செவ்வாய், 29 மே, 2018

அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை

Amaithi Purave Song- Sung By P. Susheela

இந்த பாடலை YouTube ல் பகிர்ந்த  வாசுகி பிரபா அவர்களுக்கு நன்றி.

"தாயே உனக்காக" என்ற படத்தில் வந்த பாடல். எனக்கு பிடித்த பாடல்.Image may contain: bird and shoesImage may contain: bird and outdoorImage may contain: bird and outdoorImage may contain: birdஎன் வீட்டுக்கு வந்த வெள்ளைப் புறாக்களை  பார்த்தவுடன் மனதில் தோன்றிய எனக்கு பிடித்த பாடல். ஏகாந்தன் அவர்கள் இந்த பாடலை  கேட்டதில்லை என்றார் அதனால் இந்த பாடல் பகிர்வு.                                                                  வாழ்க வளமுடன்.
45 கருத்துகள்:

 1. பார்த்துட்டேன் முகநூலில். இன்னிக்கு கூகிள் நீ ரோபோவானு கேட்டுட்டு இருக்கு! ஹெஹெஹெஹெ இல்லைனு நிரூபிக்கணும்! :)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  நான் செக் செய்து பார்க்கதான் இந்த பதிவை போட்டேன்.
  நீ ரோபோவை புறந்தள்ளி விடலாம்.
  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அழகு சகோ
  அருமையான பாடல் இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  பாடலையும், படங்களையும் ரசித்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அழகிய படங்களுடன் இனிமையான பாடல். மிகவும் பிடித்த பாடல். என் வெள்ளி வீடியோ லிஸ்ட்டில் வைத்திருக்கும் பாடல்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கும் பிடித்த பாடல் என்பது அறிந்து மகிழ்ச்சி.
  வெள்ளி வீடியோவில் மீண்டும் கேட்கலாம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரி

  அழகிய படங்களுடன், அமைதி புறாவை தவழ விட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள். நன்றிகள்.. ஒவ்வொரு புறா படங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறது.
  இனிமையான பாடலும் கேட்டு மகிழ்ந்தேன்
  மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. இந்தப் பாடலை கேட்கும் போது, "பாலும் பழமும்" படத்தில் பி. சுசிலா பாடிய "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.அதுவும் இனிமையான குரலில் அழகிய பாடல்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான பாடல் பல வருடங்களுக்கு முன் கேட்டது அதன் பின் தமிழ்ப்பாடல்கள் கேட்பது முடியாமல் போனது. ரசித்தேன். எங்கள் ப்ளாகில் வெள்ளிக்கிழமைப் பாடல்கள் வழி தான் நான் இப்போது தமிழ்ப்பாடல்கள் கேட்பது. தற்போது உங்கள் தளம் வழியும். மிக்க நன்றி சகோதரி. படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன.

  கீதா: அக்கா பாட்டு சூப்பர். அதற்கேற்ப புறா படங்கள் மிக மிக அழகு! மிக அழகாகப் படம் பிடிக்கின்றீர்கள்...

  பதிலளிநீக்கு
 11. கீதாக்கா எங்களையும் கேட்டுருச்சு...ரோபோ இல்லைனு சொல்லு அப்பத்தான் உள்ளார விஉவேன்னு....ஆனா நாங்க தப்பிச்சுட்டோமே ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ

  கீதா

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

  எங்கள் வீட்டுக்கு தினம் வரும் புறாக்கள். வெள்ளை புறாவை பார்க்கும் போது எல்லாம் மனதில் எழும் பாடல் இரண்டு.
  இந்த பாடலும் வெள்ளை புறா ஒன்று
  என்ற மலேசிய வாசு தேவன் பாடிய பாடலும்.

  நீங்கள் சொன்ன ஆலயமணி பாடலும் இனிமையான பாடலும் பிடிக்கும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
  பாடல் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  இனி அடிக்கடி பாடல் பகிர்ந்து விடுகிறேன்.

  வணக்கம் கீதா , வாழ்க வளமுடன்.
  பாடலையும் புறா படங்களை ரசித்தமைக்கு நன்றி.

  ரோபோ பற்றி கவலை படாமல் வாங்க கீதா
  உங்கள் இருவர் கருத்துக்களுக்கு நன்றி.

  பின்னூட்டங்கள் மெயிலுக்கு வர மாட்டேன் என்கிறது.  பதிலளிநீக்கு
 14. புறா அமைதிக்கான அடையாளம் என்று குறிப்பிடப்பட்டாலும்,
  அதனை வீடுகளில் வளர்ப்பதை பெரியவர்கள் அனுமதிப்பதில்லை...

  க்கூக்கும்...க்கூக்கும்.. - என்ற சப்தம் ஆகாது என்பார்கள்..

  இன்றைய சூழ்நிலையிலும் பெரும்பாலோர் விரும்புவதில்லை...

  அழகான படங்களுடன்
  இனிய பாடலைக் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 15. நான் கேட்டிருக்கேன். நல்ல பாடல்

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.

  வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும் பல வீடுகளில் வளர்ப்பதை பார்த்து இருக்கிறேன்.

  அதன் சத்தம் தொந்திரவாய் இருக்கும் தான்.
  ஆனால் அவை நம் குடியிருப்பில் இருக்கிறது . என்ன செய்வது! தினம் எங்கள் வீட்டு உணவை உண்டு பால்கனியை அசுத்தம் செய்கிறது தினம் பால்கனி சுத்தம் செய்கிறேன், ஆனால் விரட்ட மனம் இல்லை.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ராஜி , வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. இனிமையான பாடல் தேன் போல் சுசீலாம்மாவின் குரல் .
  உங்க வீட்டுக்கு வந்த புறா அழகோ அழகு .புறாக்கள் கள்ளமில்லாதவைக்கா .முகம் பார்க்க அழகா இருக்கு .இங்கே நிறைய இடங்களில் இவற்றை உக்கார கூட விடாம கம்பி போல் போடறாங்க :(
  எங்க வீட்டுக்கு ஒரு ஜோடி தொடர்ந்து வருங்க

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

  பாடல் தேன் போன்ற இனிமைதான் ஏஞ்சல்
  எங்கள் குடியிருப்பில்
  வித விதமாய் புறாக்கள் இருக்கு ஏஞ்சல்.
  வெள்ளை புறா இந்த பாடலை நினைவு படுத்தியதாலும் இப்போது சூழ்நிலை ( பதட்ட நிலை) மாறவும் அமைதியை அழைத்தேன்.

  அதன் எச்சம் வீட்டின் அழகை கெடுக்கும் என்பதால் அப்படி செய்கிறார்கள்.
  உங்கள் வீட்டுக்கு வரும் ஜோடிகள் நன்றாக இருக்கட்டும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 20. அமைதிப்புறா பாடலும் தேன். அதன் பார்வையும் தேன்.
  மனசுக்கு நிம்மதி.நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
 21. அழகுப் புறா. அழகிய படங்கள்! இனிய பாடல்!

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் வல்லி அக்கா வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்தும் தேன்.
  நன்றி.
  .

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  நீங்கள் ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் ராமலஷ்மி , வாழ்க வளமுடன்.
  எல்லாவற்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அமைதிப்புறாவே இலங்கை ரேடியோவில் பல தடவை கேட்டிருக்கிறேன்.. மிக ரசிக்கும் பாடல்..

  பதிலளிநீக்கு
 26. ஆவ்வ்வ் வெள்ளைப்புறா.. இப்படிப் புறாக்கள் இங்கு இல்லை. இங்கு இருப்பவை எல்லாம் மணிப்புறாக்கல். போனகிழமை வோட் போனபோது ஒரு புறாப்பிள்ளை மிக அருகில் வந்து எம்மோடு நடந்தா.. உடனே நான், பெரிய கலியாண வீடியோ எக்ஸ்பேர்ட் மாதிரி என் மொபைலில் வீடியோ எடுத்தேன் ஒரு 3 நிமிடம்.

  வீட்டுக்கு வந்து செக் பண்ணினால்.. வீடியோ பட்டினை ஓன் பண்ணாமல் வீடியோவைப் பிடிச்சிருக்கிறேன் ஹா ஹாஅ ஹா என்னா அறிவு:))..

  யாரோ கோமதி அக்காவுக்கு தூது விட்டிருக்கினம் புறா மூலம்:)..

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் அதிரா வாழ்க வளமுடன்.
  இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்தான். அது ஒரு பொற்காலம்.

  பதிலளிநீக்கு
 28. அதிரா புறாவை வீடியோ எடுத்து விட்டோம் என்று எவ்வளவு சந்தோஷபட்டு இருப்பீர்கள்!
  அது இல்லை என்றால் ஏற்படும் ஏமாற்றம்!
  எனக்கும் இது போல் சில நேரங்களில் நடந்து இருக்கு.

  புறாவிடு தூது யார் செய்கிறார்கள்?
  மெயில் வேலை செய்யவில்லை இனி புறா மூலம் மெயிலை அனுப்ப எண்ணம்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. அமைதிக்கு ஏன் புறாவைகாட்டுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  அமைதிக்கு என்றும் வெள்ளைப் புறாவைதான் தூது அனுப்புவார்கள்.
  அமைதியான சாத்வீகமான பறவை.

  வெள்ளை கொடியை சமாதானத்திற்கு சின்னமாய் வைத்து இருக்கிறார்கள், அது போல் வெண்புறாவையும் வைத்து இருக்கிறார்கள்.
  இது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. அழகு புறாக்கள்..அமைதியின் சின்னமாக..

  பதிலளிநீக்கு
 32. என் பக்கத்தில் நீங்கள் எழுதியிருந்ததற்குப் பதில்போட்டும், நான் இப்போதுதான் இந்தப் பக்கம் வருகிறேன். என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு ஒரு pleasant surprise!

  பி. சுசீலாவின் பாடலைக் கேட்டேன். பாடலைவிடவும் நீங்கள் போட்டிருக்கும் வெண்புறாப் படங்கள் அழகு. புறாக்களின் நடையே அலாதி. ஒரு ஸ்டைல்! எங்கள் பால்கனியில் வழக்கம்போல் சாம்பல்நிற மாடப்புறாக்கள். க்யூபாவில் சிட்டுக்குருவிகள். காங்கோவின் எங்கள் வீட்டு முன்பகுதிவெளியில் விதவிதமான பறவைகள். பெங்களூர் வந்ததும் எங்களின் ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் கவனிக்க ஆரம்பித்தேன். தேன்சிட்டு, சிட்டுக்குருவிகள் காணப்படுவதில்லை இங்கே. பார்த்தே வருடங்கள் ஆகிவிட்டன. பெங்களூரில் காடுகோடி என்ற இடத்தில் வசிக்கும் எங்கள் உறவினர், அவர்கள் வீட்டுக்கு சிட்டுக்குருவிகள் வருகை தருவதாகச் சொன்னார். நல்ல செய்தி.

  பதிலளிநீக்கு
 33. வா வா அமைதிப் புறாவே
  நமக்கு அமைதியைக் கொண்டு வா

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் சகோ ஏகாந்தன், வாழ்க வளமுடன்.
  என் வீட்டுக்கு பலவித பறவைகள் வருகிறது.
  முக நூலில் பகிர்ந்து கொண்டு இருப்பேன்.

  மாயவரத்தில் , மதுரையில் முன்பு இருந்த வீட்டில் பறவைகளை படம் எடுக்க வசதியாக இருக்கும்.

  இங்கு கொஞ்சம் சிரமம் என்றாலும் பறவைகளை படம் எடுத்துக் கொண்டு பதிவுகளில் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.
  நிறைய பறவைகள் வருகிறது சிட்டுக்குருவியும் இருக்கிறது இங்கு.
  படங்களை பாராட்டியதற்கு நன்றி.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam வாழ்க வளமுடன்.
  அமைதி எங்கும் வேண்டும், எல்லோருக்கும் வேண்டும்.
  அழைப்போம் அமைதி புறாவை.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் சகோதரி

  நலமா? தாங்கள் நேற்று என் பதிவாக வந்த "கதையின்" முடிவை பார்த்து கருத்து தெரிவிக்க வரக்காணோமே? தங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் . தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்துச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை.
  தங்களை காணோமேயென்று வந்தேன்.
  மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 38. டைட் விளம்பரத்திற்கு அனுப்பலாம் போல வெள்ளை வெளேர் புறா அழகு. பாடலை முதல் முறையாக கேட்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 39. டைட் விளம்பரத்திற்கு அனுப்பலாம் போல வெள்ளை வெளேர் புறா அழகு. பாடலை முதல் முறையாக கேட்கின்றேன்.

  நான் அனுப்பியிருந்த இந்த பின்னூட்டம் ஏன் வெளியாகவில்லை? பல சமயங்களில் இப்படி ஆகிறது. உங்கள் பதிவுகளுக்கு நான் அனுப்பும் பின்னூட்டங்கள் வெளியாவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 40. டைட் விளம்பரத்திற்கு அனுப்பலாம் போல வெள்ளை வெளேர் புறா அழகு. பாடலை முதல் முறையாக கேட்கின்றேன்.

  நான் அனுப்பியிருந்த இந்த பின்னூட்டம் ஏன் வெளியாகவில்லை? பல சமயங்களில் இப்படி ஆகிறது. உங்கள் பதிவுகளுக்கு நான் அனுப்பும் பின்னூட்டங்கள் வெளியாவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 41. படங்களும் பாடலும் அருமை. வாழ்த்துகள்.

  சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
  #சிகரம்

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் பின்னூட்டங்கள் மறைந்து இருந்ததை கண்டுபிடித்து போட்டு இருக்கிறேன்.
  மன்னிக்கவும்.

  //டைட் விளம்பரத்திற்கு அனுப்பலாம் போல வெள்ளை வெளேர் புறா அழகு. பாடலை முதல் முறையாக கேட்கின்றேன்//

  நன்றி உங்கள் கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் சிகரம் பாரதி , வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு