செவ்வாய், 19 ஜனவரி, 2021

தமிழுடன் நீங்களும் வாழ்வீர் எம்முடன்


மாதம் ஒருமுறை மயிலாடுதுறையிலிருந்து வெளியாகும் ஆன்மீக பத்திரிக்கை  சிவச்சுடர். என் கணவர்  பத்திரிக்கை ஆசிரியர் குழுவில் இருந்தார்கள் ,  மாதம் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவார்கள்.
 அந்த பத்திரிக்கையில் பூம்புகார் கல்லூரியில் என் கணவருடன் தமிழ்த்துறையில் பணியாற்றிய  பேராசிரியர் முனைவர் திரு. பாண்டியன் அவர்கள் என் கணவருக்கு  எழுதிய இரங்கற்பா கவிதை.



சிவச்சுடர் பத்திரிக்கை ஆசிரியர் திரு. தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய நினைவுரை


  சுந்தரமூர்த்தி தேவாரம் முதல் நாள் பாடி இருக்கிறார்கள். மறு நாள் படிக்க அடையாளமாக அர்த்தம் எழுதிய பேனாவை அதில் வைத்து இருந்தார்கள்.

ஆனிமாதம் ஆரம்பித்து  ஆனி  .மாதம் நிறைவு பெறுவது  போல் பன்னிரு திருமுறையை  முற்றோதல் செய்வார்கள் . அப்படி பாடி வரும் போது அவர்கள் இறைவனடி செல்லும் முன் பாடிய ஏழாம் திருமுறை சுந்தரர் தேவாரம். 1 வது திருப்பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம். கோவிலில் உள்ள இறைவன் பேர் கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்.

 தடுத்தாட்கொண்டநாதர்  சிவச்சுடர் ஆசிரியர் கூறியது போல சுந்தரர் தமிழை கேட்க அழைத்துக் கொண்டார் போலும் .


திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு  "மாசில்வீணையும்" என்று   திருநாவுக்கரசர்ப்பற்றி இணையவழியில்(ஜூம்) கட்டுரை வாசித்த போது எடுத்த படம் . இன்னொரு சமயம் அந்த கட்டுரையை இங்கு பதிவிடுகிறேன்.

                                                                    வாழ்க வளமுடன்.

36 கருத்துகள்:

  1. வருக கோமதி அக்கா மீண்டும் வலையுலகத்துக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      வருகிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமையான புகைப்படம்.  அழகாய்  அமர்ந்திருக்கிறார்.    திரு பாண்டியன் அவர்களின் கவிதை உருக்கம்.  விளையாட்டாய்க் கூட கடிந்ததில்லை ஒருமுறையேனும் என்பது சிறப்பு.  ஸாரின் குணநலம் வெளிப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      திரு . பாண்டியன் அவர்கள் நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவர்.
      என் கணவரை எல்லோரும் அடையாளபடுத்தும் போது சொல்வது மென்மையாக பேசுபவர், சிரித்த முகம் என்பதுதான்.அன்போடும் பண்போடும் எளிமையாகவும் பழக கூடியவர் என்று தான் அவர்களுடன் பணியாற்றியவர்களும், படித்த மாணவ மாணவிகளும் சொல்வது.

      நீக்கு
  3. நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள பக்கத்தில் முடியேன் வார்த்தையில் ஏன் கேள்விக்குறி இட்டுள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம்.  முன்பே ஏதும் அறிந்திருந்தாரோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், நானும் நினைத்துப் பார்க்கிறேன்.
      நிறைய விஷயங்கள் சார் செய்து வைத்தவைகள் அதை உணர்த்துகின்றன.
      வயதான இருவர் தனிமையில் இருந்தால் பேசும் விஷயங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய நேரிட்டால் அதில் இருக்கும் சூழ்நிலை மற்றங்களை பேசி இருக்கிறார்கள்.

      அவர்கள் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் உள்ள தி. ஜானகிராமனின் "வெயில்" கதையை படித்துப்பார் சோகமான கதை என்று 10 நாட்களுக்கு முன் கொடுத்து பாடிக்க சொன்னார்கள்.

      துணையை இழந்த பட்டமரமாக நின்றார் என்று காதை ஆரம்பிக்கும். வயதானபின் ஒருவர் பிரிவு ஒருவருக்கு எவ்வளவு வேதனை அளிக்கும் என்று இருக்கும்.


      நீக்கு
  4. அன்பு கோமதி வாழ்க வளமுடன். இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.

    என்ன தெளிவான எழுத்து.
    அவரைப் பற்றி அஞ்சலிக் கவிதைகளே
    தேவாரம் படிப்பது போல வெகு இசைவாய் இருக்கின்றன.
    மதிப்பும் மரியாதையும் பெற்ற கணவரைமறுபாதியாக அடைந்த நீங்களும்

    புண்ணியம் செய்தவர்.
    இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம். நீங்கள் சொன்னது போல
    அவர் தமிழைக் கேட்க இறைவனே அழைத்துக் கொண்டார் போல.
    படிக்கும் போதே உங்கள் சோகம் புரிகிறது.
    அமைதி கிடைக்கட்டும் அன்பு கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      நான் புண்ணியாம் செய்தவள்தான் . இறைபக்தியும், அன்பும் நிறைந்தவர்கள்.
      மாயவரத்தில் இருந்து இருந்தால் அவரிடம் படித்த மாணவசெல்வங்கள், சக ஆசிரியர்கள் என்று பாமாலையும், பூமாலையும் சூடி இருப்பார்கள்.
      அவரிடம் படித்த மாணவர் அதே கல்லூரியில் ஆசிரியராக பணி ஆற்றுபவர் பெரிய செய்தி அனுப்பி இருக்கிறார். வாட்ஸப்பில்.

      அவர்களின் விருப்பம் போல் அவர்கள் வாழ்க்கை நிறைவு பெற்று இருக்கிறது. இறைவன் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறார். எனக்கு ?
      மனதுக்கு அமைதியை , ஆறுதலை தர வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. தமிழுடன் நீங்களும் வாழ்வீர் எம்முடன்///இதுதான் யதார்த்தம் அன்பு கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு என்ன செய்வது அக்கா , இதயத்தில் இருத்தி வழிபட்டு ஆறுதல் அடைவதுதான் இப்போதைய பிரார்த்தனை. ஒவ்வொரு செயல்களும் அவர்கள் வழி நடத்தி செல்வதாக நினைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  6. எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாத சோகம். இரங்கல் கவிதைகளும் அவர் நினைவைப் போற்றுபவையே! யாரையும் கடிந்ததில்லை என்னும்போது எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் என்பது தெரிய வருகிறது. தீராத இழப்பு உங்களுடையது! மனதே ஆறாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      குழந்தைகளுகாக என் சோகத்தை மறைத்து கொண்டு நடமாடுகிறேன்.
      அவர்கள் நினைவை போற்றுவது ஒன்றுதான் எனக்கு ஆறுதல் தரும் வழி.
      உயர்பண்புகள் நிறைந்தவர்கள்தாஅன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. சுந்தரர் தமிழ் கேட்க அழைத்துக்கொண்டார்....ஒரு பெரிய மனத்தாக்கத்தை நன்கு பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் மனதிற்கு என்றும் இறைவன் பக்கபலமாக இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      //உங்கள் மனதிற்கு என்றும் இறைவன் பக்கபலமாக இருப்பான்.//

      அது போதும் ஐயா.
      உங்கள் ஆறுதல் மொழிக்கு நன்றி.

      நீக்கு
  8. பாண்டியன் அவர்களின் கவிதையும், ஆசிரியர் அவர்களின் நினைவுரையும் மனதைத் தொட்டது.

    வலையுலகில் மீண்டும் வலம் வருவதில் மகிழ்ச்சிம்மா. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்

      இருவரும் நன்றாக எழுதுவார்கள்.
      நல்லதே நடக்கட்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. எழுதி வைத்துள்ள குறிப்பு சிந்திக்க வைக்கிறது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      ஆமாம் தனபாலன், எழுதி வைத்துள்ள குறிப்பு சிந்திக்க வைக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. தாங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது அறிந்து மகிழ்ச்சி.

    எதுவும் கடந்து போகும்.

    வாழ்க வளமுடன்.

    இரண்டுமுறை அலைபேசியில் அழைத்தேன் யாரும் எடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      ஆமாம் ஜி, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

      வீட்டுக்குள் சில நேரம் சிக்னல் கிடைக்காது, அதுவும் இல்லாமல் என் போன் என் தங்கையிடம் இருந்தது அவள்தான் வரும் அலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாள். என் போன் பால்கனி பக்கம் இருந்து தான் பேசமுடியும் அந்த சமயத்தில் என்னை பால்கனி பக்கம் அழைத்து பேச வைக்க முடியாது என்று எடுக்கவில்லையோ என்னவோ தெரியவில்லையே!

      அழைப்பை எடுத்து பேசமுடியவில்லை என்பதற்கு மன்னிக்கவும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. இரங்கற்பா எங்கள் மனதையும் அசைத்துப் பார்க்கிறது.

    சாரின் படம் மிக அழகு. அமைதியான குணம் முகத்தில் தெரிகிறது.

    அவர் நினைவுகள் உங்களை வழிநடத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      பல வருட நட்பின் வெளிப்பாடு கவிதை. மிகவும் அன்பானவர்.
      நீங்கள் சொல்வது போல் சாரின் நினைவுகள் என்னை வழிநடத்தும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. என்ன சொல்லியும் ஆறாத சோகம்தான்.ஆனாலும் நீங்க அதிலிருந்து மீண்டு எழுத வந்திருப்பதில் மகிழ்ச்சி அக்கா. சாரின் குணநலனை பாண்டியன்சாரின் எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியது போல் அருகில் பாடல்களை கேட்க அழைத்துவிட்டார் போலும்.
    மனதை ஆறுதலபடுத்த எழுத்தில், வாசிப்பில்,நல்ல நினைவுகளில் திசைதிருப்புங்கள், கடவுளும்,சாரும் பக்கபலமாக உங்க கூட இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      ஆறாத சோகம் உள்ளே இருக்கு. அதை மாற்ற அவர்களின் நினைவு பகிர்வு.
      சாரின் குணநலனை பாண்டியன் சார் வெளிபடுத்திய விதம் மனதை தொட்டது அதனால் இந்த பகிர்வு.

      இறைவழிபாடு, உறவுகளுடன் , பேரங்கள், பேத்தியுடன் உறையாடல், பேரனுடன் விளையாட்டு, மற்றும் புத்தக வாசிப்பு என்று என் பொழுதுகளை கழிக்கிறேன்.
      மகன், மருமகள், பேரன் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். மகள், பேத்தி, பேரன் என்று எல்லோரும் தினம் பேசி என் நலனில் அக்கறை செலுத்துகிறார்கள்.
      கொள்கிறார்கள்.

      உங்கள் எல்லோர் நட்பும், கடவுளும், சாரும் பக்கபலமாக இருக்கும் போது வேறு என்ன வேண்டும் எனக்கு!

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  13. இதயத்தில் இருத்தி ஆறுதல் கொள்க..
    சூட்சுமாக ஐயா அவர்கள் தமிழுடனும் தங்களுடனும் இருப்பார்கள்...

    எங்கும் சிவமயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல்தான் ஆறுதல் கொள்கிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. கவிதைகள் மனதைவிட்டு அகலாது. உங்களுக்கு நல்ல மனோபலத்தைக் கொடுக்கட்டும அவரின் நினைவுகள். எல்லாம் நல்லவைகளாகவே நடக்க வேண்டும். நடககும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
      கவிதை மனதை விட்டு அகலாது என்பது உண்மை.
      மனோபலத்தை கொடுக்கவேண்டும் அவர்களின் நினைவுகள்.
      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. “தமிழுடன் நீங்களும் வாழ்வீர் எம்முடன்” உண்மை. நெகிழ்வான பகிர்வு. சாரின் உயர் பண்புகளை மேலும் அறியத் தருவனவாக உள்ளன இரங்கற்பாவும் நினைவுரையும்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்
    சாரை பற்றி பகிருங்கள் ஆறுதல் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்.
    அதுதான் இந்தா பகிர்வு.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகளோடு பயணிப்பதில் ஆறுதல் கிடைக்கும். தொடருங்கள்.

      நீக்கு
    2. ஆமாம் ராமலக்ஷ்மி.
      நினைவுகளை பகிர்வது ஒரு ஆறுதல்தான்.

      நீக்கு
  17. வலையுலகில் உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு நல்ல ஆறுதலையும், மன மாறுதலையும் வலையுலகம் வழங்கும். 

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

    //உங்களுக்கு நல்ல ஆறுதலையும், மன மாறுதலையும் வலையுலகம் வழங்கும். //

    ஆமாம் பானு, நீங்கள் சொல்வது சரிதான்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கோமதி அக்க, நீங்கள் சொன்னதைச் செய்ய ஆரம்பித்துவிட்டீங்கள் மிக்க மகிழ்ச்சி... அழகிய ஆரம்பம் தொடரட்டும்... மொபைல் வழி வந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நலமா?
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு