ஞாயிறு, 14 மே, 2017

அன்னையர் தினம்

மே மாதம் இரண்டாவது ஞாயிறு, அன்னையர் தினம்.

தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.

அம்மா என்றால் அன்பு.  அட்சய பாத்திரமும் அம்மாவும் ஒன்று. அட்சய பாத்திரம் அள்ள  அள்ளக் குறையாமல் வழங்குவது போல், அம்மாவும் அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருவாள். அம்மா என்ற மூன்றெழுத்துக்கு எல்லை ஏது! அப்பாவிடம் ஏதாவது  கேட்டுப் பெற வேண்டும் என்றால்  அம்மாவிடம் தான்  முதலில்  சொல்லி   அப்பாவிடம் சிபாரிசு  செய்ய சொல்லி கேட்போம்.

தாயன்பும் இறையன்பும் ஒன்றுதான்.

பகவானின்  பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.

//கன்றினுக்குச் சேதா
கனிந்திரங்கல் போலஎனக்கு
என்று இரங்கு வாய்கருணை
எந்தாய் பராபரமே!//

என்று தாயுமானவர் பாடுகிறார்.

//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள்வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக!

தாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல்   ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு  அத்தகைய தாயாகிறார்.//என்று சுவாமி சித்பவானந்தர் சொல்லுகிறார்

இறை வழிபாட்டிலும், அப்பன் வழிபாட்டை விட அன்னை வழிபாடுதான்  மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்னை தான் மகவுக்கு உடனே இரங்கி அருள் புரிகிறாள். தாய் எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் குழந்தை தாயின் காலை கட்டிக் கொண்டு தான் அழும்.

பாரதியும் அன்னையிடம் தான் தனக்கு வேண்டியதைக் கேட்கிறார்:-

//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநலறிவு வேண்டும்
பண்ணிய பாவமெலாம்
பரிதிமுன் பனியே  போல
நண்ணியநின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய் ! //

//ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//

அகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.

இன்றைய சமூகநிலையில் தாய்மார்களின் நிலை எப்படி இருக்கிறது?

இப்போது  இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவர் சம்பாதித்தால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் , குழந்தைகள் படிப்பு, மற்றும்
தேவைகளுக்கு என்று  தாய்மார்கள் இரட்டைபாரம் சுமக்கிறார்கள்.
இது போன்ற தாய்மார்களின் தியாகத்தை  குழந்தைகள் உணரவேண்டும்.

வீட்டையும், பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் வரும் தாய் படும் அவலம் ஒரு சிறுகதையில் கூறப்படும் சூழ்நிலையைக்காண்போம்.  கதையின் பேர் ”உலகப் பெண்கள் நாள்’ ”.எழுதியவர் தஞ்சை இறையரசன். குடும்பத்தேவைக்காக வேலைக்குப் போகும் ஒரு தாய், தன் துன்பம்  தீர, தன் கல்வி அதிகாரியிடம் உத்தியோக மாற்றல் கேட்பதைப்  பாருங்கள்:-

// அம்மா , என் கணவர்  தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார், குழந்தைகள் பள்ளியில் படிக்கிதுங்க, . தினம் முப்பது மைல் மூனு பஸ் மாறி போய் திரும்ப வேண்டிருக்கு. டவுன்பஸ் ரிப்பேர் ஆகி வராத நாளில் இரண்டரை மைல் நடக்க வேண்டிருக்கு, ஸ்டாண்டில் நிக்கவே முடியலை
கம்பியைப் பிடிச்சிக்கிட்டு நின்னு நின்னு கை கால்வீங்கிடுது. காலைல ஏழு மணிக்குத்தான் திரும்ப முடியுது. பத்து பன்னிரண்டு  வருஷமா டிரான்ஸ்பர் கேட்டு அலையறேன்.//

இப்படிக் கேட்டும் , சிபாரிசின் பேரில் இன்னொருவருக்கு மாற்றல் கிடைத்தது. அந்தத் தாய்க்குத் துன்பம் தொடர்கதையாகிறது.

இது போல்  எல்லாம் தன் குடும்ப நலத்திற்காகப் பாடுபடும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இதே ஆசிரியர் எழுதிய மற்றொரு கதையில் வேலைக்குப் போகும் மனைவி, தன் கணவனுக்கு வண்டி வாங்கி கொடுத்தால் பஸ்ஸில் இடிபடாமல் வேலைக்கு நேரத்திற்கு சென்று வரலாம் என்று நினைக்கிறாள்.சிறு வயதில் தான் தன் கணவனின் தோளைப்பற்றிக் கொண்டு ஸ்கூட்டரில் போக முடியவில்லை. இப்போதாவது போகலாம் என்று கற்பனையில் திளைக்கிறாள். அந்தப்பெண்ணின் கதையைச் சொல்கிறார்,’ஒரே ஒரு நகரத்துக் குள்ளே ‘:என்ற கதையில்.

 தன் மூன்று பவுன் நகை விற்றுப் பணம் ஆக்குகிறாள்.மேலும் தேவைப்படும் பணத்திற்காக,  தன் சம்பளப்பணத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிஎப் பணத்தை பெற , கடன் கேட்டு,விண்ணப்பம் பெறவே லஞ்சம் கொடுத்து , பின் கிடைத்த  பி.எப் பணத்தில்  ஸ்கூட்டர் வாங்கி தன் கணவனுக்கு கொடுக்கிறாள். அதில் அலுவலகத்திற்கு  போகலாம், இனி பஸ்ஸில் இடி வாங்கும் கஷ்டம் இல்லை  என்று  நினைத்தால்,  அந்தப் பெண்ணின் கணவர்  என்ன செய்தார், கதையைப்பாருங்கள்!

//பணம் வந்தது , ஸ்கூட்டர் வந்தது, ஏதோ இரண்டு, மூன்று நாள் அங்கும் இங்கும் இவளை அழைத்து போனான், பிறகு எங்கே? அவ்வளவு தான், பெரியபெண் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாள். பெரிய பெண்ணுக்கு ஒரு தடவை, மற்ற பிள்ளைகளுக்கு ஒரு தடவை, ஆபீசுக்கு ஒரு தடவை , காலையிலே மூணு முறை . சாயாங்காலம் மூணு முறை அலையறேன், உன்னை நான் டவுன் பஸ்சுக்குக் கொண்டு போய் விட அழைக்க ஏது  நேரம்  என்று அலுத்துக் கொண்டான் //

வண்டி வந்தால் வண்டியில் கணவனுடன் பயணிக்கலாம் என்று நினைத்து அது முடியாமல்,  மறுபடியும் பஸ்ஸில் கூட்டத்தில் இடிபட்டு நசுங்கி வேலைக்குப் போய்த் தன் குடும்பநலத்திற்குப் பாடுபடும்  இது போன்ற தாய்மார்கள் இருக்கிறார்கள்.

துன்பப்படும் இத்தகைய தாய்மார்களுக்கும்  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

குழந்தைகளுக்கு  அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள். குழந்தைகள் தங்களின்அம்மா, அப்பாவிற்குப்  பொன் ,பொருள் கொடுப்பதற்குப் பதில் அனபையும், கனிவான வார்த்தைகளையும் கொடுத்தால் போதும். தாய் , தந்தை மகிழ்வார்கள்.அதே போல் ஒழுக்கம், நற்பண்பு கொண்டு விளங்கினாலே போதும். வேறென்ன வேண்டும்?

கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை 
அள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே! 

என்று ஒரு பாட்டு சொல்கிறது. ஊற்று, தோண்டத் தோண்டத் தான் நீர்
ஊறும் . அது போல் அன்பு கொடுக்கக் கொடுக்கத் தான் பெருகும்.
அன்புக்குப் பஞ்சமில்லை என்று பஞ்சமில்லா நிலையை உருவாக்க வேண்டும். நாளை  மறுநாள் அட்சய திருதியை .அன்று நல்லசெயல்களைச் செய்வோம், அன்பைப் பரிமாறிக் கொள்வோம். அன்றைய நாளில் , ஒன்று செய்தால் அது பன்மடங்காய்ப் பெருகி வாழ்வில் எல்லோருக்கும் நன்மையை நல்கும் என்பார்கள். அவ்வாறே பெருகட்டும். அட்சய திரிதியை வாழ்த்துக்கள்!

தாய்மை உணர்வு உடைய அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் நினைவில் வாழும் என் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.

தாயாகி , தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

அன்புத் தாயும் நானும்
தந்தையும் நானும்
பெற்றோருடன் நான்
ஏன் இந்த சோகம் கண்ணே !

                                                            வாழ்க வளமுடன்!
                                                                           --------



61 comments:

திண்டுக்கல் தனபாலன் said...
தஞ்சை இறையரசன் அவர்களின் சிறுகதையை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு விளக்கியது, வாழ்த்தியது அருமை... அனைவருக்கும் அன்னையர் தின அன்பான நல்வாழ்த்துக்கள்...

முடிவில் சோகம் இல்லை... சின்ன கோபம்... ஹிஹி... வாழ்த்துக்கள் அம்மா...

நன்றி...
s suresh said...
அன்னை பற்றிய ஆன்றோர்களின் கருத்து பகிர்வோடு அமைந்த அழகான கட்டுரை! சிந்திக்க வைத்த பதிவு! நன்றி!
angelin said...
மனதை தொட்ட அருமையான பகிர்வு அக்கா .அனைவருக்கும் இனிய சந்தோஷமான அன்னையர் தின வாழ்த்துக்கள்
Thekkikattan|தெகா said...
a touchy post'ma! happy mothers day!!
Ramani S said...
அன்னையர் தின சிறப்புப் பதிவு
வெகு வெகு சிறப்பு
பொக்கிஷங்கள் என்பது
நிச்சயம் இந்தக் கருப்பு வெள்ளைப் படங்கள்தான்
பகிர்வு மனத்தை கொள்ளை கொண்டது
வாழ்த்துக்கள்
sury Siva said...

தாயன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை

என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு இருக்கிறோம்

எனும் அதே நேரத்தில்

ஒரு தாய் தன் மகனிடம் காட்டும் அன்பு, பரிவு, பாசம் எல்லாமே

அந்த மகனுக்கு ஒரு வாழ்க்கைத்துணை வருகையிலே

அவளுக்கும் தான் தாயாக , அதுவும்

வீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே

என உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்

இனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லையே இல்லை.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
Ramani S said...
tha.ma 3
Ranjani Narayanan said...
அழகான அருமையான பாடல் வரிகளுடனும், உள்ளத்தைத் தொடும் இரண்டு சிறுகதைகளுடனும், அன்னையர் தின பதிவு சிறப்பாக இருக்கிறது கோமதி. கதையில் வரும் இரண்டு பெண்களும் நீண்ட நாட்கள் மனதிலிருந்து அகல மாட்டார்கள்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்!
.
வல்லிசிம்ஹன் said...
வ்கு அழகான கதை உதாரணங்களோடு பெண்களின் பெருமையை அருமையாகிச் சொல்லி இருக்கிறீர்கள் கோமதி.
படங்கள் அருமை.எங்கிருந்தாலும் அன்னையும் தந்தையும் நம்மை மறவார்கள். நாமும் நம்குழந்தைகளுக்கு நல் ஆசிகள் வழங்குவோம்.
சிறந்த அன்னையர் தின வாழ்த்துகள் மா.
நிலாமகள் said...
அருமை. வாழ்த்துகள்!
கவியாழி கண்ணதாசன் said...
குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள்.//நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்
அப்பாதுரை said...
அழகான படங்கள்!
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

பாரதி வரிகளுக்கு நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் said...
//தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.//
அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

மிக அழகான கட்டுரை. பாராட்டுக்கள்.
ஸ்ரீராம். said...
அன்பின் முகவரி அன்னை. அன்பின் ஆதி அன்னை. அழகிய பாடல்கள், குறிப்பாக பாரதியார், கதை மூலம் அன்னையை நினைவு கூர்ந்தது சிறப்பு. கொஞ்ச நாட்களாக அரசு சார் படம் இணைப்பது இல்லையே, ஏன்? :)
இராஜராஜேஸ்வரி said...
கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே -அதை
அள்ளி வளங்கிட நெஞ்சங்கள் ஏதுமில்லே!.....//

அட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..!
கோமதி அரசு said...
வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் முதல் வருகைக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

நீங்கள் சொல்வதும் சரிதான் சின்ன கோபம் தான் அதில் ஏற்பட்ட சோகம்.
Muruganandam Subramanian said...
அன்னையர் தினத்தன்று பெற்றோர்களின் பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை.
கோமதி அரசு said...
வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க தெகா, வாழ்கவளமுடன்.
வெகு நாட்கள் ஆயிற்றே! நலமா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க ரமணிசார், வாழ்கவளமுடன். நீங்கள் சொல்வது போல் இந்த படங்கள் பொக்கிஷங்கள் தான்.
உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.
கோமதி அரசு said...
வாங்க சூரி சார், வாழ்கவளமுடன்.

//வீட்டுக்கு வந்த அந்தப்பெண் உள்ளத்தால் இவளும் என் தாயே

என உணரும் வகையில் நடந்திடும் இல்லங்களில்

இனிமையான சூழ்னிலைக்கு ஒரு எல்லையே இல்லை. //

நீங்கள் சொல்வது உண்மை.
வீட்டுக்கு வந்த மருமகளை நன்கு பார்த்துக் கொள்ளவேண்டும் மாமியார், மாமியாரை மருமகள் நன்குப்பார்த்துக் கொள்வாள்.
அன்புக் கொடுத்தால் அன்பு கிடைக்கும்.
வீட்டில் ஆனந்தம் நிலைக்கும்.
குற்றம் பார்க்காமல் குணத்தை பார்க்க இருவரும் முயலவேண்டும்.
இனிமையான சூழல் அப்போது நிச்சயம்.
உங்கள் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.
கோமதி அரசு said...
வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன், பாடல், கதை எல்லாம் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துக்களுக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் நமக்கு எப்போதும் நம் பெற்றோர்களின் ஆசி நிச்சயம் உண்டு.

நம் குழந்தைகளுக்கும், நம் ஆசிகளை தினம் வழங்கி மகிழ்வோம்.
உங்கள் வ்ருகைக்கும், அன்பான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.
கோமதி அரசு said...
வாங்க நிலாமகள், வாழ்கவளமுடன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
படங்கள் மற்றும் பாரதி பாடல்களை ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
தெய்வம் தனக்கு பதிலாய் தாயைப்படைத்தான் என்பார்கள். தாயை தெய்வமாய் வணங்கினாலே போதும் உயர்வு நிச்சயம். அதற்கு நீங்களே ஒரு நல்ல உதாரணம். உங்கள் தாய் பாசம் பக்தி எல்லாம் இப்போது உள்ள குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டு அல்லவா!
உங்கள் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
கோமதி அரசு said...
வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
//அன்பின் முகவரி அன்னை. அன்பின் ஆதி அன்னை.//

நீங்கள் சொல்வது உண்மை.

பாடல் பகிர்வு, கதை இவற்றை ரசித்தமைக்கு நன்றி.
சாரிடம் ஸ்ரீராம உங்கள் படம் ஏன் இல்லை என கேட்கிறார் என்றேன் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன்.
உங்கள் விசாரிப்புக்கு நன்றி.
கோமதி அரசு said...
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
//அட்சயமாய் அன்பை அருளும் அன்னையர் தின வாழ்த்துகள்..!//

உங்கள் அழகான அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோமதி அரசு said...
வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்கவளமுடன்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஸாதிகா said...
பழைய புகைப்படங்களுடன் பகிர்வை படிக்க பரவசமாக இருந்தது,
ராமலக்ஷ்மி said...
சிறப்பான பதிவு. குடும்ப நலனுக்காக சிரமங்களை அனுபவிக்கும் தாய்மாரின் உள்ளன்பை உலகம் புரிந்து நடக்கட்டும்.

அன்னையர் தின வாழ்த்துகள்!

கடைசிப் படத்தில் போட்டோகிராபர் ஒருவேளை ரொம்ப நேரம் போஸ் கொடுக்க வைத்திருப்பாரோ:)?

அரசு சாரின் ஓவியங்களை மிஸ் செய்கிறோம்.
கோமதி அரசு said...
வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும், நன்றி.
கோமதி அரசு said...
வாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் குடும்ப நலனுக்கு பாடும் படும் பெண்களை குடும்ப உறுப்பினர் அனைவருமே புரிந்து நடக்கவேண்டும் அப்போது தான் வீடும், நாடும் நலம்பெறும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
படத்தை எடுத்தவர் என் அப்பாவின் நண்பர். அந்த மாமா நிறைய படம் எடுத்து இருக்கிறார் அன்று.
அரசு சாரிடம் படம் போட சொல்லி விட்டேன் ,அடுத்தபதிவில் வரைய வைத்துவிடுகிறேன். ராமலக்ஷ்மியும் கேட்டுவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
அவர்களுக்கு மகிழ்ச்சி. 
விமலன் said...
அன்னையைப்பற்றிசொல்ல வார்த்தைகள் போதாது,அதற்காக சொல்லாமலும் இருக்க முடியாது.அன்னையர் தின நல் வாழ்ட்த்துக்கள்.
கோமதி அரசு said...
வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
அன்னையின் பெருமை சொல்லில் அடங்காது என்பது உண்மை,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Jaleela Kamal said...
அன்னையர் தினத்தன்று மிக அழகான பகிர்வுகளை பகிர்ந்து இருக்க்கீங்க கோமதி அக்கா.

அந்த காலத்து போட்டோக்கள் ரொம்ப அழகு தான்.உங்கள் போட்டோ முன் பதிவிலேயே பார்த்தேன்,
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
//நேற்று அம்மாவுக்கு ஒரு சிறிய கவிதையும் எழுதினேன் ஆனால் நான் பிலாக்கில் பகிரவில்லை. அவர்களுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன்,.//
கோமதி அரசு said...
வாங்க ஜலீலா, வாழ்கவளமுடன்.
அம்மாவுக்கு எழுதிய கவிதையை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.
அப்பவும் நானும் படம் இப்போது தான் போட்டு இருக்கிறேன்.
அம்மாவுடன் உள்ள படம் முன்பே பகிர்ந்து கொண்டது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.
Asiya Omar said...
அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.
அந்தக் காலத்து அப்பாக்கள் எல்லாம் இந்த ஸ்டைல் தான் போல.என் அப்பாவின் படம் ஒன்றும் இது போல் உண்டு கோமதிக்கா.மிக அருமையான பகிர்வு.
அமைதிச்சாரல் said...
நெகிழ்வான பதிவு கோமதிம்மா..

'அரசு' சாரின் சிறப்பு ஓவியம் காணோமே இந்தச் சிறப்புப்பதிவில் :-)
கோமதி அரசு said...
வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
ஆசியா உங்கள் அப்பாவும் இந்த ஸ்டையில் தானா ஒருமுறை உங்கள் அப்பா படத்தை எங்களுடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
சார் கிரிக்கெட் பார்ப்பதில் பிஸியாக இருந்தார்கள் அதனால் அவர்களை படம் கேட்கவில்லை. அடுத்தபதிவில் ஓவியத்தை கேட்டு வாங்கி விடுகிறேன். அவர்கள் ஓவியத்தை காணவில்லையே என்று ரசிகர்கள் கேட்பது அவர்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சாரல்.
மாற்றுப்பார்வை said...
அருமை....
கோமதி அரசு said...
வாங்க மாற்றுப்பார்வை, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
kovaikkavi said...
படங்கள் பொக்கிஷங்கள் தான்.
late..அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam
ஜீவி said...
தாயாகிய தினத்திலிருந்து வாழ்க்கை முச்சூடும் தாய்க்கு ஓய்வில்லை தான்.

பெற்ற குழந்தை பெண்ணாயிருந்தால் தாய் கொள்ளும் பெருமிதமே அவளையும் மிகச்சிறந்த தாயாக உருவாக்க வேண்டும் என்பது தான். அந்தத் தாய் தான் குழந்தையாயிருந்த திலிருந்து தெரிந்து கொண்ட தெளிவை ஒவ்வொரு செயலிலும் உணர்விலும் தன் பெண்ணுக்கு உணர்த்தி வளர்க்கிறாள். அப்படியாக வளரும் குழந்தைகள், பெரியவளாகி இன்னொரு தாய்க்கு மருமகளாகும்
பொழுதும் அவள் எதிர்பார்க்கும் தாயன்பு புகுந்த வீட்டிலும் மாற்றமில்லாமல் தொடர்கிறது. எப்படி வளர்ப்போ, அப்படியே வாழ்வுமாய்..

இது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா! 
கோமதி அரசு said...
வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அரசு said...
வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
நன்றாக சொன்னீர்கள் பெண் குழந்தைஎப்படி எல்லோரிடமும் நடக்க வேண்டும், பழக வேண்டும், புகுந்த வீட்டில் எப்படி அன்புடன், மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதை விட சிறந்த தாயாக அம்மா நடந்துக் கொள்ளும் போது அதைப் பார்த்து வளர்ந்த குழந்தை அதே பண்புகளுடன் இருக்கும்.நல்ல மகளாய் இருந்தவள்
நல்ல மருமகளாய், நல்ல தாயாய் மாறுகிறாள் பின் நல்ல மாமியாராய் உருவாகிறாள்.

//இது ஒரு வட்டம். மகளாய், தாயாய், மருமகளாய், மாமியாய்.. பெண்ணாய் பிறந்து விட்டால், எத்தனை கோடி உணர்வையும் உறவையும் மனசுள் பொத்திப் பொத்தி வைத்தாய், இறைவா! //

நீங்கள் சொன்னது போல் இந்த வட்டம் சரியாக இயங்கினால் எத்தனை கோடி இன்பங்கள் படைத்தாய் என்று பாடத்தோன்றும்.

உங்கள் வரவுக்கும் சிறப்பான வாழ்வியல் உண்மைகளை சொன்னதற்கும் நன்றி.
சூரி சாரும் உங்களை போல் நல்ல கருத்தை சொன்னார்கள்.
மனோ சாமிநாதன் said...
ஒரு தாயாய் நாள் தோறும் ஏற்கும் அல்லல்களுக்கு உதாரணங்கள் கொடுத்து, அவளின் சங்கடங்களுக்கும் உழைப்பிற்கும் உதாரணங்கள் கொடுத்து, அன்னையர் தின‌த்தில் தாய்மையை மேன்மையுற எழுதியதற்கு அன்பு நன்றியும் வாழ்த்துக்களும்!!

உங்கள் பெற்றோருடன் இருந்த புகைப்படங்கள் அன்னையர் தினத்தில் அருமையான நினைவஞ்சலியும் கூட!!
G.M Balasubramaniam said...
அன்னையர் தினத்துக்காக எழுதிய பதிவுக்கு காலம் கடந்து வந்தாலும் எல்லா நாளும் அன்னையர் நாளே அல்லவா. அன்னையர் பற்றிப் படித்ததும் பார்த்ததும் தவிர அவரது அன்பின் மொழி உணரப் படவில்லை. இதையே என்னையே தேற்றிக் கொள்ளும் முகமாக நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். சுட்டி இதோ
gmbat1649.blogspot.in/2011/06/blog-post_18.html வாழ்த்துக்கள்.
கோமதி அரசு said...
வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
நீங்கள் சொல்வது போல் எல்லா நாளும் அன்னையர் நாள் தான்.
நம் வழக்கம் வெளி ஊருக்கு சென்றாலோ, அல்லது பரீட்சை மற்றும் எல்ல சுபக்காரியங்களுக்கும் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்வது வழக்கம்.
உங்கள் பதிவை படிக்கிறேன் சார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கீத மஞ்சரி said...
அன்னையரின் பெருமையோடு அவர்தம் தியாகம் மற்றும் இன்னல்களையும் நினைவில் கொணர்ந்து நெகிழ்வித்தப் பதிவுக்கு நன்றியும் பாராட்டும் மேடம்.

புகைப்படங்கள் அழகு. கருப்பு வெள்ளை என்றாலும் காலம் முழுவதும் மனத்தில் வண்ணங்களை வாரியிறைக்கும் நிழற்படங்கள் அல்லவா அவை!
கோமதி அரசு said...
வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மை கீதமஞ்சரி காலம் முழுவதும் மனதில் வண்ணங்களை வாரி இறைக்கும் நிழற்படம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மாதேவி said...
அன்னையர் போற்றும் சிறப்பான பகிர்வு.

கதைகள் பலவும் எடுத்து அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

வாழ்க! அன்னையர்கள்.
கோமதி அரசு said...
வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
நீங்கள் எல்லா பழைய பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
உங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Geetha Sambasivam said...
பழைய படங்களே இத்தனை தெளிவாய்க் காண முடிந்தது மகிழ்ச்சியாய் இருக்கு. வாழ்த்துகள். தாய், தந்தையோடு உங்களைப் பார்த்தாச்சு. பார்க்கையில் அட, நமக்கு இப்படி ஒரு படம் இல்லையேனு தோணிச்சு! :))))
கோமதி அரசு said...
வாங்க கீதாசாம்பசிவம், வாழ்கவளமுடன்.

உங்கள் அன்னையர்தின வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும், நன்றி.
கோமதி அரசு said...
வாங்க மனோசாமிநாதன், வாழ்கவளமுடன்.
உங்கள் பின்னூட்டத்தை தாமதமாய் பார்த்தேன்.மன்னிக்கவும்.உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
மனதை நெகிழச் செய்த பதிவு. அருமை. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவள சங்கரி
கோமதி அரசு said...
வாங்க பவள சங்கரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.




39 கருத்துகள்:

  1. அழகான படங்கள்...
    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்னையைப் போலொரு தெய்வமில்லை என்பதை யாரும் மறுக்கமுடியுமா? உங்களுக்கு எனது மனமார்ந்த 'அன்னையர் தின' வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் செல்லப்பா சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மீள் பதிவாகினும் மிகவும் அருமை.

    எல்லோருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. என்றென்றும் அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரைசெல்வராஜூ சார் வாழ்க வளமுடன்.
    நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய அன்னைகள் பற்றி நீ எங்கே இருக்கிறாய் அம்மா என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  10. அன்னையை போற்றும் அற்புத விடயங்கள் நன்று வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  11. இந்த சுட்டிக்குச் சென்று படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள் /http://gmbat1649.blogspot.com/2015/05/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவை படித்து கருத்து சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    என் பின்னூட்டத்தையும் படித்து ரசித்துக் கொண்டேன்!!!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஶ்ரீராம் , வாழ்க வளமுடன்.
    பழைய பின்னூட்டத்தை படித்து ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான எண்ணங்கள்

    அன்னையர் நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. யதார்த்த நிலையைச்
    சுட்டிக் காட்டிப் போகும்
    அருமையான அன்னையர் தின
    சிறப்புப் பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன் .
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அழகான படங்களுடன் பூமிதனில் இறைவனின் மறுவுருவமாக வாழும் அன்னையருக்கு அற்புதமான வாழ்த்துக்களை கூறியியுள்ளீர்கள் .இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    நன்றாக சொன்னீர்கள் ஏஞ்சலின், இறைவனின் மறுவுருதான் தாய், தந்தையர்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மிகச்சிறப்பான பகிர்வு.அன்ர்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. மனதை மகிழ்விக்கும் மீள் பகிர்வு....

    நானும் ரசித்து மகிழ்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கமென்ட் கொடுக்கும் பகுதியே வராமல் திரும்பத்,திரும்ப முயன்றதில் இன்று ஸரி. அருமையான சிறப்பான பதிவு. தாய்மார்கள் கம்கண்ட தெய்வங்கள்தான்.வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    மிகவும் முயன்று பின்னூட்டம் போட்டத்ற்கு மிகவும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. பதிவு படங்களோடு நானும் ஸ்ரீராம் போல் என் பழைய கமெண்டை ரசித்துக் கொண்டேன்:)!

    சிந்திக்க வைக்கும் எழுத்து.

    நன்றி. அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    பழைய படங்க்களையும் பழைய கமெண்டை ரசித்தீர்களா?
    நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ஸ்கூட்டர் கதை எவ்வளவு உண்மை

    பதிலளிநீக்கு
  31. தாமதமாகிவிட்டது!

    அருமை! எவ்வளவு அழகாகக் கதைகளைலிருந்து ஒரு அன்னையாகிய பெண் படும் அவஸ்தைகளைச் சொல்லி அப்படித் துன்பப்படும் அனைத்து அன்னையருக்கும் வாழ்த்துகள் என்று சொல்லிச் சென்றவிதம் அருமை!

    என்றுமே அன்னையருக்கு வாழ்த்துகள் சொல்லலாம் தானே...வாழ்த்துகள்! தங்களுக்கும் வாழ்த்துகள்! சகோ/கோமதிக்கா

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் பாலகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    ஸ்கூட்டர் கதையின் உண்மைதன்மையை புரிந்து கொண்டற்கு நன்றி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் துளசிதரன்,கீதா வாழ்க வளமுடன்.
    என்றுமே அன்னையருக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் சொல்லலாம் கீதா.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  34. பழைய பதிவா? என்றாலும் மீண்டும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. அதிலும் தஞ்சை இறையரசன் என்பவரைப் பற்றி அறிய முடிந்தது.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்.
    பழைய பதிவுதான்.
    இறையரசன் கதை பிடித்து இருக்கா?
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ahaa padangalum annaiyar thina pathivum attakasam. kutti gomu mam cute :)

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு