செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப்பொங்கல்


தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.  இரண்டு பேர் பேசிக் கொண்டால் உனக்கு , பெண் இருக்கிறாளே மாப்பிள்ளை பார்க்கிறாயா என்று கேட்டு விட்டு  அவரே சொல்வது, தை பிறந்தால் வழி பிறக்கும் .இப்போ பார்க்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும் என்பது தான் .

என் அம்மா சேர்த்து வைத்த பழைய சினிமாப்பாடல் தொகுப்பிலிருந்து எடுத்த பாடல்களை சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் மிக நன்றாக இருக்கும். செளந்தராஜன் அவர்களும், பி. லீலா அவ்ர்களும் பாடி இருப்பார்கள்.

தை பொறந்தால் வழி பொறக்கும்  தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல்விளையும்         தங்கமே தங்கம்
ஆடியிலே வெத வெதைச்சோம்     தங்கமே தங்கம்
ஐப்பசியில்  களை எடுத்தோம்         தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு                  தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு        தங்கமே தங்கம்
கன்னியரின் மனசு போல                  தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி                             தங்கமே தங்கம்
வண்ணமணிக் கைகளிலே               தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி           தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லுக்குத்தி           தங்கமே தங்கம்  
முத்தத்திலே சோறு பொங்கி            தங்கமே தங்கம்
குத்துவிளக்கேத்தி வச்சு                     தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்        தங்கமே தங்கம்


தை பிறந்தும் விவசாயிகள்  விதைத்த விதை வீடு வந்து சேராமல்  அவ்ர்கள் அரசாங்கம் கொடுக்கும் நிவாரண உதவியை நாடும் அவல நிலை உள்ளது. கார்த்திகையில் கதிராகி, கழனியெல்லாம் பொன்னாவிளைந்த நெல்மணிகள் வீடு வந்து சேர்ந்தால் இந்த பாட்டில் உள்ளது போல் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள். விவசாயிகளில் சிலருக்கு மகிழ்ச்சி: பலருக்கு கஷ்டம்.

மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகி, விவசாய மக்கள் வாழ்வு உயர வேண்டும்.

அந்தக் காலத்தில்  கிராமத்தில் உழவு மாடு இரண்டு, வண்டி மாடு இரண்டு ,பசு மாடு இரண்டு  என்று எல்லா வீடுகளிலும் பெரும்பாலும்  இருக்கும். ஏர் பிடித்து உழ காளைமாடு, இரண்டு  இருக்கும்




 பசு மாடு   இரண்டு இருக்கும். அதன் பால் வீட்டு தேவைகளுக்கும்  மிகுதியான பாலை அக்கம் பக்கம் கொடுத்தால் ,அந்த பணத்தில் அதுகளுக்கு தீனி போட உதவும் என்பார்கள். பசு மாட்டுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து அதை அன்போடு வளர்ப்பார்கள்.



பக்கத்தில்   அங்கும் இங்கும் போய் வர வண்டியும் இரண்டு மாடுகளும் இருக்கும். வயலுக்கு உரம் அடிக்க   அதற்கு தனி வண்டியும் வண்டி மாடுக்ளும் இருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில்  அண்ணனும் ,தங்கையும்  தன் குடும்ப உறுப்பினர் ஆகி விட்ட வண்டி மாடுகளிடம் தன் மனதில் உள்ளதை வண்டியில் போய்க்கொண்டே பாடுவது போல்  பாட்டை மருதகாசி அவர்கள் எழுதி இருப்பார்கள்.

அண்ணன் தம்பி உறவு  எப்போதும் உண்டு .தன் சகோதரிகளுக்கு சீர் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். சில வீடுகளில் பொங்கல் சீர்வரிசையை வண்டிகட்டிக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வயலில் விளைந்த  புத்தரிசி, கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பழம், என்று பொங்கல் சீர்  இறக்கி, புகுந்தவீட்டில் பெண்ணின் பெருமையை  உயர்த்துவார்கள்.

வட மாநிலங்களில் ராக்கி அன்று ரட்சை சகோதரனுக்கு கட்டி அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வது போல் காலம் எல்லாம் சகோதரனின் பங்களிப்பு மிக முக்கியம்.

 எனக்கும் என் தம்பி பொங்கலுக்குப் பணம் அனுப்பி விடுவார். 

இந்த பாட்டில் கவிஞர் மருதகாசி ,சீரைப் பற்றி எல்லாம் எழுதி இருப்பார். கேளுங்கள்.

வண்டி மாடு பாட்டு:

அண்ணன் : சொல்லட்டுமா ? சொல்லட்டுமா?
ரச்கசியத்தை       சொல்லட்டுமா? 
துள்ளியோடும்    காளைகளா
உள்ளபடி                சொல்லட்டுமா?

அருமையாக வளர்த்தாலும்
வரிசை வம்மை கொடுத்தாலும் 
புருஷன் வந்த கையோட 
பொறந்தவீடு மறந்து விடும்.

ஏரில் காளைகள்பூட்டி பாடும் பாட்டு:
’மகாதேவி’ படத்தில் :

ஏரு பூட்டுவோம் - நாளை 
சோறு ஊட்டுவோம் -இந்த
ஏழைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து
கொடியை நாட்டுவோம்- வெற்றி கொடியை நாட்டுவோம்.
வாழப் பிறந்தவன் வாழ்ந்திடவும் 
வறுமைப்பிணியாவும் நீங்கிடவும் 
வானம் மாரி பொழிந்திடவும் 
மானாபி மானமே -தானாக - ஓங்கிட
பாடு பள்ளு பாடு -துணிஞ்சி துள்ளி ஆடு- என்றும்
பால் போல் பொங்க வேணும் நம்பநாடு
நல்ல காலம் வந்ததாலே- இனி 
எல்லை-மீறி - இன்ப வாழ்வு - என்று ஓங்கவே

அந்தக் காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள்  ஏறுதழுவுதல்   என்ற வழக்கம் இருந்தது.  அதில் வெற்றி பெறும் ஆணுக்குப் பெண்ணை மணம் முடிக்கும் பழக்கம்  இருந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் :

 அஞ்சாத சிங்கம் என் காளை -இது
பஞ்சாய் பறக்க விடும் ஆளை 

என்று  பாட்டு வரும்.


இப்படி உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.




இன்று திருவள்ளுவர்  தினம்  தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம்.

வள்ளுவர் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிப்படி வாழந்தாலே நாம் அவருக்கு செய்யும் சேவை.

 உழவைப் பற்றி திருவள்ளுவர்  சொன்ன குறள்:

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

என்று உழவு தொழில் சிறந்தது என்கிறார்.மேலும் அவர்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல்பவர்.

என்றார்

விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம்  செய்தால் நாடு நலம் பெறும் -வீடும் நலம் பெறும்.




                                                          வாழ்க வளமுடன்


                                                                   ---------------

32 கருத்துகள்:

  1. பகிர்ந்த பாடல்களும் பகிர்வும் அருமை. சிறுவயது மாட்டுப் பொங்கல் கொண்டாட்ட நினைவுகளை எழுப்பி விட்டது பதிவு.

    பதிலளிநீக்கு
  2. உழவர் திருநாள் பகிர்வு அருமை.

    இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    மாட்டுப் பொங்கல் மலரும் நினைவுகள் வந்ததா மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன். பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //அருமையாக வளர்த்தாலும்
    வரிசை வம்மை கொடுத்தாலும்
    புருஷன் வந்த கையோட
    பொறந்தவீடு மறந்து விடும்.//
    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
    மாட்டு பொங்கலின் முக்கியத்துவத்தை
    அழகுடன் விளக்கியிருக்கிறீர்கள்.
    படங்களும் அருமையாக இருந்தது.
    என்னுடைய பழைய நினைவுகளை மலர்வித்தது உங்கள் பதிவு.
    நன்றி.
    ராஜி.

    பதிலளிநீக்கு
  6. பாடல்கள், ஓவியங்கள், படங்கள் மற்றும் சிறப்பான கருத்துகள் என அசத்தலான பகிர்வு.... மிக்க மகிழ்ச்சிம்மா....

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
    மருதகாசியின் பாடல் வரிகளை ரசித்தீர்களா! அருமையான உண்மையான வரிகள்.

    பதிவிட்ட உடனே வந்து உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மாட்டுப் பொங்கல் பதிவு சுவை.
    நினைவு கூர்ந்த பாடல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  9. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன். பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.பாடல்களை ரசித்தமைக்கு நன்றி. பொங்கல் பதிவை உடனே வந்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கோலம்தானே அது? நல்லா இருக்கு. பாடல் பகிர்வும் அருமை.சகோதரிகளுக்குச் 'சீர்' கொடுத்து கணு நல்லபடி நிறைவுற்றது.

    பதிலளிநீக்கு
  12. மருதகாசி காலத்தில் கூட அவர் எழுதியவை வெறும் பழங்காலத்து நினைவுகளே. இன்று வயல்களும் கால்நடைகளும் மட்டுமல்லாமல், அவைகளை வைத்து விவசாயம் செய்ய மனிதர்களும் நாட்கூலி வேலைசெய்வோருமில்லை. ஏன்? கிராமத்துக்கூலிகள் இன்று பட்டணங்களுக்குக் குடியேறி, பட்டணத்துக்கூலிகளாகிவிட்டனர். உங்கள் ஊரிலேயே பார்த்தால், தெரியுமே? எல்லாரும் ஒரு காலத்தில் விவசாயக்கூலிகள்தான். இன்று தில்லியில் ரோடுபோடும் கூலிகள் இல்லையா? ஏன் கிராமங்கள் காலியாயின என்ற கேள்விக்குப் பதிலாக பிஹெடி தியரிகள் எழுதி வைத்திருக்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். காந்தி, இந்தியா கிராமங்களில் வாழ்கின்றது என்றார். அஃது அவர்காலத்தில். இன்றைய இந்தியா பட்டணங்களில்தான் வாழ்கின்றது. கிராமத்தில் ஒன்றுமேயில்லை. கல்வியில்லை; வேலையில்லை. கேட்பாரும் கவனிபாருமில்லை. எல்லார் கவனமும் பட்டணத்து மனிதர்கள் மீதேதான். தில்லி வன்புணர்வுச்சம்பவம் இந்தியாவையே உலுக்குவிட்டதே! ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் தெரிந்திருக்குமா?

    மனிதனும் வாழ்க்கையும் கிராமமுமே இல்லையென்றானபோது மாட்டுக்கு எங்கே பொங்கல் வைத்துக் கொண்டாடுவது?

    மருத காசியில் பாடல்களைப்போட்டு என் பொங்கல் மகிழ்ச்சியையே கெடுத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    மாடு கோலம் நான் போட்டது தான்.
    மாடு பிடிக்கும் ஓவியம் கணவர் வரைந்தது.
    பாடல்களை ரசித்தமைக்கு நன்றி.
    சகோதரிகளுக்கு சீர் கொடுத்து கணு நல்லபடியாக நிறைவுற்றது அறிந்து மகிழ்ச்சி. அன்பு வாழக!

    பதிலளிநீக்கு
  14. வாங்க குலசேகரன், வாழ்கவளமுடன்.
    முதல் வருகைக்கு நன்றி.

    பட்டணத்து மனிதர்கள் மீதேதான். தில்லி வன்புணர்வுச்சம்பவம் இந்தியாவையே உலுக்குவிட்டதே! ஒரு கிராமத்தில் நடந்திருந்தால் தெரிந்திருக்குமா?//

    கிராமத்தில் நடந்திருந்தால் என்று கேட்கிறீர்கள் !டெல்லியில் நடந்த அடுத்தநாள் தூத்துக்குடியில் பள்ளிக்கு சென்ற சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றது தெரியாதா?
    நேற்றுக் கூட திருவாரூரில் பெண்ணைக் கடத்தி சென்று வன்புணர்வு செய்து கொன்று விட்டார்கள்.
    அன்று தொட்டு இன்று வரை நல்லவைகளும் கெட்டவைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. அந்தக்காலத்திலிருந்து விவாசாயிகளுக்கு பிரச்சனை இருந்தது.தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் படக்கூடாது என்று படிக்க வைத்து பட்டணத்திற்கு வேலைக்கு அனுப்பிவிடுகிறார் விவசாயி. சில வீடுகளில் பிள்ளைகளுக்கு விவசாயம் பார்க்க பிடிக்கவில்லை
    வயல்கள் கவனிப்பின்றி வீட்டு மனைகளாய் மாறுகிறது.
    நான் போட்ட வயல் படம் நாச்சியார் கோவில் போகும் பாதையில் உள்ள வயல்களதான். இன்னும் விவசாயம் செய்ய ஆசைபடும் இளம் தலைமுறையினரும் இருக்கிறார்கள்.
    தொலைக்காட்சியில் தன் அப்பா செய்த விவசாயத்தை செய்து கொண்டு இருக்கும் இரு பெண்களின் பேட்டி வைத்தார்கள்.

    மாட்டு பொங்கல் கொண்டாட்டம் பழைய உற்சாகம் இல்லை. மாடுகளுக்கு மேய இடம் இல்லாமல் வால் போஸ்ட்களை உண்ணும் நிலைமை இருக்கிறது.





    பதிலளிநீக்கு
  15. தங்கமே தங்கமாக அருமையான பாடல் பகிர்வுகளுடன் சிறப்பான பொங்கல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  16. படங்கள் + பாடல்கள் + பதிவு எல்லாமே நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பகிர்வு அக்கா,பொங்கல் பண்டிகை தனி விஷேசமுடையது தான்..பாடல் பகிர்வு அருமை.அன்பான வாழ்த்துகக்ள்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.

    உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மாடு, பால், வண்டி என்று படித்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டேன். விவசாயம், வீட்டுப் பிராணிகள் வளர்ப்பு எல்லாம் குறைந்ததற்கு இப்போ பார்த்துக்கொள்ள ஆட்கள் கிடைப்பதில்லை என்பதும் மிக முக்கியக் காரணம். அரிதாக இவற்றைத் தொடர்பவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கீறது.

    பதிலளிநீக்கு

  22. நீங்கள் கொடுத்திருந்த அகராதி முகவரிக்கு போனால் error என்று வருகுறது.?நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் விவசாயம் என்று மட்டும் அல்ல எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பது இல்லை. எல்லோரும் இப்போது சுகவாசி ஆகி விட்டார்கள்.
    இன்னும் வயலைவிட மனம் இல்லாமல் கஷ்டப்பட்டு வயலில் பாடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்பது தான் இந்தபதிவின் நோக்கம்.
    மாடு மனைக்கு செல்வம் என்று நினைக்கிறவர்கள் இருப்பதால் இன்னும் வாயில்லா ஜீவன்கள் சில வீடுகளில் இருக்கிறது.
    இந்தமுறை ஜல்லிக் கட்டு கூட முறைபடுத்தி விட்டார்கள் ஒரு மாட்டை நிறைய பேர் சேர்ந்து பிடித்து கஷ்டபடுத்துவது இல்லை.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க பாலசுப்பிரமணியம் சார்,
    அகராதி முகவரி அது தான். error காட்டினாலும் அடிக்கடி போட்டு பாருங்கள் சிலசமயம் பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  25. விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம் செய்தால் நாடு நலம் பெறும் -வீடும் நலம் பெறும்.
    final punch அருமை ....பாடல்,குறல் என்று எடுத்துக்காட்டி அசத்தி வீட்டீங்க ..நன்றி

    பதிலளிநீக்கு
  26. வாங்க ரியாஸ் அஹமது வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மிகவும் உபயோகமான பதிவு. ஆனால் படங்கள் தெரியவில்லை. என் கணணியில் பிரச்சனையா?

    பதிலளிநீக்கு
  28. வாங்க மாரியப்பன் சரவணன், வாழ்க வளமுடன்.

    உங்களுக்கு ஏன் படங்கள் தெரியவில்லை என்று தெரியவில்லையே!
    மற்றவர்கள் எல்லோரும் படம் தெரிவதாய் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும். தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.
    //படங்கள் ஆச்சரியமாக உள்ளது கோமதிம்மா.மற்ற படங்களும் பகிர்வும் அறிந்தராதவை.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    கழுகுமலைக்கு போட வேண்டிய பின்னூட்டம் மாட்டு பொங்கல் பதிவுக்கு வந்து இருக்கிறது.

    வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  31. வாங்க மாலதி , வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு