ம்கன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ம்கன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 மார்ச், 2023

தோட்டத்திற்கு வந்த பறவைகள்



ஆண், பெண் சிட்டுக்குருவிகள் 

மார்ச் 20 தேதி "உலக சிட்டுக்குருவி தினம் " ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன். இங்கு 19 ம் தேதி இரவு  போட்ட    தோழியின் "தலாட்டு பாடல்"இந்திய நேரப்படி 20ம் தேதி   வந்து விட்டது.  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இன்று உங்களிடமிருந்து சிட்டுக்குருவி பதிவு வரும் என்று நினைத்து இருந்தேன் என்று சொன்னார்.

இன்று சிட்டுக்குருவி பற்றிய பதிவு வரும் என்று நினைத்திருந்தேன் அம்மா//


தோழி பகிர சொன்ன தாலாட்டு பாடல் மனதில் நிறைந்து இருந்த காரணத்தால் குருவியை மறந்து போனேன்.


அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் என்றேன். அடுத்து

 உலக தண்ணீர் தினம் போட்டு விட்டேன்.


இந்த பதிவில் மகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த குருவிகள்  மற்றும் வீட்டுக்கு பக்கத்தில் வந்த பறவைகள் இடம்பெறுகிறது.