ஞாயிறு, 22 மார்ச், 2026

உலக தண்ணீர் தினம் - 2026

  

நன்றி-  கூகுள்

2026 ஆம் ஆண்டு உலக நீர் தினம், பாலின சமத்துவத்தில் நீரின் பங்கின் மீது கவனம் செலுத்தும்.


உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.

நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு   கருபொருள் இருக்கும்.

இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்

"நீரும்  பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்

" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது"  இந்தக் கருப்பொருள்,

தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக  வாதிடுகிறது.


// பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //

இப்படிச் சொல்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

இந்த ஆண்டு பெண்கள் , சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீரை பாதுகாப்பது போல பெண்களை, சிறுமிகளை பாதுகாக்க வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் வீட்டு உபயோகம் நீரைச் சேகரிப்பதில் நிர்வாகிப்பதிலும் பெண்களே  . ஆயினும் நீர் அமைப்புகளை நிர்வாகிக்கும் முடிவெடுக்கும்  செயல்முறைகளிலிருந்து  அவர்கள் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள்.  நீர் சேகரிப்பதில் சிலர் தங்கள் கற்றலையும் தொடர முடியவில்லை, பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.

பெண்களையும், சிறுமிகளையும் எவ்வாறு இந்த  சமமற்ற முறை பாதிக்கிறது  என்பதை எடுத்து காட்டுகிறது.

மேலும் நாளைய தலைமுறையை பெற்று கொடுப்பவர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான நீரை கிடைக்க செய்வது அவசியம்.




இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள், வருங்கால சந்ததியினருக்காக நீரைப் பாதுகாக்கத் தேவையான மாற்றங்களை விரைவாகச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. மோசமான சுகாதாரம், போதுமான சுகாதார வசதியின்மை மற்றும் நீரினால் பரவும் நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் 8.2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதைத் தடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 2030-ஆம் ஆண்டுக்கான சில நிலையான வளர்ச்சி இலக்குகளை வகுத்துள்ளது.

//பெண்கள், சிறுமிகள் , மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களின் தேவைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சுகாதாரம், மற்றும் தூயமை சேவைகளுக்கான சமமான மற்றும் போதுமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் திறந்தவெளியில்  மலம் கழிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதல். தண்ணீரின் தரத்தை  மேம்படுத்த வேண்டும்.

எல்லா இடங்களிலும் நீர் இழப்பைத் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவறைகளில்  நீர் கசிவுகள்  உள்ளதா என்று அடிக்கடி சரிப்பார்க்க வேண்டும்.

குறுகிய  நேர குளியல்  மற்றும்  நீர் சேமிக்கும்  ஷவர் ஹெட்களை  பொறுத்துதல்

பல் துலக்கும் போது, சவரம் செய்யும் போது, பாத்திரம் துலக்கும் போது  காய்கறிகளை சுத்தம் செய்யும் போது தண்ணீரை தொடர்ந்து  ஓட விடுவதை தவிர்க்கவும். 

தானியங்கி  பாத்திரம்  கழுவும்  இயந்திரங்களையும், சலவை இயந்திரங்களையும்  முழுமையாக நிரம்பி இருக்கும் போது  பயன்படுத்தவும். 

தேவைப்படும் போது செடிகளை பராமரித்தல்//


செய்தி தொகுப்பு  https://www.pacehospital.com/world-water-day


மேலும் செய்திகளுக்கு இந்த சுட்டியில் படிக்கலாம்.


உலக தண்ணீர் தினம் (2023)



உலக தண்ணீர் தினம் (2022


இந்த பதிவில்  :-


இந்த பதிவில்  எங்கள் குடியிருப்பு பக்கம் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் . அதனால் பறவைகள் படும் துயரம் இவற்றை இந்த உலக தண்ணீர் தின நாளில் எழுதலாம் என்று எழுதி இருக்கிறேன் .





எங்கள் குடியிருப்பு வளாகத்துக்கு அருகில்  இருக்கும் இந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் தான்   பல வகை பறவைகள்  இருந்தன.  இந்த படத்தில் முள்ளு மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.  இன்னும் அதிகமாய் அடர்த்தியாக இருந்தது. காலை நேரம்  குயிலின் கீதம், செம்போந்து பறவையின் ஒலி  தவிட்டுக்குருவி, மைனா, புல் புல், செண்பகப் பறவை  என்று பறவைகளின் ஒலி அதிகாலை முதல் மாலை வரை கேட்கும்.  அங்கிருந்துதான் எங்கள் குடியிருப்புக்கு பறவைகள் வரும்.

போன பதிவு சிட்டுக்குருவி வரவில்லை இப்போது எங்கள் வளாகத்திற்கு என்று சொன்னதற்கு காரணம் இந்த பதிவில் இருக்கிறது.




உயிர்களைக் காக்க தண்ணீரைக் காப்போம்
இன்று சேமிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்
அவசியம் அவசியம் நீர் பாதுகாப்பு அவசியம்
சேகரிப்போம் சேகரிப்போம் மழை நீரை சேகரிப்போம்

பள்ளி பிள்ளைகள் பாடிய முழு பாடலையும் படிக்க இந்த பதிவை படிக்கலாம்.
 



தண்ணீர் கஷ்டம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்தில் தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவழித்தார்கள். அதிகம் தண்ணீர் செலவழித்தால், அதிகம் காசு செலவழியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்போதெல்லாம் மோட்டார் கிடையாது. கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். ஒரு வேளை அதற்காகவே இப்படி கூறினார்களோ என்று தோன்றும். இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் உடம்பு நோவதில்லை, தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்றும் யாருக்கும் தோன்றுவதில்லை.

பானுமதி வெங்கடேஷ்வரன் பின்னூட்டத்தில் கூறியது





இந்த பதிவை 7411 பேர் படித்து இருக்கிறார்கள்.


தண்ணீர் சிக்கனத்தை விரும்புபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் இந்த பதிவை நிறைய பேர் படித்து இருக்கிறார்கள்.



//நீரின்றி அமையாது உலகு.  அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.  மனிதன் சுயநலமாக பூமியை தோண்டி தண்ணீர் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடாமல் தன்னைத் தோண்டி ஞானம் கண்டால் விழித்துக்கொண்டு தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்!  அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள். .  என்ன  ஆகுமோ எதிர்காலம்!//

ஸ்ரீராம் பின்னூட்டம். 

உலக தண்ணீர் தினம் (2023)




 நீர் சேமிப்பும் ,  நீர் நிலைகளை  சுத்தமாக வைத்து இருப்பதும்  அவசியமாகிறது.

பழைய பதிவுகளிலிருந்து படங்கள். குலதெய்வம் கோயில்  அருகில் இருக்கும் ஏரி



மாயவரம் வீட்டு மொட்டைமாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பேன் அப்போது எடுத்தது.

அனைத்து உயிர்களுக்கும் நீர் அவசியம்.

//நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான் இன்று அமையாது ஒழுக்கு.//

திருவள்ளுவர் வாக்குப்படி நீர் இல்லாமல் உலகியல் வாழ்வு நடைபெறாது.
நீரை பாதுகாப்போம்.



வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்! 

  •  ------------------------------------------------------------------------------------------------------------

16 கருத்துகள்:

  1. இரண்டு ஆச்சர்யம்.  முதலாவது இப்போதுதான் ரமணி சார் தளத்தில் தண்ணீர் தினம் பற்றி படித்துக் கருத்திட்டு வருகிறேன்.  

    இரண்டாவது ஆச்சர்யம், இங்கும் இந்தப் பதிவு என்பதை விட, என்னுடைய கமெண்ட்டை எடுத்து நீங்கள் போட்டிருருப்பது! இப்போது ரமணி ஸார். தளத்திலும் இந்த மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதைச் சொல்லி விட்டு இங்கே வந்தேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இரண்டு ஆச்சர்யம். முதலாவது இப்போதுதான் ரமணி சார் தளத்தில் தண்ணீர் தினம் பற்றி படித்துக் கருத்திட்டு வருகிறேன். //

      ஓ சரி, நானும் இப்போது போய் படித்தேன்.

      //இரண்டாவது ஆச்சர்யம், இங்கும் இந்தப் பதிவு என்பதை விட, என்னுடைய கமெண்ட்டை எடுத்து நீங்கள் போட்டிருருப்பது! இப்போது ரமணி ஸார். தளத்திலும் இந்த மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதைச் சொல்லி விட்டு இங்கே வந்தேன்!!!!//

      உங்கள் பின்னூட்டத்தையும் படித்தேன். இறைவன் அருளால் மூன்றாம் உலக போர் வேண்டாம். நம்மிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பாதுகாத்தால் போதும். அதன் அவசியத்தை உணர்ந்து நடந்து கொண்டால் போதும் எல்லாம் நலமே!

      நீக்கு
  2. நகரம் முழுக்க வானளாவ எழும் கட்டிடங்களை பார்க்கையில் எனக்கு எப்போதுமே வரும் முதல் கவலை இத்தனை வீட்டுக்கும் எப்படி தண்ணீர் ஏற்பாடு செய்வார்கள்?  அவர்கள் அதை எப்படி செலவழிப்பார்கள்?  ஒருநாள் திடீரென்று ஒருநாள் இன்று தண்ணீர் இல்லை என்றால் இத்தனை ஜனங்களும் எப்படி அவஸ்தைப்படுவார்கள்.  பக்கத்துக்கு வீடுகளே பகையாகிப் போகுமே... என்றெல்லாம் எண்ணம் எப்போதும் வரும். 

    ஏனென்றால் அப்படி பக்கத்து வீடுகளெல்லாம் எங்களுடன் பகை பாராட்டிய காலம் ஒன்றும் உண்டு.  அப்படி பகை பாராட்டியவர்களே என்னிடமிருந்து என் சைக்கிளையும், கயிற்றுடன் கூடிய குடங்களையும் எடுத்துச் சென்று அவர்கள் வீட்டுக்கு தண்ணீர் எடுத்ததும் நடந்தது! நான் சிறு வயதிலிருந்தே தண்ணீர்க் கஷ்டத்தை அனுபவித்தவன்.  குறைந்த நீரில் எப்படி வாழ்வது என்பது பாடம்.  எவ்வளவு சிக்கனமாக உபயோகிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனமாக உபயோகித்தே பழக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நகரம் முழுக்க வானளாவ எழும் கட்டிடங்களை பார்க்கையில் எனக்கு எப்போதுமே வரும் முதல் கவலை இத்தனை வீட்டுக்கும் எப்படி தண்ணீர் ஏற்பாடு செய்வார்கள்? அவர்கள் அதை எப்படி செலவழிப்பார்கள்? ஒருநாள் திடீரென்று ஒருநாள் இன்று தண்ணீர் இல்லை என்றால் இத்தனை ஜனங்களும் எப்படி அவஸ்தைப்படுவார்கள். பக்கத்துக்கு வீடுகளே பகையாகிப் போகுமே... என்றெல்லாம் எண்ணம் எப்போதும் வரும். //

      ஒரு நாள் மோட்டார் பழுது பட்டாலே மிகவும் சிரமமாக இருக்கிறது.
      தண்ணீரை எவ்வளவு பிடித்து வைத்துக் கொள்ள முடியும்?
      தண்ணீர் விலைக்கு வாங்கி தருகிறார்கள்.


      //ஏனென்றால் அப்படி பக்கத்து வீடுகளெல்லாம் எங்களுடன் பகை பாராட்டிய காலம் ஒன்றும் உண்டு. அப்படி பகை பாராட்டியவர்களே என்னிடமிருந்து என் சைக்கிளையும், கயிற்றுடன் கூடிய குடங்களையும் எடுத்துச் சென்று அவர்கள் வீட்டுக்கு தண்ணீர் எடுத்ததும் நடந்தது! நான் சிறு வயதிலிருந்தே தண்ணீர்க் கஷ்டத்தை அனுபவித்தவன். குறைந்த நீரில் எப்படி வாழ்வது என்பது பாடம். எவ்வளவு சிக்கனமாக உபயோகிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனமாக உபயோகித்தே பழக்கம்..//

      கோடை காலத்தில் மதுரை முழுவதும் சைக்கிளில் இப்படி இரண்டு குடங்களை கட்டிக் கொண்டு வெகு தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்து வருபவர்களை பார்க்க முடியும். அதையும் பதிவு செய்து இருக்கிறேன் .

      கார்ப்பேஷன் தண்ணீரையும் மோட்டார் போட்டு எடுத்து பக்கத்தில் உள்ளவர்களுக்கு வரவிடாமல் தடுப்புவர்கள் இருக்கிறார்கள்.

      ஒரு நாள் மோட்டாரை பறிமுதல் செய்தால் மீண்டும் அதை பணம் கொடுத்து வாங்கி வந்து விடுகிறார்கள் பெரிய மனிதர்கள்.
      நாங்களும் உங்களைப் போலதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பழகி விட்டோம். அந்தக்காலத்தில் மழை நீரைக்கூட வீணாக்காமல் பிடித்து வைத்து பயன்படுத்துவோம்.

      நீக்கு
  3. மதுரையில் திருமணத்துக்கு முன்னும் சரி, அப்புறம் சென்னையில் திருமணத்துக்குப் பின்னரும் சரி தண்ணீர் எங்களுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்தது.  எங்கேயோ சென்று அல்லது எங்கெல்லாமோ சென்று அவ்வப்போது தண்ணீர் எடுத்து வந்ததுண்டு மதுரையில்.  சைக்கிளில் கயிறு கட்டிய குடங்களுடன் சென்று தண்ணீர் சேகரித்து வருவேன்!  தண்ணீர் லாரி வந்திருக்கிறது என்றால் இரன்டு குடங்களுடன் ஓடிவிடுவுவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரையில் திருமணத்துக்கு முன்னும் சரி, அப்புறம் சென்னையில் திருமணத்துக்குப் பின்னரும் சரி தண்ணீர் எங்களுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்தது. எங்கேயோ சென்று அல்லது எங்கெல்லாமோ சென்று அவ்வப்போது தண்ணீர் எடுத்து வந்ததுண்டு மதுரையில். சைக்கிளில் கயிறு கட்டிய குடங்களுடன் சென்று தண்ணீர் சேகரித்து வருவேன்! தண்ணீர் லாரி வந்திருக்கிறது என்றால் இரன்டு குடங்களுடன் ஓடிவிடுவுவேன்!//

      தண்ணீருக்கு கஷ்டபட்டதால் அதன் அருமை தெரிகிறது.
      இப்போது இறைவன் உங்களை தண்ணீருக்கு கஷ்டபடாமல் வைத்து இருப்பார் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  4. ராஜஸ்தான் போன்ற வேறு சில வடமாநிலங்களில், நிறைய இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக குடத்துடன் செல்லும் படங்களைப் பார்க்கையில் இரக்கத்தை விட பயமாகத்தான் இருக்கும்.  நமக்கு என்று அந்த நிலை வருமோ என்கிற பயம் மனதுக்குள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ராஜஸ்தான் போன்ற வேறு சில வடமாநிலங்களில், நிறைய இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக குடத்துடன் செல்லும் படங்களைப் பார்க்கையில் இரக்கத்தை விட பயமாகத்தான் இருக்கும். நமக்கு என்று அந்த நிலை வருமோ என்கிற பயம் மனதுக்குள் இருக்கும்.//

      வட மாநிலங்களில் மட்டுமல்ல, நம் இராமநாதபுரத்திலும் மதுரையில் சில இடங்களில் மக்கள் ஊற்று நீரை நம்பி இருக்கிறார்கள்.
      புதுக்கோட்டை போன்ற ஊர்களிலும் தண்ணீருக்கு கஷ்டம் தான்.
      சென்னை புறநகர் பகுதிகள் , ஈரோடு , பெரம்பலூர் பகுதிகளில் தண்ணீர் தட்டுமாடு இருக்கிறது.

      நீக்கு
  5. படங்களுடன் பதிவு சுவாரஸ்யம் என்பதை விட ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது என்பது சரி.  வியாபாரிகள், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தண்ணீரை அடிக்கும் கொள்ளை வேறு அநியாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களுடன் பதிவு சுவாரஸ்யம் என்பதை விட ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது என்பது சரி. வியாபாரிகள், மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் தண்ணீரை அடிக்கும் கொள்ளை வேறு அநியாயம்.//

      தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சாயபட்டரைகள் கழிவு நீர்களை ஆற்றில் கலக்க விட்டு அது குடிநீரை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது கரூர் பக்கம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நீர் இன்றி அமையாது உலகு..
    .
    பதிவு சிறப்பு
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நீர் இன்றி அமையாது உலகு..
      .
      பதிவு சிறப்பு
      வாழ்க நலம்...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. மூன்றாம் உலகப்போர் நீருக்காகவே இருக்கும் என்று பலமுறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் நீரை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மனிதர்கள் இங்கே நிறையவே... தினமும் காலை நேரம் நடக்கச் செல்லும்போது வீடுகளில் எந்த அளவு தண்ணீர் வீணடிக்கிறார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கும். வாசலில் தண்ணீர் தெளிப்பது நல்லது தான், தேவையானதும் கூட! ஆனால் அதற்கு ஒரு அளவு வேண்டாமா என்று யோசிக்கும் அளவு வீணடிக்கிறார்கள். சாலையோர பைப்பில் தண்ணீரைத் திறந்து விட்டு பக்கத்து வீட்டு பெண்மணியுடன் வம்பு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர்! இது போன்ற காட்சிகள் தினம் தினம் பார்க்க முடிகிறது. தண்ணீரை வீணடிக்காதீர்கள் என்று சொன்னால், “உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! பெரிசா வந்துட்டான் புத்தி சொல்ல!” என்பார்கள். ஒரு சில இடங்களில் சொல்லி சொல்லடி பட்ட அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //மூன்றாம் உலகப்போர் நீருக்காகவே இருக்கும் என்று பலமுறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

      ஆயினும் நீரை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மனிதர்கள் இங்கே நிறையவே..//

      ஆமாம், அப்படியும் மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.


      . //தினமும் காலை நேரம் நடக்கச் செல்லும்போது வீடுகளில் எந்த அளவு தண்ணீர் வீணடிக்கிறார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கும். வாசலில் தண்ணீர் தெளிப்பது நல்லது தான், தேவையானதும் கூட! ஆனால் அதற்கு ஒரு அளவு வேண்டாமா என்று யோசிக்கும் அளவு வீணடிக்கிறார்கள். //

      ஆமாம், அதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

      //சாலையோர பைப்பில் தண்ணீரைத் திறந்து விட்டு பக்கத்து வீட்டு பெண்மணியுடன் வம்பு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர்! இது போன்ற காட்சிகள் தினம் தினம் பார்க்க முடிகிறது. தண்ணீரை வீணடிக்காதீர்கள் என்று சொன்னால், “உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! பெரிசா வந்துட்டான் புத்தி சொல்ல!” என்பார்கள். ஒரு சில இடங்களில் சொல்லி சொல்லடி பட்ட அனுபவம் உண்டு.//

      ஆமாம், அன்று ஒரு நாள் ஜோதி தொலைகாட்சியில் பிரதோஷ பூஜை காட்டினார்கள் அதில் நந்தி பக்கம் ஒரு அண்டாவில் தண்ணீர் போய் கொண்டே இருக்கிறது பார்க்கும் கூட்டம் யாரும் அதை நிறுத்தவே இல்லை.

      முன்பு அபிஷேகத்திற்கு தண்ணீர் சுமந்து வருவாரக்ள், குளத்தில் கிணற்றில் என்று. இப்போது ஒவ்வொரு சுவாமி பக்கமும் பைப் வைத்து விட்டார்கள் சுமக்க வேன்டியது இல்லை, நீரை வீணாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
      நாம் சொன்னால் நாம் பைத்தியக்கார பட்டம் கிடைக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  8. அற்புதமான அவசியமான விரிவான பகிர்வுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்

      //அற்புதமான அவசியமான விரிவான பகிர்வுக்கு வாழ்த்துகள்//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு