புதன், 9 மே, 2018

மணிப்புறாவும் குஞ்சுகளும்

இந்த மணிப்புறா   படம் நான் மகன் வீட்டுக்குப் போனபோது எடுத்தபடம்

இரண்டு முட்டைகள்.


மகன் வீட்டில் தோட்டத்தில்  (அரிசோனா) போகன்வில்லா(காகிதப்பூ )கொடிக்கிடையில்  மணிப்புறா கூடு கட்டி முட்டையிட்டு இருப்பதை  போட்டோ எடுத்து அனுப்பினான் . எனக்குப் பிடிக்கும் என்று.

 குஞ்சு பொறித்தவுடன் பார்த்து படம் எடுத்து அனுப்பு என்றேன் அதன் வளர்ச்சிகளைப் படிப்படியாக அனுப்பினான். பேரன் தினமும்  பார்த்து அதன் வளர்ச்சிகளை மகிழ்ச்சியுடன் சொல்வான், பெரிதானபின்னே சொல்லும் போது  இரண்டு குஞ்சும் அம்மா மாதிரி ஆகி விட்டது என்றான்.
எந்த மறைப்பும் இல்லாமல் தெரிகிறது முட்டைகள்

பின்னால்  ஊஞ்சல் கட்டி இருக்கும்  இடம்.  அதன்   அருகில் இருக்கும் தூணில் போகன்வில்லா கொடி சுற்றி இருக்கும். மிகவும் பக்கத்தில் கூடு கட்டி இருப்பதால் பின் பக்கம் போவதைக்  கூடுமானவரை தவிர்த்து வந்து இருக்கிறார்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற, பறவை இரை தேடப் போகும் போது போய் தண்ணீர்  ஊற்றி விட்டு உணவும் தண்ணீரும் பறவைகளுக்கு வைப்பதை வைத்துவிட்டு வருவார்களாம். நிறைய பறவைகள் வரும் தோட்டத்திற்கு.


அடைகாக்க ஆரம்பித்து விட்டது.

கறுப்புப் பூனை ஒன்று அடிக்கடி தோட்டத்திற்கு வரும், இரவு ஆந்தை வரும், காலையில் கழுகு வரும். அவைகளிடமிருந்து எப்படி தப்பித்து அவை பெரிதாகும் என்று கவலை ப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
குஞ்சுகள் கொஞ்சம் பெரிதாகி விட்டன.
குஞ்சுகளின் மூச்சுத் துடிப்பு தெரியுது.
அம்மாவின் வரவைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
வெயிலில் முகம் காட்டாமல் குனிந்து இருக்கிறது.

உணவைக் குஞ்சுக்கு ஊட்டும் போது இரண்டுகுஞ்சும் தாயின் வாயில் உணவு எடுக்கும் காட்சி
மாடி பால்கனியிலிருந்து எடுத்த படம்
தோட்டத்தில் வந்து பின் பக்கமிருந்து எடுத்தபடம்.  குஞ்சைப் பாதுகாக்க பயப்படாமல் அமர்ந்து இருக்கிறது.
அம்மா வெளியே போய் இருக்கும்போது எடுத்த படம்
அதன் இறகுகள் அழகாய் இருக்கு இல்லையா?
ஒரே போல் பார்வை
ஒரு குஞ்சு அம்மாவின் அடியில்.

சிறகுகள் முளைத்து விட்டால் பறந்து போய்விடும்தானே! 
இரண்டு நாள் முன் பறந்து போய் விட்டது போல என்றான்,  தாய்ப் பறவை மட்டும் கூட்டில் இருந்ததாம் சிறிது  நேரத்தில் அதுவும் பறந்து போய் விட்டதாம். எங்கிருந்தாலும் நலமாய் இருக்கட்டும்.

                                                           வாழ்க வளமுடன்!
                                                              ------------------------



43 கருத்துகள்:

  1. கோமதிக்கா இனிய மாலை வணக்கம்!! நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...

    ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குஞ்சு பொறித்தவுடன் பார்த்து படம் எடுத்து அனுப்பு என்றேன் அதன் வளர்ச்சிகளைப் படிப்படியாக அனுப்பினான். பேரன் தினமும் பார்த்து அதன் வளர்ச்சிகளை மகிழ்ச்சியுடன் சொல்வான், பெரிதானபின்னே சொல்லும் போது இரண்டு குஞ்சும் அம்மா மாதிரி ஆகி விட்டது என்றான்.//

    இப்படி ஒரு பாட்டி இருந்தால் பேரன் நன்றாக வளர்வார்!!! இதுதான் பாட்டி பேரன் பேத்தி உறவு என்பது...ரசித்தேன்...இதோ மாமியாருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வரேன் அக்கா.ஒவ்வொன்றாய் ரசிக்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மாலை வணக்கம்.
    நீங்கள் தான் முதலில் வந்தது.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. அழகிய தொகுப்பு எங்கிருந்தாலும் வாழ்க!

    ஆம் அவைகளும் வாழப்பிறந்தவைகளே...

    பதிலளிநீக்கு
  5. கீதா, கடமையை முடித்து விட்டு வாருங்கள்.

    நான் மகன் ஊருக்கு போய் இருக்கும் போது பேரனும் நானும் தோட்டத்துக்கு வரும் பறவைகளை பார்த்து மகிழ்வோம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கோமதிக்கா கடமை முடித்து வந்துட்டேன்....அக்கா உங்கள் மகனும் ஒவ்வொரு நிலையையும் எடுத்துப் படம் மற்றும் காணொளி அனுப்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    என்ன அழகு அக்கா! அதுவும் அம்மா வெளியில் போயிருக்கும் போது எடுத்த படங்கள் என்ன அழகு...அதன் இறகு கண்கள் எல்லாம். நல்ல வளர்ச்சி...திருஷ்டி சுத்திப் போடணும். இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவை நன்றாக வளர்ந்து அவற்றின் காலம் முடியும் வரை வாழ்ந்திட வேண்டும் என்று.

    அம்மாவின் அடியில் இருப்பதும் ஆஹா!! ரசித்தேன் அம்மா குழந்தைகள்!! அந்தப் பாசம்..அதுவும் அது தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது அருமை. தோட்டம் அழகாக இருக்கிறது போகைன்வில்லாவுடன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. குஞ்சுகள் துடிக்கும் காணொளியும், தாய் குஞ்சுகளுக்கு உணவு அளித்தலும் குஞ்சுகள் அதன் வாயிலிருந்து எடுப்பதும் அழ்கோ அழகு...மிகவும் ரசித்தேன் அனைத்து படங்களையும் கோமதிக்கா...இயற்கையின் படைப்பே படைப்புதான் இல்லையா?!

    ரொம்பவே ரசித்தேன் அக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி

    அழகான தாய் பாச உறவுகளை அருமையாய் படம் எடுத்து அனுப்பியிருக்கிறார் தங்கள் மகன். தங்கள் பேரனும் அவற்றின் வளர்ச்சிகளை தங்களுக்கு விவரித்துக் கூறி வாவ்... உறவுகளும், அன்புகளும் ஒருமனதாய் ஒன்று சேர்ந்த விதம் நெகிழ்த்தியது. தங்கள் மகன் மருமகள் பேரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    படங்கள் மிகவும் அழகாயிருந்தது. படிபடியாக வளர்ச்சியடைந்த பறவைகளும் மிக அழகு. நம் கண்களிலிருந்து மறைந்து விட்டாலும், மனதிலிருந்து மறையாத பாசமிகு பறவைகள் நலமே வாழ பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொன்னது போல் அவைகளும் வாழபிறந்தவர்கள் தான்.
    எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.
    அருமையான வாழ்த்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  10. வாங்க கீதா, ஏபரல் மாதம் முட்டையிட்டது, அதற்குள் இவ்வளவு வளர்ச்சி பறந்தும் போய்விட்டது.

    சில படங்களை கண்ணாடி கதவு வழியேதான் எடுத்து இருக்கிறான்.

    தூக்கணாங்குருவிகள் கூடு கட்டுவதில் 100சதவீதம் புத்திசாலி என்றால் மணிப்புறா 0 சதவீதம் முட்டாள் என்கிறார்கள்.

    இவை கூடு கட்ட தெரியாமல் கூடு கட்டி குஞ்சுகளை இழந்து விடுமாம்.
    மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யுமாம்.

    நல்லவேளை மகன் வீட்டில் கட்டிய மணிப்புறா மிகவும் கீழே ஏல்லோருக்கும் தெரிவது போல் கட்டி இருந்தாலும் நல்லவேளை பறக்கும் வரை எந்த இடையூரும் இல்லாமல் கடவுள் காப்பாற்றினார்.

    உங்கள் வாழ்த்துக்கள் படி அதன் ஆயுள் காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க கீதா, பற்வைகளின் அசைவை, தாயின் பாசத்தை, தோட்டத்தை ரசித்து
    அழகாய் கருத்து சொன்னத்ற்கு நன்றிகள்.
    இயற்கையின் படைப்பு என்றும் அற்புதம் தான்.

    உணவு உண்ணும் காட்சி நானும் ரசித்தேன்.
    குருவிகள் மேலும் கீழுமாய் இருக்கும் மேல் உள்ள குருவி நன்றாக சாப்பிட்டு சீக்கிரம் பெரிதாகி விடும் அடுத்து உள்ளது கொஞ்சம் தாமதமாய் பெரிதாகும்.
    இவை இரண்டும் அம்மாவிடம் ஒன்று போல் உணவு உண்பதால் இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறது வளர்ச்சி.

    உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.


    //தங்கள் மகன் மருமகள் பேரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு.

    // நம் கண்களிலிருந்து மறைந்து விட்டாலும், மனதிலிருந்து மறையாத பாசமிகு பறவைகள் நலமே வாழ பிரார்த்திக்கிறேன்.//

    நானும் உங்களுடன் பிரார்த்திக்கிறேன். நலமோடு வாழ வேண்டும்.

    உங்கள் அழகான கருத்துக்களுக்கு
    நன்றி கமலா.



    பதிலளிநீக்கு
  13. Uyirkalidathil anbu vendum,deivam unmai endru thanaridhal vendum - Bharathiyin varigal manathil odugindrana! Vaazhga!!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    பறவைகள் உங்களை அழைத்து வந்து விட்டதே!
    பாரதியின் கவிதை வரிகள் மனதில் வந்தது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தங்கள் மகன் புறாக் குஞ்சுகளின் வளர்ச்சியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக படமாக்கியிருப்பதைக் காண மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    தங்களது பேரனுக்கும் இயற்கையில் ஆர்வம் தழைத்து வருகின்றது..

    இப்படியாக ஒவ்வொருவரும் இயற்கையின் மீது காதல் கொண்டால்
    உண்மையிலேயே - காக்கை குருவி எங்கள் ஜாதி தான்!...

    மனிதம் செழிக்கட்டும்.. மண்ணுலகம் தழைக்கட்டும்...
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்தை வெகு நாட்களுக்கு பின் என் தளத்தில் பார்த்தது மகிழ்ச்சி.

    //ஒவ்வொருவரும் இயற்கையின் மீது காதல் கொண்டால்
    உண்மையிலேயே - காக்கை குருவி எங்கள் ஜாதி தான்!...//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.

    //மனிதம் செழிக்கட்டும்.. மண்ணுலகம் தழைக்கட்டும்...
    வாழ்க நலம்..//

    உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அச்சச்சோ என்ன கோமதி அக்கா இது.. எனக்கு இன்று போஸ்ட் பார்த்ததும் அப்படியே நிலத்தில் உருண்டு பிரளோணும்போல வருது.. அவ்ளோ ஆசையா இருக்கு... என்ன ஒரு அழகு... ஓபின் இடத்தில் எல்லோ கூடு கட்டி முட்டை போட்டிருக்கிறா, என்னா தைரியம்... எனக்கு நெஞ்சு பக்குப் பக்கென்றது முட்டையை வேறு பறவைகள் குடிச்சிடுமோ என. ஆனா பத்திரமாக அவை வளர்ந்து பறந்து விட்டன.. மகிழ்ச்சி.

    ஆனா இடைக்கிடை பிறந்த வீட்டுக்கு விசிட் பண்ணுவார்கள் என்றே நினைக்கிறேன். அப்பாப்புறா[மாடப்புறா] வைக் காணவில்லையே?.. சோடியாகவெல்லோ திரிவார்கள்?

    எங்கள் வளவில் ஒரு சோடிக் குண்டுப் புறாக்கள் வந்து போகும்:).. எங்கள் டெய்சிப்பிள்ளை அந்தக் குண்டுப்புறாவை தான் பிடிச்சிடுவாவாம் என வாலை ஆட்டிக் குறி வச்சு ஜம்ப் பண்ணுவா ஹா ஹாஅ ஹா..

    பதிலளிநீக்கு
  20. புறாக்களின் வயதுக்காலம் தெரியவில்லை. எங்கள் வளவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஒரு சோடிக் குண்டுப் புறாக்கள் வந்து போகின்றன. குஞ்சுகள் இல்லை.

    அதுக்கு காரணம் இங்கு மக்பை எனும் ஒரு பறவை இனம்[ஊர்க் கரிக்குருவி] இருக்கு அவை பொல்லாதவையாம், பறவை முட்டைகளைக் கண்டால் கொத்திக் குடிச்சிடுமாம்.

    இதேபோல சீகல்ஸ் உம் நிறைய வந்து போகும்.. அவையும் குஞ்சுகளைக் கொத்தி விடும் அதனாலோ என்னமோ புறாக்கள் பெருகவில்லை.

    வீடியோ அழகு. உங்கள் மகனும், உங்களைப்போல.. நம்மைப்போல[பறவை விலங்குகளை விரும்புவோர்] பொறுமையாக அவற்றைப் படம் எடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. மிக அருமையான காட்சிகள். ஹூஸ்டனில் பையர் வீட்டுத் தோட்டத்திலும் பறவைக்குஞுகள் பொரித்திருக்கின்றன. பையர் ஸ்கைப்மூலம் காட்டினார். அதே போல் பின் பக்கம் தோட்டத்திலும் முயல்கள் குழி தோண்டிக் குட்டி போட்டிருக்கின்றன. இதை முகநூலிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    //அச்சச்சோ என்ன கோமதி அக்கா இது.. எனக்கு இன்று போஸ்ட் பார்த்ததும் அப்படியே நிலத்தில் உருண்டு பிரளோணும்போல வருது.. அவ்ளோ ஆசையா இருக்கு..//

    சந்தோஷத்தில் தலை , கால் தெரியவில்லை என்பது இதுதானா?

    //என்ன ஒரு அழகு... ஓபின் இடத்தில் எல்லோ கூடு கட்டி முட்டை போட்டிருக்கிறா, என்னா தைரியம்... எனக்கு நெஞ்சு பக்குப் பக்கென்றது முட்டையை வேறு பறவைகள் குடிச்சிடுமோ என. ஆனா பத்திரமாக அவை வளர்ந்து பறந்து விட்டன.. மகிழ்ச்சி.//

    எங்களுக்கு அப்படித்தான் இருந்தது.
    பத்திரமாய் பறந்து போனது மகிழ்ச்சி.

    //ஆனா இடைக்கிடை பிறந்த வீட்டுக்கு விசிட் பண்ணுவார்கள் என்றே நினைக்கிறேன். அப்பாப்புறா[மாடப்புறா] வைக் காணவில்லையே?.. சோடியாகவெல்லோ திரிவார்கள்?//

    ஆமாம் அதிரா, ஒரு குஞ்சு இவர்கள் தோட்டத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது இன்று படம் அனுப்பினான். நான் நேற்று போஸ்ட் போட்டு விட்டேன். மீண்டும் இணைக்க வேண்டும் படத்தை.

    //அப்பாப்புறா[மாடப்புறா] வைக் காணவில்லையே?.. சோடியாகவெல்லோ திரிவார்கள்?//

    நானும் உங்களைப் போல் மகனிடம் கேட்டேன் வரவே இல்லையாம், தாய் பறவை மட்டுமே அடை காப்பது, உணவு கொடுப்பது எல்லாம் செய்ததாம்.





    பதிலளிநீக்கு
  23. வாங்க அதிரா, வாழ்க வளமுடன்.

    //புறாக்களின் வயதுக்காலம் தெரியவில்லை. எங்கள் வளவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஒரு சோடிக் குண்டுப் புறாக்கள் வந்து போகின்றன. குஞ்சுகள் இல்லை.//

    எனக்கும் தெரியவில்லை புறாக்களின் வயதுக்காலம். எங்கள் வளவில் வித விதமான மாடப்புறக்கள் உள்ளன. முக நூலில் போட்டு இருக்கிறேன் அதன் படங்களை.

    //அதுக்கு காரணம் இங்கு மக்பை எனும் ஒரு பறவை இனம்[ஊர்க் கரிக்குருவி] இருக்கு அவை பொல்லாதவையாம், பறவை முட்டைகளைக் கண்டால் கொத்திக் குடிச்சிடுமாம்.

    இதேபோல சீகல்ஸ் உம் நிறைய வந்து போகும்.. அவையும் குஞ்சுகளைக் கொத்தி விடும் அதனாலோ என்னமோ புறாக்கள் பெருகவில்லை.//

    ஆண்டவன் ஒன்று உணவாக ஒன்றை படைக்கிறான், நாம் என்ன செய்வது.
    தப்பித்து வாழ அறிவை கொடுத்து இருக்கிறான், அந்த அந்த இடத்திற்கு ஏற்றார் போல் உடல் அமைப்பை கொடுத்து இருக்கிறான். அப்படியும் அவை தங்களை, குஞ்ச்சுகளை பாதுகாக்க முடியவில்லைதான் என்ன செய்வது?


    //வீடியோ அழகு. உங்கள் மகனும், உங்களைப்போல.. நம்மைப்போல[பறவை விலங்குகளை விரும்புவோர்] பொறுமையாக அவற்றைப் படம் எடுத்திருக்கிறார்.//

    ஆமாம் அதிரா, நம்மை போல் ஆர்வம் உள்ளவன்தான் ஆனால் காலை அவனுக்கு நேரம் இருக்காது என்றாலும் நான் ஆசை படுவேன் என்று படங்கள் எடுத்து அனுப்பினான்.

    உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி அதிரா.



    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் மகன் வீட்டிலும் குஞ்சு பொறிச்சிருக்கா? மகிழ்ச்சி.

    முயலும் நிறைய இருக்கிறது மகன் வீட்டுக்கு அருகில் ஆனால் அவை புதர்கள் பக்கம் தான் குழிதோண்டி குட்டி போடும்.

    அங்கு இருந்தவரை முயல் குட்டிகளைப் பார்க்கவில்லை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. முதலிலேயே மணிப்புறா இருக்கிறது. கீழே மாடப்புறா இருக்கிறதா என்று பார்க்கச் செல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  26. புறாக்கள் நம்பிக்கையுடனேயே முட்டையிட்டுச் சென்றிருக்கின்றன. மனிதர்கள் மேலும் நம்பிக்கை. சக பறவைகள் மேலும் நம்பிக்கை. ஆஹா பூனை இருந்ததா? தப்பித்து விட்டன போலும்.

    பதிலளிநீக்கு
  27. அதன் வளர்ச்சியைப் படிப்படியாய்ப் படம் எடுத்திருப்பது சிறப்பு. காணொளிகள் பின்னர்தான் பார்க்கவேண்டும். புறாக்குஞ்சுகள் அழகாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    மணிப்புறாவும் மாடப்புறாவும் என்ற பாடலை வைத்து எல்லோரும் மாடப்புறாவை எதிர்பார்க்கிறார்கள்.

    மணிப்புறா ஒருவகை, மாடப்புறா இன்னொரு வகை.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //புறாக்கள் நம்பிக்கையுடனேயே முட்டையிட்டுச் சென்றிருக்கின்றன. மனிதர்கள் மேலும் நம்பிக்கை. சக பறவைகள் மேலும் நம்பிக்கை. ஆஹா பூனை இருந்ததா? தப்பித்து விட்டன போலும்.//

    தப்பித்து விட்டன, பூனையிடமிருந்தும் தப்பிவிட்டன.
    ஆயுசு கட்டி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஸ்ரீராம்,

    அதன் வளர்ச்சியைப் படிப்படியாய்ப் படம் எடுத்திருப்பது சிறப்பு. காணொளிகள் பின்னர்தான் பார்க்கவேண்டும். புறாக்குஞ்சுகள் அழகாய் இருக்கின்றன.//

    நான் கேட்டுக் கொண்டதால் படிப் படியாக படம் எடுத்து அனுப்பினான்.
    காணொளிகள் மெதுவாய் பாருங்கள்.
    உணவு கொடுப்பது நன்றாக இருக்கிறது.

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு படமும் ரொம்ப அழகு மா...

    பார்க்கவே ஆசையாய் இருக்கு...


    பதிலளிநீக்கு
  32. வணக்கம் அனுராதா பிரேம்குமார் வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  33. https://www.youtube.com/watch?v=KpL10BM9i88

    போஸ்ட் பார்த்தவுடன் மனதில் வந்த பாட்டு....:)

    பதிலளிநீக்கு
  34. வாங்க அதிரா, வாழ்க வளமுடன்.
    எல்லோருக்கும் தோன்று பாடல்
    அருமையான பாடல்.
    மணிப்புறா ஆண் என்றும், மாடப்புறாவை ஆண் என்று நினைத்து பாடிய பாடல்.
    மாடங்கள், கோவில்கள், கோட்டைகளில் வாழ்வது பாடப்புறா. மணிப்புறா வித்தியாசமாய் இருக்கும்.

    //மணிப்புறா (spotted dove) என்பது ஒருவகைப் புறா ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை மாடப்புறாவைவிடச் சிறியது, மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், கருநிற பின்கழுத்து உடையது. இவை இணைகளாய் அல்லது சிறு கூட்டமாக பசுமையான புன்செய் நிலங்களில் மேயும்.//

    விக்கிப்பீடியா நன்றி.

    மறு வரவுக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  35. மாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.

    பதிலளிநீக்கு
  36. ஆஹா ஹையோ கொள்ளை அழகு .சில விலங்கு பறவைகளுக்கு மனுஷங்கமேல் நம்பிக்கை அதுங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் இடம் என்பதால் பயமின்றி முட்டை இட்டு வச்சிருக்காங்க புறா குடும்பம் .இங்கே பைன் மரங்களில் எங்க வீட்டு கூரையில் ஒரு மாடப்புறா ஜோடி எப்பவும் வரும் .சாப்பாடு வைப்பேன் இதுவரை பிள்ளைங்களை பார்த்ததில்லை .எல்லா படங்களும் அழகு .

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    எங்கள் குடியிருப்பு பகுதியிலும் மாடப்புறாக்கள் நிறைய இருக்கிறது. காலை முதல்
    மாலை வரை அதை கவனிப்பது மகிழ்ச்சியான விஷயம்.

    மகன் ஊரிலும் இரண்டு வகையான புறாக்கள் உள்ளன.

    நீங்கள் சொல்வது போல் மகன் வீட்டில் நம்பிக்கையுடன் கூடு கட்டி விட்டது.

    மகன் வீட்டிலும் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைப்பார்கள்.
    இங்கு எங்கள் வீட்டில் குடிக்க, குளிக்க தண்ணீர் தனி தனி பாத்திரங்களில் வைத்து இருக்கிறேன் வெயில் வந்து விட்டதே.

    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  38. விட்டுப்போன இரண்டு விடீயோக்களையும் பார்த்து விட்டேன். முதல் காணொளியில் பெரிய அசைவு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. இரண்டாவது காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
    முதல் வீடியோவில் மூச்சு துடிப்பு மட்டுமே!
    மெல்லிய மூச்சு. தூரத்திலிருந்து அவ்வளவே எடுக்க முடியும்.

    இரண்டாவதும் கண்ணாடி கதவு வழி எடுத்த காட்சி தான்.

    மறுபடியும் வீடியோக்களைப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் Avargal Unmaigal, வாழ்க வளமுடன்.
    நன்றி உங்கள் கருத்துக்கு.

    பதிலளிநீக்கு