வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நிலவும், மலர்களும்




சித்திரா பெளர்ணமி அன்று     வீட்டுத்தோட்டத்திலிருந்து எடுத்தோம் , நிலவை நானும், பேரனும்.

நிலாவை பார்க்க பிடிக்கும், அதுவும் நிலா வரும் நேரம் மஞ்சள் வண்ணத்தில் வருவதை பார்க்க மிகவும் பிடிக்கும்.  இந்த பதிவில் நிலவும், கள்ளிச்செடி மலர்களும் இடம் பெறுகிறது.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பச்சை வண்ண தேன் சிட்டு



பெண் தேன் சிட்டு


ஞாயிறு மாலை வீட்டுக்கு அருகில்   பேரனுடன் சிறு நடைபயிற்சி சென்று வந்தேன். பேரனும் நானும் சேர்ந்து சில படங்கள் காமிராவில் எடுத்தோம். வெகு தூரத்தில் இருந்த ஒரு  மரத்தின்  உச்சிக்கிளையில்  ஒரு தேன் சிட்டு  அமர்ந்து கொண்டு  தலையை அங்கும் இங்கும் திருப்பி  பார்த்து  கொண்டு இருந்தது. மேலே இருக்கும் தேன் சிட்டு படம் பேரன் எடுத்தான்.
இரண்டு மூன்று பறவைகள் படம் எடுத்தோம் . அவை இன்னொரு பதிவில். இந்த பதிவில் தேன் சிட்டு மட்டும் இடம்பெறுகிறது.

திங்கள், 15 ஏப்ரல், 2024

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !


இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள் அனைவருக்கும்..


 புத்தாண்டு வாழ்த்துகள்   ஏப்ரல் 11 ம் தேதி  2010 ல் பேரனை பார்க்க போன போது  புத்தாண்டை மகன் வீட்டில்  கொண்டாடி னேன். இந்த ஆண்டும் மகன் பேரன் மருமகளுடன் புத்தாண்டு மலர்ந்து உள்ளது.


இரு ஆச்சிகளும்  ஊருக்கு வந்த போது பேரன்  அன்புடன் தயார் செய்த   வாழ்த்து அட்டையை அளித்து வரவேற்றான்.


மகன் செய்த புத்தாண்டு  வாழ்த்து 

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மருத்துவரிடம் போய் கொண்டு இருந்தேன், ஊருக்கு வரும் வரை. பல வலிகளுடன் பயணம் செய்து வந்தேன்.   


 இங்கு எல்லோருடனும் இருப்பதால் வலிகள்படி படியாக குறைந்து வருகிறது. 


மகன் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்களால்  மலர் கோலம்

இனிப்பு அவல் மருமகள் செய்த  பிரசாதம் எடுத்து கொள்ளுங்கள்

இந்த புத்தாண்டில் எல்லோரும்  எல்லா வளத்தோடும் நலத்தோடும்  இருக்க இறைவனை வேண்டிக் கொண்டேன்.


ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.

மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

சனி, 9 மார்ச், 2024

பறவைகள் பார்த்தல் , காகங்களின் பறத்தலும் இருத்தலும் விளையாட்டு





போன மாதம் நான்கு தினங்கள் மொட்டைமாடியில் நடைபயிற்சி செய்த போது பறவைகளை படம் எடுத்தேன்.  பறவைகள்பார்த்தல் என்ற போன பதிவின் நிறைவு பகுதியில்  நிறைய காகங்கள் இருப்பதும் பறப்பதுமாய் இருந்தது , அதை  இன்னொரு பதிவில்  பார்ப்போம், சொல்லி இருந்தேன்.  அன்று பார்த்த காகங்கள் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

திங்கள், 4 மார்ச், 2024

பறவைகள் பார்த்தல் (Bird watching)




எங்கள் வளாகத்தில் கிளிகள் சுற்றி சுற்றி பறக்கும் அமர்ந்து இருக்கும் போது எடுப்பது கஷ்டம். நான்கு தினங்கள் மொட்டை மாடிக்கு நடைபயிற்சி செய்ய போனதால் கிளிகளை படம் எடுக்க முடிந்தது. கிளிகளின் படங்கள், மற்றும் பூச்சி பிடிப்பான், திணைக்குருவிகள், புறாக்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

புதன், 28 பிப்ரவரி, 2024

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

 வெகு நாடகள் கழித்து பிரதோஷ தினத்தன்று மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் போய் வழி பட்டேன். ஊரிலிருந்து வந்து இருந்தார்கள் கொழுந்தனரும் ஓர்படியும்  (கோவையிலிருந்து வந்து இருந்தார்கள்.), அவர்களுடன் சென்று வழிபட்டு வந்தேன்.  அந்த கோயிலின் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. இன்று "சங்கடஹர சதுர்த்தி" அதனால் பதிவு ஆக்கி விட்டேன். 

திங்கள், 26 பிப்ரவரி, 2024

வைக்கம் மகாதேவர் கோயில்

ஜூன் மாதம்   மகன் குடும்பத்துடன்  ஆலப்புழா படகு வீட்டில் பயணம் சென்றோம், அதன்பின்  18 தேதி வைக்கம் மகாதேவர் கோயில் போனோம். கோட்டயம் மாவட்டத்தில்  அமைந்து இருக்கிறது  கோயில். கோட்டயத்திலிருந்து 40 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கோயில் பல வரலாற்று சிறப்புகளை  கொண்டது.