Grand Canyon போகும் முன் Holbrook என்னும் இடத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினோம். கல்லாகிப் போன மரங்கள் உள்ள தேசிய பூங்கா இந்த ஊருக்குப் பக்கம் இருக்கிறது, அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்கள் இருந்த இடங்கள், அவர்கள் இருந்த வீட்டின் அமைப்பு, அவர்களுடைய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கிப் போவார்கள். நாங்களும் இங்கு தங்கி, இந்த இடத்தை ரசித்துப் பார்த்துப் பின் தேசிய பூங்காவிற்குப் போனோம்.
இந்தப் பதிவில் தங்கும் விடுதி மட்டும்.
சகல வசதியும் கொண்ட தங்கும் விடுதி

வீட்டின் முன் பகுதி
கண்ணாடியில் அவனும் நானும் தெரிகிறோம்

மேலும் கீழுமாய் ஒடி விளையாடினான் பேரன்.
மாடியிலிருக்கும் பேரனைக் கீழ் இருந்து பார்க்கும் தாத்தா
தாத்தாவின் ரூம் வசதியாக இருக்கிறதா என்று செக் செய்கிறான்

எங்கள் வீடும் அன்று இரவு வந்த நிலாவும்
வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறது
படியில் தாத்தாவும் பேரனும் விளையாட்டு!
மாடிப்படிக்கு அடியில் உள்ள இடத்தில் இரண்டு படுக்கும் இடங்கள்

நல்லா இருக்குதா ஆச்சி வீடு?
சிறிது நேரம் அவன் கொண்டு வந்து இருந்த விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடினான்.
நிறைய பேர் இருந்தால் இந்தப் படுக்கைகளும் உபயோகம் ஆகி இருக்கும் நாங்கள் ஐந்து பேர்கள் தான்.
குளியல் அறையும், கழிவறையும் சகல வசதியுடன்.
குளியல் அறை
மாடி அறையில் இரண்டு படுக்கை வசதி இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் அடிமைப்பெண் படத்தில் எம் .ஜி யார் நடப்பது போல் குனிந்து நடந்து போக வேண்டும்.
சிறிது நேரம் யூடியுப்பிலிருந்து படம் பார்த்தல்,
கொடுத்து இருக்கும் வைஃபை வசதியை அனுபவித்தல்
எல்லோரும் படுத்தபின் அன்று எடுத்த படங்களை காமிராவிலிருந்து மடிக் கணினிக்கு மாற்றி விட்டுத்தான் எனக்குத் தூக்கம்.
மறுநாள் போகும் இடங்களில் போட்டோ எடுக்கவேண்டுமே!
ஒரு படுக்கை அறை வசதி உள்ள வீடுகள்.
முன்புறம் ஊஞ்சல் , சாப்பாட்டு மேஜை எல்லாம் உள்ளது.
200 ஆண்டுகள் முந்திய மரம் கல்லாக
விளையாட நிறைய இருந்தது பேரனுக்கு
எவ்வளவு விளையாடினாலும் அப்பாவின் முதுகில் சவாரி செய்யும் விளையாட்டுக்கு ஈடு ஏது?
என்னுடன் பறவையைப் பார்த்தான்
மொட்டை மரத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த குருவி
மண்ணில் வீடு கட்டிக் கொண்டு இருக்கும் எறும்பை ஆராய்ச்சி செய்தான்.
நிறைய பேர் சகல வசதியும் உள்ள காரவேனில் வந்து இருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் வசதி, சமைக்க மின்சார வசதி எல்லாம் செய்து கொடுக்கிறது விடுதி.
கைவினைப் பொருட்கள் விற்கும் கடையும் உண்டு. வெளியில் தொங்கும் பறக்கும் பலூன் வாங்கினோம்.
காரவேனில் வந்து இருக்கும் அன்பர்களின் வளர்ப்புச் செல்லங்கள். அவர்களைத் தடுப்புக் கூண்டுக்குள் விட்டு விட்டுத் தங்கள்
வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
மறுநாள் காலை கிளம்பி விட்டோம்.
குழந்தைகள் தாங்கள் அனுபவித்த அனுபவங்களைத் தன் பெற்றோர்களும் அனுபவிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று காட்டினார்கள். இடங்களை நாங்களும் ரசித்து பார்த்தோம். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.
சமையல் செய்து எடுத்துக் கொண்டோம்.
சின்ன வெங்காய புளிக் குழம்பு கொதிக்கிறது அடுப்பில்.
(சின்ன வெங்காயம் எப்பொழுதும் கிடைக்காது. கிடைக்கும்போது வாங்கிக் கொள்ள வேண்டும்)
பருப்பு, சாதம் குக்கரில் ரெடி.
சேப்பங்கிழங்கு பொரியல் (காரக்கறி) உருளைக்கிழங்கு, சிப்ஸ், தயிர் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டோம். மதியத்திற்கு.
காலை உணவு தங்கும் விடுதியில் கொடுப்பார்கள். சாப்பிட்டு விட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு அடுத்து பயணம் ஆரம்பிக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
கண் நிறைந்த படங்கள்...
பதிலளிநீக்குஒவ்வொன்றும் அழகு.. அருமை...
சமயங்களில் நாமும் குழந்தைகளாகவே ஆகி விடுகின்றோம்...
அந்த மகிழ்ச்சிக்கு எல்லையேது!...
என்றென்றும் வாழ்க நலம்...
>>> எவ்வளவு விளையாடினாலும்
பதிலளிநீக்குஅப்பாவின் முதுகில் சவாரி செய்யும் விளையாட்டுக்கு ஈடு ஏது!..<<<
அந்த விளையாட்டுக்கு ஈடு இணை வேறொன்று இல்லை...
கவினுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..
>>> சேப்பங்கிழங்கு பொரியல் (காரக்கறி) உருளைக்கிழங்கு, சிப்ஸ், தயிர் எல்லாம்..<<<
பதிலளிநீக்குவெகுவிரைவில்
ஞானாநந்தை அதிராம்பிகாவின் கைவண்ணத்தில்
வேறுவிதமாக உருமாறி - எபியில் வரக்கூடும்!..
எதற்கும் உஷாராக இருந்து கொள்வது நல்லது!...
இடங்களும் படங்களும் மிக அருமையாக இருக்கு. ஒரு படம் மட்டும் இருமுறை வந்துள்ளது (தாத்தாவும் பேரனும் மாடிப்படியில்)
பதிலளிநீக்கு200 ஆண்டுகள் இல்லை, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மரமாக இருந்தது. இதைப்போல் திருவண்ணாமலை அருகிலும் ஒரு இடம் இருக்கிறது. அங்கு முழுவதும் கல் மரங்கள்தான்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலும் கல்மரப் பூங்கா உள்ளது..
பதிலளிநீக்குதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளி பிரசித்தமானவள்..
அழகிய படங்கள் எடுத்த விதம் அழகு.
பதிலளிநீக்குகவினுக்கு எமது வாழ்த்துகள்
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சமயங்களில் நாமும் குழந்தைகளாகவே ஆகி விடுகின்றோம்...
அந்த மகிழ்ச்சிக்கு எல்லையேது!...//
உண்மை .
கருத்துக்கும் கவினை வாழ்த்தியதற்கு நன்றி.
//வெகுவிரைவில்
பதிலளிநீக்குஞானாநந்தை அதிராம்பிகாவின் கைவண்ணத்தில்
வேறுவிதமாக உருமாறி - எபியில் வரக்கூடும்!..
எதற்கும் உஷாராக இருந்து கொள்வது நல்லது!.//
அதிராவிற்கு புது பெயர் சூட்டி இருக்கிறீர்கள். அதிராவின் கைவண்ணத்தில் வரட்டும் அருமையான புதுவகை உணவுகள்.
பதிவை ரசித்து கருத்துக்களும், பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னத்ற்கும் நன்றி.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதும் பார்த்தேன் படங்கள் இருமுறை வந்து இருப்பதை எடுத்து விடுகிறேன்.
திருவக்கரையில் மரம் கல்லான இடத்தை பார்த்து இருக்கிறோம்.
திருவண்ணாமலை அருகில் இருக்கும் இடம் போனது இல்லை.
மரம் கல்லான இடம் அடுத்த பதிவில்.
தங்கும் இடத்தில் வைத்து இருந்த ஒரு மரத்துண்டு மட்டும் இந்த பதிவில்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
//விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலும் கல்மரப் பூங்கா உள்ளது..
பதிலளிநீக்குதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளி பிரசித்தமானவள்..//
பல வருடங்களுக்கு முன் போய் இருக்கிறோம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
அடுத்து கல்மரப் தேசிய பூங்கா பதிவு வரும்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், கவினுக்கு வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.
படங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும், சுருக்கமான விளக்கங்களும் அருமை!
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அப்பாடி.. எவ்வளவு படங்கள்... நிறைய அப்லோட் செய்திருக்கிறீர்கள். எல்லாப் படங்களுமே சுவாரஸ்யம். பேரன் மிகவும் சந்தோஷமாக விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. தாத்தாவின் பார்வையிலும், பாட்டியின் அருகாமையிலும்தான் பேரனிடம் எவ்வளவு அன்பு....
பதிலளிநீக்குஅங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பி இருப்பீர்கள். அழகான இடம். உள்புறமும் வெளிப்புறமும் வசதி + அழகு.
பதிலளிநீக்குவெங்காய வெந்தயக்குழம்பு... ஆஹா... அதற்கு உருளை காரக்கறி நல்ல காம்பினேஷன்!
பதிலளிநீக்கு
தங்குமிடம் நல்ல வசதி.
பதிலளிநீக்குஅனுபவப் பகிர்வு அருமை.
நிலவும் குருவியும் அழகு.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய படங்கள் இருக்கிறது ஸ்ரீராம்.
அந்த இடத்தின் மலர்கள், மரங்கள் என்று எல்லாம் அழகுதான்.
பேரனுடன் இருக்கும் நேரம் மகிழ்வான நேரம் தான்.
இப்போது அம்மா பாட்டி போய் இருக்கிறார்கள். அவனுக்கு இப்போது ஆகஸ்ட் வரை விடுமுறை வேறு .அந்த பாட்டியுடன் போகும் இடங்களைப் பற்றி கண்விரிய அவன் சொல்லும்போது கேட்டுகொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
//அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பி இருப்பீர்கள். அழகான இடம். உள்புறமும் வெளிப்புறமும் வசதி + அழகு.//
ஆமாம் , அழகான இடம் தான்.
//வெங்காய வெந்தயக்குழம்பு... ஆஹா... அதற்கு உருளை காரக்கறி நல்ல காம்பினேஷன்!//
ஸ்ரீராம், உருளை காரக்கறி இல்லை சேப்பங்கிழங்கு காரக்கறி, உருளை சிப்ஸ்.
வீட்டில் சேப்பங்கிழங்குதான் வீட்டில் இருந்தது.
பதிவை ரசித்து கருத்துக்களை சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபகிர்வையும் படங்களையும் ரசித்தமைக்கு நன்றி.
போன பதிவில் குருவி போட்டு இருந்தேன், உங்கள் தினமலர் பதிவையும்
குறிப்பிட்டேன்.
இப்படி படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டால் எப்போதும் எங்கிருந்தாலும் யாருக்கும் காண்பிக்கலாம் நாமும் பார்த்து மகிழலாம்... நல்ல முயற்சி... படங்கள் அருமை
பதிலளிநீக்குஅழகான விளக்கங்களுடன், படங்களுடன்
பதிலளிநீக்குபதிவு வெகு இனிமை கோமதி. பேரன் தாத்தா பாட்டியுடன் மகிழ்வது தெளிவாகத்
தெரிகிறது.
குழந்தையுடன்,பெற்றோருக்கும்,பெரியவர்களுக்கும் வாழ்த்துகள்.
கோமதி அக்கா இம்முறை, அதிராவைக் காட்டிலும் அதிக படங்கள் போட்டிருக்கிறா.. அழகிய மரத்தாலான கொட்டேஜ் மிக அழகு... முன்னால் நிற்கும் மரம் பார்க்க முருங்கி:) இலைபோல இருக்கு:).
பதிலளிநீக்கு//கண்ணாடியில் அவனும் நானும் தெரிகிறோம்//
பதிலளிநீக்குநான் என்றால் அது அவனும் நானும் ஹா ஹா ஹா..:)).
//மேலும் கீழுமாய் ஒடி விளையாடினான் பேரன்.//
குழந்தைகள் எனில் அப்படித்தான் இருப்பார்கள்.. ஓடி ஓடி ஆராட்சி நடக்கும்..
//தாத்தாவின் ரூம் வசதியாக இருக்கிறதா என்று செக் செய்கிறான்//
பதிலளிநீக்குஇந்தப் படத்திலே நீங்க மெலிஞ்சதுபோல இருக்கிறீங்க கோமதி அக்கா.. ரயேட்ட் ஆக இருக்குமோ.. பேரன் தான் உங்களிருவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்..
பேரன் எப்படி தமிழ் நன்றாகப் பேசுவாரோ?
//எங்கள் வீடும் அன்று இரவு வந்த நிலாவும்//
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் எந்தாப்பெரிசூஊஊஊஊஉ.. உற்றுப் பார்த்தேன் கோமதி அக்கா.. நிலவின் வலப்பக்கம் பாருங்கோ ஒரு மீசை வைத்த ஆணின் முகம் சைட்டால தெரியுது.. ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோலவும் இருக்கு.. வேறு ஆருக்காவது அது தெரியுதோ தெரியல்லியே..
இதேபோல்தான் நாங்களும் தங்கிய ஒரு ஹோட்டலில் ஃபமிலி ரூமில் பிள்ளைகளுக்கான கட்டில் மேலே மடிக்கப் பட்டு இருந்தது.. ஏறிப் படுக்க வேண்டும் பங் பெட் போல:)
பதிலளிநீக்கு//நல்லா இருக்குதா ஆச்சி வீடு?//
ஏன் உங்களை ஆச்சி என்றோ கூப்பிடுவார்?[ நீங்க பெரியம்மா போல இருக்கிறீங்க.. உங்களை ஆச்சி என வயசானவராக்கிட்டார்ர்ர் பேரன்:) ஹா ஹா ஹா] இக்காலத்தில் ஆரும் ஆச்சி என்பதில்லையே.. பாட்டி அல்லது அப்பம்மா அதையும் தாண்டி கிரான்மா என்றெலோ வந்துகொண்டிருக்கு ஹா ஹா ஹா..
அந்தக் குருவி ரொம்ப அழகு.. அழகிய ட்ரிப்.. வாழ்த்துக்கள். செல்லங்கள் கூட்டிலே இருப்பவையும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//இப்படி படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டால் எப்போதும் எங்கிருந்தாலும் யாருக்கும் காண்பிக்கலாம் நாமும் பார்த்து மகிழலாம்... நல்ல முயற்சி... படங்கள் அருமை//
நீங்கள் சொல்வது சரிதான் , அப்படித்தான் என் உறவினர்களும், நண்பர்களும் பார்க்கிறார்கள்.
நானும் குழந்தைகள் நினைவு வந்தால் அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அடிக்கடி வாருங்கள் பதிவுக்கு.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//பேரன் தாத்தா பாட்டியுடன் மகிழ்வது தெளிவாகத்
தெரிகிறது.//
எங்களுக்கும் மகிழ்ச்சி, அவனுக்கும் மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துக்கள என்றும் மகிழ்ச்சி தரும், நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் அருமை. அதுவும் அந்த வீடு தனித்துத் தெரிவதும் ஆகாயத்தில் தெரியும் நிலவும் ஏதோ ஒரு கோள்? மிக அற்புதமாகப் படம் எடுத்திருக்கீங்க. அதை அடுத்த நிலவும் அழகோ அழகு! அருமையான பயணம். நினைவுகள். குழந்தைகள் இருந்தாலே வீடு கலகலப்புத் தான்.
பதிலளிநீக்கு//ஏன் உங்களை ஆச்சி என்றோ கூப்பிடுவார்?[ நீங்க பெரியம்மா போல இருக்கிறீங்க.. உங்களை ஆச்சி என வயசானவராக்கிட்டார்ர்ர் பேரன்:) ஹா ஹா ஹா] இக்காலத்தில் ஆரும் ஆச்சி என்பதில்லையே.. பாட்டி அல்லது அப்பம்மா அதையும் தாண்டி கிரான்மா என்றெலோ வந்துகொண்டிருக்கு ஹா ஹா ஹா..//
பதிலளிநீக்குஅதிரடி ஞானி, திருநெல்வேலிப்பக்கம் தந்தை வழிப்பாட்டியை "ஆச்சி" என்பார்கள். தாய் வழிப்பாட்டியையும் அப்படிச் சொல்வார்களா தெரியலை! மதுரைப்பக்கம் தாய் வழிப்பாட்டி எனில் அம்மாச்சி, தந்தை வழிப்பாட்டி எனில் அப்பத்தா என்பார்கள்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//கோமதி அக்கா இம்முறை, அதிராவைக் காட்டிலும் அதிக படங்கள் போட்டிருக்கிறா.. அழகிய மரத்தாலான கொட்டேஜ் மிக அழகு... முன்னால் நிற்கும் மரம் பார்க்க முருங்கி:) இலைபோல இருக்கு:).//
ஓ! அதிராவைவிட அதிகமா?
முருங்கி !முருங்கை மரத்தை சொல்கிறீர்களா? இல்லை.
அங்கு அமைத்து இருக்கும் ஒவ்வொரு வீடும் அழகு. அதை எல்லாம் பகிர்ந்தால் பதிவு மிக பெரிதாக ஆகிவிடும்.
சென்னையிலும் இம்மாதிரி சமைத்துச் சாப்பிட்டுத் தங்கிச் செல்லும் இடங்கள் இருக்கின்றன. கும்பகோணத்திலும் உள்ளன.
பதிலளிநீக்கு//கண்ணாடியில் அவனும் நானும் தெரிகிறோம்//
பதிலளிநீக்குநான் என்றால் அது அவனும் நானும் ஹா ஹா ஹா..:)).
சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதாபாடும் பாடல் நினைவுக்கு வந்து விட்டதா அதிரா?
//மேலும் கீழுமாய் ஒடி விளையாடினான் பேரன்.//
குழந்தைகள் எனில் அப்படித்தான் இருப்பார்கள்.. ஓடி ஓடி ஆராட்சி நடக்கும்..
குழந்தைகள் ஓடி ஓடி ஆராட்சி நடத்தும் தான்.
//தாத்தாவின் ரூம் வசதியாக இருக்கிறதா என்று செக் செய்கிறான்//
பதிலளிநீக்குஅவன் முன்பு வந்து இருக்கிறான், எங்களுக்காக மீண்டும் வருகிறான் அதனால் அதை எல்லாம் சொல்லி தருகிறான்.
//இந்தப் படத்திலே நீங்க மெலிஞ்சதுபோல இருக்கிறீங்க கோமதி அக்கா.. ரயேட்ட் ஆக இருக்குமோ.. பேரன் தான் உங்களிருவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்..//
இரண்டு மூன்று ஸ்வொட்டர் போட்டு பக்கத்தில் எடுத்த படத்தில் குண்டாக தெரிந்து இருப்பேன், அதுவும் மகன் வீட்டுக்கு போன உடன் போன பயணம்
அடுத்த பயணத்தில் குழந்தைகளுடன் இருந்த பூரிப்பும், மருமகளின் சமையல் சாப்பிட்டதும் குண்டாகி இருப்பேன்.
//பேரன் எப்படி தமிழ் நன்றாகப் பேசுவாரோ?//
நன்றாக பேசுவான். தமிழ் பள்ளி சென்று தமிழ் கற்கிறான்.
அவன் அம்மாவும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை.
ஆவ்வ்வ்வ் எந்தாப்பெரிசூஊஊஊஊஉ.. உற்றுப் பார்த்தேன் கோமதி அக்கா.. நிலவின் வலப்பக்கம் பாருங்கோ ஒரு மீசை வைத்த ஆணின் முகம் சைட்டால தெரியுது.. ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோலவும் இருக்கு.. வேறு ஆருக்காவது அது தெரியுதோ தெரியல்லியே..
பதிலளிநீக்குஆஹா! அதிராவின் ரசிப்பு அருமை.நீங்கள் சொன்னபின் பார்த்தேன்.
எனக்கும் நிலாவில் தெரியும் உருவத்தை தேட பிடிக்கும். எனக்கு கையை கட்டிக் கொண்டு தலைநிமிர்ந்து பார்க்கும் ஆணின் உருவம் தெரிந்தது.
கைகட்டிக் கொண்டு இருப்பது உங்களுக்கு குழந்தையை கையில் வைத்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது.
இதேபோல்தான் நாங்களும் தங்கிய ஒரு ஹோட்டலில் ஃபமிலி ரூமில் பிள்ளைகளுக்கான கட்டில் மேலே மடிக்கப் பட்டு இருந்தது.. ஏறிப் படுக்க வேண்டும் பங் பெட் போல:)
பதிலளிநீக்குஹோட்டலில் மட்டும் இல்லை வீடுகளிலும் இது போன்ற பங் பெட் வந்து விட்டது.
அமெரிக்காவில் நிறைய வீடுகளில் இருந்தது.
எங்க மாமா என்ற படத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்துவார் சிவாஜி அதில் இது போன்ற படுக்கைகளில் குழந்தைகள் படுத்து இருக்கும், பழைய சினிமாக்களில் இது போன்ற படுக்கைகள் காட்டுவார்கள். சரோஜாதேவி நடித்த படத்தில் ஒரு பாடலில் இடம்பெறும்.
ஹாஸ்டல், அப்புறம் ஆழியார் அறிவுதிருக்கோவில் போன்ற இடங்களில் பார்த்து இருக்கிறேன். இட நெருக்கடியை சமாளிக்க இது போன்று இருக்கிறது.நாங்கள் சிறு வயதில் ரெயில் பெட் என்று பேர் வைத்தோம்.
//நல்லா இருக்குதா ஆச்சி வீடு?//
//ஏன் உங்களை ஆச்சி என்றோ கூப்பிடுவார்?[ நீங்க பெரியம்மா போல இருக்கிறீங்க.. உங்களை ஆச்சி என வயசானவராக்கிட்டார்ர்ர் பேரன்:) ஹா ஹா ஹா] இக்காலத்தில் ஆரும் ஆச்சி என்பதில்லையே.. பாட்டி அல்லது அப்பம்மா அதையும் தாண்டி கிரான்மா என்றெலோ வந்துகொண்டிருக்கு ஹா ஹா ஹா..//
எங்கள் வீடுகளில் ஆச்சி என்று தான் கூப்பிடுவோம். அப்பாவை பெற்ற அம்மாவும் ஆச்சிதான், அம்மாவைப் பெற்ற அம்மாவும் ஆச்சிதான்.
தேவகோட்டை, கரைக்குடி பக்கம் ஆச்சி என்றால் அக்கா.
தஞ்சை பக்கம் ஆச்சி என்றால் மரியாதையான அழைப்பு.
கோவை பக்கம் அம்மினி என்பது போல்.
//அந்தக் குருவி ரொம்ப அழகு.. அழகிய ட்ரிப்.. வாழ்த்துக்கள். செல்லங்கள் கூட்டிலே இருப்பவையும் அழகு.//
பதிலளிநீக்குஅழகிய ட்ரிப் தான் அதிரா.
செல்லங்கள் கூட்டிலே அங்கு, இங்கும் அலைந்து கொண்டு நம்மைப் பார்த்து சத்தம் கொடுத்ததும் நன்றாக இருந்தது.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்களும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் அருமை. அதுவும் அந்த வீடு தனித்துத் தெரிவதும் ஆகாயத்தில் தெரியும் நிலவும் ஏதோ ஒரு கோள்? மிக அற்புதமாகப் படம் எடுத்திருக்கீங்க. அதை அடுத்த நிலவும் அழகோ அழகு! அருமையான பயணம். நினைவுகள். குழந்தைகள் இருந்தாலே வீடு கலகலப்புத் தான்.//
ஆமாம் , இரவு நேரம் அந்த வீடும், நிலவும் மிக அழகாய் இருந்தது, குளிர்காற்று நிலாவர நேரம் ஆனது இருந்தாலும் காத்திருந்து நானும் மகனும் நிறைய படங்கள் எடுத்தோம். மகன் எடுத்த படங்கள் இன்னும் அழகு.
குழந்தைகள் இருந்தால் வீடு கலகலப்புதான்.
நம் குழந்தைகள் சின்னவர்களாய் இருக்கும் போது எப்படி மகிழ்ந்தோம் , அது போல் அவர்கள் குழந்தைகளும் மகிழ்ச்சியை தருகிறார்கள். ஆனால் ஸ்கைப்பில் பார்த்து மகிழ வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
அவர்கள் வரும் காலம் நமக்கு சொர்க்கம்.
//அதிரடி ஞானி, திருநெல்வேலிப்பக்கம் தந்தை வழிப்பாட்டியை "ஆச்சி" என்பார்கள். தாய் வழிப்பாட்டியையும் அப்படிச் சொல்வார்களா தெரியலை! மதுரைப்பக்கம் தாய் வழிப்பாட்டி எனில் அம்மாச்சி, தந்தை வழிப்பாட்டி எனில் அப்பத்தா என்பார்கள்.//
பதிலளிநீக்குஎங்கள் பக்கம் இரண்டு வழி பாட்டிகளும் ஆச்சிதான். வயதானவர்கள் எல்லாம் ஆச்சிதான் கீதா.
//சென்னையிலும் இம்மாதிரி சமைத்துச் சாப்பிட்டுத் தங்கிச் செல்லும் இடங்கள் இருக்கின்றன. கும்பகோணத்திலும் உள்ளன.//
பதிலளிநீக்குநாங்கள் கும்பகோணத்தில் இப்படி தங்கும் விடுதியில் தங்கி இருக்கிறோம்.
பழைமையை தேடி என்று முகநூலில் பகிர்ந்தேன்.
அழகான இடம்.
வலைத்தளத்தில் போடவில்லை. போட வேண்டும்.
திண்ணை வைத்த வீடு, டீக்கடை பெஞ்ச், போஸ்ட்பாக்ஸ், நீர் இறைக்கும் கமலை எல்லாம் வைத்து பழையதை காட்சி படுத்தும் தங்கும் விடுதி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
//நிலவின் வலப்பக்கம் பாருங்கோ ஒரு மீசை வைத்த ஆணின் முகம் சைட்டால தெரியுது.. ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோலவும் இருக்கு.. வேறு ஆருக்காவது அது தெரியுதோ தெரியல்லியே..//
பதிலளிநீக்குமீண்டும் பார்த்தேன் அதிரா, மீசை வைத்த ஆண் குழந்தையை கையில் வைத்து கொஞ்சுவதை. நன்றி.
படங்களும் தகவல்களும் அருமை! மகனுடனோ அல்லது மகளுடனோ கழித்த காலங்கள் வேறு மாதிரி! ஆனால் பேரனுடன் அல்லது பேத்தியுடன் கழிக்கும் பொழுதுகள் இன்னொரு சொர்க்கம்! அதை தாத்தாவும் ஆச்சியுமாக இருவரும் பேரனுடன் அனுபவித்திருப்பது படங்கள் வழியே தெரிகிறது! அருமை!
பதிலளிநீக்குஎன் பேரன் தாத்தா என்பதற்கு சரியான ஜோடி தாதி என்பது தான் என்று என்னை எப்போதும் தாதி என்று தான் அழைப்பார்! [ வட மாநிலங்களில் பாட்டியை தாதி என்று தான் அழைப்பது வழக்கம்] பழக்க வழக்கங்களை விடவும் அன்பு அதிகமாகத்தெரியும் இந்த அழைப்பில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்!
வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//படங்களும் தகவல்களும் அருமை! மகனுடனோ அல்லது மகளுடனோ கழித்த காலங்கள் வேறு மாதிரி!//
ஆமாம் , நீங்கள் சொல்வது உண்மை.
கண்டிப்பு கலந்த அன்பு அதில்.
//ஆனால் பேரனுடன் அல்லது பேத்தியுடன் கழிக்கும் பொழுதுகள் இன்னொரு சொர்க்கம்!//
உண்மை. அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் சொர்க்கம் தான். அவர்கள் வரும் நாள் வசந்தகாலம்.
//என் பேரன் தாத்தா என்பதற்கு சரியான ஜோடி தாதி என்பது தான் என்று என்னை எப்போதும் தாதி என்று தான் அழைப்பார்! [ வட மாநிலங்களில் பாட்டியை தாதி என்று தான் அழைப்பது வழக்கம்] பழக்க வழக்கங்களை விடவும் அன்பு அதிகமாகத்தெரியும் இந்த அழைப்பில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்!//
தாதி நன்றாக இருக்கிறது.'நானா, நானி என்றும் வட நாட்டில் சொல்வார்கள். அப்பா, அம்மா பெற்றோர்களை தனித்து காட்ட தாதிம்மா, நானிம்மா என்று.
நீங்கள் சொல்வது போல் எப்படி அழைத்தாலும் அன்புடன் அழைத்தால் போதும்.
அன்புதான் நமக்கு தெம்பு தரும் டானிக்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வாவ்...ரொம்ப அழகா இருக்கு மா விடுதி...
பதிலளிநீக்குஎல்லா படங்களுமே வெகு அழகு...
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
GRAND பற்ற்ய செய்திகளை எதிர்பார்த்தேன் அதைவ்ட நினைவில் பேரனுடந்தங்கிய நினைவே உங்களுக்கு படங்களே பதிவாகநன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குGrand Canyon போஸ்ட் போட்டு விட்டேன் முன்பே.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Blogger ராஜி said...
பதிலளிநீக்குஇது விடுதியா?! இல்ல இதுதான் விடுதியா?!
வந்து போனதுக்கு அடையாளமாய் சுவத்தில் ஒரு பேர் இல்ல. பான்பராக் கறை இல்ல. பாதி எரிஞ்ச கொசுவத்தி இல்ல.... இப்படி இல்லாதது நிறைய இருக்கு
July 11, 2018 at 7:32 PM Delete
வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇந்த பதிவுக்கு வர வேண்டிய பின்னூட்டத்தை ஜன்னல் வழியே பதிவில் போட்டு விட்டீர்கள். அதை எடுத்து இங்கு ஒட்டி இருக்கிறேன்.
//வந்து போனதுக்கு அடையாளமாய் சுவத்தில் ஒரு பேர் இல்ல. பான்பராக் கறை இல்ல. பாதி எரிஞ்ச கொசுவத்தி இல்ல.... இப்படி இல்லாதது நிறைய இருக்கு//
ஆமாம் ராஜி, நீங்கள் சொல்வது போல் இவை எல்லாம் இல்லாமல் காட்சி அளிக்கிறது விடுதி.
உங்கள் கருத்துக்கு நன்றி .
துளசி: தங்கும் விடுதியா அது? பிரமிப்பைத் தருகிறது. பேரனுடன் ரொம்பவே எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. படங்கள் எல்லாம் மிக மிக அழகு. இப்படி எல்லாம். இங்கு இருந்தாலும் கட்டணம் ரொம்பவே அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா: அக்கா செம படங்கள். காட்டேஜ் ரொம்ப அழகா இருக்கு....இதோ வரேன் இன்னும் கமென்ட் போட....செல்லம் வெயிட்டிங்க் அழைத்துப் போணூம் வெளியில்
காட்டேஜின் ஒவ்வொரு அறையும் அழகு அழகு! நீங்கள் பேரன் தாத்தா எல்லாம் அழகாக இருக்கின்றன. மகிழ்வான தருணங்கள்.
பதிலளிநீக்குவீடும் நிலவும்// வாவ்! இப்படி ஒரு சில இடங்களில் நல்ல பெரிதாகத் தெரியும். அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் பாடல் நினைவுக்கு வந்தது!
தங்கும் விடுதியில் அனைத்து வசதிகளும் இருப்பது அறிந்த விஷயம் என்றாலும் இப்போது உங்க புகைபப்டங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கும் இப்படியான ரெசார்ட்ஸ் இருக்கு. சுத்தமாகவும் இருக்கும் ஆனா வாடகை கொஞ்சம் அதிகம். அங்கு ரொம்பவே சுத்தமாக இருக்கின்றன...
மரப்படிக்கட்டுகள் ஆம் அக்கா நாங்கள் கிராமத்தில் இருந்த பாட்டி வீட்டில் கூட மரப்படிகள்தான். இப்போதும் கேரளத்து வீடுகளில் மரப்படிகள் உள்ள பழைய வீடுகள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடிக்கும்...அங்கு நிலநடுக்கம் வரும் பல இடங்களில் வீடுகளே லைட் வெயிட் மரக்கட்டைகளினால் கட்டியிருப்பார்கள். கலிஃபோர்னியாவிலும் கூட பெரும்பாலும் மரத்தில் கட்டப்ப்ட்ட வீடுகள் எனவே நடந்தால் கீழ்வீட்டிலிருப்போருக்குச் சத்தம் கேட்கும். அதனாலேயே நாம் அதிகாலை எழும் பழக்கம் இருந்தாலும் ரொம்பவே மெதுவாகத்தான் செய்யணும் எல்லாம்.இல்லைனா கீழிருந்து வந்து சொல்வார்கள்.
பேரன் ரொம்ப க்யூட். உங்களுடன் சேர்ந்து பறவையை ரசித்தல் எலலம் அருமை அக்கா. குருவி அழகோ அழகு..
அக்கா நானும் முன்பு கேமராவில் எடுத்தவற்றை உடனேயெ கணினிக்கு மாற்றிவிடுவேன் ஆம் அப்பத்தானே அடுத்து எடுக்க முடியும்...இப்ப மொபைலில் எடுத்தால் அது சில சமயம் சுமாராக வந்தாலும் ரெசிப்பி மட்டும்தானெ எடுக்கிறேன் பெரும்பாலும்... உடனே கணினிக்கு மாற்றிடுவேன் மொபைல் மெமரியைப் பாதுகாக்க...
200 ஆண்டுகள் முந்திய மரம் கல்லாக// ரொம்ப அழகா இருக்கே...பார்க் எல்லாம் ஹப்பா எவ்வளவு வசதிகள் குழந்தைகளுக்கும் பொழுது போக வேண்டு களிக்க வேண்டி..என்று...
என் மகனும் சிறு வயதில் எறும்புகள் கூடு கட்டுவது உணவு எடுத்துச் செல்வது, இவன் சாக்கலேட் சர்க்கரை என்று போட்டு அதை அவை எடுத்துச் செல்வதைப் பார்த்து எனக்குக் காட்டுவது நினைவுக்கு வந்தது உங்கள் பேரன் அப்படி எஞ்சாய் செய்து பார்ப்பது....
நிறைய பேர் சகல வசதியும் உள்ள காரவேனில் வந்து இருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் வசதி, சமைக்க மின்சார வசதி எல்லாம் செய்து கொடுக்கிறது விடுதி.// அட பொட வைத்தது...எத்தனை வசதிகள்!!!
செல்லங்களை கூண்டில் விட்டு அதுவும் அங்கு எல்லா இடங்களிலும் இருப்பது தெரியும் பெரும்பாலும் அனுமதி உண்டு.
சமைஅய்ல் செய்து எடுத்துக் கொண்டது நல்ல வசதி..உபயோகமாக இருக்கும்...
அந்த மேசை மேல் இருப்பது இப்ப வரும் ஹேண்டி ரைஸ் குக்கர் போல இருக்கே அக்கா. அதிலேயே அரிசி காய் எல்லாம் போட்டும் எங்கு செல்கிறோமோ அங்கே போனதும் ப்ளக்கில் செருகி தண்ணீர் விட்டு வைத்துவிட்டால் சாதம் ரெடி என்பது போல்...அந்தக் குக்கரா ப்ளெய்ன் சாதம் செய்து வைத்து எடுத்துச் சென்றீர்கள். அந்த ரைஸ் குக்கர் மிகவும் பயனுள்ளதாகக் கேள்விப்பட்டேன் இப்படியான பயணங்கள், ஆஃபீஸிற்கும் கூட...
அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
அதிர்ஸ், எங்கள் ஊர்ப்பக்கங்களில் திருநெல்வேலியில் ஆச்சி என்று தான் சொல்வார்கள். உங்களைக் கூட நம்ம மதுரை ஆச்சி அதிரா என்று சொல்லியிருந்தாரே...ஹிஹிஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? தங்கள் பதிவை தாமதமாக படிக்கிறேன். (தங்களுடையது மட்டுமல்ல இனிதான் அனைவரது அனைத்து விட்டுப்போன பதிவுகளையும் வாசிக்க வேண்டும்.)
தங்களுடைய படம் எடுக்கும் ஆவல் எனக்கு மகவும் வியப்பளிக்கிறது. அனைத்தும் மிக நேர்த்தியாக அழகான முறையில் எடுத்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
தங்கும் விடுதி அவ்வளவு அற்புதமாக உள்ளது. விடுதிக்கான வாடகை மிகவும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் விவரித்து சொல்லிப்போனதில், நானும் உடனிருந்து அந்த விடுதியின் அழகை ரசித்து உங்கள் பேரனின் விளையாட்டுகளில் பங்கேற்று கண்டு களித்து நல்ல உணவை காரசாரமாக சாப்பிட்ட வரை அனைத்தும் திருப்தியாக கிடைத்தது. நன்றி
கல்லான மரம் ஆச்சரிய மூட்டுகிறது. நிலவும் பறவைகளும் மிக அழகாக உள்ளது.அத்தனைப்படங்களும் மிக அழகு.
அங்கிருந்து மேலும் நிறைய கல்லாக இருக்கும் மரங்களை பார்க்கச் சென்றீர்களா? தங்களின் அன்றைய மகிழ்ச்சிக்கு விலை ஏது? தங்கள் அனுபவங்களை பகிரும் போதே தங்கள் மகிழ்ச்சி தங்களிடம் தெரிவது மட்டுமின்றி எங்களுக்கும் தொத்திக் கொள்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதுளசி: தங்கும் விடுதியா அது? பிரமிப்பைத் தருகிறது. பேரனுடன் ரொம்பவே எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. படங்கள் எல்லாம் மிக மிக அழகு. இப்படி எல்லாம். இங்கு இருந்தாலும் கட்டணம் ரொம்பவே அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.//
அழகான இடம் இயற்கை காட்சிகள் அமைதியான இடம் எல்லாம் அழகுதான்.
கட்டணம் எவ்வளவு என்று சொல்லவில்லை மகன். வசதிகள் எல்லாம் இருக்கும் போது கட்டணம் அதிகமாய்தான் இருக்கும்.
//கீதா: அக்கா செம படங்கள். காட்டேஜ் ரொம்ப அழகா இருக்கு....இதோ வரேன் இன்னும் கமென்ட் போட....செல்லம் வெயிட்டிங்க் அழைத்துப் போணூம் வெளியில்//
காலை நேரம் செல்லத்தை வெளியில் அழைத்து செல்ல வேண்டும் தான்.
வாங்க கீதா மெதுவாய்.
நானும் நேற்று உறவினர் வருகையால் கணினி பக்கம் வரவில்லை.
பதிலளிநீக்கு//காட்டேஜின் ஒவ்வொரு அறையும் அழகு அழகு! நீங்கள் பேரன் தாத்தா எல்லாம் அழகாக இருக்கின்றன. மகிழ்வான தருணங்கள்.
ஆமாம் கீதா, மகிழ்வான தருணங்கள்தான்.
வீடும் நிலவும்// வாவ்! இப்படி ஒரு சில இடங்களில் நல்ல பெரிதாகத் தெரியும். அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் பாடல் நினைவுக்கு வந்தது!//
பாடல் நினைவுக்கு வந்து விட்டதா? நல்ல பாடல்.
//மரப்படிக்கட்டுகள் ஆம் அக்கா நாங்கள் கிராமத்தில் இருந்த பாட்டி வீட்டில் கூட மரப்படிகள்தான். இப்போதும் கேரளத்து வீடுகளில் மரப்படிகள் உள்ள பழைய வீடுகள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடிக்கும்...//
ஆழ்வார்குறிச்சியில் என் மாமனாரின் அப்பாவீட்டில் இப்படியான மரப்படிகள் உள்ள மச்சு இருக்கும்.
அமெரிக்காவில் எல்லாம் மரவீடுகள் தானே! குளிர், மற்றும் பல காரணங்களால் மரத்தில் தானே கட்டப்படுகிறது. மாடியில் நடந்தால் கீழே சத்தம் கேட்கும் தான்.
மகன் வீடு கீழும் மேலும் உள்ள அமைப்பு.
//அந்த மேசை மேல் இருப்பது இப்ப வரும் ஹேண்டி ரைஸ் குக்கர் போல இருக்கே அக்கா. அதிலேயே அரிசி காய் எல்லாம் போட்டும் எங்கு செல்கிறோமோ அங்கே போனதும் ப்ளக்கில் செருகி தண்ணீர் விட்டு வைத்துவிட்டால் சாதம் ரெடி என்பது போல்...அந்தக் குக்கரா ப்ளெய்ன் சாதம் செய்து வைத்து எடுத்துச் சென்றீர்கள். அந்த ரைஸ் குக்கர் மிகவும் பயனுள்ளதாகக் கேள்விப்பட்டேன் இப்படியான பயணங்கள், ஆஃபீஸிற்கும் கூட...//
அதில் ஒறுநாள் வெஜிடெபிள் பிரியாணி செய்து கொண்டு போனோம், சாம்பார் சாதம் செய்தோம், பால் காய்ச்சி உறைஊற்றிக் கொள்ளலாம். பல வசதி கொண்ட குக்கர்தான் கீதா.
பதிவு முழுவதையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுலதெய்வ வழிபாடுகள் நிறைவு செய்து வந்து விட்டீர்களா?
நாங்கள் நலம்.நீங்கள் நலம்தானே?
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//தங்கும் விடுதி அவ்வளவு அற்புதமாக உள்ளது. விடுதிக்கான வாடகை மிகவும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் விவரித்து சொல்லிப்போனதில், நானும் உடனிருந்து அந்த விடுதியின் அழகை ரசித்து உங்கள் பேரனின் விளையாட்டுகளில் பங்கேற்று கண்டு களித்து நல்ல உணவை காரசாரமாக சாப்பிட்ட வரை அனைத்தும் திருப்தியாக கிடைத்தது. நன்றி//
உடன் வந்து ரசித்தமைக்கு நன்றி கமலா.
//கல்லான மரம் ஆச்சரிய மூட்டுகிறது. நிலவும் பறவைகளும் மிக அழகாக உள்ளது.அத்தனைப்படங்களும் மிக அழகு. //
இனி வரும் கல்லான மரங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.
//தங்கள் மகிழ்ச்சி தங்களிடம் தெரிவது மட்டுமின்றி எங்களுக்கும் தொத்திக் கொள்கிறது.//
மகிழ்ச்சி ஒறுவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ வேண்டும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு ஏது!
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.