சனி, 4 மார்ச், 2017

நார்த்தாமலை-பகுதி-3 (குடைவரைக்கோயில்)

குடைவரைக்கோவில்


 நார்த்தாமலை -   பகுதி-  2    படிக்காதவர்கள் விருப்பப்பட்டால் படிக்கலாம்.

இந்த குடைவரைக் கோவில் கி.பி  ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்தது  என்றும்,  பின்பு இந்தப் பெரிய குகைக் கோவில் 'பதினெண்பூமி விண்ணகரம்'  என்ற விஷ்ணு கோவிலாக ஆனது என்றும் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.


கருவறையில் சிவலிங்கம் போல் இருக்கிறது ஆவுடையார் மட்டும் தெரிகிறது நடுவில் சந்தன லிங்கம் மாதிரி வைக்கப்பட்டு இருக்கிறது, விபூதி ஒரு தட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அர்த்தமண்டபத்தில்  இருமருங்கிலும் ஆளுயர 12 விஷ்ணு சிலைகள்  அழகாய் இருக்கிறது.

சித்தன்னவாசலில்  இருக்கும் வழிகாட்டி (curator)  பாலசுப்பிரமணியம் அவர்களிடம்  இந்த நார்த்தாமலை பற்றிக் கேட்டபோது, அங்கு தன் தம்பிதான் பார்த்துக் கொள்வதாகவும் அவர் பெயர் பரமசிவம் என்றும் கூறினார்
நாங்கள் அங்கு போனபோது அவர்  இல்லை; இருந்து இருந்தால்  நிறைய விவரங்கள் சொல்லி இருப்பார்,  குகைக் கதவைத் திறந்து காட்டி இருப்பார்.
மூடிய கதவு வழியே பார்க்க முடிந்தது ஒரு ஆறுதல்.


சித்தன்னவாசல் போல் மலை மேல் ஏறப் படிகட்டுக்கள் அமைத்து டிக்கட் போட்டு வழிகாட்டியும் அங்கேயே இருந்தால் மக்கள் கூட்டம் வருவார்கள்.
ஆள் அரவம் இல்லாமல் இருப்பதால் வழிகாட்டியும் மாலை சீக்கிரம் இறங்கி விடுவார் போலும்!

விஷ்ணு சிலைகளின்  கீழே பிள்ளையார் மற்றும் யானைத் தலை இருக்கிறது , இன்னும் இரண்டு மூன்று சிலைகள்  உடைந்து இருக்கிறது.  
தாமரைப் பீடம் அழகாய் இருக்கிறது 
அய்யனார்


மூன்று பெண் தெய்வங்களின்  சிலை இருக்கிறது


கல்வெட்டுகள் காணப்படுகிறது, இந்த சிலைகளுக்கு அடியில்.

படிக்கட்டு அருகே ஒருபக்கம் யாளி, ஒருபக்கம் யானை.


யானையும் , யாளியும்

சிங்கமும்,  யாளியும்


யாளிகள் அணிவகுப்பு


பழியிலி ஈஸ்வர கோவில் , துவாரபாலகர்கள் இரண்டும் சமமாய் இல்லாமல் வித்தியாசமாய் இருக்கிறது.

                       
பூட்டிய கதவு வழியாக எடுத்த படம். இவருக்கும் விஜயாலய சோழீஸ்வருக்கு அலங்காரம் செய்து இருந்தது போல் அலங்காரம் செய்து இருந்தார்கள்.


இந்த குடைவரைச் சிவன், கி,பி ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது என்று சொல்லப்படுகிறது.


இந்தப் பீடத்தில் பார்க்க வந்தவர்கள் (இந்தக்கால மன்னர்கள் ! )தங்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

சிவன் இருக்கும் மண்டப மேடை வளைவில்  சிலைகளுக்கு அடியில் உள்ள பாகத்தில் கல்வெட்டு காணப்படுகிறது., சிலைகள் முற்றுப் பெறவில்லை,

   நந்தி மண்டபத்திற்குப் பின்புறம் இருப்பதுதான் பழியிலி ஈஸ்வரன் கோவில்

 பேரன் நன்கு விளையாடினான் நந்தியை சுற்றி. அவனுக்கு கீழே  இறங்க மனம் வரவில்லை. இருட்டி விட்டால் இறங்குவதற்குக் கஷ்டம் என்று  அழைத்துக் கொண்டு இறங்கினோம்.

இறங்கும் போது கண்ட காட்சிகள் அடுத்த பதிவில்.

                                                            வாழ்க வளமுடன்!
                                                   ==============================

24 கருத்துகள்:

 1. கல்லிலே காட்டியுள்ள கலை வண்ணங்கள் அனைத்து அழகோ அழகு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இவை ஒவ்வொன்றையும், மிக அழகாகவும் பொறுமையாகவும் செதுக்கிச் செய்துள்ள சிற்பிகளின் உழைப்பினை எண்ணி பெருமைப்பட வேண்டியுள்ளது.

  இந்தப்பதிவினில் பார்த்தது ... நேரில் கண்டுகளித்தது போல திருப்தியாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் சிற்பிகளின் உழைப்பினை எண்ணி பெருமைப்பட
  வேண்டும்தான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் ஒரு பரவசம்... படங்கள் அனைத்தும் அருமை அம்மா...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சிற்பங்களை காண வைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் யாளி என்னும் விலங்கினம் இருந்ததா இல்லை கற்பனையா. அநேக கோவில்களில் இதைப் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. அழகான படங்களுடன்...சிறப்பான தகவல்கள் அம்மா..

  பதிலளிநீக்கு
 8. தி.தமிழ் இளங்கோ has left a new comment on your post "நார்த்தாமலை-பகுதி-3 (குடைவரைக்கோயில்)":

  நார்த்தாமலை பற்றிய மூன்று பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன். வழக்கம் போல அருமையான புகைப்படங்கள். நான் நார்த்தாமலை போனதில்லை. திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை கோயிலுக்கான நுழைவு வாயிலைப் பார்த்து இருக்கிறேன். உங்கள் பதிவுகளைப் படித்ததில் நீங்கள் சென்றது சுற்று வழியோ என்று யோசிக்க வைத்து விட்டது.

  Publish

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ , வாழ்க வளமுடன்.
  முதலில் மன்னித்துக் கொள்ளவும். அலைபேசியில் பார்த்து விட்டு பதிக்க மறந்து போனதால்

  The comment doesn't exist or no longer exists. என்று வந்து விட்டது.

  நாங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதலில் மூவர் கோவில், அப்புறம் சித்தன்னவாசல் போனோம். நார்த்தா மலை போக பயணத்திட்டத்தில் இல்லை, சித்தன்னவாசலிருந்து தெரிந்த மலையை பார்த்து மகன் போக வேண்டும் என்று ஆசை பட்டதால் நார்த்தாமலை போனோம். அப்புறம் அங்கிருந்து கும்பகோண்ம் போய் விட்டோம்.


  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  நலமா?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  யாளி புராணவிலங்கு என்று சொல்கிறார்கள்.
  யானையைவிட பெரிது என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. நார்த்தாமலையைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்ததும் முந்தைய இரு பதிவுகளையும் படித்து விட்டு இங்கு வந்து மூன்றாவது பதிவையும் படித்து விட்டு இதை எழுதுகிறேன். புகைப்படங்களும் பதிவுகளும் அருமை!

  சின்ன வயதில் என் தந்தை உயிரோடிருந்த போது, ஏழு வயது சிறுமியாக இருந்த போது பார்த்தது. ஆனால் மலை ஏறி பார்த்த மாதிரி ஞாபகமில்லை. படிகளில் ஏறுவது போல வேறு வழி ஏதேனும் இருக்குமோ?

  பதிலளிநீக்கு
 14. அழகான படங்கள் பதிவின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 15. அருமையான வரலாற்றுப் பதிவு - அழகான படங்களுடன்..

  ஆனாலும், முந்தைய பதிவுகளை இன்னும் படிக்கவில்லை..
  மதியமும் இரவும் என்று - அதிக நேர வேலை.. தூக்கம் கண்களைச் சுழற்றுகின்றது..

  மீண்டும் பதிவுகளுக்கு வரவேண்டும்.. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 16. பலமுறை பார்த்துள்ளோம். தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கின்ற கோயில்களில் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
  படிகள் இல்லை, மலைமேல்தான் ஏறி போக வேண்டும்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  வேலைகளுக்கு இடையில் பதைவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  மெதுவாய் நேரம் இருக்கும் போது படியிங்கள்.
  உங்க்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
  உங்கள் வரவுக்கு, கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. அழகழகான சிற்பங்கள். அருமையான அலங்காரத்துடன் சிவபெருமான். மலை இறங்கும் போது கண்ட காட்சிகளைக் காணக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  மலை இறங்கும் போது கண்ட காட்சிகளை காண ஆவலாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 23. எவ்வளவு அழகான சிற்ப வேலைப்பாடுகள்.. நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையாத என் போன்றோர்க்கு தங்கள் பதிவுகள் நல்லதொரு வரப்பிரசாதம்.. நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 24. சிற்பங்கள் அழகு! சற்று சிதைந்திருப்பது போல் உள்ளது இல்லையா.... படங்களும் அழகு! ரொம்பவே அழகாக இருக்கிறது இடம்!!! பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு