ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

முக்தி நாத் யாத்திரை






முக்திநாத் யாத்திரை Muktinath Yatra (திருச்சாளக்கிராமம்) திருக்கயிலாய யாத்திரை முடிந்து இந்தியாவுக்கு நாங்கள் திரும்பும்போது நேபாளத்திலுள்ள முக்திநாத் தலத்திற்குச் சென்று வந்தோம். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் ’ஹோலி ஹிமாலயாஸ்’ என்ற் விடுதியில் தங்கினோம் ஈரோடு ‘மனோகர் ட்ராவல்ஸ்’ நிறுவத்தினர் ஏற்பாடுசெய் திருந்த யாத்திரையில் நாங்கள் பதினோரு பேர் கலந்து கொண்டோம். 15 09.11 அன்று காலை, பேருந்தில் புறப்பட்டோம்.அழகிய மலைப்பாதையில் எங்கள் பேருந்து சென்றது. ஆறுகள், பள்ளத்தாக்குகள் வழியாகச் சென்றது. கண்டகி ஆறு மிக அருகில் ஓடுகிறது, .



 


ரோப்கார்களும் தொங்கு பாலங்களும் அங்கங்கே உள்ளன. திரிசூலி என்ற ஓர் இடத்தில் இன்னொரு ஆறு வந்து கலக்கிறது. பொக்காரா என்ற ஊரை நோக்கிச்சென்றோம்.. காத்மாண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. வழியில் ஒரு ஊரில் மதியத்தில் உணவு உண்டோம். கார சாரமான உணவு. உணவு விடுதிக்காரர் அன்பாக எங்களை உபசரித்தார். மாலை 3 மணியளவில் பொகாரா சென்றடைந்தோம். மிக அழகான ஊர். அங்கு ’ஹோட்டல் காந்திபூர்’ என்ற விடுதியில் தங்கினோம். வசதியான விடுதி. அன்றிரவு அவ்வூர்க் கடைவீதியைச் சுற்றிப் பார்த்தோம். தவளகிரி சிகரம். அன்னபூர்ணா சிகரங்கள், மச்சபுக்கரெ (Machhapuchchhre) சிகரம் முதலியன வரிசையாக வட திசையில் அமைந்துள்ளன. அவற்றைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது. மறுநாள் 16.09.11 அன்று அதிகாலை 5.30 மணியளவில் விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று அன்னபூர்ணா மலைத்தொடரின் அழகைக் காலை நேரச் சூரிய ஒளியில் பார்த்தோம். 7.30 மணியளவில் பக்கத்தில் இருந்த விமான நிலையத் திற்குச் சென்றோம். விமான நிலையம் சிறியது. பொக்காராவிலிருந்து ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகுரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி. துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக் கூடியது.. வானநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம். நாங்கள் முக்திநாத் செல்வதற்கு முதல் நாள் ஒரு குழுவினர் வானிலை சீராக இல்லாததால் முக்திநாத் செல்லாமல் திரும்பவேண்டியதாயிற்று. தொடர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல விமான முன்பதிவு செய்துவிட்ட படியால் அவர்கள் திட்டப்படி முக்திநாத் செல்லமுடியாது போய்விட்டது. காத்மாண்டுவிலிருந்து முக்திநாத் சென்று திரும்புவதற்கு சாதாரணமாக இரண்டு நாட்கள் போதுமானவை. நாங்கள் சென்ற மனோகர் ட்ராவல்ஸ் நிறுவனத்தினர் 5 நாட்கள் ஒதுக்கியிருந்தனர். இதனால் சிலநாட்கள் காலநிலைக்காகக் காத்திருந்து பொறுமையாக நாம் பார்க்கவேண்டிய இடத்தைப் பார்த்து வரலாம். முக்திநாத் செல்லத்திட்டமிடுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடு களைத் தொட்டுவிடுவது போல் தாவிச் தாவிச் சென்றது. செய்து ஜம்சொம் என்னும் நிலையத்தை அடைந்தோம். ஜம்சொம் மிக அழகான ஒரு சிற்றூர். சுற்றிலும் மலைத் தொடர்கள். வெள்ளிப்பனி மூடிய சிகரங்கள் அருகில் உயரமாய் உள்ளன..இவ்வூர் காளிகண்டகி நதிக்கரையில் அமைந்துள்ளது அங்கு ’ட்ரெக்கர்ஸ் இன்’ என்ற விடுதியில் உடைமை களை வைத்துவிட்டுச் சற்று தூரம் நடந்து முக்திநாத்துக் குச் செல்லும் ஜீப் ஸ்டாண்டிற்குச் சென்றோம்.. மலை யேற்றப் பயிற்சி நடக்கும் மலைப்பாறைப் பகுதிகள் நிமிர்ந்து நிற்கின்றன. வழியில் ஆப்பிள் தோட்டங்களும், முட்டைகோஸ் தோட்டங்களும் உள்ளன. சரஸ்வதி கோயில் ஒன்றும் உள்ளது. புத்தர் கோயில் ஒன்று பெரிதாகக் கட்டப்பட்டு வருகிறது.



முக்திநாத்துக்கு கொஞ்சகாலம் முன்னர் வரை ஹெலி காப்டர் போக்குவரத்து இருந்திருக்கிறது. தீவிர வாதப் பிரச்சினைகளால் இப்போது அந்த வசதி இல்லை. இப்போது ஜீப்பில் மட்டுமே செல்லமுடிகிறது. பெரியதும் சிறியதுமான உருண்டைக்கற்கள் பரவிக் கிடக் கின்றன. அதைப் பாதை என்றே கூறமுடியாது. அப்படி ஒரு வழி வளைந்து வளைந்து உயரமான மலையின் மீது போகிறது. வழியின் ஓரங்களில் பாதுகாப்புச்சுவர் இல்லை. பயங்கரமான பள்ளத்தாக்கின் விளிம்பில் ஜீப்பின் டயர் சுழல்கிறது. ஆனால் வேகத்தைக் குறைக்காமல் அனாயச மாக டிரைவர் ஓட்டுகிறார். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்காரவேண்டி இருக்கிறது. இப்போதைக்கு முக்திநாத் செல்ல வேறு வழியில்லை. நிறைய மேலைநாட்டு மலை ஏற்றக் குழுவினர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.நடப்பது ஒரு வகையில் பாதுகாப்பானது என்றாலும் அவ்வளவு தூரம் போக நம்மால் முடியாதே. ஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது.


வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு வேகமாக கரை புரண்டு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன. பின்னர் முக்திநாத்தின் அடிவாரத்தை 11.30 மணிக்கு அடைந்தோம்.அங்கு தமிழ்நாட்டு மடம், இராமானுஜர் மடம் இருக்கிறது.




பிறகு மலையில் அரைமணி நேரம் மலைஏற வேண்டும். படிகள் நிறைய உள்ளன. மேலே ஏறிச்சென்றால் அங்கே முக்திநாத் கோயிலின் வளாக வாயில் உள்ளது. அதனுள்ளே கொஞ்சதூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம். முக்திநாத் கோயில் மிகவும் சிறியது.திருமால் தலம். கோயிலின் முன்னர் இரண்டு சிறிய திருக்குளங்கள் தொட்டிகள் போல உள்ளன. மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந் தாலே இதில் நீராடலாம். ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா, சரஸவதி என்று அங்குள்ள பூசாரிணி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது.. இங்கு மூலஸ்தானத்தின் உள்ளேயே சென்று வழிபடலாம். உள்ளே சென்று வழிபட்டோம். கோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரிணி ‘போங்க,போங்க’ என்று அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , திருப்பதியைப் போல.அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை. வெளியே நம்மூர் போல அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன.. சிறிய யாக சாலை உள்ளது. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. பக்தர்கள் நேர்ந்து கட்டிய மணிகள் அதிலும் நீராடலாம். நாங்கள் அதில் நீரைச்சேகரித்து தலையில் தெளித்துக் கொண்டோம். 108 திவ்ய தேசங்களில் இது 70 ஆவது ஆகும்.இத்திருக் கோயில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெரியாழ்வார் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். ‘பாலைக்கறந்து அடுப்பேறவைத்துப் பல்வளையாள் என்மகளிருப்ப மேலையகத்தே நெருப்புவேண்டிசென்று இறைப்பொழுது அங்கேபேசி நின்றேன் சாளக்கிராமம் உடையநம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான் ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்’ என்று ஒருபாடலில் போற்றியுள்ளார். திருமங்கையாழ்வார், ஐந்தாம் திருமொழியில் 10 பாடல்கள் பாடியுள்ளார். ’கலையும்கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான்வென்றிச் செருக்களத்து மலைகொண்டு அலைநீர் அணைகட்டி மதிள்நீரிலங்கை வாளரக்கர் தலைவன் தலைபத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே’ என்று அவர் பாடியுள்ளார ஸ்ரீ இராமானுஜரும் இத்தலத்தைப் போற்றியுள்ளார். அவர் இங்கு சில காலம் தங்கியிருந்தார் என்று கூறுகின்றனர். கோயில் விவரம்: சக்கர தீர்த்தம்,கண்டகி தீர்த்தம் கனக விமானம் ஸ்ரீ மூர்த்தி – அமர்ந்த திருக்கோலம் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி-நின்ற திருக்கோலம் இக்கோயிலுக்கு அருகில் சற்றுக் கீழாக ஜ்வாலாமுகி கோயில் உள்ளது சிறிய கோயில். மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு வண்ணப் பொம்மை அமைந்துள்ளது. இங்கே மூலஸ்தானத்தின் கீழ் படிகள் இறங்கிச் செல்கின்றன. அதில் இறங்கிச்சென்றால் சுவரில் ஒரு சதுரசன்னல் சிறியதாக இருககிறது. அதனுள் பார்த்தால் ஒரு நீல நிற ஜ்வாலை தெரிகிறது. அம்பிகை இங்கு ஒளி வடிவில் ஜ்வாலையாக விளங்குகிறாள். தரிசித்தோம். பின்னர் மலையை விட்டுக் கீழே இறங்கினோம். இந்த மலைப்பாதையில் படியேற முடியாதவர்களுக்காக வாடகை மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. ஒவ்வொருவராக மோட்டார்சைக்கிள்காரர் மேலே கொண்டு விடுகிறார். அதில் உட்காருபவர்கள் ஓட்டியின் வயிற்றை நன்றாக வளைத்துப் பிடித்துக் கொள்ளவேண்டும். சற்று பிசகினாலும் அவ்வளவுதான்! அடிவாரமாகிய் ராணிபௌவா என்ற சிற்றூரில் சிறுசிறு கடைகளில் சுற்றுலாப் பயணிகள் கடைகளில் பொருட்கள் வாங்கலாம்.சாளக்கிரமங்கள் விற்கப்படுகின்றன. இங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப் படும் கற்கள் கிடைக்கின்றன. நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும், புஷ்கரணியில் நீராகவும், பத்ரிநாத்தில் மலையாகவும்,ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரக மாகவும், முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம். சாளக்கிரமங்களில் வஜ்ரகிரீடம் என்ற ஒரு வகைப் பூச்சிகள் பல சுவடுகளை ஏற்படுத்துகின்றனவாம். இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது நல்லது. ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள் நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பார்கள். மலையில் இருநது கீழே இறங்கியதும் அங்கே ஒருவிடுதி யில் உணவு உண்டு, ஜீப் பிடித்து ஜொம்சொம் வந்தோம். மீண்டும் நடந்து தங்குமிடத்தை வந்து அடைந்தோம். அன்று இரவு அங்கே தங்கினோம். மறுநாள் 17.09.11 அன்று காலை ஜொம்சொம் விமான நிலையம் அடைநதோம். அன்று பனிமூட்டமாக இருநததால் விமானப்போக்குவரத்து தொடங்கத் தாமதம் ஆனது. 9 மணிக்குப் புறப்பட்டு பொகாரா வந்தோம். மீண்டும் ’ஹோட்டல் காந்திப்பூரில்’ தங்கினோம். பொக்காராவில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்களுக்குச் சென்றோம். தேவிஸ் நீர்வீழ்ச்சி பொக்காரா அருகில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. பாறைகள் இடையே புகுந்து பாய்கிறது. பேவா ஏரி(Phewa lake) ஏரியின் ஒரு புறம் மலை மீது ஒரு புத்த பகோடா தெரிகிறது. ‘உலக அமைதி பகோடா’ (World Peace Pakoda) என்பது அதன் பெயர் என்று கூறுகிறார்கள் வராகி கோயில் பேவா ஏரியின் நடுவில் வராஹி கோயில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த அழகிய இடத்தில் இருக்கிறது.விநாயகருக்குத் தனியாக சிறிய கோயில் உள்ளது. படகு சவாரி செய்து அங்கு சென்று வருவது மகிழ்ச்சியான அனுபவம். விந்த்யா வாசினி திருக்கோயில் (Vindhyavaasinee temple,pokhara) பொக்காராவில் விந்தியாவாசினி திருக்கோயிலுக்குச் சென்றோம். அக்கோயில் ஒரு சிறிய மலைமீது உள்ளது. முக்கிய தெய்வமாக விந்தியாவாசினி என்னும் தேவி விளங்குகிறாள். கணேஷ் ஆஞ்சநேயர், இராதாகிருஷணன், சிவபெருமான் , நவக்கிரகம், ஆகியோருககு சந்நிதிகள் உள்ளன. இத்திருக்கோயில் அருகிலேயே ஒரு புத்தர் கோயில் உள்ளது. அன்று பொக்காராவில் தங்கினோம். இரவு முழுதும் நல்ல மழை பெய்தது. மறுநாள் 20.09.11 அன்று பொக்காராவில் இருந்து விமானம் மூலம் காத்மாண்டுக்குப் புறப்பட்டோம். 1+2 இருக்கை. மொத்தம் 30 இருக்கைகள் கொண்ட விமானம். ’அக்னி ஏர்’ நிறுவனத்தைச் சேர்ந்தது. 22 நிமிடப் பயணம். சன்னல் வழியே மலைச்சிகரங்கள்,பள்ளத் தாக்குகள், ஆறுகள், காடுகள், சிற்றூர்கள் ஆகிய காட்சிகளை ரசித்துக்கொண்டே காத்மாண்டு வந்து சேர்ந்தோம். முக்திநாத் பயணம் இனிதாக நிறைவடைந்தது. -----------------------

61 கருத்துகள்:

  1. முக்திநாத் பயணம் சிறப்பாக இருந்தது. படங்கள் அனைத்துமே அருமையாக இருந்தது.
    பகிர்வுக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  2. //பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடு
    களைத் தொட்டுவிடுவது போல் தாவிச் தாவிச் சென்றது.//

    அடடா, பயங்கரம்.

    //வழியின் ஓரங்களில் பாதுகாப்புச்சுவர் இல்லை.பயங்கரமான பள்ளத்தாக்கின் விளிம்பில் ஜீப்பின் டயர் சுழல்கிறது. ஆனால் வேகத்தைக் குறைக்காமல் அனாயசமாக டிரைவர் ஓட்டுகிறார்.
    உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்காரவேண்டி இருக்கிறது.// இப்போதைக்கு முக்திநாத் செல்ல வேறு வழியில்லை.//

    Very Thrilling Eperience!

    //சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.//

    அழகழகான காட்சிகளுடன் அற்புதமான பயணம். வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. your article was informative and nice. It has kindled the desire to go to muktinath in me.

    பதிலளிநீக்கு
  4. your article was very informative and nice. it has kindled the desire to go to muktinath in me.

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான பயணம்.
    எங்களுக்கும் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆதி, முதலில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், ரொம்ப திகிலுட்டும் பயணம் தான்.
    இயற்கையின் அற்புதங்கள் பயத்தை போக்கி மகிழ்ச்சியை தருகிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க அமுதாகிருஷ்ணன், அற்புத பயணம் தான். வாழ்வில் மறக்க முடியாத பயணம்.
    வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க, ஜிஸ்ரீகாந்த், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    நீங்கள் அவசியம் போய் வாருங்கள்.
    எல்லோரும் போய் வரவேண்டும் என்பதற்கு தானே இந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  10. வாங்க முருகானந்தன் சார், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. படங்களுடன் பயண அனுபவத்தை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. வாசிக்க வாசிக்க ஆசை ஆசையா இருக்கு! போகக் கொடுத்து வச்சுருக்கான்னு தெரியலை. ஆனால் உங்க பதிவின் மூலமும் உங்க கேமெராக் கண் மூலமும் போய்வந்த திருப்தி கிடைச்சது என்பதே உண்மை.

    அருமை. இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. ..// அப்படி ஒரு வழி வளைந்து வளைந்து உயரமான மலையின் மீது
    போகிறது. வழியின் ஓரங்களில் பாதுகாப்புச்சுவர் இல்லை.
    பயங்கரமான பள்ளத்தாக்கின் விளிம்பில் ஜீப்பின் டயர் சுழல்கிறது. ஆனால் வேகத்தைக் குறைக்காமல் அனாயசமாக டிரைவர் ஓட்டுகிறார்.//

    History டிவி சேனலில் இந்த மாதிரியான திகைக்க வைக்கும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது அந்த டிரைவர்களில் திறமை கண்டு அடிக்கடி வியப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  14. //‘பாலைக்கறந்து அடுப்பேறவைத்துப்
    பல்வளையாள் என்மகளிருப்ப
    மேலையகத்தே நெருப்புவேண்டிசென்று
    இறைப்பொழுது அங்கேபேசி நின்றேன்
    சாளக்கிராமம் உடையநம்பி
    சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
    ஆலைக்கரும்பின் மொழியனைய
    அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்’//

    பெரியாழ்வார் ஒரு குட்டிக் கதையையே சொல்லியிருக்கிறாரே!

    பதிலளிநீக்கு
  15. // இங்கே மூலஸ்தானத்தின் கீழ்
    படிகள் இறங்கிச் செல்கின்றன. அதில் இறங்கிச்சென்றால்
    சுவரில் ஒரு சதுரசன்னல் சிறியதாக இருககிறது. அதனுள்
    பார்த்தால் ஒரு நீல நிற ஜ்வாலை தெரிகிறது. அம்பிகை
    இங்கு ஒளி வடிவில் ஜ்வாலையாக விளங்குகிறாள். //

    எல்லாமே சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்!

    பதிலளிநீக்கு
  16. அழகழகான திருத்தல யாத்திரைகளுக்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு அனந்த கோடி வந்தனங்கள்!

    பதிலளிநீக்கு
  17. வாங்க துளசி கோபால், உங்கள் பாரட்டுக்கு மிகவும் மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கு நன்றி.
    அடுத்தமுறை வந்தால் போய் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. History டிவி சேனலில் இந்த மாதிரியான திகைக்க வைக்கும் காட்சிகளைப் பார்க்கும் பொழுது அந்த டிரைவர்களில் திறமை கண்டு அடிக்கடி வியப்பதுண்டு.//

    வாங்க ஜீவி சார்,நீங்கள் சொல்வது உண்மை. நாங்களும் அவர் திறமையை பாரட்டினோம், எங்களை பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்ததற்கு.

    பெரியாழ்வார் அந்த பாடலில் நீங்கள் சொல்வது போல் கண்ணனின் குறும்பை குட்டி கதையாய் சொல்லிவிட்டார்.

    சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் தான்.

    நீங்கள் விரிவான பின்னூட்டங்கள் அளித்து உற்சாகப் படுத்தியதற்கு மிக மிக நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  20. அற்புதமான பயணத்தின் அனுபவங்களையும் நேர்த்தியான காட்சிகளுடன் எங்களை அந்த இடத்திற்கே அழைத்து சென்ற உங்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை அளிக்கிறோம்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் மேடம். வலைச்சரத்தில் தங்கள் பதிவின் அறிமுகம் பார்த்து பதிவிற்கு வந்தேன்.

    மிகவும் அற்புதமாக முக்திநாத் யாத்திரை பற்றி எழுதியிருக்கீங்க.படங்கள் அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. வாங்க சம்பத்குமார், வலைச்சரத்தில் என் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க பழனி. கந்தசாமி, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கோவை மு. சரளா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க RAMVI, உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நாங்கள் 2008ல் முக்திநாத் யாத்திரை சென்றுவந்தோம். முழுவதும் நினைவுகூறும்படியான பதிவு இது. முழுவதும் படித்தேன். படங்கள் சிறப்பு.

    நாங்கள் பொகாராவில் தங்கி, நேரேக முக்திநாத்துக்கு ஹெலிகாப்டரில் பயணித்தோம். பயமுறுத்தக்கூடிய பயணம். முக்திநாத்தில் இருபது நிமிடங்கள். பிறகு பொகாரா திரும்பினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      நான் நேற்று பழைய பதிவை படித்துக் கொண்டு இருந்தேன், சார் கூட்டி போன இடங்களையும் அவர்களையும் நினைத்து கொண்டு இருந்தேன். இது நான் நினைக்கவில்லை பதிவாகி இருக்கும் என்று . இன்று பறவைகள் பதிவுக்கு ஏதாவது பின்னூட்டம் வந்து இருக்கா என்று பார்க்கும் போதுதான் வெளியான விவரமே தெரிகிறது.

      பொகாராவில் நிறைய படங்கள் , முக்திநாத் விமானபயணத்தில் நிறைய படங்கள் எடுத்தோம் . நாங்கள் போன போது ஹெலிகாப்டர் சேவை இல்லை.

      நீக்கு
  28. அன்பின் கோமதி,
    வாழ்க வளமுடன்.

    நேற்று கேதார் நாத் பயணம்+ கோவில் தரிசனம்
    எல்லாம் பேரன்
    வர்ச்சுவல் ரியாலிட்டியில் போட்டுக் கொடுத்தான்.
    அப்படியொரு அதிசயமாக இருந்தது.

    இன்று முக்தி நாத் தரிசனம் உங்கள் தயவால்
    கிடைக்கிறது.
    எத்தனை படங்கள்!!! எத்தனை விவரங்கள் மா.
    கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்துப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா , வாழ்க வளமுடன்
      தவறாக பதிவாகி இருக்கிறது.நீங்கள் முன்பு படிக்கவில்லை என்றுதான் அது பதிவாகி உள்ளது போலும் அக்கா.
      கயிலை பயணமும் முக்தி நாத் பயணமும் ஒன்றாக போனதால் பயணக்கட்டுரை விரைவாக முடிக்கும் படி ஆனது.
      பெரிய பதிவாக ஆகி விட்டது. பிரித்து பிரித்து இரண்டு மூன்று பதிவாக போட்டு இருக்கலாம்.

      நீக்கு
  29. இதற்கு முன்னும் பயணப் பதிவுகள் வந்திருக்க வேண்டும்.

    அந்த சமயம் நான் எங்கிருந்தேனோ!!
    சிறு விமானம், மலை முகடுகளுக்கு மேலே பயணம்
    என்னும் போது பயங்கரக் குளிராக இருக்கும் என்று நினைத்தேன்.

    எல்லோர் உடையைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
    ஜீப் பயணமாகட்டும்,இல்லை படியேறுதல்
    ஆகட்டும் மிகக் கடினமாகத் தெரிகிறது.

    எப்படியோ சமாளித்துப் போய் வந்திருக்கிறீர்கள்.
    சிரமம் இல்லாமல் ஸ்வாமி தரிசனம் ஏது?

    கண்டகி ஆறு படத்தில் பார்க்க அருமை.
    பயணிக்கும் போது நடுக்கமாகத்தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முந்திய பதிவு திருக்கயிலை யாத்திரை பதிவுகள் அக்கா.

      சிறு விமானத்தில் போன படங்கள் நிறைய இருக்கிறது அதை இன்னொரு நாள் தனியாக போடுகிறேன்.

      திருக்கயிலை குளிரை அனுபவித்து வந்தோம், அப்புறம் நீண்ட தூரம் நடந்து வந்ததில் குளிர் குறைந்து விட்டது. சொட்டர் கயில் வைத்து இருப்பேன். சில இடங்களில் போட்டு இருப்பேன்.
      இறைவன் அருளால் தரிசனம் செய்து வந்தோம். காட்மண்டுவில் பயங்கர நிலநடுக்கத்திலிருந்து இறைவன் காப்பாற்றினார். இப்போது நினைத்தாலும் அச்சம் ஏற்படுத்தும்.

      கண்டகி ஆறு படகு பயணம் பயமாக இருக்கும் நாங்கள் பயணிக்கவில்லை.

      நீக்கு
  30. முக்தி நாத் கோயில் மணியும் ,குளங்களும், கோமுக
    நீர் நிலைகளும் அருமை.

    இவை எல்லாம் தூர்தர்ஷன் படைப்புகளாகப்
    பார்த்திருக்கிறோம். உங்களுக்கு நேரே செல்லும்
    புண்ணியம் கிடைத்திருக்கிறது மிக அருமை.
    வைணவப் பெரியார் இராமானுஜர் நிறுவிய கோயில் என்றால்
    எத்தனை பெருமை தமிழர்களுக்கு.
    அதுவும் கோயில் படிகளில் இறங்கி
    ஜ்வாலா ரூபாமாகத் தாயை தரிசனம் செய்வது நினைத்தாளே மெய் சிலிர்க்கிறது.

    மிக அழகான அருவி, படகுப் பயணம்
    என்று எத்தனை அனுபவங்கள். அத்தனையையும்
    குறித்து வைத்துக் கொண்டு
    சிறப்பாகப் பதிவிட்டுள்ளீர்கள் அன்பு கோமதிமா.
    மீண்டும் படங்களைப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முக்தி நாத் கோயில் மணியும் ,குளங்களும், கோமுக
      நீர் நிலைகளும் அருமை.//
      ஆமாம் அக்கா. பார்க்க பார்க்க பரவசம் தந்த இடங்கள்.

      //நேரே செல்லும்
      புண்ணியம் கிடைத்திருக்கிறது மிக அருமை.//

      என் கணவரால் இந்த புண்ணியம் கிடைத்தது எனக்கு. இன்னும் நிறைய இடங்கள் கூட்டி போவதாக சொன்னார்கள், கோரோனா காலத்தில் வீட்டில் முடங்கும் படி ஆகி விட்டது. கோவில்களுக்கு போய் கொண்டே இருந்து இருந்தால் மகிழ்ச்சியாக மேலும் சில வருடங்கள் இருந்து இருப்பார்கள் போலும்.
      படங்கள் அப்போதுதான் பதிவு செய்ய பழகியதால் சின்னதாக போட்டு இருக்கிறேன்.


      நீக்கு
  31. அப்போது பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் இட்ட
    ரமா ரவி இப்போது உறவினர் ஆகிவிட்டார்.
    அவரிடம் சொல்கிறேன்.

    சாளக்ராமங்கள் பார்த்து வாங்க வேண்டும்.
    குடும்பத்துக்குப் பாதுகாப்புத் தரும் வடிவங்கள் தான்
    வாங்க வேண்டும்.
    அதை சரியாகப் பூஜையும் செய்ய வேண்டும்.
    பெரிய பொறுப்பு அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமாரவி மகளுக்கு இப்போது திருமணம் நடந்தது, அதில் உறவினர் ஆகி விட்டாரா?
      பழைய பதிவுகளுக்கு வருவார். இப்போது முகநூலில் என்ன பதிவு போட்டாலும் வந்து விடுவார்.

      வாங்கும் போதுதான் அது பார்த்து வாங்க வேண்டும் கண்டகி நதியிலிருந்து எடுத்தால் பார்க்க வேண்டாம் ஒன்றும் என்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  32. மீள்பதிவா?  எக்கச்சக்கப்  படங்கள் சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மீள்பதிவு என்றால் போட்டு இருப்பேன் மீள் பதிவு என்று.

      புது டேஸ்போர்டில் மாற்றம் சில நேரம் போஸ்ட் படிக்க கிளிக் செய்யும் போது தவாறக படித்து விட்டால் இப்படி ஆகி விடுகிறது.

      இப்போது படிக்கும் போது தெரிகிறது இரண்டு மூன்று பதிவாக போட்டு இருக்கலாம் என்று. நிறைய படங்கள்தான்.

      நீக்கு
  33. கயிலாய யாத்திரை செல்லவேண்டும் என்னும் ஆவல் நீண்ட அநாட்களாக இருக்கிறது.  நிறைவேறுமா, தெரியவில்லை.  முக்திநாத் யாத்திரையும் ஆசைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் போகலாம் ஸ்ரீராம். இப்போது இன்னும் வசதிகள் இருக்கிறது.
      கால நிலை சரியானபின் போய் வாருங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  34. அருமையான, அழகான, அற்புதமான பல இடங்களைத் தரிசித்துள்ளீர்கள். எந்த வருஷம் போனீங்கனு தெரியலை. 2006 ஆம் வருடம் நாங்க போனப்போ காட்மாண்டுவில் இருந்து முக்திநாத்துக்கு நேரடியாக ஹெலிகாப்டர் சேவை. போக்ராவுக்கு எங்களை அழைத்துச் செல்லவில்லை. பயணத்திட்டத்திலும் இல்லை. மற்றபடி முக்திநாத்தில் நல்ல தரிசனம். நீங்கள் சொன்ன இடங்களை முக்திநாத்தில் நாங்களும் தரிசித்தோம். ஆனால் உடனடியாக ஹெலிகாப்டர் கிளம்பவேண்டும் என்பதால் அவசரப்படுத்தினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நாங்கள் 2011 செப்டம்பர் மாதம் பயணம் செய்தோம். திருக்கயிலை, முக்திநாத் இரண்டும் ஒரே சமயம் செய்தோம்.

      நீங்கள் எங்களுக்கு முன்பே போய் இருக்கிறீர்கள்.

      காட்மாண்டுவிலிருந்து பொக்கராவிற்கு விமானத்தில் வந்தோம். பின்பு அங்கிருந்து முக்திநாத் . அங்கிருந்து சிறு ரக விமானம். எங்களுக்கு கால நிலை சரியில்லை என்று
      ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தி விட்டார்கள். மலையேறி நிதானமாக எல்லா இடங்களும் பார்த்தோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  35. வணக்கம் சகோ
    பதிவில் அழகிய விளக்கம் படங்களும் அழகு. பயனுள்ள தகவல்களும்கூட பழைய பதிவை மீண்டும் தந்மைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      பழைய பதிவு அதுகாக பதிவாகி விட்டது. உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  36. 2012-ஆம் ஆண்டு எழுதிய இப்பதிவை இப்போது படித்து ரசித்தேன் மா. சிறப்பான பயணம். தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      முன்பு பதிவை ஆதி மட்டும் படித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
      இப்போது நீங்கள் கருத்து சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  37. இன்று இந்த அருமையான பயணத்தில் பயணித்தேன்... படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நீங்களும் பயணித்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  38. பேலா ஏரி படகுச் சவாரி பயமுறும்படி இருந்தது. படகு உயரமே இரண்டடி. எல்லோரும் அமர்ந்தபின் அரை அடியில் தண்ணீர். அந்திமாலை நேரம். கரைக்கு வந்தபின் படகிலிருந்து இறங்கும்போது எங்களுடன் வந்தவர் தண்ணீரில் விழுந்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேலா ஏரி படகுச் சவாரி நாங்கள் போகவில்லை.
      நல்லவேளை இறங்குபோது விழுந்தார் எல்லோரும் பிடித்து இருப்பீர்கள்.
      உங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  39. வணக்கம் சகோதரி

    மிக மிக அழகான படங்கள், மற்றும் முக்திநாத் பயணக்கட்டுரை. இறைவனை மனமாற தரிசித்துக் கொண்டேன். படிக்க,படிக்க இங்கெல்லாம் எப்போது சென்று பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதற்காகவே உங்கள் அருமையான, விளக்கமான இந்தப் பதிவை படித்து மனதில் உள் வாங்கியபடி உள்ளேன். மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //படிக்க,படிக்க இங்கெல்லாம் எப்போது சென்று பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் வருகிறது.//

      இறைவன் நினைத்தால் சாத்தியப்படுத்துவான். பார்க்கலாம் எல்லோரும் எப்போது வேண்டுமென்றாலும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  40. கோமதிக்கா பழைய பதிவா!? என்றாலும் நான் இப்போதுதான் வாசிக்கிறேன். அருமையான இடம் அக்கா...அழகான இடம். உங்கள் படங்கள் எல்லாம் செம....

    இந்த இடம் போக வேண்டும் என்ற ஆசை உண்டு கைலாயம் மற்றும் இது.

    இயற்கையும் ஆன்மீகமும் ஒன்றறக்கலந்தது தனே! இயற்கையே ஆன்மீகம்தான்!

    நீங்களும் மாமாவும் சென்று வந்தது சந்தோஷமான விஷயம். இப்போதும் பசுமையாக இருக்கும் இல்லையா?!


    நம் வீட்டில் பலரும் போய் வந்திருக்கிறார்கள். ஹெலிகாப்டர். இவர்கள் ஏறும் முன் சென்ற ஹெலிகாப்டரில் எங்கள் குடும்பக் குழுவினரில் இருந்த எங்கள் சின்ன மாமியாரை ஏறச் சொன்னார்களாம் ஆனால் தனியாக அதில் மாட்டேன் குடும்பத்தினருடன் தான்வருவேன் என்று சொல்லி குடும்பத்தினரும் அவரை விட வில்லை தனியாக. ஆனால் பாருங்கள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் சென்ற எல்லாரும் போய்விட்டனர்.

    என் நாத்தனார் சென்ற போது ஜீப் அல்லது குதிரை. ஜீப்பில் இடம் இல்லாததால் குதிரையில் நீங்கள் சொல்லியிருப்பது போல்...ஆற்றைக் கடந்து சென்றது எல்லாம் ரொம்ப த்ரில்லிங்க் என்றார்.

    பல அனுபவங்கள் பகிர்ந்தார்.

    உங்கள் பதிவையும் ரசித்தேன் படங்கள் பார்த்ததும் போக எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றியது

    நேபால் சைடில் உணவு கொஞ்சம் காரமாகத்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டதுண்டு...குறிப்புகளும் அறிந்ததுண்டு..மகனுடன் பூட்டான் பையன்கள் படித்தார்கள் பூட்டான் உணவும்... நல்ல காரமாக இருக்கும்

    நம் வீட்டுக் குடும்பத்தினர் சென்ற போது குழுவிலேயே கூடவே சமையல்காரரும் சென்றார்கள். இக்குழு வெளியில் சாப்பிடாத குழு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் வாழ்க வளமுடன்

      //பழைய பதிவா!? என்றாலும் நான் இப்போதுதான் வாசிக்கிறேன். அருமையான இடம் அக்கா...அழகான இடம். உங்கள் படங்கள் எல்லாம் செம....//

      ஆமாம் கீதா, பழைய பதிவு. நீங்கள் படிக்க அது பதிவாகி இருக்கிறது போல.!


      இந்த இடம் போக வேண்டும் என்ற ஆசை உண்டு கைலாயம் மற்றும் இது.//

      போகலாம் கீதா .

      //இயற்கையும் ஆன்மீகமும் ஒன்றறக்கலந்தது தனே! இயற்கையே ஆன்மீகம்தான்!//

      ஆமாம் கீதா . இயற்கை வழிபாடுதான் இறைவனும் இந்த மாதிரி இடங்களில் குடி கொண்டு நம்மை அழைக்கிறார்.

      //நீங்களும் மாமாவும் சென்று வந்தது சந்தோஷமான விஷயம். இப்போதும் பசுமையாக இருக்கும் இல்லையா?!//
      நினைவுகளுடன் வாழத்தான் படித்து கொண்டு இருந்தேன் கீதா. நினைவுகள் பசுமையாக என்றும் மனதில் இருக்கும்.

      //மாமியாரை ஏறச் சொன்னார்களாம் ஆனால் தனியாக அதில் மாட்டேன் குடும்பத்தினருடன் தான்வருவேன் என்று சொல்லி குடும்பத்தினரும் அவரை விட வில்லை தனியாக. ஆனால் பாருங்கள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் சென்ற எல்லாரும் போய்விட்டனர்.//

      இறையருள்தான் மாமியாரை காப்பாற்றி இருக்கிறது.

      மலை பகுதி யில் குதிரை சவாரி, பைக் சவாரி ஆற்றை கடக்க வேண்டாம். கீழே ஆறு ஓடும் நாம் மேலே ஒற்றையடி பாதையை போல இருக்கும் பாதையில் பயணம் செய்வோம்.(பள்ளத்தாக்கு விளிம்புகளை கொண்ட பாதை)

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.




      நீக்கு
  41. படங்களும் பயண விவரங்களும் அருமை
    நேரில் சென்று வந்த உணர்வு
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு