ஞாயிறு, 7 ஜனவரி, 2024

எதுவும் வீணாகவில்லை!


சில நாட்களாக மாலை நேரம்  மொட்டைமாடியில் நடைபயிற்சி மற்றும், பறவைகளை கவனித்தல் செய்கிறேன்.
மொட்டைமாடியை பல வருடங்களுக்கு பின்  இப்போதுதான் திறந்து வைத்து இருக்கிறார்கள். மீனாட்சி கோபுரம் தெரியுமா பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு  போனேன்.


 என் ஆசை ஓரளவு நிறைவேறியது.  வெகு தூரத்தில் இரண்டு கோபுரம் மட்டும் கொஞ்சம் தெரிந்தது. மீனாட்சியை வணங்கி விட்டு என் நடைபயிற்சியை ஆரம்பித்தேன்.

 மாலை நேரம் தண்ணீர் தொட்டி நிரம்பி அதிகப்படியான நீர்  கீழே வழிந்து ஓடியதை குடிக்கவும், குளிக்கவும் பறவைகள் வந்தன. அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது. .
மேலே வந்து பார்க்கும் முன் தினம்  தண்ணீர் இப்படி வீணாக போகிறதே!  என்று நினைத்தேன், ஆனால் பறவைகள் எல்லாம் வந்து தண்ணீர் குடித்தும், குளித்தும், களித்து போவதை பார்த்ததும் இதற்குதான் நீரை வழிய வைத்து இருக்கிறார் போலும் இறைவன் என்று நினைத்தேன்.


வித விதமான புறாக்கள், ஜோடி ஜோடியாக தனியாக என்று வந்தன.


சின்ன காணொளிதான் பார்க்கலாம்









வேறு வேறு புறாக்கள் 















புறாவும், புல் புல் பறவையும்



சிறிது நீரில் குளியல் செய்யும் புல் புல்
குளிக்கும் மீண்டும் ஓயரில் போய் அமர்ந்து கொள்ளும் 

மீண்டும் கீழே வரும்

மீண்டும் மேலே போய் அமர்ந்து கொள்ளும் இப்படியே விளையாடியது


இரண்டு புல் புல் பறவைகள் குளியல் சின்ன காணொளிதான்



காகம் குழாயிலிருந்து வழியும்  நீரை  வாய் வைத்து குடிக்கிறது
நீரை வாயில் வைத்து தலையை தூக்கி விழுங்குவது அழகு
நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்



மாலை  கூடு  திரும்பும் நேரம் தண்ணீர் அருந்தி , குளித்து கூட்டுக்கு மகிழ்வாய் திரும்புவதைபார்க்க பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டது எனக்கு. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நீங்களும் பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இனி தண்ணீர் வீணாகி போகிறதே என்ற கவலைபடுவது , பட படப்பது , ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பறவைகளின் தாகம் தணிக்க , குளிக்க பயன்பட்டு கொண்டு இருக்கிறதே!  இறைவனுக்கு நன்றி.

தொட்டியிலிருந்து அதிகபடியாக வெளியேறும் நீர் மழைநீர் சேகரிப்பில் தான் போய் சேருகிறது. எதுவும் வீணாகவில்லை.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. இனி கூடுதல் மகிழ்ச்சி தங்களுக்கு!..

    பேச்சுத் துணைக்கும் பறவைகள் கிடைத்து விட்டன..

    படங்கள் காணொளிகள் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      இனி கூடுதல் மகிழ்ச்சி தங்களுக்கு!..//

      பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சிதான் என்றும்.

      //பேச்சுத் துணைக்கும் பறவைகள் கிடைத்து விட்டன..

      படங்கள் காணொளிகள் அழகு//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. எங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் இதே போன்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன்.  சிலசமயம் படங்கள் எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.  அதுவும் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நிறைவாய் எடுத்திருக்கிறேன்.  மேலே அமர்ந்து புத்தகம் படிப்பது வழக்கம். இங்கும் காக்கைகளைவிட புறாக்களே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் இதே போன்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். சிலசமயம் படங்கள் எடுத்து பகிர்ந்திருக்கிறேன். //

      பேஸினில் வைக்கும் தண்ணீரில் காகம் உணவை கழுவி சாப்பிடுவதை சொல்லி இருக்கிறீர்கள்.

      புத்தகம் படிப்பதையும் சொன்னது நினைவு இருக்கிறது.
      இங்கும் புறாக்கள் அதிகம், காகம் இருக்கிறது, வரும் போகும், புறாக்கள் போல வீடுகளில் அமர்ந்து இருக்காது.

      அதுவும் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நிறைவாய் எடுத்திருக்கிறேன். மேலே அமர்ந்து புத்தகம் படிப்பது வழக்கம். இங்கும் காக்கைகளைவிட புறாக்களே அதிகம்.

      நீக்கு
    2. // பேஸினில் வைக்கும் தண்ணீரில் காகம் உணவை கழுவி சாப்பிடுவதை சொல்லி இருக்கிறீர்கள். //

      அது பழைய வீடு.  புது வீட்டிலிருந்து இதே போல மொட்டைமாடி, டேங்க் தண்ணீர் வழிவது காகங்கள், புறாக்கள் குளிப்பது குடிப்பது பற்றி பெரும்பாலும் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
    3. மீண்டும் வந்து உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. நடை பயிற்சி நல்லது,  ஈர தளத்தில் கால் வைத்து நடக்கும்போது கவனமாக நடக்கவும்.  அல்லது அந்த இடங்களைத் தவிர்த்து காய்ந்த இடங்களில் நடக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடை பயிற்சி நல்லது, ஈர தளத்தில் கால் வைத்து நடக்கும்போது கவனமாக நடக்கவும். அல்லது அந்த இடங்களைத் தவிர்த்து காய்ந்த இடங்களில் நடக்கவும்.//

      ஆமாம், கீழே தரை சரியில்லை மேலே நன்றாக இருக்கும் என்று போனால் தண்ணீர் இருக்கிறது. தண்ணீரை கவனமாய் கடந்து வந்து பின் ஈரம் இல்லாத இடத்தில் தான் நடக்கிறேன். உங்கள் அக்கறைக்கும் கருத்துக்கும் நன்றி.
      காணொளிகள் பார்த்தீர்களா?

      நீக்கு
    2. ஆம், பார்த்தேன், ரசித்தேன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்களால் நானும் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை தரிசித்துக் கொண்டேன்.

    பறவைகள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க நமக்குள்ளும் ஒரு மகிழ்வு தொற்றிக் கொள்கிறது அல்லவா? அதுவும் பறவைகளை மிகவும் பார்த்து நேசிக்கும் உங்களுக்கு அதனின் செயல்கள் கண்டிப்பாக மன மகிழ்ச்சியை தந்திருக்கும்.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. புறாக்கள் நிம்மதியாக தங்களுக்கு வேண்டியளவு தண்ணீர் குடித்து, புல்புல்பறவை பறவைகள் நன்றாக குளித்து சந்தோஷமாக இருக்கும் போது எடுத்த காணொளிக்ள் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன்.

    காகம் குழாயில் வாய் வைத்து தண்ணீர் அருந்தும் படமும் மிக அழகாக இருக்கிறது. எங்களுக்காக நீங்களும் பார்த்து ரசித்த பறவைகளின் மகிழ்வான படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நாங்களும் உங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தொட்டி நிறைந்து வடியும் நீரும் மழை நீர் சேகரிப்பில் சேர்ந்து விடுவது நல்லது. நீங்களும் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல், தண்ணீர் இல்லாத இடத்தில் நடைப்பயிற்சி செய்யுங்கள். நானும் எங்கள் மொட்டை மாடியில் இரண்டு மாதங்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்து வந்தேன். (ஒரே கேபிள் ஒயர்கள். எங்கே தடுக்கி விட்டு விடுமோ என்ற சிறிது அச்சத்துடன்.) இப்போது ஒரே குளிர். அதனால் செல்ல இயலவில்லை. வெய்யில் வந்த பின்தான் செல்ல வேண்டும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. உங்களால் நானும் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை தரிசித்துக் கொண்டேன்.//

      எனக்கு மீனாட்சி அம்மன் கோவில் போகமுடியவில்லை என்பதால் கோபுர தரிசனம் செய்ய முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

      //பறவைகள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க நமக்குள்ளும் ஒரு மகிழ்வு தொற்றிக் கொள்கிறது அல்லவா?//

      ஆமாம் கமலா மகிழ்ச்சியாக இருந்தது.

      நீங்கள் காணொளியை , பறவைகளின் படங்களை பார்த்து ரசித்தது
      அறிந்து மகிழ்ச்சி.

      //நீங்களும் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல், தண்ணீர் இல்லாத இடத்தில் நடைப்பயிற்சி செய்யுங்கள். //

      தண்ணீர் இல்லா வேறு பக்கம் தான் நடைபயிற்சி செய்கிறேன். மருத்துவர் மாலை நேர வெயில் படுவது போல நடக்க சொன்னார்.அதுதான்மாடியில் நடை. ஆனால் வெயில் அடிக்க மாட்டேன் என்கிறது மூடி மூடி வெயில் காட்டும். காலை நேரம் என்றால் குளிரும், மாலை வெயிலில்தான் நடை.

      //நானும் எங்கள் மொட்டை மாடியில் இரண்டு மாதங்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்து வந்தேன். (ஒரே கேபிள் ஒயர்கள். எங்கே தடுக்கி விட்டு விடுமோ என்ற சிறிது அச்சத்துடன்.) இப்போது ஒரே குளிர். அதனால் செல்ல இயலவில்லை. வெய்யில் வந்த பின்தான் செல்ல வேண்டும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீங்களும் மாடியில் நடக்கும் போது கவனமாக நடந்து போங்கள்.

      குளிர் அதிகமா இந்த வருடம்?

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  5. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்.
    டேங்கில் நிரப்பிய நீர் நிரம்பி வழிந்து பறவைகள் குளிக்க/குடிக்க உதவுமாம்.

    படங்களும் பதிவும் நன்றாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்.
      டேங்கில் நிரப்பிய நீர் நிரம்பி வழிந்து பறவைகள் குளிக்க/குடிக்க உதவுமாம்...

      நன்றாக சொன்னீர்கள்.

      //படங்களும் பதிவும் நன்றாக உள்ளன.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. அக்கா புறா படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர் எல்லாம் ரசித்துப் பார்த்தேன் புறாக்கள் தண்ணீர் தண்ணீர் குடிப்பது மிக அழகு டான் கிலிருந்து தண்ணீர் வருவது இது வீணாகப் போகலை.இப்பொழுது வெயிலாக இல்லை என்றாலும் தண்ணி வேணும் தானே. உங்க காணொளிகள் எல்லாம் பார்த்தேன் ரசித்து பார்த்தேன் அக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா புறா படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர் எல்லாம் ரசித்துப் பார்த்தேன் புறாக்கள் தண்ணீர் தண்ணீர் குடிப்பது மிக அழகு டான் கிலிருந்து தண்ணீர் வருவது இது வீணாகப் போகலை//

      ஆமாம், வீணாகப் போகலை.

      //இப்பொழுது வெயிலாக இல்லை என்றாலும் தண்ணி வேணும் தானே. உங்க காணொளிகள் எல்லாம் பார்த்தேன் ரசித்து பார்த்தேன் அக்கா.//

      இங்கு வெயில்தான் மார்கழி குளிர் குறைவு.

      பறவைகள் எல்லாம் தண்ணீர் குடிக்க வெகு தூரம் போக வேண்டும். இப்படி தண்ணீர் கிடைக்கும் போது அவைகளுக்கு மகிழ்ச்சிதான்.
      நமக்கு அழகான காட்சி கிடைக்கிறது.காணொளி , மற்றும் படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. பாருங்க அதான் இயற்கை அவற்றிற்கு இப்படி வழி செய்திருக்கிறது! பாவம் பறவைகள். மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்!

      கீதா

      நீக்கு
    3. பறவைகளின் நிழல் தண்ணீரில் தெரிவது என்ன அழகு இல்லையா!!

      கீதா

      நீக்கு
    4. //பாருங்க அதான் இயற்கை அவற்றிற்கு இப்படி வழி செய்திருக்கிறது! பாவம் பறவைகள். மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்!//

      ஆமாம், மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

      //பறவைகளின் நிழல் தண்ணீரில் தெரிவது என்ன அழகு இல்லையா!!//

      ஆமாம் கீதா.


      நீக்கு
  7. கோம்திக்கா, பறவைகளை பார்த்துக்கிட்டே மொட்டைமாடில நடைப்பயிற்சி செய்வது மனதிற்கு இதம். இங்கு இப்ப நீர்ப்பறவைகளின் சீசன்.

    எடுத்த பறவைகளின் படங்களையே இன்னும் போடவில்லை. நேரம் டைட்டாக இருக்கு.

    அக்கா நடக்கும் போது கவனமா நடங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோம்திக்கா, பறவைகளை பார்த்துக்கிட்டே மொட்டைமாடில நடைப்பயிற்சி செய்வது மனதிற்கு இதம். இங்கு இப்ப நீர்ப்பறவைகளின் சீசன்.//

      ஆமாம் , மனதுக்கு இதம் தான். இன்று மழை மாடியில் நடக்க முடியவில்லை.


      //எடுத்த பறவைகளின் படங்களையே இன்னும் போடவில்லை. நேரம் டைட்டாக இருக்கு.//

      நேரம் கிடைக்கும் போது போடுங்கள். நானும் நிறைய பறவைகல் படம் எடுத்து வைத்து இருக்கிறேன் போட வேண்டும்.

      //அக்கா நடக்கும் போது கவனமா நடங்க.//

      கவனமாக நடக்கிறேன் கீதா. உங்கள் அக்கறைக்கு நன்றி.

      நீக்கு
  8. பறவைகள் தண்ணீர் குடிப்பது அழகு ஒரு விதம் என்றால் குளிப்பது ரொம்ப ரசிக்கலாம்.

    எப்படி அலகினால் தண்ணீரைக் குடிக்கும் ஆச்சரியம். தானியங்களைப் பொறுக்குவது எளிது ஆனால் நீரை எப்படின்னு எனக்குத் தோன்றும் உறிஞ்சும் போல...

    மிகவும் ரசித்தேன் அக்கா காணொளிகளும், படங்களும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகள் தண்ணீர் குடிப்பது அழகு ஒரு விதம் என்றால் குளிப்பது ரொம்ப ரசிக்கலாம்.//

      ஆமாம். மைனா குளிப்பதை எடுத்து இருக்கிறேன்.

      //எப்படி அலகினால் தண்ணீரைக் குடிக்கும் ஆச்சரியம். தானியங்களைப் பொறுக்குவது எளிது ஆனால் நீரை எப்படின்னு எனக்குத் தோன்றும் உறிஞ்சும் போல...//

      புறா உறிஞ்சுகுடிக்குமாம்.

      //மிகவும் ரசித்தேன் அக்கா காணொளிகளும், படங்களும்//

      உங்களுக்கு பிடிக்கும், ரசிப்பீர்கள் என்று தெரியும்.

      நீக்கு
  9. முந்தைய சில பதிவுகளுக்கு துளசி கொடுத்த கருத்துகளைப் போடாம விட்டுவிட்டேன் கோமதிக்கா...

    இந்தப் பதிவுக்கு அவர் கருத்து அனுப்பியதும் இங்கு மறக்காம போடுகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முந்தைய சில பதிவுகளுக்கு துளசி கொடுத்த கருத்துகளைப் போடாம விட்டுவிட்டேன் கோமதிக்கா...

      இந்தப் பதிவுக்கு அவர் கருத்து அனுப்பியதும் இங்கு மறக்காம போடுகிறேன்//

      பரவாயில்லை கீதா, உங்களுக்கு நிறைய வேலைகள் இதற்கிடையில் பதிவுகளை படித்து கருத்து சொல்வதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  10. மீனாட்சி அம்மன் கோபுர தரிசனம் எங்களுக்கும் கிடைக்கச் செய்ததற்கு நன்றி. பல அழகான அரிய ஃபோட்டோஸ். பொறுமையாக எடுத்திருக்கிறீர்கல். ஆம் இறைவனின் படைப்பில் எதுவும் வீணாவதில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் உதவுவதாகவும்தான் இருக்கும் அவரது செயல்கள் எல்லாமே.

    படங்களை ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //மீனாட்சி அம்மன் கோபுர தரிசனம் எங்களுக்கும் கிடைக்கச் செய்ததற்கு நன்றி. பல அழகான அரிய ஃபோட்டோஸ். பொறுமையாக எடுத்திருக்கிறீர்கல். ஆம் இறைவனின் படைப்பில் எதுவும் வீணாவதில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் உதவுவதாகவும்தான் இருக்கும் அவரது செயல்கள் எல்லாமே.

      படங்களை ரசித்தேன்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். ஒன்றுக்கொன்று உதவி கொண்டுதான் இருக்கிறது. இறைவனும், இயற்கையும் அதற்கு வழி செய்கிறார்கள்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

      நீக்கு
  11. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    ஆம் இப்பொழுது ஊரணி, கண்மாய், குளம், குட்டைகளை ஒழித்து விட்டோம்.

    அவைகளும் தண்ணீருக்கு எங்கு போகும் ? இதுவும் நன்மைக்கே....

    நான் எனது அலுவலகத்தில் முதுகுக்கு பின்னால் புறாக்கள் வந்து அமரும் நான் கண்ணாடியை திறந்து அவைகளுக்கு தண்ணீர் வைக்கிறேன்.

    இப்பதிவு வந்தது எனக்கு தெரியாது மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //ஆம் இப்பொழுது ஊரணி, கண்மாய், குளம், குட்டைகளை ஒழித்து விட்டோம்.
      அவைகளும் தண்ணீருக்கு எங்கு போகும் ? இதுவும் நன்மைக்கே....//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் எல்லாம் நன்மைக்கே.
      மழை நீரில் உருவான திடீர் குட்டை நீரில் மைனா குளித்த காட்சியை படம் எடுத்து இருக்கிறேன்.

      //நான் எனது அலுவலகத்தில் முதுகுக்கு பின்னால் புறாக்கள் வந்து அமரும் நான் கண்ணாடியை திறந்து அவைகளுக்கு தண்ணீர் வைக்கிறேன்.//

      நல்லது, தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது மிகவும் புண்ணியம்.

      //இப்பதிவு வந்தது எனக்கு தெரியாது மன்னிக்கவும்.//
      தெரிந்து இருந்தால் பதிவு போட்டவுடன் வந்து விடுவீர்களே!

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  12. பறவைகள் தண்ணீர் அருந்தும் படங்கள் மிக அழகு.

    இவற்றைப் பார்த்தவுடன், வேண்டுமென்றே நீர் நிரம்பியும் ஸ்விச்சை அணைக்காமல் விட்டாரோ என்று தோன்றியது. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் நீர் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். பாம்பே (snake) நீரை தாகத்துடன் அருந்துவதை (பிறர் அதன் வாயில் தண்ணீர் விடுவதைக்) கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. காத்திருந்து படங்களாகவும் காணொளிகளாகவும் எங்களுக்குக் காணத் தந்திருக்கும் காட்சிகள் யாவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //காத்திருந்து படங்களாகவும் காணொளிகளாகவும் எங்களுக்குக் காணத் தந்திருக்கும் காட்சிகள் யாவும் அருமை//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      பழைய பதிவுகள் அனைத்தையும் படித்து கருத்துக்கள் கொடுத்து விட்டீர்கள் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு