வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.
ஆடித்திருநாள் நாளை ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா? ( என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கவலைப்பட்டது போலவே மயிலாடுதுறைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆடி மாதத்தில் காவேரி அன்னையை வணங்க முடியவில்லையே! என்று வருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கு. காவேரி முழுக்குத் துறையில் செயற்கைக் குட்டை செய்து அதில் மக்கள் விழா கொண்டாடினார்கள் என்று செய்தியில் சொன்னார்கள்.
நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.
கல்கி அவர்களின் அழகான கற்பனை:-
ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.
ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில் உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம்
.
வந்தியதேவன் குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-
// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின் ஓரமாக எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.
”வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//
//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில் பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.//
இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.
காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள் பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.
நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.
எங்கள் ஊர் காவேரி,- தண்ணீர் இல்லை- தண்ணீர் வரவை எதிர்பார்த்து நிற்கிறது இரு கரையும்.
மாரியம்மன் கோவில் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து அங்குள்ள அடிகுழாயில் தீர்த்தம் எடுக்க வந்திருக்கிறார்கள். காவேரியில் நீர் இருந்தால் அதில் எடுத்துச்சென்றிருப்பார்கள்..
திரு இந்தளூர் பெருமாள் வந்து திருமஞ்சனம் ஆடும் மண்டபம்.
ஆடிப்பெருக்கிற்கு ஆற்றிற்கு செல்ல சிறு தேர் செய்யும் சிறுவர்கள்.
கொள்ளிடத்தில் நீர் வரப்போவதால் அதைத் தூர்வாருகிறார்கள்.
அணக்கரை செல்லும் வழியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது
அணைக்கரை (கீழ்அணைக்கட்டு)
கொஞ்சமாகப் போகும் தண்ணீரில் மக்கள் பூஜை செய்கிறார்கள்
வழியெல்லாம் ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்தார்கள், மக்கள் வாங்கிப் போய்க் கொண்டு இருந்தார்கள். இங்கு ஒரு ஆடு மக்களுடன் நோன்பு கும்பிடுகிறது. அது அடுத்த நோன்புக்கு இருக்குமோ என்னவோ!
அணைக்கரைப் பாலத்தின் அருகில் வாகனங்கள் நிறைய நிற்கிறது. விழாக் கடைகள் போட்டு இருக்கிறார்கள்
வீராணம் மதகடியில் ஆடிப்பெருக்குக்குப் படைக்க வந்த பெண்கள் கூட்டம். ”அதோ பாருடி நம்மைப் படம் எடுக்கிறார்கள் , எங்கள் படம் நாளை பேப்பரில் வருமா ?” என்று கேட்டார்கள், என்னிடம் மலர்ந்த முகத்துடன் இந்தப் பெண்கள்.என் சிறிய காமிராவைப் பார்த்தே இப்படிக் கேட்கிறார்களே, வெள்ளை உள்ளம் கொண்ட இந்தப் பெண்கள்!
கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அணைக்கட்டுக்குச் செல்லும் வழி இன்று திறந்து இருக்கும். தண்ணீர் திறந்துவிடும்போது பூட்டி விடுவார்கள் என்றார்கள்.
என் கணவர்
அணைக்கட்டிலிருந்து எடுத்த ஏரியின் காட்சி
பூஜையை முடித்து விட்டு அணைக்கட்டைப் பார்க்க வரும் மக்கள்.
கல்யாணமாலையை ஏரியில் விடும் பெண்ணும் மாப்பிள்ளையும்
கல்யாணமாலை
இந்த அம்மாதான் காப்பரிசி, வெல்லம் கலந்த அவல்பொரி கொடுத்தார்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார்கள் நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என்றவுடன் ஏரி பார்க்க வாந்தீர்களா? நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது ஏரியின் உச்சி வரை தண்ணீர் இருக்கும் நாங்கள் மேலே நின்றே படைத்து விட்டுப் போவோம் என்றார்கள்.
அவர்கள் கொடுத்த காவேரி அன்னைக்குப் படைத்த பிரசாதம்
வீரநாராயண ஏரியில் படகு விடும் காட்சியைப் பார்த்தால் கோடிக்கரை பூங்குழலி நினைவுக்கு வருதா?
அலைகடல் போல் விரிந்து பரந்த வீரநாராயண ஏரியக் காணொளி எடுத்தேன் ஆனால் அது இங்கு ஏறமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. இன்னொரு நாள் அதற்கு மனசு வரும் போது இங்கு உங்கள் பார்வைக்கு வரும்.
கீழே உள்ள வேதா அவர்களின் ஓவியத்தில் உள்ளதுபோல் பறவைகள் கறுப்பாய்ப் பறக்கிறதா? (ஏரிக்கரையில் பறவைகளின் குதுகலம் அடுத்த பதிவில் வரும்.)
வெள்ளை நுரையுடன் அலை அடிக்கிறது
ஆசையே அலை போல ! நாம் எல்லாம் அதன்மேலே - ஓடம் போல
வீராண குழாய்கள்- ஆனால் இது புதுக் குழாயாக இருக்கிறது. பழையது மிக பெரிதாக இருக்கும். அதன் உள்ளே வீடு இல்லாதவர்கள் குடித்தனம் நடத்தினர் என்று வரும்.
கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் காவேரி ஆற்றையும் அதன் கரைகளின் அழகையும், நாட்டின் செழிப்பையும் சொல்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள், மறுபடி படிக்க வசதியாக பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கியில் வருகிறது. ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை ப்பொழுதில் தொடங்குகிறது கதை அதற்கு பொருத்தமாய் 3/8/2014 முதல் வந்துவிட்டது..
கல்கி அவர்களின் அழகான கற்பனை:-
ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.
ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில் உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம்
.
ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள், பறவைகள் பறந்து வரும் அழகு!
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள், பறவைகள் பறந்து வரும் அழகு!
வந்தியதேவன் குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-
// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின் ஓரமாக எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.
”வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//
//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில் பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை அளித்துக் கொண்டிருந்தது.//
இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.
காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள் பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.
போனமாதம் வீரநாராயணபுரம் சென்ற போது எடுத்த படங்கள் பின் வருவன
காலைவேளையில் வயல்வெளி, கதிரவன் வரவுக்கு முன் புல்மேல் பனித்துளி
இரு பக்க மரமும் சேர்ந்து பாதைக்குக் கூடாரம் அமைக்கிறது
வீரநாரயாணப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் மதிலுக்கு அப்பால் குலை குலையாய்க் காய்த்துத் தொங்கும் மாங்கனி
மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது.
வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.
இதற்கு அடுத்த பதிவுகள் வீர நாராயண ஏரியும் பறவைகளும் அடுத்து 'கொள்ளிடக்கரையில் ஆடிப்பெருக்கு விழா" இந்த இரண்டு பதிவுகளையிம் நேரம் இருந்தால் படித்து பாருங்கள் ஒரே நாளில் போனவை. மறக்க முடியாத ஆடிபெருக்கு விழா நினைவுகள்.
ஆடிபெருக்கு விழா வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு எல்லோரும் மகிழ்வாக ஆறு, குளங்கள், கோயில்கள் சென்று கொண்டாட இறைவன் அருள் புரிய வேண்டும்.
//ஏரி ,குளம், கிண்று, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ்க//
- வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------
பதினெட்டாம் பெருக்குக்கான சிறப்பான நினைவலைகள். பழைய நினைவுகள் என்றுமே சுகம். அப்போது ஸாரும் உடனிருந்தார். இப்போதும் உங்களுடன் அவர் இருக்கிறார்தான்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஆடிப்பெருக்கு என்றால் மாயவரம் என்று நினைவை விட்டு அகலாது.
எங்கள் வீடுகளில் வடை, பாயாசம், சித்திரான்னங்கள் செய்து கும்பிடுவது மட்டும் தான். ஆற்றுக்கு போவது எல்லாம் மாயவரம் நட்புகளுடன் போனது.
//இப்போதும் உங்களுடன் அவர் இருக்கிறார்தான்.//
ஆமாம் இருப்பார்கள் தான்.ஆடிபெருக்கு சமயம் காவிரி அம்மனுக்கு வைத்து கும்பிட்ட மஞ்சள் சரடை சார் கையால்தான் கட்டிக் கொள்வேன்.
வெளியிடப்பட்டுள்ள படங்களை முன்னர் பார்த்த நினைவு இருக்கிறது. வீரநாராயணபுர ஏரி என்றாலே கல்கிதானே நினைவுக்கு வருவார்?
பதிலளிநீக்கு//வெளியிடப்பட்டுள்ள படங்களை முன்னர் பார்த்த நினைவு இருக்கிறது. வீரநாராயணபுர ஏரி என்றாலே கல்கிதானே நினைவுக்கு வருவார்?//
பதிலளிநீக்குஆமாம். வந்திய தேவன் படத்தை கேட்டு வாங்கி உங்கள் தளத்தில் பகிர்ந்தீர்கள்.
//கல்கி நான் ரெகுலராக வாங்குகிறேன். இந்த இதழ் முதல் நான் படித்ததும் என் மாமாவுக்குக் கொடுத்து விடுவதாய் ஏற்பாடு பொன்னியின் செல்வன் படிக்க வேண்டியே இந்த ஏற்பாடு! "நீதான் ஏற்கெனவே வச்சிருக்கியே... இதை எனக்குக் கொடுத்துடு" என்றார்!//
மாமாவுக்கு கொடுக்க போவதாய் சொன்னீர்கள். ஒப்பந்தபடி மாமாவுக்கு கொடுத்தீர்களா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இந்த முறை மாயவரம் துலாகட்டத்தில் நிறைய தண்ணீர் இருக்காம்.
ஆம். வாங்கிய வரை அவருக்குக் கொடுத்தேன். அவரும் மறைந்து விட்டார்.
நீக்குஅக்கா கணவர் தான் அந்த மாமாவா?
நீக்குஆமாம். அக்கா கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பவர். முன்நாட்களில் மளிகை கட்டி வரும் பேப்பர்களைக் கூட படிப்பார்!!!
நீக்குநானும் அப்படித்தான். ஒரு காலத்தில் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் படிப்பேன்.
நீக்குபடிப்பதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
சிறப்பான நினைவுகள். இந்தப் பதிவையும் தொடர்ந்த பதிவுகளையும் படித்த நினைவும் இருக்கிறது. எனக்கும் ஒவ்வொரு ஆடிப்பெருக்கன்றும் "பொன்னியின் செல்வன்" நாவலும் வந்தியத் தேவனும் நினைவில் வருவார்கள். இன்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவிலும் குறிப்பிட்டதற்கு நன்றி. எல்லாமே அருமையான படங்கள். இன்னமும் இந்த ஏரிக்குப் போனதே இல்லை. இத்தனைக்கும் காட்டுமன்னார்குடி வழியாகவே பல முறை போயிருக்கோம். இனி எப்படியோ? வீரநாராயணர் அழைத்தால் உண்டு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த பதிவையும் தொடர்ந்த பதிவுகளையும் படித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.வீரநாராயணர் விரைவில் அழைப்பார். இயல்பு நிலை வந்து விட்டால் உங்கள் ஆசைகள் நிறைவேறும்.
போன பதிவு வனவிலங்கு பூங்கா பார்த்தீர்களா?
2014ல் இந்த பதிவு போடும் போது 'பொன்னியின் செல்வன்"மீண்டும் கல்கியில் வரும் விளம்பரம் ஆடிபெருக்கின் சிறப்புக்கள் அதில் வந்தது.
வீரநாராயணர் ஏரியை பார்த்த போது பூங்குழலி படகு விடுவது, ஆழ்வார்க்கு அடியான் எல்லோரும் நினைவில் வந்து போனார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான நிகழ்வுகளின் படங்கள்... இனி படங்களில் தான் எனும் ஏக்கமும் வருகிறது... வறட்சியும் தீநுண்மியும்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//இனி படங்களில் தான் எனும் ஏக்கமும் வருகிறது... வறட்சியும் தீநுண்மியும்...//
காலம் இப்படியே இருந்து விடாது மாறும் என்று நம்புவோம்.
மீண்டும் பழைய அந்த நாட்கள் வர பிரார்த்தனை செய்வோம்.நீர் வளம் மிகுந்து நிலவளம் செழித்து மக்கள் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதினெட்டாம் பருக்கு நினைவலைகள் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதண்ணீர் இல்லாத ஆற்றைப் பார்க்க வருத்தம்.
வீரநாராயணன் ஏரி... நிரம்பும்போது கடல்போன்ற தோற்றம் தரும்
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஅந்த த்ண்ணீர் இல்லாத ஆறு படம் பழசு. இப்போது தண்ணீர் இருக்கிறதாம்.
வீரநாராயணர் ஏரி அடுத்த பதிவுகளை பார்த்தால் கடல் போல் இருப்பதும் அலை வந்து கரையை மோதுவதும் இருக்கும்,(காணொளியை பார்க்கலாம்.)
பரந்து விரிந்து செல்லும் ஏரியின் அழகை முடிந்த வரை எடுத்தேன் காணொளி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நினைவலைகள் என்றுமே இனிமையானவை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குநினைவுகள் இனிமைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபடங்கள் வெகு சிறப்பாக வந்து இருக்கிறது.
அலைபேசியில் பார்த்து விட்டேன்.
ஆனால் படிக்க முடியவில்லை. இப்பொழுதுதான் கணினியில் கருத்துரை இட முடிந்தது. வாழ்க நலம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஆடிப்பெருக்கு வாழ்த்துக்களுக்கு நன்றி.
படங்களின் அளைவை சிறிது செய்தேன். அதை பெரிது செய்து பார்க்கலாம்.
அலைபேசியில் சரியாக வரவில்லை பார்த்தேன். உங்களை போல கமலாவும் அலைபெசியில் படிப்பார் அவருக்கும் படிக்க முடியாமல் போகும் போலவே!
கணினியில் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி நன்றி.
வாழ்த்துக்கும் நன்றி.
அருமையான ஆடிப்பெருக்கு நினைவுகள்.
பதிலளிநீக்குகடைசி வரிதான் மிகப் பிடித்தது.
இந்த வருடம் மாயவரத்தில் நீர் வரத்து இருக்கிறது
என்பதே மிக ஆனந்தம்.
ஆடி பதினெட்டு காட்சிகள் அனைத்தும்
மிக இனிமை. சிரித்துப் போஸ் கொடுக்கும்
பெண்கள், கணவன் கண்ணைத் துடைத்துவிடும்
மங்கை, தம்பதிகள் ஆற்றில் விட்ட கல்யாணமாலை
என்று அத்தனை படங்களும் இனிமை.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், இந்த வருடம் தண்ணீர் நிறைய இருக்கிறதாம்.எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்த செய்தி தான் .
படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பொன்னியின் செல்வன் எத்தனை தடவை கல்கியில் வந்திருக்கும் என்று யோசித்துப்
பதிலளிநீக்குபார்க்கிறே மனதை விட்டு நீங்காத
சரித்திரம்.
அந்த சித்திரங்கள். வீராணம் ஏரி. எல்லாம் இனிமை.
நீங்கள் பகிர்ந்திருக்கும் நினைவும், சார் உங்களுக்கு
மஞ்சள் நாண் பூட்டியதும் மிக மகிழ்ச்சி தரும்
எண்ணங்கள்.
பகிர்வுக்கு மிக நன்றி.
நிறைய தடவை வந்து இருக்கும் ஓவியர்கள் மாறி மாறி வரைந்து இருந்தார்கள். மணியன் செல்வன் அவர்கள் வரைந்த ஓவியம் கண்ணையும், கருத்தையும் விட்டு அகலாது.
நீக்கு//நீங்கள் பகிர்ந்திருக்கும் நினைவும், சார் உங்களுக்கு
மஞ்சள் நாண் பூட்டியதும் மிக மகிழ்ச்சி தரும்
எண்ணங்கள்.//
ஆமாம் அக்கா, அவர்கள் முதலில் திரு நாண் பூட்டிய போது எப்படி சீரியஸ்சாக மகத்தௌ வைத்து இருந்தார்களோ அப்படியே இப்போதும் இருப்பார்கள். எனக்கு அப்போது பழையதை சொல்லி அவர்களை கிண்டல் செய்வது பிடித்த விஷயம் .
மனதை விட்டு நீங்காத நினைவுகள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமையான படங்களுடன் படிக்கப் படிக்க,பார்க்க கூடவே வந்தமாதிரி இருக்கிறது. இதெல்லாம். நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
அன்புள்ள கோமதிம்மா, தங்கள் ஆடிப்பெருக்கு பதிவு அருமை! எனக்கும் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன், ஆடிப்பெருக்கன்று தன் பயணத்தை தொடங்கியது நினைவில் வந்தது!
பதிலளிநீக்குவணக்கம் வானம்பாடி, வாழ்க வளமுடன்
நீக்கு//எனக்கும் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன், ஆடிப்பெருக்கன்று தன் பயணத்தை தொடங்கியது நினைவில் வந்தது!//
எத்தனை நெஞ்சங்களில் பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் ஆடிப்பெருக்கன்று தன் பயணத்தை தொடங்கியது நினைவில் வந்து இருக்கும் என்று வியப்பாக இருக்கிறது. கல்கியின் எழுத்து அப்படி கவர்ந்து இருக்கிறது எல்லோரையும்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ஆடி பதினெட்டாம் பெருக்கின் படங்கள் அருமை. காவிரித் தாயின் அழகான படங்கள், இயற்கை எழில் சூழ்ந்த படங்கள், மக்கள் விழாவை உற்சாகமாக கொண்டாடும் படங்கள் என இன்றைய தினத்தை அருமையாக சிறப்பித்து இருக்கிறீர்கள். எல்லா படங்களும் நன்றாக உள்ளது.
பசுமையான வயல் வெளிகள், நீர் நிறைந்தோடும் ஏரி படங்கள், பச்சைபசேல் என இருக்கும் மரங்களின் கூட்டம், அழகான மஞ்சள் நிறப் பூக்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் என அத்தனைப் படங்களையும் ரசித்தேன்.
காவிரி அன்னைக்கு பூஜை முடிந்து கிளம்பும் மக்கள் முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி. அதுவும் அந்தப் பெண்கள் இந்தப்படம் எந்த பத்திரிகையில் வருமென கேட்கும் போது அவர்களுக்கும், படம் எடுத்தபடி விபரமாக பதில் சொல்லியிருக்கும் உங்களுக்கும் நடந்த உற்சாகப் பேச்சுக்களை கற்பனையில் ரசித்தேன்.
பொன்னியின் செல்வன் கதை ஆரம்பம் இந்த பதினெட்டாம் பெருக்கு அன்று அனைவருக்கும் நினைவுக்கு வருவதுதான். அதில்தான் கல்கி அவர்கள் இந்த விழாவை எப்படி சிறப்பித்து சொல்லியிருக்கிறார்.
நான் அம்மா வீட்டில் உள்ளபோது,எங்கள் அம்மா படித்து இந்த கதை கேட்டதுதான். அதன் பின் எத்தனையோ கதைகளை படித்ததில் இந்தக் கதையின் கடைசி பாகங்கள் சற்று மறந்தே விட்டது. இப்போது மீண்டும் பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கி படிக்கிறேன்.நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது.அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக படிக்க முயற்சி செய்கிறேன். நீங்களும் கதைப் பற்றி குறிப்பிட்டு சில பாராக்களையும் பகிர்ந்திருப்பது சிறப்பு.
நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளையும் பிறகு கண்டிப்பாக சென்று பார்க்கிறேன். கருத்துகளையும் படித்து விட்டேன். தாங்கள் சகோ கில்லர்ஜி அவர்களுக்கு கூறியபடி எனக்கும் காலை அவசரத்தில் என் கைப் பேசியில் படிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. பதிவு அகலமாக இருந்ததால், ஓரத்தில் உள்ளதை சில இடங்களில் படிக்க இயலவில்லை. இப்போது நிதானமாக அமர்ந்து இரண்டாவது தடவையாக அனைத்தையும் படித்து விட்டேன்.உடனே கருத்துமிடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபழைய மாடல் அகலமாக இருந்தது அது கைபேசியில் படிப்பது கொஞ்சம் சிரமம்.
நீங்கள் சிரமபட்டது அறிந்தேன், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சிறு வயதில் படிக்கவில்லை நானும் அம்மா சொன்னதுதான். மீண்டும் கல்கியில் வந்த போது சேமித்து வைத்து இருக்கிறேன்.
மெதுவாக நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
ஒவ்வொரு ஆடிப்பெருக்கு அன்றும் வெவ்வேறு கோயில்களுக்கு அழைத்து சென்று இருக்கிறார் என் கணவர். அக்கம் பக்கத்து வீட்டு நட்புகளுடம் அதிகாலை ஆற்றுக்கு போய் காவிரி அனையை கும்பிட்டு வருவேன். முதல் நாளே மருதாணி வைத்து புது புடவை அணிந்து குதுகலமான பண்டிகை. ஆடிப்பண்டிகை.
புதுமண தம்பதிகள் ஆற்றுக்கு வருவது பார்க்க அருமையாக இருக்கும். சிறுவர், சிறுமிகள் விளையாட்டு உறவுகளின் கேலி பேச்சுக்கள் உற்சாக ததும்பும் ஆடிப்பெருக்கு விழா .
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
பொக்கிஷமான பதிவு...
பதிலளிநீக்குஇந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ!..
என்று கவியரசர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோ துரை செலவராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//இந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ!..//
ஆஹா! அருமையான பாடல் . பசுமை நிறைந்த நினைவுகளை மறக்க முடியாத பாடல்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆடிப்பெருக்கு நினைவுகள் நன்று. வீராணம் ஏரி, அணைக்கரை என எல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பசுமையான இடம். படங்கள் நன்று. கிராமியச் சூழலும் ஆடிப்பெருக்கும் காணும் போது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குபழைய பதிவுகளை எல்லாம் வரிசையாக படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
//கிராமியச் சூழலும் ஆடிப்பெருக்கும் காணும் போது மகிழ்ச்சி.//
ஆமாம் மாதேவி, பசுமையான இடம் கிராமியச் சூழல் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.