புதன், 9 ஆகஸ்ட், 2017

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

என் கணவர் வரைந்த படங்களை என் வலைத்தளத்தில் ஒரு இடத்தில் சேகரிக்கலாம் என்று  சேமிக்க ஆரம்பித்தேன், அப்புறம் பார்த்தால் அதில் சக பதிவர்களின் அன்பு அழைப்பின் பேரில் எழுதிய பதிவுகள் வந்தன. 

//முன்பெல்லாம், போட்டிகள், தொடர்பதிவுகள் என கொண்டாட்டமாக இருக்கும்! எத்தனை தொடர்பதிவுகள் – ஒரே தொடர்பதிவுக்கு பலரிடமிருந்தும் அழைப்பு வரும் அளவிற்கு இருந்ததும் உண்டு. இப்போதெல்லாம் எழுத யாருமே இல்லையோ என்ற ஐயம் வந்திருக்கிறது! சக பதிவர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த விருதுகள் அளித்து மகிழ்ந்ததும் நடந்திருக்கிறது. விருதுகள் மூலம் பணங்காசு கிடைக்காது என்றாலும், நாம் எழுதுவதையும் மதித்து சக பதிவர் ஒருவர் விருது அளிக்கிறாரே என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைத்திருக்கும் – விருது பெற்ற ஒவ்வொரு பதிவருக்கும்!//

இப்படி சொன்னவர் யார் என்று தெரிந்து இருக்கும்  உங்களுக்கு. வெங்கட் நாகராஜ்  தான்.
சமீபத்தில் வெங்கட் தன் 1400 வது பதிவில் குறிப்பிட்டுச் சொல்லி ஆதங்கப்பட்டு இருந்தார்.

வெங்கட்  பதிவைப் படித்தவுடன்  எனக்குத் தொடர் பதிவுகளை (நான் எழுதிய ) படிக்க ஆசை வந்து விட்டது.  படித்தேன், இங்கு பகிர்ந்த பதிவுகளில் நான் எழுதிய சில தொடர் பதிவு இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள்!

இன்னும் நிறைய தொடர் அழைப்புகள்  பதிவுகள் இருக்கிறது.  இந்த பதிவில் கணவர்
படம் வரைந்த தொடர் அழைப்பு பதிவுகள் மட்டும் இங்கு இருக்கிறது. படத்துக்கு கீழே
பதிவுகளில்  எழுதியவைகளை கொஞ்சமாய் பகிர்ந்து இருக்கிறேன்.


என் கேள்விக்கென்ன  பதில் ? என்ற தொடர் பதிவில்

அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள். 



தீபாவளி வாழ்த்துக்கள் மலரும் நினைவுகள் பதிவுக்கு வரைந்த படம்
இந்தப் பதிவும் தொடர் அழைப்பு தான்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.






ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.

-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி. நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.



காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 


அபிராமி அன்னைக்கு அழகிய அங்கி என்ற பதிவுக்கு அபிராமி பட்டர் வரலாறு

அந்த அங்கி பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.





சித்தன்னவாசல் பதிவுக்கு வரைந்து தந்த படம்.

அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.


பொங்கலோ பொங்கல் !  பதிவுக்கு  வரைந்து தந்த வாழ்த்து அட்டை

பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது
துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.
   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

-----------------


பொங்கலோ பொங்கல் -பாகம்-2 


வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.

சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.
                                                                     ----------


மாட்டுப்பொங்கல் பதிவுக்கு வரைந்து தந்த படம்

 உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.
                                                                 --------------------------


இளமையின் ரகசியம் தீரா கற்றல் பதிவுக்கு வரைந்த படம்.

வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக  ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள்  மருத்துவர்கள்  அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள்.  நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன்  வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும்  உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.  மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க்  கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன்  உடல்  குறையையே எப்போதும் கூறிக்  கொண்டு இருக்காமல்  குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள்,  தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

சித்திரை  முதல் நாளில்  ’ பண்புடன் ’  இணைய இதழுக்காக  நான் எழுதிய  கட்டுரை.
---------------------------------------




இன்ப மழை பெய்ய வேண்டும் என்ற பதிவுக்கு வரைந்து தந்த படம்.

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்.

எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

                                                           ---------------------------






திருப்பூவண உலா பதிவில்  அப்பர் தேவாரத்திற்கு வரைந்த படம்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
       கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
             காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
    இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
             எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
                      பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

                                                                  ----அப்பர் தேவாரம்

--------------------------------------



மின்சாரமே! மின்சாரமே! பதிவுக்கு வரைந்து  தந்த படம்.

சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதை
உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.

காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!
                                                   --------------------------

அம்மா என்றால் அன்பு  அன்னையர் தின பதிவுக்கு வரைந்து தந்த படம்

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

அன்னையர் தின சிந்தனை பதிவு.
                                                   -------------------------



கழுகுமலை பதிவுக்கு வரைந்து தந்த படம் (வெட்டுவான் கோயிலை படம் பிடிக்கும் காட்சி)

.

                            ------------------------


ஜலீலாவின் பேச்சிலர் சமையல் குறிப்பு போட்டிக்கு வரைந்து தந்த படம்.

ஆஹா  உருளை!
இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு  பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.

உருளைக்கிழங்கு காரக்கறி

தக்காளி சாதம்

தனியா பொடி(கொத்தமல்லி விதை பொடி)

ஆப் பாயில் உருளை.

இந்த போட்டியில் திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் வெற்றி பெற்றார்.  
அடடா --- என்ன அழகு!
அடையைத் தின்னு பழகு!


என்  கணவர் என் பதிவுகளுக்கு வரைந்து தந்த படங்களும்  பதிவுகளின் சுட்டியும். இன்னும் இருக்கிறது அது அடுத்த பதிவில்  பார்க்கலாம்.
பழைய பதிவுகளில் எவ்வளவு பதிவர்கள் ! வந்து பின்னூட்டம் கொடுத்து இருக்கிறார்கள் .  நினைத்துப் பார்த்து, படித்துப் பார்த்து மகிழ்கிறேன்.
நினைவு பறவை சிறகை விரித்துக் கொண்டு போய் கொண்டே இருக்கிறது ஆனால் அதை அடக்கி   கொஞ்ச நினைவுகள் மட்டும்.


//பதிவுலகம் முன்பிருந்த நிலையும் இப்போது இருக்கும் நிலையும் மனதில் தோன்ற, அந்த எண்ணங்களை அப்படியே பதிவிட்டேன். பதிவுலகம் மீண்டும் புத்துணர்வோடு இயங்கும் நாளை எதிர்நோக்கி நானும்…..// 


வெங்கட் சொன்னது போல் நானும் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறேன்.
                                                 வாழ்க வளமுடன்.

44 கருத்துகள்:

  1. ஆஹா எனது பதிவு உங்கள் மலரும் நினைவுகளை நினைத்துப் பார்க்க வைத்திருக்கிறது. உங்களவர் வரைந்த படங்கள் ஒரு தொகுப்பாக இங்கே பார்க்கவும் மகிழ்ச்சி.

    தொடரட்டும் பதிவுகள். பரவட்டும் உற்சாகம்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் கோமதிக்கா ! வெங்கட்ஜி எழுதிய பதிவு சரிதான்.

    உங்கள் மலரும் நினைவுகள் அருமை!!! பல வாசித்ததில்லை எனவே இப்போது அதையும் வாசிக்க முடிந்தது.

    ////தண்ணீர் உபயோகத்திற்கு ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார், நம் தந்தை,
    குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
    களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். // உண்மைதான் அக்கா. தண்ணீர் பற்றி ஒரு சிறிய குறும்படம் பார்க்க நேரிட்டது. அதாவது எதிர்காலத்தின் நிலைமை. அதில் தண்ணீருக்காக பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அலைவார்கள். தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லை. அப்போது ஒருவர் உபாதையைக் கழிக்க இடம் தேடி அலைவார். அவர் பின்னாடியே பாஅத்திரத்துடன் செல்வார்கள் அவரது மூத்திரத்தை அந்தப் பாத்திரத்தில் பிடிப்பார்கள். பிடித்து மணல்கடிகை போன்ற பாத்திரத்தில் அதனை இட்டு அடியில் மணல் எடுத்துக் கொண்டது போக விடும் அதனை எடுத்துக் கொள்வார்களாம்...எப்படி இருக்கு பாருங்கள் நிலைமை...

    மின்சாரம் இல்லை என்ற அந்த அறிவிப்பு அருமை!!

    ஸ்ரீராமின் கவிதை செம!! தூள்!! மிகவும் ரசித்தோம்...ஸ்ரீராம் பாராட்டுகள்!!!செம....

    உங்கள் தீபாவளி ராக்கெட் விடுதல், எல்லாம் என் சிறுவயது தீபாவளி நினைவுகளை மீட்டது. அதன் பின் வெடி வெடிப்பதில்லை. சுற்றுப் புறச் சூழல் மற்றும் விலங்குகள் அதன் சத்தத்திற்குப் பயப்படுகின்றன என்பதால் வெடிப்பதில்லை.

    அனைத்தும் அருமை என்றால் தங்கள் கணவரின் ஒவ்வொரு படமும் ரசிக்க வைக்கிறது. அருமை. அண்ணாவிடம் சொல்லுங்கள் அக்கா...வாழ்த்துகளை!

    ஆம் அக்கா வெங்கட்ஜி, தாங்கள் மற்றும் எல்லோரும் விரும்புவது போல் பதிவுலகம் மீண்டும் புத்துணர்வு பெற்று எழுந்து வர வேண்டும்...என்று நம்புவோம்..

    கீதா



    பதிலளிநீக்கு
  3. மலரும் நினைவும் ,கிராபிக்ஸ் படங்களும் அருமை ,இன்னும் நிறைய படங்கள் இருக்கோ ....திடியன் படம் இதில் வரவில்லையே :)
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. அழகாண படங்கள்.. வியக்க வைக்கும் திறமை!
    நினைவுகளைக் கிளறியது உண்மைதான்.

    எங்கள் பிளாக் இன்னும் விடாமல் முனைப்பாகவே இருக்கிறார்களே.. கேட்டு வாங்கிப் போடுற கதை புதிர்னு சக பதிவர்களை இழுத்துப் பாக்குறாங்களே..

    பதிலளிநீக்கு
  5. அழகாண படங்கள்.. வியக்க வைக்கும் திறமை!
    நினைவுகளைக் கிளறியது உண்மைதான்.

    எங்கள் பிளாக் இன்னும் விடாமல் முனைப்பாகவே இருக்கிறார்களே.. கேட்டு வாங்கிப் போடுற கதை புதிர்னு சக பதிவர்களை இழுத்துப் பாக்குறாங்களே..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவு பழைய நினைவுகளை கொண்டு வந்தது உண்மை.

    //தொடரட்டும் பதிவுகள். பரவட்டும் உற்சாகம்.//

    உங்கள் உற்சாகமான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    பழைய பதிவுகளை படித்து கருத்து சொன்னதற்கு முதலில் நன்றி.

    நீங்கள் சொன்ன குறும்படம் செய்தி பீதியை கிளப்புகிறது.
    அந்த நிலை வராமல் இயற்கை அன்னை உயிர்களை பாதுகாக்க வேண்டும்.

    ஸ்ரீராமின் கவிதை மற்றும் பதிவுகள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
    நானும் வெடி வெடிப்பது இல்லை என்று போட்டு இருப்பேன்.

    அண்ணாவிடம் சொல்லிவிட்டேன் உங்கள் வாழ்த்துக்களை, அவர்களுக்கு மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
    கிராபிக்ஸ் படங்களை பாராட்டியதற்கு நன்றி.
    இன்னும் நிறைய இருக்கிறது படங்கள், அடுத்த பதிவில் போட எண்ணம்.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மலரும் நினைவுகளாகப் பதிவுகள் அருமை..
    பேசும் சித்திரங்கள் பதிவுத் தொகுப்பிற்கு அழகூட்டுகின்றன..

    சில பதிவுகளை வாசித்தேன்.. மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    //பேசும் சித்திரங்கள் பதிவுத் தொகுப்பிற்கு அழகூட்டுகின்றன..//
    சார் இதை கேட்டு சந்தோஷபடுவார்கள்.
    சில பதிவுகளை படித்தது அறிந்து மகிழ்ச்சி.
    கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பிரமாண்டம் பிறகு கணினியில் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  12. இப்போது பார்க்கும்போது அரசு ஸார் இவ்வளவு படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறாரா என்று மலைப்பாகத்தான் இருக்கிறது. எல்லாமே அருமை. சித்தன்னவாசல் இன்னும் சில ஓவியங்களை நான் முன்னர் பார்த்ததில்லையா என்றும் தோன்றுகிறது. அந்தந்தப் பதிவுகளுக்குச் சென்று பார்க்கவேண்டும் பின்னர்.

    நான் அப்படி ஒரு கவிதை ( ? ) எழுதி இருந்தேனா? எனக்கே நினைவில்லை. நினைவு படுத்திருக்கும் உங்களுக்கும், பாராட்டியிருக்கும் கீதா ரெங்கனுக்கும் நன்றி.

    தம நான்காம் வாக்கு!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    வாங்க உங்கள் வசதிப்படி.

    பதிலளிநீக்கு
  14. பதிவர் திரு வெங்கட் அவர்கள் கூறியது சரிதான்... அந்தப் பதிவில் என்னையும் காணாமல் போன பதிவர்கள் பட்டியலில் சேர்த்திருந்தார்.... எனும்போது என்னுடைய பதிவுகளை எவ்வளவு விரும்புகிறார் என்று புரிந்துகொண்டேன்... அதனால், இனி மாதம் நான்கு பதிவுகளாவது எழுதிவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன்.. பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  15. மலரும் நினைவுகள் எல்லோருக்கும் வரவைத்து விட்டீர்கள்..

    பதிவுலகத்தை மீண்டும் உசுப்பி விட்டால்தான் சரியாகும்போல...

    சாரின் கார்ட்டூன் படங்கள் அருமை பிளாஷ்டிக் கவிதை மனதை உலுக்குகிறது.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    தொகுக்க ஆரம்பித்த எனக்கும் இப்படித்தான் இருந்தது மலைப்பாய்.
    பின்னூட்டங்களையும் பழைய பதிவுகளை படிப்பதும் நன்றாக இருக்கிறது.
    டிராப்ட்டில் உள்ள பதிவுகள் இன்னும் நிறைய இருக்கிறது.
    உங்கள் கவிதை பதிவுகள் முன்பு வரும் இப்போது கவிதை எழுதுவது இல்லை.
    முகநூலில் என் கிருஷ்ணஜெயந்தி பகிர்வைப்பார்த்து ஒரு கவிதை எழுதினீர்கள்.
    சித்தன்னவாசல் பதிவை படித்து அழகான கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.
    இன்னும் வரும் சாரின் பழைய படங்கள்.

    உங்கள் கருத்துக்கும், தம நான்காம் வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.

    //இனி மாதம் நான்கு பதிவுகளாவது எழுதிவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன்.. பார்க்கலாம்...//

    நல்ல முடிவு . செயலுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருங்கள்.

    முகநூலில் பகிர்வதைகூட இங்கு பகிரலாம்.
    நண்பருக்கு எழுதிய கடிதம் மிகவும் நன்றாக இருந்தது.
    உங்கள் பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    மலரும் நினைவுகள் எல்லோருக்கும் வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் 'கனவில் வந்த காந்திஜி ' தொடர் பதிவுக்கு துரைசெல்வராஜூ சார் அழைப்பின் பேரில் எழுதினேன்.
    சாரின் படங்களை பாராட்டியதற்கு நன்றி.
    பிளாஷ்டிக் கவிதை மனதை கஷ்டபடுத்துவது உண்மைதான்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே சுகம் தான்.

    அரசு சார் படங்கள் அற்புதம்.

    சமீபத்திய என் நினைவும் ஒன்று. குமுதம் பத்திரிகை சம்பந்தப்பட்ட என் சுஜாதா பற்றிய பதிவில் அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் (அரசு) பற்றி புதிர் எழுதிய போது---

    'கோமதிம்மா, நீங்கள் சிரமமே இல்லாமல் சடக்கென்று புதிருக்கு பதில் சொல்லி விடுவீர்கள் என்று பின்னூட்டத்தில் குறிப்பிட நினைத்தேனே அல்லாமல் பர்சனலாக எதையும் எழுதி வழக்கமில்லாததால் தவிர்த்து விட்டேன். இப்பொழுது அந்த வழக்கத்தை உங்கள் நினைவலைகள் பதிவு சொல்ல வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  20. பேசும் படங்கள் அனைத்தும் அட்டகாசம்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நினைவுகளை மீட்டிப் பார்ப்பது சுகம் தான்.
    சார் படங்களை பாராட்டியதற்கு நன்றி சார்.

    என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் .

    உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன். பொதுவா, கையினால் வரையும் படங்கள்தான் மிகச் சிறப்பா அமையும். .அதற்கு அப்புறம்தான் அதற்கான Deviceகளோட கணிணியில் வரையும்போது, கோடுகள் எல்லாம் Smoothஆக வரும். ரொம்ப நேரம் கணிணியில் வரைந்தால், நிச்சயம் முதுகுவலி வந்துவிடும். அவரை இதனை மனதில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

    மீள் பதிவுகளின் சாரத்தையும் படித்து மகிழ்வுற்றேன்.

    பதிலளிநீக்கு
  24. உங்களின் பதிவு அருமை! பல நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. நீங்கள் எழுதியிருப்பது போல பல பதிவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.
    முன்பெல்லாம் எத்தனை வலைத்தளங்கள் ஜீவ களையுடனிருக்கும்! எத்தனை ஆழ்ந்த கருத்துக்கள்! எத்தனை உணர்ச்சிப்பிரவாகங்கள்!!
    நீண்ட பெருமூச்சு தான் எழும்புகிறது!

    உங்கள் கணவரின் ஓவியங்கள் அனைத்தும் மிக அழகு! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
    ஒரே சமயத்தில் வரைந்த ஓவியங்கள் இல்லை.
    பல வருட பதிவுகள் இவை.
    கையிலும் வரைவார்கள். உங்கள் அன்பான வார்த்தைகளை சாரிடம் சொல்லிவிட்டேன்.
    மீள் பதிவுகளின் சாரத்தைம் படித்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் அருமையான காலங்கள்.
    நமக்கு தெரிந்தவர்கள் நாம் அடிக்கடி போகும் பதிவர்கள் இப்போது எழுதுவது இல்லை.
    சிலர் இப்போதும் எழுதுகிறார்கள், நம்மால் முன்பு போல் எல்லா பதிவுகளுக்கும்
    போய் படித்து கருத்து சொல்ல முடியவில்லை.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஞாபகங்கள் தாலாட்டும் சுகமான அனுபவங்கள்!! ரசித்தேன். படங்கள் வெகு அருமை

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    கருத்துக்கும், ரசிப்புக்கும் நன்றி மாதவி.

    பதிலளிநீக்கு
  29. தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அருமையான நினைவலைகள். நிறையப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் கணவரும் மிக அருமையாகப் படங்கள் வரைந்திருக்கிறார். திருப்பூவணப் பாடலுக்கு வரைந்திருக்கும் படம் மிக அழகு! அற்புதம். இத்துடன் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி. இப்போதெல்லாம் பலர் எழுத வில்லை என்கிறீர்கள். நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்த அம்பி, கைப்புள்ள, சூடான் புலி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட நாகை சிவா,மதுரைக்காரர் ராம், மு.கார்த்தி, ச்யாம், பொற்கொடி(இப்போ முகநூலில் இவங்க தான் ஹேமா ஶ்ரீதர் என்னும் பெயரில் வராங்கனு நினைக்கிறேன்.) அப்புறமா வேதா(இவங்க இப்போ முகநூலில் என்னுடன் நட்புப் பட்டியலில் இருக்காங்க, அருமையாக் கவிதை எழுதுவாங்க!) திராச சார்,மஞ்சூர் ராஜா இப்படிப்பலர் இப்போது காணோம்! அதிலும் அம்பி இல்லாமல் இணையம் இணையமாகவே இல்லை! அம்பியோடு இப்போதும் தொடர்பு இருந்தாலும் பதிவுகளின் உற்சாகம் குறைவே! :(

    பதிலளிநீக்கு
  31. வணக்கம், கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதி கொண்டு இருந்தவர்களும், நான் எழுத வந்த போது எழுதிக் கொண்டு இருந்தவர்களும் இப்போது எழுதவில்லை தான். முகநூலில் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இருக்கிறேன் என்று தெரிய இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன், முன்பு போல் எழுதுவது இல்லை .

    விரல் வலி சரியாகி விட்டதா?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. தொடர் பதிவு எழுத வேண்டி முன் பின் அறியாப் பதிவர்கள் கேட்டுக் கொண்டதும் அதுவே
    பின் இணைய அறிமுகமாய் மலர்ந்ததும் ஓ அது அந்தகாலம் என்று எண்ணத் தோன்றுகிறதுஅரசு படங்கள் வரைவார் என்று தெரியும் ஆனால் இவ்வளவும் வரைந்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறதுபகிர்வுக்கு உங்களுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் பாலசுப்பிரம்ணியம் சார், வாழ்க வளமுடன்.
    ஆமாம், நீங்கல் சொல்வது போல் தொடர் பதிவுக்கு ஐந்து பேரை அழைக்க வேண்டும் என்பார்கள், அவர்கள் முன்பு அந்த தலைப்பில் எழுதாமல் இருக்க வேண்டும் இப்படி அழைக்கும் போது புதியவரைகளையும் அழைக்க வேண்டி வரும். இப்படி நிறைய பேர் அறிமுகமானார்கள்.

    வலைச்சர ஆசிரிய பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது நிறைய புதிய பதிவுகளை படித்து புதியவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறோம். அந்தக் காலங்கள் இனியவைதான்.

    இன்னும் இருக்கிறது சாரின் ஓவியங்களும் என் பதிவுகளும் தொடரும்.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அவ்வப்போது பல பதிவுகளில் பார்த்து ரசித்த ஓவியங்களைத் தொகுப்பாகப் பார்க்க இன்னும் சுவாரஸ்யம். சாரின் திறமைக்கு வணக்கங்கள்.

    ஆம், அன்றைய இனிய நாட்களை நினைவில் கொண்டு வருகின்றன பழைய பதிவுகளும் பின்னூட்டங்களும். அது பதிவுலகின் பொற்காலம்.

    தொடரக் காத்திருக்கிறேன் நானும்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    பதிவுலக பொற்காலம் திரும்பிவர ஆசைதான் எல்லோருக்கும்..
    உங்கள் வணக்கங்களுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  36. உங்கள் கணவர் வரைந்த படங்கள் அனைத்துமே அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. மலரும் நினைவுகளாகப் பதிவுகள் அருமை..

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. என்னவொரு அழகான தொகுப்பு.. தங்கள் எழுத்துகளும் சாரின் ஓவியங்களும் மிக அழகாக கைகோத்துக்கொண்டு வசீகரிக்கின்றன. தொடர்பதிவுகள் காலத்தை எண்ணி இப்போது வியக்கிறேன். தொடர்பதிவுகளை மிக நேர்த்தியாக ஒரே பதிவின் கீழ் சுட்டிகளோடு தொகுத்திருப்பது மிகவும் அருமை. நிறைய பொறுமை தேவைப்பட்டிருக்கும். ஆனால் என்றென்றும் சுகமான அழகான மலரும் நினைவுகளைத் தந்துகொண்டிருக்கும். வாழ்த்துகள் கோமதி மேடம் தங்களுக்கும் சாருக்கும்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் கீத மஞ்சரி, வாழ்கவளமுடன்.
    பதிவு கணவரின் படங்களை தொகுக்க வேண்டும் என்று ஆரம்பித்து அது தொடர் அழைப்பின் பதிவாய் அமைந்து விட்டது.
    நீங்கள் சொன்னது போல் மலரும் நினைவுகள் இனிமைதரும் என்றென்றும்.
    அருமையாக எழுதும் நீங்கள் என் எழுத்தை பாராட்டுவது மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    மறுபடியும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு