ஞாயிறு, 27 மே, 2018

கிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா- பகுதி 2




"கால் வலிக்குது தூக்கிச் செல்" (நண்பர்கள்)
அமெரிக்கக் கட்டிடக் கலை நிபுணரும் வடிவமைப்பாளரும்  ஆகிய மேரி கோல்ட்டர் என்னும் பெண்மணியால் உருவாக்கப்பட்ட காட்சிக் கோபுரம் இங்கு உள்ளது.இதன் உள்ளே படிவழியாக மேலே சென்று கிராண்ட் கென்யானையும் கொலொராடோ ஆற்றையும் காணலாம். இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு கல்லும் பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.முக்கோண வடிவிலும்,வைரத்தின் வடிவிலும் அமைந்த பாறைகளில் வண்ணப்பட்டைகள் அமைந்துள்ளன. T வடிவிலான கதவுகளும்,ஒடுங்கிச் செல்லும் சன்னல்களும் உள்ளன. கரடு முரடாக உள்ள கற்களின் புறப்பரப்புகள் வினோதமான நிழல்களை ஏற்படுத்துகின்றன.

இந்த அறிவிப்புப் பலகையில்  இங்கு பருவநிலை திடீர் திடீர் என்று மாறும் அதனால் கவனமாய் இருக்க வேண்டும் என்றும், மழை, இடி, மின்னல், புயல் எல்லாம் திடீர் என்று ஏற்படும் அதனால்  உள் பகுதிக்குள் நடந்து போவதை தவிர்க்க வேண்டும் என்றும் வளர்ப்புப் பிராணிகளைக் கவனமாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜிபிஎஸ் உதவி சில நேரம் இதற்குள் வழியைச் சரியாக காட்டாது, கவனமாய் இருக்க வேண்டும் என்றும் போட்டு இருக்கிறது.

காட்சிக் கோபுரம் போகும் வழியில் மண்ணுக்குள்ளிருந்து எலி போன்ற ஒன்று  வலை தோண்டிக் கொண்டு இருந்தது.


அதன் முகம் அதன் மீசை சீல் விலங்கை நினைவுபடுத்தியது எனக்கு
அதன் நான்கு பல்லும் நல்ல பெரிதாக இருந்தது
பேரனும் மருமகளும்


கோபுரத்தின் உள் புறம் மேல் புறம் 

மர ஆசனம் குளிர் காயும் இடம்
முதலில் ஏறும் இடம் மட்டும் கொஞ்சம் குறுகலாக இருக்கிறது.

அடுத்த தளம் செல்ல நல்ல தாராளமாய் ஏறுவதற்கு வசதியாக உள்ளது படிகள்.
ஏறும் போதே மேல் தளத்தில் வரைந்து இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
மேல் விதானத்திலும் அழகிய ஓவியங்கள்- பழங்குடியினரின் ஓவியங்கள்
அவர்கள் வாழ்க்கை முறைகள் எல்லாம் ஓவியமாய் இருக்கிறது


மரத்தினால் செய்த ஆசனங்கள்

சோளக் கதிர் சாப்பிடும் பறவை


மேலிருந்து எடுத்தபடம்


மேல் பகுதியில்  இருந்து  அழகான காட்சிகளைக் காணலாம் சூரியனும்  நம்மைப் பார்க்கிறார்
மேல்தளத்திலிருந்து கண்ட அழகிய பள்ளத்தாக்குக்  காட்சிகள்.


கொலொராடோ ஆற்றின் அழகைக் காணலாம்


                         ஆறு வளைந்து வளைந்து போகும் காட்சி அழகு

                                                  ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சி.

மஞ்சள் புற்களும், கரும்பச்சை மரங்களும்,  நீண்ட தூரம் செல்லும் பாதையும் அழகு
                     பாதை நடுவில் கற்களால் அழகாய் ஒரு மலர் இதழ்கள்.


                                                    இதில் விளக்கு எரிகிறது


கம்பித் தடுப்பு வழியாகப் பள்ளதாக்கின் அழகைப் பார்க்கலாம் பாதுகாப்பாய்.

 அமெரிக்கப் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள், மற்றும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடை எல்லாம் அடுத்த பகுதியில்.
வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------


39 கருத்துகள்:

  1. காட்சி கோபுரத்தைப் பார்த்தால் நம்மூர் பெரிய சைஸ் நெற்குதிர் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. எலிதானே அது? அதென்ன எலிபோன்ற? அட, ஆமாம்... முன்பக்கம் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள். வித்தியாசமான கோணங்கள். எங்களை பார்த்துக் கையாட்டும் ஸாருக்கு நானும் கையாட்டி விடுகிறேன்! பள்ளத்தாக்கு காட்சிகள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    அழகான புகைப்படங்கள். முதல் படங்கள் நீல வானத்துடன் கோபுரகாட்சி மிகவும் அருமையாக இருந்தது.

    வலைக்குளிருந்து எட்டிப்பார்க்கும் விலங்கு புதிதாக இருக்கிறது.

    /அதன் முகம் அதன் மீசை சீல் விலங்கை நினைவுபடுத்தியது எனக்கு/

    ஆமாம்.. எத்தனையோ ஜீவன்களை நம்முடன் இறைவன் படைத்திருக்கிறார்.

    ஓவியங்களும் பார்க்க மிகவும் அழகாக இருந்தன. சோளக்கதிர் சாப்பிடும் பறவை ஓவியம், மற்றும் அத்தனை படங்களும்,மிக அழகாக எடுத்துள்ளீர்கள்.

    கொலொராடோ ஆறு வளைந்து செல்லும் காட்சி நன்றாய் இருக்கிறது.
    கோபுர உச்சியில்தான் விளக்கு எரிகிறதா ?

    அமெரிக்க பழங்குடியினர் பற்றி அறிந்து கொள்ள வரும் அடுத்தப்பகுதியை காண ஆவலாய் உள்ளேன்.
    பகிர்விற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. எத்தனை ரசனையான காட்சிகள் எடுத்த விதமும் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகு. அந்த வளைந்த மாடிப்படி போகும் வழியில் ஓவியங்களும் அழகு .

    அந்த நிலத்திலிருந்து எட்டிப்பார்த்தவர் beaver என்று நினைக்கிறேன் .அதுங்களுக்கு பல்லு நான்ஸ்டாப் க்ரோத் .அதான் நீளமா இருக்கு .
    dam canal கட்டற்றத்தில் கில்லாடிகள் இந்த விலங்கினம்

    பதிலளிநீக்கு
  7. மிக மிக அழகிய இடம். கட்டிடம் மிக மிகப் பழமை வாய்ந்ததுபோல... எப்படி நம்பி உள்ளே போனீங்க:)..

    பதிலளிநீக்கு
  8. அந்த எலி ராட்சத எலியாக இருக்கும்.. இப்படி எலிகள் ஃபிரான்ஸ் இல் பார்த்திருக்கிறேன்.. கிட்டத்தட்ட பூஸாரின் சைஸ் இல் இருந்தன அங்கு ஒரு கடற்கரையில் எலிகள்.

    பதிலளிநீக்கு
  9. ஆகா... அருமை.. அருமை..

    தங்களது பதிவின் மூலமாக நானும் கிரண்ட் கென்யான் தேசியப் பூங்காவினைக் கண்டேன்..

    மகிழ்ச்சி..

    அங்கேயும் தங்களுக்கு என்று ஒரு சிற்றுயிர் -
    என்னையும் படம் எடுத்துக் கொள்ளுங்கள்!.. - என்று நிற்கின்றதே
    அதுதான் ஆச்சர்யம்...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  10. அமெரிக்க சுற்றுலா, ஃபீனிக்ஸ் பகுதிகளின் படங்களை இப்போதுதான் உங்கள் பக்கத்தில் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன படங்கள் - கொலராடோ ஆற்றைத்தவிர.

    அவர்கள் தங்கள் சுற்றுலாத் தளங்களை எப்படி வைத்திருக்கிறார்கள், சுத்தமாக, விபரப் பலகை, பாதைகளுடன். இந்தியா போன்ற நாட்டின் அபாரமான,சரித்திரப் புகழ்வாய்த சுற்றுலாத்தளங்களைப் பராமரிப்போர் இல்லை. நமது மக்களுக்கும் பாரம்பரியப் பெருமை, தேசிய உணர்வு இல்லை. சினிமா பார்ப்பதற்கும்,விசிலடிப்பதற்கும், நடிகர்கள், அரசியல்வாதிகள் பின் சொம்புதூக்குவதற்குமே லாயக்கு எனும் அபத்த நிலை இங்கு. இரு நாட்டவரை ஒப்பிடக்கூடாது என்றே நினைக்கிறேன். ஒப்பிடுதல் மனதில் தானாகவே நிகழ்ந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. துளசி: படங்கள் அத்தனையும் மிக மிக அழகாக இருக்கின்றன. பிரம்மாண்டமாய் இருக்கிறது கேன்யான். நதியும் மிக அழகு. ரசித்தோம்.

    கீதா: கோமதிக்கா அட்டகாசமான படங்கள்!!! ஹையோ பார்த்து பார்ட்து முடியலை. படம் பார்க்கவே முடியலைனா உங்களுக்கு நேரில் பார்த்து பிரமிப்பும் ரசனையுமாய் இருந்திருக்கும் இல்லையா அக்கா.

    நதி கீழே போவது அழகு...அதற்கு முந்தி ஒரு படத்தில் இடது புறமாய் நதி மெலே போவது போல இருக்கே அக்கா அது என்ன?

    கொடராடோ மிக அழகாய் வளைந்து வளைந்து......அழகோ அழகு. ஜன்னல் வழி எடுத்த காட்சியும் செமையா இருக்கு. பாலைவனம் என்று சொல்லப்படுவது கூட அழககத்தான் இருக்கிறது.

    அந்த மண்ணைத் தோண்டுவது கோஃபர் (gopher) எனும் ரோடன்ட் வகைதான் இனம் தான்..ங்கு நிறையக் காணப்படும். நீங்கள் மிக மிக அழகாகப் போட்டோ எடுத்திருக்கீங்க. அதுவும் அழகா போஸ் கொடுத்திருக்கு பாருங்க..

    "என் பல்லைப் பாரு க்ளிக்கிக்க" என்பது போல்...நார்மலாக எலிகள் நம் வாசனை தெரிந்தாலே ஓடிவிடும். இது அழகாக போஸ் கொடுத்திருக்கே...சூப்பர்!! செமையா எடுத்திருக்கீங்க அக்கா..

    அனைத்தும் ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  13. யாருடைய பின்னூட்டமும் காட்ட மாட்டேன் என்கிறது பிளாக்கர்.
    என்னால் சரி செய்ய முடியவில்லை. எப்போது சரியாகும் என்று தெரியவில்லை
    பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  14. ஹாஹாஹா, உங்களுக்கும் ப்ளாகர் பிரச்னையா? உங்க ப்ளாக் காலையிலே இருந்து திறக்கலை. எதுக்கும் முகநூலில் ஒரு லிங்க் கொடுங்க. சில சமயம் அங்கே இருந்து வர முடியும். ஜிஎம்பி சாரோட பதிவுக்கு 2 நாளாப் போக முடியலை! :)))))

    பதிலளிநீக்கு
  15. கமென்டுகளை awaiting moderation page லே இருக்கானு தேடுங்க! அநேகமா அங்கே தான் இருக்கும். படங்களோடு விளக்கம் அருமை. என்னால் எல்லாம் இவ்வளவு படிகள் ஏறிப் போய்ப் பார்ப்பது கஷ்டம்! மருத்துவர் வேறே தடை செய்திருக்கார். எப்போவோ போயிருக்கணும்! :))))இனிமேல் இம்மாதிரிப் படங்களைத் தான் பார்த்துக்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  16. 2007 இல் சென்ற போது பார்த்த,எடுத்த படங்கள் என்னிடம் தற்போது இல்லை. அதனால் முதலில் தங்கச்சிக்கு நன்றி.

    மிக மிக அருமையான படங்கள். மீண்டும் காண வைத்தீர்கள்.

    ஐமாக்ஸில சினிமா பார்த்தீர்களா. அருமையாக சற்றே போலியாக இருந்தது.

    மகன் எடுத்த படங்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் கோமதி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ஒரு வழியாக வந்து விட்டது பின்னூட்டங்கள்.
    அதுவாய் மெயிலுக்கு வராது போலும் நாம் தான் awaiting moderation page லே போய் எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் பெரிய சைஸ் நெற்குதிர் தான் வெளியில் பார்க்க.

    //எலிதானே அது? அதென்ன எலிபோன்ற? அட, ஆமாம்... முன்பக்கம் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது!!//


    beaver என்று நினைக்கிறேன் .அதுங்களுக்கு பல்லு நான்ஸ்டாப் க்ரோத் .அதான் நீளமா இருக்கு .
    dam canal கட்டற்றத்தில் கில்லாடிகள் என்று இந்த விலங்கினம் என்று ஏஞ்சல் சொல்கிறார்கள்.

    //அழகிய படங்கள். வித்தியாசமான கோணங்கள். எங்களை பார்த்துக் கையாட்டும் ஸாருக்கு நானும் கையாட்டி விடுகிறேன்! பள்ளத்தாக்கு காட்சிகள் வெகு அழகு.//

    ஓ ! சார் பேரனைப் பார்த்து கையாட்டினார்கள்.
    நீங்கள் கையாட்டியதை சொல்லிவிட்டேன் மகிழ்ந்தார்கள்.

    பள்ளத்தாக்கு காட்சிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி அளிக்கிறது.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    படங்களை,ஓவியங்களை ரசித்தமைக்கு நன்றி.

    //அந்த நிலத்திலிருந்து எட்டிப்பார்த்தவர் beaver என்று நினைக்கிறேன் .அதுங்களுக்கு பல்லு நான்ஸ்டாப் க்ரோத் .அதான் நீளமா இருக்கு .
    dam canal கட்டற்றத்தில் கில்லாடிகள் இந்த விலங்கினம்//

    நிலத்திலிருந்து எட்டிப்பார்த்தவர் யார் என்று தெரிந்து கொண்டேன் உங்கள் மூலம்.
    நன்றி.

    டெஸ்ட் பின்னூட்டம் கொடுத்து டெஸ்ட் செய்ததற்கு நன்றி.
    உங்கள் கைக்கு என்ன ஆச்சு? எல்போ வலியா?
    இப்போது நலமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  20. தேவகோட்டை ஜி, எப்படியோ வந்து விட்டது.
    மகன், மகள் சொன்னது போல் செய்தேன் வந்து விட்டது.
    ஆனால் மெயிலில் வராது போல .
    எப்படியோ பின்னூட்டம் வந்து விட்டது மகிழ்ச்சி.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் அன்பு நட்புகளே! வாழ்க வளமுடன்.
    நேற்று இரவு பின்னூட்டங்களை தேடி எடுத்து போட்டேன்.
    மறுமொழியை இரவு 10. 30 வரை கொடுத்து விட்டுதான் படுத்தேன்.

    இன்று போய் awaiting moderation page லே இருக்கா என்று பார்க்க போனேன் அதில் நான் போட்ட பதில்களே இருக்கு என்று நினைக்கவில்லை முதலில் வந்த பின்னூட்டங்க்கள் என்று நினைத்து டெலிட் செய்தேன்.
    அதில் நான் கொடுத்த பதில்களும் சேர்ந்து அழிந்து விட்டது.
    மன்னிக்கவும்.

    குழப்பம் சரியாக வில்லை, பொறுத்துக் கொள்ளுங்கள் அடுத்த பதிவு போடும் போது கவனமாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    அனைத்தையும் ரசித்து குறிப்பிட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
    மறுபடியும் வந்து டெஸ்ட் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //மிக மிக அழகிய இடம். கட்டிடம் மிக மிகப் பழமை வாய்ந்ததுபோல... எப்படி நம்பி உள்ளே போனீங்க:)..//

    100 வருட பழைமையான கட்டிடம் தான்.
    ஆனால் காலத்தை வென்று நன்றாக பலமாய் இருக்கிறது பயம் இல்லை.

    //அந்த எலி ராட்சத எலியாக இருக்கும்.. இப்படி எலிகள் ஃபிரான்ஸ் இல் பார்த்திருக்கிறேன்.. கிட்டத்தட்ட பூஸாரின் சைஸ் இல் இருந்தன அங்கு ஒரு கடற்கரையில் எலிகள்.//

    பூஸார் சைஸ் எலியா ஆச்சரியம் தான்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    //அங்கேயும் தங்களுக்கு என்று ஒரு சிற்றுயிர் -
    என்னையும் படம் எடுத்துக் கொள்ளுங்கள்!.. - என்று நிற்கின்றதே
    அதுதான் ஆச்சர்யம்...

    வாழ்க வளமுடன்.//

    நான் மட்டும் அல்ல அங்க்கு வந்து இருந்த அனைவரும் அந்த சிற்றுயிரை வளைத்து வளைத்து படம் எடுத்தார்கள். யாரையும் பார்த்து பயப்படவில்லை அனைவருக்கும் போஸ் கொடுத்து நின்றது.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோ ஏகாந்தன், வாழ்க வளமுடன்.

    //அமெரிக்க சுற்றுலா, ஃபீனிக்ஸ் பகுதிகளின் படங்களை இப்போதுதான் உங்கள் பக்கத்தில் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன படங்கள் - கொலராடோ ஆற்றைத்தவிர. //

    கொலராடோ ஆற்றை கண்ணாடி ஜன்னல் வழியாக எடுத்தேன் அதனால் அவை கொஞ்சம் மங்கலாய் இருக்கும். மற்ற படங்கள் மேல்தளத்திலிருந்து எடுத்தேன்.

    //அவர்கள் தங்கள் சுற்றுலாத் தளங்களை எப்படி வைத்திருக்கிறார்கள், சுத்தமாக, விபரப் பலகை, பாதைகளுடன். இந்தியா போன்ற நாட்டின் அபாரமான,சரித்திரப் புகழ்வாய்த சுற்றுலாத்தளங்களைப் பராமரிப்போர் இல்லை. நமது மக்களுக்கும் பாரம்பரியப் பெருமை, தேசிய உணர்வு இல்லை. சினிமா பார்ப்பதற்கும்,விசிலடிப்பதற்கும், நடிகர்கள், அரசியல்வாதிகள் பின் சொம்புதூக்குவதற்குமே லாயக்கு எனும் அபத்த நிலை இங்கு. இரு நாட்டவரை ஒப்பிடக்கூடாது என்றே நினைக்கிறேன். ஒப்பிடுதல் மனதில் தானாகவே நிகழ்ந்துவிடுகிறது.//

    எனக்கும் உங்களை போல் எண்ணம் வந்தது. ஒப்பிடுதல் கூடாது என்றாலும் நினைப்பை தடுக்க முடியவில்லைதான்.

    நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும் வேறு என்ன செய்வது?

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.













    பதிலளிநீக்கு
  27. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் ரசிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.

    //துளசி: படங்கள் அத்தனையும் மிக மிக அழகாக இருக்கின்றன. பிரம்மாண்டமாய் இருக்கிறது கேன்யான். நதியும் மிக அழகு. ரசித்தோம்.//

    உங்கள் கருத்துக்கு நன்றி சகோ துளசி.

    //கீதா: கோமதிக்கா அட்டகாசமான படங்கள்!!! ஹையோ பார்த்து பார்ட்து முடியலை. படம் பார்க்கவே முடியலைனா உங்களுக்கு நேரில் பார்த்து பிரமிப்பும் ரசனையுமாய் இருந்திருக்கும் இல்லையா அக்கா.//

    நேரில் பார்க்க அழகுதான் கீதா.

    //நதி கீழே போவது அழகு...அதற்கு முந்தி ஒரு படத்தில் இடது புறமாய் நதி மெலே போவது போல இருக்கே அக்கா அது என்ன?//

    மேலே போவது போல் இருக்கும் படம் ஜூம் செய்து எடுத்த்து.வெகு ஆழமாய் தான் போகிறது ஆறு.

    //அந்த மண்ணைத் தோண்டுவது கோஃபர் (gopher) எனும் ரோடன்ட் வகைதான் இனம் தான்..ங்கு நிறையக் காணப்படும். நீங்கள் மிக மிக அழகாகப் போட்டோ எடுத்திருக்கீங்க. அதுவும் அழகா போஸ் கொடுத்திருக்கு பாருங்க..

    "என் பல்லைப் பாரு க்ளிக்கிக்க" என்பது போல்...நார்மலாக எலிகள் நம் வாசனை தெரிந்தாலே ஓடிவிடும். இது அழகாக போஸ் கொடுத்திருக்கே...சூப்பர்!! செமையா எடுத்திருக்கீங்க அக்கா..//

    எலி போன்ற ஒன்று கோஃபர் (gopher) எனும் ரோடன்ட் வகைதான் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், நன்றி.

    அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி கீதா.







    பதிலளிநீக்கு
  29. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    //ஹாஹாஹா, உங்களுக்கும் ப்ளாகர் பிரச்னையா? உங்க ப்ளாக் காலையிலே இருந்து திறக்கலை. எதுக்கும் முகநூலில் ஒரு லிங்க் கொடுங்க. சில சமயம் அங்கே இருந்து வர முடியும். ஜிஎம்பி சாரோட பதிவுக்கு 2 நாளாப் போக முடியலை! :)))))//

    ஏதோ மாற்றம் செய்கிறது போல ப்ளாகர் .

    //கமென்டுகளை awaiting moderation page லே இருக்கானு தேடுங்க! அநேகமா அங்கே தான் இருக்கும். படங்களோடு விளக்கம் அருமை. என்னால் எல்லாம் இவ்வளவு படிகள் ஏறிப் போய்ப் பார்ப்பது கஷ்டம்! மருத்துவர் வேறே தடை செய்திருக்கார். எப்போவோ போயிருக்கணும்! :))))இனிமேல் இம்மாதிரிப் படங்களைத் தான் பார்த்துக்கணும். :)))))//

    நீங்கள் சொல்லி இருப்பது போல்தான் ஸ்ரீராம் சொன்னார்.(வாட்ஸ் அப்பில்)

    நீங்கள் சொல்லி இருப்பதை இப்போது தான் பார்க்க முடிந்தது.

    நான்கு தளங்கள் என்றாலும் படி ஏற கஷ்டம் இல்லை. துளசி கோபால் ஏறி பார்த்து படங்கள் போட்டு இருக்கிறார்கள் கால்வலியுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    பழைய நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    எல்லா படங்களும் நான் என் சிறிய காமிராவில் எடுத்த படங்கள்.
    மகன் எடுத்தது நன்றாக இருக்கும் . அவசரமாய் இந்தியாவிற்கு திரும்பியதால் அவன் எடுத்த படங்களை வலை ஏற்றவில்லை.
    அவன் எடுத்த படங்களை போட்டால் மகன் எடுத்த படம் என்று போட்டு விடுவேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  31. அசத்தும் படங்கள்...

    அனைத்தும் மிக மிக அழகு...

    பதிலளிநீக்கு
  32. எங்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் காண்பித்தததற்கு காண்பித்தற்கு நன்றி! படங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  33. எங்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் காண்பித்தததற்கு காண்பித்தற்கு நன்றி! படங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  34. இதற்கும் நான் அனுப்பியிருந்த பின்னூட்டம் வெளியாகவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்கு கிடைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டங்கள் ஒளிந்து கொண்டு இருந்தது இப்போதுதான் பார்த்தேன் மன்னிக்கவும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு