சங்கரன் கோவில் திருவிழா 17 ஆம் தேதி (17.7.2018) தொடங்கியது. நாங்கள் அடுத்த நாள் 18ம் தேதி புதன் கிழமை சென்று வந்தோம். என் தங்கைகள் அண்ணி எல்லோரும் ஆடித்தபசு சமயம் வருடா வருடம் செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் அழைப்பார்கள். இந்த முறை வாய்ப்பு கிடைத்தது அன்னையின் அருளால்.