வியாழன், 19 ஆகஸ்ட், 2021

பாம்பு பிடிக்கும் பெண்



பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பயமில்லாமல் பாம்பு பிடிக்கும் பெண்

புதன் கிழமை காலையில் நல்ல வெயில் 10 மணி இருக்கும் . மகன் தோட்டத்திற்கு போனவன் "அம்மா பாம்பு" என்று சொல்லி வீட்டுக்குள் வந்தான். கண்ணாடி கதவை மூடி விட்டு "அம்மா பார்த்துக் கொள்ளுங்கள், நான் பாம்பு பிடிப்பவர்களுக்கு போன் செய்து விட்டு வருகிறேன். ஆபீஸ் வேலை வேறு இருக்கிறது. அது எந்த பக்கம் போகிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று போனான்."


முன்பு ஒரு முறை தோட்டத்திற்கு வந்த   (எம்பி எம்பி குதித்து பறந்த) பாம்பை இவர்கள் தான் பிடித்தார்களாம்.


நான் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து  கொண்டு பார்த்து கொண்டே இருந்தேன்.  போன் செய்தால் பாம்பு பிடிப்பவர்கள் உடனே கிளம்பி விட்டோம் 25 நிமிடத்தில் வந்து விடுவோம். பார்த்து கொண்டு இருங்கள் , எந்த இடத்தில் இருக்கிறது என்பதை என்று போன் செய்தார்கள்.

சங்கரன் கோயில்  கோமதி அம்மன், மற்றும் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு கண்ணாடி கதவு வழியே  பார்த்து கொண்டு இருந்தேன். நகர ஆரம்பித்து விட்டது , காணொளி எடுத்தேன் வெளியே தானே இருக்கு என்ற தைரியம்.

கதவுக்கு வெளியே போட்டு இருக்கும் மிதியடியும் பாம்பு கலரில்  இருக்கிறது வேறு மாற்ற சொல்லவேண்டும் மகனை என்று நினைத்து கொண்டே பார்த்து கொண்டு இருந்தேன்.

நான் எடுத்த காணொளி சின்னதுதான் பாருங்கள்
மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது, அதற்குள்  பாம்பு பிடிக்கும் பெண் வந்து விட்டார்.  அவர் அலைபேசி அழைப்பும் இருக்கும் காணொளியில்


வந்தவர் முதலில் பாம்பை போட்டோ எடுத்துக் கொண்டார்,

இடுக்கி போன்ற கருவி கொண்டு வந்து இருந்தாலும் இது கடிக்காது என்று சொல்லி  கையால் பிடித்தார் 



 அவர் கொண்டு வந்த  மூடி போட்ட வாளியில் போட்டு திருகி மூடினார்

நான் கண்ணாடி கதவு வழியாக அலைபேசியில் போட்டோ  எடுப்பதைப்பார்த்து வாங்க வெளியே,  கையில் பிடித்து  காட்டுகிறேன், போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்றார்.  மகனிடம் எனக்கு அந்த போட்டோவை அனுப்புங்கள் என்று சொன்னார். உடனே நன்றாக எடுத்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி, நன்றி என்று பதில் அனுப்பி விட்டார்.

பாம்பு பிடித்ததற்கு அவருக்கு பணம் கொடுத்தான் மகன்(போன முறை 120 டாலர், இந்த முறை 150 டாலர் என்று சொல்லி விட்டார் வரும் முன்பே) அதை பெற்றுக் கொண்டு போகும் போது பறவைகளுக்கு உணவு வைக்காதீர்கள். அதை சாப்பிட எலி போன்றவை வரும் அதை சாப்பிட பாம்பு வரும். அதனால்தான் பறவைகளுக்கு உணவு வைக்காதீர்கள் என்று சொல்கிறோம் என்றார்கள். முன்பு வெளியே உணவு கட்டி வைத்து இருந்தவர்களும் இந்த வெயில் காலத்தில் வைக்காமல் இருந்த காரணம் அறிந்து கொண்டேன். (உணவு  கட்டி படம் முன்பு போட்டது நினைவு இருக்கலாம்.)

மகனும், மருமகளும்  உணவு   பகலில்தான்  வைக்கிறோம். வைத்தவுடன் பறவைகள் மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டு விடுகிறது. இரவு தான் வைக்க கூடாது உணவை  , கரப்பான் பூச்சி, எலி எல்லாம் வரும் என்றார்கள்.



நான் எடுத்த படம் தலைப்பகுதி மிகவும் சின்னதாக இருக்கிறது. இந்த பாம்பு  இன்னும் வளருமாம் பெரிதாக  இதுவே ஐந்தடி இருக்கும்.

மகன் எடுத்த படங்கள் கீழே உள்ளவை
அவர் அணிந்து இருக்கும் சட்டையில் இரண்டு மூன்று  பாம்பு படம் இருக்கிறது
இதன் பேர் Sonoran gopher Snake

இந்த வகை பாம்புகள், வனப்பகுதிகள்,  விவசாயப் பகுதிகள் , ,  (பயிரிடப்பட்ட வயல்கள் போன்றவை) புல்வெளிகள், புதர் நிலங்களில்  தான் வாழ விரும்புமாம் . மழை பெய்து  சில இடங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி  இருக்கிறது, தவளையை பிடித்து உண்ண வந்து இருக்கும் என்றார்கள்.

Sonoran பலைவனம் அருகில் இருக்கிறோம் நம் வீட்டுக்கு பாம்பு வரவில்லை என்றால்  எப்படி என்கிறான் மகன் . தினம் நம் குடியிருப்பில் உள்ளவர்கள் எங்கள் வீட்டுக்கு இன்று பாம்பு வந்தது என்று போட்டு இருக்கிறார்கள் என்கிறான் மகன்.


காணொளியும் மகன் எடுத்ததுதான்.

எனக்கு அவர்கள் எடுத்து போனதும் நிம்மதி பெருமூச்சு வந்தது. "இறைவா இப்படி பாம்பும், தேளும் உள்ள இடத்தில் இருக்கிறார்கள்  காத்து அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன் !
-----------------------------------------------------------------------------------------------------
 

38 கருத்துகள்:

  1. தைரியமான பெண். இந்தியாவிலும் இப்படி பாம்பு பிடிக்கும் பெண்கள் இருக்கிறார்கள். சில காணொளிகள் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நானும் பாம்பு பிடிக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்று படித்து இருக்கிறேன்.
      போன முறை ஆண் வந்தாராம், இந்த முறை பெண்.

      நீக்கு
  2. நான் முன்பு இருந்த வீட்டில் நிறைய பாம்புகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, தங்கநிறம், என்று கலர்கலராக பார்த்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக அதனிடம் பயம் போய்விட்டது. ஒருமுறை பாம்பு பிடிக்கும் இளைஞன் ஒருவன் வந்து சென்ற கதையை எங்கள் தளத்திலும் போட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் முன்பு இருந்த வீட்டில் நிறைய பாம்புகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, தங்கநிறம், என்று கலர்கலராக பார்த்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக அதனிடம் பயம் போய்விட்டது.//
      அடிக்கடிப் பார்த்தால் பயம் போய் விடும் தான்.

      //ஒருமுறை பாம்பு பிடிக்கும் இளைஞன் ஒருவன் வந்து சென்ற கதையை எங்கள் தளத்திலும் போட்டிருந்தேன்.//

      படித்து இருக்கிறேன்.




      நீங்கள் பாம்பு படம்

      நீக்கு
  3. கீதா அக்கா சுப்புக்குட்டி என்று ப்ரியமுடன் அழைப்பார். எங்கள் பழைய வீட்டு மோட்டார் ரூமுக்குள் பாம்பு நுழைந்த கதையும், அலுவலகம் விட்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது காலடியில் நாய்க்குட்டி போல சுருண்டு படுத்திருந்த பாம்பு ஒன்றும் பிரசித்தம். கயிறு என்று நினைத்து மெதுவாய் சீண்ட அது நீண்டு ஓடியது நினைவிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதா அக்கா சுப்புக்குட்டி என்று ப்ரியமுடன் அழைப்பார்.//
      அம்பத்தூர் வீடும், சுப்புக்குட்டியும் மறக்குமா?
      மோட்டார் ரூமூக்குள் பாம்பு நுழைந்த கதை நினைவு இருக்கு.

      //அலுவலகம் விட்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது காலடியில் நாய்க்குட்டி போல சுருண்டு படுத்திருந்த பாம்பு ஒன்றும் பிரசித்தம். கயிறு என்று நினைத்து மெதுவாய் சீண்ட அது நீண்டு ஓடியது நினைவிருக்கிறது!//

      நினைவு இருக்கிறது.
      மகன் சொல்வது போல் எல்லா இடங்களிலும் பாம்பு வரும் என்று இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. அப்பாடி கோமதிமா.
    !! மூச்சே நின்று விட்டது. நீங்கள் போட்ட படத்தைப் பார்த்து!!
    நம்மூர் மாதிரி விஷம் என்று நினைத்து விட்டேன். ஏதாக இருந்தால் என்னம்மா. அது அது பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. நீங்கள் தைரியசாலி.

    அருமையாகக் காணொளி எடுத்திருக்கிறீர்கள்.:)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம் , முதலில் பார்த்தவுடன் பயமாக இருந்தது.

      அவர்கள் இது கடிக்காது என்றார்கள், அதற்கு முன் நமக்கு பயம் தான்.
      வீட்டுக்குள் இருந்து எடுத்தேன் தைரியம் அவ்வளவுதான். அப்புறம் எடுத்த படம் அந்த பெண் கையில் இருக்கும் போது.

      மருமகள் அலுவலகத்தில் இருந்தாள், அவளுக்கு காட்ட காணொளி எடுத்தேன்.

      நீக்கு
  5. அந்த ஊர் சூட்டுக்கு என்னவேணும்னாலும் வரும்.
    எப்பொழுதும் கண்ணாடிக் கதவை மூடி வையுங்கள்.
    என்ன கஷ்ட காலம்டா கடவுளே....

    இந்த ஊரில் அது கிடையாது. ஆனாலும்
    பறவைக்கு இரை வைக்க வேண்டாம்
    என்று சொல்லி இருக்கிறார்கள்.

    கோமதி அம்மன் என்றும் காக்கட்டும்.
    எந்தப் பூச்சியும் கண்ணில் பட வேண்டாம். அவர்கள்
    பத்திரமாக இருக்க வேண்டும்.
    சென்ற தடவை இவை எல்லாம் கண்ணில் படவில்லையா அம்மா.??
    கவின் எப்போதும் கவனமாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் கண்ணாடி கதவை மூடிதான் வைத்து இருக்கிறோம்.வலைத்தடுப்பும் இருக்கிறது.

      //இந்த ஊரில் அது கிடையாது. ஆனாலும்
      பறவைக்கு இரை வைக்க வேண்டாம்
      என்று சொல்லி இருக்கிறார்கள்.//

      பறவையின் வாழ்க்கை முறையை மாற்றக்கூடாது என்று சொல்லி இருப்பார்கள்.

      //கோமதி அம்மன் என்றும் காக்கட்டும்.
      எந்தப் பூச்சியும் கண்ணில் பட வேண்டாம். அவர்கள்
      பத்திரமாக இருக்க வேண்டும். //

      ஆமாம் அக்கா.

      போன முறை வெயிலில் இருக்கவில்லை. 88 நாள் தான் இருந்தேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு அக்கா.

      நீக்கு
  6. அன்பின் வணக்கம..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      இறையருள் சூழ்க எங்கெங்கும்..//

      இறையருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  7. வடமாநிலங்களில் சில ஊர்களில் ஊரோடு பாம்பு திருவிழா கொண்டாடுகிறார்கள்.
    எல்லோரும் பாம்பு கொண்டு வருகிறார்கள்.

    அந்தப் பெண்ணின் உடையிலும் பாம்பு படம் ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //வடமாநிலங்களில் சில ஊர்களில் ஊரோடு பாம்பு திருவிழா கொண்டாடுகிறார்கள்.
      எல்லோரும் பாம்பு கொண்டு வருகிறார்கள்.//

      நமக்கு பார்க்க பயம். எல்லோரும் கொண்டு வருகிறார்கள். சிறுவன் தோளில் தொங்க விட்டு கொண்டு வருவதைப்பார்த்தேன் நானும்.

      //அந்தப் பெண்ணின் உடையிலும் பாம்பு படம் ஹா... ஹா... ஹா..//
      ஆமாம் , அவர் சட்டையிலும் பாம்பு . பேரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் போட்டோவை காட்டினேன். முதலில் சட்டையில் இருப்பதை பார்க்காமல் இந்தனை பாம்பா ? என்று திடுக்கிட்டு விட்டான். இல்லை ஒரு பாம்புதான், அந்த பென்ணின் சட்டையில் இரண்டு மூன்று பாம்பு படம் இருக்கிறது என்றேன்.
      அவர்கள் கம்பெனி சீர் உடை போலும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பாம்பு... உடனே அதைப் பிடிக்க ஒரு உதவியாளர், 150 டாலர் சார்ஜ்... சிஸ்டம் நன்றாகத்தான் இருக்கிறது. நம்ம ஊர் என்றால் உடனே அடித்துக் கொன்றுவிடுவார்கள், பிறகு பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவார்கள்.

    விஷம் இல்லாத பாம்பு என்றால் கவலை இல்லை. இருந்தாலும் விஷம் இல்லையா என்பது நமக்கு எப்படித் தெரியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //நம்ம ஊர் என்றால் உடனே அடித்துக் கொன்றுவிடுவார்கள், பிறகு பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவார்கள்.//

      இங்கு பாம்பை அடித்து கொல்லக்கூடாது.
      அரசு வைத்து இருக்கிறது பாம்பு பிடிப்பதற்கு ஆட்கள்.இவர்கள் தனியார் துறை.போன் செய்தால் உடனே வந்து விடுவார்கள்.

      நம் ஊரில் அடித்து கொன்று விடுகிறார்கள் . பாம்புகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். விவசாயத்தை பாழ் படுத்தும் எலியின் கூட்டம் பெருகிவிடும் என்கிறார்கள்.


      //விஷம் இல்லாத பாம்பு என்றால் கவலை இல்லை. இருந்தாலும் விஷம் இல்லையா என்பது நமக்கு எப்படித் தெரியும்?//

      தினம் காலையில் சாமிக்கும், கண்வர் படத்து முன்னும் பூக்கோலம் போடுவேன், அதற்கு பூ பறிப்பேன். காலை 6 மணிக்கு பூ பறித்தேன் என் கண்ணில் படவில்லையே என்றேன் மகனிடம் . மகன் விஷபாம்பு இல்லை பயப்பட வேண்டாம் என்றான். அந்த பெண் வந்து சொன்ன போதுதானே அது கடிக்காது என்று தெரிந்தது என்றேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நாங்களும் திகில் அடைந்தோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை என்கிறார்கள்.
    பயம்தான் மனிதனைக் கொல்கிறது
    படங்களும் பகிர்வும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான். பயம் மனிதனை கொல்வது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பாம்பு பிடிக்கும் பெண் - தகவல்கள் நன்று. இங்கேயும் இப்போது பாம்பு பிடிப்பதற்கென்றே சில இளைஞர்கள் வருகிறார்கள். நிறைய தன்னார்வலர்கள் இப்படியான வேலைகள் செய்கிறார்கள்.

    படங்களும், காணொளியும் கண்டேன். நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //இங்கேயும் இப்போது பாம்பு பிடிப்பதற்கென்றே சில இளைஞர்கள் வருகிறார்கள். நிறைய தன்னார்வலர்கள் இப்படியான வேலைகள் செய்கிறார்கள். //

      டெல்லி, சென்னை, திருச்சி என்று எல்லா பெரிய ஊர்களிலும் பாம்பு பிடிப்பவர்கள் தொலைபேசி எண்கள் கொடுக்கபட்டு இருப்பதை இணையத்தில் பார்த்தேன்.
      தன்னாஎவலர்கள் நாங்கள் வரும் வரை பொறுமையாக இருங்கள் அடித்து கொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொள்வதையும் படித்தேன்.

      படங்களும் காணொளியும் கண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  12. தஞ்சையில் சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி நாகங்களின் நடமாட்ட்ம் .. அடுத்தடுத்து வீடுகள் இருந்தாலும் எல்லாருக்கும் பிரச்னை தான்.. காரணம் அந்த வட்டாரமே ஒரு காலத்தில் முந்திரிக் காடு..

    என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் நள்ளிரவில் உபதேசமாகியது சங்கரன் கோயில் அம்பிகையின் திருப்பெயர்..

    அதுவே வேத வாக்காக அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருப்பேன்... அதற்கப்புறம் பாம்புகளின் வீதியுலா குறைந்து விட்டது..

    அன்றைக்கு சொல்லப்பட்ட திருப்பெயர் - கோமதி சிவசங்கரி!..

    இப்போது வேறு வீட்டுக்கு மாறி விட்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      முந்திரி காடு என்றால் பயமாகத்தான் இருக்கும்.

      //என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் நள்ளிரவில் உபதேசமாகியது சங்கரன் கோயில் அம்பிகையின் திருப்பெயர்..//

      அற்புதம் , அம்மன் அருள்.

      //அதுவே வேத வாக்காக அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருப்பேன்... அதற்கப்புறம் பாம்புகளின் வீதியுலா குறைந்து விட்டது..

      அன்றைக்கு சொல்லப்பட்ட திருப்பெயர் - கோமதி சிவசங்கரி!..//

      எங்கள் பக்கம், எங்கள் அம்மா சொல்லி கொடுத்தது கோமதி சங்கரிதான். எங்கள் ஊர் பக்கம் வீட்டு ஒரு கோமதி சங்கரி என்று பேர் வைத்தவர்கள் இருப்பார்கள்.

      கோமதி சங்கரிதான் துணையாக இருக்க வேண்டும் இங்குள்ளவர்களுக்கு.

      இப்போது வீடு மாறி விட்டது நல்லது.


      நீக்கு
  13. அது நல்ல பாம்போ கெட்ட பாம்போ, கடிக்குமோ கடிக்காதோ, சுப்புக் குட்டியோ அப்புக் குட்டியோ - நமக்கு எப்படித் தெரியும்!...

    அது நம்மைக் கடிக்காது என்று நாம் அறிந்திருந்திருந்தாலும்,

    அது அறிந்திருக்க வேண்டுமே - நாம் அதை அடிக்க மாட்டோம்!.. என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது நல்ல பாம்போ கெட்ட பாம்போ, கடிக்குமோ கடிக்காதோ, சுப்புக் குட்டியோ அப்புக் குட்டியோ - நமக்கு எப்படித் தெரியும்!...//

      ஆமாம், நமக்கு தெரியாதுதான்.

      //அது நம்மைக் கடிக்காது என்று நாம் அறிந்திருந்திருந்தாலும்,

      அது அறிந்திருக்க வேண்டுமே - நாம் அதை அடிக்க மாட்டோம்!.. என்று..//

      ஆமாம்.

      போன முறை விரட்டிப்பார்த்தானாம் அது போகாமல் எம்பி எம்பி குதித்து பயமுறுத்தியதாம் அப்புறம் பாம்பு பிடிப்பவர்களுக்கு போன் செய்து அவர்கள் வந்து பிடித்து போனார்கள் என்றான்.

      நீக்கு
  14. கிராமங்களில் சொல்வார்கள் - பாம்பிற்கு ஒரு நாளைக்கு (விலங்குகள், பறவைகள், தாவரங்கள் - என) 13 கண்டம் .. - என்று..

    வெளிநாட்டுப் பாம்புக்கு எத்தனையோ தெரிய வில்லை..

    நம் ஊர் பாம்பைக் கண்டால் இரக்கம் காட்டுவார் வெகு குறைவு.. கண்ணில் பட்டால் சாத்துப்படி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிராமங்களில் சொல்வார்கள் - பாம்பிற்கு ஒரு நாளைக்கு (விலங்குகள், பறவைகள், தாவரங்கள் - என) 13 கண்டம் .. - என்று..//

      ஓ அப்படியா ! கண்டங்களை தாண்டி அவை உயிர் வாழ வேண்டி இருக்கிறது.


      //நம் ஊர் பாம்பைக் கண்டால் இரக்கம் காட்டுவார் வெகு குறைவு.. கண்ணில் பட்டால் சாத்துப்படி தான்...//

      ஆமாம் உயிர் பயம் அவர்களை அப்படி செய்ய சொல்கிறது போலும்.
      நம் ஊரிலும் பாம்பு பிடிக்கிறவர்களை அழைக்க தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.





      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.இரண்டு நாட்களாக நெட் பிரச்சனை காரணமாக வலைத்தளம் வர இயலவில்லை. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பை தைரியமாக கைகளாலேயே பிடித்துள்ளார் அந்த பெண். நீங்களும் தைரியமாக படங்கள் காணொளி என எடுத்துள்ளீர்கள். விஷமில்லாத பாம்பென்றாலும் ,அது பாம்பு நடமாடும் பகுதி என்பதால், வீட்டுக்கு வெளியில் செல்லும் போது, பகலிலும் சரி, இரவிலும் சரி, கவனமாகவே நடமாடுங்கள். நெட் மறுபடியும் போய் விடுமோ என்ற பயத்தில் டைப்பிங் செய்கிறேன்.காணொளி எனக்கு இந்த நெட் பிரச்சனையில் வரவில்லை. கவனமாக இருங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இரண்டு நாட்களாக நெட் பிரச்சனையா? அதுதான் உங்களை பார்க்கவில்லை.

      அவர் பிடித்தபின் நானும் மகனும் தைரியமாக படம் எடுத்தோம். காணொளி கண்ணாடி கதவு வழியாக எடுத்த படம். பிள்ளைகள் இருக்கும் இடம் என்றால் அம்மாவுக்கு தன்னால் தைரியம் வந்து விடுகிறது, தனியாக இருந்தால் பயம்.

      //வீட்டுக்கு வெளியில் செல்லும் போது, பகலிலும் சரி, இரவிலும் சரி, கவனமாகவே நடமாடுங்கள்//

      கண்டிப்பாய் கவனமாக இருக்கிறேன், உங்கள் அன்பான வார்த்தைக்கு நன்றி.

      //நெட் மறுபடியும் போய் விடுமோ என்ற பயத்தில் டைப்பிங் செய்கிறேன்.காணொளி எனக்கு இந்த நெட் பிரச்சனையில் வரவில்லை. கவனமாக இருங்கள். நன்றி.//
      நெட் பிரச்சனை சரியான உடன் பாருங்கள். கவனமாக இருக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  16. கடிக்காது என்பதில் நிம்மதி. கவனமாக இருங்கள்.
    பல வருடங்கள் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் அவையும் கடிக்காத இனம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //கடிக்காது என்பதில் நிம்மதி. கவனமாக இருங்கள்.//
      ஆமாம் , கவனமாக இருக்கிறோம்.

      உங்கள் வீடுகளில் தோட்டம் மிக அருமையாக இருக்குமே!
      அதனால் வரும் இல்லையா?
      இப்போது வரவில்லை அல்லவா? நிம்மதி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம்,வாழ்க வளமுடன்
      திக் திக் என்று இருந்ததுதான் பாம்பு பிடிக்க வருபவர் வரும் வரை.அப்புறம்தான் நிம்மதி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. தோட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஐந்து வருடங்களில் பல முறை பல விதப் பாம்புகளைத் தோட்டத்தில் பார்த்து விட்டேன். நல்ல பாம்பு, கட்டு விரியன் உட்பட சாரைப்பாம்பு, பச்சைப் பாம்பு போன்றனவும். ஆரம்பத்தில் பதறி மற்றவர்களை அழைத்ததுண்டு. பலமுறை மொபைலில் படம் எடுத்ததும் உண்டு. விஷம் அதிகமுள்ளது என்பதால் கட்டு விரியனை இதே போல தகவல் தந்ததன் பேரில் ஒருவர் வந்து பிடித்துச் சென்றார். துணியால் உறையிடப்பட்ட நீண்ட குழலுக்குள் கம்பியால் அதை உள்ளே போகச் செய்து குழலை உருகி துணியை மேலே கட்டி எடுத்துச் சென்று விட்டார். ஒரு பாம்பைப் பிடிக்க ஆயிரம் ரூபாய் 4 வருடங்கள் முன்னர். இப்போதெல்லாம் அவற்றைக் கண்டால் பயப்படுவதில்லை. வந்த வழியே தானே போய் விடுமென இருந்து விடுகிறோம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தோட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.//

      ஆமாம் , கவனமாக இருக்கிறோம்.

      //இந்த ஐந்து வருடங்களில் பல முறை பல விதப் பாம்புகளைத் தோட்டத்தில் பார்த்து விட்டேன். நல்ல பாம்பு, கட்டு விரியன் உட்பட சாரைப்பாம்பு, பச்சைப் பாம்பு போன்றனவும்.//

      கேட்கவே பயமாக இருக்கிறது.
      கவனமாக இருங்கள்.

      //ஒரு பாம்பைப் பிடிக்க ஆயிரம் ரூபாய் 4 வருடங்கள் முன்னர். இப்போதெல்லாம் அவற்றைக் கண்டால் பயப்படுவதில்லை. வந்த வழியே தானே போய் விடுமென இருந்து விடுகிறோம்:).//

      1000 ரூபாய் இப்போ என்றால் இன்னும் அதிகம் கேட்பார்கள் தான்.
      மகன் நேற்று முன் பக்கம் பார்த்தேன் என்றான். இவன் கார் செட்டை திறந்தவுடன் போய் விட்டது என்றான். நான் பயந்த போது பயப்பட கூடாது. அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்றான்.


      நீங்கள் சொல்வது போல் அது வந்த வழியே திரும்பி போனால் நல்லதுதான்.


      நீக்கு
  19. தோட்டத்துக் கண்ணாடிக் கதவு அல்லது வலைக் கதவை மூடியே வைத்திருப்போம். தோட்டத்தில் கால் வைக்கும் முன் வராந்தாவிலிருக்கும் நாற்காலியால் சத்தம் செய்து விட்டு இறங்குவோம். ஒரு வேளை இங்கேனும் சுருண்டு கிடந்தால் சத்தத்தில் அவை அசையத் தொடங்கி விடும். நம் கவனத்திற்கும் வரும்.

    கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். சத்தம் கேட்டு அது அசைந்தால் பார்வைக்கு படும்.
      இருந்தாலும் சங்கரன் கோயில் அம்மனை நினைத்துக் கொள்ளுங்கள் தோட்ட்டத்திற்கு போகும் போது.
      உங்கள் பக்கம் நாக வழி பாடு நிறைய உண்டே ! அந்த ஊரில் அவைகள் நிறைய இருப்பதால் தான் மரத்திற்கு மரம் நாகம் வைத்து காலையில் பால் அபிஷேகம் செய்கிறார்கள் மக்கள்.கவனமாக இருக்கிறோம் ராமலக்ஷ்மி.
      உங்கள் அக்கறையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு