சனி, 5 ஆகஸ்ட், 2023

சிங்கப்பூர் சுற்றுலா -2



 காய்ந்த மரத்தில்  செய்த  மான்கள்

கார்டன்ஸ் பை தி பே என்பது  சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில்  இருக்கும் பூங்கா.  250 ஏக்கரில் அமைந்து இருக்கும்  ஒரு இயற்கை  பூங்கா. 
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தின்  அருகில் இருக்கும் தாவரயியல் பூங்கா. இயற்கை பூங்கா.

 மகன்  குடும்பத்துடன் ஜூன் மாதம் சிங்கப்பூர்  , மலேஷியா போய் வந்தேன். சிங்கப்பூரில்  உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தோம். மற்றும் சில இடங்களை அவர்களுடன் சுற்றிப்பார்த்தோம்.  சிங்கப்பூரில் சென்று வந்த கோயில்கள் பற்றி மூன்று பகுதிகள் பதிவு செய்தேன்.  இந்த பதிவில் இயற்கைப் பூங்கா பற்றிய பதிவு -2
சிங்கப்பூர் சுற்றுலா -1 இந்த பதிவு பார்க்கவில்லையென்றால் பார்க்கலாம்.



காய்ந்த மரத்தில்  வலது பக்கத்தில் சிங்கமுக குரங்கு முகம் மட்டும் கருப்பாய் இருக்கும் தெரிகிறதா பாருங்க,  வெள்ளி வண்ணத்தில் கட்டெறும்புகள்.
இந்த மரத்தில் சிவப்பு கட்டெறும்புகள் 


பெண் சிங்கங்கள்
இடது பக்கம் பெண் சிங்கங்கள், வலது பக்கம் ஆண்சிங்கங்கள், ஆண் சிங்கம் அருகிலில் பலரும் அமர்ந்து படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையான விலங்குகள் மாதிரி செய்து  இருக்கிறார்கள்.


 இங்குள்ள மலர்களின்  படங்கள் மாறி மாறி வரும் திரைகள்

கண்ணாடி கூறைகளுக்கு உள்ளே மலர் செடிகள்,  செடிகளுக்கு  இடையே காய்ந்த மரங்களின் பகுதிகளை அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள்.





 ஒரே ஒரு பூ  பூத்து இருக்கு  கிளையின் உச்சியில்




நிறைய இடங்களில்  இப்படி அன்பை பரிமாறும்  மலர் சின்னம்,   மலர்அருகே     தேவதை சிலைகள், மலர்அம்பு தொடுக்கும் தேவதைகள்.  எல்லோரும் குடும்பத்துடன், தனியாக எல்லாம் எடுத்து கொண்டார்கள் படம்.


நாங்களும் எடுத்துக் கொண்டோம் படம்



மஞ்சள் மலரே ! மஞ்சள் மலரே!


பக்கத்தில் வேகமாக நடக்கும் பெண்ணைப்பார்த்து என்ன வேகம் பெண்ணே! என்று சிவப்பு மலர் கேட்கிறது

செண்டாக  கொத்து மலர் அழகு
தோகை விரித்தாடும் மயில் போல!

பூவே ! செம்பூவே!


பின்னால்  தபேலா  இசைக்கருவி போல மரத்தில் செய்து வைத்து இருக்கிறார்கள். மூன்று இதழ் குட்டி தாமரை போல  கனகாம்பர  மலர் போல!


சின்ன இதழ் பஞ்சு மிட்டாய் மலர்
வித்தியாசமான மரம் ,  கண்ணாடி கூரை வழியே சூரியனின் ஊடுருவல்,கதிர்கள் நீலகலரில்  அழகு


மரங்களின் அடிப்பாகம்   தடித்து மேல் பகுதி ஒல்லியாக கிளைகளை பரப்பி 

பனை மரம் போல ஆனால் கிளைகள் அடர்த்தியாக

தொடர்ந்து வாங்க

  இன்னும் வரும் பூங்கா படங்கள். கொஞ்சம் ஓய்வு எடுத்து எடுத்துப் பார்ப்போம்.

வாழ்க வையகம்!  வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. படங்கள் யாவுமே சிறப்பு, அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்கள் யாவுமே சிறப்பு, அருமை.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அங்கே போன உணர்வைத் தரும் அழகிய படங்கள்.

    அந்த ஒற்றை மலர் இயற்கையா செயற்கையா?

    கவினுடனான உங்கள் படம் நன்றாக வந்திருக்கிறது, என்றென்றும் மனதில் நிற்கும் வண்ணமாக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      அங்கே போன உணர்வைத் தரும் அழகிய படங்கள்.//

      நன்றி.

      அந்த ஒற்றை மலர் இயற்கையா செயற்கையா?//
      நானும் செயற்கை என்று நினைத்தேன், இயற்கையான பூ

      //கவினுடனான உங்கள் படம் நன்றாக வந்திருக்கிறது, என்றென்றும் மனதில் நிற்கும் வண்ணமாக//

      ஓர்படி பேரன் தான் பூங்காவை சுற்றி காட்டினான். அவனும் என் பக்கத்தில் நிற்கிறான், அதுவும் நினைவுகளில் நிற்கும் என்றும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லித்தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //ஆகா...! ஒவ்வொரு படமும் அழகு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் வெகு சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.

    இடங்களும் ரசனையாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் வெகு சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.//
      நன்றி.

      //இடங்களும் ரசனையாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி.//
      ஆமாம், ரசனையாக அமைத்து மக்களை தினம் வரவழைக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் எல்லாமே தங்களின் வழக்கம் போல துல்லியமாக இருக்கிறது. ஒவ்வொரு இடங்களின் விபரங்களும் சிறப்பு.

    காய்ந்த மரங்களை வைத்து மிருகங்களின் உருவங்களை தத்ரூபமாக சித்தரித்து இருப்பது மிக அருமையாக உள்ளது. மான்கள், சிங்க முக குரங்கு வெள்ளை, சிகப்பு கட்டெறும்புகள் ஆண் பெண் சிங்கங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். அவை உண்மையான சிங்கங்கள் போலவே உள்ளது. (உண்மையான சிங்கங்கள் இப்படி புடைசூழ இருந்திருந்தால் யார் அவைகளின் அருகில் நெருங்க முடியும். ஹா ஹா ஹா.)

    மலர்கள் அனைத்துமே நன்றாக உள்ளது. தாங்கள் மகன் குடும்பத்துடன் மலர் வளையம் நடுவில் நின்று எடுத்தப் புகைப்படம் மிக அழகாக இருக்கிறது. தங்கள் மகன் அணிந்திருக்கும் சட்டையிலும் விதவிதமாக கலர் பூக்கள் நிறைந்துள்ளதையும் ரசித்தேன். இப்படியான விதவிதமாக அமைப்புடனான சட்டைகளை அப்போது என் இளைய மகனும் விரும்பி அணிவார். இப்போது அவர் ரசனையில் சிறிது மாற்றங்கள்.

    /பக்கத்தில் வேகமாக நடக்கும் பெண்ணைப்பார்த்து என்ன வேகம் பெண்ணே! என்று சிவப்பு மலர் கேட்கிறது. /

    தங்கள் கற்பனை வரிகளை ரசித்தேன். எல்லா மலர்களின் வண்ணங்களும் கண்களை கவர்கிறது. ஒவ்வொரு மரங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறது. கடைசியில் உள்ள பனைமரம் போலிருக்கும் மரமும் கண்களை கவர்கிறது. உங்கள் பதிவால் நானும் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்த்த மகிழ்வடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் எல்லாமே தங்களின் வழக்கம் போல துல்லியமாக இருக்கிறது. ஒவ்வொரு இடங்களின் விபரங்களும் சிறப்பு.//

      நன்றி.

      //காய்ந்த மரங்களை வைத்து மிருகங்களின் உருவங்களை தத்ரூபமாக சித்தரித்து இருப்பது மிக அருமையாக உள்ளது. மான்கள், சிங்க முக குரங்கு வெள்ளை, சிகப்பு கட்டெறும்புகள் ஆண் பெண் சிங்கங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். அவை உண்மையான சிங்கங்கள் போலவே உள்ளது. (உண்மையான சிங்கங்கள் இப்படி புடைசூழ இருந்திருந்தால் யார் அவைகளின் அருகில் நெருங்க முடியும். ஹா ஹா ஹா.)//
      காய்ந்த மரங்களை கலையுண்ர்வுடன் செய்து இருப்பது எனக்கும் பிடித்தது. உண்மையில் சிங்கம் பக்கத்தில் யார் அமர முடியும். அதன் நண்பர்களாக இருந்தால் அமரலாம். காட்டில் உள்ள விலங்குகள் பசித்தால் மட்டுமே இரையை தேடும் என்கிறார்கள்.


      //தங்கள் மகன் அணிந்திருக்கும் சட்டையிலும் விதவிதமாக கலர் பூக்கள் நிறைந்துள்ளதையும் ரசித்தேன். இப்படியான விதவிதமாக அமைப்புடனான சட்டைகளை அப்போது என் இளைய மகனும் விரும்பி அணிவார். இப்போது அவர் ரசனையில் சிறிது மாற்றங்கள்.//

      மகன் சுற்றுலா செல்லும் போது இது போன்ற உடைகளை விரும்பி அணிவான். உங்கள் மகனும் முன்பு இப்படி அணிந்து இருந்தார்கள் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிரது என்று சொன்னீர்கள்.
      மகனும் அலுவலகத்திற்கு ஒரு உடை, நவராத்திரிக்கு பாரம்பரிய உடை, இது போன்ற சுற்றுலத்தலங்களுக்கு ஒரு உடை என்று மாற்றி அணிவார்.

      //தங்கள் கற்பனை வரிகளை ரசித்தேன். எல்லா மலர்களின் வண்ணங்களும் கண்களை கவர்கிறது. //


      கற்பனையை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //ஒவ்வொரு மரங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறது. கடைசியில் உள்ள பனைமரம் போலிருக்கும் மரமும் கண்களை கவர்கிறது. உங்கள் பதிவால் நானும் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்த்த மகிழ்வடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      சுற்றிப்பார்க்க நிறைய இடம் பூங்காவில் கால்கள்தான் கெஞ்சியது போதுமென்று, முடிந்தவரை பார்த்து படம் எடுத்து இருக்கிறேன். மேலும் சில பதிவுகள் வரும். அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.


      நீக்கு
  6. காய்ந்த மரத்தில் மிக அழகான வடிவங்கள். மான்களில் வலப்பக்கம் உள்ள மான் செடிகளுக்கு இடையிலிருந்து எட்டிப் பார்ப்பது போல் இருப்பது கவர்ச்சி.
    வெள்ளி வண்ணக் கட்டெறும்பு, இந்த மரத்தில் வலப்புறம் ஒரு விலங்கு மேலே தெரிகிறது முன்பக்கம் மட்டும்..ஆமாம் சிங்க முகக் குரங்கு இடப்புறம். சிறியதாகத் தெரிகிறது வலப்புறம் தெரியலையே..

    சிகப்பு கட்டெறும்புதெரிகின்றன. அந்த மரத்தில் நடுவில் ஒரு விலங்கின் முகம் மட்டும் இருப்பது போல் இருக்கிறது. எந்த விலங்கு என்று டக்கென்று பெயர் வரமாட்டேங்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //காய்ந்த மரத்தில் மிக அழகான வடிவங்கள். மான்களில் வலப்பக்கம் உள்ள மான் செடிகளுக்கு இடையிலிருந்து எட்டிப் பார்ப்பது போல் இருப்பது கவர்ச்சி.//

      ஆமாம், கீதா மான் எட்டி பார்ப்பது அழகு.

      //சிங்க முகக் குரங்கு இடப்புறம். சிறியதாகத் தெரிகிறது வலப்புறம் தெரியலையே..//

      நான் கணினி முன் உட்கார்ந்து பார்க்கும் போது என் வலபக்கம் தான் தெரிகிறது அதனால் வலப்பக்கம் என்றேன்.

      //சிகப்பு கட்டெறும்புதெரிகின்றன. அந்த மரத்தில் நடுவில் ஒரு விலங்கின் முகம் மட்டும் இருப்பது போல் இருக்கிறது. எந்த விலங்கு என்று டக்கென்று பெயர் வரமாட்டேங்குது.//

      மரத்தின் முடிச்சுகள், பள்ளம், மேடு எல்லாம் ஏதோ விலங்கு வடிவம் தெரியும் . கற்பனை செய்து பார்க்க முடியும்.

      நீக்கு
  7. பெண் சிங்கங்கள் ஆண் சிங்கங்கள், கண்ணாடி அறைக்குள் பூக்கள் காய்ந்த மரங்களை அழகாக வடிவமைத்து வைத்திருப்பது, மலர்கள் மாறி மாறி வரும் திரை என்று எப்படி எல்லாம் யோசித்துச் செய்து மக்களைக் கவர்ந்து அவர்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காக அமைக்கிறார்கள்! மனம் எவ்வளவு ரிலாக்ஸ் ஆகும் இல்லையா இப்படிப் போய் வரப்ப. சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு ஆனால் அதற்குள் எவ்வளவு விஷயங்கள், அதுவும் சுத்தமாகப் பராமரிப்பு என்று. வியக்க வைக்கிறாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் சிங்கங்கள் ஆண் சிங்கங்களை மேலே இருந்து பார்க்கும் போது பயமாக இருக்கும் இத்தனை சிங்கங்கள் இருக்கிறது என்று. அங்கு அமர்ந்து இருக்கும் மக்கள் தான் அவை நிஜமல்ல என்று சொல்லும் சாட்சி.

      //கண்ணாடி அறைக்குள் பூக்கள் காய்ந்த மரங்களை அழகாக வடிவமைத்து வைத்திருப்பது, மலர்கள் மாறி மாறி வரும் திரை என்று எப்படி எல்லாம் யோசித்துச் செய்து மக்களைக் கவர்ந்து அவர்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காக அமைக்கிறார்கள்! மனம் எவ்வளவு ரிலாக்ஸ் ஆகும் இல்லையா இப்படிப் போய் வரப்ப. சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு ஆனால் அதற்குள் எவ்வளவு விஷயங்கள், அதுவும் சுத்தமாகப் பராமரிப்பு என்று. வியக்க வைக்கிறாங்க//

      நிறைய இருக்கிறது பார்த்து ரசிக்க . மக்களுக்கு நல்ல பொழுது போகும் இடம் தான். கால்களுக்கு நல்ல பலம் வேண்டும். ரசிக்க மனம் வேண்டும். பராமரிப்புக்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
      மக்களும் குப்பைகள் போடாமல் இருக்கிறார்கள்.

      நீக்கு
  8. அன்பு வளையத்துக்குள் எல்லோரும்!!! அருமை. பேரனும் பாட்டியும் ஒரே போன்று இருக்கிறீர்கள். பேரன் நல்ல உயரமாக இருக்கிறார். படம் மிக அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்பு வளையத்துக்குள் எல்லோரும்!!! அருமை.//


      அன்பு வளையத்தில் புதிதாக திருமணம் ஆனவர்கள் வித விதமாக படம் எடுத்து கொண்டார்கள்.

      பேரனும் பாட்டியும் ஒரே போன்று இருக்கிறீர்கள். பேரன் நல்ல உயரமாக இருக்கிறார்.
      படம் மிக அழகு//

      நன்றி கீதா

      நீக்கு
  9. அந்தச் சிவப்பு மலர் அப்பெண்ணைத் தட்டிக் கேட்கிறது என்னைப் பார்க்காமல் அப்படி என்ன வேகம் என்று!!!

    ௳ஞ்சள் மலர், செண்டாக இருக்கும் மலர்க் கொத்து மயில் தோகை போல இருக்கும் இலைகளின் நடுவில் அந்த மலர் செம....அழகான கோணத்தில் எடுத்திருக்கீங்க கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தச் சிவப்பு மலர் அப்பெண்ணைத் தட்டிக் கேட்கிறது என்னைப் பார்க்காமல் அப்படி என்ன வேகம் என்று!!!//

      ஓ கற்பனை அருமை.

      //௳ஞ்சள் மலர், செண்டாக இருக்கும் மலர்க் கொத்து மயில் தோகை போல இருக்கும் இலைகளின் நடுவில் அந்த மலர் செம....அழகான கோணத்தில் எடுத்திருக்கீங்க கோமதிக்கா//
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா

      நீக்கு
  10. வித்தியாசமான மரங்கள் - ஒன்று பாட்டில் போன்ற பூ ஜாடியில் மேலே கழுத்துப் பகுதியில் விரிந்த மரம் ஒன்று செருகி வைத்திருப்பது போன்று ...மற்றொன்று அடியில் தடித்த பூச்சாடியிலிருந்து மரம் கிளை பரப்பி இருப்பது போல இருக்கின்றன.

    அந்த ஒற்றைப் பூ என்ன அழகு இப்படியான இடங்களிலும் பூக்கள் அழகாகப் பூத்து அவர்களின் பராமரிப்பை பறைசாற்றுகிறது. நிஜமாகவே பாராட்ட வேண்டும்.

    அனைத்துப் படங்களும் அழகு. மெதுவாக ஒவ்வொன்றாகப் போடுங்க கோமதிக்கா. எனக்கும் நிறைய இருக்கின்றன. மெதுவாகப் போடுகிறேன்.

    ரசித்துப் பார்த்து உங்களோடு நடந்து வந்தேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வித்தியாசமான மரங்கள் - ஒன்று பாட்டில் போன்ற பூ ஜாடியில் மேலே கழுத்துப் பகுதியில் விரிந்த மரம் ஒன்று செருகி வைத்திருப்பது போன்று ...மற்றொன்று அடியில் தடித்த பூச்சாடியிலிருந்து மரம் கிளை பரப்பி இருப்பது போல இருக்கின்றன.//

      ஆமாம் கீதா கண்ணாடி பூஜாடி போல இருக்கிறது.

      //அந்த ஒற்றைப் பூ என்ன அழகு இப்படியான இடங்களிலும் பூக்கள் அழகாகப் பூத்து அவர்களின் பராமரிப்பை பறைசாற்றுகிறது. நிஜமாகவே பாராட்ட வேண்டும்.//

      ஆமாம்.

      //அனைத்துப் படங்களும் அழகு. மெதுவாக ஒவ்வொன்றாகப் போடுங்க கோமதிக்கா. எனக்கும் நிறைய இருக்கின்றன. மெதுவாகப் போடுகிறேன்.//

      போடுகிறேன் கீதா. நான் ரசித்தவையை நீங்கள் ரசிக்கவும், என் சேமிப்பாகவும் இருக்கட்டும் . அடிக்கடி பார்த்து கொள்ளலாம்.

      ரசித்துப் பார்த்து உங்களோடு நடந்து வந்தேன்!!!!//

      எனோடு நடந்து வந்தது மகிழ்ச்சி கீதா.



      நீக்கு
  11. விசிறி போன்று பனை மரங்கள்....அழகு இல்லையா இது அழகுக்கான மரம். இயற்கையை நினைத்து வியக்காத நாளும் நொடியும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விசிறி போன்று பனை மரங்கள்....அழகு இல்லையா இது அழகுக்கான மரம். இயற்கையை நினைத்து வியக்காத நாளும் நொடியும் இல்லை.//

      அது பனை மரம் மாதிரி ஆனால் பனைமரம் இல்லை என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  12. சிங்கப்பூர் பூங்கா காட்சிகள் அழகு.. அருமை... 1985 க்குப் பிறகு அமைத்திருக்கின்றனர்..

    ஜூரோங் பறவைகள் பூங்கா மண்டாய் விலங்குகள் பூங்கா
    நீர்த்தேக்கம் இவை தான் அப்போது..

    மேலும் -
    ஒவ்வொரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழும் அடர்த்தியான பூங்காக்கள் இருக்கும்..

    சிங்கப்பூரின் பசுமை சொல்லி முடியாது.. தினமும் சிறிது நேரமாவது மழை பெய்யும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //சிங்கப்பூர் பூங்கா காட்சிகள் அழகு.. அருமை... 1985 க்குப் பிறகு அமைத்திருக்கின்றனர்..//

      ஆமாம்.

      //ஜூரோங் பறவைகள் பூங்கா மண்டாய் விலங்குகள் பூங்கா
      நீர்த்தேக்கம் இவை தான் அப்போது..//

      ஒ! சரி. நாங்கள் இநு போகவில்லை.

      மேலும் -
      //ஒவ்வொரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழும் அடர்த்தியான பூங்காக்கள் இருக்கும்.//

      ஆமாம், அதையும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
      .

      //சிங்கப்பூரின் பசுமை சொல்லி முடியாது.. தினமும் சிறிது நேரமாவது மழை பெய்யும்//

      நாங்கள் சுற்றிப்பார்த்து வீடு திரும்பும் போது தினம் மழைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  13. படங்களும் பகிர்வும் மிக அருமை. மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. வித்தியாசமான மரமே. பனைகளும் அழகு.

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் மிக அருமை. //

      நன்றி.

      மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. வித்தியாசமான மரமே. பனைகளும் அழகு.//

      வித்தியாசமான மரங்கள் நிறைய இருந்தன.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. சிங்கப்பூர் சென்றவர்களும் சரி, அங்கு வசித்தவர்களும் சரி இப்படி ஒரு பூங்கா உண்டு என்று குறிப்பிட்டதே இல்லை. வெகு அழகான படங்கள். அந்த சிங்கங்களை நிஜம் என்றுதான் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //சிங்கப்பூர் சென்றவர்களும் சரி, அங்கு வசித்தவர்களும் சரி இப்படி ஒரு பூங்கா உண்டு என்று குறிப்பிட்டதே இல்லை. வெகு அழகான படங்கள். அந்த சிங்கங்களை நிஜம் என்றுதான் நினைத்தேன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி பானுமதி.

      நீக்கு
  15. படங்கள் அழகு. நாங்கள் சென்று வந்த நினைவைத் தந்தது.
    உங்கள் குடும்ப படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு. நாங்கள் சென்று வந்த நினைவைத் தந்தது.
      உங்கள் குடும்ப படம் அருமை.//

      உங்களுக்கு மலரும் நினைவுகளை தந்தது பதிவு என்று அறிந்து மகிழ்ச்சி.'
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு