சின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி
பேரன் கட்டிய வீடு. மேல் கூரை போட்டால் உள்ளே இருப்பதை காட்ட முடியாது என்று இப்படி மேல் கூரை இல்லா வீடு. குழந்தைகள் உலகத்தில் நம்மை சேர்த்துக் கொண்டார்கள் என்றால் அது ஆனந்தம் தான்.சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்து இருப்போம் . பாட்டில் வருவது போல் பேரனுடன் அவன் கற்பனை விளையாட்டில் கவலைகளை மறந்து களித்து இருக்கிறேன்.
கொரோனா காலம் என்பதால் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் போனில்தான் உரையாடல். யாரும் யார் வீட்டுக்கும் போவது இல்லை ,அதனால் குழந்தை தன் வீட்டுக்கு நண்பர்களை வரவழைத்து பேசுவதாய் கற்பனை விளையாட்டு விளையாடுகிறான். வளர்ப்பு செல்லங்களுடன் வீட்டுக்கு வருகை புரிந்து இருக்கிறார்கள் நண்பர்கள், பெரிய நாய், குட்டி நாய், பூனை எல்லாம் இடம் பெற்று இருக்கிறது.
ரோபோ மனிதன், துப்பாக்கி சுடும் இயந்திரம், பஸ்ஸ்டாப், ஹெலிகாப்டர், கருடன் போல் வாகனம், சின்ன தீயணைப்பு வண்டி, காப்பி விற்கும் தள்ளு வண்டி,
ஹெலிகாப்டர்
பெரிய முட்டையில் அவனுக்கு சில விளையாட்டு பொம்மைகள் பரிசு அவன் பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் சின்னதாக வாங்கி மறைத்து வைத்து இருந்தாள் மருமகள்.
அதீஸ் பேலஸில் ஈஸ்டர் முட்டையும், அழகான கூடையும் செய்து இருந்தார். முட்டை வைக்கும் கூடை மிக அருமையாக செய்து இருந்தார் கூடைக்குள் குருவி முட்டை செய்து வைத்து இருந்தார் அழகு.
கதை கேட்கும் பழக்கம் இல்லை அவனுக்கு, அவன் விளையாட்டு பொம்மைகளை வைத்து பல கதைகள் நமக்கு சொல்வான் . பாட்டி கதை போல் அவன் கதையிலும் கெட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இரண்டு கோட்டைகளுக்கு நடுவில் பாலம் அமைப்பான் , போர் வியூகங்கள் நன்றாக அமைப்பான்.
படையை நடத்தி செல்லும் கவின் முன்னால் போய் கொண்டு இருக்கிறான்.
கப்பல்படையை அவன் ஆச்சி வழி நடத்தி செல்கிறாள்.அந்தக் காலத்தில் பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை கதாபாத்திரம் ஆக்கி கதை சொல்வார்கள். பஞ்சதந்திர கதைகள், காக்கா நரி கதை, கொக்கு நரி கதை, குரங்கு முதலை கதைகள் என்று எத்தனை எத்தனை கதைகள் சொல்லி இருப்போம் நாம், நம் பாட்டியிடம் கேட்டு இருப்போம்.
குழந்தை உலகம் என்ற கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதியதை படித்து பாருங்கள் நேரம் இருந்தால் எத்தனை பாடல், எத்தனை குழந்தை விளையாட்டு! நிறைய பேர் படித்து இருப்பீர்கள். படிக்காதவர்கள் படித்து பாருங்கள் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வினா, விடை மூலமும் நிறைய சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
நிறைய தாலட்டு பாடல், விளையாட்டு பாடல், நிலா பாடல் மற்றும் மழை காலத்தில் வெளியில் போய் விளையாட முடியாது. அப்போது வீட்டிலிருந்து விளையாட விளையாட்டுக்கள். நாம் சிறு வயதில் நிறைய விளையாடி இருக்கிறோம்.
இந்த புத்தகத்தை படித்துப் பார்த்தால் விளையாடிய விளையாட்டுக்கள் நினைவுக்கு வரும்.
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
குழந்தை பாட்டு கேளுங்கள் மகிழ்ச்சியாக சிரிக்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
----------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம்..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்!..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குவாழ்க வையகம் வாழ்க வளமுடன்
சற்று பொறுத்து வருகின்றேன்...
பதிலளிநீக்குவாங்க
நீக்குதலைப்பைப் படிக்கும்போதே மனம் பாட்டாய்ப் பாடுகிறது!
பதிலளிநீக்குகட்டுப்பாட்டுக்காலத்தில் கூடி விளையாடமுடியாமல் குழந்தைகள் தவிப்பது வருத்தம் அளிக்கும் நிகழ்வு. ஆனால் கவினுக்கு இருக்கும் கற்பனை வளத்தில் இதெல்லாம் கவினை பாதிப்பிப்பதில்லை என்று தெரிகிறது. பாராட்டுகள்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஅந்த பாட்டு பழைய பாட்டு நன்றாக இருக்கும். அந்த பாடல் கிடைக்கவில்லை.
கவினுக்கு தன் நண்பர்கள் வீடு சென்று விளையாட முடியாமல் இருப்பது வருத்தம். நாள்தோறும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். சில நண்பர்களுடன் வீடியொவில் பேசுகிறான் தினம். அந்த பாட்டியுடன் பேசுகிறான் காலை அவர்களுடன் விளையாடுகிறான், அப்புறம் என்னுடன், அப்புறம் அவன் பாடம், பாட்டு வகுப்பு என்று பொழுதுகள் போகிறது. பாராட்டுக்களுக்கு நன்றி.
ஆம் அந்தக் காலத்தில் சின்னச்சின்ன விளையாட்டுகள் மூலமும் சில சிறிய விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிய வைத்தார்கள். இப்போது எல்லாம் போச்! இப்போதைய விளையாட்டுகளில் வன்முறையும் பகைமையும்தான் மேலோங்குகிறது.
பதிலளிநீக்குஇவன் விளையாட்டிலும் துப்பாக்கி சூடு, பூகம்பம், எரிமலை வெடிப்பு, சுனாமி, எல்லாம் வரும். ஏண்டா இப்படி என்றால் அதுதான் வாழ்க்கை என்பான்.
நீக்குவிலங்குகள் சண்டையிடும் அப்புறம் ஒற்றுமையாக இருக்கும் விலங்குகள் பண்ணை அமைப்பான் அவற்றிற்கு தண்ணீரும் , உணவும் அளிப்பான். அந்த படங்கள் இருக்கிறது. அவைகளுக்கு பள்ளிக்கூடம் நடக்கும்.
// ஏண்டா இப்படி என்றால் அதுதான் வாழ்க்கை என்பான் //
நீக்குஅம்மாடி...!
// விலங்குகள் பண்ணை அமைப்பான் அவற்றிற்கு தண்ணீரும் , உணவும் அளிப்பான். அந்த படங்கள் இருக்கிறது. அவைகளுக்கு பள்ளிக்கூடம் நடக்கும்.//
அருமையான வளர்ப்பு.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குதினம் "ஆச்சி வாழ்க்கை என்றால் என்ன' கேள்வி கேட்காமல் இருக்க மாட்டான்.
அவன் தாத்தா ஞானி, அவன் அப்பாவும் அப்படித்தான் அப்புறம் மகன் எப்படி இருப்பான்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வாட்சாப் பகிர்வு வார்த்தைகள் நன்றாய் இருக்கின்றன. வாழ்வியலை போதிக்கின்றன. சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் - கைதி கண்ணாயிரம் படமே சுவாரஸ்யமான படம். இதே சிறுவன்தானே ஜெமினி சாவித்ரி படம் ஒன்றிலும் "என் அப்பா மஹாகனம்பொருந்திய ஸ்ரீமான் ..." என்று ஒரு பெயர் சொல்லுங்கான்? ஜெமினி பதறுவார். படத்தில் அவர் பெயர்தான் அது.
பதிலளிநீக்குநன்றாக இருக்கும் வாட்சாப் பகிர்வை எடுத்து வைத்து கொள்கிறேன். என் அத்தை பெண் என் அண்ணா பையன் மிக அருமையாக தினம் அனுப்புவார்கள்.
நீக்கு//கைதி கண்ணாயிரம் படமே சுவாரஸ்யமான படம். இதே சிறுவன்தானே ஜெமினி சாவித்ரி படம் ஒன்றிலும் "என் அப்பா மஹாகனம்பொருந்திய ஸ்ரீமான் ..." என்று ஒரு பெயர் சொல்லுங்கான்? ஜெமினி பதறுவார். படத்தில் அவர் பெயர்தான் அது.//
பெண் குழந்தை பெயர் ஜான்சி ராணி. கைதி கண்ணாயிரத்தில் கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் பாட்டு நன்றாக இருக்கும் அதற்கு பள்ளியில் நடனம் ஆடி இருக்கிறேன்.
சின்ன குழந்தைக்கு தைரியத்தை வரவழைக்கும் பாடல்.
யார் பையன் படம் மஹாகனம்பொருந்திய ஸ்ரீமான் என்று சொல்வது நல்ல சிரிப்பு படம்.
கலைவாணர், மதுரம் நகைச்சுவை காட்சி அருமையாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்கு"யார் பையன்" படத்தில் நடித்த குழந்தை டெய்சி இரானி. வல்லி அக்கா சரியாக சொல்லி விட்டார்கள். "கைதி கண்ணாயிரம் "படத்தில் நடித்த குழந்தை மாஸ்டர் ஸ்ரீதர் என்று போட்டு இருக்கிறது ஸ்ரீராம்.
நீக்குஅருமையான கற்பனை வளம். அழகாகச் செய்திருக்கிறான். குழந்தையின் கைவண்ணம் அசத்துகிறது. பாட்டியும் கப்பல் படைக்குத் தலைமை தாங்கி விட்டார்கள். எல்லா இடங்களிலும் இப்படித் தான் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே விளையாடிப் பழகிக் கொண்டிருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குகற்பனை கதைகள் எழுதி இருக்கிறான் நிறைய, அதற்கு அவனே படங்கள் வரைவான்.
பாட்டி வீரம் நிறைந்தவள் அவன் கதையில். வீட்டுக்குள் விளையாடி பழகி விட்டார்கள்.
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் பாடலைப் பல ஆண்டுகள் கழித்துக் கேட்டு மகிழ்ந்தேன். "யார் பையன்!" படத்தின் பாடலோ? ஶ்ரீராம் சரியாகச் சொல்லுவார் என நம்புகிறேன் பாடலை முழுவதும் கேட்டேன்.
பதிலளிநீக்குசுண்டெலிக்கும் திருமணம் பாடல் கைதி கண்ணாயிரம். ஸ்ரீராம் சொல்லி விட்டார்.
நீக்குயார்பையன் படத்தில் நடித்த சிறுமிதான் இதிலும் பையனாக நடித்து இருப்பார்.
மகளுக்கு இப்போது எப்படி இருக்கிறது உடல் நலம்?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பெயரன் கவினுக்கு கற்பனை வளம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமேற்கூரையை கண்ணாடி பேப்பர்களில் அமைத்து இருக்கலாம்.
பெயரனுடன் மகிழ்ந்து விளையாடுங்கள் இதை இறைவன் "எல்லோருக்கும்" கொடுப்பதில்லை அதன் காரணம் இறைவனே அறிவான். நமது அறிவுக்கு புலப்படாது.
தங்களுக்கு தொடர்ந்து கிடைத்திட எமது உண்மையான பிரார்த்தனைகள்.
படங்களை எடுத்த கோணங்கள் அருமை மீண்டும் வாழ்த்துகளுடன்....
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குமேற்கூரையை அப்புறம் அமைத்து மூடி விடுவான். அந்த மாதிரி வீடு கட்டிய படம் முன்பு போட்டு இருக்கிறேன். மேல் தளம், கீழ்தளம் எல்லாம் அமைத்து இருந்தான் . தேடி எடுத்து இன்னொரு முறை போடுகிறேன். உள்ளே ஒவ்வொரு அறையிலும் இருப்பவர் யார் யார் என்று சொல்லும் காணொளி எடுத்தான், அதையும் போடவில்லை. இன்னொரு முறைதான்.
ஊரில் நானும் அவர்களும் ஸ்கைப்பில் விளையாடினோம். போன முறை இங்கு வந்த போது இருவரும் சேர்ந்து விளையாடினோம். அவர்கள் இப்போது இல்லையே ஜி. அதுவும் இறைவன் திருவுள்ளம் தான். பேரன்கள், பேத்தி அடிக்கடி வரும் தூரத்தில் இல்லை.நாமும் அடிக்கடி இங்கு வர முடியாது. கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதுதான்.
நீங்கள் விளையடலாம் பேத்தியுடன் நானும் பிரார்த்தனை செய்கிறேன். போய் வாருங்கள் மகன் வீட்டுக்கு போய் பேத்தியுடன் விளையாடுங்கள்.
உங்கள் பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கும் நன்றி.
அருமை.குழந்தைகளோடு குழந்தைகளாக இணையும் பக்குவம் அறிந்தவர்கள் சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்கிறார்கள்.படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
நீக்கு//குழந்தைகளாக இணையும் பக்குவம் அறிந்தவர்கள் சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்கிறார்கள்//
குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுவது பிடித்தமான பொழுது போக்கு எனக்கு. அக்கம் பக்கத்து குழந்தைகள் எங்கள் வீட்டில் என்னுடன் விளையாட, கதை கேட்க வருவார்கள்.
அவர்கள் வளர்ந்து திருமணம் ஆகி வேறு வேறு ஊரில் இருக்கிறார்கள். என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடும் நேரம் சொர்க்கம் தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
சின்னச் சின்ன விளையாட்டுகள் மகிழ்ச்சி தருபவை. குழந்தைகளுடன் விளையாடும் சமயத்தில் நாமும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ் வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான்.
சின்ன சின்ன விளையாட்டுக்கள் மகிழ்ச்சியை தருகிறது.
இப்போது ஆன்லைன் வகுப்புகள், வீட்டுப்பாடம் இவற்றால் விளையாட நேரம் குறைவாய் கிடைக்கிறது. தினம் தினம் விளையாடிய விளையாட்டுக்களின் தொகுப்பு இது.
குழந்தையாக மாறிவிடுவது மகிழ்ச்சியை தருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான விளையாட்டு... கவினுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஎன்றும் குழந்தையாக வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றாது தான்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகவினுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
என்றும் குழந்தையாக வாழ்த்துவிட்டால் துன்பம் தோன்றாது என்பது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதி,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
எத்தனை வண்ணங்கள். எத்தனை பொம்மைகள். அழகான அமைப்புடன்
இப்படி விளையாடும் திறன் எவ்வளவு பெரிய பொக்கிஷம். கவினுக்கு
என் அன்பு அணைப்புகளும் பாராட்டுகளும்.
அவன் திறமைகளை எடுத்துக் காட்ட பாட்டி
வந்தது அவனது பெரிய பாக்கியம்.
மிகத் திறனாகக் கட்டமைப்பட்ட வீடு.
அவனது திறமையைத் தூண்டும் விதம் பெற்றோர்
அவனுக்கு லெகோ துண்டுகள் வாங்கிக் கொடுத்திருப்பதும்
பாட்டி அவனுடன் விளையாடுவதும்தான்
மனதில் ரம்யத்தை தூண்டுகிறது.
எங்கள் ஸ்விஸ் பேரன் தான் இப்போது லெகோ ஆட்சி நடத்துகிறான்.
இங்கே இவர்கள் வளர்ந்து வேற விளையாட்டுகளுக்குப்
போயாகி விட்டது.
குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கம்.
நம் கவலைகளை மறக்க கடவுள் அனுப்பிய
மாற்று மருந்து அவர்கள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குசிறு வயதில் வாங்கி கொடுத்தவை, பிறந்தநாள் பரிசுகளாக வந்தவை. என்று பொம்மைகளை பத்திரமாக வைத்து இருக்கிறான்.
//கவினுக்கு
என் அன்பு அணைப்புகளும் பாராட்டுகளும்.//
நன்றி அக்கா. இப்படி தனியாக விளையாடும் பண்பு அவன் அப்பாவிடமிருந்து வந்து இருக்கிறது. விளையாட ஆள் இல்லையென்றால் தானே எல்லா பாத்திரமாக நடித்து கதை சொல்லி விளையாடுவான் மகன் சிறு வயதில்.
பாட்டி முன்பு அக்கம் பக்க்கத்தில் தன் பேரனைப்பற்றி சொல்லுவாள், இப்போது அவளுக்கு வலைத்தளம் கிடைத்து இருக்கிறது. காலம் வேறு விதமாக மாற்றி இருக்கிறது அக்கா, பாட்டி எப்போதும் பாட்டிதான்.
வித விதமான லெகோ வைத்து இருக்கிறான்.
ஸ்விஸ் பேரன் லெகோ ஆட்சி நடத்துவது மகிழ்ச்சி.
வளர்ந்த குழந்தைகள் வேற விளையாட்டுதானே விளையாடுவார்கள்.
//நம் கவலைகளை மறக்க கடவுள் அனுப்பிய
மாற்று மருந்து அவர்கள்.//
ஆமாம் அக்கா. அருமருத்து குழந்தைகள்.
கவின் ஈஸ்டர் முட்டைகளை எடுக்கும் காட்சி இனிமை. அதில்
பதிலளிநீக்குமருமகள் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளும் மிகவும் அருமை
என்றும் வாழ்க வளமுடன் இந்த அருமை.
கைதி கண்ணாயிரம் படத்தில் நடித்திருக்கும் குழந்தை
வேறு.
யார் பையன் படத்தில் நடித்திருப்பது டெய்சி இரானி.
அவர் தங்கை ஹனி இரானியும் சில படங்களில்
நடித்திருக்கிறார்.
தமிழ் தெரியாமலேயே இத்தனை பிரபலமான குழந்தைகள்
அற்புதம்.
இரானி பெயர் குடும்பத்துடன் டீக்கடை,இனிப்பு
கடைகள் வைத்து இருப்பவர்கள்..மும்பையிலும் பெங்களூருவிலும் பார்க்கலாம்.
நம் ஊரிலும் ஆட்டோ பார்ட்ஸ் கடைகள் வைத்திருக்கிறார்கள்.
மருமகள் சின்னதாக பொம்மைகள் பேரனுக்கு தெரியாமல் வாங்கி வைத்து இருப்பாள். மனம் சோர்ந்து பேரன் இருக்கும் போது அவனுக்கு அந்த விளையாட்டு பொருட்களை கொடுத்து மகிழ செய்வாள்.
நீக்குஇந்த ஊரில் வெளியில் தனியாக விளையாட போக முடியாது நம் ஊர் மாதிரி.
கைதி கண்ணாயிரம் படத்தில் நடித்திருக்கும் குழந்தை
வேறு.
//யார் பையன் படத்தில் நடித்திருப்பது டெய்சி இரானி.
அவர் தங்கை ஹனி இரானியும் சில படங்களில்
நடித்திருக்கிறார்.//
நினைவுகளில் இருந்த டெய்சி இரானி எப்படி ஜானசி ஆனாள் என்று தெரியவில்லை.
கைதி கண்ணாயிரம் நடித்த பையன் மாஸ்டர் ஸ்ரீதர் என்று போட்டு இருக்கிறது.
தமிழ் தெரியாத குழந்தைகள் நன்றாக நடித்தது ஒரு பெரிய விஷயம் தான்.
இரானி குடும்ப பெயர் தெரிந்து கொண்டேன்.
சின்னச் சின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி;;;;;
பதிலளிநீக்குஅப்பாடி எவ்வளவு பழைய பாடல்!!!!!!
சுண்டெலிக்குக் கல்யாணம் அனேகமாக
பள்ளிகளில் எல்லாவிழாக்களில்
சிறுமிகள் ஆடும் காட்சி வந்துபோகிறது.
நீங்களும் ஆடி இருப்பது மிகவும் இனிய நினைவும்மா.
சின்ன சின்ன வீடு கட்டி பாட்டு மிகவும் பிடிக்கும். ஆற்றோரம் மணல் எடுத்து அழ அழகாய் வீடு கட்டி பாட்டும் பிடிக்கும். குழந்தைகள் மணலில் வீடு கட்டி விளையாடும் பாடல்கள் நன்றாக் இருக்கும்.
நீக்குசுண்டெலிக் கல்யாணம் பாட்டுக்கு ஆடவில்லை அக்கா. கொஞ்சி கொஞ்சி பேசி பாடலுக்கு தான். அது குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்கும் பாட்டு.
என்றும் இதே வளத்துடன் மகிழ்வுடன்
பதிலளிநீக்குவாழ்வு அமைய இறைவன் நம் எல்லோருக்கும் அருள வேண்டும்.
கவினின் வாழ்வு பாட்டியால் சிறக்கிறது.
பாட்டிக்குக் கவின் மருந்தாக அமைகிறான். தாத்தா பக்கத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருப்பார்.
வாழக வளமுடன் அன்பு தங்கச்சி.
நீங்கள் சொல்வது போல் நமக்கு வேண்டியது நம் மக்களின் மக்கள் நல்லபடியாக வாழ வேண்டும். இறைவனிடம் அதுதான் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
நீக்குஎனக்கு இப்போது கவினால் வாழ்வு சிறக்கிறது.
அவன் விளையாட்டில் தாதாவும் இருக்கிறார்கள். அவர் என் கண்ணுக்கும் கவின் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்பான். அப்போது மனம் கசிந்து கண்ணீர் வந்து விடும்.
சில பொம்மைகள் வைத்து இருக்கிறான் , அது அவன், அப்பா, அம்மா, தாத்தா,ஆச்சி, என்பான்.
தாத்தா என்றும் பார்த்து வாழ்த்தி கொண்டு இருக்கட்டும்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பதிவு. சின்ன வயதில் வீடு அமைத்து விளையாடல்கள் நினைவுக்கு வந்தன. ஆனால் அப்போதைய காலங்களுக்கேற்ப பொம்மைகளும் வேறு.
உங்கள் பேரனுடனான உங்கள் விளையாடல்கள் நன்றாக உள்ளது. கப்பல் படைகளை தாங்களும் பேரனுமாக நிர்வகிப்பது, காலாட்படை படைகளுக்கு தலைமை வீரனாக தங்கள் பேரன் வழி நடத்துவது போன்ற உங்கள் பேரனின் கற்பனை விளையாடல்கள் நன்றாக உள்ளது. விதவிதமான விளையாடல்களிலும் உங்கள் பேரனின் கற்பனைகள் அசாத்தியமாக தெரிகிறது. கவினுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவியுங்கள்.
சகோதரி அதிரா சேனல்களுக்கு போக வேண்டும். அவர்கள் அதில் மும்முரமாக இறங்கி விட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
குழந்தைப் பாடல் சென்று படிக்கிறேன். அந்த காலத்தில் ஒன்றுடன் ஒன்றான வரிகளை இணைத்து புதிர் மாதிரி வினா விடையுடன் பாடியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் தந்துள்ள வினா விடை பாடல் வரிகளும் நன்றாக உள்ளது. வாட்சப் வாசகங்கள் அருமை. கருத்துள்ள வரிகள்.அனைத்தையும் ரசித்தேன். காலையிலேயே படித்து விட்டேன். ஆனால் பதிலளிக்க இயலாமல் கைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து விட்டது. அப்புறம் வேலைகள், குழந்தையுடன் நேரம் போவது என சரியாகப் போய்விட்டது. உங்கள் பதிவு இன்று காலையில் படிக்கும் போதே நன்றாகவிருந்தது. உங்கள் மனக் கவலைகளை தங்கள் பேரன் மாற்றுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்களும் அவனுடன் விளையாடி என்றும் ஆறுதலான மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குசின்ன வயதில் மணல்வீடு கட்டி விளையாடுவோம். அம்மா சிறுவீட்டு பொங்கலுக்கு வரைந்து வைத்து இருக்கும் வீட்டில் விளையாடி இருக்கிறோம்.
அவன் தினம் தினம் விளையாடும் கற்பனை விளையாட்டில் என்னையும் சேர்த்துக் கொள்வான். மருமகளின் அம்மாவும் உண்டு விளையாட்டில். அவர்களுடன் காலையில் விளையாடுவான் ஸ்கைப்பில்.
கவிலை வாழ்த்தியதற்கு நன்றி. அவனிடம் உங்கள் வாழ்த்தை சொல்லி விட்டேன்.
//சகோதரி அதிரா சேனல்களுக்கு போக வேண்டும். அவர்கள் அதில் மும்முரமாக இறங்கி விட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//
ஆமாம், இந்த முட்டை, கூடை செய்வது பார்க்கலாம். நீங்கள் கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த கூடை செய்து அதில் இனிப்பு சீடை, உப்புசீடை போட்டு உங்கள் பேரகுழந்தைகளுக்கு கொடுக்கலாம். மிக அழகாய் செய்து காட்டுகிறார்.
எத்தனை எத்தனை விளையாட்டு நம் காலத்தில் இவர்களுக்கு இப்போது வேறு மாதிரி விளையாட்டு.
வாட்சப் வாசங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் கமலா கவலை படாதீர்கள்.
//உங்கள் மனக் கவலைகளை தங்கள் பேரன் மாற்றுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்களும் அவனுடன் விளையாடி என்றும் ஆறுதலான மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்//
உங்கள் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
கூரையில்லாத வீடு, இப்படித்தான் புது வீடுகளுக்கான floor plan வரைபடம் காட்டப்படுகிறது.
பதிலளிநீக்கு/வீட்டுக்கு நண்பர்களை வரவழைத்து பேசுவதாய் கற்பனை விளையாட்டு../ பாவம் குழந்தைகள்.
கோட்டைகள், போர் வியூகங்கள் அருமை. அபாரக் கற்பனைத் திறன்.
குழந்தைகள் உலகில் நாமும் கவலைகள் மறந்து குழந்தைகள் ஆவது நிஜமே.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//இப்படித்தான் புது வீடுகளுக்கான floor plan வரைபடம் காட்டப்படுகிறது...
ஒவ்வொரு முறை வீடு கட்டும் போதும் அதை நமக்கு விளக்கம் கொடுத்து சுற்றி காட்டுவான் வீட்டை. மேற்கூரை அமைக்கும் முன் உள்பகுதியை காட்டிவிடுவான்.
இந்த முறை அவன் கட்டிய புது வீட்டுக்கு விருந்தினர் வருகை. பெரியவர்கள் அமர்ந்து பேசுவது , மற்றும் அவன் நண்பர்களுடன் விளையாடுவது என்று வீட்டில் நிறைய ஆட்கள் வந்து இருப்பது போல் கற்பனையில் மகிழ்கிறான்.நம்மையும் மகிழ்விக்கிறான்.
//கோட்டைகள், போர் வியூகங்கள் அருமை. அபாரக் கற்பனைத் திறன்.
குழந்தைகள் உலகில் நாமும் கவலைகள் மறந்து குழந்தைகள் ஆவது நிஜமே.//
அவன் கற்பனை விளையாட்டில் இன்னும் தாத்தா இருக்கிறார்கள்.
கவலைகளை மறந்து குழந்தையாகி மகிழ்கிறேன்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
செல்வன் கவின் தனது கை வண்னத்தைக் காட்டியிருக்கும் படங்கள் அழகு.. அருமை..
பதிலளிநீக்குமேன்மேலும் வளர்வதற்கு
இறையருளை நினைந்து வாழ்த்துகிறேன்..
//மேன்மேலும் வளர்வதற்கு
நீக்குஇறையருளை நினைந்து வாழ்த்துகிறேன்..//
உங்கள் வாழ்த்து பேரனுக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.
கவினை பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும் நன்றி.
என்ன ஊர்.. என்ன காடு!..
பதிலளிநீக்குஎன்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி விளையாடும் விளையாட்டு தற்போது காணாமல் போனதென்றே சொல்லலாம்..
அரிதான விஷயத்தைப் பதிவில் வைத்ததற்கு நன்றி...
அறிவார்ந்த வினா விடையின் பிரதி ஒன்றை என் மகளுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.. நன்றி...
பதிலளிநீக்கு//அறிவார்ந்த வினா விடையின் பிரதி ஒன்றை என் மகளுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.. நன்றி...//
நீக்கு"குழந்தை உலகம்" என்ற கி.வா.ஜகந்நாதன் அவர்கள் புத்தக சுட்டியை அவர்களுக்கு அனுப்பி விட்டால் அவர்கள் தேவையானதை எடுத்து கொள்ளலாம். நிறைய இருக்கிறது விளையாட்டு, மற்றும் பாடல்கள் என்று .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பொதுவாவே குழந்தைகள் உலகம் தனித்துவம் வாய்ந்தது .அவங்க உலகில் நாமும் னுஅழைத்து பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதை மிஸ் பண்ணவே கூடாது .கவினுக்கு நல்ல க்ரியேட்டிவிட்டி .இறை ஆசீர்வாதங்கள் குட்டி செல்லத்துக்கு .மிகவும் அழகா செய்திருக்கிறார் lego பிளாக்ஸ் வீடு மற்றும் அனைத்து கேரக்டர்ஸும் அழகா இருக்குக்கா .இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்கு//குழந்தைகள் உலகம் தனித்துவம் வாய்ந்தது .அவங்க உலகில் நாமும் னுஅழைத்து பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதை மிஸ் பண்ணவே கூடாது//
உண்மை ஏஞ்சல். சந்தர்ப்பத்தை இறைவன் அளித்து இருக்கிறார்.
உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஏஞ்சல்.கவினிடம் சொல்கிறேன்.
உங்கள் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.
அதென்னமோ தெரியவில்லை கோமதி அக்காவின் போஸ்ட் நேரம் என்னால உடன் வருகை தர முடியுதில்லை, வெதர் மாற்றத்தால் உடல் நிலையும் கொஞ்சம் பிரச்சனை பண்ணுது கர்ர்ர்:)).. இப்போ என் செக் சொல்லித்தான் வந்தேன்.
பதிலளிநீக்குமிக அழகிய போஸ்ட் கோமதி அக்கா, பேரனின் கலெக்சன்ஸ் பார்க்க, எங்கட மகனாக்களின் சின்ன வயசு நினைவுக்கு வருது. இப்போ அவை கலெக்சனாக இருக்குது, ஆனா தொடுவதில்லை அவர்கள்.. எறியவும் மனம் வருவதில்லை, ஆரும் குட்டீஸ் வரும்போது கொஞ்சம் கொஞ்சம் குடுப்பதுண்டு.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஎப்போது முடியுமோ அப்போது வாங்க அதிரா.
//வெதர் மாற்றத்தால் உடல் நிலையும் கொஞ்சம் பிரச்சனை பண்ணுது கர்ர்ர்:)).. இப்போ என் செக் சொல்லித்தான் வந்தேன்.//
உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கும் மரம் எல்லாம் பூத்து குலுங்கி காற்றில் உதிர்கிறது அதன் மகரந்தம் ஒத்துக் கொள்ளாமல் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.
//பேரனின் கலெக்சன்ஸ் பார்க்க, எங்கட மகனாக்களின் சின்ன வயசு நினைவுக்கு வருது//
முன்பு ஒரு முறை சொன்னீர்கள் நிணைவு இருக்கிறது. நிறைய லெகோ வைத்து இருக்கிறான் இவனும்.
பேரனுடன் அழகாக விளையாடுறீங்கள்.. ஹா ஹா ஹா எங்கட அப்பாவும் இப்படி விளையாடுவார் ஆனா அம்மாவுக்கு ப் பொறுமையில்லை:)).
பதிலளிநீக்குநல்ல வெயில் எறிக்கிறதே அங்கு, இங்கும் வெயிலாக இருக்குது, போனவருடம் இந்நேரம் வடாமாகச் செய்து தள்ளினேன் ஆனா இம்முறை கொஞ்சம் குளிர் இருக்குது, எனக்கும் ஏதோ கண்பட்டதுபோல எதுவும் பண்ண முடியாமல் இருக்குதே...
ஈஸ்டர் எக் ஹண்டிங் அழகு.. நாங்களும் இப்படிச் செய்து.., காலம் இப்போ ஓடி விட்டது..
முன்பு நிறைய நேரம் விளையாடுவான் இப்போது பாடங்கள் நிறைய . இடை இடையே வந்து விளையாடி போவான். எனக்கு குழந்தைகளுடன் விளையாடுவது என்றால் மிகவும் பிடித்தவிஷயம். மதுரையில் யாரும் குழந்தைகள் வீட்டுக்கு வருவது இல்லை (அக்கம் பக்கம் உள்ள குழந்தைகள்) அதுவே இருவருக்கும் மனசோர்வு ஏற்பட காரணம்.
நீக்குவெயில் வந்து விட்டது. சுற்றிப்போட்டு கொள்ளுங்கள் இடை இடையே!
ஒவ்வொன்றுக்கும் நேரம் இருக்கும் போல!
முன்பு நண்பர்கள் வீட்டுக்கு வருகை தருவார்கள் உற்சாகமாய் இருப்பான், இப்போது உற்சாகம் குறைவு. அவனை உற்சாகபடுத்தவே நாங்களும் கலந்து கொண்டோம்.
என் இணைப்புக் குடுத்திருக்கிறீங்கள்.. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.
பதிலளிநீக்குபாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல், ஆனா இப்பாடல் கேட்கும்போது ஏதோ ஒரு சோகமாக வரும்.. காரணமில்லாமல்.
அழகிய தத்துவ வரிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இம்முறை எங்கும் போகவுமில்லை.. வாழ்த்துச் சொல்லவுமில்லை நான்.. ஹா ஹா ஹா.
எனக்கு உங்கள் முட்டை வைக்கும் கூடை மிகவும் பிடித்து விட்டது. மிக அழகாய் செய்து இருந்தீர்கள். குருவி முட்டையும் அழகு.
நீக்குஇங்கு முன்புறம் மரத்தில் மணிப்புறா முட்டையிட்டு இருக்கிறது.
பாட்டு ஏன் சோகத்தை தருகிறது? கோபமான அம்மாவை சிரிக்க வைக்க மகன் பாடும் பாட்டு. அம்மா நினைப்பு வருதோ குழந்தைக்கு!
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இம்முறை எங்கும் போகவுமில்லை.. வாழ்த்துச் சொல்லவுமில்லை நான்.. ஹா ஹா ஹா.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. சோர்ந்து போகதீர்கள், உங்கள் உற்சாகம் தான் எனக்கு தெம்பு.
இந்த வெயிலுக்கு, நல்ல பொலித்தீன் பைகளின், மகனிடம் சொல்லி உர மண் வாங்கி நிரப்பி, கீரை, கத்தரி, மிளகாய் உருளைக்கிழங்கு எல்லாம் நடுங்கோ கோமதி அக்கா.. இப்ப நட்டால் 3 மாதத்தில் எல்லாம் வந்திடும்..
பதிலளிநீக்குபெரிய மரத்தொட்டியில் மண் போட்டு முன்பு காய்கறி தோட்டம் போட்டு இருந்தான், இப்போது முயல் வந்து தின்று செடிகளை அழித்து விடுகிறது. அதனால் ஒன்றும் போட வில்லை. போன முறை முள்ளங்கி, கத்திரி, பீட்ரூட், காரட் எல்லாம் போட்டு இருந்தான். மண்போட்ட தொட்டி இருக்கிறது, மண் நிரம்பிய தொட்டிகள் நிறைய இருக்கிறது. தோட்டத்தை சீர் அமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.