மதுரையில் அம்மாவீட்டுப் பக்கம் இந்த புட்டுக் கடை இருக்கும் தினம் மாலையில்.
கணவனும், மனைவியும் வித விதமான புட்டு மற்றும் இடியாப்பங்களை சுறு சுறுப்பாக செய்வார்கள். மாலை 6 மணிக்கு ஆரம்பித்தால் 9 மணி வரை கடை நடக்கும் . மிகவும் சுவையாக இருக்கும்.
சாமானியரின் குரல் 2019 ல் போட்ட பதிவு. படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
இன்று மே1 உலக தொழிலாளர் தினம் .உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
இந்த கொரோனா காலத்தில் இப்படி பட்ட சாமானியர்கள் படும் துன்பங்கள் அதிகம். மாதம் வருமானம் வருபவர்களை விட அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர் வாழ்க்கைதான் மிகவும் கஷ்டம்.
விரைவில் அனைவரும் நலமாக வாழ, இயல்பு வாழ்க்கை திரும்ப வர வேண்டும். எல்லோரும் நலமாக வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்.
பெண்ணே! வாழ்க!
நன்றி - வாட்ஸ் அப் செய்தி
பழனியில் ஒரு கடையில் பார்த்த விளம்பரம்.
அவர்களின் வேலைத்திறமையை மனதார பாராட்டினால் மேலும் ஊக்கமாக பணி ஆற்றுவார்கள் என்பது உண்மை. எல்லா துறையிலும் இதை பின் பற்றலாம்.
தேங்காய் , மாங்காய் பட்டாணி சுண்டல்
குழந்தைகளை நம்பி அவர்கள் பக்கமே வரும் பலூன்காரர்கள், பஞ்சுமிட்டாய்க்காரர்கள். பஞ்சு மிட்டாய்
சிவகணங்கள் கொம்பு
சவ்வு மிட்டாய்
மதுரை சித்திரை திருவிழா கோவிலுக்குள் நடந்து விட்டது. இவர்கள் பாடு திண்டாட்டம்.
எல்லோருக்கும் பிடித்த மாங்காய் , காரம் போட்டு மாங்காய் துண்டங்கள் விற்கிறார்.
இவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருப்பார்கள்? அவர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? இறைவன் இந்த சாமானியர்களுக்கும் படி அளக்க வேண்டும். தொழில் அனைத்துமே சரியாக நடைபெறாமல் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு இருக்கிறது. அனைத்தும் நலமாக வேண்டும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஹலோ இதுல என் போட்டோ வரலையே??? அமெரிக்காவிலும் உழைப்பாளர்கள் இருக்கிறார்கள்.. நான் என்னைய சொன்னேன்
பதிலளிநீக்குவணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஅமெரிக்காவில் இருக்கும் உழைப்பாளர் வாழ்க !
வாழ்க வளமுடன்.
உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்று முதல் பாராவில் போட்டு இருக்கிறேன் மதுரைதமிழன். அதில்
மதுரை தமிழுனும் உண்டு தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
உழைப்பாளர் தின வாழ்த்துகள்.
எண்ணி எண்ணி வியக்கும்படியான படங்கள்!!
இத்தனை வியாபாரிகளையும் பார்த்தே எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.!!
அபூர்வமான காட்சியாகிவிட்டதே. சித்திரை விழாவின் காலங்கள்
வெகு அருமையானவை. மதுரை செல்லும் சாலை முழுவதும் வண்டிகள்
சத்தம் மாடுகளின் சலங்கைச் சத்தம்
கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்தனை கிராமங்களிலிருந்தும் மக்கள் குமிந்து கொண்டே இருப்பார்கள்.
ஒரே ஒரு தடவை பாட்டியுடன் சென்றிருக்கிறேன்.
அழகை ஆற்றில் இறங்குவதும்,சுற்றிலும் ஆரவாரம், பஞ்சு மிட்டாய்,
கமர்கட் வியாபாரிகள், வண்ண பலூன்கள்
அத்தனையையும் படங்களாக இந்தப் பதிவில் பார்க்கும் போது
மனம் நிறைகிறது.
அந்தச் சிறுமியின் களங்கமில்லாத சிரிப்பு
மனதை அள்ளுகிறது.
மதுரைக்குப் போகாமலேயே மதுரை இங்கே வந்து விட்டது. மீண்டும் நல்ல காலம் பிறக்கட்டும்.
நிறை நன்றி மா.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி.
இன்னும் நிறைய வியாபாரிகள் படங்கள் இருக்கிறது.
திருவிழாக்களில் எடுத்த படங்கள்தான்.
//மதுரை செல்லும் சாலை முழுவதும் வண்டிகள்
சத்தம் மாடுகளின் சலங்கைச் சத்தம்
கேட்டுக் கொண்டே இருக்கும்.//
ஆமாம் அக்கா, அழகர் வரும் சமயம் கிராம மக்கள் அவருடன் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். சமையல் பாத்திரங்கள் வண்டி மேல் தொங்கி கொண்டு வரும். இப்போது குட்டியானை என்று சொல்லும் வண்டிகளில் வருகிறார்கள். (மினி வேன்கள்)
மக்களுக்கு முன்பு பொழுது போக்கு என்றால் திருவிழாக்கள்தான், அதுவும் மதுரை மக்கள் திருவிழாக்களை மிகவும் ரசனையுடன் கொண்டாடுவார்கள்.
அந்த சிறுமி அழுது கொண்டு இருந்தாள் அம்மா வாங்கி தந்த தலை மாட்டலை தலையில் அணிந்து கொண்ட பின் என்னைப்பார்த்து சிரித்தாள் அப்போது எடுத்தேன்.
//மீண்டும் நல்ல காலம் பிறக்கட்டும்.//
ஆமாம் அக்கா, எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கட்டும்
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
பழைய பதிவு நான் படித்திருக்கிறேன் என்று உறுதி செய்துகொண்டேன்! எனக்கு ஏனோ புட்டு பிடிப்பதில்லை! அதை மட்டும் விற்றால் லாபம் கிடைக்குமா?
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கல் இவர்கள் செய்யும் புட்டு சாப்பிட்டுப்பார்த்தால் சொல்வீர்கள் நன்றாக இருப்பதாக. விக்கி கொள்ளாது அவர்கள் புட்டு. சர்க்கரை, தேங்காய்பூ , சீனி தருவார்கள் சூடாக செய்து தருவார்கள் புட்டு.
இடியாப்பம் மட்டும் செய்து கொண்டு வந்து விடுவார்கள். தேங்காய் பால், அல்லது சர்க்கரை, தேங்காய்பூ, சீனி தனியாக தருவார்கள். இடியாப்பம் நல்ல மிருதுவாக இருக்கும். சுத்தமாய் , வைத்து இருப்பார்கள் அவர்கள் இடத்தை அதனால் வாங்க கூட்டம் இருக்கும்.முன்பதிவு செய்து விட்டு போய் வந்து வாங்கி போவார்கள்.
அதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரம். அங்குள்ள மக்களின் ஆதரவு இருக்கிறது ஸ்ரீராம்.
படங்களும் படங்கள் சொல்லும் செய்திகளும் அருமை. தலைக்குமேல் எத்தனை கடவுளர் இருந்தென்ன... அதானே! நாம் உழைக்கவேண்டும்.
பதிலளிநீக்கு//அதானே! நாம் உழைக்கவேண்டும்.//
நீக்குஅந்த பெண் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து புன் சிரிப்புடன் செய்கிறார்.
தலைக்கு மேல் உள்ள கடவுள் உதவுவார்.
ஊரெங்கிலும் லாக்டவுன் மறுபடி போடுவார்களா என்பதே பேச்சு. ஒருபக்கம் னாய் பரவும் வேகம் கண்டு பயமும் இருக்கிறியாது. எதிர்பார்ப்பும் இருக்கிறது அனைவருக்கும்! ஆளாளுக்கு ஆரூடம் சொல்கிறார்கள்.. நாளை முதல் கம்ப்ளீட் லாக் டவுன்.. திங்கள் முதல் என்று சொல்வாங்க என்று! வீட்டுக்கு வந்த மின்வேலை செய்பவர் சொன்னார்.. இப்போ லாக் டவுன் போட்டா என் மாதிரி அவர்களால் வாழவே முடியாது.. சொல்லும்போதே கண் கலங்கியது அவருக்கு.
பதிலளிநீக்கு//ஆளாளுக்கு ஆரூடம் சொல்கிறார்கள்.//
நீக்குஅதை எல்லாம் கேட்டால், படித்தால் பயம் வரும். மதுரை தமிழன் தன் போஸ்டில் சொன்னது போல் இதுவும் கடந்து போகும் என்று நினைத்து இறைவனை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
வீட்டுக்கு வந்த மின்வேலை செய்பவர் சொன்னார்.. இப்போ லாக் டவுன் போட்டா என் மாதிரி அவர்களால் வாழவே முடியாது.. சொல்லும்போதே கண் கலங்கியது அவருக்கு.//
ஆமாம் , இந்த மாதிரி தொழில் செய்பவர்கள் பாடு கஷ்டம் தான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
குழந்தையின் சிரிப்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு சின்ன பொருளிலேயே அவள் மனம் நிறைந்து விட்டது. எல்லாப் படங்களும் அருமை. இந்த ஜவ்வு மிட்டாய் மதுரையின் திருவிழாக்களில் மட்டுமே காணலாம். இதிலே நிறம் அதிகம் உள்ளதை வாங்காமல் மஞ்சள் நிற ஜவ்வு மிட்டாய்களை வாங்கித் தருவார் பெரியப்பா. நிறமாக உள்ளதைச் சாப்பிட்டால் வாயெல்லாம் நிறம் வந்துடும். அப்பாவுக்குத் தெரிந்தால் அடி, திட்டு கிடைக்கும் என்பதால் பெரியப்பா ரகசியமாக வாங்கித் தருவார். :)))) இப்போதும் இந்த ஜவ்வு மிட்டாய்கள் இருப்பது ஆச்சரியம் தான்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//குழந்தையின் சிரிப்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு சின்ன பொருளிலேயே அவள் மனம் நிறைந்து விட்டது.//
ஆமாம், அதுதான் குழந்தை மனம்.
//எல்லாப் படங்களும் அருமை.//
நன்றி.
ஜவ்வு மிட்டாய் பார்த்ததும் நீங்கள் சொல்வதை நினைத்து பார்த்தேன். அப்படியே சொன்னீர்கள். முன்பு வண்டியூர் மாரியம்மன் திருவிழா படத்தில் ஜவ்வு மிட்டாய் போட்டு இருந்தேன், அப்போது உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து இருந்தீர்கள்.
எத்தனை மிட்டாய்கள் வித விதமாய் வந்தாலும் ஜவ்வுமிட்டாய் இன்னும் கிடைக்கிறது மதுரை திருவிழா சமயம்.
உண்மையிலேயே இத்தகைய உழைப்பாளிகள் வாழ்க்கை தான் திண்டாட்டம். எப்படிப் பிழைப்பார்களோ தெரியவில்லை. இறைவன் தான் கண் திறக்கணும்.
பதிலளிநீக்கு//உண்மையிலேயே இத்தகைய உழைப்பாளிகள் வாழ்க்கை தான் திண்டாட்டம்.//
நீக்குஆமாம். இவர்களை போல காலையில் தோட்டவேலை, கிணறு சுத்தம் செய்யும் வேலை, அம்மி ஆட்டுக் கல் கொத்தும் வேலை, அரிவாள்மனை சாணைபிடிக்கும் கருவியை தூக்கி கொண்டு வீதியில் வருபவர்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டம்.
இறைவன் தான் காக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தலைக்கு மேல் எத்தனை கடவுள் இருந்தாலும் நீ உழைத்தால்தான் உனக்கு சோறு. எத்தனை சத்தியமான வார்த்தை.
பதிலளிநீக்குஅன்றாடங்காய்ச்சிகளை வாழ்வு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இறையே துணை.
//தலைக்கு மேல் எத்தனை கடவுள் இருந்தாலும் நீ உழைத்தால்தான் உனக்கு சோறு. எத்தனை சத்தியமான வார்த்தை.//
நீக்குஆமாம் சத்தியமான வார்த்தைதான்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
திருவள்ளுவரும் சொல்லி விட்டார்.
//அன்றாடங்காய்ச்சிகளை வாழ்வு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இறையே துணை//
ஆமாம் ஜி, அவர்களுக்கு இறையே துணையாக இருந்து காக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉழைப்பாளர் தின வாழ்த்துகள். படங்கள் பகிர்வு அருமை. புட்டு செய்யும் கருவிகளோடு கூடிய படங்கள் நன்றாக உள்ளன. நான் திருமங்கலத்தில் உள்ள போது இந்த மாதிரி சைக்கிளில் வைத்து கொண்டு இடியாப்பம் விற்பவர் ஒருவர் தினமும் வருவார். அருகில் உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகள் வந்து ஆர்வமாக வாங்கிச் செல்வார்கள். அந்த நினைவு வந்தது.
ஆமாம்.. இந்த மாதிரி சிறு வியாபாரிகள் இந்த கால கட்டத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விழாக்கள் காலம் தவிர்த்து, வேறு பல சிறு தொழில்களும் தெரிந்து வைத்திருந்தாலும், அவைகளையும் செய்ய முடியாமல் அவர்கள் பாடு கஸ்டந்தான். திருவிழா படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நேரில் கண்டது போனெற திருப்தியை தங்கள் படங்கள் தந்து விட்டன. நெல்லையிலிருக்கும் போது சிறு வயதில் சில தடவைகள் இந்த மாதிரி தேர் திருவிழாக்களுக்கு சென்றதுதான்.. அப்போதும் கூட்டம் மிகுந்த இடங்களுக்கு அம்மா அழைத்துச் செல்ல மாட்டார்கள். சென்னை மயிலையில் அறுபத்து மூவர் திருவிழாவுக்கும் ஒரிரு தடவைகள் என் குழந்தைகளுடன் சென்றுள்ளேன்.அதுவும் கூட்டம் நிறைந்த திருவிழாதான். அப்போதும் புகுந்த வீட்டில் நிறைய கண்டிப்புகள்தான்.:) என்னவோ அந்த காலங்கள் மனதுள் வந்து போகின்றன.
அந்த பொம்மைகள் சுமை தூக்கி வியாபாரம் செய்யும் பெண் படம், அதன் வாசகங்கள் உண்மைதான். உழைப்பவர்களை பாராட்டும் விளம்பர படமும் கருத்துள்ளதாக உள்ளது உழைப்பவர்களுக்கு அந்தப் பாராட்டுத்தானே ஒரு ஊக்கப் பரிசு.
தான் கேட்டதை அம்மா வாங்கித் தந்த பொருளுடன் அந்த குழந்தையின் திருப்தி கலந்த மகிழ்ச்சி அதன் முகத்தில் நன்றாகத் தெரிகிறது. சரியான கோணத்தில் படமெடுத்து இருக்கிறீர்கள். அத்தனை படங்களும் கண்களுக்கு விருந்தாக இருந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//உழைப்பாளர் தின வாழ்த்துகள்.//
நன்றி.
என்றும் விடுமுறை இல்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என்று வாட்ஸ் அப் செய்தி வந்து இருக்கிறது.
//நான் திருமங்கலத்தில் உள்ள போது இந்த மாதிரி சைக்கிளில் வைத்து கொண்டு இடியாப்பம் விற்பவர் ஒருவர் தினமும் வருவார். //
இடியாப்பம் மதுரையில், கோவையில் சைக்கிளில் கொண்டு வருவார்கள். ஆஸ்பத்திரி வாசலில் நிறபார்கள், வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
வயதானவர்களுக்கு இப்படி வீட்டில் கொடுப்பது வரப்பிரசாதம்.
//விழாக்கள் காலம் தவிர்த்து, வேறு பல சிறு தொழில்களும் தெரிந்து வைத்திருந்தாலும், அவைகளையும் செய்ய முடியாமல் அவர்கள் பாடு கஸ்டந்தான். //
ஆமாம். இப்போது லாக்டவுன் என்றால் இன்னும் கஷ்டம்.
சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
//படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.//
நன்றி.
//உழைப்பவர்களுக்கு அந்தப் பாராட்டுத்தானே ஒரு ஊக்கப் பரிசு.//
எல்லோருக்கும் பாராட்டுத்தான் ஊக்கப்பரிசு.
//தான் கேட்டதை அம்மா வாங்கித் தந்த பொருளுடன் அந்த குழந்தையின் திருப்தி கலந்த மகிழ்ச்சி அதன் முகத்தில் நன்றாகத் தெரிகிறது.//
திருவிழா கடைகளில் சில குழந்தைகள் அழது கொண்டு போகும். சில குழந்தைகள் சிரித்து கொண்டு போகும் .
அத்தனை படங்களையும் ரசித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
படங்கள் அனைத்தும் அருமை... இனிய உழைப்பாளிகள் தின வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அருமை.//
நன்றி.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Testing ....
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் செய்தி வந்து விட்டது.
உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபடங்களும் பகிர்வும் நன்று. சாமானியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே நகருகின்றது.
பதிலளிநீக்கு/விரைவில் அனைவரும் நலமாக வாழ, இயல்பு வாழ்க்கை திரும்ப வர வேண்டும். எல்லோரும் நலமாக வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்./
பிரார்த்திப்போம்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குகொரோனா வந்தது முதல் சாமானியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே நகருகின்றது என்பது உண்மை.
உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
test comment
பதிலளிநீக்குவந்து விட்டது.
நீக்குஏற்கனவே பின்னூட்டம் போட்டேன் .ஆங்கிலத்தில் டெஸ்டிங் னு போட்ட அது உடனே போகுதுதமிழில் போடும் பின்னூட்டம் //நெட்ஒர்க் சேஞ் //என்று காட்டுது ;(
பதிலளிநீக்குமுதல் படத்தில் அந்த கடவுளர்களை சுமக்கும் பெண்ணின் முகத்தில்தான் எத்தனை சாந்தமான புன்னகை .அவர் எதையும் சமாளிப்பர் கடவுளர்களையே கொண்டு போகிறாரே !!எங்க அப்பாவும் அம்மாவும் எப்பவும் இப்படி ரோட்டோர மற்றும் வாராந்திர மார்க்கெட் திருவிழா அங்காடிகளில் தான் பொருட்கள் வாங்குவாங்க .சூப்பர் மார்க்கெட்ல வாங்கி முகம்தெரியாத பணக்காரனுக்கு எதுக்கு லாபத்தை தரணும்னு சொல்லுவாங்க .எல்லா படங்களும் அழகுக்கா .புட்டு குடம் சுற்றி கயிறு கட்டி இருப்பது சூடு கையில் படாம இருக்கன்னு நினைக்கிறன் .அந்த சோளக்கதிரும் மாங்காய் மிளகாய் துண்டங்களை நாவூறவைக்கின்றன .இறைவன் இவங்க எல்லாரையும் பத்திரமாவே காத்திருப்பார்க்கா
//ஆங்கிலத்தில் டெஸ்டிங் னு போட்ட அது உடனே போகுதுதமிழில் போடும் பின்னூட்டம் /நெட்ஒர்க் சேஞ் //என்று காட்டுது ;(//
நீக்குஓ! வியப்பாக இருக்கிறது.
//முதல் படத்தில் அந்த கடவுளர்களை சுமக்கும் பெண்ணின் முகத்தில்தான் எத்தனை சாந்தமான புன்னகை //
ஆமாம் ஏஞ்சல், அதுதான் எனக்கு பிடித்து விட்டது அதனால்தான் இந்த படத்தை பத்திர படுத்தினேன்.
நிறைய வசதிகளுடன் வாழும் சிலர் இப்படி புன்னகையை மறந்து கவலை தோய்ந்த முகத்தில் இருப்பார்கள்.
உங்கள் அப்பா, அம்மா இருவரும் சிறு தொழில் செய்பவர்களை ஆதரித்தார்கள் என்பது கேட்க மகிழ்ச்சி.
//புட்டு குடம் சுற்றி கயிறு கட்டி இருப்பது சூடு கையில் படாம இருக்கன்னு நினைக்கிறன்//
ஆமாம் ஏஞ்சல். நாகர் கோவில் பக்கம் மூங்கில் புட்டு குழாய் இருக்கும் அதில் கயிறு கட்டி இருப்பார்கள்.
//அந்த சோளக்கதிரும் மாங்காய் மிளகாய் துண்டங்களை நாவூறவைக்கின்றன .//
ஆமாம், சிறு வயதில் (பள்ளி பருவத்தில்) எத்தனை சாப்பிட்டு இருப்போம்.
நீங்கள் இப்போதம் சாப்பிடலாம். அக்காவிற்கு பல் கூசும் வயதாகி விட்டதால்.
.//இறைவன் இவங்க எல்லாரையும் பத்திரமாவே காத்திருப்பார்க்கா //
அந்த நம்பிக்கைதான் மகிழ்ச்சி தருகிறது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
புட்டு, இடியாப்பம் - ஆஹா... பதிவை நேற்றே படித்தேன். கருத்திடவில்லை.
பதிலளிநீக்குபனங்கிழங்கு - சாப்பிட்டு யுகங்களாகின்றன
படங்கள் அழகு. கிராமத்துத் திருவிழா எத்தனையோ பேருக்கு வியாபாரத்துக்கு உபயோகமாக இருந்தது. அவங்கள்லாம் இப்போ சிரமப்படுவாங்க என்று நினைக்கிறேன்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஇரண்டு பதிவுகளில் உங்களை காணோம் என்று நினைத்தேன், இன்று வந்து விட்டீர்கள்.
பனங்கிழங்கு இப்போது ஒத்துக் கொள்வது இல்லை. மாயவரத்தில் இருந்த போது அடிக்கடி சாப்பிடுவேன். சாருக்கு பிடிக்காது எனக்கு மட்டும் வாங்கி செய்ய அலுப்பு.
இப்போது அதை சாப்பிட்டால் வாயு தொந்திரவு வந்து விடுகிறது.
ஊர் ஊராக திருவிழா சமயம் வியாபாரம் செய்து அந்த காசை வைத்து வாழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். எந்த ஊர் திருவிழா என்றாலும் போய் விடுவார்கள் கடை போட. அந்த மாதிரி உள்ளவர்களுக்கு கஷ்டம். வார சந்தையை நம்பியவர்கள் பாடும் கஷ்டம் தான். இயல்பு வாழ்வு திரும்பும் வரை மக்களின் வாழ்வாதாரம் சிரமம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆவ்வ்வ்வ் கோமதி அக்கா, கோயில் வீதிப் படங்கள் பார்க்க ஆசையாக இருக்குது அனைத்தையும் வாங்கோணும் என:)... பனங்கிழங்கு.. நேற்றும் தமிழ்க் கடைக்குப் போன இடத்தில் கிடைத்தது வாங்கி வந்து இன்று அவிச்சுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே.
பதிலளிநீக்குபுட்டுக்குழல் அழகு.. இப்படி சில்வர் புட்டுக்குழல்தான் என்னிடமும் உள்ள்?அது.
உழைப்பாளர்களுக்கேற்ற அழகிய பதிவு.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//கோயில் வீதிப் படங்கள் பார்க்க ஆசையாக இருக்குது அனைத்தையும் வாங்கோணும் என:)//
ஆமாம், அப்படித்தான் ஆசையாக் இருக்கும். எல்லாம் அழகாய் இருக்கும்.
//பனங்கிழங்கு.. நேற்றும் தமிழ்க் கடைக்குப் போன இடத்தில் கிடைத்தது வாங்கி வந்து இன்று அவிச்சுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே.//
பார்த்தேன் உங்கள் காணொளி. நன்றாக இருக்கிறது.
//புட்டுக்குழல் அழகு.. இப்படி சில்வர் புட்டுக்குழல்தான் என்னிடமும் உள்ள்?அது.//
மருமகளிடமும் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உழைப்பாளர்கள் நன்மை பெற வேண்டும். அழகான படங்கள் அதற்கான விளக்கங்களும் உங்கள் பதிவும் அருமை! சகோதரி!
பதிலளிநீக்குதுளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//உழைப்பாளர்கள் நன்மை பெற வேண்டும்.//
ஆமாம் , அதுதான் எல்லோரும் விரும்புவது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அக்கா கோயில் திருவிழா படங்கள் வாவ்...கடை விரித்து அதில் இருக்கும் பீங்கான் ஜாடிகள் எல்லாம் அள்ளி எடுத்துவரணும் போல இருக்கு!!! ரூபாய் கொடுத்துதான்!! ஹா ஹா..
பதிலளிநீக்குஎல்லாப் படங்களுமே அழகு ஆமாம் இந்த மாயாவியின் வேலையால் உழைப்பாளர்கள் பலரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் மிகவும் நலிந்த நிலையில். பலரும் தொழில் மாற்றியும் பார்க்கிறார்கள். பாவம் எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும்..
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//வாவ்...கடை விரித்து அதில் இருக்கும் பீங்கான் ஜாடிகள் எல்லாம் அள்ளி எடுத்துவரணும் போல இருக்கு!!! ரூபாய் கொடுத்துதான்!! ஹா ஹா..//
ஆமாம், கீதா எல்லாம் அழகான ஜாடிகள்.
மாயாவி மாயமாய் மறைந்தால் நல்லது அனைவர் வாழ்விலும் நல்லது நடக்கும்.
தொழில் மந்தம்தான். வேறு தொழில் பார்த்து நன்றாக இருப்பார்கள் என்று நம்புவோம்.
எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் அதுதான் பிரார்த்தனை.
நம் வீட்டிலும் புட்டுக் குழல் உண்டு. பனங்கிழங்கு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு கோமதிக்கா...சென்னையிலாவது தென்படும். இங்கு காணவே இல்லை..
பதிலளிநீக்குகீதா
உங்களிடம் புட்டுக்குழல் இல்லையென்றால் எப்படி!
நீக்குமார்க்கெட்டில் கிடைக்கும் , ஆனால் போக முடியாது இப்போது இல்லையா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உழைப்பு என்றும் உயர்வு தரும்...
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் நல்லதொரு பதிவு..
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//உழைப்பு என்றும் உயர்வு தரும்...//
உழைப்பு உயர்வு தரும் என்பது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.