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிலவின் மேல் பகுதி சிறிது மறைந்திருக்கும் இரண்டு படங்களும் கூடுதல் அழகு.
பதிலளிநீக்கு//நிலவின் மேல் பகுதி சிறிது மறைந்திருக்கும் இரண்டு படங்களும் கூடுதல் அழகு.//
நீக்குஅதுதான் கிரகணம் அவ்வளவு தான் பிடித்தது, நான் படுக்க போகும் வரை. காலை சுத்தமான முழு நிலாவாக காட்சி அளித்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நிலவுப் படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குகாலை எடுத்த படத்தில் கூரைக்குப் பின்னால் நிலவு இறங்கி இருப்பதும் அழகாகத்தான் உள்ளது.
வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்
நீக்குநலமா? உங்களை காணவில்லையே என்று நினைத்தேன்
வந்து விட்டீர்கள்.
//காலை எடுத்த படத்தில் கூரைக்குப் பின்னால் நிலவு இறங்கி இருப்பதும் அழகாகத்தான் உள்ளது.//
ஆமாம், சூரியன் மலை வாயில் இறங்குவது போல அழகாய் இருந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.