வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மாலைச்சூரியன்


கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்


//இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். //
ஆவணி மாதத்தில் சூரிய வழிபாடு செய்யப் போகலாம் இந்த கோயிலுக்கு.நான் எழுதிய பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஓவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு. ஆவணி மாதம் ஞாயிறுக்குச் சிறப்பு.
 எங்கள் பக்கம் (திருநெல்வேலி) ஒவ்வொரு  ஆவணி ஞாயிறு அன்றும் சூரியனுக்குப் பொங்கல் வைப்பார்கள். ஆவணி ஞாயிறு  அம்மன்களுக்கு கோயிலில்களில் விஷேச பூஜைகள் நடைபெறும்.

ஞாயிறு விரதம் இருந்தால் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம்,
ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் மேலும் சிறப்பு என்பார்கள்.

ஆவணி 3 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழன் வரை  மீனாட்சி கோயிலில் திருவிழா. ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில்    உள்ள  (வரும் லீலைகள்)  முக்கியமான கதைகள் காட்சியாக  நடத்தபடும்.


முதல் நாள்   -   கரிக்குருவிக்கு  உபதேசம் செய்த லீலை

இரண்டாம் நாள்   -  நாரைக்கு முக்தி கொடுத்தது

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள் -தருமிக்குப் பொற்கிழி கொடுத்த லீலை

ஐந்தாம் நாள் -கடும் வறுமையிலும் தவறாமல்  மகேஸ்வரபூஜை செய்த
சிவ அடியார் நல்லான்,தருமசீலா தம்பதியருக்கு உலவாக்கோட்டை அருளிய லீலை.

ஆறாம் நாள் - குருவுக்குத் துரோகம் புரிந்த சீடனின் அங்கங்களை  அவனுடன் வாள் போர்புரிந்து அவனின் அங்கங்களை வெட்டிய லீலை

ஏழாம் நாள் - வளையல் விற்ற லீலை
இந்த நாளில் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும்.  இதையொட்டி மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலை பட்டாபிஷேகம்.

எட்டாம் நாள் - நரிகளைப் பரிகளாக்கிய லீலை
மாணிக்கவாசகருக்காக  நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்த லீலை.

ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
மண்ணைப்படைத்தவர் மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை

பத்தாம் நாள் பாணபத்திரர் என்ற பக்தருக்கு அருளவும், கர்வம் கொண்ட பாகதவருக்குப் பாடம் புகட்டவும் இறைவன்  விறகு வெட்டியாக வந்து விறகு விற்ற லீலை.

பதினொன்றாம் நாள் - சட்டத்தேர்
ஈசன் அரசனாக வலம் வரும் நாள்

பன்னிரண்டாம் நாள் -  தீர்த்தவாரி
தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்.

நான் வளையல் விற்ற லீலை, பிட்டுக்கு மண்சுமந்த லீலை இரண்டும் பார்த்து இருக்கிறேன். போன வருடம்.

இனி, பதிவில் வந்த மாலைச்சூரியனைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகாலை சூரியன்  அழகு என்றால், மாலைச்சூரியன்  அதைவிட அழகு.
மலை வாயிலில் மறையும்  போது இன்னும் அழகு. கடற்கரையில் அஸ்தமனமாகும் போது அழகு .

காலை உதயத்தையும்,   மாலை அஸ்தமனத்தையும் பார்க்கக் கடற்கரையில் கூடும் கூட்டம்  உண்டு. பலரும் பார்த்து இருப்பீர்கள் தானே!


மனித வாழ்விற்கு  சூரிய ஒளியும் தேவை என்கிற  கவிதையை இன்று கே.பி. ஜனா சார் தன் முக நூலில் பகிர்ந்து இருந்தார்.  சூரியனைப்பற்றிய இந்த பதிவுக்கு  நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டேன் .

நன்றி: ஜனா சார்.


//சும்மா வாழ்வது மட்டும் போதாது. ..
சூரிய ஒளியும் சுதந்திரமும் 
சின்ன மலரொன்றும் வேண்டும் 
ஒரு மனிதனுக்கு.//

<>...
- Hans Christian Anderson
('Just living is not enough... one must have 
sunshine, freedom and a little flower.')

மெல்ல விடியும் பொழுது பதிவில் காலைச்சூரியன் காட்சி இருக்கிறது.மெல்ல மெல்ல விடியும் வைகறைப்
 பொழுதில்    காலைச் சூரியன் இருக்கிறது
அதனால் இந்தப் பதிவில் மாலைச்சூரியன் மட்டும்.Image may contain: sky, outdoor and nature
மாலைச் சூரியன் காட்சிகள்
தம்பிவீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்கள்.


Image may contain: sky, twilight, outdoor and nature
மாலைச்சூரியன் உடலுக்கு  'டி விட்டமின் தரும்.  டி விட்டமினை எந்த மருந்து மாத்திரைகளும் தராது. மாலை நேரம் சூரிய ஓளியில், விளையாடுவது நல்லது.   மாலைச் சூரிய ஒளியில் நடப்பதும் நல்லது.
Image may contain: sky
மெல்ல மெல்ல கீழே இறங்கிக் கொண்டு இருக்கும் சூரியன்

No automatic alt text available.

Image may contain: sky, twilight, outdoor and nature
No automatic alt text available.
மாடியிலிருந்து மாலைச்சூரியன் மறையும் வரை எடுத்த படங்கள்
No automatic alt text available.
மயிலாடுதுறையில் இருந்தபோது அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து மாலைச்சூரியனை எடுத்த படங்கள்.

No automatic alt text available.

No automatic alt text available.


Image may contain: sky, night, tree and outdoor
வானமெங்கும் பரிதியின்  சோதி (பாரதி)
No automatic alt text available.
மாலைச் சூரியன் தென்னை மரத்திற்கு அலங்கார விளக்கு போட்டு இருக்கிறது.

No automatic alt text available.
தருக்களின்  மீதும் பரிதியின் சோதி (பாரதி)


மலைகள் மீதும் பரிதியின் சோதி (பாரதி)

மலைவாயில் போகும் மாலைச்சூரியன் (நார்த்தா மலை)

திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்   மணிராஜ் என்ற வலைத்தளம் வைத்து  தெய்வீக பதிவுகளை எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

பண்டிகைகள்  ஒன்றையும் விடாமல் பதிவு செய்து விடுவார், பண்டிகைகள் வரும் போது அவர் நினைவு வந்து விடும்.

அவர்கள்  எழுதிய 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' பதிவை படித்துப் பாருங்கள்.  படித்து இருப்பீர்கள் இருந்தாலும் மீண்டும் படிக்கலாம் ஞாயிறின் சிறப்பை.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்  திருமதி .ரஞ்சனி நாராயணன் அவர்கள் பதிவில்  சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்  மங்கலமாய் இயற்கையை. சூரியனை, மழையைப் பாடிப் பின் கதையைச் சொல்வதைச் சொல்கிறார்.

பின் சூரிய சக்தியை நம் நாட்டில் நல்ல முறையில் பயன்படுத்தி மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கலாம். மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க ஓரே தீர்வு  சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது தான்.

சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?
சோலார் சக்தியின் நிறைகள்:
சோலார் சக்தியின் குறைகள்:

என்று அனைத்தையும் பற்றி விரிவாக சொல்லி சூரியனை வாழ்த்தி நிறைவு செய்கிறார், படிக்க வில்லை என்றால், நேரம் இருந்தால் படிக்கலாம்.


நாங்கள் கைலாயம் போனபோது நிறைய இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் இருந்ததையும், விடுதிகளில் விளக்குகள் இருந்ததையும் பார்த்தோம். மாலை ஆறுமணியிலிருந்து இரவு ஒரு மணிவரை அந்த விளக்குகள் எரியும். அப்புறம் நாம் கொண்டு போய் இருக்கும் டார்ச்சு தான் நமக்குத் துணை. 

அந்த இடத்தின் பெயர் தார்ச்சென் 
   குளிர்ப் பிரதேசங்களில் குறைவான நேரம் தான் சூரிய ஓளி கிடைக்கும் அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்தும் போது வெப்ப நாட்டில் இருக்கும் நாம் அதிகம் பயன்படுத்தலாம்.

கற்கை நன்றே என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் 


சோலார் பவரும் என் அனுபவங்களும் - என்று நாலு பதிவுகளும் எழுதி இருக்கிறார்.'கபீரின் கனிமொழிகள்' என்ற வலைத்தளத்தில் ஆன்மீகப் பதிவுகளும் எழுதுவார் அருமையாக.


இதில்  கபீர்தாஸ், சிவ வாக்கியர், பகவத்கீதை  இவற்றிலிருந்து
 சிலவற்றைப் பகிர்ந்து இருப்பார். நன்றாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.


நான் எடுத்த சூரியனின் படங்களுடன்  சூரியனைப் பற்றி அருமையாக  நிறைய பேர் எழுதிய பதிவுகளில்  நான் படித்த பதிவுகளையும்  இங்கு கொடுத்து இருக்கிறேன்.

                                                                         வாழ்க வளமுடன்!
26 கருத்துகள்:

 1. அழகிய படங்களுடன் விவரித்த விதம் அழகு.

  பதிலளிநீக்கு
 2. ஏகப்பட்ட விஷயங்களை ஒரே பதிவில் அடக்க முயற்சித்திருக்கிறீர்கள்.

  ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விகடனில், ஒரு யோகாசனம் பயிற்சி சொல்லித்தருபவர், (மெரினாவில் என்று ஞாபகம்), 'காலை வெயில் கழுதைக்கு, மாலை வெயில் மனிதனுக்கு' - மனிதன் மாலை வெயிலில்தான் உடம்பு படும்படி யோகாசனம் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார் (இது நான் ஏற்கனவே படித்ததற்கு முற்றிலும் மாறானது). அது நினைவுக்கு வந்துவிட்டது. மாலைச் சூரியன் படங்கள் அருமை.

  பெங்களூரில், சோலார் பேனல், வென்னீருக்கு அமைப்பது 30 வருடங்களுக்குமேலான பழக்கம். அதுக்கு கர்னாடக அரசு மானியம் தந்தது என்று நினைவு.

  பதிலளிநீக்கு
 3. சூரியனைப் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் ஜொலிக்கின்றன சகோதரி!

  பதிலளிநீக்கு
 4. இந்தக் கோயிலும் மேலதிகத் தகவல்களும் தங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். இப்போது இராஜ இராஜேஸ்வரி அம்மையார் பற்றிய நினைவுகள் மனசில் எழுகிறது.

  பதிலளிநீக்கு
 5. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகிய பதிவு..

  எத்தனை எத்தனை தகவல்கள் - அத்தனையும் அருமை.. அருமை..
  சிறப்பான தளங்களின் பதிவுகளையும் தொகுப்பில் இணைத்தது மேலும் சிறப்பு..

  மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. சூரிய கோடீஸ்வரர் ஆலயமும் மாலை சூரியன் படங்களும் சூரியசக்தியின் பயன்பாடு என பகிர்வு மனதை நிறைக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. துளசி: புதியதாய் ஒரு கோயில் பற்றி அறிந்து கொண்டோம். அனைத்துத்தகவல்களும் அருமை! படங்கள் மிக மிக அழகு!

  கீதா: சூரிய கோடீஸ்வரர் ஆலயம் சிறப்பு!!! படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. வெகு அருமை!!! அதுவும் மறையும் சூரியன் படிப்படியாக வாவ்!!

  சூரியன் இல்லையேல் இவ்வுலகே இல்லையே! சூரிய ஒளி இல்லை என்றால் அதுவும் பல மாதங்களுக்கு இல்லை என்றால் குறிப்பாக வட துருவ, தென் துருவப் பகுதிகளில் இருப்பவர்கள் விட்டமின் டி எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்பார்கள். ஏனென்றால் மன அழுத்தம்/டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால்....

  என் உறவினர் பெண் அமெரிக்காவில் இருந்து கொண்டு ஸோலார் பேனல் அமைத்துக் கொடுக்கும் கம்பெனி நடத்திவருகிறார். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு....அதில் பெண்களை ஈடுபடுத்தி அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இந்தியாவிலும் சில கிராமங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

  பல தகவல்கள் அதில் நம் பதிவர்களையும் குறிப்பிட்டு தகுந்த பதிவுகளைச் சுட்டிச் சொன்னமை அருமை அக்கா...

  பதிலளிநீக்கு
 8. கோவில் தகவல்கள் சிறப்பு.

  முதல் படம் சூரியன் எழுகிறதா, விழுகிறதா என்று தெரியாத (பார்வை) மயக்கம்! படங்கள் அருமை. வானம் எங்கும் பரிதியின் சோதி எஸ் பி பி குரலில் மனதில் ஒலிக்கிறது. காலை ஒன்பது மணி வெயில் கூட மிகவும் நல்லது என்று சொல்வார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு.

  எங்கள் வீட்டில் ஒன்றரை வருடங்களாக சோலார் பானல் வைத்திருக்கிறேன். இரண்டு பானல் மட்டும். உதவியாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.

  //ஏகப்பட்ட விஷயங்களை ஒரே பதிவில் அடக்க முயற்சித்திருக்கிறீர்கள்//
  படிக்க கஷ்டமாய் இருந்ததா?

  காலை, மாலை வெயில் உடம்புக்கு நல்லது என்பார்கள்.
  விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு அவசியம் மாலை வெயில்தான் நல்லது அதில் தான் விட்டமின் டி கிடைக்கும் என்கிறார்கள், அதுதான் நம் பாரதியும் மாலை முழுதும் விளையாட்டு என்று சொன்னார் போலும்.

  உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோ நிலாமகள், வாழ்க வளமுடன்.
  திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை மறக்க முடியாது.
  உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  புது பதிவுகள் எழுதுங்கள் மாதேவி.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

  //என் உறவினர் பெண் அமெரிக்காவில் இருந்து கொண்டு ஸோலார் பேனல் அமைத்துக் கொடுக்கும் கம்பெனி நடத்திவருகிறார். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு....அதில் பெண்களை ஈடுபடுத்தி அவர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இந்தியாவிலும் சில கிராமங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்.//

  அருமையான தகவல். உறவினருக்கு பாராட்டுக்கள்.
  ஆரோவில்லில் (அன்னை அரவிந்தர்) சோலார் பேனல் அமைத்து இருக்கிறார்கள்.

  உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 15. வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
  தப்பு செய்தவர்கள் திருந்தவில்லை என்றால் தண்டனை உண்டு என்று இறைவன் காட்டுகிறார்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  //வானம் எங்கும் பரிதியின் சோதி எஸ் பி பி குரலில் மனதில் ஒலிக்கிறது//

  மெல்ல விடியும் பொழுதில் வழங்கிய பின்னூட்டத்திலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
  பாடல் நினைவுக்கு வரும் கண்டிப்பாய் இல்லையா?

  //எங்கள் வீட்டில் ஒன்றரை வருடங்களாக சோலார் பானல் வைத்திருக்கிறேன். இரண்டு பானல் மட்டும். உதவியாகத்தான் இருக்கிறது.//

  ஒரு முறை மழை, காற்று சமயத்தில் இதற்கு ஏதும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருது.
  அப்போது நினைவுக்கு வந்து இருந்தால் குறிப்பிட்டு இருப்பேன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கீழச்சூரிய மூலையைப் பற்றி அறிந்ததோடு மட்டுமன்றி சூரியனைப் பற்றிய பரந்துபட்ட பதிவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. / ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில் உள்ள (வரும் லீலைகள்) முக்கியமான கதைகள் காட்சியாக நடத்தபடும்./ சுவாரஸ்யம்.

  மாலைச் சூரியன் மறைகிற நேரத்தில் வேகவேகமாக இறங்கி விடும். அனைத்துப் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான். மாலைச்சூரியன் மறைகிற நேரம் சீக்கிரம் இறங்கி விடும். கன்னியாகுமரி கடற்கரையில் காத்துக் கிடப்பர் முன்பே வந்து மக்கள், உதயத்தையும், மறைவதையும் பார்க்க.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. சூரிய மகாமித்யம் அருமை...

  மீண்டும் ஒருமுறை இன்னும் பொறுமையா படிக்கனும்.... இன்னிக்கு எங்க ஊர்ல கூழ் ஊத்துறோம். அந்த பிசி..

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
  ஆவணி மாதமும் கூழ் ஊத்தும் விழா உண்டா?
  பிசியாக இருக்கும் போதும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. படங்கள் அழகு நானு ம் சூரியனைப் படம் பிடிக்க முயன்று தோற்றிருக்கிறேன்

  பதிலளிநீக்கு