வழியெல்லாம் இது போன்ற வாழ்த்துகளை வைத்து இருந்தார்கள்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாப்படுகிறது.
பிரிட்டனிடம் இருந்து 13 அமெரிக்கக் காலனிகள் சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் 1776 -ஆம் ஆண்டு ஜூலை 4 -ல் சுதந்திர பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த தேசிய விழா அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 250 வது வருடம் அதனால் கூடுதல் சிறப்பு. அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகனால். விழாவில் எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தினம் மிகவும் பிரம்மாண்டமாக பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் இங்கு குறைவாக இருக்கும் அதனால் மக்கள் இந்த ஊருக்கு வந்து சுதந்திர தின விழாவை கண்டு மகிழ்வார்கள்.
ஃப்ரீடம் ஃபெஸ்ட் அணிவகுப்பு மாலை 6 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க "ரூட் 66" சாலையில் இந்த அணிவகுப்பு நடக்கும். இதில் அலங்கார ஊர்திகள், தேசபக்தி முழக்கங்களுடன் வாகனங்கள் செல்லும்.
வெள்ளிக்கிழமையே இந்த ஓட்டலில் வந்து தங்கி விட்டோம்.
சனிக்கிழமை மாலை நடந்தது அணி வகுப்பு
ஓட்டல் அருகே அணிவகுப்பு வரும் இங்கிருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். 4 மணியிலிருந்து கடைத்தெருவில் காரை பார்க் செய்ய கூடாது என்று சொல்லி விட்டதால் ஓட்டல் முன் பக்கம் அமர்ந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
மடக்கு நாற்காலிகளை முன் கூட்டியே போட்டு வைத்து விட்டோம்.சிறிது நேரம் கீழே அமர்ந்து இருந்தோம் அப்புறம் வெயில் அதிகமாக இருந்தது அதனால் ஓட்டல் பால்கனிக்கு போய் விட்டோம். நானும் மருமகளின் அம்மாவும்.
ஓட்டல் பால்கனி அமைந்து இருக்கும் இடம் காலை உணவுதரும் கூடத்தை சேர்ந்தது. உள்ளே உணவு அருந்திய பின் வெளியே போட்டு இருக்கும், ஊஞ்சலில் அமர்ந்து ஆடலாம்,,மற்றும் மேஜை, நாற்காலியில் இருக்கிறது, அங்கு உணவை, காப்பி, டீ, குளிர்பானங்கள் எடுத்து கொண்டு வந்து அருந்தலாம் , தெருவை வேடிக்கைப்பார்க்கலாம்.
முதல் நாள் மகனும், பேரனும் அமர்ந்து , மருமகள், பேரன் அமர்ந்து படம் எடுத்து கொண்டார்கள்.
எல்லோரும் அமெரிக்க கொடி போல உடை, அணிந்து வந்தார்கள்.
நாங்கள் கையில் கொடி வைத்து கொள்ள வேண்டும், அமெரிக்க கொடி போல ஸ்கார்ப்அணிந்து கொள்ள வேண்டும் என்பது மருமகளின் ஆசை, அது போல அணிந்து கொண்டுகொடியை பிடித்து கொண்டோம்.
பேரன் ஸ்கார்ப்பை தலையில் கட்டி இருக்கிறான் 250 வது சுதந்திர தினத்தை குறிக்கும் பனியன் அணிந்து இருக்கிறான்.
காலையில் கடைத்தெருவில் கொடி, காத்தாடி எல்லாம் வாங்கினோம்
பால்கனியில் இருக்கும் பூத்தொட்டியில் நட்டு வைத்தோம் காற்றுக்கு நன்கு சுற்றியது.
அணி வகுப்பு ஆரம்பித்து விட்டது கைகளில் கொடிகளை ஏந்தி வந்தனர்
கை குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தனர். வண்ண பாசிமணி மாலைகளை குழந்தைகளுக்கு கொடுத்து போனார்கள் ஊர்வலத்தில் வந்தவர்கள்.
இந்த குழந்தை ஓட்டல் செடிகளுக்கு தனக்கு அம்மா கொடுத்த குடி தண்ணீரை விட்டாள் . அவள் என் மனம் கவர்ந்தாள். நிறைய பாசி
மணி மாலைகள் அவளுக்கு கிடைத்தது.
மணி மாலைகள் அவளுக்கு கிடைத்தது.
வெயில் காலத்தில் குளிர்ச்சியாக இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டு போனார்கள். குழந்தைகள் பெரியவர்கள் உற்சாக கூக்குரல் இடுவதை கேளுங்கள். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிறைய வண்டிகள் போனது.
அழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள் உற்சாகமாக அது போல
குழந்தைகளுக்கு மிட்டாய்களை வாரி இறைத்தும் சோப் குமிழிகளை பறக்க விட்டும் போனார்கள். சிறு பையன் கவரில் மிட்டாய்களை சேகரித்து கொண்டார்கள்.
விளையாட்டு பொருட்களை வைத்து கண்காட்சி வண்டி
பலத்தை காட்டும் பெண்கள் கோடாலிகளை தூக்கி ஏறிந்தபடி போய் கொண்டு இருந்தார்கள்.
அணிவகுப்பை பார்க்க அமர்ந்து இருப்பவர்கள்.
நாலு மணி முதலே வெயிலை பொருட்படுத்தாமல் நாற்காலிகளை கொண்டு வந்து போட்டு இடம் பிடித்து இருந்தார்கள்.
முன்னால் போகிறவர்கள் இந்தக்கால உடையும், பின்னால் வருபவர் அந்தக்கால உடையும் அணிந்து விழா காணவந்தார்கள்.
அந்தக்கால உடை அணிந்த
சீமாட்டிகள்.
சீமாட்டிகள்.
பெரிய கேக் அதற்குள் சுதந்திர தேவி நின்று கொண்டு இருப்பது போல செய்து இருந்தார்கள்.கேக் மாதிரி ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்கள்
மாலை மயங்குகின்ற நேரம்
பாடல்களை இசைத்து கொண்டு உற்சாகமாக அமெரிக்காவை வாழ்த்தி கொண்டு வந்தார்கள்.
இவர் ஓட்டும் போது சாகஸம் செய்தார் (முன் சக்கரத்தை தூக்கி கொண்டு)
குழந்தைகள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள்.
அவர்கள் வளர்ப்பு செல்லங்களுடன் வந்தார்கள். சின்ன காணொளிகள்தான் பார்க்கலாம்.
இரவு வாணவேடிக்கைப்பார்க்க போனோம். நகரின் வடக்கு பகுதியில் விமானநிலையம் செல்லும் பாதையில் நடந்தது.
பேரன் கூட படித்த பெண்ணின் பெற்றோர்கள் வைத்து இருக்கும் ஓட்டலில் காரை நிறுத்தி கொள்ளலாம் அங்கு இருந்து நன்றாக பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்து இருந்தாள்.
கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கு இருந்து நிம்மதியாக வாணவேடிக்கை ஆரம்பித்து முடியும் வரைப்பார்த்தோம்.
காணொளிகள் நிறைய எடுத்தேன். அனைத்தையும் பார்க்க உங்களுக்கு நேரம் இருக்காது அதனால் இரண்டு மட்டும்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக