புறாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மார்ச், 2024

பறவைகள் பார்த்தல் (Bird watching)




எங்கள் வளாகத்தில் கிளிகள் சுற்றி சுற்றி பறக்கும் அமர்ந்து இருக்கும் போது எடுப்பது கஷ்டம். நான்கு தினங்கள் மொட்டை மாடிக்கு நடைபயிற்சி செய்ய போனதால் கிளிகளை படம் எடுக்க முடிந்தது. கிளிகளின் படங்கள், மற்றும் பூச்சி பிடிப்பான், திணைக்குருவிகள், புறாக்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

புறாக்களின் தவிப்பு



பல நாட்கள் ஆகி விட்டன  பறவைகள்   பதிவு போட்டு.   ஜன்னல் வழியே, மற்றும் பால்கனி வழியே பறவைகளை பார்த்து பதிவு செய்வேன். நிறைய பறவைகளை படம் எடுத்தும் வைத்து இருக்கிறேன், அவைகளை போட வேண்டும்.   இந்த முறை  பறவைகளின் படங்கள் எல்லமே  ஒரு தேடலை சொல்கிறது.

கூட்டை தேடி, தனக்கு உணவு அளித்த தோட்டத்தை தேடி என்று.

 சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டில்  புறாக்கள் கூடு கட்ட முயற்சி செய்து வெற்றிகரமாக கட்டி விட்டது. அவர்கள் துணி எல்லாம் காய போட்டு இருக்கும் இடத்தில் இப்படி தைரியமாக கூடு கட்டுகிறதே! என்று  நினைத்து கொண்டு இருந்தேன்.

அந்த பறவைகளை படம் எடுத்து இருந்தேன்.  இந்த பதிவில் பறவைகளின் வீடு(கூடு என்னவாயிற்று என்று பாருங்கள்.)

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

என் வீட்டு ஜன்னல் வழியே

 







புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை.

நானும் குஞ்சைப்பார்க்க ஆவலாக இருந்தேன். குஞ்சு வந்ததும் ஒரு நாள் உணவு ஊட்டுவதைப் பார்த்து விட்டேன்.

அதன் பிறகு என் கண்ணில் காட்டாமல் தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு என்னை கவனித்து கொண்டே இருந்தது.

பாதுகாப்பு இல்லாத இடம் மற்ற பறவைகளால் இடையூறூ ஏற்படும் இடம். அதனால் அது தன் சிறகின் கீழ் மறைத்து கொண்டு இருந்தது. (அந்த காணொளியும் இதில் இருக்கிறது பார்க்கலாம்.)


இளம் மஞ்சள் கலரில் குஞ்சு இருந்தது,




காணொளி எடுக்க வசதி இல்லாமல் இருந்தது. ஒரு பால்கனியில் வலை வைத்து தடுத்து இருக்கிறேன், அதன் வழியாக கஷ்டப்பட்டு எடுத்தேன்.


//அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் // 
இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.


நேற்று தாய் , சேய்கள் அந்த இடத்தில் இல்லை, பறந்து போய் விட்டது.

3 அல்லது 4 வாரங்கள் கழித்து தான் பறந்து போகும் என்று படித்து இருக்கிறேன். மகன் வீட்டிலும் பார்த்து இருக்கிறேன்.

வருத்தமாக இருக்கிறது, ஏதாவது இடையூறு நிகழந்து இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது.

நன்றாக இருந்தால் சரி. இறையருளால் நன்றாக இருக்க வேண்டும்.


என் வீட்டுக்கு வந்த அமைதி புறா.

ரஷ்யா- உக்ரைன் 4 வது நாள் போர் நீடிக்கிறது. போர் விரைவில் முடிவடைய வேண்டும். மக்கள் உணவு கிடைக்காமல் கஷ்டபடுவதும், கை குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுவதை பார்க்கும் போது மனது கனத்து போகிறது. போர் இல்லா உலகம் வேண்டும்.

அமைதி நிலவ வேண்டும். அமைதிக்கு பிரார்த்தனை செய்வோம்.

இந்தியர்கள் இந்தியா திரும்பி வருகிறார்கள்.படிக்க போன மாணவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் நலமாக ஊர் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
(15,000 பேர் திரும்ப வேண்டுமாம்.)

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

-----------------------------------------------------------------------------------------