புதன், 31 மே, 2017

கிராமியக் கோயில்


பல்லுயிர் ஓம்புக என்று ஒரு கட்டுரையை  தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் திரு . துரைசெல்வராஜூ அவர்கள்  மே மாதம் 22ம் தேதி    சர்வதேச  பல்லுயிர் பெருக்க நாள் அன்று   எழுதி இருந்தார்கள்.  படிக்காதவர்கள் படிக்கலாம் அருமையான கட்டுரை. மரங்கள், குளங்களைப் பாதுகாத்தால் அதில் வாழும்  உயிரினங்கள் வாழும் என்றார். உண்மைதான் குளம், குட்டைகள், ஏரிகள், மரங்களில் எவ்வளவு உயிரினம் அடைக்கலமாக  உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. !

//பாலை நிலத்தைக் கூட இல்லை பாழ் நிலத்தை அல்லவா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்கள். //

நான் அவர்கள்  பதிவுக்குப் பின்னூட்டம்    போட்டபோது இந்த பொன்மேனி ஐயனார்    கோவிலைப்பற்றியும் அங்கு இருக்கும் மரங்கள், பறவைகள் பற்றியும்  குறிப்பிட்டு இருந்தேன்.

எனக்கும் பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்று ஆசை உண்டு. இன்னும் இப்படி சில இடங்களில்  கிராமிய மணம் கமழும் கோவில்கள் இருப்பது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.

கிராமக் கோவில்கள் மரங்கள் சூழ வெகு அழகாய் இருக்கும். ஏரி, குளம் என்று  இருக்கும்  சுற்றுவட்டார மக்கள் அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். இப்போது கிராமங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது.

எங்கள் குலதெய்வம்  இருக்கும் மடவார்விளாகம்  (திருநெல்வேலி அருகில்) அமைந்து இருக்கும் இடம் ஆலமரங்கள் , பெரிய ஏரி வயல்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் விளங்கும்.  இந்த முறை போனபோது ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது. வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது.

           
                                     குலதெய்வம் கோவில் ஏரியின் கடைக்கோடியில்
                                                             காய்ந்து கிடக்கும் ஏரி

இங்கு மதுரை வந்தபோது , இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப் பார்த்தபோது எனக்கு எங்கள் கோவில் நினைப்பு வந்து விட்டது. இங்குள்ள ஆலமரம், வேப்பமரம், புளியமரம், வில்வ மரம், அருகில் இருக்கும் பனைமரம் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். காற்று அடிக்கும்போது   பனைமரம் போடும் சலசலப்பு,  எவ்வளவு பறவைகள் இங்குள்ள ஆலமரத்திற்கு வந்து ஆலம்பழத்தைச் சாப்பிட்டு அதன் நிழலில் இளைப்பாறுகிறது.

புளியமரத்தில் பறவைக் கூடு இருக்கிறது.

வேப்பமரத்தில் பழுத்த பழங்களுக்கு கிளிகள் வருகிறது. பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கும், ஆடு, மாடு, கோழிகளுக்குக் கோவில் முன்பகுதி  இடம் தான் வாழும் இடமாய் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இடமாய்  கோவில்  இருக்க வேண்டும் எப்போதும்.

கோவிலை சீர் அமைப்பவர்கள் பழமையைச் சிதைக்காமல்  காத்தால் நல்லது. மரங்களை வெட்டாமல் குளங்களைச் சீர் அமைத்தால்  அதில் வாழும் பல்லுயிர்களும் வாழும்.

குளம் தூர்வாரப்படுகிறது என்று இன்றைய செய்தியில் சொன்னார்கள். குளங்களில் மீண்டும் நீர் வந்து  எங்கும் இயற்கை  பசுமையாக  இருக்க வேண்டும்.

கோவிலின் முன் பகுதி - ஆடு, மாடு, கோழிகள்,  சுதந்திரமாய்த் திரியும், ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி  குழந்தைகள் விளையாடுவார்கள்

இயற்கைப் பின்னணியில் கோவில் குதிரைகள்
கோழி குஞ்சுகளுக்கு  இரை அளித்துக் கொண்டு இருந்தார் ஒரு பெண் ,கோவில்  வாசலில்
ஆடு, மாடு, கோழி,  சேவல்

ஆகிய செல்வங்களுடன் இந்நாட்டு மன்னர்

நெல்லை காந்திமதி  அம்மன் குளம்
குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாகக் காட்சி அளித்தாலும்  அங்கு கிடைக்கும்  உணவுக்காகக் காத்து இருக்கும் முக்குளிப்பான்கள்

தென்காசி ஊரில் உள்ள  குளத்தில்  பறவைகள் (முக்குளிப்பான்கள்}

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மொட்டை மரத்தில் மோன தவம் செய்யும் இரட்டைவால் குருவி.

மீண்டும் மரம் துளிர்த்து  வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறதோ இந்த  இரட்டை வால் குருவி. ! அதனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தனை செய்வோம். 
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஏரி, குளம்,  கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி  அளவாய்ப் பொழிய
மக்கள் வளமாய் வாழ்க !

வாழ்க வளமுடன்.

"நாளை சர்வ தேச குழந்தைகள் தினம் "   குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

34 கருத்துகள்:

  1. அழகழகான படங்களுடன் பசுமையான பதிவு அக்கா ..நானும் அவரது பதிவை படித்தேன் .
    இந்நாட்டு மன்னர் பேரரசர் தான் எத்தனை செல்வம் கொடுத்தாலும் அவர் முகத்திலும் மனதிலும் இருக்கும் சந்தோசம் என் போன்ற நகரவாசிக்கு கிட்டாதது ..கோயில் முன்புறம் காட்சிகள் அருமை எத்தனை ஜீவன்களுக்கு அடைக்கலமாயிருக்கிறார் இறைவன் இக்கட்சிகள் நிலைத்திருக்கணும் எப்பவும்னு வேண்டுவோம் .

    பதிலளிநீக்கு
  2. இக்காட்சிகள் நிலைத்திருக்கணும் எப்பவும்னு வேண்டுவோம் .

    பதிலளிநீக்கு
  3. கிராமீய சூழ்நிலையுடன் காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.

    ஆடு, மாடு, கோழிகள், பறவைகள், கிராமக் கோயில்கள் என அத்தனையும் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    ஒவ்வொன்றையும் பார்க்கவே கிராமத்திற்குச் சென்றுவந்தது போல மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    வற்றிய ஏரி / குளம் / ஆறு போன்றவைகளைப் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது

    ஒவ்வொன்றும் எப்படிச் செழிப்பாக இருந்தன என்பதை நினைத்தால் ஏக்கமாகத்தான் உள்ளது.

    எங்கும் நன்றாக மாதம் மும்மாரி பெய்து, மரம் செடி கொடிகளெல்லாம் துளிர்த்து, குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க இறைவன் அருளட்டும்.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோ நிறைவான விடயங்கள் அழகிய படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. கிராமம் என்றாலே அழகுதான், அதில் கிராமக் கோயில் சொல்லவா வேண்டும். கோயில் காட்சிகள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. கோழிக்குஞ்சுகளோடு கோழி, ஆட்டுடன் குட்டி, ஆலம் விழுதில் ஊஞ்சல்... அத்தனையும் அருமை... நேரில் போய்ப் பார்க்கோணும் எனும் ஆசை வருது.

    பதிலளிநீக்கு
  7. மண் மணக்கும் பதிவு..

    தங்கள் குலதெய்வத்தின் திருக்கோயிலுக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி...

    எனது பதிவையும் குறிப்பிட்டுச் சொல்லியதைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..

    இத்தகைய அன்பின் உறவுகளைப் பெறுதற்கு என்ன தவம் செய்தனமோ?.. என்றிருக்கின்றது..

    குல தெய்வங்களின் திருக்கோயில்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதே -
    அந்த வட்டாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்...

    படங்கள் நேர்த்தியாக இருந்தாலும் நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் காட்சிகள் வருத்தத்தை அளிக்கின்றன..

    நிலைமை சீராக வேண்டும்.. அதற்காக வேண்டுவோம்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    //இந்நாட்டு மன்னர் பேரரசர் தான் எத்தனை செல்வம் கொடுத்தாலும் அவர் முகத்திலும் மனதிலும் இருக்கும் சந்தோசம் என் போன்ற நகரவாசிக்கு கிட்டாதது //

    ஆமாம் ஏஞ்ச்ல், கிராமத்தில் உள்ள தோப்பு துறவு, கால்நடைகள் எங்கும் இருக்கும் பசுமை, அதை தேடி வரும் பற்வை கூட்டங்கள் என்று கிராமவாசி கொடுத்து வைத்தவர்களாக இருந்தார்கள். இப்போது மழை இல்லாமல் கஷ்டபடுகிறார்கள்.

    வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்து உள்ளது.
    மீண்டும் இய்றகை எங்க்கும் ஆட்சி செய்ய இறைவன் அருள வேண்டும்.

    விரைவில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    மதுரையில் உள்ள இந்த கோவிலை பார்த்தவுடன் கிராமத்திற்கு வந்த உணர்வுதான் எனக்கும் ஏற்பட்டது.
    வற்றிய ஏரி / குளம் / ஆறு போன்றவைகளைப் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது //

    மீண்டும் அதில் நீர் பார்த்தால் ந்ம் உள்ளங்கள் மகிழும்.

    //ஒவ்வொன்றும் எப்படிச் செழிப்பாக இருந்தன என்பதை நினைத்தால் ஏக்கமாகத்தான் உள்ளது.

    எங்கும் நன்றாக மாதம் மும்மாரி பெய்து, மரம் செடி கொடிகளெல்லாம் துளிர்த்து, குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க இறைவன் அருளட்டும். //

    அருமையாக சொன்னீர்கள் .

    மக்கள் குடிநீருக்கும் படும் அவதியைப் பார்த்தால் மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    //கிராமம் என்றாலே அழகுதான், அதில் கிராமக் கோயில் சொல்லவா வேண்டும்//

    கிராமம் என்றாலே அழகுதான் அதிரா.


    //கோழிக்குஞ்சுகளோடு கோழி, ஆட்டுடன் குட்டி, ஆலம் விழுதில் ஊஞ்சல்... அத்தனையும் அருமை... நேரில் போய்ப் பார்க்கோணும் எனும் ஆசை வருது//

    வாங்க பார்க்கலாம்.


    உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  12. நேற்று செய்தித்தாளில் படித்த செய்தி.. திருவண்ணாமலை கோபுரங்களில் இருக்கும் சிறு கதவுகளை மராமத்துப் பணிகள் காரணமாக மூடி வைத்திருந்தார்களாம். புறாக்களும் வேறு சில பறவைகளும் இந்த வெயிலுக்கு ஒண்ட இடமில்லாமல் தவித்துப் போயினவாம். சமூகநல ஆர்வலர்களின் முயற்சிக்குப் பிறகு நேற்று அந்த கதவுகள் திறக்கப்பட, அந்தப்பறவைகள் சந்தோஷமாக உள்ளே நுழைந்து கொண்டனவாம்.

    பதிலளிநீக்கு
  13. தமிழ்நாட்டில் கோவில் குளங்கள், மற்றும் ஏரிகள் எல்லாமே இப்படித்தான் காய்ந்து கிடக்கின்றன. மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே தூர் வாரும் பணியைத் தொடங்கியிருக்கலாம். இப்போதுதான் மெல்ல ஆரம்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    எங்கள் குலதெய்வ கோவில் படம் இரண்டுதான்.
    மீதி எல்லாம் மதுரை பொன்மேனியில் உள்ள ஐயனார் கோவில்.
    எங்கள் குலதெய்வம் கோவில் வயல்கள் சூழ்ந்த களம் அடிக்கும் இடத்தில் ஏரி, வயல் என்று இருக்கும்.களக்கோடி சாஸ்தா. ஊருக்கு வெளியே களம் அடிக்கும் ஊர் கோடியில் இருப்பதால் களக்கோடி சாஸ்தா என்று பெயர்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் மடவார்விளாகம் என்று பெயர்.


    இந்த கோவில் மதுரை பொன்மேனியில் உள்ளது. எங்கள் கோவில் போல் உள்ளது என்றேன்.


    //குல தெய்வங்களின் திருக்கோயில்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதே -
    அந்த வட்டாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்...//

    ஆமாம், காவல் தெய்வங்கள் அல்லவா, ஊரை, குடும்பத்தை காக்கும் தெய்வம் அல்லவா!

    வருடம் ஒருதடவை குடும்பத்துடன் போய் கடவுளையும், இயற்கையையும் ஆராதித்து வரும் போது புத்தணர்ச்சி கிடைக்கும்.

    தங்கள் பதிவு எல்லோருக்கும் பிடிக்கும் . அந்த பதிவு என்னை இந்த பதிவை எழுத வைத்தது, நன்றி.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    கோவில் கோபுரங்கள், மாடங்களில் தான் புறாக்கள் வாழும் அதற்கு இடம் இல்லையென்றால் தவித்துதான் போய்விடும்.இங்கு எங்கள் குடியிருப்பில் பால்கனியில் குடித்தனம் நடத்துகிறது பல வீடுகளில்.

    தூர்வாரும் பணியை முன்பே ஆரம்பித்து இருக்கலாம், இப்போதாவது செய்கிறார்களே என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டும்.

    படத்தை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  16. படங்கள் அழகோ அழகு
    ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பி வழியட்டும்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. இப்பதிவு எங்கள் கோயில் உலாவினைப் போலவே இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கிராமத்துக்கு ஒரு தடவை போய்விட்டுவந்ததுபோல் படங்களைப் பார்த்தவுடன் தோன்றியது. ஆகாயத்தாமரை போன்றவைகளைக் களையெடுது, ஆங்காங்கே சரி செய்துவைத்தாலே, குளங்களில் தண்ணீர் தேங்கும். எங்க ஊர் காந்திமதியம்மையின் கோவில் குளத்தையும் போட்டிருக்கிறீர்கள். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. ஆஹா...அற்புதமான
    படங்களுடன் கிராமக் கோவில் குறித்த பதிவு
    அருமையிலும் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் நெல்லைத தமிழன், வாழ்க வளமுடன்.
    ஆகாயத்தாமரையை களையெடுத்தால் போதும் தான்.
    குளத்தையே குப்பைகளை போட்டு தூர்த்து விடுகிறார்களே! அதை என்ன சொல்வது?
    ஏரியில் வீடு, குளத்தை காணாமல் அடிப்பது எல்லாம் நடக்குது.
    எங்க ஊர் காந்திமதியம்மையா? எங்கள் ஊரும்தான். நம் ஊர் காந்திமதி அம்மனைப் பார்த்து பல வருடங்கள் ஆச்சா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    கோவில் உலா படித்து வருகிறேன்.'நாச்சியார் கோவில் பதிவு படிக்க வேண்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. மீண்டும் அந்த நாட்களுக்கே போக மாட்டோமா என்னும் ஏக்கம் வருகிறது

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடும் பையனைப் பார்த்தா?

    மீண்டும் அந்த நாட்களுக்கே போகலாம் . இயற்கை மனது வைத்தால்.குளம் குதித்து விளையாட, ஆறு நீந்தி விளையாட, கிணறு சகடை சேர்த்து தண்ணீர் இறைத்து விளையாட . பச்சை பசேல் வயல், சலசலத்து செல்லும் வாய்க்கால், அருவியாக கொட்டும் ஏற்றம் என்று கற்பனை செய்வோம் நீனைப்பது நடக்கும் நாளைடைவில்.

    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. முக்கால்வாசி கிராமத்துக் கோயில்கள் இயற்கைச் சூழ் நிலையிலேயே இருந்தது. இருக்கிறது. ஆனால் காட்சிகள் மறைந்து வருகிறது. புளியமரத்தைப் பார்க்கும்போது, எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் ஞாபகம் வருகிறது. பெரியஏரி. ஏரியைச் சுற்றி கிராமங்கள்,பச்சைப் பட்டுடுத்திய நிலங்கள். யாவும் ஞாபகத்திலுள்ளது. ஆனால் எங்கும் தண்ணீர் இல்லை. உங்கள் கிராமக் கோவிலுக்கு போய்வந்தமாதிரி உணர்ச்சியிலும், எங்கும் பசுமைக் குறைவுதான் என்பதைப் படிக்கும்போது இயற்கையும் பொய்த்து விடுகிறது என்று மனதில் தோன்றுகிறது. படங்களெல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆடு,மாடு,கோழி என்று வளர்ப்பவர்களைப் பார்க்கவே ஸந்தோஷம். மரங்களை ரஸிப்பதா? கோவிலை ரஸிப்பதா, பதிவு மிக்க ரஸனையாக தமிழ்நாட்டு கிராமப்புற கோயில்களை ஞாபகப்படுத்துவதாக இருக்கிரது. கோயில்களும் மனதில் வந்துகொண்டே இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    கிராமத்துக் கோவில்கள் இயற்கைச் சூழலில் தான் இருக்கிறது.
    இயற்கை பொய்த்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
    மீண்டும் இயற்கை துளிர்க்க மரம் வளர்த்து நீர்வரத்தை அதிகப் படுத்தினால்
    மழை பொழியும். மரத்தை வெட்டினால் மீண்டும் நட்டால் நல்லது.

    உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அவரவர் ஊரில் உள்ள ஏரி, குளங்களைத் தூர் வாரிப் பராமரித்தாலே போதும். தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கி விடும். கோயில்களுக்கு அருகே குளங்களையும் ஏரிகளையும் அமைத்த முன்னோர்கள் முன் யோசனையுடன் செயல்பட்டிருக்கிறார்கள். குறைந்த பட்சமாக அதைப் பாதுகாக்கவாவது முயற்சி எடுக்க வேண்டும். இப்போது ஆங்காங்கே சில ஊர்களில் ஏரி, குளங்கள் செப்பனிடப்படுவதாகச் செய்திகள் காதில் விழுகின்றன.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மழை நேரத்தில் போர்க்கால ந்டவடிக்கை எடுத்து ஏரி, குள்ங்களை சீர் செய்தால் நல்லது.
    முன்னோர்கள் போல் முன் யோசனையுடன் நடந்து கொண்டால் நாடு நலம் பெறும்.
    குடிநீர் இன்னும் பத்து நாட்கள் கொடுக்க முடியும் போன்ற எச்சரிக்கை கொடுத்து பயமுறுத்த வேண்டாம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. நல்ல பகிர்வு.

    ஏரி குளங்கள் நிரம்பி அனைத்து ஜூவராசிகளும் மகிழ்வுடன் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    மறுபடியும் பதிவுலகம் வந்து விட்டீர்களா?
    பதிவுகள் போடுவீர்களா?
    உங்கள் கருத்துக்கு ந்னறி.

    பதிலளிநீக்கு