ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்( மலேசியா) பகுதி - 3

பேரன் கவின் எடுத்த முருகன் படம் 
இந்த பகுதியில் பேரன் எடுத்த படங்கள் இடம்பெறுகிறது.

மலேசியாவில் புகழ் பெற்ற  குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன்   போய் தரிசனம் செய்து வந்தோம். 
அங்கு எடுத்த படங்கள் தொடர் பதிவாக இடம்பெறுகிறது.



பேரன் கவின்  "நீங்கள் காமிராவை கையில் வைத்து கொண்டு படியேறுவது சிரமம் , நான் எடுத்து தருகிறேன்  ஆச்சி படங்கள்" என்றான். படங்கள் காணொளி எல்லாம்  கவின் எடுத்தவை  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

கருணை ததும்பும் முகம்

பழனி ஆண்டவர் சிலை
கீழே இருக்கும் பெரிய முருகன் சிலைக்கு அருகில் அமர்ந்து இருக்கும் குரங்கார். (நீயே கதி!முருகனின் காலடியில் அடைக்கலம்)

முருகன் சிலையின்  பின் புறம் அமர்ந்து இருக்கிறது


படி இறங்கி வருபவரின் தண்ணீர் பாட்டிலை கைபிடியிலிருந்து குதித்து இறங்கி  பிடிங்கி விட்டது, அந்த சிறுவனின் கையில் இருக்கும் கூல்டிரிக் கவரை பார்க்கவில்லை போலும்.

  எந்த பக்கம் குடிப்பது என்று தெரியவில்லை
 ஏய்  ! எப்படி குடிப்பாய்? என்று நம்மை பார்த்து கேட்பது போல்  போல் இல்லை!
இப்படித்தானே திறப்பாய்?
பல்லால் கடித்து மூடியை திறக்கிறது


கீழே கொட்டி விட்டதை குடிக்கிறது


                           பாட்டிலை கவிழ்த்து விட்டு குடிக்கிறது.


இன்னொரு குரங்கு வருபவர் கையை பார்க்கிறது

 கோபமாய் பார்க்கிறது உன் கையில் ஒன்று மில்லையா? என்று


ஈந்த குரங்கின் கண்  அழகாய் இருக்கிறது.  வயதான குரங்கார் போலும்

இந்த குரங்கு வேறு மாதிரி இருக்கிறது
ஒரே சோகமாக இருக்கிறது, ஒன்றும் கிடைக்கவில்லை போலும்


கீழே இருக்கும் கோவிலுக்கு அருகில் குட்டியுடன்  தண்ணீர் பாட்டிலை  தலைகீழாக பிடித்து இருக்கும் குரங்கார்



பெரிய முருகன் சிலைக்கு பக்கத்தில் இருக்கும்  பெரிய  உண்டியல்

புறாக்களை ரசித்துப்பார்க்கும் மக்கள்
 
பக்கத்தில் நடந்து போனாலும் பயப்படாத புறாக்கள்

 
மலை எங்கும் சேவல்கள் சுற்றி திரிந்து கொண்டு 'கொக்கரக்கோ' ஒலி எழுப்பி கொண்டே இருந்தது.நான் காணொளி எடுக்கும் போது ஒலி எழுப்பவில்லை, பேரன்  காணொளிகள் எடுத்தான் சேவல்களை .

கீதாரெங்கனிடம்  சொல்லி இருந்தேன், "கவின் எடுத்த காணொளிகளை போட்டு பார்க்கிறேன், சேவலின் கொக்கரக்கோ ஒலி கேட்கிறதா என்று  கேட்டால் பகிர்கிறேன்" என்று இதில் அவன் காணொளி எடுத்த சேவல் கூவவில்லை ஆனால் வேறு பக்கம் இருந்த சேவல் கூவுகிறது.

நான் எடுத்த ஆட்டு கிடா  போன பதிவில் வந்தது , இது கவின் எடுத்த படம். அதன் நீண்ட காதுகளை வியந்துப்பார்த்து எடுத்த படம்.


மேலே இருக்கும் முருகனை அவன் எடுத்த படம்
உற்சவர் முருகன் வெள்ளி  மயில் வாகனத்தில் (அவன் எடுத்த படம் தான்)
குகைக்குள் கோபுரம் தெரிவது போல எடுத்து இருக்கிறான், மேலே இருக்கும் முருகனை தரிசிக்க போக வேண்டிய படிகளும் தெரிகிறது

 கீழே உள்ள மூலவர்  முருகன் கோவில் படங்கள் அடுத்த பதிவில் இடம்பெறும். 

அடியவர்கள்  குறை தீர்க்க மயிலேறி வா வா கந்தா!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

47 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    கவின் எடுத்த படங்கள் சிறப்பாக இருக்கிறது.

    காணொளியும் கண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //கவின் எடுத்த படங்கள் சிறப்பாக இருக்கிறது.//
      நன்றி.

      காணொளியும் கண்டேன் நன்றி.//

      படங்களை, காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. அழகான கோணங்களில் எடுத்திருக்கிறார் கவின்!!!

    ஆஹா சாதி சனம் எல்லாம் வந்திட்டாங்களே!! போஸ் கொடுத்துக் கொண்டு!!!

    ஹாஹாஹா அதானே கூல் டிரிங்கை பார்க்கலை!! தண்ணீர் பாட்டில்கள் பழக்கம் கண்ணில் பட்டிருக்கும் அதான்...பாவம் மாத்தி வைச்சு குடிக்க முயற்சி செய்கிறது. அப்புறம் பாருங்க மூடியைத் திறக்க முயற்சி செய்கிறது அதுக்குத் தெரிகிறது அடில ஓட்டை போட்டா தண்ணி கிடைக்கும்னும் சிலதுக்குத் தெரியுது கோமதிக்கா..அப்படியும் சில குடிப்பதைப் பார்த்திருக்கேன்

    கீழே கொட்டியதைக் குடிக்கும் காணொளி பாவமா இருக்கு பார்க்க...அழகா இருக்கு ஆனா

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அழகான கோணங்களில் எடுத்திருக்கிறார் கவின்!!!//

      நன்றி கீதா

      //அடில ஓட்டை போட்டா தண்ணி கிடைக்கும்னும் சிலதுக்குத் தெரியுது கோமதிக்கா..அப்படியும் சில குடிப்பதைப் பார்த்திருக்கேன்//

      புத்திசாலி குரங்கார்


      //கீழே கொட்டியதைக் குடிக்கும் காணொளி பாவமா இருக்கு பார்க்க...அழகா இருக்கு ஆனா//

      ஆமாம் , மனதுக்கு சங்கடம் தரும் காட்சி.

      நீக்கு
  3. ஆமாம் பட்டன் போல இருக்கும் கண்கள். வயதானவர்னும் தெரியுது.

    அடுத்தாப்ல இருப்பது குட்டிக் குரங்கார். வேறு வேறு வகைகள் இருக்காங்க போல. அடிப்பக்கம் தண்ணீர் தெரியறதுனால அப்படிக் குடிக்க முயற்சி செய்து பார்க்கின்றன....ஆனால் பொதுவாக அவங்களுக்கு இப்ப எல்லாம் மூடியைத் திறக்கத் தெரிகிறது ...மூடி இறுக இருந்தால் பாட்டிலை தரைல அடிச்சு பிச்சு ஓடுற தண்ணியக் குடிப்பாங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் பட்டன் போல இருக்கும் கண்கள். வயதானவர்னும் தெரியுது.//

      ஆமாம்.

      //வேறு வேறு வகைகள் இருக்காங்க போல//

      ஆமாம். குரங்குகள் நிறைய தினுசை பார்த்தேன்.

      //அடிப்பக்கம் தண்ணீர் தெரியறதுனால அப்படிக் குடிக்க முயற்சி செய்து பார்க்கின்றன....ஆனால் பொதுவாக அவங்களுக்கு இப்ப எல்லாம் மூடியைத் திறக்கத் தெரிகிறது ...மூடி இறுக இருந்தால் பாட்டிலை தரைல அடிச்சு பிச்சு ஓடுற தண்ணியக் குடிப்பாங்க..//

      எப்படியாவது தண்ணீரை குடித்து ஆக வேண்டுமே! அவைகள்.
      ஒரு இடத்தில் மேல் பகுதியில் தண்ணீர் கட்டி நிற்கிறது, மழை தண்ணீரா அல்லது குருங்குகளுக்கு இப்படி தண்ணீரை நிரப்பி வைத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதில் குதித்து விளையாடின குரங்குகள். அந்த தண்ணீர் ருசியாக இருக்காது போல! அதுதான் பாட்டில்களை பார்த்தால் பிடுங்கி குடிக்கிறது.




      நீக்கு
  4. ஆச்சி வீடியோ எடுக்கறேன்// கவினின் குரல் ஆஹா! வளர்ந்திருக்கிறார் குரலில் தெரிகிறது. தமிழ் நன்றாகப் பேசுகிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது!

    இந்தச் சேவல் கூவலைனாலும் வேறு ஒரு சேவலின் குரல் கேட்கிறது. மக்களின் குரல்களும் கேட்கிறது. ரசித்துப் பார்த்தேன். கவினிடம் சொல்லிடுங்க...வாழ்த்துகளை!

    ஆட்டுக்கிடாவின் காதுகள், சிறுமிக்கு இரண்டு புறமும் போனி டைல் கட்டித் தொங்க விடறாப்ல இருக்கு!!! அழகா இருக்கு. ரசித்தேன் கவினின் படத்தை

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆச்சி வீடியோ எடுக்கறேன்// கவினின் குரல் ஆஹா! வளர்ந்திருக்கிறார் குரலில் தெரிகிறது. தமிழ் நன்றாகப் பேசுகிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது!//
      இன்று காலை அவனிடம் சொன்னேன் உன் சேவல் வீடியோ கேட்டார்கள் கீதா அத்தை, அதுதான் போட்டு இருக்கிறேன் , நீ எடுத்த படங்களையும் போட்டு இருக்கிறேன் என்றேன் , மகிழ்ந்தான்.
      உங்கள் வாழ்த்துக்களை நாளை பேசும் போது சொல்கிறேன்.

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //ஆட்டுக்கிடாவின் காதுகள், சிறுமிக்கு இரண்டு புறமும் போனி டைல் கட்டித் தொங்க விடறாப்ல இருக்கு!!! அழகா இருக்கு. ரசித்தேன் கவினின் படத்தை//
      ஆமாம் நீங்கள் சொல்வது போல தான் இருக்கிறது ஆட்டுக்கிடாவின் காதுகள்.
      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.



      இந்தச் சேவல் கூவலைனாலும் வேறு ஒரு சேவலின் குரல் கேட்கிறது. மக்களின் குரல்களும் கேட்கிறது. ரசித்துப் பார்த்தேன். கவினிடம் சொல்லிடுங்க...வாழ்த்துகளை!

      நீக்கு
  5. முருகன் படங்களும் நன்றாக இருக்கின்றன. ஒளி வெள்ளத்தில் மேலே உள்ள முருகனின் படிகள் தெரிகின்றன. எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முருகன் படங்களும் நன்றாக இருக்கின்றன. ஒளி வெள்ளத்தில் மேலே உள்ள முருகனின் படிகள் தெரிகின்றன. எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்துபார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  6. பிரசித்தி பெற்ற கோயில். அருமையாகப் படங்களை எடுத்தளித்த பேரனுக்குப் பாராட்டுகள்! நடை போடும் சேவலின் காணொளி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பிரசித்தி பெற்ற கோயில். அருமையாகப் படங்களை எடுத்தளித்த பேரனுக்குப் பாராட்டுகள்! நடை போடும் சேவலின் காணொளி நன்று.//

      படங்களை காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கும், பேரனை பாராட்டியதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணகம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் அழகு அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  8. கவின் எடுத்த படங்கள் அழகாகவே இருக்கின்றன.

    காணொளியும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //கவின் எடுத்த படங்கள் அழகாகவே இருக்கின்றன.

      காணொளியும் நன்று.//

      நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. கவின் ஆர்வத்துக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவின் ஆர்வத்துக்குப் பாராட்டுகள்.//

      உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  10. முருகனின் மார்பளவு புகைப்படம் அருமை.  முகம் பக்கத்தில் Bhaaவத்தோடு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //முருகனின் மார்பளவு புகைப்படம் அருமை. முகம் பக்கத்தில் Bhaaவத்தோடு தெரிகிறது.//

      ஆமாம், மார்பளவு படம் எனக்கும் பிடித்தது அதனால்தான் பகிர்ந்தேன். மகனும் பெரிய முருகனை வித விதமாக எடுத்து இருக்கிறான்.

      ஒவ்வொரு கோணத்திலும் அழகுதான் முருகன்.,அழகென்றால் முருகன் தானே!

      நீக்கு
  11. குரங்கின் படங்கள்தான் சுவாரஸ்யம்.  சாதாரணமாக கால மாற்றங்கள் ஒரு இனத்தில் எங்கோ நிகழ்ந்தால் கூட இன்னோர் இடத்தில இருக்கும் அதே இனம் அதை பின்பற்றத்தொடங்கும் என படித்திருக்கிறேன்.  நம்மூர் குரங்குகள் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்கும் கலையைக் கற்றிருக்கின்றன.  இந்தக் குரங்காருக்கு பாட்டில் கவிழ்ந்து சிந்திக் கொண்டிருக்கும் தண்ணீரைக் கூட, பாட்டிலை நிமிர்த்தி நிறுத்தத் தெரியவில்லை! கடைசி பெஞ்ச் மக்கு குரங்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்கின் படங்கள்தான் சுவாரஸ்யம்//

      ஆமாம், அவன் படி படியாக எடுத்து வைத்து இருந்தான்.

      //சாதாரணமாக கால மாற்றங்கள் ஒரு இனத்தில் எங்கோ நிகழ்ந்தால் கூட இன்னோர் இடத்தில இருக்கும் அதே இனம் அதை பின்பற்றத்தொடங்கும் என படித்திருக்கிறேன்.//

      ஆமாம்.

      //நம்மூர் குரங்குகள் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்கும் கலையைக் கற்றிருக்கின்றன.//
      முதன் முதலில் மாயவரத்தில் பக்கத்து வீட்டு சமையல் அறையில் புகுந்து பொட்டுகடலை பாட்டிலை தூக்கி கொண்டு மொட்டி மாடி போய் திறந்து சாப்பிட்டதை பார்த்தேன். பெரிய பூஸ்ட் பாட்டில்.

      //இந்தக் குரங்காருக்கு பாட்டில் கவிழ்ந்து சிந்திக் கொண்டிருக்கும் தண்ணீரைக் கூட, பாட்டிலை நிமிர்த்தி நிறுத்தத் தெரியவில்லை! கடைசி பெஞ்ச் மக்கு குரங்கோ!//

      அதற்கு பொறுமை இல்லை அவ்வளவுதான். புத்திசாலி குரங்கார் தான் கவனமாக இருந்து கையில் பிடித்து போகும் பாட்டிலை பிடுங்க தெரிகிறதே! குரங்காருக்கு பிய்த்து ஏறியதான் தெரியும் என்று பாடத்தில் படித்து இருக்கிறோம். குருவி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுமே குரங்கு:- "ஊசி மூஞ்சி மூடா ! எனக்கு கூடு கட்ட தெரியாது அதை பிய்த்து எறிய தெரியும்" என்று சொல்லுமே!

      மழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி "உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதா? கூடு கட்டி வாழ் " என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.

      நீக்கு
  12. அஞ்சாத புறாக்கள் ஆச்சர்யம்.  அருகில் போனாலே படபடவென்று சத்தத்துடன் சிறகை விரித்து கூட்டமாகக்கிளம்பி விடும்.  ரொம்பப் பழகி விட்டது போல..  அல்லது முருகன் பக்தர்கள் மேல் நம்பிக்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அஞ்சாத புறாக்கள் ஆச்சர்யம். அருகில் போனாலே படபடவென்று சத்தத்துடன் சிறகை விரித்து கூட்டமாகக்கிளம்பி விடும். ரொம்பப் பழகி விட்டது போல.. அல்லது முருகன் பக்தர்கள் மேல் நம்பிக்கை!//

      ஆமாம், அஞ்சாத புறாக்கள் எல்லோரும் புறா கூட்டத்துக்கு நடுவில் நின்று படம் எடுத்து கொண்டார்கள், நானும் கவினும் எடுத்து கொண்டொம் படங்கள். கவின் புறாக்களுடன் ஓடி பிடித்து விளையாடினான். மகன் காணொளி எடுத்து இருக்கிறான்.
      அவைகளுக்கு தெரியும் யாரால் துன்பம் ஏற்படும் யாரால் ஏற்படாது என்று.

      நீக்கு
  13. மேலே இருக்கும் முருகன் அழகு. குகைக்குள் கோபுரம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மேலே இருக்கும் முருகன் அழகு. குகைக்குள் கோபுரம் அழகு.//

      ஆமாம் குகைகுள் பார்க்கும் போது அழகாய் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம். அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதை பேரன் படித்தால் மகிழ்வான்.

      நீக்கு
  14. பாட்டிக்கு இணையாக, அல்லது பாட்டிக்குப் போட்டியாக அழகிய படங்கள் எடுத்து அசத்தி இருக்கும் கவினுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டிக்கு இணையாக, அல்லது பாட்டிக்குப் போட்டியாக அழகிய படங்கள் எடுத்து அசத்தி இருக்கும் கவினுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

      பாட்டியை விட மிக நன்றாக அலைபேசியில் படங்கள் எடுப்பான், அவன் காமிராவில் எடுப்பான், என் காமிராவில் ஜூம் செய்தால் கொஞ்சம் தெளிவாக நேரம் எடுக்கும், இல்லையென்றால் இன்னும் நன்றாக எடுத்து இருப்பான். அவன் அப்பா, அம்மாவை அவன் தான் அழகாய் படங்கள் எடுக்கிறான்.
      அவன் விளையாட்டுகளை வீடியோ, மற்றும் படங்கள் எடுக்கிறான்.
      உங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அவன் படிப்பான். அவன் சார்பில் உங்களுக்கு என் நன்றிகள்.
      இந்த கருத்து ஒளிந்து கொண்டுதான் இருந்தது. உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் தேடி எடுத்து போட்டு விட்டேன்.

      நீக்கு
  15. படங்கள் அழகாக உள்ளன. பேரனுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகாக உள்ளன. பேரனுக்கு பாராட்டுகள்.//

      உங்கள் கருத்துக்கும் பேரனுக்கு பாராட்டுக்கள் சொன்னதற்கும் நன்றி சார்.

      நீக்கு
  16. இன்னும் ஒரு கமெண்ட் மாடரேஷனில் இருக்கும் என்று நினைக்கிறேன்.  கவினைப் பாராட்டி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மீண்டும் வந்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம், தேடி போட்டு விட்டேன்.

      நீக்கு
  17. கவின் எடுத்த படங்கள் சிறப்பாக இருக்கின்றன..
    மகிழ்ச்சி...

    படங்களுக்கான குறுஞ்செய்தியும் அருமை..

    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //கவின் எடுத்த படங்கள் சிறப்பாக இருக்கின்றன..
      மகிழ்ச்சி...//
      நன்றி.


      படங்களுக்கான குறுஞ்செய்தியும் அருமை..

      சிறப்பான பதிவு..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. கவினின் காணொளி அழகு..

    வளம் கொண்டு வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவினின் காணொளி அழகு..

      வளம் கொண்டு வாழ்க..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகும் நன்றி.

      நீக்கு
  19. உங்கள் பேரன் எடுத்த படங்களும் காணொளிகளும் சிறப்பாக இருக்கின்றன. உங்கள் மூலம் நாங்களும் பத்துமலை முருகனைக் கண்டோம். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //உங்கள் பேரன் எடுத்த படங்களும் காணொளிகளும் சிறப்பாக இருக்கின்றன. //

      நன்றி.

      //உங்கள் மூலம் நாங்களும் பத்துமலை முருகனைக் கண்டோம். மனம் நிறைந்த நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் பேரன் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் படமான நுழைவு வாயிலில் இருக்கும் பெரிய உயரமான முருகனிலிருந்து அவர் எடுத்த அத்தனைப் படங்களும் சிறப்பாக உள்ளது. தங்கள் பேரன் கவினுக்கு முதலில் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.

    ஒவ்வொரு படங்களும், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. பாதியளவு எடுத்த முருகன் படத்தில் கருணை ததும்பிய முருகனை கண்ணாற கண்டு தரிசனம் செய்து கொண்டேன்.

    கவின் ஒவ்வொரு படங்களின் கோணங்களும் அறிந்து அழகாக எடுத்துள்ளார் சேவலின் காணொளியும் நன்றாக உள்ளது.

    குரங்காரின் சேட்டைகளைப் பற்றிய படங்கள் அனைத்தும் அருமை. தண்ணீர் மறுபக்கம் தெரிவதால் அதன் வழியாகவாவது குடிக்கலாம் என தலைகீழாக பிடித்தபடி குடிக்க முயற்சிக்கிறது போலும்..! ஒரு வழியாக பாட்டிலை திறந்ததும் அதன் வழியாக குடிக்காமல் கீழே கொட்டியதை குடிக்கிறதே... ..சில குரங்கார்கள் பக்குவமாக திறந்து பாட்டில் முழுக்க சிந்தாமல் சிதறாமல் குடிக்கும். நானும் பலவிடங்களில் பார்த்துள்ளேன்.

    இது போன்று ஒரு வெங்கடேசர் பெருமாள் மலைக்கோவிலுக்கு நாங்கள் முன்பு சென்றிருந்த போது இந்த மாதிரி, அங்கிருந்த ஒரு குடி தண்ணீர் பைப்பை திறந்து அதில் வாய் வைத்து ஒரு குரங்கார் தண்ணீர் அருந்துவதும், மற்றொரு குரங்கார் வந்து அதை மூடுவதுமாக ஒரே போராட்டம். அப்போது என்னிடம் காமிரா இல்லை. படங்கள் எடுக்கும் கைப்பேசியும் இல்லை. பார்த்து ரசித்துக் கொண்டேயிருந்தேன். அந்த நினைவு தங்கள் பேரன் எடுத்த படங்களை பார்த்ததும் வந்தது. அவைகளுக்கென்று இறைவன் தந்த அறிவை அது பயன்படுத்திக் கொள்கிறது.

    தங்களுக்கும், தங்கள் பேரனுக்கும் வாழ்த்துகள். நேற்று பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் தாமதம். உங்கள் முந்தைய பதிவையும் நான் இதுவரை படிக்கவில்லை போலிருக்கிறது. இப்போது இந்தப் பதிவை படித்தவுடன் தான் தெரிந்தது. மன்னிக்கவும். பிறகு அதையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

    //பதிவு அருமை. தங்கள் பேரன் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் படமான நுழைவு வாயிலில் இருக்கும் பெரிய உயரமான முருகனிலிருந்து அவர் எடுத்த அத்தனைப் படங்களும் சிறப்பாக உள்ளது. தங்கள் பேரன் கவினுக்கு முதலில் என் வாழ்த்துக்களை கூறி விடுங்கள்.//

    அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கும் பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.
    கண்டிப்பாய் உங்கள் வாழ்த்துகளை தெரிவித்து விடுகிறேன்.

    //ஒவ்வொரு படங்களும், அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. பாதியளவு எடுத்த முருகன் படத்தில் கருணை ததும்பிய முருகனை கண்ணாற கண்டு தரிசனம் செய்து கொண்டேன்.//

    நன்றி. ஆமாம், கருணை ததும்பும் முருகனை பார்த்து கொண்டே இருக்கலாம்.

    //கவின் ஒவ்வொரு படங்களின் கோணங்களும் அறிந்து அழகாக எடுத்துள்ளார் சேவலின் காணொளியும் நன்றாக உள்ளது.//

    ஆமாம், அவனுக்கு ஆர்வம் இருக்கிறது.

    தண்ணீர் மறுபக்கம் தெரிவதால் அதன் வழியாகவாவது குடிக்கலாம் என தலைகீழாக பிடித்தபடி குடிக்க முயற்சிக்கிறது போலும்..!//

    ஆமாம்.

    //திறந்ததும் அதன் வழியாக குடிக்காமல் கீழே கொட்டியதை குடிக்கிறதே... ..//

    ஒரு வழியாக பாட்டிலை திறக்கும் போது கீழே விழுந்து இருக்கும் அதை குடிக்கிறது.

    //இது போன்று ஒரு வெங்கடேசர் பெருமாள் மலைக்கோவிலுக்கு நாங்கள் முன்பு சென்றிருந்த போது இந்த மாதிரி, அங்கிருந்த ஒரு குடி தண்ணீர் பைப்பை திறந்து அதில் வாய் வைத்து ஒரு குரங்கார் தண்ணீர் அருந்துவதும், மற்றொரு குரங்கார் வந்து அதை மூடுவதுமாக ஒரே போராட்டம். //
    திருப்பதியில் நடந்து போகிற இடங்ககள் மற்றும் பஸ் போகிற இடங்களில் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி வைத்து இருக்கிறார்கள் அப்படியும் அவை நம்மை போல பைப்பில் குடிக்க ஆசை பட்டு இருக்கு போல!
    ஊங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    என் பெண்ணின் கையில் உள்ள பாட்டிலை விறாலி மலை குரங்கு பிடிங்கி சென்றது, வடநாட்டில் ஒரு பெருமாள் கோவிலில் அவள் மூக்கு கண்ணாடியை பிடிங்கி சென்றது, ஒருவர் வாங்கி தருகிறேன் என்று பின்னாலேயே போய் உடைத்து கொடுத்த கண்ணாடியை வாங்கி வந்து தந்தார். அவர்களே இப்படி குரங்கை பழக்குவார்கள் என்கிறார்கள்.

    //தங்களுக்கும், தங்கள் பேரனுக்கும் வாழ்த்துகள்//

    நன்றி கமலா.

    . //நேற்று பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் தாமதம்//

    நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.உங்கள் விரிவான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  22. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒரு குரங்கின் கண்கள் அழகாகத்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒரு குரங்கின் கண்கள் அழகாகத்தான் இருக்கின்றன.//

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  23. எப்போப் போனீங்க, மலேசியா, சிங்கப்பூர் எல்லாம்? இந்தப் பதிவுகள் எல்லாம் எனக்கு வரலை. இப்போத்தான் பத்துமலை முருகனைப் பார்த்துட்டு வந்தேன். மெதுவாய்ப் படிக்கணும். :( பேரன் எடுத்த படங்கள் அருமை! நல்ல ஃபோட்டோகிராஃபராக வருவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்


      //எப்போப் போனீங்க, மலேசியா, சிங்கப்பூர் எல்லாம்? இந்தப் பதிவுகள் எல்லாம் எனக்கு வரலை. ''
      நாங்கள் அமெரிக்காவிலிருந்து அப்படியே சிங்கப்பூர், மலேசியா எல்லாம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி போனோம். 5 நாள் பயணம்.

      நீங்கள் தான் வலை பக்கம் நிறைய நாள் வரவில்லையே!

      //இப்போத்தான் பத்துமலை முருகனைப் பார்த்துட்டு வந்தேன். மெதுவாய்ப் படிக்கணும். :( பேரன் எடுத்த படங்கள் அருமை! நல்ல ஃபோட்டோகிராஃபராக வருவான்.//
      உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நானும் சில நாள் உறவினர் வருகையால் வலை பக்கம் வரவில்லை.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகும் நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்


      //எப்போப் போனீங்க, மலேசியா, சிங்கப்பூர் எல்லாம்? இந்தப் பதிவுகள் எல்லாம் எனக்கு வரலை. ''
      நாங்கள் அமெரிக்காவிலிருந்து அப்படியே சிங்கப்பூர், மலேசியா எல்லாம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி போனோம். 5 நாள் பயணம்.

      நீங்கள் தான் வலை பக்கம் நிறைய நாள் வரவில்லையே!

      //இப்போத்தான் பத்துமலை முருகனைப் பார்த்துட்டு வந்தேன். மெதுவாய்ப் படிக்கணும். :( பேரன் எடுத்த படங்கள் அருமை! நல்ல ஃபோட்டோகிராஃபராக வருவான்.//
      உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நானும் சில நாள் உறவினர் வருகையால் வலை பக்கம் வரவில்லை.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகும் நன்றி.

      நீக்கு
  24. பேரன் எடுத்த படங்கள் அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      பேரன் எடுத்த படங்களை ரசித்து கருத்தும், வாழ்த்துகளும் சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு