Monday, May 20, 2013

பதிப்பாசிரியர் ச.பவானந்தம் பிள்ளைஎங்கள் வீட்டில் பழைய புத்தகங்கள் சில உண்டு.  தாத்தா கால
புத்தகங்களுமுண்டு. நேற்று என் கணவர் தொல்காப்பிய சொல்லதிகாரம்
என்ற ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டு இருந்தார்கள்  அப்போது
நான் வாங்கி கொஞ்சம் பார்த்தேன். 1941ம் வருடத்தில் வெளிவந்தது.  பவானந்தர் கழக வெளியீடு  என்று இருந்தது. விலை 3 ரூபாய்.தொல்காப்பியம் -சொல்லதிகாரம்-  நச்சினார்க்கினியம் என்று தலைப்பில் இருந்த அந்தப் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்து கொஞ்சம் படிப்போம் என்று படித்தேன். அதில் பவானந்தர் கழக ஸ்தாபகர் திவான்பகதூர் ச. பவானந்தம் பிள்ளையவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு போட்டு இருந்தார்கள்.  அவர் 1932 ஆம், ஆண்டு மே மாதம் 20 தேதி மறைந்தார் என்று போட்டு இருந்தது.   அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று படித்தேன். பல நல்ல காரியங்கள செய்து இருக்கிறார்.  அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களின் தந்தை முத்துசாமி
பிள்ளை என்னும் வேளாண்குடி செல்வர். தாய் சந்திரமதி. சிறு வயதிலேயே
நல்ல குணங்களுடன் வளர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார்.
உயர்கல்வி பயின்றார். வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து சென்று
படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால்  வைதிக மதப்பற்றுள்ளவராகிய இவரது அன்னையார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அயல் நாடு போகவில்லை.

அந்நாளில் நகரகாவற்படையின் உயர் அதிகாரி(போலீஸ் கமிஷனர்) கர்னல் டி.வெல்டன் ஸி.ஐ.இ என்பவர், கல்வியில் சிறந்த இவரை நகரகாவற்படையில் சேர்க்க விரும்பினார்.  போட்டி பரீட்சை ஒன்றை வைத்தார். அதில் எழுதியவர்களில் முதன்மையாய் தேறிய இவரை தாம் புதிகாக ஏற்படுத்திய குற்றவர்த்தமான விசாரணை வகுப்பில்(criminal  intelligence  department)தமது நேர்முக காரியஸ்தராக(உதவியாளராய்) நியமித்தார்.

பவானந்தம் பிள்ளை, தான் மேற் கொண்ட பணியில் பலரும் வியக்கும் வண்ணம் புகழ்பெற்றார்.அவர் தமது பணியில், மனம் தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிர்வாக சாதுரியம் ஆகியபண்புகளுடன் விளங்கினார்.

இவர் சட்ட நூல்களை ஆராய்வதில் ஏற்பட்ட பெரும் விருப்பத்தால் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞ்ராவர். சட்ட நூல்களை ஆராய்ந்து F.L ,B.L , சட்டப்பரீட்சை எழுதுபவர்களுக்காக  30  நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார்.
1904 ஆம் ஆண்டு முதல் 1912 வரை சென்னை நகரக் குற்ற வர்த்தமான
விசாரணை வகுப்பு தலைவராக இருந்திருக்கிறார்.


வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் வந்தபோது மெய்காப்பாளராக
இருந்து திறம்பட செயலாற்றியதால், விருது, பதக்கம் ஆகியவற்றை இளவரசரிடம் இருந்து பெற்றார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போது அவர்களுக்கும் மெய்காப்பாளராய் இருந்து பாராட்டுப் பெற்று இருக்கிறார்.

32 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை பற்றி பத்திரிக்கையில் இவரை புகழ்ந்து இருக்கிறார்கள்.1908 ஆம் ஆண்டு போலீஸ் அஸிஸ்டண்ட் கமிஷனராகவும், 1918 ஆம் ஆண்டு டெபுடி கமிஷனராகவும் பொறுப்பேற்றார்.

இவர் சென்னை ஷெரிப்பாயும் விளங்கினார். நாட்டுமக்களின் நலம் கருதி  பற்பல தொண்டுகள் ஆற்றி  இருக்கிறார். அதனால் அவரை ’பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர் “எனப்பாராட்டி இருக்கிறார்கள்.

உத்தியோக உடையில் பவானந்தம் பிள்ளை

இவர் தன் பெயரால் ‘பவானந்தர் கழகம்’ என்னும் கல்விக்கழகம் ஒன்றை
நிறுவி, அதன் வளர்ச்சிக்காகவும், தொண்டுகளுக்காகவும் தாம் ஈட்டிய
பொருளை உயில் எழுதி அர்ப்பணம் செய்து இருக்கிறார்.இவர் ஏற்படுத்திய கழகத்தின் நோக்கம் பலதுறைகளில் ஆராய்ச்சியும், பொது ஜன நன்மைக்கான ஞானத்தையும், கல்வியையும், நீதிநெறியிலும், உடற்கூற்றுத் துறையிலும் மக்களிடையிற் பரப்புதலும் ஆகும்.

இவரால் நிறுவபட்ட நூல்நிலையத்தில் 40 ஆண்டுகளாய் (1941ல்)இவரால் தொகுக்கப்பெற்ற பல்லாயிரம் நூல்கள், ஏட்டு வடிவிலும் கையெழுத்திலும் அச்சிலும் அமைந்தவை.தமிழ் நூல்கள் பலவற்றை இவர் பல வகைக் குறிப்புகளுடனும் ஆராய்ச்சி முகவுரைகளுடனும் பதிப்பித்து  வெளியிட்டு தமிழுலகத்திற்கு தொண்டாற்றியிருக்கிறார்.

தமிழிலக்கணங்களில் தொன்மை வாய்ந்தனவும், சிறந்தனவுமாகிய தொல்காப்பியம் பொருளதிகாரம், (நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை, இறையனாரகப்பொருளுரை , பேரகத்தியத்திரட்டு, இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின்  உரைகளைத் தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை முதலியவற்றை இவர் தம் பொருளைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றார்.

இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன் மாநகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி, மேரி மகாராணியார் முன்னிலையில் நடித்துக் காட்டப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக்த் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும்
பல்கலைக் கழக அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட திராவிடச் சொற்றொடராக்கச் சங்கத்தின் அங்கத்தினாராயும் இருந்திருக்கிறார். தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபாநாயகருக்குப் பிரதிநிதியாய்   இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களில் பல பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாட புத்தகங்களாக இருந்தன.. இவர் இயற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்களுக்கு பயன்பட்டு வருகின்றன.

இவர் தலைவராயும், அங்கம் வகித்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும் சபைகளும் பலவாகும். இவருடைய பக்திமிகுந்த பரிசுத்தமான பிரம்மசரிய வாழ்க்கையும், இனிய குணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத்தோற்றமும்,, வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும், இவரை எவரும் விரும்பிப் பாராட்டும் பண்புகளாயிருந்தன.’கற்றோருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை; என்னும் கருத்துடன் இப்பெரியார்  வாழ்ந்து வந்தமையின் , புலவருங் கவிஞரும் போற்ற வாழ்ந்தவர்,

அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை பவானந்தம்பிள்ளையைப் போற்றிப் பாடிய பாடல்:-

கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
      கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத்
       தழைத்திடச் செய்தலின் விருப்பும்
கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
       தன்னெனும் கோதிலாய்! கருத்தின்
எண்டகு மிந்நூற் பதிப்பினை யீந்தேன்
       ஏன்றருள் உரிமையா இனிதே.


 
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பவானந்தம் பிள்ளை,1932-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி இம்மண்ணுலகிலிருந்து மறைந்தார்.
வாழ்க அவர்தம் புகழ்!  வாழ்க தமிழ்!


                                                       வாழ்க வளமுடன்

                                                              ---------------
--------------------------------------------------------------------------------------------------------------------


61 comments:

கவியாழி கண்ணதாசன் said...

பொக்கிஷம்போல பாதுகாத்து வையுங்கள் .அரிதான புத்தகம் வைத்துள்ள நீங்கள் பெருமைக்குரியவர்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பழைய நூலில் உள்ள விஷயங்களை ஜூஸ் ஆகப்பிழிந்து பருகக் கொடுத்துள்ளது, இனிமையாக உள்ளது.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றோருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை - அருமை...

பவானந்தம்பிள்ளை அவர்களைப் பற்றிய சிறப்பான தகவலுக்கு நன்றி...

இன்னும் இது போல் சிறப்பான புத்தகங்கள் பற்றிய தகவல்களை தொடர வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

பொக்கிஷமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

Sasi Kala said...

அரிதான அற்புதமான புத்தகங்கள் உண்மையில் பாதுகாக்கப்படவேண்டிய புத்தகம். வரும் சந்ததிகளுக்கு உதவும். பகிர்வுக்கு நன்றிங்க.

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதே இல்லை. எத்தனை பேர் இவர் போல் ஓசைப்படாமல் சாதனைகள் செய்து இருக்கிறார்களோ.. தலைமுறைக்கு நன்றி பாராட்ட வேண்டும்.

அருமையான பதிவு.

அப்பாதுரை said...

இந்தப் புத்ககத்தைப் பாதுகாத்து வந்த உங்கள் குடும்பத்துக்கு பராட்டுக்கள்.

Geetha Sambasivam said...

அரிய பொக்கிஷமே இருக்கும் போல! புத்தகம் எத்தனை பக்கங்கள்?? விலை ரொம்பக் கம்மியா இருக்கே, முடிஞ்சால் ஸ்கான் பண்ணித் தர இயலுமா? எங்கள் மின் தமிழ்க் குழுமத்தின் மின்னூல் பக்கத்தில் உங்கள் பெயரோடு புத்தகத்தின் ஸ்கான் செய்த பக்கங்களைச் சேர்த்து மின்னூலாக்கி இணைக்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே! இல்லை எனில் இந்தப்பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம். புத்தகம் உங்களிடமே இருக்கும். அதன் ஸ்கான் செய்த பக்கங்கள் மட்டுமே மின்னூலாக்கப்பட்டு உங்கள் பெயரோடு இணைக்கப் படும். நன்றி. :))))))

Anonymous said...

அரியபல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி...அறியாத தகவல்கள்..

ஸாதிகா said...

அரிய புத்தகம்,அறிந்திராத தகவல்கள்.

G.M Balasubramaniam said...


தமிழ் வளர்க்கிறோம் என்று கூரையேறிக் கூவிடும் பலர்நடுவே சத்தமில்லாமல் தமிழ்த் தொண்டு ஆற்றியவர்களைப் பற்றி படிக்கும்போது மனம் நிறைகிறது. வாழ்த்துக்கள்.

rajalakshmi paramasivam said...

பதிப்பாசிரியர் பதிவு பல் நல்ல தகவல்கள் கொண்டிருந்தது.
நல்லதொரு பகிர்வு.
நன்றி பகிர்விற்கு.

Ranjani Narayanan said...

ஒரு மிகச் சிறந்த மனிதரைப் பற்றிய மிகச்சிறந்த புத்தகம்.
அரிதான புத்தகம் பாதுகாத்து வைத்துள்ள உங்களுக்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

மிகச் சரியாக அவர் மறைந்த நாளான மே 20ம் தேதி படித்து, பதிவு வரும்படி செய்தது பொருத்தம். புத்தகம் உதிர்ந்து விடும் போலிருக்கிறது, படத்தைப் பார்த்தால். அவர் பிரம்மச்சர்ய வாழ்க்கை மேற்கொண்டிருந்தார் என்பதும் தன சேமிப்பை தமிழ் வளர்க்கச் செலவு செய்தார் என்பதும் மனதில் நின்ற செய்திகள். குதிரையின் மீது கம்பீரமாகத் தெரிகிறார்.

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க சசிகலா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
ஆமாம் சார், நீங்கள் சொல்வது உண்மை இவரை போல் ஒசைப்படாமல் நல்ல காரியங்கள் செய்து இருக்கிறார்களோ!
தலைமுறைகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.நவீன வசதிகள் இல்லாத போதும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்களை வாழ்த்த வேண்டும்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் இந்த புத்தகம்
அரிய பொக்கிஷ்ம் தான். புத்தக பக்கங்கள் 568. எங்களீடம் ஸ்கான் வசதி இல்லை, வெளியில் தான் செய்ய வேண்டும். சந்தர்ப்பம் அமையும் போது ஸ்கான் செய்து தருகிறோம்.
தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
எனக்கும் நீங்கள் சொல்வது போல் தான் மனதில் தோன்றியது., அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராஜ்லக்ஷமி பரமசிவம். வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரஞ்சினி நாராயணன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். சார் ஒரு தொல்காப்பிய கருத்தரங்கில் பேசுவதற்கு தயார் செய்யும் போது இந்த புத்தகத்தை எடுத்து படித்தார்கள் அதனால் நானும் படித்தேன். மாதம், தேதி எல்லாம் பொருத்தமாய் அமைந்ததால் பகிர்ந்து கொண்டேன்.
நீங்கள் சொல்வது போல் ஏடுகள் தனி தனியாக வருகிறது. உதிரும் நிலைக்கு இன்னும் போகவில்லை. சிலபுத்தகங்கள் எடுத்தாலே பக்கங்கள் உடைந்து விழும் அப்படி சில புத்தகங்கள் இருக்கிறது வீட்டில், வேப்பிலை, வசம்பு , அந்துருண்டை எல்லாம் போட்டு புத்தகஅலமாரியில் பாதுகாக்கப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் தமிழுக்கு தொண்டு செய்து இருக்கிறார் தன் கைப்பொருள் கொண்டு. தொல்காப்பிய புத்தகத்தில் இவரைப்பற்றிய சிறிய வாழ்க்கை வரலாறு தான் நான் பகிர்ந்து கொண்டது. தனியாக அவர் வாழ்க்கை வரலாறு புத்தகம் தயார் ஆகி கொண்டு உள்ளது, பின்னர் வரும் என்று இந்த புத்தகத்தில் போட்டு இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக்வும் நன்றி.

மாதேவி said...

பொக்கிசமான பகிர்வு. எங்களுக்கும் படிக்க கிடைத்தது. நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

இளமதி said...

பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கவேண்டிய புத்தகம். அருமை. அறியாத தகவல்கள் பல. அறியத்தந்தமைக்கு நன்றியும் என் வாழ்த்துக்களும் சகோதரி.

ராமலக்ஷ்மி said...

பவானந்தம்பிள்ளை அவர்களின் வரலாறை அறியத் தந்தமைக்கு நன்றி. சரியாக அவரது நினைவு நாளில் வெளியிட்டிருப்பதும் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, தொல்காப்பிய கருத்தரங்கு.உங்கள் ஊரில் நடக்கிறதா.
தமிழில் ஈடுபடு கொண்ட தம்பதியினரைப் பார்த்துப் பெருமையாக இருக்கிறது.

முற்காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறார்,என் கணவரின் தாத்தாவும்
எப்பொழுதும் பழைய புத்தகங்களைப் படியெடுத்துக் கொண்டு இருப்பார்.
படிப்பு படிப்பு. அறிவு தேடல்.
திரு சச்சிதானம் அவர்களைப் பற்றி அறிய மிக மகிழ்ச்சி. அதை அழகாகப்பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.வாழ்கவளமுடன் கோமதி.

கோமதி அரசு said...

வாங்க இளமதி, வாழ்கவளமுடன்.
உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
தொல்காப்பிய கருத்தரங்கு என் கணவர் பணியாற்றும் கல்லூரியில் நடந்தது.

தாத்தா படிப்பில் ஆர்வமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

Anonymous said...

பவானந்தம்பிள்ளை அவர்களைப் பற்றிய சிறப்பான தகவலுக்கு நன்றி...
பொக்கிஷம்> அரிதான புத்தகம்.
தகவலுக்கு நன்றி...
Vetha.Elangathilakam.

மோகன்ஜி said...

உங்கள் பொக்கிஷப் பதிவுக்கு பாராட்டு மேடம்.. உபயோகமான பதிவு.

கீத மஞ்சரி said...

எவ்வளவு அபூர்வமான மனிதர்! 'பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர்' என்பது எவ்வளவு பொருத்தம். தன் கைப்பொருள் போட்டு தமிழின் அரிய செல்வங்களைப் படியெடுத்து புத்தகங்களாக்கிய மாமனிதர் என்றுமே போற்றுதற்குரியவர். அவருடைய தமிழ்த்தொண்டும் மக்கள் தொண்டும் வியப்படையவைக்கின்றன. நம் வாழ்நாளில் இன்றாவது இப்படியொரு அரிய மனிதரைப் பற்றி அறிந்துகொண்டோமே என்று நிறைவாக உள்ளது. தங்களிடமிருக்கும் புத்தக சேமிப்புக்கும் முன்னோரின் தமிழ்ச்சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

கோமதி அரசு said...

வாங்க வேதா.இலங்காதிலகம்,வாழ்கவளமுடன்.
உங்கள்பின்னூட்டம் காலதாமதமாய்பார்க்கமுடிந்தது,ஊருக்கு போய் இருந்தேன்.
உங்கள்வரவுக்கும்,கருத்துக்கும் மிக நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மோகன்ஜி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
//தன் கைப்பொருள் போட்டு தமிழின் அரிய செல்வங்களைப் படியெடுத்து புத்தகங்களாக்கிய மாமனிதர் என்றுமே போற்றுதற்குரியவர். //

நீங்கள் சொன்னது போல் போற்றுதலுக்கு உரியவர் தான்.
உங்கள் அருமையான பின்னூட்டத்தை காலதாமதமாய் பார்க்கிறேன்.
இன்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
உங்கள்வரவுக்கும்,கருத்துக்கும்நன்றி.

Ramani S said...

அரியதொரு பொக்கிஷம்
அறிந்திராத அறிய வேண்டிய மதிபிற்குரிய பவானந்தம்பிள்ளை
குறித்தஅருமை பெருமைகளை தங்கள் பதிவின் மூலம் அறிந்து
மகிழ்ந்தேன் விரிவான அருமையான புகைப்படங்களுடன் கூடிய
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.
உங்கள் பதிவும் இன்று வலைச்சரத்தில் இடம் பெற்று இருக்கிறது. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் பதிவும் இன்று வலைச்சரத்தில் இடம் பெற்று இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்து.
Vetha.Elangathilakam.

Asiya Omar said...

மிக நல்ல பகிர்வு.பவானந்தம் பிள்ளை பற்றிய பகிர்வும்,போற்றி பாடிய பாடல் பகிர்வும் அருமை.நன்றி பகிர்வுக்கு..

கோமதி அரசு said...

வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் திருமதி கோமதி அரசு,

அற்புதமான பகிர்வு. புத்தகத்தை பாதுகாக்க மின்னாக்கம் செய்து வைத்துக் கொள்ளலாமே.

அன்புடன்
பவள சங்கரி

கோமதி அரசு said...

வாங்க நித்திலம், வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது போல் மின்னாக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் said...


முக்கிய வேலைக‌ளால் முன்பே உங்கள் பக்கம் வந்து பின்னூட்டம் அளிக்க இயல‌வில்லை. சில‌ நாட்களுக்கு முன் வந்து செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டேன். இது மாதிரி அரிய தகவல்கள் இப்போதைய நிகழ்காலத்தில் யாருக்குமே தெரியாது. அரிய தகவல்க‌ளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் உங்களைத்தான் இங்கு பாராட்ட வேண்டும். அதைப் பதிவாகக் கோர்த்தெழுதி வெளியிட்டு அனைவருக்கும் அறியச் செய்த உங்களுக்கு நன்றியும் சொல்ல வேண்டும்.

தொல்காப்பியக் கருத்தரங்கு பற்றி அறிந்தேன். திருமதி.வல்லி சிம்ஹன் போலவே எனக்கும் அதைப்பற்றி அறிய ஆவலாயிருக்கிறது. காரணமும் இருக்கிறது. தொல்காப்பியதற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் பாட்டனார் ! அவரின் அந்தப் புத்தகத்தை லைப்ரரிகளில் எடுத்துப் படிக்க முனைந்திருக்கிறேன் சிறு வயதில்.

நீங்கள் முந்தைய‌ பதிவில் ' செய்யும் தொழிலே தெய்வம்' பாட்டு எங்கேயும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதாக நினைவு! கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கிறது அந்தப் பாட்டு. பதிவிறக்கம் செய்யும் முன் உங்கள் User name& password பதிவு செய்ய வேண்டும்.

http://music3.cooltoad.com/music/song.php?id=422154&PHPSESSID=6ba846209656742754d002b7b29f3618

கோமதி அரசு said...

வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
நானும் உங்களை போல் ஊருகளுக்கு போய் , வந்து கொண்டு இருக்கிறேன் பதிவுகளை சரியாக படிக்க முடியவில்லை.

//தொல்காப்பியதற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் பாட்டனார் !//

அவர்களைப்பற்றி கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

தொல்காப்பிய கருத்தரங்கு தருமபுர ஆதீனக்கலைகல்லூரியில் நடந்தது.
அங்கு என் கணவர் பணியாற்றுகிறார்.
உங்கள் தாத்தாவின் புத்தகம் கிடைத்தால் உங்களுக்கு சொல்கிறேன்.
செய்யும் தொழிலே தெய்வம் பாடல் கிடைத்து விட்டது.உங்கள் தகவலுக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

அரிய தகவல். காவல் துறையில் இருந்துகொண்டு, எழுத்துப் பணியும் செய்தார் என்பது ஆச்சரியம்.

“தொல்காப்பியத்திற்கு மறுப்புரை” என்றால் என்ன அக்கா?

cheena (சீனா) said...

அன்பின் கோமதி அரசு - அரியதொரு பதிவு - பொக்கிஷத்தினைப் பாதுகாக்கவும் - இயலும் போது மின்வரு
டியினால் மின்னூலாக்கவும் - கீதா சாம்பசிவத்தின மறுமொழியினைப் பார்க்கவும். அக்கால கட்டத்திலேயே இவ்வளவு பேரும் புகழும் பெற்ற பவானந்தம் பிஉள்லிஅயின்மைப் பற்றிஅய் அரிய தகவல்கள் அடங்கிய ப்அதிவின் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

sury Siva said...

பவானந்தம் பிள்ளை பற்றி எனது தகப்பனார் ( அவரும் துவக்கத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் 1920 ல் பிறகு வக்கீல் படிப்பு படித்து வக்கீல் ஆனார் ) சொல்லி இருக்கிறார்.

பவானந்தம் பிள்ளை அவர்கள் கிரிமினல் ப்ரொசிஜர் பற்றி எழுதிய புத்தகங்கள் சட்டக்கல்லூரியில் இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். கிரிமினல் ப்ரொசிஜரின் சரித்திரத்தில் அது ஒரு மைல் கல். பி.ஜி.எல்.படித்தபொழுது எனது வீட்டில் இருந்த ஒரு புத்தகம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

சட்டம், இலக்கியம் இவ்விரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய மா மனிதர் பவானந்தம் பிள்ளை அவர்களின்
வாழ்க்கை குறிப்பினை பகிர்ந்து கொண்டது சிறப்புடைத்து.

ஒன் மஸ்ட் திங்க் ஆஃப் பாஸ்டெரிடி ஆன் எனி ந்யூ அட்வென்சர். என்று சொல்வார்கள். தக்கார் தகவிலர் என்பர் அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பார் வள்ளுவர்.

பவானந்தம் பிள்ளை எழுதிய நூல்கள், வெளியிட்ட நூல்கள் அவரதுவாழ்ந்த வாழ்க்கைக்கு அவரது பெருந்தன்மைக்கு ஒரு நற்சான்று.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.in
www.subbuthatha.blogspot.com


கோமதி அரசு said...

உங்கள் குடும்பத்திலும், ஆசிரியர் வக்கீல்கள் இருக்கிறார்களா மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தில் நாலு வக்கீல் ஆசிரியர் நால்வர்.

பாவானந்தம் பிள்ளை அவர்களை தெரியாமல் இருக்குமா?
//தக்கார் தகவிலர் என்பர் அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பார் வள்ளுவர்.//

நீங்கள் சொல்வது உண்மை.
பாவனந்தர் நமக்கு விட்டு போனது அவர் எழுதிய நூல்கள் அவர் வாழ்ந்த பெருதன்மையான நல்ல வாழ்க்கை.
உங்கள் பதிவுக்கு பதில் அளிக்க முடியவில்லை.ஏன் என்று தெரியவில்லை.

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன். காவலர் பணியிலும் தமிழ்பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

நான்கு வருட நிறைவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! நிறையட்டும் மேலும் பல சிறந்த பதிவுகளால் திருமதி பக்கங்கள்!

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி,வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மோகன் ஜி , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கோவை கவி, உங்கள் அன்பான் விசாரிப்புக்கு நன்றி ஊருக்கு போய் இருந்ததால் இப்போது தான் பார்த்தேன் உங்கள் நலம் விசாரிப்பு கடிதத்தை.
நலமாக இருக்கிறேன்.
வலைச்சர வாழ்த்துக்கும் நன்றி.

Anonymous said...

வணக்கம்.
அம்மா
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-