சனி, 13 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும் பகுதி -2



 

மார்கழி கோலமும்  மகரிஷி கவிதையும் -1 

நேற்று போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.

இந்த பதிவில் மேலும் சில கோலங்களும்  வேதாத்திரி மகரிஷிஅவர்களின்  கவிதைகள் இடம்பெறுகிறது.




யோகம்
எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,
எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்

                       

                                              சத்- சித- ஆனந்தம்

                           கண்ணும் ஒளியும் காண்பவனும் 

                                     ஒன்றே போல்,

                                எண்ணம், இயற்கை, ஈசன்

                                      எனும் மூன்றும்  ஒன்றாகும்

                      

உயிர் நிலையறிய

கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,
உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை

                     

                                   உணர்ந்த ஒழுக்கம்

                           பிறர் விருப்பம் கூர்ந்துணர்ந்து,

                                தன்  விருப்பம் பயன் படுத்தல் 

                                  அறம் என்றும் கடமை என்றும்

                            அன்பு என்றும் அறிந்து கொண்டோம்.

                       

                                     ஒடுங்கி-  உணர்ந்திடு

நினைவை யடக்க நினைத்தால் , நிலையா.

நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்.


               

                                            தீய எண்ணம்

                                 உண்மையில் எதிரி 

                                உனக்கு உண்டு எனில்,

                                     உள்ளத்தி லெழும்

                                 ஒழுங்கற்ற  எண்ணமே.

                   

                                               பெரியோர் இயல்பு

                                              உணவில் எளிமை

                                                உழைப்பில்  கடுமை

                                               ஒழுக்கத்தில் உயர்வு

                                                    உத்தமர் இயல்பு

                       

                                                   உனது பெருமை

                        அவனில் அணு, அணுவில் அவன்,

                          உன்னில் எல்லாம், நீ அறி உன்னை.


பெண்ணின் பெருமை

பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்.

இருளும் - ஈசனும்

மாசற்ற ஒளிஊடே , மறைந்திருக்கும் இருள்போல
ஈசன் அறிவில் இருக்கும் நிலை.



போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்யும் படம் வரைந்தவர் என் கணவர்  கணிணி ஓவியம்

மனத்துய்மை- வினைத்தூய்மை
மனத்தூய்மை வினைத்தூய்மை  மனிதன் வாழ்வில்
மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்
மனம் உயர நேர்மை வழி அகத்தவம் ஆம்.
மற்றும் தன்வினை உயர அறமே  ஆகும்


மாயவரத்தில் இருந்த போது 
பொங்கல் பண்டிகை


உணவும்  எண்ணமும்

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்




கணவர் கணினியில் வரைந்த பொங்கல் வாழ்த்து

உண்மை இன்பம்
பொங்குக பொங்குக பூரித்து உள்ளமெல்லாம்
எங்கும் நிறைந்த நம் ஏகந்த நிலையறிந்து

உலக நல வாழ்த்து
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம்  தானியத்தை உவப்புடனே  பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள்  மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்



இந்த இரண்டு புத்தங்களில் உள்ள கவிதைகள் தான் இந்த பதிவில் இடம்பெற்றது.

மகரிஷி கவிதைகளை தினம்    கோலம்  போட்டு எழுதி இருப்பதை பதிவு செய்து இருப்பேன். .பார்க்க நேரம் இருந்தால் பார்க்கலாம்.

பேராசிரியர் பழனிசாமி அவர்கள் யூடியூப்பில் வெளியிட்ட மாக்கோலமாய் விளைந்த மதி விருந்தில் என் கோலம் இடம் பெற்று இருக்கிறது. மேலே உள்ள சுட்டியில் கொடுத்து இருக்கும் பதிவில் உள்ள கோலம் இடம்பெற்று இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.


அனைவருக்கும் போகி பண்டிகை, தைத்திருநாள்,   மற்றும் திருவள்ளுவர் தினம் , உழவர்திருநாள்,  வாழ்த்துகள்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

29 கருத்துகள்:

  1. சாரின் ஓவியங்கள் இன்று சிறப்பிடம் வகிக்கின்றன.  கோலங்கள் யாவும் அழகு.  மகரிஷியின் அந்த வரிகள் PDF ஆக கிடைக்குமா. தேடிப்பார்க்கிறேன்.  என்ன தலைப்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சாரின் ஓவியங்கள் இன்று சிறப்பிடம் வகிக்கின்றன.

      சார் வரையும் ஓவியங்களின் ரசிகர் அல்லவா நீங்கள். முதலில் ஓவியத்தை தான் சொல்கிறீர்கள்.

      //கோலங்கள் யாவும் அழகு//

      நன்றி ஸ்ரீராம்.

      //மகரிஷியின் அந்த வரிகள் PDF ஆக கிடை க்குமா. தேடிப்பார்க்கிறேன். என்ன தலைப்பு?////

      முதலில் குறிப்பிட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்

      "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" புத்தகத்தின் பேர். புத்தகங்கள் படத்தை பதிவில் சேர்த்து விட்டேன்.
      மகரிஷி அவர்களின் எல்லா கவிதைகளின் தொகுப்பு ஞானக்களஞ்சியம் என்ற புத்தகத்திலே உள்ள கவிதைகளும் இடம்பெற்று இருக்கிறது.



      நீக்கு
  2. ஏழாவது கோலம் சிறப்பாக இருக்கிறது. சில கோலங்கள் எளிமையான அழகில் மிளிர்கின்றன. மொசைக் தரையில் கோலங்கள் போடுவது சவாலான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏழாவது கோலம் சிறப்பாக இருக்கிறது. சில கோலங்கள் எளிமையான அழகில் மிளிர்கின்றன. //
      மிக எளிமையாக இருக்கிறதே! என்று நான் நினைத்தேன் நீங்களும் அதையே சொல்லி விட்டீர்கள்.

      //மொசைக் தரையில் கோலங்கள் போடுவது சவாலான விஷயம்.//

      மொசைக் தரைக்கு ஏற்றார் போல கலர் தேர்ந்து எடுக்க வேண்டும், தரை டிசைன் ஒத்து வர மாட்டேன் என்கிறது.

      முன்பு ஒரு கோல பதிவிலும் இந்த கருத்தை சொல்லி இருக்கிறீகள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. மீண்டும் ஒரு கலை விருந்து..

    வண்ண வண்ணக் கோலங்களைப் பார்ப்பதே மகிழ்ச்சி.. அதன் கூடவே மகரிஷியின் அருளுரைகள் எனும் போது இரட்டைப் பாயசம் என தித்திக்கின்றது..

    சிறப்பான பதிவு..

    அனைவருக்கும் போகி, பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //மீண்டும் ஒரு கலை விருந்து..

      வண்ண வண்ணக் கோலங்களைப் பார்ப்பதே மகிழ்ச்சி.. அதன் கூடவே மகரிஷியின் அருளுரைகள் எனும் போது இரட்டைப் பாயசம் என தித்திக்கின்றது..
      சிறப்பான பதிவு..//

      நன்றி.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுகும் நன்றி.

      நீக்கு


  4. ஹைலைட் மாமாவின் ஒவியங்கள் கணினி வழியான ஓவியங்கள்.

    கோமதிக்கா கோலங்கள் அனைத்தும் அழகு. அதிலும் அந்த வண்ணத்துப் பூச்சி, வாத்தும் ஸ்டார் போல போட்டிருக்கும் கோலம் எல்லாமே சூப்பர்.

    வேதாத்ரி மகரிஷி அவர்களின் கவிதை வடிவிலான வாக்குகளை ரசித்து வாசித்தேன். மிகவும் இயல்பான எல்லோருக்கும் பொருந்தும் ஒன்றாக இருப்பது சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //ஹைலைட் மாமாவின் ஒவியங்கள் கணினி வழியான ஓவியங்கள்.//

      நன்றி

      //கோமதிக்கா கோலங்கள் அனைத்தும் அழகு. அதிலும் அந்த வண்ணத்துப் பூச்சி, வாத்தும் ஸ்டார் போல போட்டிருக்கும் கோலம் எல்லாமே சூப்பர்.//

      நன்றி கீதா. வாத்து கோலமா ? அடைக்காக்கும் புறா என்று நான் நினைத்து போட்டேன், அது உங்களுக்கு வாத்து போன்று தோற்றம் அளிக்கிறதா? தன் உடலை குறுக்கி கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. இறக்கை கொஞ்சம் வாத்தின் இறக்கை போல இருப்பதால் நீங்கள் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன்.
      ஸ்டார் கோலத்தை ரசித்தமைக்கு நன்றி.

      //வேதாத்ரி மகரிஷி அவர்களின் கவிதை வடிவிலான வாக்குகளை ரசித்து வாசித்தேன். மிகவும் இயல்பான எல்லோருக்கும் பொருந்தும் ஒன்றாக இருப்பது சிறப்பு.//

      ஆமாம், எளிமையாக எல்லோரும் கடைபிடிக்க எளிதாக இருப்பது வேதாத்ரி மகரிஷியின் கவிதைகளின் சிறப்பு.

      நீக்கு
  5. வீட்டை சுத்தம் செய்வது போல் நம் மனதையும் சுத்தம் செய்வது இன்னும் சிறப்பு என்று போகி தோறும் நம் வீட்டில் சொல்லிக் கொள்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டை சுத்தம் செய்வது போல் நம் மனதையும் சுத்தம் செய்வது இன்னும் சிறப்பு என்று போகி தோறும் நம் வீட்டில் சொல்லிக் கொள்வதுண்டு.//

      அதனால் தான் சார் சுத்தம் செய்வது போல வரைந்த ஓவியத்தையும் . மனத்தூய்மை, வினைத்தூய்மை கவிதையை இங்கு பகிர்ந்தேன் கீதா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. ஓ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து புத்தகத்தில் பதிவில் உள்ள உங்கள் கோலங்கள் இடம் பெற்றனவா! இடம் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    எல்லாக் கோலங்களும் அருமை குறிப்பாகப் பெண்ணின் பெருமை, சச்சிதானந்தம் எல்லாமே அருமை.

    கோலங்கள் எல்லாமே அழகு அருமை எதைச் சொல்ல எதை விட!

    சாரின் ஓவியங்கள் போகி மற்றும் பொங்கல் வாழ்த்து ஓவியங்கள் மிகவும் சிறப்பு.

    போகி மற்றும் பொங்கல் வாத்துகள் சகோதரி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வள்மௌடன்

      //ஓ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து புத்தகத்தில் பதிவில் உள்ள உங்கள் கோலங்கள் இடம் பெற்றனவா! இடம் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.//

      நன்றி சகோ

      //எல்லாக் கோலங்களும் அருமை குறிப்பாகப் பெண்ணின் பெருமை, சச்சிதானந்தம் எல்லாமே அருமை.

      கோலங்கள் எல்லாமே அழகு அருமை எதைச் சொல்ல எதை விட!

      சாரின் ஓவியங்கள் போகி மற்றும் பொங்கல் வாழ்த்து ஓவியங்கள் மிகவும் சிறப்பு.

      போகி மற்றும் பொங்கல் வாழ்த்துகள் சகோதரி!//


      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  7. போகி மற்றும் பொங்கல் வாழ்த்துகள் சகோதரி!

    துளசிதரன்

    (அக்கா துளக்சியின் முந்தைய கருத்தை அடிக்கும் போது வாத்துகள் என்று வந்துவிட்டது அதை வெளியிடும் போதுதான் கவனித்தேன் வெளியிட்டு விட்டதால் அதைத் திருத்த முடியவில்லை அதனால் மீண்டும் அதைக் கொடுத்தேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை கீதா வாழ்த்துகள் என்று திருத்தி விட்டேன்.

      நீக்கு
  8. வணக்கம் சகோ
    ஓவியம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    கோலங்கள் அழகாக உள்ளது.
    தகவல்களும் சிறப்பு
    தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      வணக்கம் சகோ
      ஓவியம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

      கோலங்கள் அழகாக உள்ளது.
      தகவல்களும் சிறப்பு
      தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோ. ‌

      நீக்கு
  9. திருநாவுக்கரசு சாரின் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. மிக நல்ல திறமையாளர்.

    கோலமும், எண்ணக் கவிதையும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //திருநாவுக்கரசு சாரின் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. மிக நல்ல திறமையாளர்.//

      நன்றி.

      //கோலமும், எண்ணக் கவிதையும் சிறப்பு//

      எண்ணங்களை வைத்து நிறைய கவிதை இருக்கிறது. உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  10. நீங்கள் வாழை இலையில் வைத்துள்ளது கனுப்பொடியா? நாங்கள் மஞ்சள் இலையில் வைப்போம்.

    இங்கு (பெங்களூர்) இரண்டே நாட்கள்தாம் நான் மஞ்சள் குலைகளைப் பார்ப்பேன். அதற்குள் வாங்கிவிடவேண்டும் (50-100 ரூபாய்). இன்று போய் வாங்கிவந்தேன். முழுக்கரும்பு வாங்காமல், முழுக்கரும்பை துண்டுகளாக வெட்டி வாங்கிவந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் வாழை இலையில் வைத்துள்ளது கனுப்பொடியா? நாங்கள் மஞ்சள் இலையில் வைப்போம்.//

      கனுப்பொடி போல தான். நாங்கள் சிறுவீட்டுப்பொங்கலுக்கு வைப்போம். பெண் குழந்தைகள் கோலத்தில் பூசணி பூ வைப்பார்கள் இல்லையா அதை உலர வைத்து எடுத்து வைத்து இருப்பார்கள் அதை காணும் பொங்கல் அன்று ஆற்றில் கரைப்பார்கள்.

      இப்போது எல்லாம் காய்ந்தவற்றை கரைப்பது இல்லை புதிதாக வைத்த 9, 11 என்று அடிப்படியில் வைத்த சாணி பிள்ளையாரை பூவோடு கரைப்பார்கள் பெண் குழந்தைகள், இலையில் வைத்த சர்க்கரைபொங்கல், வெண்பொங்கல், வெல்லம், வாழைப்பழம் எல்லாவற்றையும் கரைத்து விருவார்கள் நீரில் உள்ள ஜீவராசிகள் உண்ண. ஆற்ரம் கரையில் குழந்தைகள் கும்மி அடித்து பாட்டு பாடி கொண்டு போனதை கரைத்து கொண்டு போன கட்டு சாதம் சாப்பிட்டு வருவார்கள் உறவுகளுடன். பெரிய கூட்டமாய் போவோம்.
      அதெல்லாம் நான் சிறுமியாக இருக்கும் போது. இப்போது படைப்பு சோறு காக்காவுக்கு மட்டும்.

      சிறு வீடு கட்டி அதில் பால் பொங்கல், அல்லது பால் காய்ச்சி சிறு வீட்டுப் பொங்கல் என்பார்கள்

      சின்ன இலை காக்காவிற்கு, பெரிய இலையில் வைத்து இருப்பது நீர் நிலைக்கு எடுத்து சென்று அங்கு கரைத்து வருவோம். நாலு நாள் பொங்கல் விழாவை இப்போது ஒரே நாளில் செய்து விடுகிறோம்.

      //இங்கு (பெங்களூர்) இரண்டே நாட்கள்தாம் நான் மஞ்சள் குலைகளைப் பார்ப்பேன். அதற்குள் வாங்கிவிடவேண்டும் (50-100 ரூபாய்). இன்று போய் வாங்கிவந்தேன். முழுக்கரும்பு வாங்காமல், முழுக்கரும்பை துண்டுகளாக வெட்டி வாங்கிவந்தேன்.//

      இங்கும் அப்படித்தான் பொங்கல் சமயத்தில் மட்டுமே மஞ்சள்குலை கிடைக்கும். கரும்பு ஜோடி 100 ரூபாய் நான் ஒன்று வாங்கினேன் நான் சாப்பிட முடியாது, வேலை செய்பவர் , மற்றும் குடியிருப்பு பணியாளர்களுக்கு துண்டு போட்டு கொடுத்து விடுவேன். முன்பு இரண்டு வாங்குவோம். இப்போது ஒன்றுதான்.

      மாட்டுக்கு பொங்கல் வாழைப்பழம் கொடுத்து விடுவேன்.

      வளாகத்திற்கு வெளியே காய்கறி விற்பவர் கரும்பு, மஞ்சள் கொத்து, காப்பு கட்டும் பூளைப்பூ எல்லாம் வைத்து இருந்தார். அவர் கொண்டு வந்து கொடுத்து விட்டார்.

      தனியாக கொண்டாடும் பொங்கல். (போன வருடம் மகன் வீட்டில். )தங்கைகள் அழைத்தார்கள்,
      வீட்டில் பொங்கல் வைக்கிறேன், பிள்ளைகள் பார்க்க வருவார்கள் என்று சொல்லி விட்டேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    இரு தினங்களாக கொஞ்சம் வேலைகள் இருந்ததினால், நேற்று பதிவுக்கு வர இயலவில்லை. பிறகு வந்து கோலங்களை ரசிக்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//

      நன்றி.


      //இரு தினங்களாக கொஞ்சம் வேலைகள் இருந்ததினால், நேற்று பதிவுக்கு வர இயலவில்லை. பிறகு வந்து கோலங்களை ரசிக்கிறேன். நன்றி சகோதரி.//

      பண்டிகை வேலைகள் இருக்குமே! மெதுவா ஓய்வாய் இருக்கும் போது வாங்க.

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  12. கோலங்களுக்கு வரிகள் சிறப்பு சேர்க்கின்றன. சாரின் கணினி ஓவியங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //கோலங்களுக்கு வரிகள் சிறப்பு சேர்க்கின்றன. சாரின் கணினி ஓவியங்கள் அருமை//

      கோலங்களை , கவிதை வரிகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    மார்கழி கோலங்கள் இரண்டாம் பகுதியும், கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக இருக்கிறது. கோலங்களை மிகவும் விரும்பி ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்.

    எனக்கு கோலங்கள் என்றல் மிகவும் பிடிக்கும். அம்மா வீட்டில் தினமும் இருந்தவரை நிறைய கோலங்கள் போட்டேன். அங்கு பெரிய வாசல். நாங்கள்தான் காலை, மாலை நீர் தெளித்து கோலமிட வேண்டும். அதன் பின் (சென்னை வந்த பின்) வீடுகள் சுருங்கி விட்டதில், வாசல்களும் சுருங்கி விட்டன. ஆனாலும், சென்னையில் இருந்த வீடுகளிலும், மதுரை திருமங்கலத்தில் இருந்த இரண்டு வீடுகளிலும் பல கோலங்கள் போட்டுள்ளேன். இப்போது அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. அவரவர் வீட்டு வாசல்களில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு இருக்கிறார்கள். நான், இன்னும் சிலர் பழமை வாதிகளாய் கோலமிடுகிறோம்.

    நீங்கள் போட்ட கோவங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. அழகான கோலங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    /உயிர் நிலையறிய

    கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,
    உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை/

    இது அருமையான சொற்றொடர். ரசித்தேன். கோலங்களுக்கு ஏற்ற எல்லா வரி கவிதைகளும் நன்றாக உள்ளது. தாங்கள் தந்த சுட்டிகளுக்கும் சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரி

    மார்கழி கோலங்கள் இரண்டாம் பகுதியும், கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக இருக்கிறது. கோலங்களை மிகவும் விரும்பி ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்.

    எனக்கு கோலங்கள் என்றல் மிகவும் பிடிக்கும். அம்மா வீட்டில் தினமும் இருந்தவரை நிறைய கோலங்கள் போட்டேன். அங்கு பெரிய வாசல். நாங்கள்தான் காலை, மாலை நீர் தெளித்து கோலமிட வேண்டும். அதன் பின் (சென்னை வந்த பின்) வீடுகள் சுருங்கி விட்டதில், வாசல்களும் சுருங்கி விட்டன. ஆனாலும், சென்னையில் இருந்த வீடுகளிலும், மதுரை திருமங்கலத்தில் இருந்த இரண்டு வீடுகளிலும் பல கோலங்கள் போட்டுள்ளேன். இப்போது அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. அவரவர் வீட்டு வாசல்களில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு இருக்கிறார்கள். நான், இன்னும் சிலர் பழமை வாதிகளாய் கோலமிடுகிறோம்.

    நீங்கள் போட்ட கோவங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. அழகான கோலங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    /உயிர் நிலையறிய

    கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,
    உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை/

    இது அருமையான சொற்றொடர். ரசித்தேன். கோலங்களுக்கு ஏற்ற எல்லா வரி கவிதைகளும் நன்றாக உள்ளது. தாங்கள் தந்த சுட்டிகளுக்கும் சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹறிஹரன், வாழ்க வளமுடன்

      //மார்கழி கோலங்கள் இரண்டாம் பகுதியும், கண்களுக்கும், மனதிற்கும் விருந்தாக இருக்கிறது. கோலங்களை மிகவும் விரும்பி ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தேன்.//

      நன்றி.

      //எனக்கு கோலங்கள் என்றல் மிகவும் பிடிக்கும். அம்மா வீட்டில் தினமும் இருந்தவரை நிறைய கோலங்கள் போட்டேன். அங்கு பெரிய வாசல். நாங்கள்தான் காலை, மாலை நீர் தெளித்து கோலமிட வேண்டும். அதன் பின் (சென்னை வந்த பின்) வீடுகள் சுருங்கி விட்டதில், வாசல்களும் சுருங்கி விட்டன. ஆனாலும், சென்னையில் இருந்த வீடுகளிலும், மதுரை திருமங்கலத்தில் இருந்த இரண்டு வீடுகளிலும் பல கோலங்கள் போட்டுள்ளேன். இப்போது அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. அவரவர் வீட்டு வாசல்களில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு இருக்கிறார்கள். நான், இன்னும் சிலர் பழமை வாதிகளாய் கோலமிடுகிறோம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் , வாசல் சுருங்கி விட்டது இப்பொழுது அப்பார்ட்ம்ர்ண்ட் வாழ்க்கையில் வாசலுக்கு ஏற்றார் போல சின்னதாக போட்டு நம் கோல ஆசை பூர்த்தி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. கோலம் இல்லா வாசல் பார்க்க நன்றாக இல்லை என்று போட வேண்டி உள்ளது. பழமையை விட முடியவில்லைதான்.

      //நீங்கள் போட்ட கோவங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. அழகான கோலங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      நன்றி.

      //இது அருமையான சொற்றொடர். ரசித்தேன். கோலங்களுக்கு ஏற்ற எல்லா வரி கவிதைகளும் நன்றாக உள்ளது. தாங்கள் தந்த சுட்டிகளுக்கும் சென்று பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அனைத்தையும் ரசித்து விரிவான பதில் தந்தமைக்கு நன்றி கமலா.






      நீக்கு
  15. அழகிய கோலங்களும். அவற்றிற்கான கவிதைகளும் கண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு