அனுமன் சன்னதி நல்ல பெரிதாக இருக்கிறது.
மகன் குடும்பத்துடன் நான் ஜூன் 5 ம் தேதி அரிசோனாவிலிருந்து சிங்கப்பூர் வந்தேன். அங்கு உறவினர்களை, நண்பர்களை சந்தித்தோம். மற்றும் சில இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். அங்கு பார்த்த கோவில்களை முதலில் பதிவு செய்து வருகிறேன்.
1. சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள் முதல் கோவில் ஸ்ரீ தண்டாயுத பாணி கோவில்
3. ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்
ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் படங்கள் அடுத்த பதிவிலும் தொடரும் என்று சொல்லி இருந்தேன். இந்தபதிவில் ஸ்ரீ ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் படங்கள் நிறைவு பெறுகிறது.
அனுமன் சன்னதி விமானம்
பிள்ளையார், வேல், சக்கரத்தாழ்வார் உள்ள சன்னதி இருக்கும் இடம். போன பதிவில் பிள்ளையார், வேல், சக்கரத்தாழவார் படங்களை போட்டு விட்டேன்.
ஸ்ரீ குமுதவள்ளி நாச்சியார், ஸ்ரீ திருமங்கையாழ்வார்
நடுவில் கருடாழ்வார் , மேல்விதானமும், தூண்களும் அழகு
அன்னபூரணி அன்ன கூடம்
தினம் உணவு உண்ணும் போது அன்னபூரணியை நினைத்து "அன்னபூரணியே நமஹ" என்று வணங்கி உண்டால் என்றும் உணவை தந்திடுவாள் என்பார்கள்.
அன்னக்கூடம்
"உச்சிக்கால பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அன்னகூடத்தில் கொடுப்பார்கள் வாங்கி கொள்ளுங்கள்" என்று அனுமன் கோவில் பட்டர் சொன்னார். சிறிதளவு சுவையான தயிர் சாதம் கிடைத்தது எங்களுக்கு. அன்னபூரணி பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சி.
கோவில் பிரகாரம் மூலவர் விமானம்
தூண்களில் உள்ள சிற்பங்கள்.
மகாலட்சுமி சன்னதி விமானம்

நடை சாற்றும் வரை கோவிலில் அமர்ந்து இருந்தோம்.
வசந்த உற்சவம் நன்றாக நடந்து இருக்கும்.
கோவிலின் முழுத்தோற்றம். சுவரில் அழகாய் இருந்த படங்கள்.
முத்தங்கி சேவை - கோவில் சுவரில் அழகாய் இருந்த பெருமாள் படம்.
ஸ்ரீனிவாசபெருமாள் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள பிரார்த்தனை செய்து கொள்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
அழகிய படங்கள் தரிசனம் கிடைத்தது நன்றி.
பதிலளிநீக்குசொல்லிய விவரணம் சிறப்பு
புறாவுக்கு தெரிகிறது இங்கு யாரும் கல் எடுத்து வீசமாட்டார்கள் என்று... ஆகவே சுதந்திரமாக உலாவுகிறது.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்கள் தரிசனம் கிடைத்தது நன்றி.
சொல்லிய விவரணம் சிறப்பு//
நன்றி.
//புறாவுக்கு தெரிகிறது இங்கு யாரும் கல் எடுத்து வீசமாட்டார்கள் என்று... ஆகவே சுதந்திரமாக உலாவுகிறது.//
ஆமாம், குழந்தைகள் கூட விரட்டவில்லை. அதன் அழகை பார்த்து ரசித்தனர்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோவில் சுத்தமாக அழகாக உள்ளது...
பதிலளிநீக்குகாணொளி அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோவில் சுத்தமாக அழகாக உள்ளது...
காணொளி அருமை...//
காணொளி பார்த்தற்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.
அப்போது இப்படியான (சென்ற பதிவிலும் உங்கள் பதிலைப் பார்த்துவிட்ட்ன் கோமதிக்கா) விதானங்கள் அன்னக் கூடம் இப்படி இருந்ததில்லை. பிரசாதம் கிடைத்ததுதான். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் கொஞ்சமே கொஞ்சம். அதனால் கோமளவிலாஸில் சாப்பிட்டோம். இப்போதும் இருக்கிறது என்று தெரிகிறது உங்கள் பதிலில் இருந்து.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அப்போது இப்படியான (சென்ற பதிவிலும் உங்கள் பதிலைப் பார்த்துவிட்ட்ன் கோமதிக்கா) விதானங்கள் அன்னக் கூடம் இப்படி இருந்ததில்லை.//
இப்போது கழிவறை வசதியோடு நன்றாக இருக்கிறது. கோவிலில் விழாக்கள் நடத்து கிறார்கள் அதற்கு நல்ல வசதியான இடம் இந்த அன்னக்கூடம்.
//பிரசாதம் கிடைத்ததுதான். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் கொஞ்சமே கொஞ்சம்.
அதனால் கோமளவிலாஸில் சாப்பிட்டோம். இப்போதும் இருக்கிறது என்று தெரிகிறது உங்கள் பதிலில் இருந்து.//
உச்சிகாலத்து பூஜைக்கு செய்த பிரசாதம் அங்கு இருந்தவர்கள் 20 பேர் இருப்போம் அதனால் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும் போது கொஞ்சம் தான் கொடுக்கமுடியும். பிரசாதம் இப்படி கொஞ்சம் கொடுத்தால் தான் நல்லது.
கோமள விலாஸ் பார்க்கவில்லை இருப்பதாக சொன்னார்கள்.
இப்பகுதியிலும் படங்கள் எல்லாம் ரொம்ப அழகு. தெளிவாகவும் தெரிகிறார்கள் திரு உருவச்சிலைகள் எல்லாம்...
பதிலளிநீக்குவிளக்கு போட தனியாக அழகான இடம். இங்கும் இப்போது பல கோயில்களிலும் வைத்திருக்கிறார்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லைனா நவக்கிரக சன்னதிகளில் எண்ணை விளக்குப் போட்டு எல்லாம் இடமும் எண்ணையாகி நடக்க முடியாமல் வழுக்கிவிடுகிறது.
அங்கு எல்லாமே மிகவும் சுத்தமாக இருக்கிறது. மேல்விதானம், வெளிச்சப்பரம் அழகான கலைவேலைப்பாடுகள்.
மகாலட்சுமி சன்னதி விதானம், தூண் சிற்பங்கள், (ஆஞ்சு!! காளிங்க கிருஷ்ணர்) கோயில் பிராகாரம் மூலவர் கோபுரம் எல்லாம் அழகு என்ன சுத்தம்!!!!! அதுதான் முதலில் பளிச்சென்று கண்ணில் படுகிறது!!
எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா
கீதா
//இப்பகுதியிலும் படங்கள் எல்லாம் ரொம்ப அழகு. தெளிவாகவும் தெரிகிறார்கள் திரு உருவச்சிலைகள் எல்லாம்...//
நீக்குநன்றி.
//விளக்கு போட தனியாக அழகான இடம். இங்கும் இப்போது பல கோயில்களிலும் வைத்திருக்கிறார்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லைனா நவக்கிரக சன்னதிகளில் எண்ணை விளக்குப் போட்டு எல்லாம் இடமும் எண்ணையாகி நடக்க முடியாமல் வழுக்கிவிடுகிறது.//
எல்லா சன்னதியிலும் விளக்கு போட்டு எண்ணையாக்கி விடாமல் ஒரு இடத்தில் சுவாமியை நினைத்து விளக்கு போடுவது நல்லது.
சுத்தம் செய்ய எளிது.
அங்கு எல்லாமே மிகவும் சுத்தமாக இருக்கிறது. மேல்விதானம், வெளிச்சப்பரம் அழகான கலைவேலைப்பாடுகள்.
//மகாலட்சுமி சன்னதி விதானம், தூண் சிற்பங்கள், (ஆஞ்சு!! காளிங்க கிருஷ்ணர்) கோயில் பிராகாரம் மூலவர் கோபுரம் எல்லாம் அழகு என்ன சுத்தம்!!!!! அதுதான் முதலில் பளிச்சென்று கண்ணில் படுகிறது!!
மகாலட்சுமி சன்னதிக்கு அழகான வளைவு வாசல் அழகு. வெள்ளி சப்பரம் கலைவேலைப்பாடு அழகுதான்.
எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//
நன்றி கீதா.
ரொம்பவே ரசித்தது புறா. நேற்றே யுட்யூபில் பார்த்துவிட்டேன். அழகா நடந்து வந்து வெயிலில் உட்கார்ந்து சன்பாத் எடுத்துவிட்டு நடந்து செல்வது ....வெண்புறா அழகு!!! ரசித்துப் பார்த்தேன் இப்பவும்..
பதிலளிநீக்குஇங்கும் நிறைய புறாக்கள் வெண்புறா அல்ல வழக்கமான சாம்பல் புறாக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன
கீதா
//ரொம்பவே ரசித்தது புறா. நேற்றே யுட்யூபில் பார்த்துவிட்டேன். அழகா நடந்து வந்து வெயிலில் உட்கார்ந்து சன்பாத் எடுத்துவிட்டு நடந்து செல்வது ....வெண்புறா அழகு!!! ரசித்துப் பார்த்தேன் இப்பவும்//
நீக்குஆமாம் அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருந்தது. தீடீரென்று அமர்ந்தது காமிரவில் எடுத்த காணொளி. படங்கள் கைபேசியில் எடுத்தேன். காணொளி மட்டும் காமிராவில்...
//இங்கும் நிறைய புறாக்கள் வெண்புறா அல்ல வழக்கமான சாம்பல் புறாக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன//
இங்கு எங்கள் குடியிருப்பில் இப்போது பறவைகள் வரத்து குறைந்து விட்டது, குயில்களும், புறாக்களும், குயில்களும் வருகிறது. பக்கத்து தோட்டத்தை அழித்து கட்டிடம் கட்ட கூறு போட்டாச்சு.
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
படங்கள் நன்றாக உள்ளன. அது எப்படி ஏரியல் போட்டோ எடுத்தீர்கள் செல்போனில். (கடைசி கோவில் விமான படம்.)
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் நன்றாக உள்ளன. அது எப்படி ஏரியல் போட்டோ எடுத்தீர்கள் செல்போனில். (கடைசி கோவில் விமான படம்.)//
கடைசி இரண்டு படங்கள் நான் எடுக்கவில்லை. அங்கு சுவரில் இருந்த படங்கள். நான் எடுக்கவில்லை என்று தெரியும் என்று நினைத்தேன். சுவற்றில் உள்ள படங்கள் என்று படத்துக்கு கீழ் போட்டு விடுகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சுத்தம் ஒழுக்கம் பணிவு இவற்றை அங்கிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்..
பதிலளிநீக்குபடங்கள் அழகு.. அருமை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//சுத்தம் ஒழுக்கம் பணிவு இவற்றை அங்கிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்..//
நல்லதை கற்றுக் கொள்ளலாம்.
//படங்கள் அழகு.. அருமை..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் யாவும் அழகு. கருடாழ்வார் சன்னதி ஏகாந்தமாய் அழகாய் இருக்கிறது. பெரிய குத்து விளக்குகள். தீரத்தீர இரண்டு லிட்டர் எண்ணெய் ஊற்றுவார்கள் போலும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் யாவும் அழகு.//
நன்றி.
//கருடாழ்வார் சன்னதி ஏகாந்தமாய் அழகாய் இருக்கிறது.//
ஆமாம் , பெருமாளுக்கு எதிரில் இருக்கிறார், ஆனால் நிறைய இடம் இருக்கிறது இருவருக்கும் நடுவில்.
//பெரிய குத்து விளக்குகள். தீரத்தீர இரண்டு லிட்டர் எண்ணெய் ஊற்றுவார்கள் போலும்.//
ஆமாம். பச்சை பிடிக்காமல் விளக்கு பார்க்கவே அழகு.
புறா இறக்கையை விரித்து அமர்ந்திருக்கும் அழகு! ஏதோ இறக்கையின் குறிப்பிட்ட பகுதியை காயவைக்க வந்தது போல, அல்லது கேட்வாக் செய்து ஸ்டைல் காட்டிப்போவது போல...!
பதிலளிநீக்கு//புறா இறக்கையை விரித்து அமர்ந்திருக்கும் அழகு! ஏதோ இறக்கையின் குறிப்பிட்ட பகுதியை காயவைக்க வந்தது போல, அல்லது கேட்வாக் செய்து ஸ்டைல் காட்டிப்போவது போல...!//
நீக்குஆமாம், நானும் நினைத்தேன் ஒரு பக்க இறக்கையை மட்டும் தான் விரித்து இருந்தது நீங்கள் சொல்வது போல அழகு காட்டி நடந்து போன ஸ்டைல் நன்றாக இருந்தது.
அன்னதானக் கூடம் அழகு. நாற்காலி மேசை போட்டிருப்பப்பதைப் பார்த்தல் ஹோட்டல் போல பல்வகை உணவுகள் பரிமாறுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது!
பதிலளிநீக்கு//அன்னதானக் கூடம் அழகு. நாற்காலி மேசை போட்டிருப்பப்பதைப் பார்த்தல் ஹோட்டல் போல பல்வகை உணவுகள் பரிமாறுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது!//
நீக்குசிறப்பு அன்னதானம் நடத்தும் போது தேவைபடும்தானே!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
கல்யாணம் மற்றும் பல விழாக்கள் நடத்துவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்றார் போல உணவு கூடத்தை அமைத்து இருக்கிறார்கள்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.
இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் ஆஞ்சநேயர் சன்னதி விமான படம் அந்த படமெடுத்த கோணம் அழகாக இருக்கிறது. ஆஞ்சநேயரை தரிசித்து கொண்டேன். கோவில் பிரகாரம், தூண்கள், சிற்பங்கள் என எல்லாமிடமுமே சுத்தமாக உள்ளது. அன்னதான கூடமும் படு சுத்தம். மதியம் வாக்கில் அன்னதான போஜனம் போடுவார்கள் போலும்..! தினமுமா ? இல்லை ஏதாவது சிறப்பான நாட்களிலா? எப்படியாயினும், இறைவனின் பிரசாதம் பக்தர்களுக்கு துளியேனும் கிடைத்தால் சரிதான்..
பெரிய விளக்கு நிறைய எண்ணெய்யுடன் அணையா தீபம் எரிவது அழகாக இருக்கிறது. ஒரு நாள் முழுக்க நின்று நிதானமாக எரியும் போலிருக்கிறது. தாங்கள் சொன்ன விளக்கு ஸ்தோத்திரம் மனதுக்குள் எனக்கும் வந்தது.
வெள்ளைப் புறாவின் காணொளி மிக அழகு. தாங்கள் காணொளி எடுக்கப் போவதை உணர்ந்து எங்கள் கண்களுக்கு விருந்தாக அமையட்டுமென அழகாக நடந்து வந்து தன் பட்டு போன்ற சிறகை விரித்து அமர்ந்து, பின் அழகாக நடந்துச் செல்கிறது. அது முடிந்தவுடன் தங்கள் பேரன் கவினின் நடனமும் அதில் வந்தது. பார்த்து மகிழ்ந்தேன் தங்கள் பேரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறுங்கள்.
பெருமாளின் முத்தங்கி சேவை படம் மிக அழகாக இருக்கிறது பெருமாள் தரிசனமும் பெற்று. ஆனந்தமடைந்தேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
//அன்னதான கூடமும் படு சுத்தம். மதியம் வாக்கில் அன்னதான போஜனம் போடுவார்கள் போலும்..! தினமுமா ? இல்லை ஏதாவது சிறப்பான நாட்களிலா? எப்படியாயினும், இறைவனின் பிரசாதம் பக்தர்களுக்கு துளியேனும் கிடைத்தால் சரிதான்..//
தினம் அன்னதானம் நடக்குமா என்று தெரியாது. காலபூஜைக்கு இறைவனின் பிரசாதமாக படைக்கப்படுவது விளம்ப படும் என்று தெரிகிறது. நீங்கள் சொல்வது போல பிரசாதம் துளி கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்.
//பெரிய விளக்கு நிறைய எண்ணெய்யுடன் அணையா தீபம் எரிவது அழகாக இருக்கிறது. ஒரு நாள் முழுக்க நின்று நிதானமாக எரியும் போலிருக்கிறது. தாங்கள் சொன்ன விளக்கு ஸ்தோத்திரம் மனதுக்குள் எனக்கும் வந்தது.//
விளக்கு ஸ்தோத்திரம் நினைவுக்கு வராமல் இருக்குமா உங்களுக்கு!
புறா காணொளி முடிந்ததும் கவினின் நடனம் வந்ததா? மகிழ்ச்சி.
பேரனிடம் உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்கிறேன்.
//பெருமாளின் முத்தங்கி சேவை படம் மிக அழகாக இருக்கிறது பெருமாள் தரிசனமும் பெற்று. ஆனந்தமடைந்தேன்.//
ஆமாம், மிக அழகாய் இருந்தது, அதனால்தான் அதை படம் எடுத்து தரிசனம் செய்ய பகிர்ந்தேன்.
//அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
அழகிய படங்கள். கோவில் சுத்தம் கண்ணைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குசிறிதளவே பிரசாதமா?
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்கள். கோவில் சுத்தம் கண்ணைக் கவர்ந்தது.
ஆமாம் , மிக சுத்தம்.
சிறிதளவே பிரசாதமா?//
ஆமாம், சிறிய எலுமிச்சை அளவு. பிரசாதம் அவ்வளவு கொடுத்தால் தான் நல்லது. மூன்று கோவில் போனோம் ஒரே நாளில். மூன்று கோவிலிலும் கொஞ்சம் பிரசாதம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பெரிய எண்ணெய் விளக்கை ரசித்தேன்.
பதிலளிநீக்குபுறா வெயிலில் இறக்கையைக் காய வைப்பதும் அழகுதான்.
//பெரிய எண்ணெய் விளக்கை ரசித்தேன்.
நீக்குபுறா வெயிலில் இறக்கையைக் காய வைப்பதும் அழகுதான்.//
இரண்டு பதிவுகளையும் படித்து விட்டீர்களா?
மகிழ்ச்சி. இன்று எங்கள் வளாகத்தில் கட்டி இருக்கும் பிள்ளையார் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி. அதனால் காலை முதல் மாலை வரை கோவிலில் நல்லபடியாக இறை சிந்தனையுடன் பொழுது போனது. காலை ஹோமம் , அபிஷேகம், அலங்காரம், மதியம் அன்னதானம், மாலை
கூட்டு வழிபாடு நடந்தது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் அழகு.
பதிலளிநீக்குஇங்கு எல்லாம் சுத்தத்துக்கும் அமைதிக்கும் குறைவு இருக்காது. மனம் அமைதி கொள்ளும்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அழகு.//
நன்றி.
இங்கு எல்லாம் சுத்தத்துக்கும் அமைதிக்கும் குறைவு இருக்காது. மனம் அமைதி கொள்ளும்.//
நீங்கள் சொல்வது சரிதான், சுத்தமும், அமைதியும் குடி கொண்டு இருக்கிறது. அதை பார்த்து நமக்கு மனம் அமைதி கொள்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.