புதன், 3 மே, 2017

அன்னைமீனாட்சிக்கு அழகான திருவிழா!


' பன்னிரு மாதங்களும் நான்மாடக்கூடலிலே 
அன்னை மீனாட்சிக்கு அழகான திருவிழா! அழகான திருவிழா! ' 

என்று காலையில் வாணி ஜெயராம் அவர்கள் தன் இனிமையான குரலில் பாடினார்கள்  ரேடியோ மிர்ச்சியில்.

'மண்செய்த புண்ணியம்  அன்னையின் திக் விஜயம், 
பட்டாபிஷேகம்,  திருக்கல்யாணம்'

 என்று பாடினார். 
இந்தப் பாடலில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன திருவிழா வரும் என்று பாடினார்.

வைகாசியில்- வசந்தவிழா
.
ஆனியில்-         ஊஞ்சல் விழா.

ஆடி மாதம் -    முளைக்கொட்டு திருவிழா ( அம்மனுக்கு மட்டும் நடக்கும்                                            திருவிழா)

ஆவணியில்-  மூலம் விழா, சுந்தரர் பட்டாபிஷேகம், திருவிளையாடல் புராண                              விழா. விழாவை கண் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தும் 
                              ஆனந்தத் திருவிழா.

புரட்டாசியில்- அம்மன் கொலு மண்டபத்தில் கொலுவீற்றிருக்கும்  திருவிழா.

ஐப்பசியில்  - கோலாட்ட விழா.

கார்த்திகையில் -  தீபத்திருவிழா.

மார்கழியில் - எண்ணெய்க் காப்புத் திருவிழா.

தையில்-           தெப்பத் திருவிழா.

 மாசியில் -    மகத்திருவிழா.

பங்குனியில்- கோடை வசந்த விழா 

என்று அழகாய்ப் பாடினார் திருவிழாக்களைப் பற்றி வாணி ஜெயராம். நீங்களும் அந்தப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.


உடனே  நேற்று பார்த்து வந்த சித்திரைத் திருவிழாவின் படங்களை வலையேற்ற ஆசை  வந்து விட்டது. 

ஐந்தாம் நாள் திருவிழா.

சுவாமியும் பிரியாவிடையும்
சுவாமியின் வலது பக்கம் நான் நின்றேன், அதனால் அம்மன் தெரியவில்லை
அம்மனின் சடை அழகு இரண்டு ஜடை பட்டி  அலங்காரம்
மீனாட்சி அம்மன்




மீனாட்சி அம்மனின் ஜடை அலங்காரம்
விநாயகர்
சண்டேஸ்வரர்

தந்தையின் தோளில் திருவிழா பார்ப்பது மகனுக்கு ஆனந்தம், அப்பாவிற்கு சுகமான சுமை.

சுவாமியும், பிரியாவிடையும் தங்கக் குதிரையில் பவனி வரும் காட்சி
திருவிழா  வந்து விட்டுப் போகும் போது பலூன் இல்லாமலா?


சுவாமி வரும் முன் கட்டியம் கூறி வந்த காளை மாடு
அதற்கு அடுத்து வந்த ஒட்டகம்
அடுத்து வந்த கோவில் யானை
கோலாட்டம் ஆடி வந்த சிறுமிகள்
மீனாட்சியாக வேடமிட்ட சிறுமிகள்.
கருப்பசாமி வேடமிட்டு ஆடி வந்த சிறுவர்கள்.
பஞ்சு மிட்டாய் -கலர் கலராய்

முன்பு மணி அடித்துக் கொண்டு பஞ்சு மிட்டாய் பஞ்சுமிட்டாய் என்று கூவிக் கொண்டு வருவார்கள், கண்ணாடி ஜாடிக்குள் வைத்துக் கொண்டு  குழந்தைகள்  ஓடி வருவார்கள் காகிதப் பொட்டலத்தில் பூ போல எடுத்து வைத்துக் கொடுப்பார், பஞ்சுமிட்டாய்க்காரர். குழந்தைகளும் பொட்டலத்தை அமுக்காமல் கொண்டு வருவார்கள் அமுக்கி விட்டால் அவ்வளவு தான்! நன்றாக இருக்காது, பூப் போல வாயில் போட்டுச் சுவைக்க வேண்டும். இப்போது அதையும்  பாலித்தீன் கவரில்  அடைத்து விற்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஜவ்வுமிட்டாய் ! ஜவ்வு மிட்டாய்! சிறு வயதில் அந்த ரோஸ் கலர் மிட்டாய் சாப்பிட்டு உதடு, நாக்கு எல்லாம் ரோஸ் கலர் ஆக்கிக் கொண்டு திரிந்த காலங்கள்  இப்போது கலர் இல்லாத மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன். முன்பு இருந்த சுவை இல்லை.
 பருத்திப்பால்  பி காம்ப்ளக்ஸ் சத்து இருக்கிறதாம், பசி உணர்வைக் கட்டுப்படுத்தும், நெஞ்சு சளியைக் குறைக்குமாம், அதிகமாய்ப் பளு தூக்குபவர்களுக்கு வரும் நெஞ்சுவலியைக் கட்டுப்படுத்தும் என்று   சொல்கிறார்கள்.



  • ப‌ருத்திக் கொட்டை -‍ 100 கிராம்


  • ப‌ச்ச‌ரிசி - 3 டேபிள்ஸ்பூன்


  • வெல்ல‌ம் -‍‍‍‍‍ 300 கிராம்


  • சுக்கு - ‍சிறிது அள‌வு


  • தேங்காய் துருவ‌ல் -‍ தேவையான‌ அள‌வு



  • ப‌ருத்திக் கொட்டையை ந‌ன்கு ஊற‌வைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ள‌வும்.


  • ப‌ச்ச‌ரிசியை சிறிது நேர‌ம் ஊற‌வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள‌வும்.


  • அரைத்த‌ ப‌ச்ச‌ரிசி மாவை ப‌ருத்தி பாலுட‌ன் க‌ல‌ந்து அடுப்பில் ஏற்றி கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.


  • பால் க‌ல‌வை சிறிது கெட்டியாக‌ பொங்கி வ‌ரும் போது வெல்ல‌ம் க‌ல‌ந்து கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.


  • வெல்ல‌ம் முழுதும் க‌ரைந்த‌வுட‌ன் சுக்கு, தேங்காய் துருவ‌ல் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் க‌ழித்து இற‌க்க‌வும்.


  • சூடான‌ சுவையான‌ ப‌ருத்திப் பால் த‌யார்.

  • நன்றி  அறுசுவை .

வெயில் காலத்தில், குடை, விசிறி  தானம் செய்யலாம் என்கிறார்கள்.
மீனாட்சி கோவில் வாகனம் நிறுத்தும் இடத்தில் குடை தானம் அளித்து பக்தர்களுக்கு நிழல் தந்து இருக்கிறார்கள். குடை கொடுத்த கொடையாளி வாழ்க!

                                                                  வாழ்க வளமுடன்!
                                                                          ----------------


28 கருத்துகள்:

  1. புகைப்படங்களை தரிசித்தேன் விபரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்.. தங்களுக்கே உரிய தனித்துவத்துடன் கூடிய பதிவு..

    அன்னை மீனாக்ஷியின் அருள் அனைவருக்கும் ஆகுக!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. எல்லா படங்களையும் ஒவ்வொன்றாக ரசித்தேனக்கா ..குடை கொடுத்த கொடையாளிகள் நல்லாருக்கணும் ..
    ஜவ்வு மிட்டாய்ல்லாம் எப்பவோ சாப்பிட்டது ..குழந்தைகள் கோலாட்டம் கும்மி அப்புறம் மீனாட்சி வேடமிட்டது எல்லாம் அழகும் அருமையும் ..

    அந்த கலர் ஆபரணம் அணிந்து வந்து மாடு அழகா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன். படங்களை ரசித்தமைக்கு நன்றி. முன்பு மாதிரி இல்லை சவ்வு மிட்டாய். நிறைய மீனாட்சிகள் வந்தார்கள் நான் எடுத்தது கொஞ்சம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அற்புதமான படப்பிடிப்பு! அழகழனான விவரிப்பு!

    சித்திரை மாதம் பிறந்தாலே மதுரை நினைவுக்கு வந்து விடும். அருள்மிகு மீனாட்சி அம்மனின் திருவீதி உலா! கண்கொள்ளாக் காட்சி!

    மதுரைத் தெருக்களில் பாலைவன ஒட்டகத்தைப் பார்த்தது பொருத்தமான வித்தியாசமாக இருந்தது.

    வாகனங்களுக்கு நிழற்குடையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன். திருவிழா படங்களை ரசித்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் சித்திரை என்றாலே மதுரை திருவிழா நினைவு எல்லோருக்கும் வரும்.
      வாகனத்தை நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து போகும் பாதையில் குடை பந்தல் அமைத்து இருக்கிறார்கள். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. எத்தனை திருவிழாக்கள் என்றாலும் மதுரை அல்லோலகல்லோலப் படுவது சித்திரையில்தானே
    /தந்தையின் தோளில் திருவிழா பார்ப்பது மகனுக்கு ஆனந்தம், அப்பாவிற்கு சுகமான சுமை/ தந்தையின் தோளில் அமர்ந்து கடவுளைக் கண்டேன் ஆனால் அப்போது கடவுளின் தோள் மீது அமர்ந்திருந்தது தெரியவில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார்.
      நீங்கள் சொல்வது சரிதான் சித்திரை திருவிழாதான் மதுரை திமிலோகப்படும்.
      தந்தை முன்னறி தெய்வம் என்று அறியாத குழந்தை பருவம் தானே?
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    உங்கள் உடன் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அன்னை மீனாட்சியின் அழகுச் சித்திரைத் திருவிழா உங்கள் படங்களின் மூலம் கண்டு களித்தேன். மிக்க அழகு. பூச்சடையும்,அழகுமீனாட்சிகளும்,பஞ்சு மிட்டாயும்,மற்றும் எல்லாப்படங்களும் மிக்க அழகு. தரிசனம் கிடைத்தது. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன். உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உங்கள் அன்பு எப்போதும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. மதுரை மீனாக்ஷி அம்மன் போலவே மிக அழகான பதிவு.

    எத்தனை எத்தனைப் படங்கள். அத்தனையும் அருமையோ அருமை.

    நேரிலேயே மதுரைக்கு வந்து அந்தத் திருவிழாவினைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது இந்தத்தங்களின் பதிவினைப் பார்த்ததும்.

    பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி.
    தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மனமெல்லாம மதுரையில்தான் இருக்கிறது
    (தற்சமயம் அமெரிக்காவில் இருந்தாலும்)
    அங்கு இல்லாத குறையை தங்கள்
    அற்புதமான படங்களையும், பதிவையும்
    படித்து ஆறுதல்படுத்திக் கொள்கிறோம்

    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  12. 5, 6 முறை மதுரைக்கு வந்து மீனாட்சியை தரிசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை சென்னை வந்து சேர்ந்ததும் மீண்டும் அன்னை மீனாட்சியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழும். அடங்காத ஆசை.

    சித்திரைத் திருவிழா படங்கள் அருமையோ அருமை.

    நேரில் வந்து பார்த்ததுபோல் இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  13. மிக அருமை... அழகான திருவிளாக் கோலம். ஆரம்பம் குதிரை வாகன முகம்தான் பெரிசா தெரியுது.. அப்போ இந்த அம்மனின் முகம் குதிரைபோல இருக்குமாக்கும் என நினைச்சிட்டேன்ன்.. பின்பு பார்த்தால் பின்னாலே அம்மன் இருக்கிறா.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அழகோ அழகு.

    ஒரு உண்மையைச் சொல்லவா? அத்தனை வருடங்கள் மதுரையில் இருந்தும் இந்தத் திருவிழாக்களை பார்த்ததே இல்லை தெரியுமா?

    மதுரையின் தெருக்களை படங்களில் பார்க்கும்போதும் நினைவுகள் மதுரையைச் சுற்றுகின்றன.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    அமெரிக்காவில் இருந்தாலும் அன்னையின் நினைவு
    நம்மை வழி நடத்தும்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஜெயந்தி ரமணி, வாழ்க வளமுடன்.
    போனவருடம் போட்ட சித்திரை திருவிழா பதிவுக்கும் வந்து கருத்து சொன்னீர்கள்.
    இந்த ஆண்டும் வந்து கருத்து சொன்னதிலிருந்து அன்னை மீனாட்சியின் மேல் உள்ள உங்கள் ஆசையும் அன்பும் புரிகிறது.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    குதிரை வாகனம் பெரிதாகதான் இருக்கும், அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அம்மன் சுவாமி சிலைகள் சிறியாதாக தான் இருக்கும். சுவாமியைவிட சுவாமியுடன் உடன் வரும் பிரியவிடை மிக சிறிய உருவம். உங்கள் கணினியில் இப்போது என் தளம் மக்கர் செய்யாமல் தெரிகிறதா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் இருந்த பக்கம் அழகர் திருவிழா நடக்கும் அந்த திருவிழாவை ரசிப்பீர்கள் அல்லவா?
    மீனாட்சி திருவிழாவை ஒரு முறைகூட பார்த்த்து இல்லை என்பது ஆச்சிரியமாய் உள்ளது.
    மதுரை தெருக்கள் நினைவுகளில் சுற்றுவத்ற்கு சில காரணம் உங்களுக்கு உண்டு இல்லையா?
    இனிய சந்திப்புகள் நினைவில் வரும் தானே?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அழகான தொகுப்பு. கூட்டத்துக்குள் சிரமப்பட்டு எடுத்திருப்பீர்கள். திருவிழாவைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

  21. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    கூட்டத்துக்குள் போய்தான் எடுத்தேன் தங்க்கை எல்லாம் பத்திரம், பத்திரம் என்றார்கள்.
    திருவிழாப்பார்த்த உணர்வு கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. படங்கள் அழகு! மதுரையில் இருந்த சமயம திருவிழா பார்த்ததுண்டு. பல வருடங்கள் ஆகிவிட்டன...பல நினைவுகள்..

    கீதா: அக்கா படங்கள் அழகு...பருத்திப்பால் ஆம் மிகவும் நல்லது...உங்கள் குறிப்பைக் குறித்துக் கொண்டேன்....கடையில் பருத்திப்பால் பொடி விற்கப்படுகிறது அதனை நான் வாங்கி வந்து வீட்டில் குடிப்பதுண்டு...

    அட கலர் இல்லா மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டீர்களா!!! ஆம் முன்பு ரோஸ் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு வாய் கை எல்லாம் ரோஸாக .....அது சட்டென்று போகாது...

    மதுரை என்றாலே திருவிழா தான் போலும். மதுரையே எப்போதும் ஜே ஜே என்று இரவு கூட கலகலவென இருக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். எங்கள் உறவினர் அங்கு இருக்கின்றார்கள் நானும் இரவு மதுரையைக் கண்டிருக்கிறேன்...




    பதிலளிநீக்கு
  23. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
    நான் இன்னும் பருத்திப்பால் குடித்தது இல்லை கீதா.
    ரோஸ் மிட்டாய் வாங்க்கி சாப்பிட்டு நாக்கை நீட்டிப் பார்த்த காலங்க்கள் மறக்காது.

    மதுரைக்கு உறங்கா நகர் என்ற பேர் அல்லவா!
    மதுரை எப்போதும் கல கல தான்.
    உங்கள் வரவுக்கும், தொடர் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு