புதிர் தோட்டத்தில்
லூரே கேவர்னஸ் பகுதி - 2 முன்பு போட்ட பதிவுகள்.
புதிரை போடுவதும் அதற்கு விடை சொல்வதும் மகிழ்ச்சியான பொழுது போக்கு . நாளிதழில் வரும் புதிர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை நிறைய பேர் விரும்புவார்கள்.
என் கணவர் ஆங்கில நாளிதழில் செய்திகளை படித்தவுடன் கடைசி பக்கத்தில் வரும் சுடோகு விளையாடுவார்கள். சுடோகு எண் புதிர் விடுவிக்கும் விளையாட்டு விளையாடுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.
இந்த புதிர் தோட்டத்தில் சரியான பாதையை தேர்ந்து எடுத்து வெளி வர வேண்டும்.
இந்த புதிர் பாதை நம்மை குழப்பும்
சரியான வழியை கண்டுப்பிடித்து போவதே வெற்றிக்கு வழி
எந்த வழியில் போக போகிறாய்?
சரியான பாதையை தேர்ந்து எடுத்து அழைத்து போனாள் மருமகள், அவளை தொடர்ந்து நாங்கள் போனோம்.
பின்னால் எங்களை படம் எடுத்துக் கொண்டு வந்தார்கள் என் கணவர்
இரண்டையும் கடந்தோம்
மருமகள் எடுத்த படம்
நான்காவது பாதை குகை போல
வெற்றி ! வெற்றி !
மகிழ்ச்சியாக சிறிது நேரம் ஓய்வு.
அங்கிருந்து என்னை படம் எடுத்த மகனை என் கணவர் படம் எடுத்தார்கள்.
மருமகளின் வழி காட்டுதல் படி நாலுநிலைகளை கடந்து வெற்றிகரமாக வெளியே வந்தோம்.
இந்த படங்கள் எல்லாம் என் கணவர் எடுத்தார்கள்.
நாலு சீட்டையும் அங்குள்ள கடையில் கொடுத்தால் அங்கு விற்பனை செய்யப்படும் பொருளுக்கு ஒரு டாலர் குறைத்து கொள்வார்களாம்.
எப்படி போய் எப்படி வெளியே வருவது இந்த காணொளியில் பார்க்கலாம்.
இந்த இடத்திற்கு ஒரே குடும்பமாக போகும் போதும், நண்பர்களுடன் போகும் போதும், பள்ளிச்சுற்றுலா குழந்தைகள் போகும் போதும் இந்த விளையாட்டு மேலும் மகிழ்ச்சியை தரும். காணொளியில் இந்த மகிழ்ச்சியை பார்க்கலாம்.
நினைவுகள் தொடரும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குநானும் சிறு வயதிலிருந்தே தினமலர் வாரமலர் நாளிதழ்களில் குறுக்கெழுத்து போட்டி நிரப்பிக்கொண்டு இருப்பேன்.
முன்பு இலங்கை வானொலியில் நடத்துவார்கள் அதிலும் பங்கு பெற்று போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புவேன்.
காணொளி கண்டேன்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//நானும் சிறு வயதிலிருந்தே தினமலர் வாரமலர் நாளிதழ்களில் குறுக்கெழுத்து போட்டி நிரப்பிக்கொண்டு இருப்பேன்.
முன்பு இலங்கை வானொலியில் நடத்துவார்கள் அதிலும் பங்கு பெற்று போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புவேன்.//
ஓ அப்படியா மகிழ்ச்சி. அது மனதுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
நம்மை புத்துண்ர்ச்சியோடு வைத்து இருக்க உதவும்.
நினைவாற்றலை மேம்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.
நாங்களும் அனுப்பி இருக்கிறோம் வாரமலரில் வரும் குறுக்கெழுத்து போட்டிக்கு ஆனால் பரிசு கிடைத்தது இல்லை. குலுக்கல் முறையில் பரிசு என்பதால் நமக்கு கிடைக்காது.
காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
புதிர் வழி... சுவாரஸ்யமான சவால். படங்களும் விளக்கங்களும் இரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை விவரங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
ஆகா...! இந்தப் புதிர் சிறப்பு... அருமை அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
என் கணவர் ஆங்கில நாளிதழில் செய்திகளை படித்தவுடன் கடைசி பக்கத்தில் வரும் சுடோகு விளையாடுவார்கள். சுடோகு எண் புதிர் விடுவிக்கும் விளையாட்டு விளையாடுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.//
பதிலளிநீக்குஆமாம் நானும் விளையாடுவதுண்டு. எங்கெல்லாம் நாளிதழ் பார்க்கிறேனோ அப்போது புதிர் இருக்கிறதா என்று பார்த்துப் போடுவது வழக்கம். மாமனார் மாமியார் வீட்டில் வாங்குவதுண்டு அங்குதான் இதெல்லாம் செய்வேன். அது போல தினமணிக் கதிரிலும் வருமே
கீதா
//ஆமாம் நானும் விளையாடுவதுண்டு.//
நீக்குமகிழ்ச்சி.
//எங்கெல்லாம் நாளிதழ் பார்க்கிறேனோ அப்போது புதிர் இருக்கிறதா என்று பார்த்துப் போடுவது வழக்கம். மாமனார் மாமியார் வீட்டில் வாங்குவதுண்டு அங்குதான் இதெல்லாம் செய்வேன். அது போல தினமணிக் கதிரிலும் வருமே//
அதில் ஆர்வம் இருந்தால் பார்த்தவுடன் கட்டங்களை நிரப்ப துவங்குவோம் இல்லையா கீதா.
படங்கள் அருமை என்றால் இந்தப் புதிர் செம. ஹையோ நல்ல மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கவின் இப்போது இந்த இடத்திற்கு வந்தால் ரொம்ப எஞ்சாய் பண்ணுவார்னு நினைக்கிறேன், கோமதிக்கா.
பதிலளிநீக்குமருமகள் வெற்றிகரமாக அழைத்துச் சென்றுவிட்டாரே! சூப்பர்.
மாமா எடுத்த படங்கள் அருமை
கீதா
//படங்கள் அருமை என்றால் இந்தப் புதிர் செம.//
நீக்குநன்றி.
//ஹையோ நல்ல மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.//
மகிழ்ச்சியாக இருந்தது.
//கவின் இப்போது இந்த இடத்திற்கு வந்தால் ரொம்ப எஞ்சாய் பண்ணுவார்னு நினைக்கிறேன், கோமதிக்கா.//
இப்போது போனால் அவந்தான் முதலில் போய் நமக்கு வழி காட்டுவான் உற்சாகமாக.
ஆமாம், மருமகள் வெற்றிகரமாக அழைத்து சென்று விட்டாள்.
//மாமா எடுத்த படங்கள் அருமை//
நன்றி.
இடையில் ஏதோ கட்டிடம் போலும் இருக்கிறதே குகை போன்று...கவின் குழந்தைகள் ப்ராமில் வைத்து மகன் தள்ளிக் கொண்டு வருகிறாரே அந்தப் படம். அதுவும் அந்தப் புதிர்ப்பாதையில் ஒன்றோ?
பதிலளிநீக்குபுதிரை ரசித்தேன் கோமதிக்கா
கீதா
இடையில் இல்லை அதுதான் கடைசி நாம் வெளிவரும் வாசல்.
நீக்குபுதிர் பாதையின் நிறைவு பகுதி.
புதிரை ரசித்து கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி கீதா.
படங்கள் அனைத்தும் அருமை. அங்கு இப்படிப் புதிர் பூங்கா எல்லாம் இருப்பது நல்ல விஷயம். மக்களுக்கு நல்ல பொழுது போக்காக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு சில தீம் பார்க்குகளில் ஒரு அறையில் கண்ணாஅடிகள் பதிக்கப்பட்டு இப்படி உள்ளே சென்று வெளியே வருவதுஇருக்கும். ஆனால் தனியாகச் சென்றால் கஷ்டம்தான் என்று தோன்றும்.
பதிலளிநீக்குநீங்கள் எல்லோரும் நாலு நிலைகளையும் கடந்து வந்து வெற்றி பெற்றதற்கு உங்களை அழைத்துச் சென்ற மருமகளுக்கு வாழ்த்துகள்.
பதிவு அருமை.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அருமை.//
நன்றி.
//அங்கு இப்படிப் புதிர் பூங்கா எல்லாம் இருப்பது நல்ல விஷயம். மக்களுக்கு நல்ல பொழுது போக்காக இருக்கும் என்று நினைக்கிறேன்//
ஆமாம், மக்களுக்கு மாறுதலான பொழுது போக்கு நம்மை புத்துணர்ச்சியோடு வைக்கும்.
//இங்கு சில தீம் பார்க்குகளில் ஒரு அறையில் கண்ணாஅடிகள் பதிக்கப்பட்டு இப்படி உள்ளே சென்று வெளியே வருவதுஇருக்கும். ஆனால் தனியாகச் சென்றால் கஷ்டம்தான் என்று தோன்றும்.//
ஒ! அப்படியா? தனியாக போவதை விட நிறைய பேர் சேர்ந்து போனால் நன்றாக இருக்கும்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
என் மாமாக்களும் சுடோகுவில் முன்பு ஆர்வம் காட்டி வந்தார்கள். இப்போதெல்லாம் யார் விளையாடுகிறார்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை.. எனக்கு முன்பெல்லாம் சுருக்கெழுத்துப் புதிரில் ஆர்வம் இருந்ததுண்டு! 1
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் மாமாக்கள் விளையாடுவார்களா நல்லது.
சார் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் சுடோகுவில்.
நீங்கள் குறுக்கெழுத்து புதிர் தான் தான் சுருக்கு எழுத்தா புதிரா?
குருக்கெழுத்து புதிர் நானும் எழுதி இருக்கிறேன்.
புதிரை பேப்பரில் விளையாடுவதைவிட இந்த மாதிரி நேரடியாய் ஈடுபடுவது தனி உற்சாகம்தான்.வழி தவறாய் கண்டுபிடித்தால் என்ன ஆகும்? நின்று சரியான வழியில் திரும்ப வேண்டுமா? மைனஸ் மார்க்ஸ் உண்டா? 2
பதிலளிநீக்குஆமாம், நேரடியாக ஈடுபடுவது தனி உற்சாகம் தான்.
நீக்குவழி தவறாக கண்டு பிடித்தால் மறுபடி வந்த வழி போய் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
சரியான பாதையில் பயணம் செய்தால் தான் அனுமதி சீட்டில் முத்திரை பதிக்க முடியும்.
மருமகள் மகனுக்கேற்ற ஜோடி போல. சரியாய் வழி கண்டுபிடித்து விட்டார். மகனும் மருமகளும், ஏன், நீங்களும் ஒரே மாதிரி நிறத்தில் உடை அணிந்திருக்கிறீர்கள்!கடைசியில் சரியான விடை கண்டு பிடித்ததற்கு ஒரு டாலர்தான் தள்ளுபடியா?!! ஏதோ உற்சாகப்படுத்துகிறார்கள்!
பதிலளிநீக்குமருமகள் மகனுக்கேற்ற ஜோடிதான். சரியாக வழி கண்டு பிடித்து விட்டார். நாங்கள் மூவரும் ஒரேகலர் உடையை கண்டு பிடித்து விட்டீர்களா!
நீக்குசரியாக கண்டு பிடித்தற்கு அல்ல குகை பார்க்க வாங்கிய போதே இதற்கும் டிக்கட் கொடுத்து விடுகிறார்கள். டிக்கட் வாங்கியதற்கு
பொருட்கள் வாங்கினால் ஒரு டாலர் தள்ளுபடி அவ்வளவுதான்.
காணொளியில் விடை சொல்லி இருக்கிறார்களா? அதைப் பார்க்காமல்தான் விளையாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!!!!! 4
பதிலளிநீக்குகாணொளி விடை சொல்லவில்லை. எப்படி போகிறார்கள் மகிழ்ச்சியாக என்று மட்டும் தான் இருக்கும்.
நீக்குஅந்த இடத்தை முழுமையாக பார்க்க முடியும்.
நாலு வழிக்கு நாலு கருத்து எண்கள் கொடுத்து விட்டீர்களா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
புதிர் பாதை பார்க்கும் போதே மகிழ்ச்சி தருகிறது.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.