அரிசோனா அருகில் உள்ள ஆன்டிலோப் கான்யன் என்ற இடத்திற்கு 2017ல் டிசம்பர் மாதம் நாங்கள் மகன் வீட்டுக்கு போய் இருந்த போது இந்த ஆற்றுக்குடைவு பள்ளதாக்கிற்கு அழைத்து போனான். மகன் குடும்பத்துடனும் குடும்ப நண்பர் குடும்பத்துடன் சென்று வந்த இனிய பயணம்.
(கணவரும் அப்போது உடன் இருந்தார்கள் அந்த நினைவுகள் மனதில்.)
இந்த இடம் அமெரிக்க பூர்வகுடியினர் நவஹோ பழங்குடியினரின் நிலத்தில் அமைந்து இருக்கிறது. அவர்கள் ஆறுகளின் அருகில் தான் தங்கள் குடியிருப்பை வைத்து இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு (இரண்டு, மூன்று இடங்கள்.) அழைத்து போனான் மகன் முடிந்த போது அவைகளை பகிர எண்ணம் உள்ளது. இறையருள் ஒத்துழைக்கவேண்டும்.
(அமெரிக்க செவ்விந்திய குழுவில் பழங்குடியினர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள் இந்த நவஹோக்கள். பேசும் மொழி நவஹோ அதை வைத்து அவர்களை அவ்வாறு அழைக்கிறார்கள். இன்றும் அந்த மொழியை பேசுகிறார்கள். இரண்டாம் உலக போரில் ரகசிய தகவல் பரிமாற்றம் செய்ய நவஹோ மொழியினர் உதவினர். பழங்குடியினர் பேசிய மொழியால் அமெரிக்கா இரகசிய தகவல் பரிமாற்றம் தயாரித்தது. பழைமையான மொழிகளில் நவஹோ மொழியும் ஒன்று. முத்து காமிக்ஸ், லைன் ரசிகர்களுக்கு நவஜோ என்று தெரிந்து இருக்கும். நவஹோவை நவஜோ என்று அந்த கதையில் வரும்.)
இரண்டு தனி கான்யன்கள் உண்டு . மேல், கீழ் கான்யன்கள் என்று. நாங்கள் மேல் கான்யன் போய் பார்த்து வந்தோம்.
பள்ளதாக்கு பகுதிக்குள் போக குறுகிய பாதை அமைப்பு இதன் வாசலிலிருந்து உள்ளே சில நூறு அடி தூரம் செல்ல வேண்டும்.
மிகவும் அழகான இயற்கையாக அமைந்த ஆற்றுக்குடைவு பள்ளத்தாக்கு.
ஆற்று வெள்ளக் காலத்தில் வெள்ளம் இந்த பள்ளத்தாக்கு வழியாக செல்லும். வெள்ளம், மழை, காற்றால் இயற்கையாக சிவப்பு மணலால் நிறைய உருவக காட்சிகள் சாய்வான கோணங்களில் செதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த காட்சிகள் பார்க்க அழகாய் இருக்கும். வரி வரியாக பார்க்க அழகு.
ஆன்டிலோப் பள்ளதாக்கிற்கு அழைத்து செல்லும் வண்டி. இது போல் நிறைய இருக்கும் ஒரு குழு சென்று வந்தவுடன் அடுத்த குழு செல்லும்.
இந்த இடத்திற்கு நம் காரில் பயணிக்க முடியாது நம் காரை கார்கள் நிறுத்தும் இடத்தில் விட்டு விட வேண்டும்.
அங்கிருந்து இது போன்ற வேனில் அழைத்து செல்வார்கள் . எங்கள் வண்டியை ஓட்டி வந்தவர் நவஹோ பழங்குடியை சேர்ந்த பெண் 50 வயது இருக்கும் அவர்களுக்கு. நல்ல சுறு சுறுப்பு . உள்ளே அழைத்து சென்று நம் அலை பேசியை வாங்கி சில குறிப்பிட்ட இடங்களில் வெளிச்சம் காட்டி உள்ளே தோன்றும் தோற்றங்களை பார்க்கச் சொன்னார்கள். மிக அழகாய் இருந்தது அந்த படங்கள் பகிர்வாய் இங்கு.
இங்கு போக கட்டணம் உண்டு. நாம் ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். நமக்கு நேரம் குறித்து கொடுத்து விடுவார்கள்.
இவர்கள்தான் அந்த வழிகாட்டி பெண்மணி மிக திறமையாக வண்டி ஓட்டுகிறார், மிகத்திறமையாக போட்டோ எடுக்கிறார்.
உள்ளே எப்படி போக வேண்டும் என்று சொல்கிறார்.
ஒவ்வொருவர் அலைபேசியை வாங்கி அவர்கள் சொல்லும் இடத்தில் நம்மை நிற்கவைத்து போட்டோ எடுத்து தருகிறார்.
மருமகளை டார்ச் அடிக்கச் சொல்லி அப்புறம் படம் எடுத்தார்.
மருமகள் பேரை சரியாக அழைக்க முடியாமல் "எம்மா" என்று அழைத்து பேசினார். மருமகளின் நீண்ட கூந்தலைப்பார்த்து தனக்கும் நீண்ட கூந்தல் இருப்பதாகவும் அதை தன் அம்மா அந்தக்காலத்தில் பராமரிக்க பட்ட கஷ்டங்களை சொன்னார்.
தன் நீண்ட கூந்தலை கொண்டை போட்டு இருந்தார்.
அந்தக்காலத்தில் பெண்களுக்கு உள்ள கட்டுபாடுகளை சொன்னார். எங்களுடன் படம் எடுத்துக் கொண்டார்.
ராட்சச விரல்கள்
சூரிய ஒளி தெரிகிறது
பிளவு வழியாக சூரிய ஒளி படும் போது பள்ளத்தாக்கின் அழகை பார்க்கலாம்
உள்ளே குளிர் அதிகமாக இருந்தது
உள்ளே இருந்து வெளியே வந்தால் பக்கத்தில் இருக்கும் மலையை பார்க்கும் போது கண் கூசும்.
பயங்கர வெளிச்சமாக தெரியும் கண்களுக்கு.
2010 ஆண்டு இங்கு பார்க்க போனவர்கள் திடீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட காணொளி. சிறிய காணொளிதான் பாருங்கள்.
மேலே வீடியோ தெரியவில்லை என்றால் இந்த சுட்டியை கிளிக் செய்தால் வரும்.
உள்ளே உள்ள காட்சிகளை பார்க்கலாம் இந்த காணொளியில் நான் இங்கு பதிவு செய்து இருக்கும் படங்களை நீங்கள் இன்னும் அழகாய் இதில் பார்க்கலாம். இயற்கை செய்து இருக்கும் அழகியக் காட்சிகளை கண்டு வியக்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் .
அம்மாடி... மிக அழகிய இடம். இந்த இடம் பற்றிய தகவலையும், படங்களையும் இப்போதுதான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபோய் வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது பகிர இப்போதுதான் நேரம் அமைந்து இருக்கிறது.
படங்களிலும், காணொளியிலுமே இவ்வளவு அருமையாக இருக்கிறதே... நேரில் எப்படி இருந்திருக்கும்...
பதிலளிநீக்குநேரில் பார்க்க அழகுதான் ஸ்ரீராம்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பள்ளத்தாக்கு காட்சிகள் அற்புதம்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அருமையாக உள்ளது. மடிப்பு மடிப்பான செங்குழம்பு நிறத்தில் அனைத்துப் பகுதிகளும் பார்க்க கண்கொள்ளா காட்சிகளாக இருக்கிறது. இது மாதிரி இடங்கள் இருப்பதைப் பற்றிய தகவல்களை இன்றுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன்/பார்க்கிறேன். இந்த இடத்தின் படங்களும், தங்கள் குடும்ப படங்களும் நன்றாக உள்ளது.
காணொளியும் பார்த்தேன். கொஞ்சம் பயமாக உள்ளது. உள்ளே இருக்கும் போது வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வது? ஒருவேளை பள்ளத்தாக்கின் உள்ளேயெல்லாம் வெள்ள நீர் புகாதபடிக்கு அமைத்துள்ளார்களோ? ஒரு இயற்கை அமைத்துள்ள ரிஸ்க்கான இடத்திற்குத்தான் சென்று வந்துள்ளீர்கள் எனத் தோன்றுகிறது. இதுவரை கேள்விப்படாத இடமென்பதால் கேட்கிறேன். மற்றபடி படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
காணொளியை பார்த்தீர்களா? மகிழ்ச்சி. உள்ளேயும் வெள்ளம் போகும். அது போய் தான் இத்தனை வடிவங்களை செய்து இருக்கிறது. இது இயற்கையாக அமைந்த பள்ளத்தாக்கு. நம் ஊர் பக்கம் காட்டாறு என்று சொல்வோம் அல்லாவா , அது போலதான் திடீர் என்று வெள்ளம் வரும்.
என் நினைவுகளின் சேமிப்பாய் இந்த பதிவு கமலா.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இயற்கையின் குடைச்சல் எவ்வளவு அழகு.
பதிலளிநீக்குபார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது ஏதோ அட்டையில் செய்தது போன்று...
படங்கள் எடுத்த விதங்கள் அருமை.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கையின் குடைச்சல் அருமைதான்.
மரத்தை வெட்டினால் ஒரு டிசைன் வருமே அது போல எனக்கு தோன்றியது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இப்படி ஒரு இடம் இருப்பதைக் கேள்விப் பட்டதே இல்லை. முதல்முறையாகக் கேள்விப் படுவதோடு படங்களையும் பார்த்தேன். அழகிய காட்சிகள். நீங்க சொல்கிறாப்போல் அதிகாலைச் சூரியனின் ஒளி பட்டதும் ஒளிரும் கயிலை முகம் தான் நினைவில் எனக்கும் வந்தது. செக்கச்செவேர்னு இருக்கும் அதற்கும் இதற்கும் சின்னச் சின்ன வேறுபாடுகள் தான். திடீர் வெள்ளம் பற்றிப் பார்த்ததும் மனம் கொஞ்சம் பதறி விட்டது. இரண்டு காணொளிகளுமே நன்றாக இருந்தன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//நீங்க சொல்கிறாப்போல் அதிகாலைச் சூரியனின் ஒளி பட்டதும் ஒளிரும் கயிலை முகம் தான் நினைவில் எனக்கும் வந்தது. செக்கச்செவேர்னு இருக்கும் அதற்கும் இதற்கும் சின்னச் சின்ன வேறுபாடுகள் தான். //
உங்களுக்கும் கயிலை நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.
மகன் இந்த இடத்தில் திடீர் என்று வெள்ளம் வரும் என்ர போது எங்களுக்கும் கொஞ்சம் திகிலாக இருந்தது. காணொளி பார்த்த போது இப்படி பட்ட இடத்திற்கு போய் திரும்பி இருக்கிறோம் என்று நினைத்து ம்லைப்பாக இருந்தது . இன்னும் கீழ் கான்யன் இதை விட பயமாக இருக்குமாம். படிகள் இருக்குமாம் அதன் வழியாக இறங்கி போய் பார்க்க வேண்டுமாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Arumai.
பதிலளிநீக்குவணக்கம் Paul Jeyaseelan, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆச்சரியத்தில். ஒன்று இயற்கையின் அற்புதத்தை நினைத்து மற்றொன்று உங்கள் புகைப்படங்கள்! வாவ்!! அட்டகாசம் கோமதிக்கா.
பதிலளிநீக்குபுடவை விளம்பரத்தில் தலைப்பு அப்படியே அலையலையாய் விரிந்து பறக்க விட்டு என்று வருமே அது பொல பல படங்கள் அக்கா பிரமித்துவிட்டேன்...
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//இயற்கையின் அற்புதத்தை நினைத்து மற்றொன்று உங்கள் புகைப்படங்கள்! வாவ்!! அட்டகாசம் கோமதிக்கா.//
இயற்கையின் அற்புதம்தான் கீதா.
//புடவை விளம்பரத்தில் தலைப்பு அப்படியே அலையலையாய் விரிந்து பறக்க விட்டு என்று வருமே அது பொல பல படங்கள் அக்கா பிரமித்துவிட்டேன்...//
நல்ல கற்பனை. படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கான்யான் பயணம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குநான் போய்ப் பார்த்ததில்லை. அன்பு கோமதிமா.
அதற்குப் பதிலாக உங்கள் பதிவு விரிவாகச் சொல்கிறது,.
காணொளிகளும் மிக மிக நேர்த்தி. உள்ளே எடுத்தபடங்கள் இயற்கையின்
மேன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
உங்கள் புடவை மிக அழகாகப் பதிவாகி இருக்கிறது.
பேரன், மகன் மருமகள் எல்லோருடனும் ஸாரும் இருக்கும் படம்
அருமை. நவாஹோ இந்தியர்கள் பற்றி
க்ராண்ட் கான்யான் போனபோதும் தெரிந்து கொண்டோம்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//கான்யான் பயணம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.
நான் போய்ப் பார்த்ததில்லை. அன்பு கோமதிமா.//
நன்றாக இருந்தது , பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது.
காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி.
புடவை என் தங்ககை வாங்கி தந்தாள் கைத்தறி புடவை.
படங்கள் பிடித்து இருப்பதாக சொன்னது நன்றி.
வெள்ளம் வரும் காணொளி பயமாக இருந்தது.
பதிலளிநீக்குதவறாக மதிப்பிட்டால் இயற்கை
பயங்கரமானது.
எல்லாக் காட்சிகளையும் விவரமாகப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
சூரியன் குகைகளுக்கிடையே காட்டும் வர்ண ஜாலம்
மனத்தை வசீகரிக்கிறது.
அருமையான இடம் அரிசோனா.
வாழ்க வளமுடன்.
வெள்ளம் வரும் காணொளி பயமாகத்தான் இருக்கிறது. உள்ளே இருப்பவர்களை கூவி அழைக்கும் போது அடி வயிறு கலங்கும்.
பதிலளிநீக்குசூரியன் குகைகளுக்கிடையே காட்டும் வர்ண ஜாலம்
மனத்தை வசீகரிக்கிறது.//
ஆமாம் அக்கா.
இறைவன் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பு கொடுத்து இருக்கிறார்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.
அற்புதம்
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் வியக்க வைக்கிறது
நன்றி சகோதரி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
காணக் கிடைக்காத படங்கள்.. அருமை...
பதிலளிநீக்குதங்களால் நானும் கண்டு கொண்டேன்...
மகிழ்ச்சி.. நன்றி...
வாழ்க வையகம்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வாழ்க வையகம்
வியப்பூட்டும் இயற்கை அதிசயம். படங்களும் குறிப்புகளும் நவஹோக்கள் பற்றிய தகவல்களுமாக பகிர்வு மிக நன்று. வெள்ளம் வரும் காட்சி திகிலூட்டுகிறது. கடைசிக் காணொளி அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம் ராமலக்ஷ்மி, இயற்கையின் அதியசம் வியப்பூட்டுகிறது .
வெள்ளம் வரும் காட்சி திகிலூட்டியது உண்மை.
காணொளி பார்த்தும் படங்களை, பதிவை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
பள்ளத்தாக்கு படங்கள் எல்லாம் சூப்பரா இருக்குக்கா .அப்படியே ,மாடர்ன் ஆர்ட் போல் இருக்கு ஒவ்வொரு வடிவமும் .இயற்கை எப்பவும் அழகு இது அழகோ அழகு .
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ஏஞ்சல் , இயற்கை அமைந்த எல்லாம் அழகுதான்
உங்கள் கருத்துக்கு நன்றி.