செவ்வாய், 6 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலக பதிவு -4


மிக்கி ஜெயண்ட் வீல்
வால்ட் டிஸ்னி
டிஸ்னி உருவாக்கிய கார்ட்டூன்
 கதாபாத்திரங்கள் அவரை வாழ வைத்தது .   
நம்மை மகிழ வைத்தது.


//நவம்பர் 18-ம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.
அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.
மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.
மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?//
நன்றி-- தி இந்து .
இரவு நேரம் வண்ணங்கள் மாறும் அழகு
நீரில் தெரியும் பிம்பமும் அழகு.

மைசூர் அரண்மனை     தசராவில் ஒளிவிளக்கால் அலங்காரம் செய்து இருப்பது போல் இருக்கிறது அல்லவா?மயிர்கூச்செறியச்  செய்யும்  அதிவேகத்தில் செல்லும் சாகசப் பயணம் 
இரவு  இசை நடனம்மின்விளக்கும் சந்திர ஒளியும்

நிலவொளி
                                        
  விளக்கு அலங்காரப் படம் எடுக்கிறாய் ஆச்சி 'என் பூட்ஸிலும் விளக்கு இருக்கு எடு ஆச்சி" என்று உடகார்ந்து கொண்டு கலரை மாற்றி மாற்றி போட்டுக் காட்டிப் படம் எடுக்கச் சொன்னான் பேரன்,  எடுத்தவுடன் மகிழ்ச்சி.
                                                      

      காலை முதல்  நடந்து நடந்து களைத்துப் போய் அமர்ந்து விட்டான்.                                                    இரவில் ஓளிரும் பூட்ஸ்.
                             
பலூனுக்குள்
 மிக்கி அடைபட்டு இருக்கிறது.
வாழ்க வளமுடன்.

23 கருத்துகள்:

 1. அதிவேக சாகஸப் பயணத்தில் சென்றீர்களா? பூட்ஸில் விளக்கா? எப்படி?

  படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  அதிவேக சாகஸப் பயணத்தில் செல்லவில்லை. அதைப் பார்க்கவே பயம் .

  முன்பு சின்ன குழந்தைகள் நடக்கும் போது சத்தமும், லைட்டும் எரியும் பூட்ஸ் இருந்தது.

  , இப்போது பெரிய குழந்தைகளுக்கு சத்தம் இல்லாமல் லைட் மட்டும் எரிவது போல் வந்து இருக்கிறது.'
  முன்பு பூட்ஸின் மேல் பகுதி மட்டும் லைட் எரியும் இப்போது பூட்ஸ் அடிபகுதி சுற்றிலும் லைட் வசதி செய்து இருக்கிறார்கள்.பாட்டரி உள்ளது அடிபகுதியில்.

  உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 3. பூட்ஸில் யூ எஸ் பி வசதி உள்ளது சார்ஜ் செய்து கொள்ளலாம்,
  ரீ சார்ஜபிள் பாட்டரியும் உள்ளது பூட்ஸில்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் எடுத்தவரின் கலை ஆர்வத்தை பிரதிபலிக்கிறது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வெளிச்சம் தரும் காலணிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டன...
  94/95 களில் என் பிள்ளைகளுக்கு வாங்கியிருக்கின்றேன்..

  காசு வடிவிலான லித்தியம் பேட்டரிகள் காலணிகளுக்குள் இருக்கும்..
  அவை தீர்ந்து விட்டால் அவ்வளவு தான்...

  இப்போது அதிக வசதியுடன் வந்திருக்கின்றன.. புதிய செய்தி...

  இன்றைய பதிவில் படங்கள் மனதை மயக்குகின்றன...

  அழகிய படங்கள் ... அரிய செய்திகள்..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது உண்மை தான் காலத்திற்கு ஏற்ற மாதிரி பூட்ஸில் மாற்றம். உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. அருமை
  அருமை
  தங்களின் பதிவாலும், படங்களாலும்
  நேரில் சென்று வந்த உணர்வு
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 9. நன்றாக ரசித்திருக்கிறீர்கள். எனக்கு டிஸ்னி லேன்ட் அவ்வளவா பிடிக்காது (பாரிஸ்ல போயிருக்கேன்). Ride எதையும் நான் ரசிப்பவனல்ல. படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

  குழந்தைகளுடன் இருக்கும் நேரம் மகிழ்ச்சிதான் தமிழன்.

  படங்களை ரசித்தமைக்கை நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பகலில் ஒருவித அழகு எனில் இரவில் இன்னொரு கொள்ளை அழகு. அதிலும் அந்த வீல் கலர் மாறுவதை அழகழகாக படமெடுத்திருக்கிறீங்க..

  //டிஸ்னி உருவாக்கிய கார்ட்டூன்
  கதாபாத்திரங்கள் அவரை வாழ வைத்தது .
  நம்மை மகிழ வைத்தது.//

  உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 13. கோமதி அக்கா, ரோலர் கோஸ்டர் எல்லாம் ஏறிச் சுழன்றடிச்சதால களைச்சுப் போயிருக்கிறீங்க:).. களைப்பாலே சிரிப்பு மிஸ்ஸிங்... இப்படியான இடம் பார்க்கப் போனாலே முடிவில் பேசக்கூட முடியாத களை வந்துவிடும்.. அதிலும் வெயில் குளிர் எதுவாயினும் கொஞ்சம் ஓவர் எனில் அது வேறு களை.

  பதிலளிநீக்கு
 14. பேரனின் சூஸ் கலர் கலரா ஜொலிக்குது.. இப்போ சூஸ்களிலும் சில்லுகள் லைட்ஸ் சவுண்ட் என என்னென்னமோ எல்லாம் வந்து கொண்டிருக்கு... டிஸ்னி பற்றி ஆராட்சி பண்ணி .. எழுதியதும் விளக்கத்தைத் தருது. நாமும் கூட வந்த உணர்வு.

  பதிலளிநீக்கு
 15. இரவில் மிளிரும் வண்ண வண்ண படங்கள்...அனைத்தும் மிக அழகு...

  பதிலளிநீக்கு
 16. இம்மாதிரியான இடங்களுக்குச் சென்றதே இல்லை. என்றாலும் எல்லா ரைட்ஸும் என்னால் போக முடியுமானு சந்தேகமே! ஊஞ்சலில் வேகமாய் ஆடினாலே தலை சுத்தும்! ஹிஹி!

  வெளிச்சம் தரும் காலணிகள் எப்போதோ வந்து விட்டன. உங்கள் பேரனின் சந்தோஷம் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. நன்கு ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  எல்லோரும் எல்லா ரைட்ஸும் போக முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும்.
  ஒரு நாளில் அத்தனை இடங்க்களையும் சுற்றிப்பார்த்து ரைட்ஸுசும் போவது இயலாத காரியம். இரண்டு மூன்று நாட்கள் பார்த்தால்தான் அது சாத்தியமாகும்.ஆனால் நம் பர்ஸ் இளைத்து போகும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. என்ன சொல்ல அக்கா. இரவு லைட்ஸ் படங்கள் ரெம்ப அழகா இருக்கு. அதுவும் கலர்மாறும் வீல், நீங்க சொன்னது மிக சரி அக்கா. உண்மையில் மைசூர் அரண்மனை மாதிரியே இருக்கு. நானும் மைசூர் அரண்மனையை லைட் ல் பார்த்திருக்கேன். சூ க்களில் இப்ப விதவிதமா வந்திருக்கு. உங்க கூட செலவில்லாமல் டிஸ்னி அழைத்து போனமைக்கு ரெம்ப நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
  அனைத்து படங்களையும் பொறுமையாகப் பார்த்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
  சூக்களில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கும் தான்.

  பதிலளிநீக்கு
 20. அக்கா நீங்கள் ஆர்வத்துடன் படம் எடுத்திருப்பது....ஆஹா! எனக்கும் இப்படித்தான் எடுத்துவிடுவேன். நம் வெங்கட்ஜியும்....இரவு விளக்குடன் கூடிய படங்கள் ரொம்ப அழகு....நன்றாக வந்திருக்கிறது. ஆனால் எனக்கு மிக மிக மிக மிகப் பிடித்து ரசித்தது உங்கள் பேரன் "ஆச்சி என் ஷூவை எடுங்க"நு சொல்லி உங்களை மகிழ்வித்து....தன் ஷூவின் கலரை மாற்றி மாற்றிப் போட்டுப் படம் எடுக்க வைத்து தானும் மகிழ்ந்து உங்களையும் மகிழ்வித்ததுதான்....இது போன்ற தருணங்கள் தான் வாழ்வின் மிக மிக முக்கிய அதி முக்கிய தருணங்கள்.நெகிழ்ந்தேன்....நம்மை உயிர்ப்பிக்கும், நம்மை மகிழ்வுடன் வாழ உந்து சக்தி அளிக்கும் தருணங்கள் அக்கா....நம் குழந்தைகளின் அன்பு!!! அதற்கு ஈடு வேறேது?!!!! தங்கள் பேரன் செம க்யூட்!!! அப்படியே உங்களைப் போன்று அதுவும் சிரிக்கும் போது ஆச்சியேதான்!!! சின்ன கோமதி ஆச்சி!!!!! தங்கள் பேரன் என்றென்றும் இதே மகிழ்வுடன் இருந்திட இறைவனிடம் பிரார்த்தனைகள்....வாழ்க குழந்தை!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  //ஆச்சி என் ஷூவை எடுங்க"நு சொல்லி உங்களை மகிழ்வித்து....தன் ஷூவின் கலரை மாற்றி மாற்றிப் போட்டுப் படம் எடுக்க வைத்து தானும் மகிழ்ந்து உங்களையும் மகிழ்வித்ததுதான்....இது போன்ற தருணங்கள் தான் வாழ்வின் மிக மிக முக்கிய அதி முக்கிய தருணங்கள்.நெகிழ்ந்தேன்....நம்மை உயிர்ப்பிக்கும், நம்மை மகிழ்வுடன் வாழ உந்து சக்தி அளிக்கும் தருணங்கள் அக்கா....நம் குழந்தைகளின் அன்பு!!! அதற்கு ஈடு வேறேது?!!!! தங்கள் பேரன் செம க்யூட்!!! அப்படியே உங்களைப் போன்று அதுவும் சிரிக்கும் போது ஆச்சியேதான்!!! சின்ன கோமதி ஆச்சி!!!!! தங்கள் பேரன் என்றென்றும் இதே மகிழ்வுடன் இருந்திட இறைவனிடம் பிரார்த்தனைகள்....வாழ்க குழந்தை!!!!//

  உங்கள் அன்பான பின்னூட்டம் கண்டு மனது மிகவும் மகிழ்ந்து போனது.
  நெகிழ வைத்த பின்னூட்டம்.
  குழந்தைக்கு தங்களின் வாழ்த்து கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி.

  படங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு