திங்கள், 12 மார்ச், 2018

இராமாயணச்சாவடிபசுமை நடை இயக்கத்துடன்   ஞாயிறு காலை ( 11.3. 1018)
  இராமாயணச்சாவடி, புட்டுத்தோப்பு சென்றோம். பசுமை நடையின் 84 வது பயணம். இவர்களுடன் இரண்டு இடங்களுக்குச் சென்று

 பகிர்ந்து இருக்கிறேன். வண்டியூர்த் தெப்பகுளம்அனைவரும் மதுரை வடக்கு மாசி வீதி மையத்தில்   சந்திப்பு என்று செய்தி அனுப்பி இருந்தார்கள்.

காலை ஆறு மணிக்கு வந்து காத்து இருந்தோம். ஒருவர்  மட்டும் தான் வந்து இருந்தார். தெருவின் சந்திப்பில் உள்ள  நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் உள்ள விநாயகரை வணங்கி விட்டுக் காத்து இருந்தோம். 

பெயர்க் காரணம் அரசமரத்தடியில்  எல்லா இடத்திலும் இருப்பார் இங்கு ஆலமரத்தடியில் இருக்கிறார். அழகாய் இருக்கிறார், அதனால் ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர். மதுரைக்கு வந்த நேரு அவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கி  வழிபட்டார் விநாயகர்  நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆகி விட்டார்.

நம் கீதாசாம்பசிவம் அவர்கள்  மதுரையில் இருக்கும்போது தினமும் வழி பட்ட விநாயகர்.

காலையில் பூ விற்கப் போகும் வயதான அம்மா விநாயகருக்கு முதலில் பூவைக் கொடுத்து வணங்கிவிட்டு குருக்கள் கொடுத்த விபூதியை நெற்றி நிறையப் பூசிக் கொண்டு கிளம்புவதைப் பார்த்தேன்.
பிள்ளையார் அப்பா! பூக்கள் விற்கப் பலத்தைக் கொடு என்று வேண்டிக் கொண்டு இருப்பார்.
காலைச் சூரியன் வெளிக்கிளம்ப ஆயத்தம் ஆகி விட்டார்.

வந்து விட்டார்.
சூரியன் மேலே எழும்பிய நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டார்கள்.

Image may contain: one or more people, tree, crowd, sky and outdoor
வந்தவர்கள் இனி வரும் அன்பர்களுக்கு காத்து இருக்கும் போது அப்படியே பக்கத்தில் உள்ள கடையில் காப்பி அருந்தி விட்டு ஒருவரோடு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். நான் மரத்தில் பறவைகளைத் தேடுகிறேன்.
Image may contain: 3 people, people standing, tree, crowd and outdoor

மதுரைக்கு வந்து இருந்த எழுத்தாளார் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டார்கள். பசுமைநடை அமைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களுடன் எஸ். ரா  அவர்கள் முன்னால் நடந்து வருகிறார்கள். (இந்த படமும் மேல் உள்ள படமும் பசுமை நடைக்கு வந்த ஒருவர் முகநூலில் பகிர்ந்த படம். அவருக்கு நன்றி.)

7மணிக்கு இராமாயணச்சாவடி வந்து விட்டோம். 
திரு . சுந்தர் காளி அவர்கள் பேசுகிறார்கள்

சாவடிகள் எப்படி உருவானது, எதற்கு உருவானது என்றெல்லாம் மூவர் பேசினார்கள். சுந்தர் காளி அவர்கள் பக்கத்தில்  போய்க்கொண்டு இருக்கும் அந்த வயதானவர், அவர் அருகில்  இருப்பவர் எல்லாம் பேசினார்கள். கால்நடையாக நடந்து போகும் மக்கள் தங்கி ஓய்வு எடுத்து சாவடியில் கொடுக்கும் உணவுகளை உண்டு செல்வார்கள் என்றார்கள்.

ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு  சொந்தமானது என்றார்கள். ஆயிரம் வீட்டு யாதவர்கள் இந்த சாவடியில் விளக்கு இல்லாத காலத்தில் தீபந்தங்க்களை வைத்துக் கொண்டு இராமாயணம் படிப்பார்களாம். அழகர் பற்றிய பாடல்களை  இராகத்தோடு இசைப்பார்களாம்.

சொற்பொழிவுகள் நடைபெறுமாம் இங்கு.

400 வருஷம் முன் கட்டபட்டது , 1948ல் புதுபித்த போது  கட்டிடத்தின் மேல் உள்ள கோபுரங்களில் தேச தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள் சிலைகள் 
புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் மேல் கோபுரத்தில் உள்ள சிலைகளின் சிறப்பையும் பேசினார்கள்.
திருகூடல் மலை கட்டிக்குளம்ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி ஆடிமாத  சித்திரை திருவிழாவில்  குதிரை வாகனத்தில் காட்சி தருவாராம் இந்த சாவடியில்.
சித்திரை திருவிழாவில் தங்ககுதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இங்கு எழுந்தருளுகின்றனர்.

திருவிழா சமயம் சாமி வந்து இறங்கி மக்களுக்குக் காட்சி கொடுக்கும் போது இரவு நாடகம்  நடக்குமாம்.  வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் தைமாதம் 9ம் திருவிழா திருத்தேர் உற்வசத்தன்று இரவு இந்த சாவடியில் தங்கி நாடகம் பார்த்து மறுநாள் மஞ்சள் நீராட்டு நடை பெறுவது சிறப்பாகும்  என்று பலகையில் உள்ள செய்திசொல்கிறது.

இவ்வளவு கூட்டம் பக்கத்தில் இருந்து பேசுவதைக் கண்டும் அமைதியாக   அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்கிறது மாடு.

பக்கத்தில் கருப்பண்ணசாமி இருக்கிறார். ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கு சந்தன சாற்றுப்படி நடக்கும் என்றும் ,கருப்பின் சிறப்பு என்று சொல்வது வாயுக்குத்து  வந்து கஷ்டப்படுபவர்கள் "நாச்சிமுத்துக்  கருப்பா மூச்சுக்குத்தை வாங்குப்பா" 
என்று மூன்று தடவை கூறி வழிபட்டால்  உடனே நிவர்த்தி ஆகும் என்றும் சொல்கிறது அறிவிப்புப்பலகை.

ஒருபக்கத்தில் சூட்டுக்கோல் சாமியும், ராமகிருஷ்ணபரமஹம்சரும் இருக்கிறார்கள்.
விவேகானந்தரும் , இராமலிங்க அடிகளும் இருக்கிறார்கள்.
Image may contain: 3 people, people smiling, sky and outdoor
நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ்குழந்தை முருகன் வேலுடன் மயிலுடன்., யசோதையும் குட்டிக் கண்ணனும்
மீனாட்சி திருமணத்தில் அரசன் முதல் ஆண்டி வரை கலந்து கொண்ட காட்சி சித்தரிக்கப் பட்டு உள்ளது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால்
 உள்ளே பார்க்க முடியவில்லை - பூட்டி இருந்தது.
Image may contain: one or more people, crowd and outdoor
கருப்பண்ணசாமி கோவிலும், இராமாயணச்சாவடியும்.
 கடைசியில் நான் போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறது. எங்களுடன் வந்த அன்பர் எடுத்த படம்.

Image may contain: one or more people, people walking, crowd and outdoor
அடுத்து புட்டுத்தோப்புக்குச் செல்ல நடை.  வண்டிகளை நிறுத்தி வைத்த இடத்திற்கு வந்து  எடுத்துக்கொண்டு  ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் புட்டுத்தோப்பு  நோக்கிப் பயணம். புட்டுத்தோப்புக்குப் புராணப்பின்னணி
 எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மண்ணைப் படைத்தவ்ன் மண் சுமந்தான்  என்ற பதிவில் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை காட்சியாகக் காட்டப்படும் சித்திரைத் திருவிழா பார்த்ததைப்பகிர்ந்து இருப்பேன்.

அங்கு இப்போது போனபோது, என்ன உணவு போனவர்களுக்குக்கொடுக்கப் பட்டது என்பது அடுத்த பதிவில். புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .
அடுத்த பதிவில் பார்ப்போம்.

                                                                வாழ்க வளமுடன்.

46 கருத்துகள்:

 1. நான் வந்துட்டேன்ன்ன் கோமதி அக்கா.. ராமாயணச் சாவடி பார்க்க...

  இது என்ன எனப் புரியவே இல்லை எனக்கு.. கோயிலோடு இருக்கும் ஒரு மண்டபமோ? இல்லை கோயிலின் பெயரோ?

  பதிலளிநீக்கு
 2. வழமைபோல படங்கள் அழகு.. அழகு சிலைகள். அனைத்தையும் தாண்டி என்னைக் கொள்ளை கொண்டது அந்த ஆலமரத்துப் பிள்ளையார்ர்...

  மிகமிக அருமை.. எனக்கு இப்படியான கோயில்களில் தனிமையான.. ஆரவாரமில்லாத நேரத்தில் நின்று கும்பிடப் பிடிக்கும்.. அந்தச் சூழலைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு இனிமைதான்.

  கீசாக்கா முன்பு அங்கிருந்தாவோ.. பூக்காரம்மாவும் அழகு...

  பதிலளிநீக்கு
 3. புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  ராமாயணச்சாவடி பார்த்து விட்டீர்களா?
  கோவில் இல்லை திருவிழா சமயம் சாமி வந்து தங்கும் இடம்.
  சத்திரம், சாவடி என்று கேள்வி பட்டு இருக்கிறீர்கள் தானே?
  தங்கும் இடம். கூடும் இடம் என்று வைத்துக் கொள்ளலாம்.
  முதலில் வந்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அதிரா, ஆலமரத்து பிள்ளையார் எல்லோருக்கும் பிடிக்கும். ஆரவாரமில்லாத நேரத்தில் நின்று கும்பிடப் பிடிக்கும் எனக்கும், காலை நேரம் லேசாக மாசி மாத பனியும் மிகவும் நன்றாக இருந்தது.
  கீதா சிறுவயதில் மதுரையில் தான் இருந்தார்கள்.
  அந்த தெருவில்தான் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
  பூக்காரம்மா அழகுதான் முதுமை அழகுதான்.
  நன்றி அதிரா.

  பதிலளிநீக்கு
 6. அதிரா உங்கள் பதில் சரியா தப்பா? என்று அடுத்த பதிவில்.

  பதிலளிநீக்கு
 7. அழகிய புகைப்படங்களுடன் விளக்கிய விடயம் நன்று வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. சிலைகள் எல்லாம் மிக மிக அழகு! அதுவும் யசோதையின் முகம் அத்தனை அழகாயிருக்கிறது!

  வெளிநாட்டில் இருக்கும்போது உங்கள் வலைப்பக்கம் மிகவும் ஆடும். அதனால் என்னால் பின்னூட்டம் இடவே முடிந்ததில்லை. உங்கள் பதிவுகளைப்படிக்கவும் முடிந்ததில்லை. இப்போது தஞ்சை வந்திருக்கிறேன். உங்கள் வலைப்பக்கம் இங்கு எந்தப்பிரச்சினையும் தரவில்லை. அதனால் உங்கள் பதிவினைப்படித்து ரசிக்க முடிகிறது.

  பதிலளிநீக்கு
 9. அருமையா இருந்திருக்கும் .நடை மிக நல்லது உடலுக்கு .இந்த பசுமை நடையில் மனசும் புத்துணர்ச்சியடைந்திருக்கும் .
  யசோதை குட்டி கண்ணன் மற்றும் அனைத்து சிலைகளும் அழகு பார்க்க தத்ரூபம் .
  உணவு நிச்சயம் குழை சாதம் :) இல்லவேயில்லை பாரம்பரிய உணவுன்னா நூறாண்டுக்கு முன் செஞ்சது :)
  அநேகமா கைக்குத்தரிசி கவுனி அரிசி நீர் மோர் சாதம் கம்பங்களி ராகி இவற்றில் உணவு அளித்திருப்பாங்க

  பதிலளிநீக்கு
 10. நேரு ஆலால சுந்தரர் கோவிலைத்தாண்டிச் சென்று வலது பக்கம் திரும்பினால், நாங்கள் இருந்த வீடு வரும்! அம்மா இருந்த காலம். நான் மதுரையில் இருந்தபோது சைக்கிளில் சுற்றாத தெருக்கள் இல்லை.

  பதிலளிநீக்கு
 11. இனிமை நினைவுகளை இசைக்க வைத்துவிட்டீர்கள்! இந்த இடமெல்லாம் பார்த்திருக்கிறேன், டானிக் சென்றிருக்கிறேனே தவிர இவ்வளவு ஊன்றிப் பார்த்ததில்லை. பசுமை நடை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  ஹுஸைனம்மா ஒரு முறை இப்படி சொன்னார்கள் , படிப்பதற்கு யோசனையும் சொன்னார்கள்

  //உங்களின் வலைப்பக்கம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டேயிருக்கிறபடியால், கமெண்ட் போட தாமதமாகிவிட்டது. நண்பர் பாஸித் கொடுத்த அறிவுரையின்படி, http://mathysblog.blogspot.com/ncr என்று டைப் செய்து இந்தப் பக்கம் வந்தேன்//


  அக்கா,

  பாஸித் இதுகுறித்து ஒரு பதிவே எழுதிட்டார். தேவைப்படுறவங்க பாருங்க:

  _______________________

  ஒரு முக்கிய பதிவு!

  நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்தால், சில ப்ளாக்கர் வலைத்தளங்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம். அதாவது சில வலைப்பூக்கள் தொடர்ந்து Refresh ஆகிக் கொண்டிருக்கும். இதனால் வாசகர்கள் அந்த தளத்தை சரியாக படிக்க முடியாது, பின்னூட்டம் இட முடியாது. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

  துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன?

  தஞ்சை வந்து பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

  //அருமையா இருந்திருக்கும் .நடை மிக நல்லது உடலுக்கு .இந்த பசுமை நடையில் மனசும் புத்துணர்ச்சியடைந்திருக்கும் //

  காலை இளம் குளிரில் நடக்க இனிமையான அனுபவம் தான்.
  ஞாயிறு என்பதால் அந்த தெருவில் போக்குவரத்து குறைச்சல். இல்லையென்றால் காரும், வண்டிகளும், கடைகளுக்கு சாமன்கள் இறக்கும் லாரிகளும் நடப்பத்ற்கு மிக இடைஞ்சலாக இருக்கும்.

  படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  உணவு கிட்ட தட்ட சொல்லி விட்டீர்கள் அடுத்த பதிவில் வரும்.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  //நேரு ஆலால சுந்தரர் கோவிலைத்தாண்டிச் சென்று வலது பக்கம் திரும்பினால், நாங்கள் இருந்த வீடு வரும்! அம்மா இருந்த காலம். நான் மதுரையில் இருந்தபோது சைக்கிளில் சுற்றாத தெருக்கள் இல்லை.//

  அந்த தெருவில் முன்பு இருந்தீர்களா?
  திருவிழாக்கள் எல்லாம் கண்டு ரசித்து இருப்பீர்கள்.

  பழைய நினைவுகளை தந்து விட்டதா பதிவு மகிழ்ச்சி.

  //இனிமை நினைவுகளை இசைக்க வைத்துவிட்டீர்கள்! இந்த இடமெல்லாம் பார்த்திருக்கிறேன், டானிக் சென்றிருக்கிறேனே தவிர இவ்வளவு ஊன்றிப் பார்த்ததில்லை. பசுமை நடை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.//

  அதுதான் பசுமை நடை இயக்கத்தின் வெற்றி.
  நம்ஊரின் பெருமை நமக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்றும் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 16. அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு படமும் அருமை அம்மா...

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையா இருக்கு மா...படிக்கவும் பார்க்கவும்...

  உதயத்தில் சூரியன் காட்சிகள் வழக்கம் போல் பிரமாதம்...


  இந்த மாதரி மதுரையில் நிறைய மண்டபங்கள் இருக்கு இல்ல..எங்க சொந்த காரங்க சில பேர் அங்க தான் காதுகுத்து போன்ற வைபவங்களை வைப்பார்கள்..

  அழகர் திருவிழாவின் போது அந்த மண்டபங்களில் சிறப்பான பூஜைகள் இருக்கும்...


  கோபுர படங்களில் விவேகானந்தர் , இராமலிங்க அடிகலார், நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் இவர்களை எல்லாம் பார்த்து வெகு ஆச்சரியம்...


  தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்...


  இது போல் திருச்சில் ஏதும் குழு உள்ளதா அம்மா ..தெரிந்தால் ..கூறவும்...

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  எப்படி இருக்கிறீர்கள்? நலமா?
  பல மாதங்கள் ஆகி விட்ட்தே!
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
  அனைத்தையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

  இது போல் திருச்சில் ஏதும் குழு உள்ளதா அம்மா ..தெரிந்தால் ..கூறவும்...

  கேட்டு சொல்கிறேன் அனு.

  நான் கேட்டேன் அவர்கள் விசாரித்து சொல்வதாய் சொல்லி இருக்கிறார்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அருமையான வரலாற்று மற்றும் ஆன்மீகப் பயணம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 21. அக்கா படங்கள் ரொம்ப அழகு. அதுவும் எப்படி இவ்வளவு அழகாக அந்தக் க்ளோஸப் படங்கள் ரொம்ப அழகு!!! தகவல்களும் சிறப்பு. மாடு சமர்த்து!!!

  பறவைகளைத் தேடினேன்//

  காலையில் இருக்கணுமே அக்கா...சூரியன் உதிக்கும் சமயம் தானே! இல்லையோ? நானும் இப்படித்தான் தேடுவேன். இப்போது வெயில் என்பதாலோ தெரியலை காகம் காலையில் மட்டுமே தென்படுகிறது. வேறு பறவைகளையும் காணவில்லை. இங்கு. புறா வரும்...அதையும் காணவில்லை.

  ஸ்ரீராம் குதித்திருப்பாரே! மதுரை என்பதால்!!!

  கீதாக்காவும்!!!

  தொடர்கிறோம் அக்கா...

  துளசிக்குப் பதிவுகளை அனுப்புகிறேன். அவர் இந்த மாத இறுதியில் ரிட்டையர் ஆவதாலும், பொதுத்தேர்வு நடப்பதாலும் பாலக்காடு, அவர் வீடு, ரிட்டையர்மென்ட் வேலைகள் என்று கொஞ்சம் பிஸி....அதன் பின் கருத்துகள் எனக்கு அனுப்ப முடியும் என்று சொன்னார் பார்ப்போம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

  //அக்கா படங்கள் ரொம்ப அழகு. அதுவும் எப்படி இவ்வளவு அழகாக அந்தக் க்ளோஸப் படங்கள் ரொம்ப அழகு!!! தகவல்களும் சிறப்பு. மாடு சமர்த்து!!!//

  க்ளோஸப் பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

  ஆமாம் , மாடு சமர்த்து தான் யாருக்கும் அசைந்து கொடுக்காமல் அசைபோட்டு கொண்டு இருந்தது.

  பறவைகள் இரை தேட போய்விட்டன் கீதா.

  ஸ்ரீராம் மிகவும் மகிழ்ந்தார் , பழைய நினைவுகள் வந்தன என்று.
  கீதாசாம்பசிவத்திற்கும் பழைய நினைவுகளை தரும்.

  துளசிதரன் அவர்கள் பணி ஒய்வுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.  பதிலளிநீக்கு
 24. ராமாயணச் சாவடி பல பசுமையான நினைவுகளைக் கிளப்பி விட்டது. என்னோட அருமை நண்பரைப் பார்த்ததும் மனம் மகிழ்ந்தது. எத்தனை வருடங்கள் ஆச்சு பார்த்து! முன்னெல்லாம் பள்ளிக்குப் போகையில் இவரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு தான் போவேன். அதே போல் வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும் போவேன். ராமாயணச் சாவடிக்கு முன்னாலேயே வரும். ராமாயணச் சாவடியில் காலட்சேபங்கள் நடந்து பார்த்திருக்கேன். அதுக்கு எதிரே இருக்கும் தெருவோடு நேரே போனால் சிம்மக்கல் வரும். பல சமயங்களில் பள்ளியில் இருந்து வரச்சே சிம்மக்கல்லில் இறங்கியும் வருவேன். நாங்க அதிகம் இருந்தது மேலாவணி மூலவீதி மற்றும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு. என் கல்யாணத்துக்கு அப்புறமா மேலமாசி வீதியில் தலைவிரிச்சான் தெருவுக்குப் போனாங்க. அதன் பின்னர் மதுரை வாசம் சில ஆண்டுகளில் முடிவடைந்தது. என் பெண், பையர் இருவரும் தலைவிரிச்சான் தெருவில் தான் பிறந்தாங்க!

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  என் தங்கை வீட்டுக்கு அருகில் உள்ள நேரு ஆலால சுந்தர பிள்ளையார் என்று முகநூலில் படம் போட்ட போது வந்து கருத்து சொன்னீர்கள். அதுதான் கீதாவிற்கு பிடித்த இடம் என்று போட்டேன். நண்பரைப் பார்க்க உடனே வந்து விட்டீர்கள். நண்பரை பார்த்து மகிழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி.

  கிருஷ்ணன் கோவில் கோபுரம் இருக்கே இந்த பதிவில்.

  சிம்மக்கல் தெரிந்த இடம், தலைவிரிச்சான் தெரு போனது இல்லை தங்கையிடம் கேட்க வேண்டும்.
  மலரும் நினைவுகளை உங்களுக்கும், ஸ்ரீராமுக்கும் தந்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 26. முகப்பில் இருந்த கோபுரத்தை மட்டும் பார்த்துட்டுக் கிருஷ்ணன் கோயில் கோபுரத்தைப் பார்க்காமல் விட்டிருக்கேன். இப்போ நீங்க சொன்னப்புறமா வந்து பார்த்தாச்சு! நன்றி. அங்கே தினம் தினம் கோஷ்டிக்குக் காலம்பர ஆறரைக்கெல்லாம் போயிடுவோம். தம்பிக்கு வர முடியலைனா பட்டாசாரியாரிடம் சொல்லி அவனுக்கும் பங்கு வாங்கிச் செல்வேன். அண்ணா தனியாகப் போவார். :) அப்போ சொன்ன பிரபந்தங்கள் எல்லாம் இப்போ ஆங்காங்கே தான் நினைவில் வருது! ஒரே ஒரு முறை கூடலழகர் கோயில் கோஷ்டிக்குப் போனோம். அதுவும் தற்செயலாக!

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  மீண்டும் வந்து கிருஷ்ணன் கோவில் தரிசனம் செய்து விட்டீர்களா! மகிழ்ச்சி.
  பிரபந்தங்கள் பாடிய நினைவுகள் வருகிறதா? எவ்வளவு அருமையான காலங்கள்
  நினைத்துப் பார்க்க எல்லையில்லா மகிழ்ச்சிதான்.
  கூடலழகரைப்பார்த்தும் வெகு நாட்கள் ஆகி விட்டது.

  உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி, நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அக்காவுக்கு வாய்ப்பு கம்மி என்று தங்கச்சி போய் வந்து எழுதுகிறார். நன்றி கோமதி மா. எத்தனை இனிய நினைவுகள் வடக்கு மாசி வீதியில். பனிப்படலம் போல மதுரை நினைவுகள்.

  எடுத்துக் கொடுத்திருக்கும் படங்கள் அத்தனையும் இனிமை.
  நீங்கள் மேல் நோக்கித்தான் பார்க்கிறீர்கள் நன்மையும் அதுவே.
  என்றும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  மதுரை நினைவுகளை நீங்களும் எழுதிக் கொண்டு தானே இருக்கிறீர்கள்.
  இனிய நினைவுகள் என்றும் மனதில் இருக்கும் தானே!
  படங்களை ரசித்தமைக்கு நன்றி.
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 30. அருமையான வரலாற்றுப் பயணம்
  கோபுரங்களில் வரலாற்றுத் தலைவர்களின் படங்களைப் பார்க்க வியப்பாக இருக்கிறது
  ந்ன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 31. வழக்க்ம் போல அழகான படங்கள்...

  மதுரை இராமாயணச் சாவடியின் அழகையும்
  மேலதிகச் செய்திகளையும் அறிந்து கொண்டேன்...

  நேரு, காந்தி, போஸ் - என, தலைவர்களின் திருவுருவங்களைக் கண்டு மகிழ்ச்சி..

  அடுத்த பதிவுக்காக
  அன்பின் நல்வாழ்த்துகளுடன் காத்திருக்கின்றேன்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை தெய்வங்களாக மதித்த காலம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.

  பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  காத்துஇருப்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. ரசித்துப் படித்தேன். 'பசுமை நடை' என்பது, ஒரு குழுவாக, பணம் கலெக்ட் செய்து கூட்டிச் செல்கிறார்களா? பூக்கார அம்மா முகம்தான் மனதில் இருக்கிறது. எவ்வளவு எளிய மக்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

  பசுமை நடை பணம் வசூல் செய்வது இல்லை.
  ஒரு இடத்திற்கு வர சொல்லி விடுவார்கள்.
  அவர்களை போகும் இடத்திற்கு நடந்தோ வாகனத்திலோ பின் தொடர வேண்டும்.
  வரலாற்று சின்னங்கள் அழிந்து வருவதை ஆவணபடுத்துவது அவர்கள் நோக்கம் .
  போய் வந்த இடங்களைப்பற்றி புத்தகம், கையேடு தயார் செய்ய நம்மால் முடிந்த பண உதவி செய்யலாம். அவ்வளவு தான். உள்ளூர் என்றால் உணவு கிடையாது.
  வெளியில் வெகு தூரமாக போனால் சாப்பாடு வசதியும் செய்வார்கள். அதற்கு நாம் கொடுக்கும் பணம் உதவியாக இருக்கும்.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. இறைவன் விட்டவழி என்று இது போன்ற
  எளிய மக்கள் அன்றாட கடமைகளை செய்கிறார்கள் நெல்லை.

  பதிலளிநீக்கு
 37. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. சுற்றுப்புறக் காட்சிகளை அவதானித்துப் படமாக்கிய விதமும் அருமை. இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 38. ரஸித்துப் படிக்கப் பல விஷயங்களுடன் படங்களும். அழகு. இம்மாதிரி பிரமயங்கள் நம் காலத்திலில்லையே என்று நினைக்க வைத்தது. மிக்க நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  படங்களையும் , பதிவையும் ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் காமாட்சி அம்மா. வாழ்க வளமுடன்.
  இந்தக் காலத்தில் சாவடி, சத்திரங்களில் உணவு கொடுக்கபடவில்லை என்கிறீர்களா?
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வடக்கு மாசி வீதி காக்காத் தோப்பு கிருஷ்ணன் கோவில் நேரு ஆலால விநாயகர் கோவில் (சந்திரா டாக்கீஸ் மிஸ்ஸிங்) எல்லாம் படங்களுடன் சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் இரா. முத்துசாமி அவர்களே, வாழ்க வளமுடன்.

  உங்கள், கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் சகோதரி

  தங்களின் பயண விபரங்களும்.பயணத்தின் அருமையான காட்சிகளை படமெடுத்து அனைவருக்கும் விளங்குமாறு விபரித்திருப்பதும் படித்து மிகவும் பயனுற்றேன். இனி மதுரை செல்லும் சமயத்தில் காண வாய்ப்பு கிடைத்தால் சென்றுவிட்டு வரும் ஆவலைத்தூண்டியது தங்கள் பதிவு. படங்கள் அதற்கு விளக்கங்கள் அருமை.இனியும் தொடர்கிறேன் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  தொடர்வதற்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு