திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்,
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்
இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம் -தமிழ்நாடு
காஷ்யப முனிவர் ஒரு முறை சிவனை எண்ணி யாகம் நடத்தினார். அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.
வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.
சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார் என்று விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.
மார்க்கண்டேயரை சிவபெருமானே வந்து காப்பாற்றினார். இத்தலத்தில் தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார். அம்பாள் எமனிடம், ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.
மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.
இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.
இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள், சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.
சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம் |
விமானம் |
தெற்குப் பிரகாரம் |
துர்க்கையை வலம் வந்து வணங்கலாம் |
சித்திரகுப்தர் திருவுருவம் |
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார்.
மேடையில் கிழக்கு நோக்கிய சனீஸ்வரர் சந்நிதி |
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார்.
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு அம்மன் சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும் தரிசித்தோம்.
சிதம்பரம்-அம்மன் சந்நிதி |
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும் |
சிதம்பரம் -வடக்குக் கோபுரம் |
என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும் முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’
என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்!
’பரங்கிப்பேட்டைக் கோயில்கள்’ தொடர்கட்டுரை நிறைவடைகிறது. வாழ்க வளமுடன்.
------------
அருமையான பகிர்வு..நேரில் சென்று பார்த்த உணர்வை ஏற்படுத்தும் படங்கள் அருமை..பரங்கி பேட்டை ஆதிமூலேஷ்வரர் கோவிலின் தகவல்கள் அறிந்தமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅதிக மழை வேண்டுவோம் ஆனாலும் அதனால் ஆபத்தும் வராமல்இருக்க நல்ல விளக்கங்கள் சொன்னீகள். சித்திர குப்தன் உருவம் இப்போதே பார்க்கிறேன். நிறைய கோவில்களில் நிறைய சிலைகள் இருக்கும் கை எடுத்து கும்பிட்டபடி நகர்ந்து விடுவோம் இனி ஒவ்வொரு சிலைக்கும் தகுந்த விளக்கம் அறிய முயற்சிக்கலாம். படங்கள் சிறப்புங்க.
பதிலளிநீக்குபடங்கள் தெளிவா ரொம்ப நல்லா இருக்கு!
பதிலளிநீக்குசித்திரகுப்தருக்குக் காஞ்சியில் ஒரு கோவில் இருக்குன்னு கேள்விப்பட்டுருக்கேன்.
இவருக்கு வயசு 12 தானா? ஒருத்தர் கணக்கையும் விடாமல் எழுதி வச்சுடறாரே!!!!
நேரில் கண்டு தரிசித்ததைப்போல ஒரு நிறைவு
பதிலளிநீக்குபடங்களுடன் ஸ்தல வரலாற்றுடன் சொல்லிச் சென்ற விதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குtha ma 2
பதிலளிநீக்குபடங்களுடன் அருமையோ அருமை !! பாராட்டுக்கள்.//
பதிலளிநீக்குசித்திரக் குப்தர் பற்றிய கதை அறியத் தந்தமைக்கு நன்றி. படங்கள் யாவும் மிக அருமை. தகவல்களுடன் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குஅழகான பதிவு. அற்புதமான படங்கள். ஸ்தல வரலாறு பற்றி மிகவும் நன்கு எழுதியுள்ளீர்கள். நேரில் சென்ற பார்த்தது போன்ற திருப்தி ஏற்பட்டது.
பதிலளிநீக்குபாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
[காலை முதல் நெட் கிடைக்காமல் இருந்ததாலும், நீண்ட நேரம் மின்தடை காரணமாகவும் என் வருகையில் சற்றே தாமதமாகி விட்டது.]
வாங்க ராதாராணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமக்களை நல்வழி படுத்த ஒவ்வொரு கோவிலிலும் ஒரு கதை சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள். அதில் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ளலாம் அது தான் எங்கு போனாலும் அந்த கோவிலின் கதையை அறிந்து கொள்ளும் காரணம்.
உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுதலில் நான் எடுத்த படங்கள் தெளிவாக இருக்கிறது என்று சொன்னதற்கு மிக நன்றி.
சிவன் அருளால் அவருக்கு கிடைத்த பதவி அல்லவா! சரியாக செய்யும் பொறுப்பையும் அவரே தருகிறார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க கெளதமன் , வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தமிழ்மண ஓட்டுக்கு நன்றி. கருத்து எங்கே?
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள், பதிவை ரசித்து உங்கள் பாராட்டுக்களை அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்களுடன் வெளியான கோயில் தரிசனம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.
வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கிறதா? கலைநயத்துடன் படம் பிடிக்கும் நீங்கள் சொன்னதில் மகிழ்ச்சி ராமலக்ஷமி.
பதிவு, படங்களை பாராட்டியதற்கு நன்றி.
கருத்து: படங்களும், விளக்கங்களும் Sharp.
பதிலளிநீக்குபரங்கி பேட்டை ஆதிமூலேஷ்வரர் கோவில் தலவரலாறுகள் அருமை.
பதிலளிநீக்குவாங்க வி.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஅன்பான, உற்சாகம் தரும் பின்னூட்டமும் , பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தாமதம் எல்லாம் இல்லை.நீங்கள் வந்து கருத்து சொன்னதே மகிழ்ச்சி.
வாங்க பால்சுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குவாங்க கெளதமன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்து அருமை. கருத்து எங்கே என்று கேட்டவுடன் கருத்து சொன்னதற்கு நன்றி.
வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சித்திரகுப்தருக்கு ஒரு கோவில் இருக்குன்னு இப்பதான் அறிகிறேன் சகோதரி!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு..நேரில் சென்று பார்க்கின்ற உணர்வை ஏற்படுத்தும் படங்கள் அருமை. அழகு!
ஆதிமூலேஷ்வரர் கோவிலின் தகவல்கள் அறியத்தமைக்கு மிக்க நன்றி. மனதில் நமக்கும் இங்கெல்லாம் வந்து தரிசிக்கும் அதிர்ஷ்டம் கிட்டுமான்னு ஏக்கம் பிறக்கிறதம்மா...
வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்.
படங்கள் அருமை... தல சிறப்புகளுக்கு நன்றி...
பதிலளிநீக்குவழக்கம் ( இன்று முதல் ) மின்வெட்டு ஆரம்பம் ஆகி விட்டது... அதான் தாமதம்...
வாங்க இளமதி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகாஞ்சியில் இருக்கிறது, சிதம்பரம், பரங்கி பேட்டை ஆகிய இடங்களில் நமக்கு தெரிந்து இருக்கிறது. தெரியாமல் எங்கு எல்லாம் இருக்கிறாரோ!
உலகம் மிக சுருங்கி விட்டது, வாய்ப்புகள் வசதிகள் நிறைய வந்து விட்டது. தமிழகம் வாருங்கள் எல்லாம் தரிசிக்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாராட்டுக்கும் நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுதலில் வரும் வழக்கம் மின்வெட்டால்
தாமதம் ஆகி விட்டதா? பரவாயில்லை.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
இங்கும் சஷ்டியப்த பூர்த்தி நடை பெறுகிறதா?படிக்க ஆச்சர்யமாக உள்ளது.
பதிலளிநீக்குசித்ரா குப்தருக்கு என்றும் பன்னிரெண்டா?
இந்த வயதில் எல்லோருடைய பாவ புண்ணியங்களை கணக்காய் எழுதி வைத்து விடுகிறாரே.
நல்ல பகிர்வு.
கனமான பகிர்வு - கனமான படங்களால் - ('லோட்' ஆக நேரமாகிறதே.....!!!) :)))
பதிலளிநீக்குநல்லபல விவரங்களுடன் கோவில் பற்றிய பதிவு படங்களாலேயே சுவாரஸ்யமடைகிறது.
பரங்கி பேட்டை ஆதிமூலேஷ்வரர் கோவிலின் தகவல்கள் மிக அருமை. சித்திரகுப்தருக்கு ஒரு கோவில் இருக்குன்னு இப்பதான் அறிகிறேன் மிக்க நன்றி.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
வாங்க ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமூர்த்திக்கு வயது குறைவு என்றாலும் கீர்த்தி பெரிது.
அங்கு பக்கத்தில் உள்ளவர்கள் அங்குதான் சஷ்டியப்த பூர்த்தி செய்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். கனமான பகிர்வா! சுண்ணாம்பு கல், கோவில்கள் எல்லாம் கனம்தான்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குசித்திரகுப்தருக்கு இன்னும் சில இடங்களில் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஏற்கனவே கமென்டுன மாதிரியே இருக்குதே - ஒரு வேளை ராஜேஸ்வரி பதிவுல போட்டுட்டனா? (இந்தக் கிண்டல் தானே வேணாங்குறதுனு நீங்க சொல்றாது கா.வி.)
பதிலளிநீக்குநல்லபடியா வாழ்ந்தா நாலு வார்த்தை எழுதுவாரு - சரிதான். நல்லபடியா வாழ்ந்தா நாலு வார்த்தை எழுதுவாரா மாட்டாரானு கவலைகூட தேவையில்லை. நாடு இருக்குற நிலையில சித்திரகுப்தருக்கு அண்டா அண்டாவா லஞ்சம் இல்லே வந்திட்டிருக்கும்?
12 வயசுல எழுத்தே சரியா வராது - கணக்கு அதுக்கு மேலே.. ஒருவேளை நாட்டு நடப்புக்கெல்லாம் இதான் காரணமோ?
அண்டா அண்டாவா அபிஷேகம்னு படிச்சதும் மனசுல ரொம்ப வருத்தமா இருக்குதுங்க. எப்படியெல்லாம் வீணாக்குறோம்!
படங்கள் பிரமாதம்.
வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇந்தபதிவுக்கு இப்போது தான் பின்னூட்டம் போடுகிறீர்கள் கவலை வேண்டாம்.
இராஜராஜேஸ்வரி பதிவு போல் இருக்கா! மகிழ்ச்சி.
//நாடு இருக்குற நிலையில சித்திரகுப்தருக்கு அண்டா அண்டாவா லஞ்சம் இல்லே வந்திட்டிருக்கும்?//
நீங்கள் சொல்வது சரிதான். நாடு லஞ்சத்தில் மாட்டிக் கொண்டு திணறுகிறது. எங்கும் எதிலும் லஞ்சம் இறைவனையும் விடவில்லை -மக்கள் தருகிறார்கள் லஞ்சம். (விளையாட்டில் லஞ்சம், நிலக்கரி ஊழலில் லஞ்சம் வாங்கினாரா என்று விசாரிக்கும் அதிகாரி லஞ்சம் வாங்குகிறார் யாரை நம்புவது?)
இப்போது நீங்கள் சொல்வது போல் செயல்களை திருத்திக் கொள்ளாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்து விட்டால் நம்மை காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள்.
முன்பு இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லவும், விக்கிரகங்கள் எண்ணெய் தண்ணீர் பட்டுக் கொண்டு இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இப்போது விக்கிரகங்கள் தேய்ந்து அழிந்துவிடும் அளவு அபிஷேகம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
நிறைய கோவில்களில் எண்ணெய் தண்ணீர் கூட இல்லாமல் காய்ந்து கிடக்கிறது விக்கிரகங்கள்.
மனம் அது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்பார்கள் முன்னோர்கள்.
//தப்புக்கணக்கிட்டு தான் ஒன்றை எதிர்பார்த்தால்,
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக்கப்போது அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்படுவர்
இதையுணரார்.//
வேதாத்திரி மகரிஷி.
மக்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ப இயற்கையும், இறைவனும் சரியான விளைவுகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
//அண்டா அண்டாவா அபிஷேகம்னு படிச்சதும் மனசுல ரொம்ப வருத்தமா இருக்குதுங்க. எப்படியெல்லாம் வீணாக்குறோம்!//
எனக்கும் பார்க்க கஷ்டமாய் தான் இருக்கிறது.
ஒரு கோவிலில் 108 இளநீர் அபிஷேகம் செய்தார்கள் அதை சுத்தமான பாத்திரத்தில் பிடித்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்.
அபிஷேகத்தை குறைத்து கொண்டு அன்னதானம் செய்தால் நல்லது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பு கோமதி,
பதிலளிநீக்குசித்ர குப்தனுக்கு காஞ்சியிலும் நல்லதொரு கோவில் அமைந்திருக்கிறது.
நீங்கள் இத்தனை விவரங்களளித்திருப்பது மனம் நிறைவடைகிறது.படங்களோடு கோவிலைத் தரிசிப்பது பெரும்பாக்கியது. கடவுளின் ஆசிகள் உங்களுடன் இருக்கட்டும் .வாழ்க வளமுடன்.
வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகாஞ்சியில் சித்திரகுபதருக்கு தனி கோவில் இருபதாய் சொன்னார்கள் நான் இன்னும் பார்க்கவில்லை.
முன்பு காஞ்சியில் பாடல் பெற்ற தலங்கள். மங்களாசாஸனம் பெற்ற கோவில்கள் எல்லாம் பார்த்து வந்தோம்.
உங்கள வருகைக்கும்,கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
ithuvarai nan ariyatha thagavalgal..padangal arumai..ungal aanmeega sevai thodarattum..
பதிலளிநீக்குவாங்க கலியபெருமாள், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
இதுவரை கேள்விபடாத தகவல்கள்.சென்று வராத கோவில்.
பதிலளிநீக்குதப்பெல்லாம் செய்துவிட்டு, அபிஷேகம் செய்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் எப்போது மாறுமோ? நீங்கள் சொல்வதுபோல, விக்ரகங்கள் தேயுமளவிற்கு இப்போது அபிஷேகங்கள் நடக்கின்றன.
அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஷ்வரர் எல்லோருக்கும் அருளுடன், அறிவையும் கொடுக்காததும்.
ஆயிரம்கால் மண்டபமும் குளமும் ரொம்ப அழகு!புகைப்படங்களுடன் படித்ததால் உங்களுடனேயே வந்த ஒரு உணர்வு.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் கண்களைக் கவர்ந்தன. ரொம்பத் தெளிவான படங்கள். அருமையா எடுத்திருக்கீங்க. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரங்கிப்பேட்டை கோயில் போனதில்லை. காஞ்சி சித்திரகுப்தரையும், சிதம்பரம் சித்ரகுப்தரையும் பார்த்தாச்சு. :))))
வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழக வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாஞ்சிபுரம், சித்ம்பரம் பார்த்துவிட்டீர்கள், இப்போது பரங்கிபேட்டை சித்திரகுப்தரை பதிவில் பார்த்துவிட்டிர்களே!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
என்றும் 16 - மார்க்கண்டேயர் கதை தெரியும். இந்த ”என்றும் 12” சித்தரகுப்தர் புது தகவல்.
பதிலளிநீக்குவாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபுதுதகவலை தெரிந்து கொண்டீர்களா?
மகிழ்ச்சி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் நல்ல ஆன்மீக செய்திகனளை பகிர்கீரேற்கள் நன்றி
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மிக மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் வர்ணணை மிகவும் அருமை.தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் நா. சுவாமிநாதன் , தேப்பெருமா நல்லூர் ஸ்ரீ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் அன்பான கருத்துக்கும் , பிரார்த்தனைக்கும் நன்றி.