வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வசந்த காலம்





                                          வசந்த கால மலர்கள். 

அரிசோனா எங்கும் இந்த கலர் காகிதப்பூ  மலர்கள்தான்  அலங்காரமாக  வீதி ஓரங்களில் மற்றும் வீட்டின் முன்புறம், பின்புறம் எல்லாம் வளர்க்கப்படுகிறது.
 
வெயில் வந்து விட்டால் மனிதன் மட்டும் தான் "என்ன வெயில், என்ன வெயில்  கொடுமை" என்கிறான். ஆனால் தாவரங்கள், மரங்கள் அதை நம்பி வாழும் உயிரினங்களுக்கு மகிழ்ச்சியான காலம். அவைகளுக்கு தண்ணீரும், உணவும் கிடைத்து விட்டால் அவை மேலும் மகிழும். தாவரங்களுக்கு உணவு தயார் செய்ய  சூரியஒளி வேண்டி இருக்கிறது.

இந்த இளவேனில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதம் இயற்கை தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்கிறது.
இன்பமலர்கள் பூத்து குலுங்கும் சிங்காரத்தோட்டமாக மாறிவிடுகிறது. 

குளிர்காலம் முடிந்து  கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த இளவேனில் காலத்தில் கண்களுக்கு  குளிர்ச்சியை மனதுக்கு மகிழ்ச்சியை  இயற்கை அள்ளி தருகிறது. பார்த்து மகிழ்வோம்.

இலையுதிர்காலமும் இலைகள் வண்ணமயமாக மாறி ஒரு அழகை கொடுத்து உதிர்ந்தது  இங்கு . அது  முடிந்து இளவேனில் காலம் சித்திரையில்   மரங்கள், செடிகள் துளிர்த்தது.  இப்போது  பலவிதமான மலர்கள் பூத்து குலுங்குகிறது.



இங்கு பாதை ஓரங்களில் ஈச்சையும், காகிதபூக்களும் வளர்க்கிறார்கள்.மஞ்சள் பூக்கள் வீதி எங்கும் பூத்து குலுங்குகிறது.

 சுற்றுப் புற மாசுகளில்  இருந்து - குறிப்பாக காற்றில் வரும் தூசியில் இருந்து  தங்கள் வசிப்பிடத்தைக் காத்துக் கொள்ள வீட்டின்  சுவற்றோரங்களிலும்   வீதிகளில் இரு ஓரங்களிலும் காகித பூ கொடியை   வளர்க்கிறார்கள் இங்கு. தண்ணீரும் அதிக தேவைபடுவது இல்லை. கொடியை குத்து செடி போல் அழகாய் வெட்டி பராமரிக்கிறார்கள்.

தடுப்பூசி போட போனபோது  காரிலிருந்து எடுத்த படங்கள் 

காரில் அமர்ந்து இருக்க வேண்டும்  கார் ஜன்னலை திறக்க சொல்லி நமக்கு ஊசி போட்டு விடுவார்கள். இரண்டு ஊசியும் போட்டு விட்டேன்.
 மகன் வீட்டுத்தோட்டத்தில் அரளி பூ (அலரி)
வீட்டின் முன்புறம் உள்ள மரத்தில்  மொட்டு விட்டு இருக்கும் மரம்
மொட்டும் மலரும்





இந்தப்பூ கீழே விழுந்து காலில் மிதிபட்டால் இளம் மஞ்சள் மாவு பொருள் போல  ஆகிவிடும். காற்றில் அந்த மாவும் பறக்கும்.

பூத்து குலுங்கும் மரம் இலையே தெரியாமல் . இந்த பூவுக்கு  சிறு வண்டுகள் நிறைய  வரும்



மலரிலிருந்து இலைகள் வருவது வித்தியசாமாக இருக்கிறது.
மதிலுக்கு அடுத்த பக்கம் உள்ள மலர்.   வீட்டு தோட்டத்திலிருந்து எட்டிப்பார்க்கிறது. கள்ளி வகையை சேர்ந்த செடி.

தேன் சிட்டுக்கு நிறைய தேன் தரும் மலர்

இன்னொரு வீட்டில் பூத்து இருந்த கள்ளிப்பூ   மொட்டும், மலரும்

இந்த அழகிய கள்ளிப்பூவும் அதே வீட்டில்தான்

இந்த  ஈச்சை மரத்தின் மலரின் மொட்டைப் பார்க்க கிளைகளை வெட்டி வைத்து இருந்தார்கள்  நடைபயிற்சியின் போது எடுத்த படம்



மேலே உள்ள மரத்தின் பூக்கள் காய்ந்து  உதிர்ந்து  எல்லோர் வீட்டு முன்னாலும்  இப்படி இருக்கும்
மஞ்சள் பூவின் மொட்டுக்கள்


இந்த மஞ்சள் பூக்களின் மகரந்தங்கள் பறந்து நமக்கு  தும்மல், சுவாச தொந்திரவு ஏற்படும் காலம். இருந்தாலும் கொரானாவால் நாம் முககவசம் அணிந்து செல்வதால் பாதிப்பு ஏற்படாது. ஆனால் மஞ்சள் பாவாடை போர்த்த தரையை சுத்தம் செய்வது பெரிய வேலை.



மகன் வீட்டு வெள்ளை அரளி  மிக உயரமாக போய் விட்டது மாடி பால்கனியிலிருந்து தான் மலர்களை பறிக்க வேண்டும்.
ஒரு வீட்டின் முன்  பார்த்த மலர்.  தாழம் இலைகளை போல் இருக்கும் குத்து செடியில் வெள்ளை மலர் கொத்து.  இயற்கை அன்னைக்கு  பரிசாக மலர் கொத்து  கொடுக்க இயற்கையாக   பூத்து இருக்கிறது.

தேன் சிட்டுக்கு பிடித்த மலர்




பக்கத்து வீட்டு வெள்ளை, பிங் ரோஜாக்கள்

 சிவப்பு அரளி. இந்த இரண்டு மரங்களை கடந்து போகும் போது ஒரு புராணகதை சொல்வான் பேரன், அது இன்னொரு பதிவில்  சொல்கிறேன். உங்களுக்கு நினைவு வருகிறதா என்று பாருங்கள்.
இலை தெரியாமல் பூக்கும் இந்த சிவப்பு மலரும்





ஆவரம் பூவின் மொட்டு போலவே இருக்கும்

நேற்று நடைபயிற்சியின் போது வீட்டுக்கு திரும்பி வீட்டின் முன் வளர்ந்து இருக்கும் ஆவரம் மலர் போல் இருக்கும் சின்ன மரத்தில் உள்ள  மலரை படம் எடுக்க போன போது  மரத்தின் உள்ளேயிருந்து மணிப்புறா சிறகடித்து பறந்தது. அப்போது மரத்தைப் பார்த்தேன்,  மரத்தில் கூடும், இரண்டு முட்டைகளும்  தெரிந்தது, மரம் என் உயரம் தான் இருக்கும். 

இரண்டு முட்டைகள்
 தூரத்திலிருந்து பறவையை தொந்திரவும் செய்யாமல் காமிரவில இன்று காலை எடுத்த படம்
 

                                        காமிரவில எடுத்த படம்.

கழுகு கண்ணில் படாமல் முட்டைகளை அடை காத்து குஞ்சுகள் பத்திரமாக பறந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

போகன் வில்லா(காகிதப்பூ கொடியில்) கொடியில் வழக்கம் போல் இந்த சமயம்  கூடு கட்டும் மணிப்புறா  கூடு கட்ட  ஆரம்பித்து இருக்கிறது. 

இந்த வசந்தகாலத்தில்  இயற்கை மகிழ்ச்சியாக இருப்பது போல் நாமும் கொரானா ஒழிந்து அனைவரும் நிம்மதியும் மகிழ்ச்சியுமாக இருக்க இறைவனை வேண்டுவோம்.

          வாழ்க வையகம் !வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------

63 கருத்துகள்:

  1. இரண்டு ஊசிகள் போட்டாலும் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்.. என்ன இந்த ஊசி போடுவதால் கொரோனா நோயின் தீவிர தாக்கத்தில் இருந்து விடுபட்டு கொஞ்சம் பயம் இல்லாமல் இருக்கலாம்.. இது பற்றி முடிந்தால் விரைவில் ஒரு பதிவு போடுறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான். இரண்டு ஊசிகள் போட்டாலும் ஜாக்கிரதையாக கவனமாக இருக்க வேண்டியதுதான். வீட்டுக்கு பக்கத்தில் மட்டும் தான் நடை பயிற்சி.
      //கொரோனா நோயின் தீவிர தாக்கத்தில் இருந்து விடுபட்டு கொஞ்சம் பயம் இல்லாமல் இருக்கலாம்.. இது பற்றி முடிந்தால் விரைவில் ஒரு பதிவு போடுறேன்//


      பதிவு போடுங்கள் பயன் உள்ளதாக இருக்கும்.

      நீக்கு
  2. எனக்கு குளிருன்னா கூட கொஞ்சம் சமாளித்து விடுவேன் ஆனால் வெயில் என்றால் கொஞ்சம் அலர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் குளிரை சமாளித்து விடுவார்கள், வெயில் கஷ்டம்தான். எனக்கும் வெயில் காலத்தில் தொண்டைவலி போன்றவை வரும்.

      ஆனால் வெயிலும் வேண்டி இருக்கே!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  3. அழகிய மலர்களின் அனுப்பிவகுப்பு.  

    நிறைய படங்கள்..   

    ஒவ்வொன்றையும் ரசிக்க முடிகிறது.  வசந்தகாலம் வந்துடுச்சி என்று பாடத்தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நிறைய படங்கள் எடுத்தேன் இன்னும் இதுவே நிறைய ஆகி விட்டது.
      வேறு ஒரு பதிவில் அவை இடம் பெறும்.

      பழைய பாடலை கேட்டுக் கொண்டே மலர்களை ரசிக்கவில்லையா?
      மனதில் வேறு பாடல்கள் தோன்றி இருக்குமே உங்களுக்கு.

      நீக்கு
    2. ஆம்..  சரியாய்ச் சொன்னேனெர்கள்.  நிறைய பாடல்கள் தோன்றின!

      நீக்கு
    3. பாடல் பிரியருக்கு பாடல் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் ஆச்சிரியம்.

      நீக்கு
  4. பேரன் சொன்ன கதை என்ன என்று அறிய ஆவல்.  பகிரும்போது  படிக்கிறேன்.  இரண்டு ஊசியும் போட்டுக்கொண்டு விட்டது நிம்மதி.  அதும் நீங்கள் காரிலேயே இருங்கள், நாங்கள் வந்து அங்கேயே போட்டு விடுகிறோம் என்பது நிறையவே நிம்மதி!  எனக்கு இரண்டாவது ஊசி வரும் பத்தொன்பதாம் தேதி டியூ.  அப்போது போடுவதா, சற்றுத் தள்ளிப் போடுவதா என்று சிறு குழப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் விடுப்பு எடுக்க முடியாது என்பது ஒருபக்கம், வார ஓய்வுக்கு முதல்நாள் போட்டுக்கொண்டால் நலம் எனும் எண்ணம் ஒருபுறம்...  பார்ப்போம் அக்கா.

      நீக்கு
    2. //வார ஓய்வுக்கு முதல்நாள் போட்டுக்கொண்டால் நலம் எனும் எண்ணம் ஒருபுறம்..//

      வார ஓய்வு கிடைக்கும் போது போட்டுக் கொள்ளுங்கள், ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும்.

      நீக்கு
    3. பேரன் சொன்ன கதையை சொல்கிறேன் . இரண்டு ஊசியும் போட்டுக் கொண்டது நிம்மதிதான். நான் மட்டும் இல்லை யாரும் இறங்க கூடாது. திருப்பதி மலைக்கு பாதை வளைந்து வளைந்து போவது போல் கயிறு கட்டிய பாதையில் கார்கள் பயணம் செய்ததது. வழியில் நிறுத்தி ஒவ்வொரு கேள்வியாக கேட்டு மேலே போகச் சொல்வார்கள். கடைசியில் ஊசி போடும் இடத்தில் எந்த கையில் ஊசி போட வேண்டும் என்று கேட்டு போடுகிறார்கள்.

      இரண்டாவது ஊசியை போட வேண்டிய நாளில் போட்டு விடுங்கள் குழம்ப வேண்டாம்.

      நீக்கு
  5. இரண்டே முட்டைகள்தானா இடும் மணிப்புறா?  பெரிதாகத்தெரிகிறது.  நீங்கள் வந்ததும் சிறகடித்துப் பறந்திருந்தாலும் தூரத்திலிருந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறையும் இரண்டு முட்டைகள்தான்.

      //சிறகடித்துப் பறந்திருந்தாலும் தூரத்திலிருந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்!//

      எதிர்வீட்டு கூரை மேல் நின்று பார்த்துக் கொண்டு இருந்தது. இன்று பக்கத்தில் போய் பார்த்தேன் பறக்கவில்லை அமைதியாக அமர்ந்து இருந்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அன்பின் கோமதி வாழ்க வளமுடன்.
    கண்கொள்ளாக் காட்சியாக மலர்க் கண்காட்சி
    வைத்து விட்டீர்கள். மிக மிக அருமை. எத்தனை விதமான வண்ணங்கள்
    அம்மா!!!!!!!

    போலன் அலர்ஜி மோசமானது. நல்ல வேளை முகக் கவசம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //கண்கொள்ளாக் காட்சியாக மலர்க் கண்காட்சி
      வைத்து விட்டீர்கள். மிக மிக அருமை. எத்தனை விதமான வண்ணங்கள்
      அம்மா!!!!!!!//

      நன்றி அக்கா.
      //போலன் அலர்ஜி மோசமானது. நல்ல வேளை முகக் கவசம் இருக்கிறது.//

      ஆமாம் அக்கா, அலர்ஜியால் நிறைய பேர் பாதிப்புகள் சொன்னதால் முககவசம் இல்லாமல் போவது இல்லை.



      நீக்கு
  7. வாழ்க வளமுடன் மா.
    வண்டுகளிடமும் ,தேனீக்களிடமும் இருந்து
    தற்காப்பு வேண்டும்.
    அந்த மணிப்புறாதான் என்ன அழகு.
    இறைவன் காக்க வேண்டும்.

    இங்கும் வாசல் பைன் மரத்தில் புறாக்களும் குருவிகளும்
    சத்தம் போட ஆரம்பித்திருக்கின்றன.
    பக்கத்தில் போனால் வ்ருலட் என்று பறக்கும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா ,தேனீக்கள் கொட்டி உயிரிழந்த செய்தி படித்தேன். பேரன் மிக பயப்படுவான் தேனீக்களுக்கு, மலர்களை பக்கத்தில் போய் எடுக்க விட மாட்டான்.
      மணிப்புறா குஞ்சுகளை இறைவன் காக்க வேண்டும்.

      பைன் மரத்தில் பறவைகளின் ஒலியை கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம் நீங்கள்.

      நீக்கு
  8. போகன் வில்லாப் பூக்கள் ,கொடியை சிங்கமும்
    இதேபோல நெடுக்க வளர்த்திருக்கிறார். இப்போது எப்படி இருக்கிறதோ.
    எங்கள் வீட்டிலும் ஈச்சமரம்
    உண்டு. பக்கத்தில் போனால் அறுத்துவிடும் அளவு
    கூர்மையான நீட்டும் கரங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஊசிகள் போட்டுக் கொண்டதில் மகிழ்ச்சி.
    நம் நாட்டை நினைத்தால் தான் மிகக் கவலையாக இருக்கிறது.

    அதுவும் அஹமதாபாத், தில்லி மிக மோசம் போல
    இருக்கிறது.

    எல்லோரையும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் நிறைய இருக்கிறது இராண்டாம் அலை கொரோனா எங்கிறார்கள். நிறைய கல்யாணம் உறவுகளில் இருக்கிறது. எல்லோரையும் கவனமாக போய் வர சொல்லி இருக்கிறேன். இறைவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும். வேலைகளுக்கு போய் வருபவர்கள் பத்திரமாக போய் வரவேண்டும் .

      நீக்கு
  10. பூக்களின் கோலம் மிக அழகு.
    ஊதா நிறம் ஒன்றுதான் இல்லை. மத்த எல்லா வண்ணங்களும் வந்து விட்டட்ன. இயற்கை வாழ்க.
    இதைப் படங்கள் எடுத்துப்
    பதிவிட்டதற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊதா நிறப்பூ முன்பு போட்டு இருந்தேன் அக்கா திராட்சை கொத்து போன்ற மலர். இப்போது அது பூக்கவில்லை. மஞ்சள் மலர் தான் நிறைய இருக்கிறது.
      இயற்கை வாழ்க என்று போற்றுவோம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  11. ஊசிகள் போட்டுக்கொண்டாலும் கவனமாக இருங்கள்.

    படங்கள் அனைத்தும் கண் கவரும் வண்ணம் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //ஊசிகள் போட்டுக்கொண்டாலும் கவனமாக இருங்கள்.//
      கவனமாக இருக்கிறேன் ஜி. குடியிருப்பு வளாகத்தில் தான் நடைபயிற்சி வேறு எங்கும் போவது இல்லை.

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. அனைத்து படங்களும் மிகவும் அருமை... வண்ண மலர்கள் மனதை கவர்ந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. வசந்தகாலக் காட்சிகள் யாவும் ரம்மியம். வெள்ளை மலர்க்கொத்தை அப்படியே பரிசளிக்கலாம் போலுள்ளது. மணிப்புறாக்கள் அங்கே அளவில் பெரிதே. தடுப்பூசி போட்டுக் கொண்டது நல்லதாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //வெள்ளை மலர்க்கொத்தை அப்படியே பரிசளிக்கலாம் போலுள்ளது. //
      மலர்கொத்து உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி. தூரத்திலிருந்து எடுத்தேன் . பக்கத்தில் போய் எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

      நம் ஊர் மணிப்புறாக்கள் போலதான் இருக்கிறது ராமலக்ஷ்மி.

      //தடுப்பூசி போட்டுக் கொண்டது நல்லதாயிற்று.//

      ஆமாம், கொஞ்சம் நிம்மதி. கவனமாய்தான் இருக்கனும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் அழகு. நல்ல புகைப்பட கலைஞராக மாறி விட்டீர்கள். வாழ்த்துகள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோ ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
      //படங்கள் அழகு. நல்ல புகைப்பட கலைஞராக மாறி விட்டீர்கள்.//
      பாராட்டுக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  16. படங்கள் மிக அழகு.

    மணிப்புறா...அதன் முட்டைகள் - மிக ரசித்தேன்.... இடம் நன்றாக இருந்தால்தான் பறவைகள் முட்டையிடும்.

    காலில் பட்டால் மாவாக ஆகிவிடும் பூக்கள், ரொம்ப குப்பையாக ஆகிவிடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      இடம் நன்றாக இருக்கிறது ஆனால் பாதுகாப்பு குறைவு. கழுகு கண்ணில் படுவது போல் உள்ளது. முன்பு ஒரு தடவை குஞ்சு பொரித்த போது கழுகு எடுத்து சென்று விட்டது என்று மகன் சொன்னான் அதுதான் கவலை, நல்லபடியாக பறந்து போகவேண்டும்
      என்று.

      //காலில் பட்டால் மாவாக ஆகிவிடும் பூக்கள், ரொம்ப குப்பையாக ஆகிவிடாதோ?//

      ஆமாம், சுத்தம் செய்வது கஷ்டம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. படங்கள் அனைத்தும் அழகு. மஞ்சள் பாவாடை போட்ட சாலைகள் - பார்க்க அழகென்றாலும், சுத்தம் செய்வது பெரும் வேலை தான்.

    இரண்டு ஊசிகளும் போட்டுக் கொண்டது நல்லது. எனினும் கவனமாகவே இருக்க வேண்டும்.

    பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //மஞ்சள் பாவாடை போட்ட சாலைகள் - பார்க்க அழகென்றாலும், சுத்தம் செய்வது பெரும் வேலை தான்.//

      நீங்கள் சொல்வது சரிதான், சுத்தம் செய்வது பெரும் வேலைதான்.

      //இரண்டு ஊசிகளும் போட்டுக் கொண்டது நல்லது. எனினும் கவனமாகவே இருக்க வேண்டும்.//

      கவனமாக இருக்கிறேன் வெங்கட் , நன்றி.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.


      நீக்கு
  18. அழகிய மலர்க்கூட்டங்கள் கொண்ட தொகுப்பு. மிக அழகு. ஹூஸ்டனில் டவுன்டவுனில் இம்மாதிரி அரளிச் செடிகள், ரோஜாச் செடிகள் நிறைந்து காணப்படும். மஞ்சள் பூ என்ன பூவென்று புரியவில்லையே? சொல்லி இருக்கீங்களா? கள்ளி விதம் விதமாய்ப் பூத்திருப்பதை நானும் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      மஞ்சள் பூ என்ன பூவென்று தெரியவில்லை.
      கள்ளி வித விதமாய் பூக்கிறது மறுநாள் கருமையாக மாறி விடுகிறது.

      நீக்கு
  19. பேரன் இரு மரங்களுக்கு இடையில் ஶ்ரீகிருஷ்ணன் உரலோடு கட்டியபடி தவழ்ந்து வந்து நளகூபரனுக்கும் மணிக்ரீவர்களுக்கும் கொடுத்த முக்தியைச் சொல்லும் புராணக்கதையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் இரு மரங்களுக்கு இடையில் ஶ்ரீகிருஷ்ணன் உரலோடு கட்டியபடி தவழ்ந்து வந்து நளகூபரனுக்கும் மணிக்ரீவர்களுக்கும் கொடுத்த முக்தியைச் சொல்லும் புராணக்கதையோ?//

      உங்களுக்கு தெரியாமல் இருக்குமா !
      நீங்கள் சொன்னது சரிதான்.

      நீக்கு
  20. மணிப்புறா இங்கேயும் இப்போ வர ஆரம்பிச்சிருக்கு என்றாலும் கூடெல்லாம் கட்டவில்லை. படம் பிடிக்க முயற்சி செய்வதற்குள்ளாகப் பறந்து விடும். பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிப்புறாவை பார்த்துகொண்டு உட்கார்ந்து இருக்கலாம். அவ்வளவு அழகு.
      அது குரல் எழுப்பி கொண்டு அமர்ந்து இருப்பதும் அருமையாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  21. அழகு.. அழகு..

    எத்தனை எத்தனை விதமான மலர்கள்...
    அத்த்னையையும் தாங்கி கலைப் படைப்பாக இன்றைய பதிவு...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //எத்தனை எத்தனை விதமான மலர்கள்...
      அத்த்னையையும் தாங்கி கலைப் படைப்பாக இன்றைய பதிவு...//


      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  22. வணக்கம் சகோதரி

    அருமையான அழகான பதிவு. எத்தனை மலர்கள்.. அழகான மலர்களை படங்கள் எடுத்து தொகுத்து கண்குளிர பதிவாக்கி தந்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.

    உங்கள் வீட்டு செவ்வரளி, வெள்ளை அரளி அனைத்துமே நன்றாக உள்ளது. மஞ்சள் பூக்கள் மொட்டுக்களோடு ஒவ்வொரு படமும் நன்றாக உள்ளது. படத்திலேயே அதன் மிருதுவான மாவு தன்மை தெரிகிறது.

    ரோஜாக்ககள் படங்கள் அழகோ அழகென்றால், கள்ளிப்பூக்களும் அதற்கிணையான அழகுடன் இருக்கிறது. நீங்கள் அதனை அழகுடன் படம் பிடித்தது மிகவும் அருமையாகவும் உள்ளது.

    தங்கள் பேரன் சொன்ன புராணக்கதை கிருஷ்ணர் தன் சிறுவயதில் செய்த குறும்புக்கு தண்டனையாக தன் தாய் இடுப்பில் கட்டி விட்ட உரலுடன் அந்த இருமரங்களுக்கிடையே சென்ற போது தேவர்களாகிய இருவர் சாபவிமோசனம் பெற்று இருமரங்கள் வீழும் கதையாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். கருத்தில் இதையும் யாராவது சொல்லியிருப்பார்கள். இனிதான் கருத்துக்களை படிக்க வேண்டும்.

    பறவையின் முட்டைகளை அந்த தாய் பறவையோடும், தனித்தும் அழகாக படமெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் மனதில் துளிர் விடும் ரசனைகளுக்கு இயற்கை தன் பரிசாக அழகான மலர்களை மலர்வித்து உங்களுக்கு பூங்கொத்தாக தந்திருப்பது போன்று அமைந்துள்ளது இந்தப் பதிவு. பாராட்டுக்கள் சகோதரி.

    நேற்று என்னால் வலைத்தளம் வர முடியவில்லை. அதனால் இன்று தாமதமாக வந்திருக்கிறேன். அழகான பகிர்வினை தந்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      படங்களை, பதிவை ரசித்து அழகாய் கருத்து சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.
      பேரன் சொன்ன கதை நீங்கள் சொன்ன கதைதான். எல்லோருக்கும் தெரிந்த கதைதான், உங்களுக்கு தெரியாமல் இருக்குமா? கீதா சாம்பசிவம் சொல்லி இருக்கிறார்கள்.

      நான் சும்மா ஒரு ஆவலை ஏற்படுத்த அந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.
      நான் இயற்கை அன்னைக்கு மலர் கொத்து பரிசு என்று எழுதினால் நீங்கள் எனக்கு இயற்கை பூங்க்கொத்து தருகிறது என்று அழகாய் எழுதி விட்டீர்கள். நன்றி கமலா.
      உங்கள் அன்பான கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி, நன்றி கமலா.

      நீக்கு
  23. மிக மிக அழகான படங்களும், விளக்கங்களும். நீங்கள் ரசிப்பது ஒன்று, அதை எங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னொன்று என்று இரண்டுமே சிறப்பு. //வெயில் வந்து விட்டால் மனிதன் மட்டும் தான் "என்ன வெயில், என்ன வெயில்  கொடுமை" என்கிறான். // இயற்கையோடு இயைந்து வாழத் தெரியாமல் அதை வளைக்க பார்ப்பது மனிதன் மட்டுமே. 
    அந்த மஞ்சள் பூக்கள் சரக் கொன்றையை  நினைவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //இயற்கையோடு இயைந்து வாழத் தெரியாமல் அதை வளைக்க பார்ப்பது மனிதன் மட்டுமே. //

      நன்றாக சொன்னீர்கள்.
      சரக் கொன்றை போல நிறைய மஞ்சள் பூக்கள் இங்கு இருக்கிறது.
      இங்கும் இயற்கையை அழித்து வீடுகள் வர ஆரம்பித்து விட்டன. நாளுக்கு நாள் வெளியூர்களிலிருந்து இங்கு இடம் வாங்கி தங்குபவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

      இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இங்கு உள்ளவர்களுக்கு வந்து இருக்கிறது.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. கோமதிக்கா படங்கள் அட்டகாசம்..ரொம்ப அழகா இருக்கு..
    பேரனின் புராணக்கதை என்னவாக இருக்கும் அறிய ஆவல்!!!
    அந்த மஞ்சள் பூக்கள் மகரந்தம் அலர்ஜி பார்த்ததும் ஏஞ்சல் நினைவுக்கு வந்தார் அவருக்கு அலர்ஜி டக்குனு பத்திக்குமே..

    அத்தனை பூக்களும் அழகோ அழகு கோமதிக்கா..
    மிகவும் ரசித்தேன்...

    சென்னையில் மஞ்சள் பூ உதிர்ந்து நடை பாதையை அப்படியே கார்ப்பெட் விரித்தது போல் இருக்கும் அழகா இருக்கும் அதை படம் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் அது பழுதான கணினியில் இருக்கு என்று நினைக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா படங்கள் அட்டகாசம்..ரொம்ப அழகா இருக்கு..//

      நன்றி கீதா


      //மஞ்சள் பூக்கள் மகரந்தம் அலர்ஜி பார்த்ததும் ஏஞ்சல் நினைவுக்கு வந்தார் அவருக்கு அலர்ஜி டக்குனு பத்திக்குமே..//

      இங்கும் அந்த அலர்ஜி வரும் என்பதால் எல்லோரும் மாஸ்க் போட்டு கொண்டுதான் போவார்கள்.

      //சென்னையில் மஞ்சள் பூ உதிர்ந்து நடை பாதையை அப்படியே கார்ப்பெட் விரித்தது போல் இருக்கும் அழகா இருக்கும் //
      வண்டலூர் பக்கம் அந்த மாதிரி மஞ்சள் கம்பளம் போர்த்திய தரையை மகன் எடுத்து இருக்கிறான் முன்பு.

      உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது , நேரம் கிடைக்கும்போது வாருங்கள் வலைத்தளம் பக்கம்.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  25. நான் தான் எப்பவும்போல ரொம்ப லேட் போலும்.. கொஞ்சக்காலமாக எங்கும் வர முடியவில்லை, வீடியோக்கூடப் போடாமல் இன்றுதான் போட்டேன்.

    வசந்தகாலம் வந்துவிட்டதை உங்கள் புளொக் மலர்கள் சொல்கின்றன.. பூக்கள் அழகோ அழகு, ஆனா அவற்றில் இருந்து கொட்டுப்படும் தூசுபோன்றவற்றால்தான் மக்களுக்கு இங்கு நோய் அதிகம், தும்மல், மயக்கம், கண் பிரச்சனை , தோல் வியாதிகள் இப்படிப் பலதும் வருகிறது... ஒன்றுக்காக இன்னொன்றை இழக்கத்தான் வேண்டும் என்பது எல்லாத்துக்கும் பொருந்துதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      உங்கள் வீடியோ பார்க்க வேண்டும்.
      வசந்த காலம் வரும் முன் ஒரு அழகு, வந்தபின் ஒரு அழகு இயற்கை.

      //ஒன்றுக்காக இன்னொன்றை இழக்கத்தான் வேண்டும் என்பது எல்லாத்துக்கும் பொருந்துதே...//
      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.

      மலர்களின் மகரந்தங்கள் கொட்டும் போது காற்றில் பறந்து நிறைய உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.


      நீக்கு
  26. கள்ளிப்பூக்கள் அழகு, இங்கு சாடிகளில் பூவுடன் கள்ளி விற்கிறார்கள்.. எங்கள் வீட்டுக் கள்ளி பூக்கிறாவே இல்லை, ஒருவேளை பூக்க மாட்டாவோ என்னமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று இன்னொரு வீட்டு வாசலில் கள்ளிச்செடி பூ பார்த்தேன் அழகு.
      சில கள்ளி பூக்காது போல அதை நீங்கள் வைத்து இருப்பீர்கள் போலும்.

      நீக்கு
  27. இப்பவே ரோஜாவும் பூத்திருக்குதே.. எங்களுக்கு யூலையில்தான் ரோஜா பூக்கும்.. இப்போ குருத்து வருகிறது மரங்கள். எதைச் சொல்ல எதை விட அனைத்தும் அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வீட்டில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை என்று பூத்து இருக்கிறது.
      வித விதமாய் மரங்கள் தலைவிரித்து கொண்டு வெறும் குச்சி குச்சியாக இருந்தது இல்லை இல்லாமல்.இப்போது அவை எல்லாம் இலை தெரியாமல் பூத்து குலுங்குது.
      இயற்கையின் ரகசியம் புரியவில்லை.

      நீக்கு
  28. வக்சீன் போடும் விதம் பார்க்க, சும்மாவே ஹார்ட் அட்டாக் வந்திடும்போல இருக்கே.. கொரோனா செண்டர் என்பதைபோல:)..

    இங்கெல்லாம், கொமியூனிட்டி செண்டர், ரவுன் ஹோல்.. இப்படி இடங்களில் போடுகிறார்கள், அதுவும் நாமாகப் போக முடியாது, எங்களுக்கு ஓட்டமெட்டிக்காக வீட்டுக்கு லெட்டர் வரும்.. லெட்டர் உடன் போனால் போட்டு விடுவினம், போன பின்புதான் சொல்லுவினம் என்ன வக்சீன் குத்தப்போகினம் என:))... அஸ்ரா செனிகா போட்டு இங்கு.. தெரிஞ்ச இருவர் , அன்று நைட்டே ஸ்ரோக்போல வந்து பின்னர் சில மணியில் இறந்துவிட்டனர்.. நினைக்கப் பயமாகவும் இருக்குது என்ன பண்ணுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரில் தான் வரிசையில் நிற்கனும்.
      ஒன்றும் பயம் இல்லை குளிர் காலத்தில் இப்படி கூடாரம் போட்டு இருந்தார்கள். நமக்கு நேரம் ,ஆனலைனில் பதிவு செய்து கொண்ட பின் நாள், நேரம் ஒதுக்கி அனுமதி கொடுத்தபின் தான் போனோம்.
      வெயில் காலத்தில் வேறு நிரந்தரமான இடத்தில் மாற்றி விட்டார்கள்.

      நீங்கள் சொல்லும் செய்தியும் கவலைபட வைக்கிறது.
      என்ன செய்வது னம் விதி நன்றாக இருந்தால் இருப்போம் போலும்.

      நீக்கு
  29. இவ்ளோ தைரியமாக புறாப்பிள்ளை முட்டைபோட்டு அடைகாக்குதே.. இங்கு எங்கும் இப்படிக் காணவில்லை நான். இங்கு வீடுகளில் வளர்க்கும் பூஸ் பிள்ளைகள் ஊர் சுற்றி வருவதாலும், நிறைய மலைகள் மரங்கள் காடுபோல இருப்பதாலும், அங்குதான் முட்டை இடுவினம் என நினைக்கிறேன்..

    அனைத்தும் அழகோ அழகு கோமதி அக்கா, நலமே இருங்கோ.. சந்தோசமாகப் பொழுதைக் கழியுங்கோ.. இன்று மட்டுமே நம் கையில்.. நாளை என்ன என்பது ந்மக்குத் தெரியாது அதனால இப்போதைய மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த் அவகை புறாக்களுக்கு கொஞ்சம் அறிவு கம்மியாம். அதற்கு கூடு கட்டவசதியாக உள்ள இடத்தில் கட்டி முட்டையிட்டு விடுமாம். பாதுகாப்பு இல்லாத காரணத்தால் நிறைய உயிர் இழப்பு உண்டு. மணிப்புறா எண்ணிக்கை குறைவாய் தான் இருக்கிறது.
      இங்கும் பூனை, நாய் எல்லாம் இருக்கிறது அவர்கள் எஜமானர்களுடன் வெளியே வருகிறது போய் விடுகிறது. எங்கள் வீட்டில் பூனை, நாய் இல்லை அதனால் பயமில்லாமல் கூடு கட்டி இருக்கிறது. கழுகார் கண்ணில் இருந்து தப்பித்து விட்டால் போதும்.

      //கோமதி அக்கா, நலமே இருங்கோ.. சந்தோசமாகப் பொழுதைக் கழியுங்கோ.. இன்று மட்டுமே நம் கையில்.. நாளை என்ன என்பது ந்மக்குத் தெரியாது அதனால இப்போதைய மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்.//

      ஆமாம் அதிரா. இன்றைய சூழ்நிலை மாமா, விவேக் மரணம், மற்றும் கொரோனாவில் உயிர் இழப்புகள் உணர்த்தும் பாடம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  30. வண்ண வண்ண மலர்கள் அனைத்தும் கொள்ளை அழகு மா ..

    மரத்தில் கூடும், இரண்டு முட்டைகளும் ஆஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு