"பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்" வீட்டுத்தோட்டம் மற்றும் நடைப்பயிற்சியின் போது எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
அரிசோனா மரங்கொத்தி பறவைகள். ஆண், பெண் பறவைகள் இரண்டும் கள்ளியில் உள்ள குஞ்சுகளுக்கு உணவளிக்கிறது.
இதுவும் ஒரு வகை சிட்டு வகையை சேர்ந்த பறவைதான்.
இது தினம் வரும் பறவை இல்லை , கருஞ்சிட்டு போல் எப்போதாவது வருகிறது .
சிட்டுக்குருவிகள்
பக்கத்து வீட்டுக்கூறையின் மீது அமருவது இந்த மணிப்புறாவிற்கு எப்போதும்
மகிழ்ச்சி
தேன்சிட்டு பதிவில் காணொளி எடுத்தேன் தேடி போடுகிறேன் என்றேன் இல்லையா ? சிறிய காணொளிதான் , வெகு தூரத்திலிருந்து எடுத்தேன்.
பெண் மரங்கொத்தி
முன்பு இந்த மரங்கொத்தி பறவை பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
முதுகு காட்டி அமர்ந்து இருக்கும் பெண் மரங்கொத்தி
கள்ளி மேல் அமர்ந்து பார்ப்பது அதற்கு பிடித்தமானது
தோட்டத்து மதில் சுவருக்கு அந்த பக்கம் இருக்கும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. வெயில் காலம் வந்து விட்டது மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது.
மேலே உள்ள பறவைதான் கோதுமை ரவை உப்புமா சாப்பிடும் இந்த பறவையும் என்று நினைக்கிறேன்.
இந்த பறவைக்கும் இந்த கள்ளி பிடித்து இருக்கிறது அமர்ந்து வேடிக்கைப் பார்க்க.
Thrasher Birds - இந்த பறவையின் பெயர். இந்த பறவையின் பேரை தேடி தந்த மகளுக்கு நன்றி. குளிர் காலத்தில் மட்டும் வரும் பறவையாக இருக்கும் போல! கோடை ஆரம்பித்து விட்டதால் இந்த பறவையை காணோம் இப்போது. தினம் வருகிறதா என்று பார்க்கிறேன்.
"காக்டஸ் ரன்" என்று அழைக்கப்படும் பறவை அரிசோனாவின் மாநில பறவை இது. உடம்பை சிலிர்த்து கொண்டு Quail பறவையை துரத்துகிறது.
இந்த மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்த Quail பறவையை நடைபயிற்சியின் போது பார்த்தேன் , ஏகாந்தமாக அமர்ந்து இருக்கிறது.
நடைப் பயிற்சியின் போது ஒரு வீட்டின் முன் வைத்து இருக்கும் தானிய கட்டியை சாப்பிடும் பறவைகளை தினம் எடுக்க வேண்டும் என்று நினைப்பேன், என்னைப் பார்த்தவுடன் பறந்து விடும். தூரத்திலிருந்து அவசரமாய் எடுத்த படம். கட்டி மேல் புறாவும், கீழே Quail பறவையும்.
ஜனவரி கடைசியில் வைத்த இந்த தானிய கட்டி நேற்று தீர்ந்து விட்டது. இந்த உணவு மூன்று மாதம் வந்து இருக்கிறது பறவைகளுக்கு .
குழந்தைகளுக்கும், என் போன்ற மூத்த குடிமக்களுக்கு(அவர்களும் வளர்ந்த குழந்தைகள் தாம்) இந்த பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியும் மன நிறைவும் தருமாம். பறவைகளுக்கும் நமக்கும் நட்பு நீடிக்குமாம். நம் தோட்டங்களுக்கு வந்து உணவு உண்பதை பாதுகாப்பாக உணருமாம் பறவைகள்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------
முதல் படத்தில் இருக்கும் பறவைக்கு சர்க்கரை இருக்கிறது என்று நினைக்கிறேன்! கண்களுக்கு கீழே எல்லாம் இளைத்துப்போய் காணப்படுகிறது!!!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் படத்தில் இருக்கும் பறவைக்கு சர்க்கரை இருக்கிறது என்று நினைக்கிறேன்! கண்களுக்கு கீழே எல்லாம் இளைத்துப்போய் காணப்படுகிறது!!!!//
நல்ல கற்பனை!
பாவம் அவைகளுக்கு சர்க்கரை எல்லாம் வர வேண்டாம்.
படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு கோமதிக்கா அதுவும் அந்த மரங்கொத்தி வாவ்!!! செமையா இருக்கு
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கள்ளியில் கூடு/வீடு கட்டி, கள்ளியின் உச்சியில் ஏதோ மொட்டை மாடியில் அமர்ந்திருப்பது போல பெருமையாக அமர்ந்திருக்கிறது.
பதிலளிநீக்குகள்ளியில் கூடு/வீடு கட்டி, கள்ளியின் உச்சியில் ஏதோ மொட்டை மாடியில் அமர்ந்திருப்பது போல பெருமையாக அமர்ந்திருக்கிறது.//
நீக்குஅவைகளுக்கும் கூடு கட்டி முடித்தவுடன் பெருமிதமும், நிம்மதியும் ஏற்படும் போல!
என்னென்னமோ பெயர் எல்லாம் சொல்கிறீர்கள். நமக்கு எலலாமே பொதுப்பெயர்தான்.. குருவி!!!
பதிலளிநீக்குபறவைகளும் அதன் பேர்களும் உள்ள புத்தகம் வாங்கி வைத்து இருக்கிறாள் அதனால் நான் அனுப்பிய பறவை படத்தை பார்த்து பேர் சொன்னாள்.மாயவரத்தில் ,மதுரையில் எடுத்த பறவைகளை நானே கூகுளில் பேர் தேடி போட்டு இருக்கிறேன்.
நீக்குபடங்கள் எலலாமே அருமை. ஒரு இடத்தில் அமராமல் சட்சட்டென திசை மாறி சுற்றிப்பறக்கும் காணொளியும் பார்த்தேன்.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தது மகிழ்ச்சி. பக்கத்தில் போனால் பறந்து விடும் என்று வெகு தூரத்திலிருந்து எடுத்தேன். பூக்கள் பூத்து இருப்பது அதற்கு இப்போது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, அதற்கு உணவு கிடைப்பதால்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
கடைசி படம் அழகு என்ன அழகா சாப்பிடுது! ஆமாம் கோமதிக்கா நானும் பறவைகளை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் போதுகையில் கேமரா இருக்காது அதுவும் நடைப்பயிற்சி அழகான ஏரியைச் சுற்றி. இரண்டு ஏரிகள் இருக்கின்றன ஒன்று நல்ல பெரிது நிறைய தண்ணீர் இருக்கு...மற்றொன்று கொஞ்சம் தண்ணீர். இரண்டிலுமே பறவைகள் அதிகம். கேமரா கொண்டு சென்று படம் எடுக்கும் போது பறந்துவிடும்
பதிலளிநீக்குநாம் பார்த்து ரசிக்கும் அதே போஸ் அடுத்த முறை கிடைக்காதே அதுவும் இருக்கு
கீதா
இங்கேயும் அப்படித்தான், செல், காமிரா கொண்டு போகாத அன்று பறவைகள் நிறைய வரும், கொண்டு போன அன்று ஒன்றும் வராது பேரன் கேலி செய்வான்.
நீக்குஏரிக்கரையோரம் பறவைகள் அமர்ந்து இருப்பதே அழகு அல்லவா!
//நாம் பார்த்து ரசிக்கும் அதே போஸ் அடுத்த முறை கிடைக்காதே அதுவும் இருக்கு//
நீங்கள் சொல்வது சரிதான். பறவைகள் சட் சட் என்று தான் அமர்ந்து இருக்கும் நிலையை மாற்றுமே!
அன்பு கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன். இத்தனை நேரம் எபி அரட்டையில் ஒரு பாட்டின் இசை கேட்டு நானும் ஸ்ரீராமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதைப் பதிவிட்ட அப்பாதுரை
மறுக்கிறார்.
அதுதான் நேரமாகிவிட்டது.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஅப்பாதுரை சார் போட்ட பாட்டு கண்டு பிடித்து விட்டீர்களா?
உங்களுக்கும், ஸ்ரீராமுக்கும் தெரிந்து இருக்குமே!
புறாக்களும் ,தேன்சிட்டுகளும் ,க்வெயில் பறவை ஓடுவதும் எல்லாமே மிகவும்
பதிலளிநீக்குகவனமாக எடுக்கப்பட்ட படங்கள்.
சிறப்பாக இருக்கின்றன.
அம்மா மரங்கொத்தியும் அப்பா மரங்கொத்தியும் என்ன அழகாக ஊட்டுகின்றன.
கடவுளின் உன்னதப் படைப்புகள்
கள்ளிகளும், இந்தப் பறவைகளும்.
முதுகு காட்டி இருக்கும் பெண் மரங்கொத்தி ஹாஹாஹா அதான் அழகான டிசைன் சட்டை போட்டிருக்கு பாருங்க!!! இயற்கை என்னமா டிசைன் போடுகிறது!! இதை எல்லாம் பார்க்கறப்ப இயற்கையை விஞ்ச முடியுமா என்று அடிக்கடி சொல்ல வைக்கும். அடுத்த வாட்டி வேற டிசைன் சட்டை போட்டு வரச் சொல்லுங்க!!!!!!!! இல்லேனா கலர்!
பதிலளிநீக்குத்ராஷர் பறவை புதியது பொதுவாக புறா, காகம், மரங்கொத்தி குருவி என்றுசில தெரியும்...பறவைகள் பற்றி அறிய நிறைய கவனிக்க வேண்டும் இல்லையா அக்கா.
காக்டஸ் ரன் பறவை காக்டஸில் வாழ் பறவையோ! அதனால் இப்பெயரோ?
கீதா
//முதுகு காட்டி இருக்கும் பெண் மரங்கொத்தி ஹாஹாஹா அதான் அழகான டிசைன் சட்டை போட்டிருக்கு பாருங்க!!! இயற்கை என்னமா டிசைன் போடுகிறது!!//
நீக்குஇயற்கை படைப்பில் எல்லாம் அழகுதான் கீதா.
இயற்கையை நினைத்து வியக்கத்தான் வேண்டும்.
//அடுத்த வாட்டி வேற டிசைன் சட்டை போட்டு வரச் சொல்லுங்க!!!!!!!! இல்லேனா கலர்!//
நாமே வேறு கலர் சட்டை போட்டு விடுவோம் கீதா.
த்ராஷர் பறவை பாலைவன பறவை. (அரிசோனா பறவையாம்)
காக்டஸ் ரன் பறவை கள்ளியில் கூடு கட்டி வாழும் பறவைதான் அதனால்தான் அந்த பெயர் கீதா.
படங்களை ரசித்துப்பார்த்து சொன்ன கருத்துக்களுக்கு நன்றி.
////குழந்தைகளுக்கும், என் போன்ற மூத்த குடிமக்களுக்கு(அவர்களும் வளர்ந்த குழந்தைகள் தாம்) இந்த பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியும் மன நிறைவும் தருமாம்/// மிக மிக உண்மை மா. பறவைகளும் ,அவை நம்மைப் பார்க்கும்
பதிலளிநீக்குவிதமும் சிறப்பு.
//அவை நம்மைப் பார்க்கும்
நீக்குவிதமும் சிறப்பு.//
ஆமாம் அக்கா, இப்போது எல்லாம் பழகி விட்டது தோட்டத்துக்கு வரும் பறவைகள்
கதவை திறந்து பக்கத்தில் போனால் தான் பறக்கிறது. தூரத்தில் நின்றால் பறக்காமல் நம்மை கவனிக்கிறது.
தானியக் கட்டி ஐடியா அழகு. எவ்வளவு நல்ல உள்ளம் எல்லோருக்கும்.!!!
பதிலளிநீக்குதானியக் கட்டி ஐடியா அழகு//
நீக்குஆமாம் அக்கா, அவர்களுக்கு நல்ல உள்ளம் தான். சிந்தாமல், சிதறாமல் அதற்கு உணவு கிடைக்கிறது.
இன்று காற்று அதிகம் மண் பறப்பதால், பூக்களும் பறக்கும் என்பதால் நடைபயிற்சி போகவில்லை போயிருந்தால் இன்று வேறு உணவு வைத்து இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகிய பறவைகள் அவைகளை குறித்த விளக்கங்களும் நன்று.
பதிலளிநீக்குபறவைகளை நேசிப்பதற்கும் மனம் வேண்டும் எனக்கு கூண்டுகளில் கிளி, புறா வளர்ப்பவர்களை பிடிக்காது அவைகளின் சுதந்திரத்தை நாம் பறிக்க கூடாது.
இயன்றவரை வேண்டாமென்று எடுத்து சொல்வேன் கேட்காதபோது நாமென்ன செய்ய இயலும் ?
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//எனக்கு கூண்டுகளில் கிளி, புறா வளர்ப்பவர்களை பிடிக்காது அவைகளின் சுதந்திரத்தை நாம் பறிக்க கூடாது//
நல்ல மனது உங்களுக்கு.
//இயன்றவரை வேண்டாமென்று எடுத்து சொல்வேன் கேட்காதபோது நாமென்ன செய்ய இயலும் ?//
ஆமாம், கேட்காதபோது நாம் ஒன்றும் செய்யமுடியாதுதான்.
முடிந்தவரை நல்லதை எடுத்து சொல்லுங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கருஞ்சிட்டு பறவைகள் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. எவ்வளவு பொறுமையாக எடுத்த படங்களை தொகுத்ததோடு, அவற்றின் பெயர்களையும் விளக்கமாக தந்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமைக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள். அந்த பொறுமைக்கு முதலில் தலை வணங்குகிறேன்.
பக்கத்து வீட்டு கூரையில் அமர்ந்திருக்கும் மணிப்புறா என்ன ஒரு கம்பீரம்...! இந்த உலகத்திற்கே நான்தான் ராஜா என்ற மாதிரி போஸ் தந்துள்ளது.
முதுகு காட்டி அமர்ந்திருக்கும் பெண் மரங்கொத்தி அழகான புடவை அணிந்திருப்பது போல், அவ்வளவு அழகாக உள்ளது. தன் குஞ்சுகளுக்கு உணவூட்டும் மரங்கொத்தி பறவை படங்களும் அழகாக உள்ளது. ஒவ்வொன்றாக பெரிது பண்ணி படங்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
காணொளியும் முந்தைய பதிவுகளையும் பார்க்கிறேன். தானிய கட்டி உணவு முறை சிறப்பாக உள்ளது. அவைகளும் சிந்தாமல், சிதறாமல் சாப்பிடும். அங்குள்ள பருவகால மாற்றங்களுக்கு தகுந்தபடி பறவைகளுக்கும் உணவு வைப்பது பாராட்டத்தக்கது. உங்கள் அன்பான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//கூரையில் அமர்ந்திருக்கும் மணிப்புறா என்ன ஒரு கம்பீரம்...! இந்த உலகத்திற்கே நான்தான் ராஜா என்ற மாதிரி போஸ் தந்துள்ளது.//
ஆமாம் கமலா , அவை உயர்ந்த கூரையில் மாடமாளிகையில் வாழ்ந்த பறவைகள் அல்லவா ! அதன் பழைய வாசனை அதற்கு போகுமா?
பெரிது பண்ணி படங்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.//
மகிழ்ச்சி.
மரங்கொத்திபறவைகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பழைய பதிவுகளை பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
காணொளி சிறிது நேரம்தான் வரும். தானியகட்டி முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.
பறவைகளுடன் நட்பு என்றும் மகிழ்வே... படங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளுடன் நட்பு என்றும் மகிழ்வே../
ஆமாம் தனபாலன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
பறவைகள் படங்கள் அனைத்தும் அழகு. அவற்றைப் பார்த்துக்கொண்டு இருப்பது நல்லதொரு பொழுது போக்கு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//அவற்றைப் பார்த்துக்கொண்டு இருப்பது நல்லதொரு பொழுது போக்கு.//
ஆமாம் வெங்கட், நல்லதொரு பொழுது போக்குதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மிக அழகாக வந்திருக்கு.
பதிலளிநீக்குதானியக் கட்டி - இதுவரை கேள்விப்பட்டதில்லை. நீங்க கோதுமை ரவை உப்புமாவை வைத்துவிட்டீர்கள் போள.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குமுன்பு ஒரு பதிவில் இந்த தானிய கட்டியைப்பற்றி சொல்லி இருந்தேன்.
கோதுமைரவை உப்புமா கிண்ணத்தில் வைத்து இருந்ததை அப்படியே கவிழ்த்தவுடன் தானிய கட்டி மாதிரி வந்து விட்டது.
எங்க பால்கனில இரண்டு நாள் முன்பு ஒரு அண்டங்காக்கை, துளசிச் செடி வைத்திருந்த தொட்டியின் கீழ் இருக்கும் தட்டில் உள்ள தண்ணீரைக் குடிக்க யத்தனித்தது. அதைப் பார்த்து நான், ஒரு பெரிய ஸ்டூலின்மேல் பெரிய தட்டில் தண்ணிரை வைத்தேன். அப்புறம் அது வரவில்லை.
பதிலளிநீக்குதண்ணீரை தொடர்ந்து வையுங்கள் ஒரு நாள் வரும். இங்கு இன்னும் தண்ணீர் தேவை படவில்லை போலும் பற்வைகளுக்கு. தண்ணீர் வைத்தால் குடிக்கவில்லை, சிறிது நாள் கழித்து வைக்க வேண்டும்.
நீக்கு/பறவைகளுக்கும் நமக்கும் நட்பு நீடிக்குமாம். நம் தோட்டங்களுக்கு வந்து உணவு உண்பதை பாதுகாப்பாக உணருமாம் பறவைகள்.//மிகவும் உண்மை அக்கா .ஒவ்வொரு பறவையும் அதன் இருப்பிடம் வாழும் சூழல் உண்ணும் உணவை பொறுத்து நிறம் தன்மை அதன் அலகின் வடிவம் எல்லாம் அமையும் .எங்க தோட்டத்துக்கு மணிப்புறாக்கள் நிறையபேர் வராங்க நானும் தானியம் நிறைய போடுவேன் .எதிர்பார்த்து காத்திருக்கும் பறவைகளும் .இது ஒரு தனி மகிழ்ச்சிக்கா .நீங்களும் அனுபவியுங்கள்
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களை போன பதிவின் போது நினைத்து கொண்டு இருந்தேன். பூக்களின் மகரந்தம் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தியதை. (வசந்தகால பூக்கள் பதிவு)
//ஒவ்வொரு பறவையும் அதன் இருப்பிடம் வாழும் சூழல் உண்ணும் உணவை பொறுத்து நிறம் தன்மை அதன் அலகின் வடிவம் எல்லாம் அமையும்//
ஆமாம் ஏஞ்சல்.
உங்கள் தோட்டத்திற்கும் மணிப்புறாக்கள் நிறைய பேர் வருவது மகிழ்ச்சி.நீங்களும்
தானியம் வைப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எல்லா பறவை படங்களும் மிக அழகு ...
பதிலளிநீக்குரசித்து ரசித்து எடுத்து இருக்கீர்கள் மா ...
அரிசோனா மரங்கொத்தி பறவைகள்...என்னை மிகவும் கவர்ந்தது.
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குமரங்கொத்தி பறவை மனம் கவர்ந்து விட்டதா மகிழ்ச்சி.
//ரசித்து ரசித்து எடுத்து இருக்கீர்கள் மா//
நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பறவைகள் அத்தனையும் அழகு. பொறுமையாய் எடுத்திருக்கீங்க... அதென்ன தானியக்கட்டி புதிதாய் இருக்கிறது
பதிலளிநீக்குவணக்கம் எழில், வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகள் அத்தனையும் அழகு. பொறுமையாய் எடுத்திருக்கீங்க.//
நன்றி.
பலவகை தானியங்களை கலந்த கலவையை கட்டியாக செய்து இப்படி பறவைகளுக்கு உணவாக வைக்கிறார்கள். சிறுதானியங்கள் இங்கு அடிக்கும் காற்றுக்கு பறந்து விடும்.
பறவைகளும் சிதறி சாப்பிடும். கட்டி என்றால் கொத்தி மட்டும் சாப்பிட வசதி.
உங்கள் கருத்துக்கு நன்றி
மிகவும் அழகான படங்கள். கள்ளிச் செடியில் பறவைக் குஞ்சா? அதன் முள் குத்தாதா? உங்களால் நாங்களும் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகள்ளிச்செடியில் பறவை குஞ்சுதான் . உள் பகுதியில் முட்கள் இருக்காது போலும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்கள்! அருமையாய் இருக்கின்றன. பறவைகளைப் பார்ப்பதும் அவற்றின் பழக்கங்களைத் தெரிந்து கொள்வதும் மனதுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் அளிக்கவல்லவை. மரங்கொத்திப் பதிவு முன்னர் பார்த்திருக்கேன். இப்போதும் போய்ப் பார்க்கிறேன். மரங்கொத்தி மரத்தைத் துளை போடும்போது ஆசாரி மரத்தை அறுப்பது போலவே சப்தம் வருவது ஆச்சரியமாக இருக்கும். விதம் விதமான பறவைகள் நேற்றுப் பெண்ணுடன் பேசும்போது அவங்க தோட்டத்தில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தன. பின்னணியில் சங்கீதம் போல் இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளைப் பார்ப்பதும் அவற்றின் பழக்கங்களைத் தெரிந்து கொள்வதும் மனதுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் அளிக்கவல்லவை. //
ஆமாம் கீதா . நீங்கள் சொல்வது போல் மன ஆறுதலும் மகிழ்ச்சியும் தருகிறது.
மரங்கொத்தியின் சத்தமும் நன்றாக இருக்கும். கொத்தும் சத்தம் ஒரு ரிதம் இருக்கும்.
//பெண்ணுடன் பேசும்போது அவங்க தோட்டத்தில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தன. பின்னணியில் சங்கீதம் போல் இருந்தது.//
உங்கள் மகள் வீட்டு தோட்டத்தில் பறவைகளின் சங்கீதம் கேட்பது போல இங்கும் மகன் வீட்டுத்தோட்டத்தில் பறவைகளின் சங்கீதம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மகள் உடல்நலம் பெற்று வருவார்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஆம், பறவைகளில்தாம் எத்தனை விதம்!! தொகுப்பும் ஒவ்வொரு குறிப்பும் வெகு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குQuail நேரில் பார்த்ததில்லை. அரிசோனா மரங்கொத்தி, Thrasher Bird அழகு. சிட்டு வகைகளில் மட்டுமே எத்தனையோ பறவைகள் உள்ளன. ஒவ்வொன்றின் பெயரையும் தொடர்ந்து அதன் வாழ்வியல் தகவல்களையும் தேடித் தெரிந்து கொள்வதில் உள்ளன பல ஆச்சரியங்கள். சிறப்பான பகிர்வு.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குசிட்டு வகைகள் நிறைய இருக்கிறது ராமலக்ஷ்மி. சில வந்தவுடன் அமராமல் பறந்துவிடும்.
நாம் சிலவற்றைதான் பார்க்க முடியும்.
//அதன் வாழ்வியல் தகவல்களையும் தேடித் தெரிந்து கொள்வதில் உள்ளன பல ஆச்சரியங்கள்//
நீங்கள் சொல்வது போல இந்த பறவைகளின் வாழ்வியலை தெரிந்து கொள்ளும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது! இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பாடம் நமக்கு கற்றுத் தருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அனைத்தும் அழகு, பறவைகள் போடும் கூத்துக்கள் சேட்டைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பதிலளிநீக்குஅந்த மரங் கொத்தி, குட்டியாக சிட்டுப்போல தெரிகிறதே.
வீடியோவில் தேன் சிட்டு, தேன்பூச்சிபோல பறக்கிறது ஹா ஹா ஹா. விண்டர் முடிஞ்சிட்டாலே வெளிநாடுகள் அழகோ அழகு..
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகள் போடும் கூத்துக்கள் சேட்டைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.//
ஆமாம் அதிரா.
//அந்த மரங் கொத்தி, குட்டியாக சிட்டுப்போல தெரிகிறதே.//
பெண் மரங்கொத்தி மிகவும் ஒல்லியாக சிட்டு போல்தான் இருக்கிறது.
//வீடியோவில் தேன் சிட்டு, தேன்பூச்சிபோல பறக்கிறது ஹா ஹா ஹா.//
இறக்கைகளை அடித்துக் கொண்டே இருக்கும் படம் எடுப்பது முடியாது. சிறு வண்ணத்துப்பூச்சி போலதான் பறந்து கொண்டே இருக்கும்.
//விண்டர் முடிஞ்சிட்டாலே வெளிநாடுகள் அழகோ அழகு..//
ஆமாம் அதிரா .
உங்கள் கருத்துக்கு நன்றி.
பறவைகளையும் அவற்றுக்கான உலகையும் பாதுகாத்தே ஆக வேண்டும் என்னும் செய்தியைச் சொல்லாமல் சொல்கின்றன - பதிவிலுள்ள படங்கள்..
பதிலளிநீக்குஇத்தனை பறவைகளைக் கண்டு மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...
வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளையும் அவற்றுக்கான உலகையும் பாதுகாத்தே ஆக வேண்டும் என்னும் செய்தியைச் சொல்லாமல் சொல்கின்றன //
பறவைகளை பாதுகாத்து வருகிறார்கள் நீங்கள் சொல்வது போல்.
படங்களை கண்டு மகிழ்ச்சி அடைந்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.
பறவைகள் உலகம் அங்கே கண்டிப்பாக மனிதனுக்கு இடமிருக்காது போல. உங்கள் தேடல் அற்புதம். மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஎனது பதிவொன்று
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!
வணக்கம் niloshan, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் தளம் வருகிறேன்.