சனி, 11 டிசம்பர், 2010

கண்ணம்மா என் குழந்தை

இன்று நம் தேசிய கவிக்கு பிறந்த நாள். அவர் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியப் பாட்டு.

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏறற்ம் புரியவந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே,-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே!

3. ஓடி வருகையிலே,-கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் -உன்னைப்போய்
ஆவிதழுவுதடீ

4. உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

5. கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ,- கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.

6. சற்றுன் முகஞ்சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடீ
நெற்றி சுருங்க்கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.

7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என் கண்ணில் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?

8. சொல்லு மழலையிலே,-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

9. இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே -உன்னைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. மார்பிலணிவதற்கே -உன்னைப்போல்
வைரமணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப்போல
செல்வம் பிறிதுமுண்டோ?

என்ன அருமையானப் பாட்டு!7வது ’என்னுயிர் நின்னதன்றோ’ வரை குழந்தைகளை தூங்க வைக்க பாடுவேன். 6,8,9,10 எல்லாம் ராகம் தெரியாது பாடமாட்டேன்.எப்போது பாடினாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் பாட்டு. எந்த குழந்தையை கண்டாலும் குறிப்பாய் பெண் குழந்தையைக் கண்டால் என் மனதுக்குள் ஓடும் பாட்டு. M.L.வசந்தகுமாரி அவர்கள் குரலில் இந்த பாட்டைக் கேட்கும் போது மனதுக்கு இதமாய் இருக்கும். சுதாரகுநாதனும் தன் குரு மாதிரி இந்தப் பாட்டை பாடுகிறார்கள். இந்த மார்கழி உற்சவத்தில் பாடகர்கள் இந்தப்பாட்டை பாடுவார்கள் கேட்கலாம். அந்தக் கால பழைய சினிமா படங்களில் எப்படியும் ஒரு பாரதியார்ப் பாட்டு இருக்கும்.புகழ்ப் பெற்ற பாடகர்கள் எல்லாம் பாடி இருப்பார்கள்.கேட்கவே நல்லா இருக்கும்.


இதேமாதிரி சின்மயி பாடிய ஒரு ’தெய்வம் தந்தபூவே’ பாட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை வரவழைக்கும்.

தேசிய கவிக்கு வணக்கங்கள்.





.

25 கருத்துகள்:

  1. மிக அழகான பகிர்வு.

    ‘தெய்வம் தந்த பூவே’ பாடலும் எனக்கு மிகப் பிடிக்கும்.

    நல்ல பதிவு. நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  2. அழகான பாடல். உங்கள் பதிவு மூலம் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் பகிர்வு :)

    எனக்கு சின்னஞ்சிறு கிளியே - யாரோ ஒரு குழந்தையின் குரலில் 8 வருடங்களுக்கு முன்பு கேட்ட ஞாபகத்துடன், சமீபத்தில் மீண்டும் ஆடியோ கிடைத்தது சேகரித்துவைத்துக்கொண்டேன்! மனம் கலங்கும் தருணங்களில் எம்.எஸ்ஸின் குறையொன்றுமில்லை கூறி/பாடி குழந்தையின் சின்னஞ்சிறுகிளியே தாலாட்டிவிடும் :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு.
    மகாக்கவிக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  5. எம்.எஸ்ஸின் குறையொன்றுமில்லை பாடலும் அழகான பாடல்.

    உங்கள் பதிவு மூலம் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  6. அன்பு கோமதி,
    வசந்தகுமாரி அவர்கள் குரலில் சின்னஞ்சிறு கிளியே கேட்கையில் மனம் நெகிழ்ந்து உருகும். அதென்னவோ உங்கள் பதிவிலும் முழுப் பாடலைப் பார்த்ததும் நம் பேரன் பேத்திகள் நினைவுதான் வந்தது. ரத்தினம் போன்ற பாடலை அவர் எழுதியதும் நீங்கள் பதிவிட்டதும் மிகுந்த மகிழ்வைக் கொடுக்கிறது.
    எனக்கும் சின்மயி பாடும் தெய்வம் தந்த பூவே ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஆயில்யன் ,சின்னஞ்சிறு கிளியே உங்களை தாலாட்டுமா ரொம்ப சந்தோஷம்.மனதை தாலாட்டும் பாடல் தான்.

    எம்.எஸ் அம்மாவின் குறையொன்றும் இல்லை பாட்டும் மனதுக்கு இதம் அளிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க அம்பிகா,போற்றி வணங்கப்பட வேண்டியவர் அல்லவா மகாக்கவி.

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  9. வாங்க வல்லி அக்கா,எனக்கும் பேரக் குழந்தைகள் நினைவு வந்தது.என் பெண்ணுக்கு தான் முதலில் பாடினேன்.
    பின் மகன், பேரக் குழந்தைகள்.

    வாராயோ,வாராயோ தென்றல் காற்றே வந்து எந்தன் சேயை கண் உறங்க வீசாயோ! பாட்டு மிகவும் பிடிக்கும்.

    சின்மயி பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் சந்தோஷம்.
    நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  10. தேசிய கவிக்கு வணக்கங்கள்.


    .....வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  11. நீண்ட நாள் கழித்து ரசித்து படித்தேன். நன்றிம்மா :)

    பதிலளிநீக்கு
  12. தெய்வம் தந்த பூவே பாட்டுக் கேட்டால் எனக்கும் துக்கம் தொண்டை அடைத்து கொள்ளும்..

    அச்சிலே பார்த்த பாடல்களை ஒலிவடிவமாக்கி சினிமா மூலம் பலரை அடையச்செய்தார்கள் அன்றைக்கு என்பது போல இப்பொழுது இல்லை வருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வலைப்பதிவுக்கு ஜீவாவில் உங்கள் பின்னோட்டம் கண்டு வந்தேன்.
    சின்னஞ்சிறு கிளியே ...ஒரு ராக மாலிகையாகப் பாடப்பெறுகிறது.
    அழகான பாடல் அது.
    அதைக் கேட்டு
    மகிழாத மனமும் உண்டோ !

    சுப்பு ரத்தினம்.
    subbu thatha gana sabha
    December season
    http://movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. இன்றைக்கும் மகாகவியின் பாடல்களை
    சினிமா மூலம் கொண்டு சென்றால் இளைய சமுதாயத்திற்கு நல்லது முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  15. வளர்மதி,உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சுப்பு ரத்தினம் சார், உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    உங்கள் வலைத்தளத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் இனிமை.

    என்னைப் போன்ற இசை பிரியர்களுக்கு உங்கள் வலைத் தளம் ஒரு வரப்பிரசாதம்.

    பதிலளிநீக்கு
  17. கண்ணம்மா...அழகான பாடல். படிக்கும்போதே மனம் இன்புறும்.

    நல்லபதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு