வியாழன், 16 நவம்பர், 2023

சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்


   பழமுதிர் சோலை  ஆறாவது படை வீடு. சுப்பிரமணிய சுவாமி

இன்று கந்த  சஷ்டி 4 ம் நாள்.கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சக்தியை கொடுப்பவை முருகன் பாடல்களும் முருகன் தரிசனமும் தான். மனது உற்சாகமாக இருக்க  முருகன் பாடல்களை பாடியும் கேட்டும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!முதல் நாள்


ஆறுமுகனே வருவாய்!- மூன்றாம் நாள்

கந்தசஷ்டி சிறப்பு பதிவுகளில் முந்திய பதிவுகள் . படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி  ஆலயம் பற்றி   பல பதிவுகள் போட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்தில் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு முருகன் அருளால்  மகன் சூரன் செய்து கொடுத்து இருக்கிறான். அந்த படங்களும் முருகன் பாடல்களும்  இந்த பதிவில் இடம்பெறும். 

கலியுக வரதன் பழமுதிர்சோலை பதிவுகள் நிறைய பதிவு செய்து இருக்கிறேன். இந்த பதிவில் அபிஷேகம் அலங்காரம் இருக்கும் பார்க்க விருப்பபட்டால் பார்க்கலாம்.


மகன் செய்த கஜமுகசூரன்

 இன்று குமாரவயலூர் முருகபெருமான் கஜமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்  என்று காலண்டரில் போட்டு இருந்தார்கள். அதனால் இந்த பகிர்வு.


கோவிலுக்கு சூரனை கொண்டு போய்  கொடுத்த போது எடுத்த படங்கள்



ஒரு நிமிடம் தான் காணொளி பாருங்கள்

                                                     சிங்கமுகன்



சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்  மூவரும் நம் மனங்களில் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.  முருகனை வணங்கி நம் மனங்களில் உள்ள  மும்மலங்கள்  நீங்க பிரார்த்திப்போம்.



சீர்காழி  கோவிந்தராஜன் அவர்கள் குரலில் குமாரஸ்த்தவம் பாடல் நன்றாக இருக்கும் கேட்டு பாருங்கள். சகலதோஷங்களையும்  நீக்கி மகிழ்ச்சியை தரும் பாடல் என்பார்கள்.



பழமுதிர் சோலை திருப்புகழ்  திரு சம்பந்தம் குருக்கள் பாடியது

சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம் சிவ சிவ சிவ சிவ சுப்பிரமணியம்


முருகன் அருளால் முருகனை சிந்திப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. மகனின் கைத்திறன் வியக்க வைக்கிறது.  அருமை.  தலைப்பில் சொல்லியுள்ள பாடல் சமீபத்தில் பாம்பே சாரதா பாடி வெள்ளி வீடியோவில் பகிர்ந்திருந்தேன்.  முருகன் நம்மை காக்கட்டும்.+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மகனின் கைத்திறன் வியக்க வைக்கிறது. அருமை. //

      நன்றி ஸ்ரீராம்.

      //பாடல் சமீபத்தில் பாம்பே சாரதா பாடி வெள்ளி வீடியோவில் பகிர்ந்திருந்தேன். முருகன் நம்மை காக்கட்டும்.+//

      ஆமாம், நினைவு இருக்கிறது. பழமுதிர்சோலை முருகன் பெயர் சுப்பிரமணிய சுவாமி, அதனால் இந்த தலைப்பு கொடுத்தேன்.

      பழமுதிர்சோலை திருப்புகழ் பகிர்வு அதனாலும் இந்த தலைப்பு.

      //முருகன் நம்மை காக்கட்டும்.//

      எல்லோரையும் காக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. கோமதிக்கா, மகனின் திறன் அருமையோ அருமை. மிக அழகாகச் செய்திருக்கிறார். பாராட்டுகள் வாழ்த்துகள்!

    நம் மனதில் உள்ள எதிர்மறை உணர்வுகளைக் களைந்திடுவோம்..

    திருப்புக்ழ் கேட்டேன் கோமதிக்கா...குருக்கள் சம்பந்தம் பாடியது. கேட்க ரொம்ப நன்றாக இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு கேட்டேன். அற்புதமாக இருந்தது. மனதை எங்கோ கொண்டு சென்றது.

    அருமையான படங்கள், திருப்புகழ் எல்லாமே சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, மகனின் திறன் அருமையோ அருமை. மிக அழகாகச் செய்திருக்கிறார். பாராட்டுகள் வாழ்த்துகள்!//

      உங்கள் பாராட்டுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி கீதா.

      //நம் மனதில் உள்ள எதிர்மறை உணர்வுகளைக் களைந்திடுவோம்//

      ஆமாம், களைந்திடுவோம்.

      //திருப்புக்ழ் கேட்டேன் கோமதிக்கா...குருக்கள் சம்பந்தம் பாடியது. கேட்க ரொம்ப நன்றாக இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு கேட்டேன். அற்புதமாக இருந்தது. மனதை எங்கோ கொண்டு சென்றது.//

      திருப்புகழை கேட்டது அறிந்து மகிழ்ச்சி.

      //அருமையான படங்கள், திருப்புகழ் எல்லாமே சிறப்பு//
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.


      .




      நீக்கு
  3. நம்மிடமுள்ள  மும்மலங்களும்  நீங்குவதற்கு முருகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜு, வாழ்க வளமுடன்

      //நம்மிடமுள்ள மும்மலங்களும் நீங்குவதற்கு முருகப் பெருமானைப் பிரார்த்திப்போம்//

      ஆமாம், பிராத்திப்போம்.

      நீக்கு
  4. குருக்கள் சம்பந்தம் ஐயா அவர்கள் பாடிய அகரமுமாகி - திருப்புகழ் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குருக்கள் சம்பந்தம் ஐயா அவர்கள் பாடிய அகரமுமாகி - திருப்புகழ் அருமை.//

      போன பதிவிலும் அவர் பாடல் பகிர்ந்தேன். ஆறுமுகம் ஆறுமுகம் என்ற திருப்புகழ் பாடல். நீங்கள் நேரம் இருந்தால் கேட்டு பாருங்கள்.

      நீக்கு
  5. பாடல்கள் அருமை அம்மா...

    பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாடல்கள் அருமை அம்மா...

      பேரனுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்..//

      வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      மகன் தான் செய்தான் தன்பாலன், உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி..

      நீக்கு
  6. தங்கள் மகனின் கை வண்ணம் அருமை. அழகாகச் செய்திருக்கிறார்..
    இதெல்லாம் இறைவனின் அருளே.

    நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்கள் மகனின் கை வண்ணம் அருமை. அழகாகச் செய்திருக்கிறார்..
      இதெல்லாம் இறைவனின் அருளே.

      நல்வாழ்த்துகள்!..//

      இறைவனின் அருள்தான்.
      உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. உங்கள் மகன் மிக அருமையாகச் செய்திருக்கிறார். காணொளியும் கண்டேன். பாராட்டுகள்.

    எந்த ஒரு விழாவும் ஊர் கூடித் தேர் இழுப்பது. மகன் அதனை நன்றாகவே செய்கிறார்.

    இதனால் வரும் பெரும் பயன், உங்கள் பேரனும் அதனைக் கவனித்து அதே இறை சிந்தனையைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் மிக அருமையாகச் செய்திருக்கிறார். காணொளியும் கண்டேன். பாராட்டுகள்.//

      உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

      //எந்த ஒரு விழாவும் ஊர் கூடித் தேர் இழுப்பது. மகன் அதனை நன்றாகவே செய்கிறார்.//

      அவனுக்கு கிடைத்த நண்பர்கள் அப்படி கோவிலுக்கு விருப்பமாக செய்பவர்கள்.

      //இதனால் வரும் பெரும் பயன், உங்கள் பேரனும் அதனைக் கவனித்து அதே இறை சிந்தனையைத் தொடர்ந்து மேற்கொள்ளுவார். வாழ்த்துகள்.//
      நீங்கள் சொன்னது போல பேரனும் இறை சிந்தனையுடன் இறைபணியை தொடரட்டும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      போன பதிவு படிக்கவில்லையா நீங்கள்?

      நீக்கு
  8. மகன் செய்த கஜமுக சூரன் அழகு அவருக்கு வாழ்த்தை கூறிவிடுங்கள். சிங்கமுகமும் நன்றாக இருக்கிறது.

    நல்ல கோவில்பணிகள் செய்கிறார்கள் முருகன் அருள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மகன் செய்த கஜமுக சூரன் அழகு அவருக்கு வாழ்த்தை கூறிவிடுங்கள். சிங்கமுகமும் நன்றாக இருக்கிறது.//

      மூன்று முகமும் அவன் செய்தது தான். கோவில் குருக்கள் நகைகளை அணிவித்து மேலும் அலங்காரம் செய்து இருக்கிறார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி. உங்கள் வாழ்த்தை மகனிடம் சொல்லி விடுகிறேன். என் பதிவை அவனும் படிப்பான்.

      நீக்கு
  9. உங்கள் மகன் செய்த சிங்கமுகன் கலைநுணுக்கத்தோடு அழகாக இருக்கிறது.

    சீர்காழியார் பாடல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் செய்த சிங்கமுகன் கலைநுணுக்கத்தோடு அழகாக இருக்கிறது./

      நன்றி.


      //சீர்காழியார் பாடல் சிறப்பு.//

      ஆமாம் , அவர் பாடிய எல்லா முருகன் பாடல்களுமே சிறப்புதான் இல்லையா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. முதல் படம் அழகு.

    தங்கள் மகனது கைத்திறனைக் குறிப்பிட்டு காணொளியில் ‘மகாசூரன்’ எனப் பாராட்டியிருப்பது மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      முதல் படம் அழகு.//
      பழமுதிர்ச்சோலையில் முருகன் திருமண விழாவில் ஆறுபடை வீடுகள் காட்சி அமைத்து இருந்த போது எடுத்த படம். முன்பு பதிவு போட்டு இருந்தேன்.

      //தங்கள் மகனது கைத்திறனைக் குறிப்பிட்டு காணொளியில் ‘மகாசூரன்’ எனப் பாராட்டியிருப்பது மிகப் பொருத்தம்.//

      காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு