Wednesday, May 8, 2013

அருள்மிகு முத்துக்குமரசாமி திருக்கோவில் (குமரக்கோவில்)

இராஜகோபுரம்

யாகசாலைக்கான கட்டுமானப்பணி

முத்துக்குமரர் சந்நிதியில் ஓவியம் தீட்டும் பணி

பரங்கிப்பேட்டை, முத்துகுமரசாமி கோவில்.

பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் பற்றிய எனது பதிவில் முத்துக்குமரசாமி கோவில்பற்றி எழுதப்போவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு காணலாம்.

இது பாபாஜியின் அப்பா  சுவேதநாதய்யர்பூஜை செய்த  கோவில் என்று சொல்கிறார்கள்.நாங்கள் சென்றபோதுஅக்கோவிலில் கும்பாபிஷேக வேலைகள்  நடந்து கொண்டு இருந்தது. 1.5.2013இல் நடைபெறும் என்று சொன்னார்கள்.  பத்திரிக்கை கொடுத்தார்கள். பத்திரிக்கையில் முத்துகிருஷ்ணபுரி எனும் பரங்கிப்பேட்டையில் என்று குறிப்பிட்டிருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளித்து காப்பவர் இக் கோவிலில் குடி இருக்கும் முத்துகுமரசுவாமி என்கிறார் குருக்கள்.இக்கோயில் குமரக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திரனால் பிரதிஷ்டை செய்து  பூஜிக்கப்பட்டஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ 
விசாலாட்சிஅம்மன்  இவர்கள் தான் முன்பு பிரதான தெய்வங்களாய்  இருந்து இருக்கிறார்கள். 

 கோவில் உண்டான கதை: 

நமுசி என்ற அசுரன் பலமான ஆயுதங்களால் தனக்கு அழிவு  வரக்கூடாது என்று வரம் பெற்று இருந்ததாகவும், தேவர்களை போரிட்டு வென்றதாகவும்,  அவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல்  இந்திரன் சிவனிடம் வேண்டியதாகவும், அவர் கடல் நுரையால் கொல்லும்படி ஆலோசனை சொன்னதாகவும் வரலாறு கூறுகிறது. அதன்படி கடல்நுரையால் இந்திரன் அசுரனைக் கொன்று  அதற்கு உதவிய இறைவனுக்கு  சிவலிங்கம் அமைத்து  பூஜித்தார். முதலில்  இந்திரலிங்கம் என்று அழைக்கப்பட்ட இறைவன் , பின்பு விஸ்வநாதர் என்று அழைக்கப்பட்டார்.

இக் கோவிலில் உள்ள முத்துக்குமரசுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால்,   நாளடைவில் கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

திருவிழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுமாம். விழாவில் எல்லா வாகனங்களிலும் முருகன் வந்தாலும் இந்திரன் பூஜை செய்ததால் அவரின் ஐராவத வெள்ளை யானை வாகனத்தில் விழாக்காலங்களில் வருவது சிறப்பு. மாசி மகத்தில் வெள்ளாறு சென்று தீர்த்தவாரி கொடுப்பது சிறப்பாம்.

  பிரகாரத்தில் உள்ள ஐந்து தலை நாகராஜரும், அவரது இருபுறமும் நாககன்னிகையரும்     உள்ளனர் . இவர்களை வணங்கினால் நாகதோஷம், களத்திர தோஷம் நீங்கி  திருமணத் தடை நீங்கி   விரைவில் திருமணம் நடைபெறுமாம். வேண்டியது நடந்து விட்டால் நாகருக்கு தாலி, மற்றும் சிவப்பு வஸ்திரம் சாற்றுகிறார்கள்..சில பெண்கள் நாகருக்கு மஞ்சள் பொடி போட்டு வணங்கி கொண்டு இருந்தனர்.

 வேலைஇழந்தவர்கள், பதவி இறக்கம் பெற்றவர்கள் சிவனை வணங்கினால் இழந்த வேலை கிடைக்குமாம், இழந்த பொருட்களை (காணாமல் போன பொருள்)  சிவனை வேண்டினால் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
 சிவனுக்கு  வஸ்திரம் சார்த்தி, சாம்பார் சாதம், அல்லது பொங்கல் படைக்கிறார்கள்.அம்மனுக்கு வடை, பொங்கல் படைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்கிறார்கள்.

கார்த்திகை சோமவாரம் சிவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்திரன், பிரம்மா எல்லாம் கார்த்திகை முதல் ஞாயிறு அன்று வணங்கினார்களாம். இங்குள்ள பிரம்மா அமர்ந்த நிலையில் இருகைகளையும் கூப்பிய நிலையில் இருப்பது சிறப்பு.  பிரம்மாவின் அருகில் இருக்கும் துர்க்கை  எட்டுகைகளுடன் காட்சி அளிப்பது சிறப்பு.வளர்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம் உண்டு.

முத்துக்குமரசாமி இந்திர மயில் மீது ஆறுமுகங்களுடன் வள்ளி. தெய்வானையுடன் காட்சி தருகிறார். செவ்வாய் தோறும் சத்ரு சம்ஹார திரிசதி நடக்குமாம். அப்போது ஆறுமுகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து ஆறு பிரசாதங்கள் படைத்து வழிபாடு சிறப்பாய் நடைபெறுமாம்,. தேன்   முக்கிய பிரசாதம். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம் உண்டாம்.

முருகனுக்கு முன் இருக்கும் மண்டபம் அமாவாசை பூஜை மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.  இதில் 18படிகளுடன்  ஐயப்பன்  சன்னதி உள்ளது. மாதப்பிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐயப்பன் அன்று கோவிலை வலம் வருவார்.

அமாவாசை மண்டபத்தில் உள்ள படம்:
முத்துக்குமரசாமி, விசுவநாதசுவாமி,விசாலாட்சிஅம்மன்,பாபாஜி

முன் மண்டபத்தில் உள்ள நடராஜருக்கு  ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம்  மற்றும்  சாமி புறப்பாடும் உண்டாம்.

 பைரவருக்கு .தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகம் நடக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.   இங்குள்ள பைரவருக்கு அமாவாசை அன்று இரவு சிறப்பு பூஜை நடக்கிறதாம்.

பிரகாரத்தில் ஆதி விநாயகர்,  பாலசுப்பிரமணியர்,  சனீஸ்வரர், மகாலட்சுமி, நவகிரகங்களுக்கு சன்னதி உள்ளது.

நாங்கள் போன போது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்ததால் முருகன் சன்னதியை மட்டும் திறந்து காட்டி கோவில் வரலாறு சொன்னார், முருகன் படம், விபூதி பிரசாதம்  கும்பாபிஷேக பத்திரிக்கை  எல்லாம் கொடுத்தார்.

கோவில் காலை எட்டுமணி முதல் மதியம் 12 மணிவரை, மாலை 5 மணி முதல் இரவு  எட்டு மணி வரை. பக்கத்தில் அர்ச்சகர் வீடு இருப்பதால் வெளியூர் அன்பர்களுக்கு தரிசனம் உண்டு.

நாங்கள் போனபோது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்தது. எங்களை பார்த்த குருக்கள் வீட்டுக்கு போய் சாவி கொண்டு வந்து தரிசனம் செய்து வைத்தார்.

1.5.2013ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும்.இனி அங்கு செல்பவர்கள் புதிய பொலிவுடன் கண்டு தரிசித்து மகிழலாம்..

                                                             வாழ்க வளமுடன்!
                                                                          -----

38 comments:

கீத மஞ்சரி said...

சிவன், பிரம்மா, இந்திரன், துர்க்கை, முருகன், ஐயப்பன், விநாயகர், பைரவர், நாகராஜர், சனீஸ்வரர், மகாலெக்ஷ்மி என்று ஒரே இடத்தில் எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் விதத்தில் சிறப்புடைய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி மேடம்.

இராஜராஜேஸ்வரி said...

பொலிவுடன் சிறப்பான
திருக்கோவில் ..
பாராட்டுக்கள் ...

திண்டுக்கல் தனபாலன் said...

கோவில் உண்டான கதை, கோவிலைப் பற்றிய முழு தகவல்களுக்கும் நன்றி...

Ramani S said...

தரிசித்து மகிழ்ந்தேன்
படங்களுடன் பகிர்வு நேரடியாக
பார்க்கிற மகிழ்வைத் தந்தது
பதிவுக்கு மன்மார்ந்த நன்றி

Ramani S said...

tha.ma 2

G.M Balasubramaniam said...


இதைப் படித்துவிட்டு இன்று மாலை குருவாயூர் செல்லத் திட்டம். அங்கு என் மனைவியும் அவரது குழுவினரும் நாராயணீயம் பாராயணம் பண்ணப் போகிறார்கள். பத்தாம் தேதி. இரண்டு மூன்று நாட்கள் பதிவுலகிலிருந்து விடுப்பு..!
வாழ்க வளமுடன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நேரில் பார்த்த அனுபவம் கிட்டியது..

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன், முதல் வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி தருகிறது கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள். திவ்ய தரிஸனம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரமணிசார், வாழ்கவளமுடன்.
உங்கள் அழகிய பின்னூட்டத்திற்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

அப்பாதுரை said...

யாராலும் வெல்ல முடியாத அசுரனை கடல் நுரையால் கொல்வதா? interesting கதை.
படங்கள் பிரமாதம்.

ராமலக்ஷ்மி said...

கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருக்கும் என நம்புகிறேன். ஸ்தல வரலாறும் தகவல்களும் படங்களும் அருமை. நன்றி.

கோமதி அரசு said...

வாங்க பாலசுப்பிரமணியம் சார்,வாழ்க வளமுடன்.
ஊருக்கு போகும் நேரத்திலும் என் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

நாராயணியம் பாராயணம் செய்வதை டெல்லி குருவாயூர் கோவிலில் கேட்டு இருக்கிறேன்.
உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வாங்க கவிதை வீதி // செளந்தர்// வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும்.

கோமதி அரசு said...

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
அசுரன் கேட்டவரம் அப்படி பலம்பொருந்திய ஆயுதங்களால் கொல்லக்கூடாது என்று . அதனால் லேசான கடல்நுரையால் கொல்ல சொல்கிறார் சிவன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன். சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் ஆனதாம் பத்திரிக்கையில் படித்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. அடுத்த கோவிலுக்கு செல்லவேண்டி இருந்ததால் படங்கள் நிறைய எடுக்க முடியவில்லை, அடுத்த கோவில் பதிவுக்கு நிறைய படங்கள் இருக்கிறது.

rajalakshmi paramasivam said...

பரங்கிபேட்டை முத்துக் குமாரஸ்வாமி கோவில் பற்றிய விஷயங்கள் அருமை.தலைப்பை பார்த்ததும் நான் வைத்தீஸ்வரன் கோவில் பற்றித் தான் என்று படிக்க ஆரம்பித்தேன். பிறகு தான் புரிந்தது இது வேறு கோவில்.
அருமையாக விவரித்துள்ளீர்கள் ஸ்தலபுராணம்.
நன்றி பகிர்விற்கு,,,,

ஸ்ரீராம். said...

கடல் நுரையால் மூச்சுத் திணற வைத்துக் கொன்றிருப்பாரோ...

கோவில் பற்றிய சகல விவரங்களுடன் சுவாரஸ்யமான பதிவு.

கோமதி அரசு said...

வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகன்பெயரும் முத்துகுமரஸ்வாமிதான் ஆனால் செல்வமுத்துகுமரன் என்பார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

Good Article...... Thanks for sharing.

வெங்கட் நாகராஜ் said...

To continue....

கவியாழி கண்ணதாசன் said...

அசுரனைக் கொல்லும் ஆயுதம் நுரையா?

கோமதி அரசு said...

வாங்க வெங்கட் வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆதி, ரோஷிணி நலமா?

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
அசுரன் ஆயுதம் எதுவும் இருக்க கூடாது என்னை கொல்ல என்று வரம் வாங்கியபின் எப்படியாவது அழிக்க வேண்டுமே அதற்கு தான் கடல் நுரை.
கெட்டவை அழிந்து நல்லவை மலர சொல்லபடுபவைதானே!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
அசுரன் ஆயுதம் எதுவும் இருக்க கூடாது என்னை கொல்ல என்று வரம் வாங்கியபின் எப்படியாவது அழிக்க வேண்டுமே அதற்கு தான் கடல் நுரை.
கெட்டவை அழிந்து நல்லவை மலர சொல்லபடுபவைதானே!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி.

கே. பி. ஜனா... said...

நல்ல தகவல்களுடன் சிறப்பான கட்டுரை!

Anonymous said...

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் பற்றி அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள் ...
என்ன ஆச்சரியம் வலை ஆடவில்லை. ஆண்டவனுக்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

கோமதி அரசு said...

வாங்க கே.பி. ஜனா சார், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கே.பி. ஜனா சார், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
வலை ஆடாமல் இருப்பதற்கு காரணம் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். அவர்கள் மூலமாய் நிரந்தர தீர்வு கண்டு விட்டேன். அவருக்கு நன்றி.
கடவுளுக்கு நன்றி.
இனி தொடர்ந்து நீங்கள் வரலாம்.வலைத்தளம் துள்ளி குதிக்காது ,ஆடாது.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
வலை ஆடாமல் இருப்பதற்கு காரணம் பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். அவர்கள் மூலமாய் நிரந்தர தீர்வு கண்டு விட்டேன். அவருக்கு நன்றி.
கடவுளுக்கு நன்றி.
இனி தொடர்ந்து நீங்கள் வரலாம்.வலைத்தளம் துள்ளி குதிக்காது ,ஆடாது.

Anonymous said...

காரைக்கால் செல்லும்போது ஒருமுறை பரங்கிப்பேட்டை சென்றிருக்கிறேன்..ஆனால் கோயிலைப்பார்த்ததில்லை.அடுத்தமுறை தரிசிக்கிறேன்.நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

குமரக்கோயில் தர்சனம் கிடைத்து நிறைவு பெற்றோம்.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், மிக நன்றி.