செவ்வாய், 21 மார்ச், 2017

தேடி வந்த குருவி !

நாங்கள்   புதிதாக  போகப் போகிற வீட்டு பால்கனியிலிருந்து  எடுத்த காணொளி.



எங்கள் குடியிருப்பில் அடைக்கலக் குருவி கூடு.



செல் கோபுரங்களால் குறைந்து வருவதாய் சொல்லப்படும் ஊர்க் குருவி .
தன் குஞ்சுகளுக்கு உணவு அளிக்க வந்த குருவி
புதிதாக வந்து இருக்கும் என்னைப் பார்த்து பயந்து குரல் கொடுத்த குருவி. அதனுடன் இனி தினம் பேசி அதன் பயத்தை போக்க வேண்டும்.

நீ எனக்கு ஆனந்தம் தரப்போகிறாய் !  நாம் நட்பாய் இருப்போம்.



Image may contain: bird and plant

கீழ் உள்ள படங்கள்  அயல் நாட்டில் மகன் வீட்டில் எடுத்தது.

Image may contain: bird

சின்னஞ் சிறிய குருவி -அது
'ஜிவ் ' வென்று விண்ணிடை யூசலிட்டேகும்.
மகாகவி பாரதியார்.

Image may contain: bird, plant, flower, outdoor and nature

Image may contain: bird, plant and outdoor

சிட்டுக்குருவியைத் தேடி தேடி  மார்ச் 20 , 2014

பதிவுக்கு மகன் ஊருக்கு சென்ற போது எடுத்த படங்கள். அந்த பதிவை படிக்காதவர்கள் படிக்கலாம்.

இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடுகள் இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசியை இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞன் இல்லை.
பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ திருவனந்தபுரத்தில் இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள்.
உனக்கு ஏன் அடைக்கலக் குருவி என்று பெயர் வந்தது  என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு. ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.


உலகச் சிட்டுக்குருவிகள் தினம்  மார்ச் 20, 2012 படிக்கவில்லையென்றால் படிக்கலாம் .

 இந்த என்  பழைய பதிவில் சிறு பகுதியை எடுத்து போட்ட முகநூல் பதிவு  மேலே உள்ளது.  .
Image may contain: 1 person

மதியம் ஒரு தோழி  அனுப்பிய புது செய்தி. தோழிக்கு நன்றி. 
இயற்கை ஆர்வலர் ஏ. சாதனா ராஜ்குமார் அவர்களுக்கு  வாழ்த்துக்கள்.
                      


இனி போகப் போகிற வீட்டில்  இறைவன் அருளால்   நலமாக  இருக்க வேண்டும் . வாழ்த்துங்கள் நட்புகளே!  

பதிவுகளை படித்து கருத்துக்கள் பதிவு செய்ய கொஞ்சநாட்கள் ஆகலாம். விரைவில் வருவேன்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                     ------------------------------------

31 கருத்துகள்:

  1. குருவிகளுக்கு சமர்பித்த பதிவு அருமை சகோ

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என்றென்றும் மங்கலம் நிறையட்டும்..

    அபிராமவல்லி அருகிருந்து காத்திடுவாள்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் பதிவும் அந்தச் சிட்டுக்குருவி போலவே மிகவும் அழகோ அழகு.

    புது இல்லத்தில் ‘வாழ்க வளமுடன் + நலமுடன்’.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இப்போ வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது அதனால எல்லாரும் வரத்தொடங்கிட்டார்கள். அழகான படங்கள் அக்கா. புது வீட்டில் வசந்தம் வீச என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    வசந்தம் வந்து விட்டது உங்களுக்கும் இல்லையா ?
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மு.

    பதிலளிநீக்கு
  9. சிட்டுக்குருவிகள் அன்பானவை அவற்றின் மீது நீங்கள் கொண்ட அன்பும் பாசமும் அம்மாவை நினைவூட்டுகிறது .புதிய வீட்டில் நிறைய புதிய இவர்களைப்போன்ற நட்புக்கள் வருகை தந்து உங்களை சந்தோஷப்படுத்தட்டும் .

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் சிட்டுக்குருவிகள் அன்பானவை.
    அவர்கள் வரவு ந்லவரவுதான் .ஏஞ்சலின் வாழ்த்துப்போல் என் மனம் சந்தோஷப்பட வேண்டும், நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  11. அழகிய சிட்டுக்குருவிகள். அதன் இனம் அழிய மனிதன் காரணமாக இருக்கக் கூடாது. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    குருவிகள் அழிய மனிதன் காரணமாக இருக்க கூடாது என்பது தான் எல்லோர் ஆசையும்.
    இயற்கை ஆர்வலர் ஏ. சாதனா ராஜ்குமார் அவர்கள் வீடுகளில் குருவிகள் கூடு கட்டி வாழ வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை என்று அவரே குருவிகள் வாழ இலவசமாய்
    கூடு தருகிறார். ஒரு தோழி இப்போது தான் தினதந்தியில் வந்த செய்தியை அனுப்பினார்.'
    அதை வாங்க்கி வீட்டில் வைத்தால் குருவிகள் சுதந்திரமாய் இனி வீடுகளில் வசிக்கும் என்கிறார்.அவர் தொண்டு வாழ்க!

    பதிவு முழுவதும் படிக்கவில்லையோ ஸ்ரீராம்? நான் புதுவீடு போவது பற்றி குறிபிட்டு இருந்தேனே!

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. படித்தேன். பழைய பதிவுகளுக்கு க்ளிக் செய்து போகவில்லை! முன்னரே ஒரு பதிவிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ புது வீடு சென்ற விவரம் எழுதி இருந்தீர்கள் என்று ஞாபகம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
    இந்த மாத கடைசியில் தான் அங்கு போகிறோம். பெளர்ணமி அன்று பால் காய்ச்சினோம். வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சிட்டுக்குருவிகள் என்றாலே.. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. குட்டிக் காலால் குடுகுடுவென நடந்து திரிவினம்.. அழகாக இருக்கு.. ஆனா சூம்:) பண்ணித்தான் படமெடுக்க முடியும்.. பறந்து ஓடிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  16. புதுமனை புகப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.....ஆமாம் இப்படி சும்மா போனால் எப்படி? டிரீட் எப்போது?

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன். குருவியைப் பற்றி நீங்கள் சொன்னது சரியே. ஒரு இடத்தில் நிற்க மாட்டார்கள் பறந்து கொண்டே இருப்பார்கள், ஜூம் செய்து தான் எடுக்க வேண்டும். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் குடிபோகும் போது வரவேற்கத் தயாராகி வருகின்றன குருவிகள். அருமையான பதிவு. பெங்களூர் மற்றம் நெல்லையில் இப்போது காண அரிதாகி வரும் பறவை. வெளியூர்களில் மட்டுமே என் கண்களில் சிக்குகின்றன. சென்ற வருடம் கொல்கத்தாவில் நிறையப் பார்த்தேன்.

    புது இல்லத்தில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நான் நெல்லை வந்த போது பல இடங்க்களில் பார்த்தேன்
    இப்போது குறைந்து விட்டது அறிந்து மனம் வருத்தப்படுகிறது.
    உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  21. புது இல்லமும் மதுரையிலா வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    மதுரைதான் பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீடூதான்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தேடி வந்த குருவி
    சற்றுச் சிந்திக்க வைக்கும் பதிவு

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு


  24. குருவியின் படங்கள் அழகாக இருக்கிறது..

    உங்கள் புது வீட்டில் பல பல பறவை நண்பர்களோடு மகிழ்ந்து இருக்க எனது அன்பான வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  25. வணக்கம்
    Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வரவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. முதலில் உங்கள் புதுவீட்டில் தாங்கள் உடல்நலமுடன் மகிழ்வுடன்வ் வாழ்ந்திட வாழ்த்துகள்!

    பார்த்தீர்களா குருவிக்குச் செய்தி வந்து விட்டது போலும் ..உங்கள் ஏரியாவில் இயற்கைப் பிரியை கோமதியக்கா வருகிறார்கள்....நீ அங்கு போ உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்...நீ ஃபேமஸ் ஆகிடுவ அவங்க ஃபோட்டோ எல்லாம் புடிச்சு எல்லாருக்கும் சொல்லி குருவையை காப்பாத்துங்கனு கேட்டுக்குவாங்க...நீ போய் பாரு நு அதுக்கு செய்தி வந்துருச்சு போல அதான் உங்களைத் தேடி வந்துவிட்டது!!!

    படங்கள் மிக மிக அழகு!! அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  28. புது வீட்டில் இனிமையான இல்லறமும் அருமையான உடல் நலமும் அமைய வாழ்த்துகள். குருவிகளை செல்ஃபோன் டவர் அழிக்கவில்லை. மனிதன் தான் அழித்தான், அழிக்கிறான். :(

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் துளசிதரன் கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    உங்கள் அழகான அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    குருவிகளை மனிதன் அழித்து வருவது கவலைதான்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு