வெள்ளி, 31 டிசம்பர், 2010

புது வருட சிந்தனைகள்




ஆங்கில வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.


//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.

நல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.

அன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:

//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//

நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.

வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:

// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்
என்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ
வாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே
வறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை
ஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்
அரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற
ஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே
உலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//

செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.

“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.

வலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

25 கருத்துகள்:

  1. \\ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.

    “சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.//

    நல்ல சிந்தனையோடு துவங்குவோம் புதிய ஆண்டை.. நன்றி வாழ்த்துக்கள் அம்மா..

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான சிந்தனைகள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதிம்மா!

    பதிலளிநீக்கு
  3. நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றிம்மா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ராமலஷிமி அவர்களின் வலை வழி இங்கு வந்து போவேன். உங்க எழுத்து நடை மிக நன்றாக இருக்கு,
    உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதியம்மா.

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    //நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது. //

    அவசியமான வழிகாட்டல். நன்றி

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனையுடன் ஆண்டை ஆரம்பித்துள்ளீர்கள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல சிந்தனையோடு துவங்குவோம் என்று சொன்னது மகிழ்ச்சி முத்துலெட்சுமி.

    எல்லா வளமும் நலமும் இந்த புத்தாண்டில் கிடைக்க ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி விஜி.
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கு நன்றி புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  12. சிவகுமாரன், கவிதை நல்லா இருக்கு.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ம்மா :)

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஆதவன்.

    உங்களுக்கு எல்லா நலமும் எல்லா வளமும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான அறிவுரைங்க.... பகிர்வுக்கு நன்றிங்க....

    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நன்றி சித்ரா, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கு.

    பதிலளிநீக்கு
  17. மிக சிறப்பான சிந்தனைகளை உள்ளடக்கிய மற்றுமொரு அருமையான பதிவு கோமதி மேடம்...

    உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் நம் வலைத்தோழமை, குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

    பதிலளிநீக்கு
  18. சிந்தனை சிறக்கவும்... எண்னங்கள் செழிக்கவும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு