Sunday, June 18, 2017

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி -3

கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு எல்லோரும் சேர்ந்து நடந்தோம். 

//முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.//

அதிராவின் பின்னூட்டம்  முத்துப்பட்டி முதல் பகுதிக்கு. 

ஆமாம் அதிரா , குரூப்பாகத்தான் போக முடியும். தனிக்குடும்பாக போவது கஷ்டம் தான்.

 இரு புறமும் முள்காடு -  நடுவில் பாதை - -இடை இடையே வீடுகள்.


கிராமத்து அழகிய வீடுகள் -  பார்ப்போம், வாருங்கள்!


நாய், ஆடு இவற்றுடன் வீட்டின் வெளியே  பசுமை நடை மக்களைப் பார்க்கும் இல்லத்து அரசி.

//அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே..//
அதிராவின் கேள்வி
என் பதில்:-

அங்கும் மக்கள் இருக்கிறார்கள்.  ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள். தண்ணீர் வசதியை
அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

கரையான், ஓலைக் கூறையை அரித்து இருக்க, இல்லத்தில்  ஆள் இருக்கா என்று தெரியவில்லை . ஆனால் ஆடு ஓய்வு கொள்கிறது வாசலில்
இப்போது எல்லோர் வீடுகளிலும்   மின் சாதனங்கள்  இருப்பதால் ஆட்டுக்கல் வெளியில் உருண்டு கிடக்கிறது, அம்மி திண்ணையில் ஓய்வு எடுக்குது. டிஷ்  ஆன்டெனா போட்டு இருக்கிறார்கள்.
 இரட்டைத் திண்ணை, கழிவறை, குளியல் அறை வசதி எல்லாம்  இந்த வீட்டில் இருக்கிறது.
 அழகான கூறை வீடு - மண் , சாணம் மெழுகிய தரை  - அடுப்பு எரிக்க முள் சுள்ளி, அம்மி வெளியே 
 வீட்டில் மேல் கூறை  உரச் சாக்கு போல் இருக்கிறது. காற்றில்  பறந்து விடாமல் இருக்கக் கயிறால் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
  
தூரத்திலிருந்து படம் எடுத்தேன்,  அவர்கள்  அனுமதியுடன் , 
வீட்டையும் அவர்கள் வெளியில் சமையல் செய்வதையும் படம் எடுத்தேன் , அவர்கள் பூரி செய்து கொண்டு இருந்தார்கள்,  
அன்புடன்," சாப்பிட வாங்க "என்று எங்களைக் கூப்பிட்டார்கள்..
அந்த கிராமத்தில் இவர்கள் வீடுதான் கொஞ்சம் பெரிது , டெரேஸ் பில்டிங் 
கிட்டிப்புள் விளையாடிக்
 கொண்டு இருந்த  சிறுவன்  அவனை படம் பிடிக்கச் சொன்னான் 
ஆங்காங்கே  தண்ணீர் குட்டைகள், அதில் கல்லைப் போட்டு தண்ணீர் வட்டமிடும் அழகை ரசிக்கும் சிறுவன்.  எங்கள்பயணக்குழுவில்  உடன் வந்த சிறுவன்.இயற்கையாக அமைந்த  நீர்த் தேக்கத்தின் கரையில் அமர்ந்து  பேசுவது இனிமைதான். (அலைபேசியில் எடுத்தபடம்)

பாறைகளுக்கு நடுவில் நீர்த் தேக்கம்.


                                                      தண்ணீர் வசதி இருக்கிறது.


பழுது அடைந்த வீட்டிலும் கல் திண்ணை.

பன்றிகளும் உண்டு
 ஆடு மேய்ப்பவர்கள் நாங்கள் வீடு திரும்புவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

 கிராமத்துத் தெய்வம் (ஊதுவத்தி  பொருத்தி வைத்து இருக்கிறார்கள்)
தெய்வத்தின் பாதமே சரணம் என்று இருக்கும் ஆடுகள். தாயின் மடியைக்  குழந்தைகள்   அசுத்தம் செய்தால்  தாய்க்குக் கோபம் வராது தானே!

கிராமத்துக் குல தெய்வம் போல ! பொங்கல் வைத்து வழிபட்டு இருக்கிறார்கள்.


இந்த கிராமத்து வீடுகளில் ஆடு, கோழி,   வான்கோழி, நாய் வளர்க்கிறார்கள், மாடு யாரும் வைத்துக் கொள்ளவில்லை. 


குட்டி நாய்க்கு அந்த செருப்பிடம் கோபமா? பயமா? ( குட்டி நாய்கள் செருப்பைக் கடித்துத் தூக்கிக் கொண்டு போய் எங்காவது போட்டு விடும்)
                             

                                     சமத்தாய் என் பின்னாலேயே வாருங்கள்!.
எல்லோர் வீடுகளிலும் இரவு கோழியை அடைக்கும் கூடு உண்டு.
திண்ணை இல்லா வீடே கிடையாது. 
திண்ணை கட்டவில்லையென்றாலும் செங்கலை  வைத்து அதன் மேல் கற்பலகையை வைத்து திண்ணை தயார் செய்து இருந்தார்கள் சில வீடுகளில்.

அந்தக் காலத்தில்  மட்டும் அல்ல இப்போதும்  திண்ணை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசி மகிழ்வார்கள். ஊருக்குள் யார் வந்தாலும் தெரிந்து விடும் எந்த வீட்டுக்கு போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று திண்ணையில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்களிடம் சொல்லாமல்  கடந்து போய்விட முடியாது.
இப்போதும் வீட்டு வாசலிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பக்கத்தில் கடைகண்ணி கிடையாது வெகு தூரம் வந்து தான்  பொருட்கள் வாங்க வேண்டும். கோவில்கள் பக்கத்தில் இல்லை , இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துள்ள தெய்வங்களை வணங்கி திருப்தி அடைகிறார்கள்.

எவ்வளவு வசதிகள் இருந்த போதும் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் சிலருக்கு (என்னையும் சேர்த்து தான்)  இங்கு உள்ளவர்கள் குறைந்த வசதியிலும் மன மகிழ்ச்சியுடன்   வாழ்வதைப் பார்த்தால்  நாம்  எவ்வளவு வசதிகளுடன் மனக்குறையுடன் வாழ்கிறோம் என்று வெட்கம் ஏற்படுகிறது.

"மனம் இருந்தால் பறவைக்  கூட்டில் மான்கள் வாழலாம்."  என்ற பாடல்  நினைவுக்கு வருது.

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் தொடர்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது. 

                                                                வாழ்க வளமுடன்!


36 comments:

KILLERGEE Devakottai said...

நிறைய படங்கள் செய்திகளோடு அருமை சகோ வாழ்த்துகள்
த.ம.1

Angelin said...

மனதுக்கினிய காட்சிகள் அக்கா ..சிறிய வீடுகள்தான் ஆனா இயற்கைசூழலும் அமைதியும் நிறைந்திருக்கு அங்கே

எனக்கு ரொம்ப ஆசை நான் சிறு வயதில் வளர்ந்தது இப்படி கிராமத்து சூழலில்தான் ..அது நினைவுக்கு வந்தது ..
ஆனா இப்போ இந்த ஊரிலும் அம்மிக்கல் ஆட்டுக்கல்லும் வேண்டாதாராகிட்டாங்களா :(
அந்த ஆடுகளும் அம்மாபின்னே செல்லும் கோழிக்குஞ்சுகளும் அழகோ அழகு !
அந்த குட்டி வெள்ளை நாய்க்குட்டி செம கியூட் :) செருப்பை தூக்கிட்டு போக தான் நிற்கிறது :)
எங்க வீட்ல அப்பாவின் ஷூவில் இருக்கும் சாக்ஸ் காணாமற் போயிடும் சில நேரம் அவசரத்துக்கு ஒரு செருப்பு காணாமல் போயிடும் குட்டிகளின் கை (வாய் )ங்கரியத்தால் :)

ஸ்ரீராம். said...

சுற்றுப்புறங்களையும் அழகாகப் படக் எடுத்திருக்கிறீர்கள். குட்டி பைரவர் அழகு. இன்னமும் இந்த ஊர்கள் முன்னேற்றத்தைக் காணாமல்தான் இருக்கின்றன.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
இரண்டாம் பதிவை பார்க்கவில்லையா?
அதிரா கேள்வி கேட்டு இருக்கிறார் பாருங்க்கள்.
இயற்கை சூழலும் அமைதியும் இருப்பது உண்மை.
ஊர் முழுவதும் அம்மி, ஆட்டுக்கல் வெளியில் போட்டு விட்டார்கள்.
கோழி குஞ்சு படம் நிறைய எடுத்தேன். அங்கு இருந்த நாய்கள் எல்லாமே அழகு.
ஒருமுறை கோவிலில் என் ஒற்றை செருப்பை காணவில்லை, அப்போது பூவிற்கிற அம்மா நாய் குட்டி செருப்புடன் விளையாடிக் கொண்டு இருந்தது தூக்கி போட்டு இருக்கும் பாருங்கள் என்றார்கள் அது போல் வெகு தூரத்தில் என் செருப்பை தூக்கி போட்டு இருந்தது தேடி கண்டு பிடித்து எடுத்தேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நிறைய இடங்கள் இப்படித்தான் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது என்றாலும் மின்சார , தண்ணிர் வசதி இருக்கிறது.

சில இடங்களில் போக்குவரத்து வசதியும் இருக்காது கஷ்டப்படுவார்கள் .
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய காட்சிகள். உங்களுடன் நாங்களும் அங்கு வந்த உணர்வு. நன்றிம்மா.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

கிராமீய மணத்துடன் பதிவு முழுவதும் அழகான படங்களுடன் உள்ளன.

ஏழை எளிய மக்கள் .... திண்ணைகள் .... நிம்மதியான வாழ்க்கை.

//எவ்வளவு வசதிகள் இருந்த போதும் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் சிலருக்கு (என்னையும் சேர்த்து தான்). இங்கு உள்ளவர்கள் குறைந்த வசதியிலும் மன மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்த்தால் நாம் எவ்வளவு வசதிகளுடன் மனக்குறையுடன் வாழ்கிறோம் என்று வெட்கம் ஏற்படுகிறது. //

உண்மைதான். வசதி வாய்ப்புக்களைவிட, மன மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் முக்கியமான தேவையாகும்.

’மேலும் ஏதும் எனக்கு வேண்டாம் ... இப்போது என்னிடம் இருக்கும் இதுவே போதும்’ என்ற திருப்தியான மனம் கொண்டவனே மிகப்பெரிய பணக்காரனாகும்.

அதுபோன்ற மனம் இன்றி மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என அலாய்ப் பறக்கும் அனைவருமே எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருப்பினும் தரித்திரர்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றிகள்.

துரை செல்வராஜூ said...

பழைமையான கிராமத்துத் தெருவில் நடந்த மகிழ்ச்சி...

ஆனால்!..
டிஷ் ஆண்டெனா கூரையில் ஏறி விட்டது..

ஆடுகளைத் தவிர்த்த கால்நடைகளுக்கு இடமில்லாமற் போனது..

பெரும்பாலான கிராமங்களில் இதுவே நிதர்சனம்!..

அழகிய படங்கள்.. வாழ்க நலம்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

இரசிக்கவைக்கும் படங்களுடன் ஒவ்வொன்றுக்கும் அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

//ஏழை எளிய மக்கள் .... திண்ணைகள் .... நிம்மதியான வாழ்க்கை.//

ஆமாம் சார்.


//உண்மைதான். வசதி வாய்ப்புக்களைவிட, மன மகிழ்ச்சிதான் வாழ்க்கையின் முக்கியமான தேவையாகும்.

’மேலும் ஏதும் எனக்கு வேண்டாம் ... இப்போது என்னிடம் இருக்கும் இதுவே போதும்’ என்ற திருப்தியான மனம் கொண்டவனே மிகப்பெரிய பணக்காரனாகும்.

அதுபோன்ற மனம் இன்றி மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என அலாய்ப் பறக்கும் அனைவருமே எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருப்பினும் தரித்திரர்கள் மட்டுமே.//


நன்றாக சொன்னீர்கள், இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ முயலவேண்டும். மன நிம்மதி, மனமகிழ்ச்சி இருந்தால் போதும்.

அருமையான கருத்துக்கு நன்றி சார்.கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

//டிஷ் ஆண்டெனா கூரையில் ஏறி விட்டது..//

வாழ்க்கையில் மிக தேவையான ஒன்றாக ஆகி விட்டது.
இலவச இணைப்பாய் எல்லோர் வீடுகளுக்கும் வந்து விட்டதே!
ஆடுகளும் இலவச இணைப்புதான். இங்ந்த கிராமத்தில் வயல்கள் காண்ப்படவில்லை.,அப்போ ஆடுகள் வளர்த்து வாழ்கிறார்கள் என்று தான் தெரிகிறது.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


கரந்தை ஜெயக்குமார் said...

படங்களும் பதிவும் அருமை
ஒரு அழகிய கிராமத்திற்குள் பயணம் செய்தஉணர்வு ஏற்படுகிறது
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

தமிழ் மனம் இணையாதோ ? செல்லிலும் இல்லை கணினியிலும் இணையவில்லை.

கோமதி அரசு said...


தேவகோட்டை ஜி

காலையில் காட்டியதே ! தமிழ்மணம்
இப்போது ஏன் தெரியவில்லை என்று
தெரியவில்லை.
மீள் வருகைக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

RICHNESS is not
Earning More,
Spending More Or
Saving More,

but
"RICHNESS IS
WHEN YOU NEED NO MORE"

- HIS HOLINESS

http://gopu1949.blogspot.in/2013/11/88.html

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் சார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று.
தேவைகள் குறைய குறைய வாழ்வில் இன்பம் சேரும் என்பது உண்மைதான்.
அருமையான கருத்துக்கு நன்றி.
மீள் வருகைக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குறைந்த வசதியுடன் நிறைவான வாழ்க்கை. அதுதான் உண்மையான வாழ்க்கை. மற்றெதெல்லாம் வாழ்க்கை என்ற நிலையில் நடிப்பதே என்பது என் எண்ணம்.

கோமதி அரசு said...

கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் கொடுத்த சுட்டியை படித்து விட்டேன்.
நன்றி.
அருமையான பதிவு.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்ன கருத்து உண்மைதான் சார்.
குறைந்த வசதி நிறைவான வாழ்க்கை அருமை.
உங்கள் கருத்துக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

தாய்க் கோழியைப் பின் பற்றும் குஞ்சுகளை ஃபேஸ்புக்கிலும் பார்த்து ரசித்தேன். படங்களோடு பகிர்ந்த விவரங்களும் இரசிக்க வைத்தன.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
படங்களையும் விவரங்களையும் ரசித்தமைக்கு நன்றி.

G.M Balasubramaniam said...

இப்படியெல்லாம் இருந்தால்தான் கிராமமாகும் போல

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Ramani S said...

நீங்கள் சுருக்கமாக செய்தியைச் சொல்லிப்போனாலும்
படங்கள் மீதி விவரத்தை அருமையாக விரிவாகச்
சொல்லிப்போகின்றன
வாழ்த்துக்களுடன்...

காமாட்சி said...

அந்த கிராமத்தையே நேரில் சுற்றிப்பார்த்து வந்தது போன்ற எண்ணம். அந்தத் திண்ணைகள் இம்மாதிரி கிராமங்களில்தான் பார்க்க முடியும். படங்கள் இதெல்லாம் எங்கள் கிராமத்தைச் சுற்று இருந்த குக்கிராமங்கள் போல இருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்போது இருக்காது.
வசதிகளே இல்லாவிட்டாலும் அவர்கள் மிகவும் திருப்தியுடனேதான் இருந்திருப்பார்கள். நன்றிம்மா. அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான், குக்கிராமம் இப்போது மாறுதல் அடைந்து இருக்கும்.
இருக்கும் வசதிகளுடன் திருப்தியாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

asha bhosle athira said...

ஆஹா ஆஹா.. என்ன ஒரு அழகிய கிராமம்.. ஓரளவுக்கு வசதிகள் உள்ள கிராமமாகத்தான் இருக்கிறது.. என்ன் அழகு நேரில் போய்ப் பர்க்கோணும்.. ஒரு நாள் இருந்திட்டு வரோணும் எனும் ஆவலைத் தூண்டுது படங்கள்.

என் கேள்விக்கும் விடை கிடைச்சிருக்கே:)..

(என்)வைரவர் சூலாத்துடன் ஆட்டுக்குட்டி.. என்ன ஒரு அழகாக இருக்கு.

எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்:). படம் பார்த்து ஆசைப்படுகிறோம்ம்.. ஆனா போய் இருக்க விட்டால் இருந்திடுவோமா என்ன ஹா ஹா ஹா :).

கோமதி அரசு said...

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
ஒரளவு வசதிகள் உள்ள கிராமம்தான்.
உங்கள் இன்னொரு கேள்விக்கும் ஏஞ்சலின் பதில் சொல்லி இருக்கிறார்
பகுதி -2 ல் மலைரசி, மலைராணி என்றுதானே கூறுகிறோம் என்று.


//எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்:). படம் பார்த்து ஆசைப்படுகிறோம்ம்.. ஆனா போய் இருக்க விட்டால் இருந்திடுவோமா என்ன ஹா ஹா ஹா :).//

ஆமாம், உண்மைதான் ஒருநாள் இருந்து வரலாம் தொடர்ந்து இருப்பது கஷ்டம்தான்.

உங்கள் கருத்துக்கு நன்றி .

KILLERGEE Devakottai said...

அப்பாடா த.ம.2
எனது கணினியில் உங்கள் தளம் திறப்பதே எனது பாக்கியம்

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.'கஷ்டப்பட வேண்டாம் ஜி தமிழ்மண வாக்கிற்கு.
எளிதாக இருந்தால் போடுங்கள்.
நன்றி.

couponsrani said...

வணக்கம் நண்பரே
உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
வாழ்த்துக்கள்
discount coupons